15.5.12

Astrology எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப்படி ராசா?


ஆண்டுத் தேர்வுகள் முடிந்துவிட்டன! அடுத்து என்ன?
பார்ட்டிதான்! அதுதான் நடக்கிறது!
---------------------------------------------------------------------
நாங்களும் பாடல்களை ரிமிக்ஸ் செய்வோம்ல!
Johnny Johnny Remixed
Johny Johny
Yes Papa
Pvt Company
Yes Papa
Any Motivation
No Papa
Many Tension
Yes Papa
Do u Sleep well
No Papa
Onsite Opportunity
No papa
Increment
Ha ha ha
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப்படி ராசா?

Doubts: கேள்வி பதில் பகுதி 14

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினான்கு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.55
அருள் நிதி

வணக்கம் ஐயா...

எனது சந்தேகங்கள்...

1.ஒரு கிரகத்தின் தசையில் மற்றொரு கிரகத்தின் புத்தியில் பலன்கள் அந்த கிரகங்கள் குறிக்கின்ற இடங்களுக்கு தகுந்தாற் போலவும்,அவை இரண்டிற்கும் இடையேயான தொடர்பு ( 6/8 position,1/12 position, niserkiga, temporal relationship) பொருத்தும் அமையும் என்பது உங்கள் பாடங்களின் மூலம் நான் புரிந்துள்ளேன்.சுய தசை சுய புத்தியில் பலன்கள் எதைப் பொருத்து அமையும்???

A.ஒரு தீய கிரகத்தின் மகா தசையில், ஒரு தீய கிரகத்தின் புத்தி கஷ்டங்களைக் கொடுக்கும். துன்பமான சூழலைக் கொடுக்கும்/அனுபவிக்க நேரிடும். (During the main period of a Functional Malefic, the sub period of a Functional Malefic will cause sufferings)

B.ஒரு தீய கிரகத்தின் மகா தசையில், ஒரு நல்ல கிரகத்தின் புத்தி நன்மைகளைக் கொடுக்கும் (During the main period of a Functional Malefic the sub period of a strong Functional Benefic will bestow good results)

C.ஒரு தீய கிரகத்தின் மகா தசையில், ஜாதகத்தில் வலிமை இல்லாத ஒரு நல்ல கிரகத்தின் புத்தி நன்மைகளைக் கொடுக்கும் என்று ஜாதகன் நம்பிக்கை மட்டுமே கொள்ளலாம். ஆனால் உண்மையில் நன்மை எதையும் தராது. (During the main period of a Functional Malefic the sub period of a weak functional benefic will give only hopes which may not get fulfilled)

D. நன்மை செய்யக்கூடிய ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் மகா தசையில், ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் புத்தி நன்மைகளை வாரி வழங்கும்.ஜாதகன் அண்டாக்களில் பிடித்து வைத்துக் கொள்ளலாம்! (During the main period of a Functional Benefic the sub period of a strong Functional Benefic will bestow very good results)

E. நன்மை செய்யக்கூடிய ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் மகா தசையில், ஜாதகத்தில் வலிமை இல்லாத ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் புத்தி சராசரி பலன்களைக் கொடுக்கும் (During the main period of a Functional Benefic, the sub period of a weak Functional Benefic will bestow average results with mishaps during unfavorable transit influences)

F. நன்மை செய்யக்கூடிய ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் மகா தசையில், ஒரு தீய கிரகத்தின் புத்தி சராசரி பலன்களைக் கொடுக்கும். சிலர் அவ்வப்பொது சிறு சிறு துன்பங்களை அனுபவிக்க நேரிடும். (During the main period of a Functional During the main period of a Functional Benefic, the sub period of a Functional Malefic will cause mild sufferings)

G.நன்மை செய்யக்கூடிய ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் மகா தசையில், ஒரு தீய கிரகத்தின் புத்தி ஒரு (அந்த தீய கிரகம் வலிமை இழந்த வேறு கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருக்கும் நிலையில்)அதிகக் கஷ்டங்களை ஜாதகன் அனுபவிக்க நேரிடும். ( During the main period of a Functional Benefic, the sub periods of a Functional Malefic (if involved in close conjunction or aspect with weak planets) will cause grave concerns and/or tragic happenings.

H.தனது சுய புத்தியில் கிரகங்கள், பெரிய அளவில் தனக்குத்தானே (அதாவது ஜாதகனுக்கு) எதையும் செய்து கொள்ளாது. இது பொதுப்பலன். சுய புத்தி முடிந்தவுடன், மேற்கூறிய முறையில் பலன்கள் நடைபெறும்!

2.சிலர் எப்போது படுத்தாலும் உடனே தூங்கி விடுவார்கள்...சிலர் தூக்கம் இன்மையால் அவதிபடுகிறார்கள்...இதற்கு ஜாதகத்தில் எந்த இடம் காரணம் வகிக்கிறது? எனக்கு தெரிந்த ஜாதகங்களில் லக்னாதிபதி 12ல் உள்ள சிலர் நன்றாக தூங்குகின்றனர்.லக்னம் தன்னைப் பற்றி குறிப்பதால் தன்னை மறக்கும் நிலைக்கு(தூக்கம்) 12ம் இடத்தை இடத்தை எடுத்துக் கொள்ளலாமா?இது சரியா??ஏதாவது கிரகம் இதனுடன் சம்பந்தபடுகிறதா???

12ஆம் வீட்டை அயன சயன போக பாக்கிய வீடு என்பார்கள். அந்த விட்டின் அதிபதி நன்றாக இருக்கும் ஜாதகனுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள பாக்கியம் இருக்கும்!

3.அந்தரத்தின் நாட்களை கணிக்க குறுக்கு வழி சொல்லவும்...Ex. குரு தசை,ராகு புத்தி,புதன் அந்தரம்?

எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப்படி ராசா? கடைகளில் 25 ரூபாய்க்குப் பஞ்சாங்கம் கிடைக்கும். ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் எல்லாவற்றிற்கும் குறுக்கு வழி இருக்கிறது!

4.நாம் உண்ணும் உணவை குறிக்கும் இடம் இரண்டாம் இடம்...சிலர் சாப்பாட்டு ராமனாக இருக்கிறார்கள்...சிலர் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கிடைத்ததை சாப்பிடுகிறார்கள்...சிலர் அசைவப் பிரியர்கள்...சிலர் சைவம்...இதற்கு காரணம் என்ன??? கிரகங்களுக்கு பிடித்த சுவைகள் என்ன???

நல்ல வேளை கிரகங்களுக்குப் பிடித்த நடிகைகளைக் கேட்காமல் விட்டீர்கள். சுந்தரி பாய், பண்டரிபாய், காந்திமதி, கண்ணாம்பா மாதிரி இழுத்துப் போர்த்திக்கொண்டுவந்தால் கிரகங்களுக்குப் பிடிக்குமா? அல்லது
நமீதா, நயன்தாரா மாதிரி Two Piece டிரெஸ்ஸில் வந்தால் கிரகங்களுக்குப் பிடிக்குமா? என்று கேட்காமல் விட்டுவிட்டீர்கள். தப்பித்தேன். நன்றி முருகா!

தனிப்பட்ட செயல்கள், குணங்களுக்கெல்லாம் லக்கினமும், லக்கின அதிபதியும், அவருடன் சேரும் கிரகங்களும், அவர் பெறுகின்ற பார்வைகளும்தான் காரணம். லக்கின அதிபதியுடன், சுக்கிரன், சனி, ராகு போன்ற கிரகங்கள் கை கோர்க்கும்போது, நீங்கள் சொல்கின்ற சுவையெல்லாம்....சாப்பாடு, பெண்களை மோப்பம் முடிப்பது முதல் மோகம் கொள்வதுவரை, தண்ணியடிப்பது (குழாயில் அல்ல) ரேசுக்குப் போவது, சீட்டாடுவது, பஃப்பிற்குப் போவது கப்பிற்குப் போவது என்று ஜாதகன் விதம் விதமான ஆட்டங்களில் நாட்டங்களை உடையவனாக இருப்பான்.

5.சில ஆலயங்களில் நவகிரகங்களின் திசைகளை வைத்து அவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்...சில ஆலயங்களில் 2 வரிசைகளில்(மேல், கீழ்) வைத்துள்ளனர்...குழம்பிவிடுகிறோம்...தான்சானியாவில் உள்ள கோவில்களில் அவ்வாறுதான் உள்ளது...இங்குள்ள பெரும்பான்மையோரின் கேள்வி இது...அவர்களின் வாகனங்களை வைத்து அடையாளம் காண்பது எவ்வாறு??? உதவுங்கள்...

தான்சானியாவில் உங்களைக் கோவில்கட்டி கிரகங்களை வைக்க விட்டதே பெரிய காரியம். அதற்காக சந்தோஷப்படுங்கள். இணையத்தில் பார்த்தால் கிரகங்கள், தங்கள் வாகனங்களுடன் இருப்பது தெரியும், அதைக் குறிப்பெடுத்து, போர்டில் எழுதி நீங்கள் குறிப்பிட்டுள்ள கோவிலில் வைக்கச் சொல்லுங்கள். அனைவருக்கும் அது உபயோகமாக இருக்கும்!

நன்றியுடன்,
அருள்நிதி
-------------------------------------------
email.No.56
G.ஆலாசியம்

Dear Sir,
I am sorry. My previous mail had some spelling mistakes.Kindly please ignore that mail and below is the corrected one. Thanks and regards,Alasiam G.
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்.
"நான் எழுத்துருவை சரியாக அனுப்பாமல் தங்களின் வைரமான நேரத்தை வீணாக்கியமைக்கு மன்னிக்கவும்".
எனது கேள்விகள் அய்யா...

1.செவ்வாய் இரண்டில் பொதுவாக நல்லது அல்ல...அதுவும் முக்கியமான இடம் இரண்டில் இருந்தால்???... இரண்டாம் வீடு, மகரத்தில் உச்ச செவ்வாய். அவர் ஐந்துக்கும் பன்னிரெண்டுக்கும் அதிபதி. அவருக்கு கேந்திரத்தில் சந்திரன் (ஐந்தில்) மற்றும் லக்னாதிபதி குரு மற்றும் லாபாதிபதி சுக்கிரனும் (பதினொன்றில்). இரண்டாம் வீட்டின் பரல் இருபத்தேழு செவ்வாயின் பரல் நான்கு. இந்த அமைப்பில் உள்ள தீயக் கிரகம் செவ்வாய் (சகோதரகாரன் மற்றும் பூமிகாரகன் என்று அதற்கு தனி மதிப்புக் கொடுப்பார் திருவாளர் செவல் பட்டி சிங்காரம் செட்டியார் அவர்கள்) செவ்வாய் திசை எப்படி இருக்கும்? 2.அது தனம்,வாக்கு,குடும்பம் இவைகளுக்கு எந்தவிதமான விளைவுகளைத் தரும்? 2A. இரண்டில் செவ்வாய் உச்சம், ராசிக்கு அதிபதி அப்படி இருக்க ஜாதகனுக்கு வீடு, பூமி மற்றும் பூமியிலிருந்து கிடைக்கும் பொருள்கள் மூலம் லாபம் கிடைக்கும் என்பது எவ்வளவு உண்மை?

உண்மைக்கு ஒரே அளவுதான்!:-)))) செவ்வாய் உச்சம் பெற்று அமைந்துள்ளதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். பூர்வ புண்ணிய அதிபதி உச்சம் பெறுவது ஜாதகனுக்குப் பலவிதத்திலும் நன்மை உடையதாக அமையும். அதனால் நன்மைகளே நடக்கும் என்று நம்பிக்கையோடு இருங்கள்!

2.ராகு இருக்கும் இடம் பெறும் பார்வை இவைகளைக் கொண்டே நல்லவனா கெட்டவனா என்பது..... நிற்க, அந்த ராகு இருப்பது மூன்றில் அவர் இருக்கும் வீட்டுக்கு கேந்திரத்தில் லக்னாதிபதி குருவும் சுக்கிரனும். மூன்றாம் வீட்டுக்கு அதிபதி சனி (வக்கிரம், ஒரு பரல் நீசம்) சந்திரனுடன், அம்சத்தில் சந்திரன் வீட்டில் இருக்கிறார். ராகு இருக்கும் வீட்டின் பரல் முப்பத்தைந்து. (ராகுவைப் போல் கொடுப்பாரில்லை...ஜோதிட மொழி) 3. இந்த ராகு அவரின் தசையில் கட்டிவைத்து அடித்து பிழிந்து எடுப்பானா? மூன்றில் முப்பத்தைந்து பரலுடன் இருப்பதால் எதாவது கொடுப்பானா? 3.ராகு திசையில் முன் பாதி பின் பாதி என்று எதாவது பலன்கள் வேறுபடுமா? பொதுவான ஒரு கேள்வி அய்யா.

ராகு தசையைப்பற்றிய விரிவான பாடம் பழைய பதிவுகளில் உள்ளது. அதைப் படித்துத் தெளிவு பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

4. கால சர்ப்ப தோஷத்தில் அகப்பட்டவர்கள் வாழ்வில் பெரும்பாலும் அவதிப்பட்டு ஒரு நிலைக்கு வந்தவர்களே அப்படிப் பட்டவர்கள் மீண்டும் ஒரு சிரமமான கட்டத்திற்கு ஜாதகம் கொண்டு செல்லுமா (எல்லோருக்கும் மொத்தம் 337 பரல்கள் தான்).

பெரும்பாலனவர்களைக் கொண்டு செல்லும். உதாரணம் ஹர்ஷத் மேத்தாவின் ஜாதகம்!

5.பாடங்களில் சந்தேகம் வர வழி இல்லை அத்தனையும் அவ்வளவு தெளிவு; இல்லை இல்லை அதை இப்படிக் கூறலாம் என்போன்றோரின் ஜோதிட அறிவுக்கு தேவைக்குச் சற்று அதிகமான விளக்கம் என்பேன். ஆகவே இதை ஒரு case study- யை போல் கேட்டுள்ளேன்.

கேஸ் ஸ்டெடி என்று சொந்த ஜாதகத்தை வைத்து உங்களைப் போல எல்லோரும் கேட்டால், எப்படி பதில் சொல்வது? அதற்கு உரிய நேரம் எனக்கு வேண்டாமா? எனக்கும் நாளொன்றிற்கு 24 மணிகள்தானே?
---------------------------------------------------
email.No.57
சூர்யா

There is a lagna in rasi and in navamsam. How to assess navamsam? With respect to rasi lagna or navamsa lagna? I still remember you gave one example how to assess rasi and navamsam. In that case Both rasi lagna and navamsa lagna are same?

ராசியிலும், நவம்சத்திலும் ஒரே லக்கினம் என்றால் அது வர்கோத்தம லக்கினம் ஆகும். லக்கினம் வர்கோத்தம் ஆகும் பலன் அந்த ஜாதகனுக்குக் கிடைக்கும். நவாம்சம் & வர்கோத்தமப் பாடங்களை எடுத்துப் படியுங்கள்!
-----------------------------
email.No.58
S.தினேஷ், ராஞ்சி, ஜார்கண்ட் மாநிலம்

அய்யா வணக்கம். ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் .

1.என் தம்பிக்கு துலா லக்னம்,விருச்சிக ராசி. 10'ல் அதாவது கடகத்தில், குரு,செவ்வாய். குரு உச்சம் பெற்று விட்டான்.செவ்வாய் நீச்ச பங்கம் செவ்வியும் சந்திரனும் பரிவர்த்தனம் பெற்றுவிட்டனர். அனால் இருவரும்
நீச்சம்.செவ்வாய் நீச்ச பங்கம் பெற்றதால் சந்திரனும் நீச்ச பங்கம் பெறுவானா?? பரிவர்த்தனை ஆனதால் நீச்ச பலன்கள் இல்லாமல் போகுமா?? எப்படி இருக்கும். சற்று விளக்கி கூறுங்கள்.

துலா லக்கினத்திற்கு குரு 3 & 6ஆம் இடங்களுக்கு உரியவன். இருந்தாலும், குரு சுபக்கிரகம். உச்ச குரு 10ல் இருப்பதாலும், 2 மற்றும் 7ஆம் அதிபதி செவ்வாய் அவருடன் இருப்பதாலும் (நீசபங்கம், மற்றும் குருமங்கள யோகத்துடன் இருப்பதாலும்) அந்த இடத்து அதிபதி பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதாலும் உங்கள் தம்பிக்கு நல்ல வேலை கிடைக்கும் கவலையை விடுங்கள். 10ஆம் வீட்டில் 30ற்கு மேற்பட்ட பரல்களும்,
அதன் அதிபதி சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கிறாரா என்றும் பாருங்கள்.
--------------------------------------------------------------
(தொடரும்)

இன்றைய பொன்மொழி!
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
- பெரியார் ஈ.வெ.ரா

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!


22 comments:

  1. குருவிற்கு வணக்கம்

    கேள்வி பதில் பாடங்கள் நன்றகள்ளது

    நானும் கேள்விகள் மெயிலில்
    கொடுதுள்ளேன்

    தங்கள் பதில்கள் கிடைக்கும் என்று கதிருகிறேன்

    நன்றி

    ReplyDelete
  2. ஐயா விற்கு முதற்க்கண் வணக்கம். !

    அக்கா! " தேமொழி !", அவர்களுக்கு, எப்படி தங்களுக்கும், வாத்தியார் ஐயா! அவர்களுக்கும் நன்றி சொல்லுவது என்றே எமக்கு தெரியவில்லை அக்கா!.

    இந்த பாடலை எத்தனையோ முறை, இன்னும் சொல்ல போனால் எத்தனையோ வருடமாக கிடைக்குமா என்று நானும் you tube இருந்து, Google engine வரை பலமுறை தேடிபார்த்தேன் ஆனால் கிடைக்க வில்லை.

    ஆனால் தாங்கள் யான் தேடிய வலையில் இருந்தே தேடி தந்து விட்டிர்கள் .

    இன்னும் சாதாரண மனிதனுக்கு
    ( படித்த) உள்ள புத்தி முதிற்சி கூட எமக்கு இல்லை என்பதனை ஒத்து கொள்ள வேண்டியது இருக்கு அக்கா!

    இதில் வேறு யாம் BCA மாணவன் அக்கா! மிகவும் வெக்க படுகின்றேன் என்னுடைய திறமை இன்மையை நினைத்து.

    இதனில் மிகவும் சிறப்பித்து கூறுவது என்றால் இப் பாடலை இயற்றியவர், பாடியவர் பெயர்களை யான் கூறியதும் கூட தவறாகத்தான் இருந்துள்ளது . .

    உரிமையானவர்கள்
    பாடியவர்: N.C. வசந்தகோகிலம்
    பாடல்: தந்தை தாய் இருந்தால்
    இயற்றியவர்: கோபாலக்ருஷ்ண பாரதி.

    யாம் இதுவரை மனதில் கொண்டது தாய் ! தந்தையரை பற்றியதாக தான் இருக்கும் என்பததுதான்.

    கடைசியில் உண்மை எனில் அனைத்து ஜீவராசிகளை படைத்தவனை பற்றியது என்று இன்றுதான் உணர்தேன் அக்கா.

    தன்னையே கட்டுபடுத்த முடியாத அளவிற்கு ஆனந்த கண்ணிர் வடிக்க வைத்து விட்டிர்கள் என்பதுதான் இதனில் மிகவும் சிறப்பு .

    இந்த பாடலை தாயோ , தந்தையோ இல்லாதவர்கள் கேட்டால், கேட்ட உடனையே தன்னையே அறியாமல் ஆனந்த கண்ணிர் வடித்து விடுவார்கள் என்பதுதான் உண்மையிலும் பெரிய உண்மை.


    இதற்க்கு ஈடான ஒரு பாடல் மலையாளத்தில்

    " சத்யம் சிவம் சுந்தரம்!", என்ற திரை படத்தில் இடம்பெற்றி இருக்கு .

    தமிழ் மற்றும் மலையாளம் என்பது கிட்ட தட்ட 70 % ஒன்று போல என்பதினால்

    "சின்ன குயில் சித்திரா!",

    அவர்களின் " குயில்", குரலில் பாடிய பாடலை வகுப்பறைக்கு வரும் எல்லோரும் (விருப்பம் உள்ளவர்கள்) கேட்க கேட்டு கொள்கின்றேன்.

    http://youtu.be/4gk9qGx7N00

    ReplyDelete
  3. Dear Sir!

    Great song by Biju Narayanan

    beautiful words-thanks for posting the song.

    A very touching song.. thanx for share.
    http://www.youtube.com/watch?v=hIz-U3fBFFc&feature=colike.

    ReplyDelete
  4. ஆலாசியம் அவர்கள் சொந்த ஜாதகத்தை வைத்து வளைத்து வளைத்து கேள்வி கேட்கிறார் என்பதை வாத்தியார் கண்டுபிடித்து விட்டார். இல்லாவிட்டால் அவர் வாத்தியாராகி இவ்வளவு பேரை சமாளிக்க முடியுமா.

    செவ்வாய் 12ம் அதிபதியாவதால் அடியும் கொடுத்து விட்டு 5ம் அதிபதியும் ஆவதால் தடவியும் கொடுப்பாரோ என்னவோ.

    ReplyDelete
  5. /// Maaya kanna said...
    யாம் இதுவரை மனதில் கொண்டது தாய் ! தந்தையரை பற்றியதாக தான் இருக்கும் என்பததுதான்.

    கடைசியில் உண்மை எனில் அனைத்து ஜீவராசிகளை படைத்தவனை பற்றியது என்று இன்றுதான் உணர்தேன் அக்கா.///

    எல்லா உயிர்களுக்கும் தந்தை அவன் தானே தோழரே...

    இதனை சொல்லும் திரைபாடலினை சொல்லவா சுழல விடவா..

    பிள்ளைக்கு தந்தை ஒருவன்
    நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்

    நீ ஒருவனை நம்பி வந்தாயோ
    இல்லை
    இறைவைனை நம்பி வந்தாயோ

    தாயாரை தந்தை மறந்தாலும்
    தந்தை தான் என்று சொல்லாத போது

    ஏன் என்று கேட்காமல் வருவார்
    நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன் இறைவன்

    உள்ளோற்கு செல்வங்கள் சொந்தம்
    அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்

    இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
    இல்லாத இடம் தேடி வருவார்
    நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்


    ///இந்த பாடலை தாயோ , தந்தையோ இல்லாதவர்கள் கேட்டால், கேட்ட உடனையே தன்னையே அறியாமல் ஆனந்த கண்ணிர் வடித்து விடுவார்கள் என்பதுதான் உண்மையிலும் பெரிய உண்மை.


    இதற்க்கு ஈடான ஒரு பாடல் மலையாளத்தில்....////

    இத்துடன் களத்து ஊர் கண்ணம்மாவின்
    இந்த பாடலினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..

    அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
    அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே

    தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
    மனம் தாழ்த்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே

    எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே
    இதை அறியாயோ முருகா உன் கருணையில்லையோ

    முருகா முருகா முருகா முருகா

    பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
    பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே

    ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
    இதை அறியாயோ முருகா உன் கருணையில்லையோ

    முருகா முருகா முருகா முருகா

    ReplyDelete
  6. ///இன்றைய பொன்மொழி!
    ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.///
    ...உண்மையை சொன்னால் யாருக்கும் சொல்பர்களைப் பிடிக்காது என்பதும் பொன்மொழி

    மழலைகையில் மதுவைக் கொடுத்ததேன் ஏன் ஏன் ஏன்...
    மனக் குழப்பத்தில் நீந்துகிறேன் ஏன் ஏன் ஏன்...

    kannavirku achan endal sala Ishtam enda sangathi manasula aayi
    It'a my turn :)))))))))))))
    என்ன அந்தக் காலத்து நடிகை கண்ணாம்பா மாதிரி உணர்ச்சி வசப் படுகிறீர்கள் கண்ணா...
    நன்றியை ஏற்றுக் கொண்டேன்..நன்றி கண்ணா...

    ////எனக்கு தெரிந்த ஜாதகங்களில் லக்னாதிபதி 12ல் உள்ள சிலர் நன்றாக தூங்குகின்றனர்.///
    இது அநுபவத்தில் அறிந்தது...நூற்றுக்கு நூறு உண்மை... உண்மை... உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் அந்த தூங்குமூஞ்சி நான் இல்லை.

    ///கிரகங்களுக்கு பிடித்த சுவைகள் என்ன???
    நல்ல வேளை கிரகங்களுக்குப் பிடித்த நடிகைகளைக் கேட்காமல் விட்டீர்கள்///
    ....இன்று விழுந்து எழுந்து சிரித்தது என் முறை

    இன்றைய பதிவில், ஒரு கிரகத்தின் தசையில் மற்றொரு கிரகத்தின் புத்தியில் பலன்கள் அந்த கிரகங்கள் குறிக்கின்ற இடங்களுக்கு தகுந்தாற் போலவும்,அவை இரண்டிற்கும் இடையேயான தொடர்பு பொருத்தும் அமையும் என்று அவற்றை தொகுத்து வழங்கிய பதில் மிகவும் உதவியாக இருக்கிறது ஐயா, நன்றி.

    என் கேள்வி:
    தனுசு மட்டும் அனைவரையும் நட்புடனும் சமமாகவும் நடத்துவது ஏன்? (நான் கேட்பது நம் நம் கவிஞர் புலிகட் தனுசு பற்றி அல்ல). இங்கு பகை, நீசம் என்ற பேச்சுக்கே இடமில்லாதிருப்பது ஏன்?

    ReplyDelete
  7. அய்யா வாழ்த்துக்கள் சொன்ன தேமொழி அக்கா, பார்வதி அக்கா, உதயகுமார் அண்ணா அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

    ReplyDelete
  8. வாத்தியார் அய்யா தங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி இறுக்கிறேன்...தாங்கள் விரும்பினால் வகுபரையில் பிருசுரிக்லாம்...

    ReplyDelete
  9. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    கேள்வி பதில் பாடங்கள் நன்றகள்ளது
    நானும் கேள்விகள் மெயிலில்
    கொடுதுள்ளேன்
    தங்கள் பதில்கள் கிடைக்கும் என்று காத்திருகிறேன்
    நன்றி/////

    முதலில் இப்போது வெளியாகிக்கொண்டிருக்கும் doubts & answers பகுதி முழுவதையும் படியுங்கள். பிறகு உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம் (அதற்கு என்று மீண்டும் ஒரு session வரும்)

    ReplyDelete
  10. //////Blogger Maaya kanna said...
    ஐயா விற்கு முதற்க்கண் வணக்கம். !
    அக்கா! " தேமொழி !", அவர்களுக்கு, எப்படி தங்களுக்கும், வாத்தியார் ஐயா! அவர்களுக்கும் நன்றி சொல்லுவது என்றே எமக்கு தெரியவில்லை அக்கா!.
    இந்த பாடலை எத்தனையோ முறை, இன்னும் சொல்ல போனால் எத்தனையோ வருடமாக கிடைக்குமா என்று நானும் you tube இருந்து, Google engine வரை பலமுறை தேடிபார்த்தேன் ஆனால் கிடைக்க வில்லை.
    ஆனால் தாங்கள் யான் தேடிய வலையில் இருந்தே தேடித் தந்து விட்டிர்கள் .
    இன்னும் சாதாரண மனிதனுக்கு ( படித்த) உள்ள புத்தி முதிற்சி கூட எமக்கு இல்லை என்பதனை ஒத்து கொள்ள வேண்டியது இருக்கு அக்கா!//////

    உணர்ச்சிப் பிழம்பாக இருக்கிறீர்களே! வருகிற/ வரப்போகின்ற மங்கை நல்லாளைக் கட்டிக் கொண்டு தினமும் (உணர்ச்சி வேகத்தில்) அழுகாமல் இருந்தால் சரிதான்! பழநி அப்பனைப் பிராத்திக்கின்றேன்!

    ReplyDelete
  11. //////Blogger Maaya kanna said...
    Dear Sir!
    Great song by Biju Narayanan
    beautiful words-thanks for posting the song.
    A very touching song.. thanx for share.
    http://www.youtube.com/watch?v=hIz-U3fBFFc&feature=colike.////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  12. ///////Blogger ananth said...
    ஆலாசியம் அவர்கள் சொந்த ஜாதகத்தை வைத்து வளைத்து வளைத்து கேள்வி கேட்கிறார் என்பதை வாத்தியார் கண்டுபிடித்து விட்டார். இல்லாவிட்டால் அவர் வாத்தியாராகி இவ்வளவு பேரை சமாளிக்க முடியுமா.
    செவ்வாய் 12ம் அதிபதியாவதால் அடியும் கொடுத்து விட்டு 5ம் அதிபதியும் ஆவதால் தடவியும் கொடுப்பாரோ என்னவோ./////

    அப்படிப் பட்ட அமைப்பில் அடிக்கவும் செய்வார். பிறகு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுக்கவும் செய்வார். கனிவும், கண்டிப்பும் மிக்க ஒரு தகப்பனைப்போல!

    ReplyDelete
  13. ////Blogger sundari said...
    Sir,
    vanakkam/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. ////Blogger தேமொழி said...
    ///இன்றைய பொன்மொழி!
    ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.///
    ...உண்மையை சொன்னால் யாருக்கும் சொல்பவர்களைப் பிடிக்காது என்பதும் பொன்மொழி
    மழலைகையில் மதுவைக் கொடுத்ததேன் ஏன் ஏன் ஏன்...
    மனக் குழப்பத்தில் நீந்துகிறேன் ஏன் ஏன் ஏன்...//////

    படம் எடுத்தவர் ஒரு நகைச்சுவைக்காக காலி பாட்டிகளைக் கொடுத்து அப்படிப்படம் எடுத்துள்ளார். சீரியசாகி விடாதீர்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    kannavirku achan endal sala Ishtam enda sangathi manasula aayi It'a my turn :)))))))))))))
    என்ன அந்தக் காலத்து நடிகை கண்ணாம்பா மாதிரி உணர்ச்சி வசப் படுகிறீர்கள் கண்ணா...
    நன்றியை ஏற்றுக் கொண்டேன்..நன்றி கண்ணா...
    ////எனக்கு தெரிந்த ஜாதகங்களில் லக்னாதிபதி 12ல் உள்ள சிலர் நன்றாக தூங்குகின்றனர்.///
    இது அநுபவத்தில் அறிந்தது...நூற்றுக்கு நூறு உண்மை... உண்மை... உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் அந்த தூங்குமூஞ்சி நான் இல்லை.
    ///கிரகங்களுக்கு பிடித்த சுவைகள் என்ன???
    நல்ல வேளை கிரகங்களுக்குப் பிடித்த நடிகைகளைக் கேட்காமல் விட்டீர்கள்///
    ....இன்று விழுந்து எழுந்து சிரித்தது என் முறை//////

    அடடே, உங்களைச் சிரிக்க வைத்ததை வெளிப்படுத்தியமைக்கு நன்றி!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    இன்றைய பதிவில், ஒரு கிரகத்தின் தசையில் மற்றொரு கிரகத்தின் புத்தியில் பலன்கள் அந்த கிரகங்கள் குறிக்கின்ற இடங்களுக்கு தகுந்தாற் போலவும்,அவை இரண்டிற்கும் இடையேயான தொடர்பு பொருத்தும் அமையும் என்று அவற்றை தொகுத்து வழங்கிய பதில் மிகவும் உதவியாக இருக்கிறது ஐயா, நன்றி.
    என் கேள்வி:
    தனுசு மட்டும் அனைவரையும் நட்புடனும் சமமாகவும் நடத்துவது ஏன்? (நான் கேட்பது நம் நம் கவிஞர் புலிகட் தனுசு பற்றி அல்ல). இங்கு பகை, நீசம் என்ற பேச்சுக்கே இடமில்லாதிருப்பது ஏன்?//////

    அதன் அதிபதி குரு பகவான். அதனால்! அவருக்கு மற்றுமொரு வீடு (மீனம்) இருந்தாலும், தனுசு சிறப்பான வீடு!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  15. /////Blogger Pandian said...
    வாத்தியார் அய்யா தங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறேன்...தாங்கள் விரும்பினால் வகுப்பறையில் பிரசுரிக்கலாம்.../////

    அழைப்பிதழ் வரவில்லை பாண்டியரே! classroom2007@gmail.com ஐ.டிக்கு அனுப்புங்கள்!

    ReplyDelete
  16. Blogger Sakthi Dasan said...
    தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/
    வாழ்க தமிழ், வளர்க தமிழ்..../////

    இதுபோன்ற ஒருங்கிணைப்புத் தளங்களை உருவாக்குகின்றவர்கள். தங்கள் தளங்களின் உறுப்பினராகச் சேர்கின்றவர்கள் பதிவிடும்போது, ஒவ்வொரு முறையும் உள்ளீடு செய்யாமல் தன்னிச்சையாக பதிவுகளை இழுத்துக்கொள்ளும் முறையை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
  17. மீண்டும் ஒரு முறை கேள்வி பதில் , பழைய பாடங்களை மறந்து விடாமல் , தெளிவாக புரிந்து கொள்ள உதவுகிறது.
    ஈ வெ ரா பொன்மொழிகளும் நலம். எங்கள் குடும்பத்தில் (அம்மா வழியில்) அனைவரும் ஈ வெ ரா பக்தர்கள்(?!). வீட்டுக்கு வந்த மருமகன்கள்(அம்மா genrartion ல் ) உட்பட.
    விதி விலக்கு என் தகப்பனார் மட்டும். முருக பக்தர் என் தம்பி பிறப்பதருக்கு முன்பே என் மகனுக்கு முருகனுடைய பெயர் வைப்பேன் என்று பாலமுருகன் என்ற
    பெயர் வைத்தார். அவர் நடத்தும ஸ்த்பனதுகும் முருகன் பெயரே..! கடுவுள் இல்லை என்று சொல்லி வந்த என் பெரியம்மா(அம்மாவின் சகோதிரி) குடும்பம் , அக்காவுக்கு
    திருமணம் செய்ய நேர்ந்த போது, மாப்பிள்ளை முருக பக்தர், பழனியில் தான் திருமணம் என்று சொல்லி, கடைசில் முருகன் அருளால் பழனியில் இனிதே நடந்தது.
    ஈ வெ ரா கடவுளை உன் உள்ளத்தில் தேடு என்றார். கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் நன்றாக சொல்லி இருப்பார். இப்படி தனித்துவமாக சிந்திபதற்கு
    உதாரணம் கடவுள் மறுப்பு , விதவை மறுமணம்(அந்தகாலத்திலே) , என்று சிறப்பு அம்சம் ஜாதகத்தில் உள்ளதா ? அப்படி சிந்தித்து சொல்ல்வர்களை எல்லாரும் ஏற்று கொள்கிறார்களே அதற்கு என்ன அம்சம்? முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் இல்லையென்றால் வகுப்பறையில் சொல்லுங்கள்.

    ReplyDelete
  18. மிக நல்ல மீள் பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா. ரீமிக்ஸ் பாடல் அருமை.

    ReplyDelete
  19. ///இந்துக்களுக்கும் மானியம் வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதனை ஏற்று, இந்துக்களுக்கும் மானியம் வழங்கும் புது திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.///

    இது இன்றைய தின மலர் செய்தி
    இது பற்றி ஏற்கனவே வகுப்பில்

    அய்யர் எழுதியதையும்
    அதை எதிர்த்தும் ம(றை)றுத்தும்

    பதிவுகள் வலையேறியதும்
    பதிலே சொல்லாமல் படித்த மாணவர்களுக்காகவும்

    இந்த செய்தியை தருகிறோம்
    இது போலவே அடுத்த முன்வரிசை

    பட்டியலில் உள்ளது .. முதலிலுடள்ள
    பிரார்த்தனைக்கு ஒருவர் மட்டும்

    வகுப்பறையில் வெளிப்டையாக
    வருகை தந்துள்ளார்

    மதுரையை மீட்கும் சுந்தர பாண்டியனை
    மாலையிட்டு வரவேற்போமே...

    ReplyDelete
  20. ஐயா வணக்கம். ஒரு வேண்டுகோள் கிரகங்கள் அமர்ந்திருக்கும் நட்சத்திர அதிபதிகளையும் ஜாதகத்தை அலசும் போது கணக்கில் எடுத்து கொள்ள வேண்டுமல்லவா. அதை பற்றி ஒரு பதிவு போடுங்களேன். வகுப்பறை முழுக்க தேடி பார்த்து விட்டேன் கிடைக்க வில்லை. நன்றி ஐயா.

    ReplyDelete
  21. புக்தி,அந்தரங்கம் கணக்கிடுவதற்கு வழி :

    புக்தி அளவு = (தசா அளவு ) * ( புக்தி நாதனின் தசா அளவு ) /10௦
    இந்த அளவு மதங்களில் வரும் .
    உதாரணம் : ராஹு தசையில் புதன் புக்தி என்று வைத்துக்கொள்ளுங்கள்

    ராஹு தசை அளவு : 18 ஆண்டுகள் , புதன் தசை அளவு : 17 ஆண்டுகள்
    ஆக, 18* 17 /10 = 306/10 = 30.6 Months
    இந்த கணக்கில் 1 மாதம் = 30 நாட்கள்
    30.6 Months= 30 Months and 18 days

    அந்தரங்கம் கணக்கிடுவதற்கு வழி :

    அந்தரங்கம் அளவு = ( ( தசா நாதன் தசா அளவு ) * (புக்தி நாதனின் தசா அளவு ) * (அந்தரங்க நாதனின் தசா அளவு ) /1200 ) மாதங்கள்

    உதாரணம் : புதன் தசையில் , ராஹு புக்தி , சூரியன் அந்தரங்கம்
    புதன் தசை அளவு : 17 ஆண்டுகள்
    ராஹு தசை அளவு : 18 ஆண்டுகள்
    சூரியன் தசை அளவு : 6 ஆண்டுகள்

    ஆக : 17* 18 * 6 /1200 = 1836 / 1200 = 1.53 Months

    மறுபடியும் .53 உள்ளது . 0.53 * 30 = 15. 9 Days

    மறுபடியும் 0.9 உள்ளது . ஒரு நாள் என்பது 60 நாழிகை . ஆக , 60* 0.9 = 54 நாழிகை . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் .

    ஆக புதன் தசையில் , ராஹு புக்தி , சூரியன் அந்தரங்கம் அளவு : 1 Month 15 days 54 நாழிகை

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com