2.5.12

Astrology தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன?


++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன?

Doubts: கேள்வி பதில் பகுதி எட்டு

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எட்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.32
ராஜன் குமரேசன்

வாத்தியார்,

thanks for the email lessons about the much waited 10th house.It will take few more days to understand as it is too heavy one.It is very helpful for many people.
Below is the some of the doubts I have

1 .நீச கிரகத்தை இன்னொரு நீச கிரகம் பார்த்தால் என்ன பலன்.இது யோகா கணக்கில் வருமா? கடக செவ்வாய், மகர குரு இரண்டும் நீசம். இதன் 7 ஆம் பார்வை எப்படி இருக்கும்?

வராது! ஒரு சீட்டு வாங்காமல் பயணிப்பவர் (Ticket less Traveler) இன்னொரு சீட்டு வாங்காமல் பயணிப்பவருக்கு எப்படி உதவ முடியும்? ஆனால் குரு எந்த நிலைமையில் இருந்தாலும் அவருடைய பார்வை நன்மையைத்தரும். கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே. அதனால், அவருடைய பார்வை சற்றுப் பயன்தரும்!

2 .சுக்கிரனுக்கு துலாம் ஆட்சி வீடு.இங்கே, சூரியன் நீசம். இந்த அமைப்பு நீச பங்க ராஜ யோகம் ஆகுமா?.இங்கே சந்திரன் இருந்தால் பலன் மாறுமா?

ஒரு உச்சனும் ஒரு நீசனும் சேர்ந்து இருந்தால்தானே நீசபங்க ராஜ யோகம் உண்டாகும்? அது இல்லாத நிலையில் இந்தக் கேள்வியை எப்படிக் கேட்கிறீர்கள்?

3.மிதுன லக்கின பத்தாம் இடம் மீனம். இதில் கேது இருந்து , லக்கினத்தில் குரு இருந்தால் சித்தர் போல இருக்கமுடியும் என்பது சரியா?

சரியில்லை! முதலில் ஜாதகனுக்கு ஞானம் வருமா என்று பாருங்கள். ஞானம் வருவதற்கு 4,8 12 ஆம் இடங்கள் நன்றாக இருக்க வேண்டும். ஞானத்திற்கு அடுத்த நிலைதான் சித்தியடைவது!

4 .லக்கினாதிபதிக்குப் ( 3 ) பதில் ராசியதிபதிக்கு நல்ல பரல் ( 6 ) இருந்தால் நல்லதா?

மனைவியாக வருபவளுக்குப் பதில் மாமியார் அழகாக இருந்தால் பரவாயில்லையா? என்று கேட்பதைப் போல் உள்ளது உங்கள் கேள்வி! லக்கினாதிபதிக்குப் பலன்கள் தனி. ராசி அதிபதிக்குப் பலன்கள் தனி. முதலில்
பழைய பாடங்களைப் படியுங்கள்

5.பத்தாம் இடக்கேது தொழிலில் இடைஞ்சல் பன்னாமல் இருக்க என்ன பண்ண வேண்டும்?

லஞ்சம் கொடுக்க முடியுமா என்று கேட்கிறீர்களா? நாட்டில் பலருடைய நிலைமை அப்படியாகிவிட்டது. நீங்கள் என்ன செய்வீர்கள்? பணத்தைக் காட்டி கேதுவை விலைக்கு வாங்க முடியாது. அவ்வளவு பணம் இருந்தால் எதற்காக வேலைக்குப் போக வேண்டும்? பத்து பேர்களுக்கு நாமே வேலை கொடுக்க லாமே? ஜாக்கிரதையாகத் தொழிலைச் செய்யுங்கள். இறைவனைத் தினமும் வழிபடுங்கள். அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்!
-----------------------------------------------------
email No.33
சந்திரசேகரம் சஞ்சீவகாந்த்

Sir
vanakkam. i am chanjeev

1.can you please let me know about how to analyse previous jenma in our horoscope deeply?

முன் ஜென்மத்தை அலசுவதற்கெல்லாம் வழி இல்லை! இருக்கிற உபத்திரவங்கள் போதாதா? அதை எதற்காகத் தெரிந்து கொள்ள வேண்டும் - சொல்லுங்கள்?

2.the houses are blank and there is no aspect what will happen?

பஸ்ஸில் கூட்டமே இல்லை என்ன செய்யலாம்? நன்றாகக் காலை நீட்டி செளகரியமாக உட்கார்ந்து கொண்டு செல்லுங்கள். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லையா? படுத்துக்கொண்டே செல்லுங்கள். எதற்காகக் கூட்டமே
இல்லையென்று கவலைப் படுகிறீர்கள்? பார்வை இல்லையே என்று கவலைப்படுவதும் அப்படித்தான். சரி, விஷயத்துக்கு வருவோம். கட்டம் காலியாக இருப்பதால், அதில் கிரகம் இல்லை, பார்வையும் இல்லை என்று
எப்படிச் சொல்கிறீர்கள்? பார்வைகளைப் பற்றி நீங்கள் சரியாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது.காலியாக உள்ள கட்டத்திற்கு எதிரில் உள்ள கட்டமும் (opposite house) காலியாக இருக்கிறதா? செவ்வாய், குரு, சனி
ஆகியவற்றிற்கெல்லாம் ஓரப் பார்வை உண்டு. அது தெரியுமா? முதலில் அவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்

3.if we want see A man when will go abroad(long distance). how?

ஒன்பதாம் வீடுதான் வெளி நாட்டுப் பயணத்திற்கானது. யார், யார் போவார்கள்? அந்தப் பாடத்தில் அதை எழுதியிருக்கிறேன். முதலில் நீங்கள் பழைய பாடங்களை எல்லாம் நன்றாகப் படியுங்கள். ஒரு திரைப்படத்திற்கு
இடைவேளைக்குப் பிறகு வந்து விட்டு, முன் கதையில் நடந்தவற்றை ஒவ்வொன்றாகக் கேட்பதைப் போன்றது இது!
-----------------------------------------------------------
email No.34
போஜராஜன்

என்னுடைய பத்தாம் (மேஷம்) வீட்டில் நான்கு கிரகங்கள் உள்ளன. சூரியன், புதன், குரு மற்றும் கேது. எந்த கிரகங்களும் யுத்தத்தில் இல்லை. அஷ்டவர்க்கம் பத்தாம் வீட்டில் 30 உள்ளது. மேலும் பத்தாம் அதிபதி
பன்னிரண்டாம் வீட்டில் உள்ளார். எனக்கு சுய தொழில் அமையுமா?

பத்தாம் அதிபதி விரைய ஸ்தானமான 12ல் இருந்தால், ஜாதகன் வேலைக்குச் செல்வது நல்லது.சொந்தத் தொழில் செய்தால், தொழில் நஷ்டமடையும். கைக்காசு விரையமாகும். போட்ட முதலை எடுக்க முடியாது!
எவ்வளவு பணம் போட்டாலும், பாழுங்கிணற்றில் போட்ட பணம்போல, போட்ட பணம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு!

------------------------------------------------------------
email No.35
அருள் நிதி

அன்பான ஆசிரியர் அவர்களுக்கு,
சந்தேக விளக்கங்களுக்கு முதற்கண் நன்றி...

1. ராகு ஒரு வீட்டில் தனியாக,எந்த ஒரு கிரகத்தின் பார்வையுமின்றி ராசியிலும் அம்சத்திலும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவரின் நக்சத்திரத்தில் வேறு இரு கிரகங்கள் இருக்கின்றன...அப்போது அவர் நின்ற வீட்டிற்குண்டான அதிபதியின் பலன் மட்டும் கொடுப்பாரா அல்லது
அவர் நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்களின் பலனையும் கொடுப்பாரா?

குழப்புகிறீர்களே? அவருடைய நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களை அவருடன் உங்களை யார் இணைத்துப் பார்க்க சொன்னது? அவர் தான் இருக்கும் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கான பலனைத் தருவார்.
அதை மட்டுமே பாருங்கள்!

2. செவ்வாய் தன் எதிரி சனியின் வீட்டில் உச்சம் அடைவதால் அந்த வீட்டிற்குண்டான உச்ச பலன்களை தருவாரா?

செவ்வாய் உச்சம் பெற்றதற்காக மகிழ்ச்சிகொள்ளாமல், அவர் எதிரி வீட்டில் இருக்கிறாரே என்று கவலை கொள்ளும் உங்களை என்ன செய்வது? தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன? குடிசையில் பிறந்திருந்தால் என்ன? அரண்மனைவாசியாக இருந்தால் என்ன? பெண் அழகாக இருந்தால் போதாதா? உங்களை மணந்து கொள்ள முன்வந்தால் போதாதா? உச்சமானதை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள்

3.கடக,சிம்ம லக்னத்துக்கு யோககாரனான் செவ்வாய், கடக லக்னத்துக்கு 7 -ல்(உச்சம்) சுய பரலில் நன்கு மற்றும் பாபர் பார்வையின்றி ராசி மற்றும் அம்சத்தில் இருந்து மேசத்தில் உள்ள சனியுடன்(பாபர் பார்வையின்றி
சுய பரல் நன்று) பரிவர்த்தனை ஆகி இருந்தால் செவ்வாய் நல்ல பலன்களை தருவாரா? அல்லது எதிரியுடன் பரிவர்த்தனையானதால் கெடுபலன் வருமா? இது ஒரு உதாரணம்தான் தனிப்பட்ட ஜாதகம் இல்லை.

Parivartanai of Sani and Kuja, no matter how repressed it makes the personality, will give full discipline from Sani and full productivity from Kuja. The native will definitely accomplish something in life despite one's habit of taking the longer, harder road toward nearly every goal.

4.சனியும் சூரியனும் பரிவர்த்தனையானால் (1,2,4,5,7,9அல்லது 10க்கு அதிபதிகள்) அந்த வீட்டிற்குண்டான பலன் பாதிக்கப்படுமா???

எம்.ஜி.ஆரும் நம்பியாரும் நடித்த படத்தில் சண்டைக் காட்சி இருக்குமா? என்று கேட்பதைப் போன்று இருக்கிறது உங்கள் கேள்வி! இருக்கும் பரிவர்த்தனைகளிலேயே சனி சூரியன் பரிவர்த்தனைதான் மோசமானது. அதிக தீமையானது. பலன்கள் பாதிப்பு அடையும்!

The combination of exchange/parivartan between sun and Saturn is the most worst combination and rest of the exchange/parivartan gives boosting and in this case of sun and satrun totally distroy the houses and the results related to those house in your case it is 5 & 11 house related to children ,mind ,income,elder brothers etc. all will be badly affected.

5.ராகு மற்றும் கேதுவுக்கு தனித்தனியே நண்பர்கள்,பகைவர்கள் உண்டா?

சனி, புதன் ஆகிய இருவரும் நண்பர்கள். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூவரும் பகைவர்கள். குருவும், சந்திரனும் சமமானவர்கள்.

6.நம் உடலின் பகுதிகளுக்கு காரகம் வகிக்கும் கிரகங்கள் எவை எவை? நீங்கள் 7 கிரகங்களை பற்றி தனித்தனியே கொடுத்துள்ள பாடங்களில் இவை இல்லை....எடுத்துகாட்டாக
இரத்த செல்= ?
நரம்பு மண்டலம்=?
தசை மண்டலம்=?
மூளை=?
இதயம்=?

Planets &  human body.
The planetary ruler ships are as follows:
Sun rules bones.
Moon rules blood.
Mars rules marrow.
Mercury rules skin.
Jupiter rules fat.
Venus rules semen (materials related to the reproductive system).
Saturn rules muscles.
If Sun is afflicted, it can show some problems related to bones.
Weakness of Moon may give blood related problems. And so on.
---------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!


48 comments:

  1. சினிமா நாயகனை நல்லவனாக, வல்லவனாக
    சித்தரிக்க எதிர் நாயகர்கள் தேவைப் படுகிறார்கள்.

    எதிர் நாயகர்கள் இல்லாத கதையில்
    என்ன சுவராசியம் இருந்துவிட முடியும்?.

    தன் பிம்பமாக நாயகனை பார்க்கும் ரசிகன்,
    தன் பிரச்சினைகளுக்கு காரணமானவர்களை எதிர் நாயகனின் ரூபத்தில் காட்சிப்படுத்தி பார்ப்பதில்லையே

    கதாநாயகன் வெல்லும் போது தானே கட்டாயம் தான் வென்றதாய் மகிழ்கிறான்.

    எதிர் நாயகன் நாயகனாவதும்
    (உம் வில்லனாக நடித்து பின் கதாநாயகனாக மாறிய கமல்ஹாசன்,ரஜினிகாந்த், சத்யராஜ்,சரத்குமார். நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ்,)

    நாயகன் எதிர் நாயகனாவதும்
    (உம் எம் ஆர் ராதா, டிஎஸ் பாலையா பி எஸ் வீரப்பா, எம்என் நம்பியார், அசோகன், ஆர்எஸ் மனோகர்,ஜெய்சங்கர், என நாயகனாக அறிமுகமாகி வில்லனாக மாறிய என ஒரு பெரிய பட்டியல் உண்டு)

    அங்குண்டு
    இங்கும்....


    அது சரி ரராகுவும் கேதும் (ஒரே வீட்டில்) சந்தித்தால்....

    ReplyDelete
  2. ////Blogger அய்யர் said...
    அது சரி ராகுவும் கேதும் (ஒரே வீட்டில்) சந்தித்தால்.../////

    நோ சான்ஸ்! சந்திக்கவே மாட்டார்கள்! 180 பாகைகள் வித்தியாசத்தில் சுழலும் அவர்கள் எப்படிச் சந்திப்பார்கள்? விளையாட்டிற்காக இதைக் கேட்டுள்ளீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரியாததா?

    ReplyDelete
  3. //அது சரி ராகுவும் கேதும் (ஒரே வீட்டில்) சந்தித்தால்//

    இதைப் படித்ததும்

    ‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
    உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’

    என்ற பாடல் நினைவிற்கு வந்து சென்றது

    ReplyDelete
  4. Ref: Q# 33.2
    ஐயா, என்னுடைய ஒன்பதாவது வீடு காலி. யாரும் நேராகவோ, கொஞ்சம் ஓரப்பார்வையாகவும் கூட பார்க்க விரும்பவில்லை. காலை நீட்டும் அளவுக்கு வசதியில்லை. 27 பரல்கள் (நீங்கள் ஒரு பாடத்தில்...அட்டவணையில் குறைந்தது 29 இருந்தால் நல்லது என்று சொல்லியுள்ளீர்கள் http://classroom2007.blogspot.com/2008/02/blog-post.html). வீட்டின் அதிபதி புதன் சுயவர்கப் பரல் 5 உடன் ஐந்தாம் வீட்டில், சூரியன் காரகன் 4 பரல்களுடன் ஆறாம் வீட்டில் மறைவு. இருவரும் தனித்தே உள்ளார்கள். காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் என்பதால் இவர்களையும் யாரும் பார்க்க விரும்பவில்லை.
    அதனால் நான் அஷ்டவர்கப் பரல் வைத்து மட்டும்தான் ஒன்பதாம் வீட்டைப் (கன்னி) பற்றி புரிந்து கொள்ள வேண்டுமா? நன்றி ஐயா.

    ReplyDelete
  5. ananth said.
    ///‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
    உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’

    என்ற பாடல் நினைவிற்கு வந்து சென்றது///


    எமது நினைவிலும்
    எம்ஜிஆரின் இந்த பாடல்

    பகிர்வுக்கு நன்றி..
    பாசமுடன் வணக்கங்களுடன்

    ReplyDelete
  6. ///நோ சான்ஸ்! சந்திக்கவே மாட்டார்கள்! 180 பாகைகள் வித்தியாசத்தில் சுழலும் அவர்கள் எப்படிச் சந்திப்பார்கள்?///

    திரைப்படங்களிலேயே நாயகனும் எதிர் நாயகனும் சந்திப்பது பற்றி சிந்திப்பதில்லையே..

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா. ஒரு ஜாதகத்தில் சனியும் உச்சம் பெற்று , சூரியனும் உச்சம் பெற்றால் அதன் பலன் எப்படி இருக்கும் ?
    அதே போல் சனி உச்சம் பெற்று , சூரியன் ஆட்சியாக இருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் ? பலன் என்று நான் குறிப்பிடுவது, ரெண்டு பேரும்
    அள்ளி அள்ளி கொடுப்பார்களா ? அல்லது ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முறைத்து கொள்வார்களா ? தீய பலன்கள் ஏற்படுமா ?
    இல்லை நீ உன் வேலைய பார் நான் என் வேலைய பார்கிறேன் என்று உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்வார்களா ?அதே போல் சூரியனும் ராகுவும் ஒரு வீட்டில் இருக்கும் போது, ராகு சூரியனின் பிடிக்குள் இருந்தால் , ராகுவால் ஏற்படும் தொல்லைகள் இருக்காது இல்லையா ? அல்லது சூரியனின் பலன்களை ராகு அமர்த்தி கொள்வாரா ?
    trying to understand who is superior when stronger planets are there in their comfort zone ?
    Kalai -Seattle

    ReplyDelete
  8. @ தேமொழி அவர்களே ஒரு வழியாக நான் காரை என் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன் . கணவரையும் தான். மனதுக்குள்ளே பயபட்டுக்க சொல்லயுள்ளேன்.
    இன்னும் நிறைய பயற்சி தேவை , ஆனால் இப்போதுதான் ரோட்டு பயம் நீங்கி உள்ளது... முதல் முயற்சியாக...

    ReplyDelete
  9. 6 க்கு உடையவனும் 12 க்கு உடையவனும் (சூரியன், சனி ) சேர்ந்து நீஷபங்க ராஜயோகத்தில் இருந்தால் அவர்கள் இருக்கும் வீட்டின்(3 ,6 ,8, 12 ஆக இல்லாமல் மற்ற வீட்டில் ) நிலைமை என்னவாக இருக்கும். இதை யோகம் என்று கொள்வதா இல்லை அவர்களால் அந்த வீடு பாதிப்பு அடையுமா ?
    சனி சூரியன் பரிவர்த்தனைதான் மோசமானது என்று கூறி உள்ளீர்களே அவர்களால் ஏற்படும் நீச்சபங்கம் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  10. அய்யர் வருத்தமுடன் இருப்பதாக
    அன்பு தோழி மின்னஞ்சல் செய்திருந்தார்

    உணர்வுகளை புரிந்து கொண்ட
    உத்தம தோழிக்கு நன்றி...

    உண்மையில் வருத்தம் தான்
    உள்ளபடியே காரணத்தை வாத்தியாருக்கும் அனுப்பியிருந்தோம்

    அது என்ன என அறிய விரும்பும்
    அவருக்கும்(புள்ளி ராணிக்கும்) சொல்கிறோம்

    பெங்களுரு இப்போ
    மதுரைக்கு (போகப்)போகுது..

    அரசிடமிருந்து
    ஆதினத்திற்கு

    என்ற சூளுரையுடன்..
    என்பதால் வருத்தம் இருக்கத்தானே செய்யும்..

    முடிந்தால் கூட்டு பிரார்த்தனையில்
    சேர்ந்து கொள்ளுங்கள்..

    ஏமாற்றம் இல்லா
    மாற்றம் வரும் என்று..

    வேண்டுதல்களுடன்
    வணக்கமும்..

    ReplyDelete
  11. ///Blogger கலையரசி said...
    @ தேமொழி அவர்களே ஒரு வழியாக நான் காரை என் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன் . ///

    T.M.S:
    ஆஹா... பேஷ்... பேஷ்... அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு...

    தேமொழி:
    கலை, நீங்களே அடுத்த வரியை உங்கள் கணவரிடம் பாடி விடுங்கள்.
    :))))))

    ReplyDelete
  12. நன்றி அய்யர் ஐயா அவர்களே.
    பிரார்த்தனையில் நானும் சேர்ந்து கொண்டேன்.
    புள்ளிராணிக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்கவில்லை
    themozhi at yahoo dot com

    ReplyDelete
  13. பெரியாரின் கருத்தை பார்த்து மகிழ்ந்தேன் ஐயா.
    என்ன ஒரு வித்தியாசமான மனிதர் அவர்.
    வெண்தாடி வேந்தர்களே விநோதமானவர்கள் என்பது என் கருத்து
    :))))) வேறு சிலரையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

    ReplyDelete
  14. ஐயா வணக்கம், நன்றிகள் பல உங்கள் பதிலுக்கு,

    கன்னி லக்னம் பத்தாம் அதிபதியும் சனியும் பன்னிரெண்டில் இருகிறார்கள்,

    குரு செவ்வாய் சந்திரன் பத்தில்(மிதுனம்) அதில் 37 பரல்கள்.

    சுய தெழில் செய்ய வய்ப்பில்லை,முகவர், கமிஷன் வேலைக்கும் சரிப்படாது என்கிறார்கள். என்றால் 37 பரல்கள் மதிப்பு என்ன ?

    பரல் அதிகம் உள்ள இடத்தில் அதிபதி பலமா ? அல்லது அதில் உள்ள கிரகங்கள் பலமா ?

    நன்றி,
    கருவூர் முருகன்

    ReplyDelete
  15. http://www.vedicastrology.com/articles/ArticleNeechaBhanga.htm

    நீச பங்கத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் மேலே கொடுக்கப் பட்ட சுட்டியில் உள்ள தளத்தை ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது பி வி ராமன் அவர்களின் Graha and Bhava Balas என்ற புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.

    ReplyDelete
  16. ராகு,கேது ஷோடசாம்சத்தில் இணைந்தே காணப்படுகிறார்கள்.

    உச்சனை உச்சன் பார்த்தால் பார்வை பெற்ற கிரஹம் நீசம் அடையும் என்றும், நீசனை நீசன் பார்த்தால் பார்த்த கிரஹம் உச்ச பலம் பெறும் என்றும் கூறுகிறார்கள். ஆதாரம் கேட்டால் தெரியாது என்பதே பதில்.

    நீச பங்கத்திற்கு 'நீசன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் பெற்றிட்டால் நீச பங்க ராஜயோகம்'என்பது பாடல் வரியாகச் சொல்கிறார்கள்.ஆகவே உச்சம் மட்டுமல்ல ஆட்சியும் நீச பங்கத்தை முடிவு செய்கிறது.

    பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  17. 1. ராகு ஒரு வீட்டில் தனியாக,எந்த ஒரு கிரகத்தின் பார்வையுமின்றி ராசியிலும் அம்சத்திலும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவரின் நக்சத்திரத்தில் வேறு இரு கிரகங்கள் இருக்கின்றன...அப்போது அவர் நின்ற வீட்டிற்குண்டான அதிபதியின் பலன் மட்டும் கொடுப்பாரா அல்லது
    அவர் நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்களின் பலனையும் கொடுப்பாரா?

    குழப்புகிறீர்களே? அவருடைய நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களை அவருடன் உங்களை யார் இணைத்துப் பார்க்க சொன்னது? அவர் தான் இருக்கும் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கான பலனைத் தருவார்.
    அதை மட்டுமே பாருங்கள்!//

    சத்தியாச்சாரியார் என்ற பழைய ஜோதிட ஆசிரியர் கிரகங்கள் நிற்கும் நட்சத்திர சாரங்களைப் பொறுத்துப் பலன் அளிப்பதைக் குறித்து எழுதியுள்ளதாக B.V.Raman குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக கும்ப லக்னத்திற்கு புதன் ஐந்தாம் எட்டாம் வீடுகளின் அதிபதி. அவர் நான்கில் அமர்ந்துள்ளார். ஐந்தாம் அதிபதி நான்கில் அமர்வது நல்லது. ஆனால் எட்டாம் அதிபதி நான்கில் அமர்வது சரியில்லாத அமைப்பு. புதன் தசை, புத்தியின்போது போது என்ன பலன் விளையும் என்பதை அறிவதற்கு புதன் எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் நிற்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார். உதாரணமாக சுக்கிரனின் நட்சத்திர சாரத்தில் நின்றால் சுக்கிரன் கும்ப லக்னத்தின் யோக காரகன் ஆனதால் சுக்கிரனின் வலிமையைப் பொறுத்து நற்பலன்கள் விளையும். இதுவே ராகுவின் சாரத்தில் நிற்கிறார் மற்றும் ராகு ஆறில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது புதன் தசை, புத்தியின்போது நோய், கடன், எதிரிகள் ஆகிய கெடுபலன்கள் ஏற்படும்.

    இது எனக்கு அனுபவபூர்மாகப் பலித்துள்ளது. கும்ப லக்னம் உடைய நான் புதன் புத்தியின்போது இருபத்தைந்து வயதிலேயே வீடு வாங்கும் யோகம் அமைந்தது.

    ReplyDelete
  18. நீசபங்க ராஜ யோகத்திற்கு B.V.Raman மேலும் சில விதிமுறைகள் கூறுகிறார்:

    (i) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.

    (ii) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியில் உச்சமடையும் கிரகம் லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.

    (iii) நீசமடையும் கிரகம் உச்சமடையும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.

    ஆனால் எந்த கிரகத்தால் நீச பங்கம் (நீசத்திலிருந்து விலக்கு) ஏற்படுகிறதோ அது நீச வீட்டிலோ, பகை வீட்டிலோ இல்லாமல் இருந்தால்தான் ராஜயோகத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும் என்கிறார்.

    ReplyDelete
  19. உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான் என்பது பழமொழி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் B.V.Raman அதை உச்ச பங்க
    யோகம் என்றும் இந்த அமைப்பு ஒருவனை போண்டியாக்க கூடிய அமைப்பு என்கிறார்.

    நீசனை நீசன் பார்த்தால் ஏற்படும் பலன் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் செய்துதான் கண்டுபிடிக்க வேண்டும்.

    ReplyDelete
  20. Ayya,

    Very good news about calculating as per Vakiya. But I am not able to get preference as you shown. Can you help how to select that menu. I tried my best for more than one hour, but no success. Waiting for your reply.

    Student,
    Ravi

    ReplyDelete
  21. /////Blogger ananth said...
    //அது சரி ராகுவும் கேதும் (ஒரே வீட்டில்) சந்தித்தால்//
    இதைப் படித்ததும்
    உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
    உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
    என்ற பாடல் நினைவிற்கு வந்து சென்றது////

    துள்ளாத மனமும் துள்ளும்
    சொல்லாத கதைகளைச் சொல்லும்!

    ReplyDelete
  22. ////Blogger தேமொழி said...
    Ref: Q# 33.2
    ஐயா, என்னுடைய ஒன்பதாவது வீடு காலி. யாரும் நேராகவோ, கொஞ்சம் ஓரப்பார்வையாகவும் கூட பார்க்க விரும்பவில்லை. காலை நீட்டும் அளவுக்கு வசதியில்லை. 27 பரல்கள் (நீங்கள் ஒரு பாடத்தில்...அட்டவணையில் குறைந்தது 29 இருந்தால் நல்லது என்று சொல்லியுள்ளீர்கள் http://classroom2007.blogspot.com/2008/02/blog-post.html). வீட்டின் அதிபதி புதன் சுயவர்கப் பரல் 5 உடன் ஐந்தாம் வீட்டில், சூரியன் காரகன் 4 பரல்களுடன் ஆறாம் வீட்டில் மறைவு. இருவரும் தனித்தே உள்ளார்கள். காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் என்பதால் இவர்களையும் யாரும் பார்க்க விரும்பவில்லை.
    அதனால் நான் அஷ்டவர்கப் பரல் வைத்து மட்டும்தான் ஒன்பதாம் வீட்டைப் (கன்னி) பற்றி புரிந்து கொள்ள வேண்டுமா? நன்றி ஐயா.////

    ஒன்பதாம் வீட்டின் அதிபதி முக்கியமில்லையா? அவர் 5 பரல்களுடன் திரிகோண வீட்டில் கையில் மட்டையுடன் இருப்பதால், அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்! தன் தசாபுத்திகளில் அவர் சதங்களாக அடித்து, உங்கள் டீமை வேற்றி பெற்ச் செய்வார்!

    ReplyDelete
  23. ////Blogger அய்யர் said...
    ///நோ சான்ஸ்! சந்திக்கவே மாட்டார்கள்! 180 பாகைகள் வித்தியாசத்தில் சுழலும் அவர்கள் எப்படிச் சந்திப்பார்கள்?///
    திரைப்படங்களிலேயே நாயகனும் எதிர் நாயகனும் சந்திப்பது பற்றி சிந்திப்பதில்லையே..////

    படத்தின் திரைக்கதை, வசனகர்த்தா பிழைக்க வேண்டாமா?

    ReplyDelete
  24. /////Blogger கலையரசி said...
    வணக்கம் அய்யா. ஒரு ஜாதகத்தில் சனியும் உச்சம் பெற்று , சூரியனும் உச்சம் பெற்றால் அதன் பலன் எப்படி இருக்கும் ?
    அதே போல் சனி உச்சம் பெற்று , சூரியன் ஆட்சியாக இருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் ? பலன் என்று நான் குறிப்பிடுவது, ரெண்டு பேரும் அள்ளி அள்ளி கொடுப்பார்களா ? அல்லது ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முறைத்து கொள்வார்களா ? தீய பலன்கள் ஏற்படுமா ?
    இல்லை நீ உன் வேலைய பார் நான் என் வேலைய பார்கிறேன் என்று உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்வார்களா ?/////

    பிறகு உச்சமானதற்கும் அல்லது ஆட்சி பலம் பெற்றதற்கும் ஒரு அர்த்தம் வேண்டாமா? அவரவர்கள், தங்கள் தசா புத்திகாலங்களில் நன்மையான பலன்களையே கொடுப்பார்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////அதே போல் சூரியனும் ராகுவும் ஒரு வீட்டில் இருக்கும் போது, ராகு சூரியனின் பிடிக்குள் இருந்தால் , ராகுவால் ஏற்படும் தொல்லைகள் இருக்காது இல்லையா ? அல்லது சூரியனின் பலன்களை ராகு அமர்த்தி கொள்வாரா ?/////

    யாருடைய பிடிக்குள் இருந்தாலும், தீய கிரகங்கள், தங்கள் தசா புத்திகளில் தங்கள் பணியைச் செய்யாமல் விடமாட்டார்கள்!
    மரணத்தைக் கொடுக்க வேண்டிய கிரகம், வேறு ஒரு சுப்க் கிரகத்தின் பிடியில் இருப்பதால் மரணத்தைக் கொடுக்காமல் விடுவாரா என்ன?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  25. Blogger கலையரசி said...
    @ தேமொழி அவர்களே ஒரு வழியாக நான் காரை என் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன் . கணவரையும் தான். மனதுக்குள்ளே பயபட்டுக்க சொல்லயுள்ளேன்.
    இன்னும் நிறைய பயற்சி தேவை , ஆனால் இப்போதுதான் ரோட்டு பயம் நீங்கி உள்ளது... முதல் முயற்சியாக...////

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. ////Blogger Mahudees said...
    6 க்கு உடையவனும் 12 க்கு உடையவனும் (சூரியன், சனி ) சேர்ந்து நீஷபங்க ராஜயோகத்தில் இருந்தால் அவர்கள் இருக்கும் வீட்டின்(3 ,6 ,8, 12 ஆக இல்லாமல் மற்ற வீட்டில் ) நிலைமை என்னவாக இருக்கும். இதை யோகம் என்று கொள்வதா இல்லை அவர்களால் அந்த வீடு பாதிப்பு அடையுமா?/////

    நீங்களே நீசபங்கராஜ யோகம் என்று குறிப்பிட்டுவிட்டு, யோகம் என்று எடுத்துக்கொள்வதா என்று கேட்டால் என்ன செய்வது? யோகம் யோகம்தான் அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    சனி சூரியன் பரிவர்த்தனைதான் மோசமானது என்று கூறி உள்ளீர்களே அவர்களால் ஏற்படும் நீச்சபங்கம் எப்படி இருக்கும்?/////

    இதற்குத் தனிப் பாடமே எழுத வேண்டும். முன்பு எழுதியுள்ளேன். தேடிப்பிடித்துப் படியுங்கள். அல்லது எனது புத்தகம் (குறிச்சொற்களுடன்) வரும்வரை பொறுத்திருங்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  27. ////Blogger அய்யர் said...
    அய்யர் வருத்தமுடன் இருப்பதாக
    அன்பு தோழி மின்னஞ்சல் செய்திருந்தார்
    உணர்வுகளை புரிந்து கொண்ட
    உத்தம தோழிக்கு நன்றி...
    உண்மையில் வருத்தம் தான்
    உள்ளபடியே காரணத்தை வாத்தியாருக்கும் அனுப்பியிருந்தோம்
    அது என்ன என அறிய விரும்பும்
    அவருக்கும்(புள்ளி ராணிக்கும்) சொல்கிறோம்
    பெங்களுரு இப்போ
    மதுரைக்கு (போகப்)போகுது..
    அரசிடமிருந்து
    ஆதினத்திற்கு
    என்ற சூளுரையுடன்..
    என்பதால் வருத்தம் இருக்கத்தானே செய்யும்..
    முடிந்தால் கூட்டு பிரார்த்தனையில்
    சேர்ந்து கொள்ளுங்கள்..
    ஏமாற்றம் இல்லா
    மாற்றம் வரும் என்று..
    வேண்டுதல்களுடன்
    வணக்கமும்..//////

    காலதேவனிடம் விட்டு விடுங்கள் விசுவநாதன். அவன் பார்த்துக்கொள்வான்!

    ReplyDelete
  28. Blogger தேமொழி said...
    ///Blogger கலையரசி said...
    @ தேமொழி அவர்களே ஒரு வழியாக நான் காரை என் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன் . ///
    T.M.S:
    ஆஹா... பேஷ்... பேஷ்... அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு...
    தேமொழி:
    கலை, நீங்களே அடுத்த வரியை உங்கள் கணவரிடம் பாடி விடுங்கள்.
    :))))))//////

    இந்தப் பெண்ணைப் பார்த்தால் போக்குவரத்தும் நின்னு போயிடும் தெரிஞ்சுக்கோ என்ற வரியா?

    ReplyDelete
  29. /////Blogger தேமொழி said...
    பெரியாரின் கருத்தை பார்த்து மகிழ்ந்தேன் ஐயா.
    என்ன ஒரு வித்தியாசமான மனிதர் அவர்.
    வெண்தாடி வேந்தர்களே விநோதமானவர்கள் என்பது என் கருத்து
    :))))) வேறு சிலரையும் சேர்த்துதான் சொல்கிறேன்.////

    அந்த வித்தியாசம்தான் அவரைப் பெரியார் ஆக்கியது!

    ReplyDelete
  30. /////Blogger tamilboys said...
    ஐயா வணக்கம், நன்றிகள் பல உங்கள் பதிலுக்கு,
    கன்னி லக்னம் பத்தாம் அதிபதியும் சனியும் பன்னிரெண்டில் இருகிறார்கள்,
    குரு செவ்வாய் சந்திரன் பத்தில்(மிதுனம்) அதில் 37 பரல்கள்.
    சுய தெழில் செய்ய வய்ப்பில்லை,முகவர், கமிஷன் வேலைக்கும் சரிப்படாது என்கிறார்கள். என்றால் 37 பரல்கள் மதிப்பு என்ன ?
    பரல் அதிகம் உள்ள இடத்தில் அதிபதி பலமா ? அல்லது அதில் உள்ள கிரகங்கள் பலமா ?
    நன்றி,
    கருவூர் முருகன்////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு பலன் சொல்வது தவறாகிவிடும். முழு ஜாதகத்தையும் அலச வேண்டும்!

    ReplyDelete
  31. ////Blogger ananth said...
    http://www.vedicastrology.com/articles/ArticleNeechaBhanga.htm
    நீச பங்கத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் மேலே கொடுக்கப் பட்ட சுட்டியில் உள்ள தளத்தை ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது பி வி ராமன் அவர்களின் Graha and Bhava Balas என்ற புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  32. ////Blogger kmr.krishnan said...
    ராகு,கேது ஷோடசாம்சத்தில் இணைந்தே காணப்படுகிறார்கள்.
    உச்சனை உச்சன் பார்த்தால் பார்வை பெற்ற கிரஹம் நீசம் அடையும் என்றும், நீசனை நீசன் பார்த்தால் பார்த்த கிரஹம் உச்ச பலம் பெறும் என்றும் கூறுகிறார்கள். ஆதாரம் கேட்டால் தெரியாது என்பதே பதில்.
    நீச பங்கத்திற்கு 'நீசன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் பெற்றிட்டால் நீச பங்க ராஜயோகம்'என்பது பாடல் வரியாகச் சொல்கிறார்கள்.ஆகவே உச்சம் மட்டுமல்ல ஆட்சியும் நீச பங்கத்தை முடிவு செய்கிறது.
    பதிவுக்கு நன்றி ஐயா!////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  33. ////Blogger Jagannath said...
    1. ராகு ஒரு வீட்டில் தனியாக,எந்த ஒரு கிரகத்தின் பார்வையுமின்றி ராசியிலும் அம்சத்திலும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவரின் நக்சத்திரத்தில் வேறு இரு கிரகங்கள் இருக்கின்றன...அப்போது அவர் நின்ற வீட்டிற்குண்டான அதிபதியின் பலன் மட்டும் கொடுப்பாரா அல்லது
    அவர் நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்களின் பலனையும் கொடுப்பாரா?
    குழப்புகிறீர்களே? அவருடைய நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களை அவருடன் உங்களை யார் இணைத்துப் பார்க்க சொன்னது? அவர் தான் இருக்கும் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கான பலனைத் தருவார்.
    அதை மட்டுமே பாருங்கள்!//
    சத்தியாச்சாரியார் என்ற பழைய ஜோதிட ஆசிரியர் கிரகங்கள் நிற்கும் நட்சத்திர சாரங்களைப் பொறுத்துப் பலன் அளிப்பதைக் குறித்து எழுதியுள்ளதாக B.V.Raman குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக கும்ப லக்னத்திற்கு புதன் ஐந்தாம் எட்டாம் வீடுகளின் அதிபதி. அவர் நான்கில் அமர்ந்துள்ளார். ஐந்தாம் அதிபதி நான்கில் அமர்வது நல்லது. ஆனால் எட்டாம் அதிபதி நான்கில் அமர்வது சரியில்லாத அமைப்பு. புதன் தசை, புத்தியின்போது போது என்ன பலன் விளையும் என்பதை அறிவதற்கு புதன் எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் நிற்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார். உதாரணமாக சுக்கிரனின் நட்சத்திர சாரத்தில் நின்றால் சுக்கிரன் கும்ப லக்னத்தின் யோக காரகன் ஆனதால் சுக்கிரனின் வலிமையைப் பொறுத்து நற்பலன்கள் விளையும். இதுவே ராகுவின் சாரத்தில் நிற்கிறார் மற்றும் ராகு ஆறில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது புதன் தசை, புத்தியின்போது நோய், கடன், எதிரிகள் ஆகிய கெடுபலன்கள் ஏற்படும்.
    இது எனக்கு அனுபவபூர்மாகப் பலித்துள்ளது. கும்ப லக்னம் உடைய நான் புதன் புத்தியின்போது இருபத்தைந்து வயதிலேயே வீடு வாங்கும் யோகம் அமைந்தது./////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. ///Blogger Jagannath said...
    நீசபங்க ராஜ யோகத்திற்கு B.V.Raman மேலும் சில விதிமுறைகள் கூறுகிறார்:
    (i) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.
    (ii) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியில் உச்சமடையும் கிரகம் லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.
    (iii) நீசமடையும் கிரகம் உச்சமடையும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.
    ஆனால் எந்த கிரகத்தால் நீச பங்கம் (நீசத்திலிருந்து விலக்கு) ஏற்படுகிறதோ அது நீச வீட்டிலோ, பகை வீட்டிலோ இல்லாமல் இருந்தால்தான் ராஜயோகத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும் என்கிறார்.////

    உண்மைதான்!மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. /////Blogger Jagannath said...
    உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான் என்பது பழமொழி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் B.V.Raman அதை உச்ச பங்க
    யோகம் என்றும் இந்த அமைப்பு ஒருவனை போண்டியாக்க கூடிய அமைப்பு என்கிறார்.
    நீசனை நீசன் பார்த்தால் ஏற்படும் பலன் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் செய்துதான் கண்டுபிடிக்க வேண்டும்./////

    மிகவும் ஆழ்ந்து படித்தால் புதிதாகப் படிப்பவர்களுக்குப் பயம்தான் ஏற்படும்!

    ReplyDelete
  36. ////Blogger Ravichandran said...
    Ayya,
    Very good news about calculating as per Vakiya. But I am not able to get preference as you shown. Can you help how to select that menu. I tried my best for more than one hour, but no success. Waiting for your reply.
    Student,
    Ravi////

    மெனு பாரில் பாருங்கள் preference என்னும் option இருக்கும். அதைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  37. குருவிற்கு வணக்கம்

    முதல் வணக்கம் என் மகன் வேலை

    பற்றி
    இன்றைய தங்களது பதிவும் பின்னூட்டங்களும் மிகவும் அருமை
    தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  38. இன்றைய தங்களது பதிவும் பின்னூட்டங்களும் சேர்ந்து, ஒரு முனைவர் பட்ட வகுப்பில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அட்டகாசமான பதிவைத் தந்தமைக்கு நன்றி. குறிப்பாக, திரு. ஜகந்நாத் அவர்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  39. திருமதி பார்வதி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

    வாத்தியார் அடிப்படைப் பாடங்களைச் சிறப்பாக, எளிமையாக, சுவாரசியமாக அமைத்துள்ளார். மேலும் தேர்ச்சி பெற B.V.Raman போன்றவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.

    அவருடைய நூல்களைப் படித்தபின் நான் ஜாதகங்களை பார்க்கும் முறையே மாறி விட்டது. லக்னம், சந்திரன் என இரண்டிலுமிருந்தே பார்க்கச் சொல்கிறார். தொழில் முறை ஜோதிடர்கள் பலர் எப்படி மிகக் குறைவான விடயங்களை மட்டும் தெரிந்து கொண்டு ஜோதிடம் பார்க்க வருபவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்பது புரிந்தது.

    ReplyDelete
  40. இன்றைய பதிவு முன்பே முளைத்திருந்த பல கேள்விகளை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்தது. ஆனால் என்னால் தான் அவைகளை பின்னூட்டத்தில் கொண்டுவர முடியாமல் போய்விட்டது இணையப் பிர்ச்சினையால் .

    இன்று வந்த பின்னூட்டங்களும் ஆனந்த்,kmrk, ஜகன்னாத் கொண்டு வந்திருந்த பல மேலாதிக்க தகவல்களும் என் போன்றோருக்கு புதிய குறிப்புகளை தந்தது.

    வாத்தியார் அவர்களின் அனைத்து பின்னூட்டங்களிலும் கலகலப்புக்கு குறைவில்லை .

    ReplyDelete
  41. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    முதல் வணக்கம் என் மகன் வேலை பற்றி
    இன்றைய தங்களது பதிவும் பின்னூட்டங்களும் மிகவும் அருமை
    தங்களுக்கு நன்ற/////

    உங்கள் மகனுடைய வேலைக்கு முழு ஜாதகத்தையும் அலச வேண்டும் சாமி! தற்சமயம் அதற்கு நேரமில்லை! பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  42. ////Blogger Parvathy Ramachandran said...
    இன்றைய தங்களது பதிவும் பின்னூட்டங்களும் சேர்ந்து, ஒரு முனைவர் பட்ட வகுப்பில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அட்டகாசமான பதிவைத் தந்தமைக்கு நன்றி. குறிப்பாக, திரு. ஜகந்நாத் அவர்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி. பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து. மேலும் மேலும் எழுதவைக்கும்!

    ReplyDelete
  43. /////Blogger Jagannath said...
    திருமதி பார்வதி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
    வாத்தியார் அடிப்படைப் பாடங்களைச் சிறப்பாக, எளிமையாக, சுவாரசியமாக அமைத்துள்ளார். மேலும் தேர்ச்சி பெற B.V.Raman போன்றவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.
    அவருடைய நூல்களைப் படித்தபின் நான் ஜாதகங்களை பார்க்கும் முறையே மாறி விட்டது. லக்னம், சந்திரன் என இரண்டிலுமிருந்தே பார்க்கச் சொல்கிறார். தொழில் முறை ஜோதிடர்கள் பலர் எப்படி மிகக் குறைவான விடயங்களை மட்டும் தெரிந்து கொண்டு ஜோதிடம் பார்க்க வருபவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்பது புரிந்தது./////

    மேலும் தேர்ச்சிபெற வாத்தியாரின் மேல்நிலைப் பாடங்களையும் படிக்கலாம். திருட்டுப்போகக்கூடாது என்பதற்காகத் தனி இணைய தளத்தில் (web site) எழுதிக்கொண்டிருக்கிறேன். அதன் முகவரி: WWW.classroom2012.in

    ReplyDelete
  44. ////Blogger thanusu said...
    இன்றைய பதிவு முன்பே முளைத்திருந்த பல கேள்விகளை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்தது. ஆனால் என்னால் தான் அவைகளை பின்னூட்டத்தில் கொண்டுவர முடியாமல் போய்விட்டது இணையப் பிர்ச்சினையால் .
    இன்று வந்த பின்னூட்டங்களும் ஆனந்த்,kmrk, ஜகன்னாத் கொண்டு வந்திருந்த பல மேலாதிக்க தகவல்களும் என் போன்றோருக்கு புதிய குறிப்புகளை தந்தது.
    வாத்தியார் அவர்களின் அனைத்து பின்னூட்டங்களிலும் கலகலப்புக்கு குறைவில்லை/////

    கலகலப்பு இல்லையென்றால், படிப்பதற்கு சுவாரசியமாக இருக்காது ராசா!

    ReplyDelete
  45. @ஜகன்னாத் "நீசபங்க ராஜ யோகத்திற்கு B.V.Raman மேலும் சில விதிமுறைகள் கூறுகிறார்:

    (i) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.

    (ii) நீசமடையும் கிரகம் இருக்கும் ராசியில் உச்சமடையும் கிரகம் லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.

    (iii) நீசமடையும் கிரகம் உச்சமடையும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்.

    ஆனால் எந்த கிரகத்தால் நீச பங்கம் (நீசத்திலிருந்து விலக்கு) ஏற்படுகிறதோ அது நீச வீட்டிலோ, பகை வீட்டிலோ இல்லாமல் இருந்தால்தான் ராஜயோகத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும் என்கிறார்"//

    நமக்கு சூரியன் நீசம். அவரின் அதிபதி சுக்ரன் கன்னியில், அவரும் நீசம்.
    கன்னியின் அதிபதி புதன் துலாமில். பரிவர்த்தனை (எட்டாம் மற்றும் ஒன்பதாம் இடம்)
    சந்த்ரனின் கேந்த்ரத்தில் (மிதுனம்) சுக்ரன், லக்னத்தின் கேந்திரத்தில் சூரியன் (கும்பம்) .
    ஏதோ ராஜயோகம் இல்லை என்றாலும் ராணி யோகம் கிடைத்தால் நன்றாகதான் இருக்கும்.
    கொஞ்சம் discounted sale போல்.

    ReplyDelete
  46. ஆகா இனான்ரையும் கவனித்தேன் , நீசமடையும் கிரகம் உச்சமடையும் ராசியின் அதிபதி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருத்தல்,
    சூரியன் உச்சமடியும் ராசி மேஷம் , அவரின் அதிபதி செவ்வாய் , அவர் இருக்கும் இடம் விருச்சிகம், (பத்தாம் இடம் ), அவர் லக்னத்தின் (கும்பம்) கேந்த்ரத்தில் உள்ளார்.
    அப்பாடா atlast I found one rule that satisfies neesa panga rajayogam.
    @ அய்யா மற்றும் தேமொழி அவர்களே போன வடை திரும்பி வந்தாச்சு.
    (ஞாபகம் உள்ளதா , நீசபங்க ராஜயோகத்தை குழப்பி , எனக்கு அது இல்லை என்று , வடிவேலு பாணியில் வடை போச்சே என்று புலம்பியது )

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com