Astrology தெரிந்த பிரம்மாண்டமும் தெரியாத பிரம்மாண்டமும்!
ஒரு பிரபல் நடிகையின் உடல் வனப்பைப் பார்த்துவிட்டு,ஒரு பிரபல இயக்குனர் சொன்னார்: "நான் பார்த்ததிலேயே இதுதான் பிரம்மாண்டம்"
நாம் பார்த்திருந்தாலும் அப்படித்தான் சொல்லுவோம். ஆனால் வெட்கப்பட்டு அல்லது இமேஜ் கெட்டுவிடுமே என்று பயந்து அல்லது மனைவியிடம் பூரிக்
கட்டையால் அடிவாங்க வேண்டுமே என்று பயந்து வெளியே சொல்லா விட்டாலும் மனதிற்குள்ளாவது நினைத்துக்கொள்வோம்.
அவை எல்லாம் அழியக்கூடிய பிரம்மாண்டங்கள். ஒரு நாள் சுடுகாட்டிற்கோ அல்லது இடுகாட்டிற்கோ போகக்கூடிய பிரம்மாண்டங்கள்.
இறைவன் படைப்பில் ஏராளமான பிரம்மாண்டங்கள் உள்ளன.
கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் இடத்திற்குப் படகில் சென்று ஆற்றின் நடுவில் இருந்து பாருங்கள். நீரின் அளவும்,ஆழமும், வேகமும் நம்மைத் திகைக்க வைக்கும்.
பழநியில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரம் சென்று கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருந்து, கண்களை உயர்த்தி, மலையின் தொடர்ச்சியைப்
பாருங்கள். உங்களைத் திகைக்க வைக்கும்.
கன்னியாகுமரியில் இருந்து கொட்டாரம் வரை..ஏன் நாகர் கோவில் வரை, மழை பெய்து ஓய்ந்த ஒரு மாலை நேரத்தில் காரிலோ அல்லது பேருந்திலோ பயணித்துப் பாருங்கள், இரு புறமும் பச்சைப் பசேல் என்ற ரம்மியமான காட்சி உங்கள் மனதை அள்ளிக்கொண்டு போய்விடும்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!
வானமும், வானத்தில் உள்ள கோள்களின் துல்லியமான சுழற்சியும் பிரம்மாண்டம்தான்.
ஆர்யபட்டர், வராஹிமிஹிரர், பராசுரர், ஜெய்மானி போன்ற முனிவர்கள் அவற்றையெல்லாம் கணித்து வைத்துவிட்டுப் போனார்களே அவைகளும்
பிரம்மாண்டம்தான். தொழில் நுட்ப வசத்திகள் எதுவும் இல்லாத காலத்தில், அவர்கள் செய்த பணிகளும் பிரம்மாண்டம்தான்
ஜோதிடமும் பிரம்மாண்டமானதுதான். பெருங்கடலைப் போன்று பிரம்மாண்டமானதுதான். அதைப் பற்றி முன்பே எழுதியுள்ளேன்.
ஜோதிடத்தின் உட்பிரிவான அஷ்டகவர்க்கமும் பிரம்மாண்டமானதுதான்
அதைப் பற்றி இன்று பார்ப்போம்
----------------------------
அஷ்டகவர்க்கம் என்றால் என்ன?
அஷ்ட என்றால் எட்டு. வர்க்கம் என்றால் அட்டவணை!
எட்டு அட்டவணைகள் அடங்கியது அஷ்டகவர்க்கம்.
அஷ்டகவர்க்கம் என்றாகத் தெரிந்தால் (தெரிந்துகொள்வது சுலபம்) உங்கள் ஜாதகத்தையும், உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தையும்,
நீங்க்ளே அலசிப் பிழிந்து விடலாம்!
அதாவது அந்த 337 டானிக்கைப் பற்றிய முழு விவரங்கள்!
அஷ்டக வர்க்கம் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதை முன்பே சொல்லிக் கொடுத்துள்ளேன். அல்லது கணினி ஜாதகத்தில் அது விரிவாகக்
கொடுக்கப்பட்டிருக்கும். கணக்கிடும் வேலை உங்களுக்கு இல்லை!
ஆனால் அதை மேல்நிலைப் பாடத்தில் மீண்டும் ஒருமுறை விரிவாகக் கொடுத்துள்ளேன். இங்கே எழுதினால் திருட்டுப் போய்விடும் சாமிகளா!
ஏழு கிரகங்களின் சுயவர்க்கங்களைக் கூட்டினால் சர்வாஷ்டகவர்க்கம் (ராசி வாரியாக மொத்த அஷ்டகவர்க்கம்) கிடைக்கும்.
சுயவர்க்கத்தில் சில கிரகங்களுக்கு மற்ற கிரகங்களால் 3 இடங்கள் முதல் 9 இடங்கள்வரை உகந்ததாகி மதிப்பெண்கள் கிடைக்கின்றன.
சுயவர்க்கத்தில் அந்த கிரகம் நிற்கும் இடத்தின் மதிப்பெண்தான் அதன் சுயவர்க்கம். அதை மனதில் கொள்க! 0 வும் கிடைக்கலாம் அல்லது 8
மதிப்பெண்களும் கிடைக்கலாம்.
சரி எத்தனை வ்கையான அல்லது விதமான கட்டங்களை உருவாக்கலாம்?
7 கிரகங்கள் + ஒரு லக்கினம் x 12 ராசிகள் = 8 to the power of 12 (Rasi) = 68 719 476 736
ராகு & கேதுவிற்கு அஷ்டகவர்க்க ஆட்டத்தில் இடமில்லை. என்ன காரணம்? அவர்கள் இருவருக்கும் சொந்த வீடு இல்லாததால் ஆட்டத்தில் இடமில்லை. ராகு & கேதுவின் ரசிகர்கள் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டுக்கொள்ளலாம்!
8 to the power of 12 (Rasi) = 68 719 476 736
68 71 94 76 736
68.7 பில்லியன் சுயவர்க்கக் கட்டங்கள் ஒரு கிரகத்திற்கு மட்டும் உருவாக்கலாம்.(ஒரு பில்லியன் என்பது நூறு கோடி.அதை மனதில் வையுங்கள்) ஏழு கிரகத்திற்கும் சேர்த்து 481 பில்லியன் சுயவர்க்க வித்தியாசங்கள் வரும். அதுதான் அஷ்டகவர்க்க ஜோதிடத்தின் பிரம்மாண்டம்!
ஒருவரின் சுயவர்க்கம்போல வேறு ஒருவருக்கு இருக்க வாய்ப்பில்லை. வலது கை கட்டை விரல் ரேகை எப்படித் தலைக்குத் தலை மாறுபடுகிறதோ
அப்படி அஷ்டகவர்க்கமும் ஜாதகத்திற்கு ஜாதகமும் மாறுபடும். ஆனால் மொத்த பரல்கள் 337 மட்டுமே
உலகத்தில் எத்தனையோ குட்டைகள். குளங்கள், ஊருணிகள், ஆறுகள், ஓடைகள், நதிகள், கடல்கள் உள்ளன.ஆனால் எல்லாவற்றிலும் இருக்கும்
தண்ணீருக்குப் பெயர் தண்ணீர்தான்!
அங்கேதான் இறைவன் நிற்கிறான்! இருக்கிறான்!
அவன் அனைவரையும் சமமாகத்தான் படைத்திருக்கிறான்.
ஆரம்பம் முதல் அதைத்தான் நான் வலியுறுத்திச் சொல்லி வருகிறேன்!
அய்யன் வள்ளுவரும் இறைவனை அப்படித்தான் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.
“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல!”
(விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடியை இடைவிடாது வணங்குபவர்களுக்கு என்றும், எக்காலத்திலும், எவ்விடத்திலும் துன்பம்
இல்லை!)
விருப்பு வெறுப்பு (Likes & dislikes) இல்லாதவன் இறைவன். இவன் வேண்டியவன், அவன் வேண்டியவன் என்ற பாகுபாடு இல்லாதவன்
இறைவன். அவன் படைப்பில் அனைவரும் சமம்!
இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச் சமமானவைதான்.
அவருக்கு வேண்டியது - வேண்டாதவை என்று எதுவும் கிடையாது.
தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும் தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும் அவருக்கு ஒன்றுதான்.
தன்னை மறுத்துப் பேசுகிறவனையும் அவர் முகம் மலர்ந்து ஏற்றுக் கொள்கிறார். அவனுக்கும் கருணை காட்டுகிறார். அவனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார்.
.
இல்லையென்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?
நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் பாதிப்பு ஒன்றும் அவருக்கில்லை.
சரி, அப்படியென்றால் இருவருக்கும் (நம்புகிறவன் - நம்பாதவன்) என்ன வித்தியாசம்?
நம்புகிறவன், ஒரு பிரச்சினை வரும்போது - அதை இறைவன் பார்த்துக் கொள்வார் என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு நிம்மதியாக இருப்பான். நம்பாதவன் பிரச்சினையோடு, கவலையையும் கை பிடித்துக்கொண்டு அல்லல் படுவான்
அதனால்தான் இறைவனை Almighty என்கிறோம். இல்லயென்றால் அவன் வெறும் mighty ஆகிப் போய்விடுவான்!
நமக்குத் தெரிந்த பிரம்மாண்டங்கள் எல்லாம், அழியக் கூடியவை. இறைவன் படைப்பின் பிரம்மாண்டங்கள் எல்லாம் நிரந்தரமானவை!
அதை மனதில் கொள்க!
(தொடரும்)
ஒரு மாறுதலுக்காகப் பாடத்தை மாற்றி எழுதியுள்ளேன். உங்கள் கேள்விகளும், பதில்களும் பகுதி இரண்டு நாட்கள் கழித்து வரும் பொறுத்திருங்கள்
அன்புடன்
வாத்தியார்++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய பொன்மொழி
அன்பைப் பகிர்ந்து கொள்வது வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தோசம்.- ---ஸ்டேபிள்.
வாழ்க வளமுடன்!
ஹையா... நான் தான் மொதல்ல பின்னூட்டம் இன்னிக்கு......... நல்ல பாடம்.......
ReplyDeleteடானிக் 337 ......
நான் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்........
When the going gets tough in my research...... My cousin sister used tell me:
"There are people who do great research, and there are people who write great poetry..... but there are few people who can do good research and write good poetry as you do.... which you can; You may not be the greatest scientist, you may not be the greatest poet, but there is no one else I can think of who can do both as good as you do.... God has given you a rare gift few people have, so feel good about it"
I know it's like a little bit of an exaggeration to state this in public... But when low and depressed, Tonic 337 really helps!
Tonic 337 is the secret of my energy :)
ஆத்திகனுக்கு ஏது பலம்? நாத்திகனின் மேல் இறைவனுக்கு ஏன் கருணை? எனும் கேள்விகளுக்கு பதிலாக அமைந்திருக்கும் பதிவு!
ReplyDeleteவாத்தியார் ஐயாவிற்கு நன்றி!
பாடத்தின் மூலமும், பொன்மொழியின் மூலமும் நீங்கள் சொல்லியதை மனதில் ஏற்றிக் கொள்கிறேன், நன்றி ஐயா.
ReplyDeleteகுருவிற்க்கு வணக்கம் ,
ReplyDeleteபொன்மொழி,அன்பை
பாடம்,அஷட்கவர்க்கம்
சொல்லியதை மனதில் வாங்கி கொண்டேன் ஐயா,
நன்றி
வானமும், வானத்தில் உள்ள கோள்களின் துல்லியமான சுழற்சியும் பிரம்மாண்டம்தான்.
ReplyDeleteபல பிரம்மாண்டங்களை உனர்த்தி வியப்படைய வைத்த அரிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
I thought it would be relevant to share a Puranaanooru poem with you...... Written by கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை on the occasion of the death of his beloved and only wife.....
ReplyDelete/////யாங்குப்பெரிது ஆயினும்,
நோய்அளவு எனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே./////
உரை:
காதலியைப் பிரிவதால் நான் உறும் துன்பம் எவ்வளவு பெரியதாயினும், அது என் உயிரை அழிக்கும் வன்மை இல்லாததால், அத்துன்பம் அவ்வளவு வலிமை உடையதன்று. பொரிந்த அடியினை உடைய கள்ளிச்செடிகள் வளர்ந்த களர் நிலமாகிய அழகிய பாழிடத்தில், வெட்ட வெளியில், தீயை விளைவிக்கும் விறகுகளால் அடுக்கபட்ட, ஈமத் தீயின் ஒளிபொருந்திய படுக்கையில் படுக்கவைக்கப்பட்ட என் மனைவி மேலுலகம் சென்றாள். ஆனால், நான் இன்னும் வாழ்கின்றேனே! ஐயகோ, இந்த உலகத்தின் இயற்கைதான் என்ன?
கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் ஒரு புறம் கங்கை வெண்மையாகவும், மறுபுறம் யமுனை கருப்பாகவும் இருப்பதைக் காணலாம்.
ReplyDeleteஇரண்டும் கலந்த பின்னர் கங்கையென்றே பெயர்கொண்டு தன் நிறத்தினை சிறிது மாற்றிக் கொண்டு ஓடுகிறாள்.
பதிவுக்கு நன்றி ஐயா!
Even ganga has become black now, after Varanasi (kaasi). They call her Kaalaa Ganga there.
ReplyDeleteHaridhwar is a great place. There, a less known place called vasishta cave is found. Not many know of it. They have installed a Shiva Lingam there. If you go to Haridhwaaram, please visit there also.
ReplyDeleteஆசிரியருக்கு அன்பு வணக்கம்.
ReplyDeleteநீங்கள் பாடம் நடத்த ஆரம்பித்து 5ஆண்டுகள் கழித்து கொஞ்சம் லேட்டாக வகுப்பறைக்குள் நுழைய முயற்சித்துக்கொண்டிருக்கும் மாணவன் நான். உங்களின் பழைய பாடங்களில் இருந்து அஷ்டவர்க்கம் மற்றும் மொத்த பரல்கள் பற்றிய பாடங்களைப் படித்துப்பார்த்ததில் என்னைப் பற்றிய சில உண்மைகள் தெரிய வந்தன. அந்த சில உண்மைகளே எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்து விடாமுயற்சியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் விதைத்தது.
தி.நகரில் இருக்கும்போது கூட எனக்கு அவசரமாக தேவைப்பட்டால் தீப்பெட்டி கூட (விலைக்கு) கிடைக்காது. அப்படி ஒரு யோகமான ஜாதகம் எனக்கு என்று மனதை தேற்றிக்கொள்வேன். எந்த காரியம் செய்தாலும் மிகப்பெரிய அடிகளாகத்தான் விழும். இவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு நம்மால் எப்படி போராட முடிகிறது என்று யோசிப்பதிலேயே பாதி ஆயுள் போய்விட்டது.
ஆனால் நீங்கள் தெளிவு படுத்திய அம்பானிக்கும், ஆரூரில் கோவில் வாசலில் அமர்ந்து இருப்பவனுக்கும் 337 பரல்கள்தான் என்ற விஷயத்தை அறிந்த பிறகுதான் 1 அடி உயரம் தொட்டால் ஓராயிரம் அடி பாதாளத்துக்குள் புதைவதற்கு காரணம் என்ன என்று கேள்விக்கு பதில் தேட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
உங்கள் பாடங்களை நான் ஓரளவாவது படிக்க 6 மாதமாவது தேவைப்படும். அதுவரை நான் கண்ணதாசன் சொன்னதாக என் கல்லூரி ஆசிரியர் சொன்ன ஒரு விஷயத்தைதான் பின்பற்றப்போகிறேன். அது வேறு ஒன்றும் இல்லை. சிலர் 10 தடவை முயற்சித்தால் 9 முறை வெற்றி கிடைக்கும். ஆனால் சிலர் 10 தடவை முயற்சித்தால் 1 தடவை மட்டுமே அதுவும் தட்டுத்தடுமாறி வெற்றி மின்னல் மாதிரி வந்து போகும். அவர்கள் 9 முறை வெற்றி பெற என்ன வழி? 90 தடவை முயற்சி செய்வதுதான் என்றார். எனக்கும் தற்காலிகமாக தெரிந்த வழி இதுதான்.
பாடங்களை நன்கு பயின்று விட்டு மற்ற விஷயங்களைப்பற்றி யோசிக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டேன்.
நான் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வேலை செய்துவிட்டு பாவம் அவங்க கஷ்டப்படுவாங்க என்று நினைத்து 800 ரூபாய் கேட்பேன். அவர்கள் 300 தருகிறேன் என்று பேரம் பேசி 100 ரூபாயை கொடுத்துவிட்டு அடுத்த 200க்கு 2ஆயிரம் முறை அலைய விடுவார்கள்.
ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் 100 ஆண்டுகளைக் கடந்த ஒரு கம்பெனி, மிகப்பெரிய தமிழ் நாளிதழ் என்று நான் வேலை பார்த்த பிரமாண்டமான கம்பெனிகளில் கூட எனக்கு ஒழுங்காக பேசிய சம்பளம் கிடைக்காது.
ஜாதகத்தில் 10ஆம் இடமான கடகத்தில் செவ்வாயும், ராகுவும். செவ்வாய் நீசம். ராகு பகை. அதனால்தான் சொந்த தொழிலாக இருந்தாலும், வேலை என்றாலும் போதிய ஊதியம் கிடைக்கவில்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்வதுண்டு.(ஆர்வக்கோளாறு)
ஆனால் வாத்தியாரின் அஷ்டவர்க்கம் பற்றிய பாடங்களைப் படித்ததும் என் ஜாதகத்தைப் பார்த்தேன்.
துலாம் லக்னம் - 30 பரல்கள்
10ஆம் வீடு கடகத்தில் 41 பரல்கள்
11ஆம் வீடு சிம்மத்தில் 31 பரல்கள்
12ஆம் வீட்டில் 24 பரல்கள்.
பாடத்தில் சொல்லியபடி தொழில் ஸ்தானத்தை விட லாபஸ்தானத்தில் பரல்கள் குறைவாக இருப்பதால்தான் வேலைக்கேற்ற கூலி கிடைப்பதில்லை என்பது புரிகிறது.
கல்லூரியில் ஆறு மாதமாக படிக்காத பாடத்தை ஒரே நாள் இரவில் படித்து மற்றவர்கள் 50 பக்கம் எழுதும்போது நான் 15 பக்கம் எழுதியே வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதுண்டு. ஆனால் வாத்தியாரின் இந்த பாடங்கள் வெறும் மதிப்பெண் வாங்குவதற்கு அல்ல. மனதில் நிறுத்தி தேர்ச்சி அடைய வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறேன்.
அதனால் அமைதியாக பழைய பாடங்களைப் படித்து வருகிறேன்.
அய்யா வகுப்பரையில் மாணவனாக சேர்ந்த பின்பு ஒரு நல்ல மனிதனாக மனசாட்சி உள்ளவனாக வாழ முடிகிறது என்பது நிதர்சனமான உண்மை...அதிலும் இந்த 337 டானிக் கிடைத்த பின்பு நமக்கு மேல் உள்ளவர்களை பார்த்து பொறமை பட வேண்டிய அவசியமும் இல்லாமல் போகிறது...
ReplyDeleteபல நல்ல மனிதர்களை உருவாக்கி கொண்டு இருக்கிறீர்கள் அய்யா ...
அருமையான ஆக்கத்தை கொடுத்த வாத்தியாருக்கு நன்றிகள்...
ReplyDeleteஅய்யா நீங்கள் எங்காவது பாலைவனத்தை பார்த்திருகீர்களா ?., நான் எப்போதும் சிந்திப்பது உண்டு...பலா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது எல்லாம் அடர்ந்த காடுகள் என்று...இறைவன் அங்கு எல்லாம் கடலால் அழிய வைத்து விட்டானே என்று...ஆனால் அன்று அவ்வாறு நடக்காது இருந்திருந்துதால் நிச்சயமாக நமக்கு இன்று Fuel கிடைக்காமல் போயிருக்கும் அய்யா...
இதுவும் பிரமாண்டகளில் ஒன்று...
சரண் அவர்களே,
ReplyDeleteநான் மட்டும் ஆர்வக்கோளாறு இல்லாமல் இருப்பேனா?
லாபஸ்தானத்தில் இருப்பதை விட விரயஸ்தானத்தில் பரல்கள் குறைவாக இருப்பதை நினைத்து மகிழலாமா?
இப்படி இருந்தால் பணம் வரும், கையில் நிற்கும் இல்லையா, சேமிப்பாக? பத்தாம் வீடு பரல்கள்>padhinondraam veettu பரல்கள்>பன்னிரெண்டாம் வீடு பரல்கள்.
அதனால், எதிர்பார்த்த அளவு ஊதியம் வராது. ஆனால் வரும் வருமானம் (கம்மியானாலும்) கையில் தங்கும்.
பல பேருக்கு எவ்வளவு வந்தாலும் செலவாகும், கடனாளியாவான். அப்படி இல்லாமல் வருமானத்துக்குள் வாழும் பாக்கியம் உங்களுக்கு உண்டு போலே....... பிடியுங்கள் ஒரு பூங்கொத்தை. உங்களுக்கு ஒரு ஷொட்டு!
Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஹையா... நான் தான் மொதல்ல பின்னூட்டம் இன்னிக்கு......... நல்ல பாடம்.......
டானிக் 337 ......
நான் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்........
When the going gets tough in my research...... My cousin sister used tell me:
"There are people who do great research, and there are people who write great poetry..... but there are few people who
can do good research and write good poetry as you do.... which you can; You may not be the greatest scientist, you may not
be the greatest poet, but there is no one else I can think of who can do both as good as you do.... God has given you a
rare gift few people have, so feel good about it"
I know it's like a little bit of an exaggeration to state this in public... But when low and depressed, Tonic 337 really
helps!
Tonic 337 is the secret of my energy :)////
சிறு திருத்தம்: Tonic 337 is the secret of our energy!
///Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஆத்திகனுக்கு ஏது பலம்? நாத்திகனின் மேல் இறைவனுக்கு ஏன் கருணை? எனும் கேள்விகளுக்கு பதிலாக அமைந்திருக்கும் பதிவு!
வாத்தியார் ஐயாவிற்கு நன்றி!////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger தேமொழி said...
ReplyDeleteபாடத்தின் மூலமும், பொன்மொழியின் மூலமும் நீங்கள் சொல்லியதை மனதில் ஏற்றிக் கொள்கிறேன், நன்றி ஐயா./////
ஏற்றிக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள். எனக்கும் ஸ்விஸ் வங்கியில் கணக்கு உண்டு. அதையும் மனதில் வையுங்கள்:-))))
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்க்கு வணக்கம் ,
பொன்மொழி,அன்பை
பாடம்,அஷட்கவர்க்கம்
சொல்லியதை மனதில் வாங்கி கொண்டேன் ஐயா,நன்றி////
நல்லது. நன்றி நண்பரே!
///Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteவானமும், வானத்தில் உள்ள கோள்களின் துல்லியமான சுழற்சியும் பிரம்மாண்டம்தான்.
பல பிரம்மாண்டங்களை உனர்த்தி வியப்படைய வைத்த அரிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..////
உங்களின் புரிதலுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteI thought it would be relevant to share a Puranaanooru poem with you...... Written by கோட்டம்பலத்துத் துஞ்சிய
மாக்கோதை on the occasion of the death of his beloved and only wife.....
/////யாங்குப்பெரிது ஆயினும்,
நோய்அளவு எனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே./////
உரை:
காதலியைப் பிரிவதால் நான் உறும் துன்பம் எவ்வளவு பெரியதாயினும், அது என் உயிரை அழிக்கும் வன்மை இல்லாததால், அத்துன்பம்
அவ்வளவு வலிமை உடையதன்று. பொரிந்த அடியினை உடைய கள்ளிச்செடிகள் வளர்ந்த களர் நிலமாகிய அழகிய பாழிடத்தில், வெட்ட வெளியில்,
தீயை விளைவிக்கும் விறகுகளால் அடுக்கபட்ட, ஈமத் தீயின் ஒளிபொருந்திய படுக்கையில் படுக்கவைக்கப்பட்ட என் மனைவி மேலுலகம் சென்றாள்.
ஆனால், நான் இன்னும் வாழ்கின்றேனே! ஐயகோ, இந்த உலகத்தின் இயற்கைதான் என்ன?////
only wife.....பற்றிய தகவலுக்கு நன்றி நண்பரே!:-))))
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteகங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் ஒரு புறம் கங்கை வெண்மையாகவும், மறுபுறம் யமுனை கருப்பாகவும் இருப்பதைக் காணலாம்.
இரண்டும் கலந்த பின்னர் கங்கையென்றே பெயர்கொண்டு தன் நிறத்தினை சிறிது மாற்றிக் கொண்டு ஓடுகிறாள்.
பதிவுக்கு நன்றி ஐயா!////
நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
///Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteEven ganga has become black now, after Varanasi (kaasi). They call her Kaalaa Ganga there.////
தகவலுக்கு நன்றி நண்பரே!
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteHaridhwar is a great place. There, a less known place called vasishta cave is found. Not many know of it. They have
installed a Shiva Lingam there. If you go to Haridhwaaram, please visit there also.////
இந்தத் தகவலுக்கும் நன்றி நண்பரே!
////Blogger சரண் said...
ReplyDeleteஆசிரியருக்கு அன்பு வணக்கம்.
நீங்கள் பாடம் நடத்த ஆரம்பித்து 5ஆண்டுகள் கழித்து கொஞ்சம் லேட்டாக வகுப்பறைக்குள் நுழைய முயற்சித்துக்கொண்டிருக்கும் மாணவன்
நான். உங்களின் பழைய பாடங்களில் இருந்து அஷ்டவர்க்கம் மற்றும் மொத்த பரல்கள் பற்றிய பாடங்களைப் படித்துப்பார்த்ததில் என்னைப் பற்றிய
சில உண்மைகள் தெரிய வந்தன. அந்த சில உண்மைகளே எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்து விடாமுயற்சியை தொடர வேண்டும் என்ற
எண்ணத்தை என் மனதில் விதைத்தது.
தி.நகரில் இருக்கும்போது கூட எனக்கு அவசரமாக தேவைப்பட்டால் தீப்பெட்டி கூட (விலைக்கு) கிடைக்காது. அப்படி ஒரு யோகமான ஜாதகம்
எனக்கு என்று மனதை தேற்றிக்கொள்வேன். எந்த காரியம் செய்தாலும் மிகப்பெரிய அடிகளாகத்தான் விழும். இவ்வளவு அடியையும்
வாங்கிக்கொண்டு நம்மால் எப்படி போராட முடிகிறது என்று யோசிப்பதிலேயே பாதி ஆயுள் போய்விட்டது.
ஆனால் நீங்கள் தெளிவு படுத்திய அம்பானிக்கும், ஆரூரில் கோவில் வாசலில் அமர்ந்து இருப்பவனுக்கும் 337 பரல்கள்தான் என்ற விஷயத்தை
அறிந்த பிறகுதான் 1 அடி உயரம் தொட்டால் ஓராயிரம் அடி பாதாளத்துக்குள் புதைவதற்கு காரணம் என்ன என்று கேள்விக்கு பதில் தேட வேண்டும்
என்ற எண்ணம் எழுந்தது.
உங்கள் பாடங்களை நான் ஓரளவாவது படிக்க 6 மாதமாவது தேவைப்படும். அதுவரை நான் கண்ணதாசன் சொன்னதாக என் கல்லூரி ஆசிரியர்
சொன்ன ஒரு விஷயத்தைதான் பின்பற்றப்போகிறேன். அது வேறு ஒன்றும் இல்லை. சிலர் 10 தடவை முயற்சித்தால் 9 முறை வெற்றி
கிடைக்கும். ஆனால் சிலர் 10 தடவை முயற்சித்தால் 1 தடவை மட்டுமே அதுவும் தட்டுத்தடுமாறி வெற்றி மின்னல் மாதிரி வந்து போகும்.
அவர்கள் 9 முறை வெற்றி பெற என்ன வழி? 90 தடவை முயற்சி செய்வதுதான் என்றார். எனக்கும் தற்காலிகமாக தெரிந்த வழி இதுதான்.
பாடங்களை நன்கு பயின்று விட்டு மற்ற விஷயங்களைப்பற்றி யோசிக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டேன்.
நான் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வேலை செய்துவிட்டு பாவம் அவங்க கஷ்டப்படுவாங்க என்று நினைத்து 800 ரூபாய் கேட்பேன். அவர்கள் 300
தருகிறேன் என்று பேரம் பேசி 100 ரூபாயை கொடுத்துவிட்டு அடுத்த 200க்கு 2ஆயிரம் முறை அலைய விடுவார்கள்.
ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் 100 ஆண்டுகளைக் கடந்த ஒரு கம்பெனி, மிகப்பெரிய தமிழ் நாளிதழ் என்று நான் வேலை
பார்த்த பிரமாண்டமான கம்பெனிகளில் கூட எனக்கு ஒழுங்காக பேசிய சம்பளம் கிடைக்காது.
ஜாதகத்தில் 10ஆம் இடமான கடகத்தில் செவ்வாயும், ராகுவும். செவ்வாய் நீசம். ராகு பகை. அதனால்தான் சொந்த தொழிலாக இருந்தாலும்,
வேலை என்றாலும் போதிய ஊதியம் கிடைக்கவில்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்வதுண்டு.(ஆர்வக்கோளாறு)
ஆனால் வாத்தியாரின் அஷ்டவர்க்கம் பற்றிய பாடங்களைப் படித்ததும் என் ஜாதகத்தைப் பார்த்தேன்.
துலாம் லக்னம் - 30 பரல்கள்
10ஆம் வீடு கடகத்தில் 41 பரல்கள்
11ஆம் வீடு சிம்மத்தில் 31 பரல்கள்
12ஆம் வீட்டில் 24 பரல்கள்.
பாடத்தில் சொல்லியபடி தொழில் ஸ்தானத்தை விட லாபஸ்தானத்தில் பரல்கள் குறைவாக இருப்பதால்தான் வேலைக்கேற்ற கூலி
கிடைப்பதில்லை என்பது புரிகிறது.
கல்லூரியில் ஆறு மாதமாக படிக்காத பாடத்தை ஒரே நாள் இரவில் படித்து மற்றவர்கள் 50 பக்கம் எழுதும்போது நான் 15 பக்கம் எழுதியே
வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதுண்டு. ஆனால் வாத்தியாரின் இந்த பாடங்கள் வெறும் மதிப்பெண் வாங்குவதற்கு அல்ல. மனதில் நிறுத்தி
தேர்ச்சி அடைய வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறேன்.
அதனால் அமைதியாக பழைய பாடங்களைப் படித்து வருகிறேன்.///
தொடர்ந்து படித்து வாருங்கள். இதிலும் முதல் இடத்தில் தேர்ச்சி பெற் வாழ்த்துக்கள்!
////Blogger Pandian said...
ReplyDeleteஅய்யா வகுப்பரையில் மாணவனாக சேர்ந்த பின்பு ஒரு நல்ல மனிதனாக மனசாட்சி உள்ளவனாக வாழ முடிகிறது என்பது நிதர்சனமான
உண்மை...அதிலும் இந்த 337 டானிக் கிடைத்த பின்பு நமக்கு மேல் உள்ளவர்களை பார்த்து பொறமை பட வேண்டிய அவசியமும் இல்லாமல்
போகிறது...
பல நல்ல மனிதர்களை உருவாக்கி கொண்டு இருக்கிறீர்கள் அய்யா .../////
அதைவிட முக்கியமாக நொந்துபோயிருக்கும் பல உள்ளங்களுக்கு ஆறுதல் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு வரும் தனி மின்னஞ்சல்கள் மூலம் அது தெரியவரும்!
////Blogger Pandian said...
ReplyDeleteஅருமையான ஆக்கத்தை கொடுத்த வாத்தியாருக்கு நன்றிகள்...
அய்யா நீங்கள் எங்காவது பாலைவனத்தை பார்த்திருகீர்களா ?., நான் எப்போதும் சிந்திப்பது உண்டு...பலா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது
எல்லாம் அடர்ந்த காடுகள் என்று...இறைவன் அங்கு எல்லாம் கடலால் அழிய வைத்து விட்டானே என்று...ஆனால் அன்று அவ்வாறு நடக்காது
இருந்திருந்துதால் நிச்சயமாக நமக்கு இன்று Fuel கிடைக்காமல் போயிருக்கும் அய்யா...
இதுவும் பிரமாண்டகளில் ஒன்று...////
உண்மைதான். தங்களின் கருத்துப் பகிவிற்கு நன்றி பாண்டியன்! பதிவிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள்? கல்யாண மூட் இன்னும்
வரவில்லையா?
ஐயா வணக்கம்.
ReplyDeleteiyaa! . கிட்ட தட்ட அறிமுகம் ஆகி மூன்று வருடம் ஆக போகின்றது இன்றுதான் நச்சுனு நாலு வார்த்தை மனதில் நிற்கும் படி கூறி உள்ளீர்கள்
இன்றைய உலகிற்கு வேண்டிய அற்புதமான நிறைய அவருடைய படைப்பில் உள்ளன
இறைவன் பெயரை சொல்லி அணு அளவிற்கு கூட மதிப்பு தராவிட்டாலும் பரவாக இல்லை மிதிக்காமல் ஆவது இருக்கலாம் . ஆனால் இன்றைய உலகத்தில் கல்லாக மற்றும் கல்லு இல்லாமால் இருக்கும் சுவாமிக்கு கொடுக்கும் மரியாதையில் சிறிது அளவிற்கு கூட மனித நேயத்திற்கு யாவரும் கொடுப்பது இல்லை என்பதுதான் நெஞ்சை கொள்ளும் உண்மை.
மாணிக்க வாசகரின் திரு வாசகத்தில் கூறி உள்ளது போல இறைவனின் படைப்பை அளிப்பதக்கோ அல்லது மிதிப்பதர்க்கோ எந்த ஒரு ஜீவனுக்கும் ( இதனில் புல்லாகி , பூடு ஆகி ,புழுவாகி , கல்லாகி ........etc ) சிறிது அளவிற்கு கூட உரிமை கிடையாது.
யார் கொடுத்தது அதிகாரம்? இங்கு பணம் , அதிகாரம், உள்ளவனின் வார்த்தைக்கு மட்டும் மதிப்பு உள்ளது . ஆனால்,
" மனித நேயம் "
என்று கூறுகின்ற மனிதாபிமானதிர்க்கு அணு அளவிற்கு கூட மதிப்பு இல்லை என்பதது தான் உண்மையிளையும் மேலான உண்மை மற்றும் பெரிய வேதனை கூட ஐயா!
மனதை அணு அணுவாக கொள்ளும் மிருகத்தனம் தான் நிறைய நடை பெறுகின்றது இந்த கலி உகத்தில் கேட்க வேண்டிய ஆள் கேட்காமல் உள்ளதது தான் நெஞ்சை மேலும் மேலும் அணு அணுவாக கொள்ளுகின்ற விசையம் ஆக உள்ளது.
எதோ சொல்ல தோணியது சொல்லினேன் அவ்வளவிதான் நன்றி ஐயா!.
SP.VR. SUBBAIYA said...
ReplyDeleteஉண்மைதான். தங்களின் கருத்துப் பகிவிற்கு நன்றி பாண்டியன்! பதிவிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள்? கல்யாண மூட் இன்னும் வரவில்லையா?///
அய்யா 27-ம் தேதி ஊருக்கு செல்கிறேன்...பின்பு அங்கு ஒரு மாதம் இருப்பேன் அய்யா...
சங்கரி யையும் வகுப்பரையில் சேர்த்து விட முயற்சித்து கொண்டு இருக்கிறேன் அய்யா...
ReplyDelete////சரண் said...
ReplyDeleteஆசிரியருக்கு அன்பு வணக்கம்.
நீங்கள் பாடம் நடத்த
ஆரம்பித்து 5ஆண்டுகள்
கழித்து கொஞ்சம் லேட்டாக
வகுப்பறைக்குள் நுழைய
முயற்சித்துக்கொண்டிருக்கும்
மாணவன் நான். உங்களின்
பழைய பாடங்களில்
இருந்து அஷ்டவர்க்கம் மற்றும்
மொத்த பரல்கள் பற்றிய
பாடங்களைப்
படித்துப்பார்த்ததில் என்னைப்
பற்றிய சில உண்மைகள்
தெரிய வந்தன. அந்த சில
உண்மைகளே எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்து விடாமுயற்சியை தொடர
வேண்டும் என்ற
எண்ணத்தை என் மனதில்
விதைத்தது.
தி.நகரில்
இருக்கும்போது கூட
எனக்கு அவசரமாக
தேவைப்பட்டால்
தீப்பெட்டி கூட (விலைக்கு)
கிடைக்காது.
அப்படி ஒரு யோகமான
ஜாதகம்
எனக்கு என்று மனதை தேற்றிக்கொள்வேன்.
எந்த காரியம் செய்தாலும்
மிகப்பெரிய அடிகளாகத்தான்
விழும்.
இவ்வளவு அடியையும்
வாங்கிக்கொண்டு நம்மால்
எப்படி போராட
முடிகிறது என்று யோசிப்பதிலேயே பாதி ஆயுள்
போய்விட்டது.
ஆனால் நீங்கள்
தெளிவு படுத்திய
அம்பானிக்கும், ஆரூரில்
கோவில் வாசலில்
அமர்ந்து இருப்பவனுக்கும் 337
பரல்கள்தான் என்ற
விஷயத்தை அறிந்த
பிறகுதான் 1 அடி உயரம்
தொட்டால் ஓராயிரம்
அடி பாதாளத்துக்குள்
புதைவதற்கு காரணம் என்ன
என்று கேள்விக்கு பதில் தேட
வேண்டும் என்ற எண்ணம்
எழுந்தது.
உங்கள் பாடங்களை நான்
ஓரளவாவது படிக்க 6
மாதமாவது தேவைப்படும்.
அதுவரை நான் கண்ணதாசன்
சொன்னதாக என்
கல்லூரி ஆசிரியர் சொன்ன
ஒரு விஷயத்தைதான்
பின்பற்றப்போகிறேன்.
அது வேறு ஒன்றும் இல்லை.
சிலர் 10 தடவை முயற்சித்தால்
9 முறை வெற்றி கிடைக்கும்.
ஆனால் சிலர் 10
தடவை முயற்சித்தால் 1
தடவை மட்டுமே அதுவும்
தட்டுத்தடுமாறி வெற்றி மின்னல்
மாதிரி வந்து போகும்.
அவர்கள் 9 முறை வெற்றி பெற
என்ன வழி? 90
தடவை முயற்சி செய்வதுதான்
என்றார். எனக்கும்
தற்காலிகமாக தெரிந்த
வழி இதுதான்.
பாடங்களை நன்கு பயின்று விட்டு மற்ற
விஷயங்களைப்பற்றி யோசிக்கலாம்
என்று முடிவு பண்ணி விட்டேன்.
நான் ஆயிரம்
ரூபாய்க்கு ஒரு வேலை செய்துவிட்டு பாவம்
அவங்க கஷ்டப்படுவாங்க
என்று நினைத்து 800 ரூபாய்
கேட்பேன். அவர்கள் 300
தருகிறேன் என்று பேரம்
பேசி 100
ரூபாயை கொடுத்துவிட்டு அடுத்த
200க்கு 2ஆயிரம்
முறை அலைய விடுவார்கள்.
ஆண்டுக்கு 2
கோடி ரூபாய்க்கு வர்த்தகம்
செய்யும் 100 ஆண்டுகளைக்
கடந்த ஒரு கம்பெனி,
மிகப்பெரிய தமிழ் நாளிதழ்
என்று நான் வேலை பார்த்த
பிரமாண்டமான கம்பெனிகளில்
கூட எனக்கு ஒழுங்காக
பேசிய சம்பளம் கிடைக்காது.
ஜாதகத்தில் 10ஆம் இடமான
கடகத்தில் செவ்வாயும்,
ராகுவும். செவ்வாய் நீசம்.
ராகு பகை. அதனால்தான்
சொந்த தொழிலாக
இருந்தாலும்,
வேலை என்றாலும் போதிய
ஊதியம்
கிடைக்கவில்லை என்று எனக்கு நானே சமாதானம்
சொல்லிக்கொள்வதுண்டு.
(ஆர்வக்கோளாறு)
ஆனால் வாத்தியாரின்
அஷ்டவர்க்கம் பற்றிய
பாடங்களைப் படித்ததும் என்
ஜாதகத்தைப் பார்த்தேன்.
துலாம் லக்னம் - 30 பரல்கள்
10ஆம் வீடு கடகத்தில் 41 பரல்கள்
11ஆம் வீடு சிம்மத்தில் 31
பரல்கள்
12ஆம் வீட்டில் 24 பரல்கள்.
பாடத்தில்
சொல்லியபடி தொழில்
ஸ்தானத்தை விட
லாபஸ்தானத்தில் பரல்கள்
குறைவாக இருப்பதால்தான்
வேலைக்கேற்ற
கூலி கிடைப்பதில்லை என்பது புரிகிறது.
கல்லூரியில் ஆறு மாதமாக
படிக்காத பாடத்தை ஒரே நாள்
இரவில் படித்து மற்றவர்கள் 50
பக்கம் எழுதும்போது நான் 15
பக்கம் எழுதியே வகுப்பில்
முதல் மதிப்பெண்
பெற்றதுண்டு. ஆனால்
வாத்தியாரின் இந்த பாடங்கள்
வெறும் மதிப்பெண்
வாங்குவதற்கு அல்ல. மனதில்
நிறுத்தி தேர்ச்சி அடைய
வேண்டும்
என்பதை உணர்ந்து இருக்கிறேன்.
அதனால் அமைதியாக பழைய
பாடங்களைப்
படித்து வருகிறேன்.////
முதலில் உங்கள் பத்தாமிட
அதிபதி சந்திரனின் நிலையை
கவனியுங்கள்.
அவர் அஷ்டமதிபதி(8),அல்லது
விரையாதிபதி(12)சம்பந்தம்
எற்பட்டு இருந்தாலும்,இப்படி
நடக்கும்.
அடிமை தொழில் என்றால் ஆறாவது
வீட்டையும்,ஆரய வேண்டும்.
தன ஸ்தன அதிபதியான
செவ்வாய் (2.7) பத்தாமிடதில்
நீசம் அடைந்ததும்,ஒரு
காரணமாக இருக்கலாம்.
முக்கியமாக பத்தாமிட
அதிபதி சந்திரன்,சனியோடு
சேர்ந்து இருந்தாலும்,இந்த
நிலையை கொடுக்கும்.
காரணம் சனி சந்திரன்
சேர்க்கை (தி.நகரில்
இருக்கும்போது கூட
எனக்கு அவசரமாக
தேவைப்பட்டால்
தீப்பெட்டி கூட (விலைக்கு)
கிடைக்காது.
)
நிலையை ஏற்படுத்தி அல்லல்பட
வைத்துவிடும்.
ஓம் சரவணபவ நம
///உலகத்தில் எத்தனையோ குட்டைகள். குளங்கள், ஊருணிகள், ஆறுகள், ஓடைகள், நதிகள், கடல்கள் உள்ளன.ஆனால் எல்லாவற்றிலும் இருக்கும்
ReplyDeleteதண்ணீருக்குப் பெயர் தண்ணீர்தான்!///
சாக்கடை என்று சொல்லும் கழிவு நீரிலும் தண்ணீர் உள்ளதே ஆனால் அதற்கு பெயர் தண்ணீர் இல்லையே
///விருப்பு வெறுப்பு (Likes & dislikes) இல்லாதவன் இறைவன். //
மன்னிக்க..
இந்த கருத்தில் அய்யருக்கு உடன்பாடு இல்லை.. விருப்பு வெறுப்பு அற்றவன் என்று சொல்வது சரியல்ல (அப்படியானால் இறைவனை உயிரற்ற பொருளாக அல்லவா கொள்ள நேரிடும்.. நீங்களும் மைனர் கட்சிக்கு மாறிட்டீங்களா.. வேணாம் அய்யா..)
இறைவனுக்கும் விருப்பு உண்டு...
"வெறுப்பின் மீது விருப்பு அற்றவன்"
இதற்கு இப்படி பொருள் கொண்டு பாருங்கள் ...
///இறைவன். அவன் படைப்பில் அனைவரும் சமம்!//
இதில் எதை படைத்தான் என்று சொல்லவில்லை..
இறைவன் படைக்க வில்லை என்பது அய்யரின் கருத்து என்றால் ஆச்சரியமாக இருக்கும் .. உண்மையும் அது தானே...
இறைவன் தான் படைத்தான் என்றால் ஏன் படைக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பு தானே...
////தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும் தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும் அவருக்கு ஒன்றுதான்.///
இந்து மதத்தில் மட்டும் தான் கடவுள் இல்லை என்று சொல்வதற்கும் உரிமை தரப்பட்டுள்ளது..
இது மற்ற மதங்களுக்கு இல்லை.. அதனால் இந்துக்கள் என்று சொல்பவர்கள் பெருமை பட வேண்டிய அவசியமில்லை.. காரணம் சொன்னால் அது அங்கே போய் முடியும்..
உள்ளுக்குள் கேட்டுப் பாருங்கள்
உண்மை புரியும்..
////இருவருக்கும் (நம்புகிறவன் - நம்பாதவன்) என்ன வித்தியாசம்?நம்புகிறவன், ஒரு பிரச்சினை வரும்போது - அதை இறைவன் பார்த்துக் கொள்வார் என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு நிம்மதியாக இருப்பான். நம்பாதவன் பிரச்சினையோடு, கவலையையும் கை பிடித்துக்கொண்டு அல்லல் படுவான்///
கொஞ்சம் மாற்றி சொல்ல அனுமதி தாருங்களேன்...
முழுமையாக நம்புகிறவன் எதைப்பற்றியும் கவலை கொள்வதில்லை... (இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில்)
இன்பமே எந்நாளும் துன்பமில்லை என
நம்பாதவன் தன் மீது உள்ள நம்பிக்கையில் எடுக்கும் முடிவுகளுக்கு பொறுப்பேற்று நன்மை தீமைகளை அறிவுக்கு ஏற்ற படி ஒத்துக் கொள்வார்
இதிலும் அதிலும் பாதியாக இருப்பவர்கள் தான் நீங்கள் சொன்ன மாதிரி
பிரச்சினையோடு, கவலையையும் கை பிடித்துக்கொண்டு அல்லல் படுவான்
வாத்தியாரின் எண்ணங்களுக்கும் மறுத்துச் சொல்லும் உரிமை தரும் வகுப்பறை என்பதினால் அன்புடன் மிகுந்த நட்புடன் பகிர்ந்து கொள்கிறோம்..
எட்டில் தொடக்கம்
ReplyDeleteஇரண்டு வரைக்கும் காத்திருக்கிறோம்
தோழர் போகர் அவர்களே...
ReplyDeleteதோழமையுடன் சொல்கிறோம்
வகுப்பறைக்கு தினமும்
வரும் பின் ஊட்டங்களில்
உணர்வுகளை படித்து
உள்ளபடியே நெகிழ்வது
உங்களின் பல பின்
ஊட்டங்களையே..
வாழ்க..
வழக்கமான வணக்கங்களுடன்
சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்புதான் வாத்தியாரின் வகுப்பறைக்குள் நுழைந்தேன். இரண்டே நாட்களில் பல கேள்விகளுக்கு விடை தெரிந்தது. ஆனால் அடுத்து ஒரு வாரம் சில தொழில் நுட்ப பிரச்சனைகளால் எந்த பிளாக்-கிற்குமே செல்ல முடியவில்லை. (காரியத் தடை)
ReplyDeleteஇன்று என் ஜாதகத்தில் சில கட்டங்களின் பரல்கள் பற்றி நான் அறிந்தவற்றை வகுப்பறையில் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொண்டதும் சீனியர் மாணவர்கள் Bhuvaneshwar மற்றும் Bhogar ஆகியோர் வேறு சில விஷயங்களை ஆராய சொல்லியிருந்தார்கள்.
வகுப்பறையில் உள்ள மாணவர்கள் இப்படி தாங்கள் புரிந்து கொண்ட விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்கு நன்றி.
ஆலய அர்ச்சகர் ஒருவருடன் 14 ஆண்டுகளாக பழகி வருகிறேன். சாமி கும்பிட வரும் பக்தர்கள் நிறைய பேர் அவரிடம் தங்கள் ஜாதகங்களைக் கொடுத்து சில பிரச்சனைகளுக்கு பரிகாரம் கேட்பார்கள். அதற்கு அவர் குடும்ப ஜோதிடம் என்ற புத்தகத்தை பயன்படுத்துவார். பரிகாரம் சொல்வதற்கு அவர் பணம் எதுவும் வாங்குவதில்லை. பரிகாரம் என்றால் சிரமத்தில் உள்ள பக்தரின் ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை வைத்து கோவில் வழிபாடு, தீபமேற்றுதல், ஆலய வலம் வருதல் என்ற அளவிலேயேதான் இருக்கும். அந்த அர்ச்சகருடன் பழகிய நாட்களில்தான் ஜோதிடத்தின் மீது எனக்கும் ஆர்வம் வந்தது.
அவரின் ஆலோசனைப்படி வழிபாடு செய்து பலன் பெற்றவர்கள் நிறைய பேர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், தொடர்ந்து கருச்சிதைவு ஏற்பட்டுக்கொண்டே இருந்த 6 தம்பதியர்களுக்கு குழந்தை நிலைத்தது, 30க்கும் மேற்பட்டவர்களுக்கு திருமணத்தடை நீங்கியதை சொல்லலாம். அப்படி பலன் பெற்றவர்கள் மன நிறைவுடன் அந்த செய்தியை கோவிலில் வந்து எங்களிடம் சொல்வார்கள்.
எனக்கு கூட 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் கடலில் குளித்துவிட்டு ராமநாத சுவாமியை வழிபட சொன்னார். பூர்வ புண்ணிய அதிபதி சில சிக்கலில் இருக்கிறார் என்று மட்டும்தான் எனக்கு குறிப்பு கொடுத்தார். எனக்கு அந்த அளவுக்கு எதுவும் தெரியாது. தெரிந்ததெல்லாம் 27 நட்சத்திரங்கள், எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாகம் நிற்கும், ஒவ்வொரு கிரகத்தின் ஆட்சி, உச்சம், நீச்ச, நட்பு, பகை வீடுகள் என்னென்ன? அவ்வளவுதான் தெரியும்.
அதனால் எதிர் கேள்வி கேட்காமல் அவர் சொன்னபடி ராமேஸ்வரம் சென்று வந்தேன். அடுத்த ஒரே மாதத்துக்குள் நான் வேலை செய்த இடத்தில் சக ஊழியர்களை அதிர்ச்சி அடையச் செய்த சம்பளம், மூன்று மாதங்களுக்குள் பல ஆண்டுகளாக நான் முயற்சி செய்துகொண்டிருந்த துறையான, பிரபல நாளிதழ் ஒன்றில் பக்கம் வடிவமைக்கும் பணி என்று அதிரடி மாற்றங்கள் வந்தன. ஆனால் வருமானம் போதாமல் இப்போது வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் செய்கிறேன்.
என்னுடைய நண்பரான அந்த ஆலய அர்ச்சகர் கணிணி, இணையம் ஆகியவற்றில் விருப்பம் இல்லாதவராக இருக்கிறார். இந்த வகுப்பறை பாடங்கள் என்னை விட அவருக்கு அதிகமாகவே உதவும். பாடங்கள் புத்தகமாக தயாராகிக்கொண்டிருக்கிறது என்ற செய்திதான் என் கண்ணில் பட்டது. நூல்கள் வெளியானதா, எங்கே விற்பனைக்கு கிடைக்கும் போன்ற எந்த விபரமும் எனக்கு காணக்கிடைக்கவில்லை.
இன்னும் பழைய பதிவுகள் பலவற்றையும் அலசிப்பார்க்க வேண்டும் போலிருக்கிறது.
என்ன தான் ஜாதகம், கிரகம் என்று நாம் அலசினாலும், ஜாதகம் என்பது ஒருத்தருக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தோராயமாக தான் சொல்ல முடியும். எப்படி என விளக்குகிறேன், நான் நினைப்பதை.
ReplyDeleteஒருத்தருக்கு ரொம்ப நல்ல ஜாதகம் என்று வைத்துக்கொள்வோம் (337- டானிக் வந்த பிறகு எல்லாருக்கும் நல்ல ஜாதகம் தான் என்று சொல்ல தோன்றுகிறது இல்லையா?). இன்னொருத்தருக்கு அவ்வளவாக சுகமில்லை ஜாதகம். நாம் ஒத்து பார்ப்பதில் சரியாக இருக்க வேண்டும் அல்லவா, அதனால் என்ன பண்ணலாம், முன்னவருக்கு எந்த எந்த வீடுகள் அம்சமாக உள்ளவோ, அவை எல்லாம் பின்னவருக்கு அவ்வளவாக சுகமில்லை. (ஏன் சொல்கிறேன் எனில், டானிக் ஊற்றி பாரத்தால் அவருக்கு சுகமில்லாத சில இவருக்கு ஜாம் ஜாம் என்று இருக்கலாமே.... அதனால்);
தொழில் ஸ்தானம் என்றே வைத்துக்கொள்வோம், ஒரு பேச்சுக்கு. முன்னவருக்கு நல்ல அமைப்புகள். பின்னவருக்கு கொஞ்சம் முடக்கமான அமைப்பு.
ஆனாலும், முன்னவர் வெற்றி பெற கடும் உழைப்பும், தெய்வ பக்தியும் இருந்தாக வேண்டும். இல்லை என்றால் அவர் ஜாதகம் அவரை இலவசமாக எல்லாம் உச்சாணியில் வைக்காது. அப்படியே வைத்தாலும் சமயத்தில் (சரியில்லாத தசா புக்திகளில்) கீழே விழுந்து அடிபடுவார்.
பின்னவர் கடுமையாக உழைத்தார் என்றால், எல்லாவற்றையும் மீறி வெல்வார், முன்னேறுவார்.
இந்த மருந்தை அய்யன் வள்ளுவன் சொன்னாரே
"தெய்வத்தா னாகாது எனினு முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்"
A good horoscope is like the combination of good pitch, weak opposition bowling attack, home ground advantage and good form of the batsman in question. These make it easy for him to score a century. But still he has to play with sense and judgement otherwise he will get out at any point of time.
A not so good horoscope is like a green seaming track, formidable opposition bowling attack, foreign conditions and not so good form of the batsman in question. these make it difficult for him to score a century. But still, if he plays with the best of effort he can, cautiously and with determination, he can still score a century.
And what more, this fighting century amidst challenges will be remembered and admired by people more than the relatively easier century in easy conditions.
So, let's life to be a challenge and never give up. If we are righteous, God will be by our side. He will reduce the disasters that have to come to us due to horoscope. For instance what should have been death would be a small accident.
Let's live righteously and happily!
Please correct me if I am wrong.
---
Bhuvaneshwar D
www.bhuvaneshwar.com
///அய்யர் said...
ReplyDeleteதோழர் போகர் அவர்களே...
தோழமையுடன்
சொல்கிறோம்
வகுப்பறைக்கு தினமும்
வரும் பின் ஊட்டங்களில்
உணர்வுகளை படித்து
உள்ளபடியே நெகிழ்வது
உங்களின் பல பின்
ஊட்டங்களையே..
வாழ்க..
வழக்கமான வணக்கங்களுடன்.///
நன்றி.....,
ஈசனின் காதில் ஓறெழுத்தை
ஓதியவன்
ஆறெழுத்தில் இருந்து
ஆட்சி செய்பவன்
உங்களுக்கு அருள் புரிவான்.
ஓம் சரவணபவ நம
Blogger Maaya kanna said...
ReplyDeleteஐயா வணக்கம்.
iyaa! . கிட்ட தட்ட அறிமுகம் ஆகி மூன்று வருடம் ஆக போகின்றது இன்றுதான் நச்சுனு நாலு வார்த்தை மனதில் நிற்கும் படி கூறி உள்ளீர்கள்
இன்றைய உலகிற்கு வேண்டிய அற்புதமான நிறைய அவருடைய படைப்பில் உள்ளன
இறைவன் பெயரை சொல்லி அணு அளவிற்கு கூட மதிப்பு தராவிட்டாலும் பரவாக இல்லை மிதிக்காமல் ஆவது இருக்கலாம் . ஆனால் இன்றைய உலகத்தில் கல்லாக மற்றும் கல்லு இல்லாமால் இருக்கும் சுவாமிக்கு கொடுக்கும் மரியாதையில் சிறிது அளவிற்கு கூட மனித நேயத்திற்கு யாவரும் கொடுப்பது இல்லை என்பதுதான் நெஞ்சை கொள்ளும் உண்மை.
மாணிக்க வாசகரின் திரு வாசகத்தில் கூறி உள்ளது போல இறைவனின் படைப்பை அளிப்பதக்கோ அல்லது மிதிப்பதர்க்கோ எந்த ஒரு ஜீவனுக்கும் ( இதனில் புல்லாகி , பூடு ஆகி ,புழுவாகி , கல்லாகி ........etc ) சிறிது அளவிற்கு கூட உரிமை கிடையாது.
யார் கொடுத்தது அதிகாரம்? இங்கு பணம் , அதிகாரம், உள்ளவனின் வார்த்தைக்கு மட்டும் மதிப்பு உள்ளது . ஆனால்,
" மனித நேயம் "
என்று கூறுகின்ற மனிதாபிமானதிர்க்கு அணு அளவிற்கு கூட மதிப்பு இல்லை என்பதது தான் உண்மையிளையும் மேலான உண்மை மற்றும் பெரிய வேதனை கூட ஐயா!
மனதை அணு அணுவாக கொள்ளும் மிருகத்தனம் தான் நிறைய நடை பெறுகின்றது இந்த கலி உகத்தில் கேட்க வேண்டிய ஆள் கேட்காமல் உள்ளதது தான் நெஞ்சை மேலும் மேலும் அணு அணுவாக கொள்ளுகின்ற விசையம் ஆக உள்ளது.
எதோ சொல்ல தோணியது சொல்லினேன் அவ்வளவிதான் நன்றி ஐயா!.//////
நீங்களும் சொந்தக் கதையில்லாமல் இன்றுதான் உண்மையான பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் கண்ணன்:-)))))
////Blogger Pandian said...
ReplyDeleteசங்கரி யையும் வகுப்பறையில் சேர்த்து விட முயற்சித்து கொண்டு இருக்கிறேன் அய்யா.../////
ஐயோ பாவம்! குடும்பப் பெண்ணாகி, பிறகு தாயாகி மகிழ்வாக இருக்கட்டும். வகுப்பறை எல்லாம் இப்போது வேண்டாம்!
Blogger Bhogar said...
ReplyDeleteபின்னூட்டத்தில் வரிகளை ஏன் ஒடித்து ஒடித்து, குட்டி குட்டியாக இரண்டு இரண்டு வார்த்தைகளாக எழுதுகிறீர்கள்? அப்படி எழுத என்ன கோளாறு (உங்கள் ஜாதகத்தில் அல்ல) உங்கள் கணினி Text writer ல் என்ன கோளாறு என்று முதலில் பாருங்கள்!
எப்படி வர வேண்டும் என்பதை கீழே காட்டியுள்ளேன்!
////முதலில் உங்கள் பத்தாமிட அதிபதி சந்திரனின் நிலையை கவனியுங்கள்.அவர் அஷ்டமதிபதி(8),அல்லது விரையாதிபதி(12)சம்பந்தம்
எற்பட்டு இருந்தாலும்,இப்படி நடக்கும்.அடிமை தொழில் என்றால் ஆறாவது வீட்டையும்,ஆரய வேண்டும். தன ஸ்தன அதிபதியான
செவ்வாய் (2.7) பத்தாமிடதில் நீசம் அடைந்ததும்,ஒரு காரணமாக இருக்கலாம்.முக்கியமாக பத்தாமிட அதிபதி சந்திரன்,சனியோடு
சேர்ந்து இருந்தாலும்,இந்த நிலையை கொடுக்கும்.காரணம் சனி சந்திரன் சேர்க்கை (தி.நகரில் இருக்கும்போது கூடஎனக்கு அவசரமாக
தேவைப்பட்டால் தீப்பெட்டி கூட (விலைக்கு)கிடைக்காது.)நிலையை ஏற்படுத்தி அல்லல்பட வைத்துவிடும்.
ஓம் சரவணபவ நம/////
////Blogger அய்யர் said...
ReplyDelete///உலகத்தில் எத்தனையோ குட்டைகள். குளங்கள், ஊருணிகள், ஆறுகள், ஓடைகள், நதிகள், கடல்கள் உள்ளன.ஆனால் எல்லாவற்றிலும் இருக்கும் தண்ணீருக்குப் பெயர் தண்ணீர்தான்!///
சாக்கடை என்று சொல்லும் கழிவு நீரிலும் தண்ணீர் உள்ளதே ஆனால் அதற்கு பெயர் தண்ணீர் இல்லையே/////
நான் நீர் நிலைகளைத்தானே குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் ஏன் சாக்கடை, செப்டிக் டாங்க் என்று கணக்கு எழுதுகிறீர்கள்?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
///விருப்பு வெறுப்பு (Likes & dislikes) இல்லாதவன் இறைவன். //
மன்னிக்க..
இந்த கருத்தில் அய்யருக்கு உடன்பாடு இல்லை.. விருப்பு வெறுப்பு அற்றவன் என்று சொல்வது சரியல்ல (அப்படியானால் இறைவனை உயிரற்ற பொருளாக அல்லவா கொள்ள நேரிடும்.. நீங்களும் மைனர் கட்சிக்கு மாறிட்டீங்களா.. வேணாம் அய்யா..)
இறைவனுக்கும் விருப்பு உண்டு...
"வெறுப்பின் மீது விருப்பு அற்றவன்"
இதற்கு இப்படி பொருள் கொண்டு பாருங்கள் .../////
வேண்டுதல் வேண்டாமை என்று எழுதிய வள்ளூவரைத்தான் கேட்க வேண்டும் - விசுவநாதன் ஏன் இப்படி அனர்த்தம் செய்கிறார் என்று!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
///இறைவன். அவன் படைப்பில் அனைவரும் சமம்!//
இதில் எதை படைத்தான் என்று சொல்லவில்லை..
இறைவன் படைக்க வில்லை என்பது அய்யரின் கருத்து என்றால் ஆச்சரியமாக இருக்கும் .. உண்மையும் அது தானே...
இறைவன் தான் படைத்தான் என்றால் ஏன் படைக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பு தானே.../////
நீங்கள் மட்டும்தான் பாடலைச் சுழல விடுவீர்களா? நாங்களும் சுழல விடுவோம்
உங்களுக்காக கீழ்க் கண்ட பாடலைச் சுழல்விட்டு அமைதி கொள்கிறோம்:
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ம்…ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்…..
பாடல்: படைத்தானே படைத்தானே
திரைப்படம்: நிச்சய தாம்பூலம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1961
////Blogger அய்யர் said..
ReplyDeleteஎட்டில் தொடக்கம்
இரண்டு வரைக்கும் காத்திருக்கிறோம்////
மீண்டும் புதிரா? சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!
Blogger சரண் said...
ReplyDeleteசரியாக இரண்டு வாரங்களுக்கு முன்புதான் வாத்தியாரின் வகுப்பறைக்குள் நுழைந்தேன். இரண்டே நாட்களில் பல கேள்விகளுக்கு விடை தெரிந்தது. ஆனால் அடுத்து ஒரு வாரம் சில தொழில் நுட்ப பிரச்சனைகளால் எந்த பிளாக்-கிற்குமே செல்ல முடியவில்லை. (காரியத் தடை)
இன்று என் ஜாதகத்தில் சில கட்டங்களின் பரல்கள் பற்றி நான் அறிந்தவற்றை வகுப்பறையில் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொண்டதும் சீனியர் மாணவர்கள் Bhuvaneshwar மற்றும் Bhogar ஆகியோர் வேறு சில விஷயங்களை ஆராய சொல்லியிருந்தார்கள்.
வகுப்பறையில் உள்ள மாணவர்கள் இப்படி தாங்கள் புரிந்து கொண்ட விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்கு நன்றி.
ஆலய அர்ச்சகர் ஒருவருடன் 14 ஆண்டுகளாக பழகி வருகிறேன். சாமி கும்பிட வரும் பக்தர்கள் நிறைய பேர் அவரிடம் தங்கள் ஜாதகங்களைக் கொடுத்து சில பிரச்சனைகளுக்கு பரிகாரம் கேட்பார்கள். அதற்கு அவர் குடும்ப ஜோதிடம் என்ற புத்தகத்தை பயன்படுத்துவார். பரிகாரம் சொல்வதற்கு அவர் பணம் எதுவும் வாங்குவதில்லை. பரிகாரம் என்றால் சிரமத்தில் உள்ள பக்தரின் ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை வைத்து கோவில் வழிபாடு, தீபமேற்றுதல், ஆலய வலம் வருதல் என்ற அளவிலேயேதான் இருக்கும். அந்த அர்ச்சகருடன் பழகிய நாட்களில்தான் ஜோதிடத்தின் மீது எனக்கும் ஆர்வம் வந்தது.
அவரின் ஆலோசனைப்படி வழிபாடு செய்து பலன் பெற்றவர்கள் நிறைய பேர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், தொடர்ந்து கருச்சிதைவு ஏற்பட்டுக்கொண்டே இருந்த 6 தம்பதியர்களுக்கு குழந்தை நிலைத்தது, 30க்கும் மேற்பட்டவர்களுக்கு திருமணத்தடை நீங்கியதை சொல்லலாம். அப்படி பலன் பெற்றவர்கள் மன நிறைவுடன் அந்த செய்தியை கோவிலில் வந்து எங்களிடம் சொல்வார்கள்.
எனக்கு கூட 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் கடலில் குளித்துவிட்டு ராமநாத சுவாமியை வழிபட சொன்னார். பூர்வ புண்ணிய அதிபதி சில சிக்கலில் இருக்கிறார் என்று மட்டும்தான் எனக்கு குறிப்பு கொடுத்தார். எனக்கு அந்த அளவுக்கு எதுவும் தெரியாது. தெரிந்ததெல்லாம் 27 நட்சத்திரங்கள், எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாகம் நிற்கும், ஒவ்வொரு கிரகத்தின் ஆட்சி, உச்சம், நீச்ச, நட்பு, பகை வீடுகள் என்னென்ன? அவ்வளவுதான் தெரியும்.
அதனால் எதிர் கேள்வி கேட்காமல் அவர் சொன்னபடி ராமேஸ்வரம் சென்று வந்தேன். அடுத்த ஒரே மாதத்துக்குள் நான் வேலை செய்த இடத்தில் சக ஊழியர்களை அதிர்ச்சி அடையச் செய்த சம்பளம், மூன்று மாதங்களுக்குள் பல ஆண்டுகளாக நான் முயற்சி செய்துகொண்டிருந்த துறையான, பிரபல நாளிதழ் ஒன்றில் பக்கம் வடிவமைக்கும் பணி என்று அதிரடி மாற்றங்கள் வந்தன. ஆனால் வருமானம் போதாமல் இப்போது வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் செய்கிறேன்.
என்னுடைய நண்பரான அந்த ஆலய அர்ச்சகர் கணிணி, இணையம் ஆகியவற்றில் விருப்பம் இல்லாதவராக இருக்கிறார். இந்த வகுப்பறை பாடங்கள் என்னை விட அவருக்கு அதிகமாகவே உதவும். பாடங்கள் புத்தகமாக தயாராகிக்கொண்டிருக்கிறது என்ற செய்திதான் என் கண்ணில் பட்டது. நூல்கள் வெளியானதா, எங்கே விற்பனைக்கு கிடைக்கும் போன்ற எந்த விபரமும் எனக்கு காணக்கிடைக்கவில்லை.
இன்னும் பழைய பதிவுகள் பலவற்றையும் அலசிப்பார்க்க வேண்டும் போலிருக்கிறது./////
உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி. புததகங்கள் தயாரிப்பில் உள்ளன. வெளிவர இரண்டு மாதங்கள் ஆகும்!
Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஎன்ன தான் ஜாதகம், கிரகம் என்று நாம் அலசினாலும், ஜாதகம் என்பது ஒருத்தருக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தோராயமாக தான் சொல்ல முடியும். எப்படி என விளக்குகிறேன், நான் நினைப்பதை.//////
நீங்கள் எதற்கு சிரமப் படுகிறீர்கள்? தோராயமாகச் சொல்ல வேண்டும் என்பதுதான் ஜோதிடத்தின் முதல் விதி (Rule) ! பழைய பதிவுகளில் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள்!
///வேண்டுதல் வேண்டாமை என்று எழுதிய வள்ளூவரைத்தான் கேட்க வேண்டும் - விசுவநாதன் ஏன் இப்படி அனர்த்தம் செய்கிறார் என்று!///
ReplyDeleteஎந்த புத்தகத்தையும் படிக்கும் போது எழுதியவரின் கண்ணோட்டத்திலே படித்து விளக்கம் காண வேண்டும்
நம்விருப்பத்தில் அல்ல..
பல உரை ஆசிரியர்களின் பொருளை எடுத்தாளுதல் என்ற நிலையில் மாறி
உண்மை பொருளை அறிய முயன்றால் எல்லாம் புரியும்..
இறைவனுக்கு விருப்பு இல்லை என்று சொல்லும் பொருளுக்கு கறுப்பு கொடி காட்டியபடி...
இறைவனை உயிரற்ற பொருளாக சித்தரிக்கும் குறள் உரைக்கு எதிர்ப்ப்ப்பு சொல்லியபடி...
மாறுபாடான கருத்திற்கு மறுப்பு சொல்லியபடி.....
காத்திருக்கின்றோம் புரியும் வரை
காலம் கனியும் வரை....
பாடலை சுழல விடுகிறோம்
பத்திரமாக அமைதி கொள்கிறோம்
இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு
இதுவெல்லாம் வாடிக்கை'
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்
கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்
தனக்கொரு கொள்கை
அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை
அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும்
கைகளை நம்பி
ஐயா, நானும் பாடலை சுழலவிட விரும்புகிறேன்.
ReplyDelete_____________________________________________________________________
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
(இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்)
கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு
காந்தியை போலவே காவியம் உண்டு
முடிவு விளங்காத தொடர்கதை உண்டு
முடிக்க வேண்டும் என்று முடிப்பதும் உண்டு
(இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்)
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்தில் இருந்தே கவிதையை முடித்தான்
(இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்)
திரைப் படம்: ஏன் (1970)
இசை: T R பாப்பா
குரல்: S P பாலசுப்ரமணியம்
பாடல்: கண்ணதாசன்
nalla pathivu
ReplyDeleteசங்கரி யையும் வகுப்பரையில் சேர்த்து விட முயற்சித்து கொண்டு இருக்கிறேன் அய்யா...//
ReplyDeleteநீங்க எழுதின முதல் கவிதை வகுப்பறையில் இருக்கிறது, ரிஸ்க் எடுக்காதீங்க!!!!!
///Uma said...
ReplyDeleteநீங்க எழுதின முதல் கவிதை வகுப்பறையில் இருக்கிறது, ரிஸ்க் எடுக்காதீங்க!!!!!///
அட..இந்த புவனார்தான் ... பாண்டியனா? இது போல பெயரை மாற்றிவிட்டாரா? எண் கணிதம் செய்கிற வேலையோ?
பெயரை மாற்றுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். வகுப்பறை கெஜட்டில் அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உமாவைப் போன்று ஞாபக சக்தி கிடையாது.
யாரு என்னையா சொல்றீங்க? இல்லை அம்மா, நான் இப்போ தான் தலையை காட்டறேன் இங்க..... நான் நானே தான்.... வேற யாரோ இல்லை......
ReplyDelete---
Bhuvaneshwar D
www.bhuvaneshwar.com
யாரு என்னையா சொல்றீங்க? இல்லை அம்மா, நான் இப்போ தான் தலையை காட்டறேன் இங்க..... நான் நானே தான்.... வேற யாரோ இல்லை......
ReplyDelete---
Bhuvaneshwar D
www.bhuvaneshwar.com
நீங்கள் இல்லை புவனேஷ்வர், இவர் இங்கிருக்கிறார் பாருங்கள்:
ReplyDeletehttp://classroom2007.blogspot.com/2010/10/blog-post_08.html
Uma said...
ReplyDeleteசங்கரி யையும் வகுப்பரையில் சேர்த்து விட முயற்சித்து கொண்டு இருக்கிறேன் அய்யா...//
நீங்க எழுதின முதல் கவிதை வகுப்பறையில் இருக்கிறது, ரிஸ்க் எடுக்காதீங்க!!!!!///
ஐயோ மறந்துட்டேன் உமா அக்கா...
தேமொழிsaid...
ReplyDelete///Uma said...
நீங்க எழுதின முதல் கவிதை வகுப்பறையில் இருக்கிறது, ரிஸ்க் எடுக்காதீங்க!!!!!///
அட..இந்த புவனார்தான் ... பாண்டியனா? இது போல பெயரை மாற்றிவிட்டாரா? எண் கணிதம் செய்கிற வேலையோ?
பெயரை மாற்றுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். வகுப்பறை கெஜட்டில் அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உமாவைப் போன்று ஞாபக சக்தி கிடையாது.
பெயர் மற்றம் கட்டாயமாக தேவை பட்டது திருமணம் நிச்சயம் செய்த உடன்...பழைய மாணவர்களுக்கு என்னை நன்றாய் தெரியும் அக்கா...அறிவுப்பு கொடுகததுர்க்கு மன்னியுங்கள்...
Bhuvaneshwar said...
ReplyDeleteயாரு என்னையா சொல்றீங்க? இல்லை அம்மா, நான் இப்போ தான் தலையை காட்டறேன் இங்க..... நான் நானே தான்.... வேற யாரோ இல்லை......
---
Bhuvaneshwar D
www.bhuvaneshwar.com////
சாரி பாஸ் உங்களுக்கு முன்னாடி உங்க பெற நான் கொஞ்ச நாள் use பண்ணி கிட்டு இருந்தேன்...