27.4.12

சண்முகப்பிரியா ராகம் யாருக்கான ராகம்?

சண்முகப்பிரியா ராகம் யாருக்கான ராகம்?

இளையராஜாவைக் கேட்டால் தெரியும்.

தம்தன தம்தன காதல் வரும் என்ற பாடலை சண்முகப்பிரியாவில் அமைத்து அனைவரையும் அந்தப் பாடலைக் கேட்க வைத்தவர்/ பாடவைத்தவர் ராஜா!
அதேராஜாதான் காதல் கசப்பதையும் (படம்: ஆண் பாவம்) சண்முகப்பிரியா ராகத்தில் சொன்னவர்!

சரி, சண்முகப்பிரியா யாருக்கு உகந்த ராகம்?

சண்முகனுக்கு, முருகப் பெருமானுக்கு உகந்த ராகம் அது!

Lord Muruga and Shanmukhapriya has a close association. There are a number of devotional songs on Lord Muruga that are based on Shanmukhapriya

அந்த ராகத்தில், முத்தைத் திரு என்னும் அருணகிரிநாதரின் முதற்பாடல அமைந்துள்ளது குறிப்பிடத் தகுந்த செய்தியாகும்!

அந்தப் பாடலை, முருகப்பெருமானின் பக்தரான குன்னக்குடி வைத்தியநாதன் த்ன்னுடைய வயலின் இசையால் சிறக்கச் செய்துள்ளார். அதை இன்றைய பக்தி மலரில் வலையேற்றியுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்

காணொளி:

அன்புடன்
வாத்தியார் 
வாழ்க வளமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

25 comments:

  1. முதல் முறையாக குன்னக்குடியாரின் வயலின் இசையில் இந்த பாட்டை கேட்டேன்.வர்ணிக்க வார்த்தைஇல்லை.மெய் சிலிர்த்துவிட்டது.அருமையான காணொளி தந்த ஐயாவுக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,
    அருமையான பாடல் ஐயா...எனக்கு மிகவும் பிடித்த பாடல்,பிடித்த இசைக் கலைஞர்...எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் என்று தான் கொள்ள வேண்டும்...

    அப்பாடலை டிஎம்எஸ் அவர்களின் குரலில் கேட்ட அதே இனிமையை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலினிலும் உணரமுடிகிறது...இராகங்களில் பலராலும் விரும்பப்படும் சண்முகப்பிரியா இராகத்தின் மேன்மையினை இப்பாடல் அருமையாக நமக்கு உணர்த்தும்...நல்லதொரு அருமையான பாடலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  4. "சண்முகப் பிரியன் என்னும் தைரியமா? இனிய சங்கீதத்தில் உனக்கு இணையாகுமா?"
    என்று குன்னக்குடியிடம் கேட்கலாம். அந்தப் படத்திற்கு (அகத்தியர்) இசை அமைத்தவரும் அவரே.
    நல்ல காணொளிக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. மிக அருமையான பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்தப் பாடல் திரை இசையமைப்பாளர்களுக்கு மிகவும் பிடித்தமானது. எத்தனை எத்தனை வகையான‌ பாடல்கள் இந்த ராகத்தில்!!!.

    முப்பெரும் மேதைகளான, கே.வி.மகாதேவன், ஏ.பி.என், கவியரசர் கூட்டணியில் உருவான தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும், 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' பாடல், ஷண்முகப்பிரியா ராகத்தில் அமைந்த இசை அற்புதம். இதில் கதாநாயகன் பெயர் சண்முக சுந்தரம் என்பதற்காக, அவரைப் பார்த்து நாயகி பாடும் பாடலுக்கு பொருத்தமாக ஷண்முகப்பிரியா ராகத்தைத் தேர்ந்தெடுத்த கே.வி.எம் மின் நுண்ணறிவைச் சொல்வதா அல்லது அந்த ராகப் பாடலுக்கு,பாடலின் நடுவில், 'மாலவா, வேலவா, மாயவா சண்முகா' என்று குறும்பு தெரிக்கும் புத்திசாலித்தனத்துடன் அமைந்த கவியரசரின் வரிகளைச் சொல்வதா, நடித்த சிவாஜி, பத்மினியைப் புகழ்வதா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

    இதில் அமைந்த பிரபலமான ஒரு பக்திப் பாடல், கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் கணீர்க்குரலில் அமைந்த‌ 'பழம் நீ அப்பா'.

    பக்திப் பாடல் தவிர, எஸ்.வி. வெங்கட்ராமன் இசையில் 'இரும்புத்திரை' படத்தில் வரும் 'நெஞ்சில் குடியிருக்கும்' டூயட் பாடல் இந்த ராகத்தின் எந்த
    சூழ்நிலைக்கும் பொருந்தும் சக்திக்கு உதாரணம். டி.எம்.எஸ் ஸின் வெண்கலக்
    குரலில், சோகம் ததும்பும் 'நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே'வையும்
    இந்த வரிசையில் சேர்க்கலாம்.

    இசைமாமேதை, ஜி. ராமநாதன், தூக்குத் தூக்கி திரைப்படத்தில், இந்த ராகத்தை அநாயாசமாக எளிமைப்படுத்தி, டி.எம்.எஸ், ஏ.பி.கோமளா, பி.லீலா, வி.என்.சுந்தரம் கூட்டணியில், 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்ற அற்புதப் பாடலை கொடுத்தார்.

    இளையராஜாவின் இசையில், சலங்கை ஒலியில் வரும் 'தகிட ததிமி' இந்த ராகத்தை அவர் பயன்படுத்திய விதத்துக்கு மற்றுமொரு சான்று.

    அற்புதமான நினைவுகளை வெளிக்கொணர உதவிய மிக மிக அருமையான
    பதிவுக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  6. 72 மேளகர்தா ராகங்களில் ஷண்முகப்பிரியா 56 வது ராகமாகும். அதற்கு 'சாமரம்'என்று இன்னொரு பெயரும் உண்டு ஆண்டவனுக்கு செய்யும் ஆகம பூஜையில் ஷோடச உபசாரம்(16 வகை மரியாதைகள்) என்பதில் சாமரம் வீசுதல் என்பதும் ஒன்று. ஷன்முகப்பிரியா சாமரம் வீசுவதுபோல இருப்பதால் அந்தப் பெயரைப் பெற்றது போலும்.

    பாபனாசம் சிவனின் பாடல்களில் "ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம்"என்ற பாடலும், "பார்வதி நாயகனே"என்ற பாடலும் ஷண்முகப்பிரியா ராகத்திற்கே இலக்கணம் அமைத்தது போல அமைந்துவிட்டன. ஷண்முகப்பிரியா என்றால் எந்த கர்நாடக இசைக் கலைஞருக்கும் முதலில் நினைவுக்கு வருவது 'ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம்'பாடல்தான்.நாகஸ்வரத்திற்கு ஏற்ற பாடல் அது.

    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை வடபழனி கோவில் கும்பாபிஷேக நாள் அன்று கோவிலுக்குப் பின்புறம் உள்ள மண்டபத்தில் திருமணத்திற்காகச் சென்று இருந்தேன்.மண்டப மேல் மாடியிலிருந்து கும்பாபிஷேகத்தினை தரிசிக்க நின்று இருந்தோம்.அப்போது அந்த நல்ல நேரத்திற்காகக் காத்திருந்த போது மதுரை பொன்னுசாமி, சேதுராமன் 'ஓம் சரவண பவ என்னும் திருமந்திரம் தன்னை சதா ஜெபி என் நாவே' என்று ஷண்முகப்பிரியாவை எடுத்து அமர்களப்படுத்தினார்கள். இலட்சக்கணக்கான மக்கள் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று அனுபவித்துக் கேட்ட காட்சி கண்முன் நிற்கிறது.
    இசை கட்டிப்போடும் என்பதற்கு அன்று கேட்ட‌ ஷண்முகப்பிரியா ராகம் சாட்சி.

    தகவல் அளித்த ஐயாவுக்கும் கணொளிக்கும் நன்றி!மேல்தகவல்களை சேகரித்துக் கொடுத்த பார்வதி அம்மையாருக்கும் நன்றி!

    ReplyDelete
  7. பார்வதி அம்மையாரே! 'பாவை விளக்'கில் வரும் 'ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே'
    என்ற பாடல் ஷண்முகப் பிரியாவா அல்லது வேறு ராகமா? கே.வி. மஹாதேவன் இசை. திருச்சி லோகநாதன் குரல். மருதகாசி யின் பாடல் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. @திரு.கே.எம்.ஆர் அவர்கள்.

    'ஆயிரம் கண் போதாது' பாடல் மருதகாசி அவர்கள் இயற்றி, சி.எஸ். ஜெயராமன் அவர்கள் பாடி, மாண்டு ராகத்தில் அமைந்த பாடல். நன்றி.

    ReplyDelete
  9. Parvathy Ramachandran said...'ஆயிரம் கண் போதாது' பாடல் மருதகாசி அவர்கள் இயற்றி, சி.எஸ். ஜெயராமன் அவர்கள் பாடி, மாண்டு ராகத்தில் அமைந்த பாடல்.

    Parvathy Ramachandran said...'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' பாடல், ஷண்முகப்பிரியா ராகத்தில் அமைந்த இசை அற்புதம். இதில் கதாநாயகன் பெயர்.....

    பார்வதி அவர்களுக்கு இதிகாசம், இலக்கியம்,புராணம்.அத்தோடு இசையைப் பற்றியும் தெரிகிறது.நமக்கு இதில் எதைப் பற்றியும் தெரியாது.

    பாட்டு நல்லா இருந்தா தாளம் போடுவேன் அவ்வளவுதான்.

    ReplyDelete
  10. Ayya,

    Arumai Arumai Arumai...

    Student,
    Ravi

    ReplyDelete
  11. தனுசு சொல்வது உண்மைதான் பார்வதி... நீங்கள் என்னை வியக்க வைக்கிறீர்கள்.
    எனக்குப் பிடித்த பாடல்கள் பெரும்பாலானவை கல்யாணி ராகத்தில் அமைந்தவை என்பதை மற்றவர் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளேன்.
    இனிமேல் உங்களிடம் பாடல் பட்டியலை அனுப்பிவிடுகிறேன்.

    ReplyDelete
  12. kmr.krishnan said...

    //மேல்தகவல்களை சேகரித்துக் கொடுத்த பார்வதி அம்மையாருக்கும் நன்றி!//

    thanusu said...

    //பார்வதி அவர்களுக்கு இதிகாசம், இலக்கியம்,புராணம்.அத்தோடு இசையைப் பற்றியும் தெரிகிறது.//

    தேமொழி said...

    //தனுசு சொல்வது உண்மைதான் பார்வதி... நீங்கள் என்னை வியக்க வைக்கிறீர்கள். //

    உங்கள் அனைவரின் அன்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. உண்மையில் இசையைப் பற்றிய கேள்விஅறிவு கொஞ்சம் உண்டு. சினிமாப் பாடல்களைக் கேட்கும் போது, வீட்டில் அம்மாவும் அண்ணாவும் என்ன ராகம் என்று பாடிப்பார்ப்பார்கள். கூட இருந்ததால் ராக வித்தியாசம் தெரிந்தது. ஓரளவுக்குப் பாடவும் செய்வேன். மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  13. இசை ரசிகர்களுக்காக..
    இந்த பாடலினை சுழல விடுகிறோம்

    பாடறியேன் படிப்பரியேன்
    பள்ளிக்கூடம்தானரியேன்

    ஏடறியேன் எழுத்தறியேன்
    எழுத்துவக நானறியேன்

    ஏட்டுல எழுதவில்ல
    எழுதி வெச்சு பழக்கமில்ல

    இலக்கணம் படிக்கவில்ல
    தலகனமும் எனக்கு இல்ல

    அர்தத்த விட்டுப்புட்டா
    அதுக்கொரு பாவமில்ல

    பழகின பாஷையில
    படிப்பது பாவமில்ல

    என்னவோ ராகம்
    என்னன்னவோ தாளம்

    தலைய ஆட்டும்
    புரியாத கூட்டம்

    எல்லாமே சங்கீதந்தான் .. ஆஆ..
    எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில்
    பொறந்த சங்கதிதான்

    சஜமமென்பதும் தெய்வதமென்பதும்
    பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான்
    (மனதை தொட்ட வரிகள்)

    கவல ஏதுமில்ல
    ரசிக்கும் மேடிக்குடி

    சேறிக்கும் சேரவேணும்
    அதுக்கும் பாட்டு படி

    என்னையே பாரு எத்தன பேறு
    தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு

    சொன்னது தப்பா தப்பா .. ஆ ஆ..
    சொன்னது தப்பா தப்பா

    ராகத்தில் புதுசு என்னதப்பா..
    அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொரதுல சொன்னதப்பா

    ReplyDelete
  14. ////Blogger arul said...
    superb////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////Blogger அய்யர் said...
    முருகா... முருகா...////

    கந்தா, கடம்பா, கதிர்வேலா, கார்த்திகேயா....!

    ReplyDelete
  16. ////Blogger sadan raj said...
    முதல் முறையாக குன்னக்குடியாரின் வயலின் இசையில் இந்த பாட்டை கேட்டேன்.வர்ணிக்க வார்த்தைஇல்லை.மெய் சிலிர்த்துவிட்டது.அருமையான காணொளி தந்த ஐயாவுக்கு நன்றிகள்////

    நல்லது. நன்றி சதன்ராஜ்!!

    ReplyDelete
  17. /////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    அருமையான பாடல் ஐயா...எனக்கு மிகவும் பிடித்த பாடல்,பிடித்த இசைக் கலைஞர்...எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் என்று தான் கொள்ள வேண்டும்...
    அப்பாடலை டிஎம்எஸ் அவர்களின் குரலில் கேட்ட அதே இனிமையை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலினிலும் உணரமுடிகிறது...இராகங்களில் பலராலும் விரும்பப்படும் சண்முகப்பிரியா இராகத்தின் மேன்மையினை இப்பாடல் அருமையாக நமக்கு உணர்த்தும்...நல்லதொரு அருமையான பாடலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா...////

    நல்லது. நன்றி ஷோபனாஜி!

    ReplyDelete
  18. /////Blogger தேமொழி said...
    "சண்முகப் பிரியன் என்னும் தைரியமா? இனிய சங்கீதத்தில் உனக்கு இணையாகுமா?"
    என்று குன்னக்குடியிடம் கேட்கலாம். அந்தப் படத்திற்கு (அகத்தியர்) இசை அமைத்தவரும் அவரே.
    நல்ல காணொளிக்கு நன்றி ஐயா./////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  19. /////Blogger Parvathy Ramachandran said...
    மிக அருமையான பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்தப் பாடல் திரை இசையமைப்பாளர்களுக்கு மிகவும் பிடித்தமானது. எத்தனை எத்தனை வகையான‌ பாடல்கள் இந்த ராகத்தில்!!!.
    முப்பெரும் மேதைகளான, கே.வி.மகாதேவன், ஏ.பி.என், கவியரசர் கூட்டணியில் உருவான தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும், 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' பாடல், ஷண்முகப்பிரியா ராகத்தில் அமைந்த இசை அற்புதம். இதில் கதாநாயகன் பெயர் சண்முக சுந்தரம் என்பதற்காக, அவரைப் பார்த்து நாயகி பாடும் பாடலுக்கு பொருத்தமாக ஷண்முகப்பிரியா ராகத்தைத் தேர்ந்தெடுத்த கே.வி.எம் மின் நுண்ணறிவைச் சொல்வதா அல்லது அந்த ராகப் பாடலுக்கு,பாடலின் நடுவில், 'மாலவா, வேலவா, மாயவா சண்முகா' என்று குறும்பு தெரிக்கும் புத்திசாலித்தனத்துடன் அமைந்த கவியரசரின் வரிகளைச் சொல்வதா, நடித்த சிவாஜி, பத்மினியைப் புகழ்வதா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
    இதில் அமைந்த பிரபலமான ஒரு பக்திப் பாடல், கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் கணீர்க்குரலில் அமைந்த‌ 'பழம் நீ அப்பா'.
    பக்திப் பாடல் தவிர, எஸ்.வி. வெங்கட்ராமன் இசையில் 'இரும்புத்திரை' படத்தில் வரும் 'நெஞ்சில் குடியிருக்கும்' டூயட் பாடல் இந்த ராகத்தின் எந்த
    சூழ்நிலைக்கும் பொருந்தும் சக்திக்கு உதாரணம். டி.எம்.எஸ் ஸின் வெண்கலக்
    குரலில், சோகம் ததும்பும் 'நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே'வையும்
    இந்த வரிசையில் சேர்க்கலாம்.
    இசைமாமேதை, ஜி. ராமநாதன், தூக்குத் தூக்கி திரைப்படத்தில், இந்த ராகத்தை அநாயாசமாக எளிமைப்படுத்தி, டி.எம்.எஸ், ஏ.பி.கோமளா, பி.லீலா, வி.என்.சுந்தரம் கூட்டணியில், 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்ற அற்புதப் பாடலை கொடுத்தார்.
    இளையராஜாவின் இசையில், சலங்கை ஒலியில் வரும் 'தகிட ததிமி' இந்த ராகத்தை அவர் பயன்படுத்திய விதத்துக்கு மற்றுமொரு சான்று.
    அற்புதமான நினைவுகளை வெளிக்கொணர உதவிய மிக மிக அருமையான
    பதிவுக்கு நன்றிகள் ஐயா.//////

    எல்லாப் புகழும் இறைவனுக்கே! பழநிஅப்பனுக்கே! மெலதிகத்தகவல்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. ////Blogger kmr.krishnan said...
    72 மேளகர்தா ராகங்களில் ஷண்முகப்பிரியா 56 வது ராகமாகும். அதற்கு 'சாமரம்'என்று இன்னொரு பெயரும் உண்டு ஆண்டவனுக்கு செய்யும் ஆகம பூஜையில் ஷோடச உபசாரம்(16 வகை மரியாதைகள்) என்பதில் சாமரம் வீசுதல் என்பதும் ஒன்று. ஷன்முகப்பிரியா சாமரம் வீசுவதுபோல இருப்பதால் அந்தப் பெயரைப் பெற்றது போலும்.
    பாபனாசம் சிவனின் பாடல்களில் "ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம்"என்ற பாடலும், "பார்வதி நாயகனே"என்ற பாடலும் ஷண்முகப்பிரியா ராகத்திற்கே இலக்கணம் அமைத்தது போல அமைந்துவிட்டன. ஷண்முகப்பிரியா என்றால் எந்த கர்நாடக இசைக் கலைஞருக்கும் முதலில் நினைவுக்கு வருவது 'ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம்'பாடல்தான்.நாகஸ்வரத்திற்கு ஏற்ற பாடல் அது.
    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை வடபழனி கோவில் கும்பாபிஷேக நாள் அன்று கோவிலுக்குப் பின்புறம் உள்ள மண்டபத்தில் திருமணத்திற்காகச் சென்று இருந்தேன்.மண்டப மேல் மாடியிலிருந்து கும்பாபிஷேகத்தினை தரிசிக்க நின்று இருந்தோம்.அப்போது அந்த நல்ல நேரத்திற்காகக் காத்திருந்த போது மதுரை பொன்னுசாமி, சேதுராமன் 'ஓம் சரவண பவ என்னும் திருமந்திரம் தன்னை சதா ஜெபி என் நாவே' என்று ஷண்முகப்பிரியாவை எடுத்து அமர்களப்படுத்தினார்கள். இலட்சக்கணக்கான மக்கள் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று அனுபவித்துக் கேட்ட காட்சி கண்முன் நிற்கிறது.
    இசை கட்டிப்போடும் என்பதற்கு அன்று கேட்ட‌ ஷண்முகப்பிரியா ராகம் சாட்சி.
    தகவல் அளித்த ஐயாவுக்கும் கணொளிக்கும் நன்றி!மேல்தகவல்களை சேகரித்துக் கொடுத்த பார்வதி அம்மையாருக்கும் நன்றி!////

    சில சுவையான தகவல்களுடன் பின்னூட்டம் இட்ட உங்களுக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  21. ////Blogger Ravichandran said...
    Ayya,
    Arumai Arumai Arumai...
    Student,
    Ravi//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. /////Blogger Parvathy Ramachandran said...
    kmr.krishnan said...
    //மேல்தகவல்களை சேகரித்துக் கொடுத்த பார்வதி அம்மையாருக்கும் நன்றி!//
    thanusu said...
    //பார்வதி அவர்களுக்கு இதிகாசம், இலக்கியம்,புராணம்.அத்தோடு இசையைப் பற்றியும் தெரிகிறது.//
    தேமொழி said...
    //தனுசு சொல்வது உண்மைதான் பார்வதி... நீங்கள் என்னை வியக்க வைக்கிறீர்கள். //
    உங்கள் அனைவரின் அன்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. உண்மையில் இசையைப் பற்றிய கேள்விஅறிவு கொஞ்சம் உண்டு. சினிமாப் பாடல்களைக் கேட்கும் போது, வீட்டில் அம்மாவும் அண்ணாவும் என்ன ராகம் என்று பாடிப்பார்ப்பார்கள். கூட இருந்ததால் ராக வித்தியாசம் தெரிந்தது. ஓரளவுக்குப் பாடவும் செய்வேன். மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி.//////

    சரி, ஒரளவுக்கு இருந்தால் போதும். ஒரு பாடலைப் பாடி, அத்ன் ஒலி வடிவை மின்னஞ்சலில் அனுப்புங்கள். மாணவர் மலரில் வலை ஏற்றி அனைவரையும் மகிழ்விப்போம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com