15.3.12

Poetry நல்காத செல்வம்


Poetry நல்காத செல்வம்

சிலருக்கு நல்ல மனைவி கிடைப்பாள். குணவதியாக இருப்பாள். சிலருக்கு அழகான பெண் மனைவியாகக் கிடைப்பாள்."பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளாக இருப்பாள்" (இது கவியரசரின் வரிகள்)  சிலருக்குப் பிசாசு போன்றவள் மனைவியாக வந்து சேருவாள். வாழ்க்கை முழுவதும் அவனை ஆட்டி வைப்பாள். அதெல்லாம் வாங்கி வந்த வரம். நமது மொழியில் சொன்னால் ஜாதக அமசம் அல்லது ஜாதகக் கோளாறு.

அதுபோல சிலருக்கு செல்வம் அதுவாக வந்து சேரும். அடைமழையாகப் பணம் கொட்டும். சுனாமியாக வந்து சேரும். சிலருக்கு அன்றாடத் தேவைகளுக்குக்கூட சிரமப் படுமபடியான வாழ்க்கை அமைந்து விடும். பணமே வராது. அல்லல் படுவான். இன்றையப் பொருளாதாரச் சூழ்நிலையில் தேவையான பணம் இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும்? அவதிப்பட வேண்டியதுதான். அதுவும் ஜாதக அமைப்புத்தான்.

இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் நன்றாக இருந்தால் பணம் வரும். இரண்டாம் வீடு, ஆறாம் வீடு, பத்தாம் வீடு ஆகிய 3 வீடுகள் நன்றாக இருந்தாலும் பணம் வரும். இல்லை என்றால், எத்தனை கெட்டிக்காரத்தனம் இருந்தாலும், அல்லது எத்தனை முயற்சி செய்து, தொழில் செய்தாலும் அல்லது வியாபாரம் செய்தாலும் பணம் வராது. அதுவும் ஜாதக அமைப்புத்தான்.

சரி, எதற்காகச் செல்வம் சேர்கிறது? அல்லது எதற்காகக் கடவுள் நமக்குப் பணத்தைக் கொடுக்கிறார்?

நாமும் வாழ்ந்து, பிறருக்கும் (இல்லாதவர்களுக்கு) கொடுப்பதற்காகவே செல்வம் சேர்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும். கொடுக்கும் பண்பு சிறந்த மனிதப் பண்பாகக் கருதப்பட்ட காலம் இருந்திருக்கிறது.

பணத்தின் உண்மையான மதிப்பு அதைச் செலவு செய்யும் போதும், பிற்ருக்குக் கொடுக்கும்போதும்தான் இருக்கும். சேர்த்துவைக்கும் போதும் அல்லது குவித்து வைக்கும்போதும் அத்ற்கு மதிப்பு இல்லை.

"Earn money, spend money, donate money, circulate the money, but don't accumulate the money. If you accumulate the money you will become ugly" என்று ஞானி ஒருவன் சொன்னான்.

நீ செர்த்துவைக்கும் செல்வம் எதுவுமே நீ இறக்கும் போது உன்னோடு வராது என்பதை ஒற்றை வரியில் உணர்த்தினான் இன்னொரு ஞானி. அவன் இப்படி அழகாகச் சொன்னான்: "காதறுந்த ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே" என்றான் அவன். அதாவது, ஒரு ஒடிந்துபோன, பயனற்ற ஊசி கூட உன்னுடன் வராது என்றான் அவன்.

அதீத செல்வம் இருப்பவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இல்லை. அதைக் காப்பாற்றுவதே அவர்களுக்குப் பெரிய வேலையாக இருக்கிறது. அதைத் தக்க வைத்துக்கொள்வதே அன்றாட வேலையாக இருக்கிறது. அவர்கள் தர்மமே செய்ய மாட்டார்கள். கோவில் உண்டியலில் ஒரு பத்து ரூபாய்த் தாளைக்கூட போடமாட்டார்கள். கருமியாக இருப்பார்கள்.

யாருக்காகச் சேர்க்கிறோம்? எதற்காகச் சேர்க்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாது. கேட்டால் வியாக்கியானம் பேசுவார்கள். வயதான காலத்தில், இயலாமை வந்து அனைக்கின்ற காலத்தில் என்ன செய்வது?  Money is the security against death! என்பார்கள்.

ஆனால் காலதேவன் வேறு ஒரு கணக்கு வைத்திருப்பான். சேர்த்த பணம் அவனுக்குப் பயன்படவில்லை என்பதை உணர்த்திவிட்டே அவனைக் கூட்டிக்கொண்டு போவான்.

வயதான காலத்தில் நோய் வந்து படுத்த படுக்கையாகிவிட்டால், எந்தப் பணம் நம்மைக் காப்பாற்றும்? நோயின் அவதி தெரியாமல் நம்மை அது எப்படிக் காக்கும்?

செல்வம் இருக்கும் வீடுகளில் எல்லாம், அதைச் சேர்த்தவன் இறந்த பிறகு பெரிய பெரிய சிக்கல்கள்தான் வந்திருக்கின்றன. கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். என் அனுபவம் அது.

பெரும்பாலும் மனிதன் தனக்கும், தன் மனைவி மற்றும் பிள்ளைகளின் மேன்மைக்காக செல்வத்தைச் சேர்த்து வைக்கிறான். அவன் இற்ந்தபிறகு, அவன் மனைவி மக்கள் அவனுடைய மேன்மையை உணர்ந்து தினமும் அவன் படத்திற்குப் பூ வைத்துக் கும்பிடுவார்களா என்றால் அதுதான் இல்லை. அட்லீஸ்ட் அவனை நினத்துப்பார்ப்பார்களா என்றால் அதுவும் இல்லை

அதைத்தான் ஒரு ஞானி இப்படிச் சொன்னான்

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

செத்துப்போனாய் என்றால் உன்னைக் கொண்டுப்போய் எரித்துவிட்டு வந்து, தண்ணீர் ஊற்றிக் குளித்து தலை முழுகிவிட்டு உன்னை மறந்துவிடுவார்கள்" என்றான்

அதைப் பட்டினத்தடிகள்

அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே; விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு கட்டு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!"

இந்தப் பாடலைப் பாமர மக்களுக்குப் புரியும்படி கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எளிமைப் படுத்தி எழுதினார்

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைவரை யாரோ"

எனக்குத் தெரிந்த பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார், தன் பெற்றோர்கள் வைத்துவிட்டுப் போன செல்வத்தைத் தன் கடும் உழைப்பால் பல மடங்கு பெருக்கி வைத்தார். மூப்பு வந்து இறந்து போனார். மொத்தம் நூறு கோடி ரூபாய் சொத்து. இப்போது அவை எல்லாம் சிக்கலில் உள்ளன. அவருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். ஐந்து மகன்கள். ஐந்து மகள்கள். சொத்துக்களால் ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லை. பேச்சுவர்த்தை இல்லை. பத்து ஆண்டுகளாக சொத்துக்கள் பிரிபடாமலேயே இருக்கின்ற்ன. அத்துடன் வந்தவர்கள் 10 பேர்கள் (ம்ருமகள்கள், மாப்பிள்ளைகள்) மொத்தம் 20 பேர்கள்

அவர்கள் வீட்டுக் கடைசிப் பையன் என்னிடம் சொன்னான்."அண்ணே எங்க அப்பச்சி, சொத்தைப் பெருக்கி வச்சிட்டுப்பொனதுக்காக நாங்க சந்தோஷப் பட முடியலை. --யோழி பத்துப் பிள்ளைகளைப் பெத்துவிட்டுப் போனான் பாருங்கள் அதுதான் சிக்கல்"

நிலைமை எப்படி இருக்கிறது பாருங்கள்?

பெற்ற தந்தையைத் --யோழி என்கிறான். அவன் மன நிலைமை அப்படி!

செல்வம் இல்லாத வீட்டில் அன்பு மிகுதியாக இருக்கும். அந்த வீட்டுப் பிள்ளைகள் யாரும் தங்கள பெற்றோர்களை இதுப்பொல இழிவாகத் திட்ட மாட்டார்கள்

இப்படிப் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்.
------------------------------------
இப்போது சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

தர்மம் செய்யாமல், அதாவது பிறருக்கு நல்காமல் சேர்த்துவைத்த செல்வம் என்ன ஆகும்?

பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்!

மனமுவந்து தர்மங்கள் எதையும் செய்யாமல் சேர்த்துவைக்கப் பெற்ற செல்வங்கள்
சூனிய வித்தைகளுக்கும்
பேய்வழிபாடுகளுக்கும்
தாசிகளுக்கு (விலை மகளிர்) கொடுத்தற்கும்
வீண் செயல்களுக்கும்
கொள்ளை கொடுத்ததற்கும்
மதுவிற்கும்
அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்
இறுதியாத்திரைக்கும்
கள்வர்களால் கவர்ந்து கொள்ளப் படுவதற்கும்
நெருப்பால் வெந்து அழிவத்ற்கும் உரியதாகும்
ஈயாமல் சேர்த்த செல்வம் பலவையிலும் பாழாகும் என்பதைப் பாடலாசிரியை உணர்த்துகின்றார்

யார் அந்தப் பாடலாசிரியை?

நம் ஒளவைப் பாட்டிதான்!

உண்மைதான் ஒரு கஞ்சன் சைக்கிளில் சென்று சம்பாதித்து வைத்துவிட்டுப் போன பணத்தை, அவனுடைய மகனோ அல்லது மாப்பிள்ளையோ, அவனுடைய மகன் வழிப்பேரனோ அல்லது மகள் வழிப்பேரனோ ஹுண்டாய்க் காரில் சொகுசாகச் சென்று செல்வழிப்பான். அதுவும் மேற்சொன்ன வழிகளில் (மது, மாது, சூதாட்டம் போன்ற வழிகளில்) செல்வழிப்பான். He does not know the pain of earning money.That is the main reason!

செலவழித்துவிட்டு இப்ப்டிச் சொல்வான். "எங்க வீட்டுப் பெரிய டிக்கெட் எல்லாம் அனுபவிக்கத் தெரியாத தண்டப்பசங்கடா! ரசனை இல்லாத ஜென்மங்கடா. ஏதோ வாழ்ந்தோமின்னு வாழ்ந்திட்டுப் பொயிட்டானுங்கடா. நெனச்சாலே வெட்கக்கேடா இருக்குடா"

ஆகவே உங்களால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுங்கள். அதுதான் செல்வத்தின் பயன். வாழ்வியல் தர்மம்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

94 comments:

  1. தெரிந்தவர் ஒருவர் காசி க்ஷேத்திரம் சென்றுவந்தார். ஒரு முறைக்காக அவரைச் சந்தித்து அவர் பயணம் பற்றியெல்லாம் விசாரித்தேன்."நாங்க‌ளெல்லாம் ஒரே கோத்திரக்காரர்கள் சேர்ந்து ஒரு குழுவாகப் போனோம். அங்கே செய்ய வேண்டிய
    பித்ரு கர்மாக்களுக்கான செலவைக் குறைக்க இது ஒரு வழி. தனியாகப்போனால்
    அங்கே உள்ளவர்கள் நம்மிடம் அதிகம் கறந்து விடுவார்களாம்"என்றெலாம் கதைத்தார்.இதுதான் காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது என்பது.கர்மம் என்பதை இங்கே காம்க் குரோத மத மாச்சரியங்கள் என்று எடுத்துக் கொள்க.
    காசியில் சென்று நம் அற்ப குணங்களை விட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

    "ஈயார் தேட்டை தீயார் கொள்வர்".

    "யார்க்கும் இடுமின் இவர் அவர் என்னென்மின்"

    நல்ல தத்துவக் கருத்துக்கள் ஐயா! அறிந்த செய்தியானாலும்,தங்களுடைய மொழியில் படிக்கும் போது மனதில் நன்கு பதிகிற‌து.மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  2. 'தர்மோ ரக்ஷிதி ரக்ஷித:' என்பது மிகப் பிரபலமான வேத வாக்கியம். தர்மத்தைக் காப்பவர்களை அந்த தர்மமே காப்பாற்றும். தர்மம் செய்தால், பணம் செலவாகி விடுமே என்று பணத்தைச் சேர்த்தால் யார் காப்பாற்றுவார்கள்?.

    மா குரு தன ஜன யௌவன கர்வம்
    ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் (பஜ கோவிந்தம்: 11)

    சேர்த்து வைத்த செல்வம், இளமை, சுற்றம், இவற்றைக் கால தேவன் ஒரு நொடியில் இல்லாமல் செய்து விடுவான். இதனை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். முதலில் கறிக்கோழி ஒன்றின் வாழ்வின் நிலையாமையைச் சொல்லி, பிறகு நமக்கும் அதுதான் என்பது போல (நம் வாழ்க்கையும், பூமிதேவியும், கால தேவனும் நடத்தும் பேரம் போலத் தோன்றியது எனக்கு) இருந்தது இன்றைய பதிவு. நன்றி.

    ReplyDelete
  3. //// kmr.krishnan said...
    தெரிந்தவர் ஒருவர் காசி க்ஷேத்திரம் சென்றுவந்தார். ஒரு முறைக்காக அவரைச் சந்தித்து அவர் பயணம் பற்றியெல்லாம் விசாரித்தேன்."நாங்க‌ளெல்லாம் ஒரே கோத்திரக்காரர்கள் சேர்ந்து ஒரு குழுவாகப் போனோம். அங்கே செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களுக்கான செலவைக் குறைக்க இது ஒரு வழி. தனியாகப்போனால் அங்கே உள்ளவர்கள் நம்மிடம் அதிகம் கறந்து விடுவார்களாம்"என்றெலாம் கதைத்தார்.இதுதான் காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது என்பது.கர்மம் என்பதை இங்கே காம்க் குரோத மத மாச்சரியங்கள் என்று எடுத்துக் கொள்க.காசியில் சென்று நம் அற்ப குணங்களை விட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
    "ஈயார் தேட்டை தீயார் கொள்வர்".
    "யார்க்கும் இடுமின் இவர் அவர் என்னென்மின்"
    நல்ல தத்துவக் கருத்துக்கள் ஐயா! அறிந்த செய்தியானாலும்,தங்களுடைய மொழியில் படிக்கும் போது மனதில் நன்கு பதிகிற‌து.மிக்க நன்றி ஐயா!////

    ஆமாம் கட்டுரையின் கருத்து, ஈயார் தேட்டை தீயார் கொள்வர் என்பதுதான். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. /// Parvathy Ramachandran said...
    'தர்மோ ரக்ஷிதி ரக்ஷித:' என்பது மிகப் பிரபலமான வேத வாக்கியம். தர்மத்தைக் காப்பவர்களை அந்த தர்மமே காப்பாற்றும். தர்மம் செய்தால், பணம் செலவாகி விடுமே என்று பணத்தைச் சேர்த்தால் யார் காப்பாற்றுவார்கள்?.
    மா குரு தன ஜன யௌவன கர்வம்
    ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் (பஜ கோவிந்தம்: 11)
    சேர்த்து வைத்த செல்வம், இளமை, சுற்றம், இவற்றைக் கால தேவன் ஒரு நொடியில் இல்லாமல் செய்து விடுவான். இதனை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். முதலில் கறிக்கோழி ஒன்றின் வாழ்வின் நிலையாமையைச் சொல்லி, பிறகு நமக்கும் அதுதான் என்பது போல (நம் வாழ்க்கையும், பூமிதேவியும், கால தேவனும் நடத்தும் பேரம் போலத் தோன்றியது எனக்கு) இருந்தது இன்றைய பதிவு. நன்றி./////

    நல்ல வடமொழிச் சுலோகங்களுடன் கூடிய உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி
    மா - குரு - தன - ஜன - யௌவனகர்வம் - ஆகியவை ஒரு நாள் அதிரடியாக நம்மை விட்டு நீங்கும் என்பது நிதர்சனமான உண்மை!

    ReplyDelete
  5. ///// Balaji said...
    Arumaiyana pathivu. Nanri///

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. வணக்கம் .
    மிகவும் நன்றாக கூறினீர்கள் . " தர்மோ தர்மக " என்று வேதம் கூறுகிறது .
    தினமும், குறைந்த பட்சம் நாம் சாப்பிடும் உணவில் ஒரு பிடி அளவாவது மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு நாம் உண்ணவேண்டும் . காக்கை, குருவி பறவை களுக்கு உணவு கொடுத்து விட்டாவது நாம் உண்ணவேண்டும். இது காலம் காலமாக செய்து வருகின்ற செயல் . இன்று எத்தனை பேர் கடை பிடிகிறார்கள் .
    ஒரு மனிதனின் தர்மம் என்னவென்று நான் பத்து பக்கங்களுக்கு கூறினால், என்னை எல்லோரும் அடிக்க வருவார்கள் .
    என் உள்ளம் துடிக்கிறது எழுதுவதற்கு . அனால் , கைகள் தான் கட்டி போட்டு உள்ளன.
    கர்ணன் சரித்திரிரத்தில் நமக்கு தெரியாத தர்மம் நிறைய உள்ளது.
    நேரம் வரும் காத்திருப்போம் எழுதுவதற்கு.

    ReplyDelete
  7. ஆஹா! அருமையானப் பதிவு...
    "ஈயார் கேட்டைத் தீயார் கொள்வர்"
    "செல்வத்துப் பயனே ஈதல்"

    சொந்த மனைவி மக்களோடு அவர்களையும் சந்தோசப் படுத்தி வாழ்ந்தாலாவது கூட பரவாயில்லை அதைக் கூடாத செய்யாதவர்களையும் காண முடிகிறது.

    இன்னும் சிலரோ நான் தான் இதை எல்லாம் அனுபவிக்க வில்லை அதனாலே எனது பிள்ளை இவைகளெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று எதைக் கேட்டாலும் அது தேவையா என்றுக் கூட யோசிக்காமல் உடனே வாங்கிக் கொடுத்தும் விடுகிறார்கள்... பணம் தான் கொட்டுகிறதே. இதுவும் ஒருவித சுய நலம் தான்.

    நாம் அனுபவிக்காதவற்றை பிள்ளைகளையும் அனுபவிக்க செய்தாலும், இதை தான் ஏன்? எப்படி அனுபவிக்க வில்லை என்றுக் கூறி அதற்காக எவ்வளவு வருந்தினேன் என்பதையும் கூறி; பிறகு அது அவசியமான ஒன்றா என்பதையும் அவர்களையே சற்று சிந்திக்கவும் செய்து வளர்ப்பது நன்று...

    பணம் கொட்டுபவர்கள் இதை மனதில் கொள்வதோடு, தங்கள் பிள்ளைகளோடு அவர்கள் கையாலே நல்லக் காரியங்களையும் செய்யச் சொன்னால் பணம் சம்பாதித்ததோடு அல்லாமல் வாழும் முறையையும் கற்றுக் கொடுத்ததாக இருக்கும்.

    தான்; தானே, தான் மட்டுமே இவை அனைத்துக்கும் காரணம், என்னால் மாத்திரமே இவைகளை சம்பாதிக்க முடியும் என்ற கீழான எண்ணம் கொண்டவர்கள் தாம் அதிகம். இதற்கு காரணம். எல்லாவற்றிற்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது அதன் ஆசியால் தான் இவைகள் விளைந்தது என்பதையும் அதன் துணை எப்போதும் வேண்டும் என்பவன் மட்டுமே சற்று சிந்திப்பான்.

    வாழ்வில் இரண்டு நிலையிலிலும் இருந்தவர்கள் சிலருக்காது இவைகள் புரிவதால் தான்... ஆங்காங்கே ஆதரவற்றோர் விடுதிகள் இருக்கின்றன...
    "பில் கேட்சும்" மனைவியோடு ஏழை நாடுகளுக்கு பயணமாகிறார்... உண்மையை அறிந்தவர் அவர். அவரின் அந்தப் படங்களை பதிவில் சேர்த்து இருக்கலாம் ஐயா!

    "ஊருணி நீர் நிறைந்தற்றாம் பேரறிவாளன் திரு"

    நல்லப் பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  8. நல்ல பதிவு.
    "ஈயார் தேட்டை தீயார் கொள்வர்".
    நாள்தொறும் நினைவில் நிற்க வேண்டத்தக்கது.
    நன்றி

    ReplyDelete
  9. ஆமாம்..
    அதற்காகதான் அது...

    அய்யா அவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன
    அந்த நகரத்தார் சத்திரத்திற்கு

    அய்யா சொன்ன
    அடுத்த நாளோ நல்தொண்டு செய்த

    அன்பு லால்குடி சகோதரரை தவிர
    அடுத்தவர் யாரும் தொகை அனுப்பி

    கைத் தொண்டு முடியாவிடினும்
    பைத்தொண்டு புரிந்தனரோ தெரியலை

    வருடத்திற்கு 4000 என தொகையனுப்ப
    வகுப்பறை தோழருக்கு சிரமமில்லை

    வகுப்பறை மாணவர்கள் என 5 லட்சம்
    வரவு வைக்க சத்திரத்திற்கு அனுப்புக

    மொத்தமாக முடியாதவர்கள்
    பத்திரமாக சேர்த்து வைத்து

    மாதமொரு தொகையினை
    மறக்காமல் அனுப்புக..

    நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்
    என்று கேட்க வில்லை நீங்களே தரவேண்டும் என்பது தான் எண்ணம்

    அதற்காகவே
    அய்யர் மௌனம்...

    தொடரட்டும் உங்கள்
    தொண்டு பயணம் ..

    உங்களுக்காக
    சுழல விடும் இன்றைய பாடல்

    கொடுத்தது எல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்

    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்

    மண் குடிசை வாசல் என்றால்
    தென்றல் வர வெறுத்திடுமா

    மாலை நிலா ஏழை என்றால்
    வெளிச்சம் தர மறுத்திடுமா

    உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
    ஒரு போதும் தெய்வம் கொடுத்தது இல்லை

    படைத்தவன் மேல் பழியும் இல்லை
    பசித்தவன் மேல் பாவம் இல்லை

    கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார்
    உழைத்தவர்கள் தெருவில் நின்றார்

    பலர் வாழ வாட சிலர் வாட வாழ
    ஒரு போதும் தெய்வம் கொடுத்தது இல்லை

    (அய்யருக்கு பிடித்த இந்த வரிகளை அய்யருக்காக மீண்டும் படியுங்கள்)

    இல்லை என்போர் இருக்கையிலே
    இருப்பவர்கள் இல்லை என்பார்

    மடி நிறைய பொருள் இருக்கும்
    மனம் நிறைய இருள் இருக்கும்

    ஏதுவந்த போதும் பொதுவேன்று வைத்து
    வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

    படம் : படக்கோட்டி
    இசை : எம்.எஸ். வி
    வரிகள் : வாலி
    பாடியவர் : டி.எம்.எஸ்

    ReplyDelete
  10. எத்தனை உண்மையான வரிகள் , அர்த்தங்கள் . நன்றி அய்யா

    ReplyDelete
  11. ////பெற்ற தந்தையைத் --யோழி என்கிறான். அவன் மன நிலைமை அப்படி!/////
    --யோழி -- என்பது திட்டும் சொல் என்று மட்டும்
    தெரிகிறது.ஆனால்,அதன் அர்த்தம் ?
    * * * * * * * * * * * * * *
    சிக்கனமாக வாழ்பவனை கருமி என்றும்,
    தகாத வழியில் செலவு செய்பவனை ஊதாரி என்றும்,
    கூறுவார்கள்.
    சிக்கனமாக வாழ்ந்து பொருள் சேர்த்து வைப்பவர்களுக்கு
    அவர்களின் வாரிசுகளால் பிற்காலத்தில் ஏற்படும்
    விபரீதங்களை தெளிவுப் படுத்தி,
    அவரவர்களும் தங்களின் வாழ் நாளிலேயே
    தங்களால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுத்து,
    உதவ வேண்டும் என்பதுடன்,
    /////அதுதான் செல்வத்தின் பயன். வாழ்வியல் தர்மம்! ///////
    என்ற கருத்தினை வலியுறித்தியுள்ள ஆசிரியர்
    அவர்களுக்கு நன்றி!!

    ReplyDelete
  12. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் என்பதோடு, ஈதல் இசைபட வாழ்தல் அஃதல்லது ஊதியமில்லை உயிர்க்கு என்றெல்லாம் பெரியோர்கள் சொல்லி வைத்துவிட்டுச் சென்றாலும், காசு என்றால் 'ஆ'வென்று வாயைப் பிளந்து கொண்டு ஒருவழிப்பாதையாக வாங்கிப் போட்டுக் கொண்டு, பிறருக்குக் கொடுப்பது என்றால் 'பிசினாறி'யாக இருக்கும் ஜன்மங்களை பார்த்து வருகிறோம். அலஹாபாத்தில் சங்கமத்தில் நீராட என் மகன், மகள் உள்ளிட்ட குழந்தைகளுடன் சென்றிருந்தேன். அங்குள்ள சிவமடத்தினர் ஒரு 'டோங்கா' வண்டி ஏற்பாடு செய்து அழைத்துப் போய் வர ஏற்பாடு செய்து கொடுத்தனர். நாங்கள் யமுனைக் கரையில் அமைந்த படகுத் துறைக்குப் போய் அங்கு படகில் ஏறி கங்கையும் யமுனையும் கலக்குமிடத்தில் நங்கூரமிட்டு நிறகும் இரு பெரிய படகுகளுக்கிடையே அமைந்த மேடையில் இறங்கி ஸ்னானம் செய்ய வேண்டும். படகை நெருங்கும் சமயம் முப்பது பேர் அமரக்கூடிய படகில் சுமார் பத்து பதினைந்து பேர் மட்டும் இருந்தனர். படகு புறப்படத் தயாராக இருந்தது. நாங்கள் அவசர அவசரமாக டோங்காவிலிருந்து இறங்கி ஓடிப்போய் படகில் ஏறப்போகும் சமயம், அதில் உட்கார்ந்திருந்த சென்னை வாசிகள், தமிழ் பேசுபவர்கள் (ஜாதி தெரியும், ஆனால் வேன்டாம்) எங்களை ஏறவிடவில்லை. படகுக்காரனை படகை விடச் சொல்லி அவசரப்படுத்தினர். சரி ஒழியட்டும், நாம் அடுத்த படகில் போவோம் என்று பின் தங்கி விட்டோம். பின்னர் ஒரு படகில் நாங்கள் சென்று நங்கூரமிட்ட படகில் ஏறி சுகமாக ஸ்னானம் செய்து கொண்டிருந்த சமயம் அருகில் இருந்து பலர் ஓலமிடும் சப்தம் கேட்டது. கரையிலிருந்து நங்கூரமிட்ட படகுக்குச் செல்வோர் தங்கள் படகுகளை அந்தப் பெரிய படகில் கயிற்றால் கட்டி வைத்திருப்பார்கள். அப்படி எங்களை ஏறவிடாமல் தடுத்துவிட்டு புண்ணிய ஸ்னானம் செய்யச் சென்ற சென்னை கூட்டம் ஒரு படகில் ஸ்னானம் முடித்து ஏறி உட்காரவும், படகு கயிறு அவிழ்ந்து கங்கையின் புலிப்பாய்ச்சல் நீரோட்டத்தில் ஓடத் துவங்கிவிட்டது. படகுக்காரன் அப்போதுதான் இதை கவனித்தான், இருந்தும் அவனால் அந்த படகுக்குப் போக முடியவில்லை. படகில் இருந்தவர்கள் குய்யோ முறையோ என்று அலறினர். அப்போது கங்கையில் அங்கும் இங்குமாக படகுக்ளை ஓட்டிக் கொண்டிருந்த சில படகுக்காரர்கள் நீரோட்டத்தோடு மிக வேகமாகப் படகுகளைச் செலுத்தி அந்தப் படகைப் பிடித்து மிக சிரமப்பட்டு நங்கூர கப்பலுக்குக் கொண்டு வந்தனர். அந்த ஒரு மணி நேர போராட்டத்தில் அந்த படகில் இருந்தவர்கள் உயிர் போய் திரும்பியிருக்க வேண்டும். வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தில் நான் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட இல்லை. அவர்கள் பொருள் பணம் தானம் செய்ய வேண்டாம். அவர்களைப் போலவே கங்கையில் நீராட வந்தவர்களை படகில் ஏறவிடாமல் சுய நலத்தோடு போனாவர்களுக்கு கங்கா மாதா கொடுத்த தண்டனை அது என்றுதான் நான் நினைக்கிறேன். பணம் காசு தர்மம் செய்யாவிட்டல்கூட பரவாயில்லை, சமயம் நேரும்போது பிறருக்கு உதவியாக இருக்கவும் வேண்டும் என்பதை சில நிகழ்ச்சிகளால் இறைவன் நமக்கு புத்தி புகட்டுகிறான். ஆனாலும் நாம்தான் புரிந்து கொள்வதில்லை. உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை. வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  13. பேரத்தை நீட்டுவதால்
    காலம் கூடும்
    கறி கோழிக்கு மட்டும்
    காசுள்ளவன் கடவுளாகிறான்.

    ReplyDelete
  14. நல்ல தலைப்பு நல்ல செய்தி இன்றைய ஆக்கம் .

    இது போன்ற மனவளர் கட்டுரைகளையும் அவ்வப்போது கொடுங்கள் அய்யா .

    சம்பாதிக்கும் போதே சுகப்படு .சுகம் என்பது நாவின் சுகமோ, உடல் சுகமோ அல்ல,மன சுகம்.மனம் சுகப்படுவது பணம் செலவழிப்பதில் அல்ல, தர்மமாய் தனம் தருவதில் தான்

    தானத்தை தர்மமாய் தரும்போது நாம் சம்பாதிப்பது பல மனிதர்களை .காடுவரை வந்து குழியில் குடியேற்றுவது இந்த கால்கள் மட்டும்தான்.
    கட்டடங்களோ , காணி நிலங்களோ அல்ல .

    தரும் குணம்
    வளர்ப்போம்
    தர்மம்-நம்
    தலை காக்க வைப்போம்

    ஈகை கொடுப்போம்
    வறியவரின் மனதை
    வாகை சூடுவோம்

    இறைக்கும் கிணறுதான்
    ஊற்றெடுக்கும்
    இரை இல்லாருக்கு
    இறைக்கும் கிணறாவோம் .

    ReplyDelete
  15. அலகாபாத் அனுபவத்தை எழுதியிருந்தேன். சென்னைக்குப் பிழைப்புதேடி குடிபெயர்ந்த சிலருடைய நடவடிக்கைகள் என்னை மிகவும் புண்படுத்தியிருக்கிறது. அப்படியொரு நிகழ்ச்சியையும் சொல்லாவிட்டால் என் மனம் அமைதியடையாது என்பதால் சொல்கிறேன். திருப்பதி சென்றேன். அங்கு விடியற்காலைப் பொழுதில் அங்கப் பிரதக்ஷணம் செய்வார்கள். எனக்கு அதில் அதிக ஈடுபாடு இல்லாவிட்டாலும் உடன் இருந்தவர்கள் வற்புறுத்தலுக்காக நானும் புஷ்கரணியில் நீராடிவிட்டு குளிரில் உடல் நடுங்க அங்க பிரதக்ஷணம் செய்ய உள்ளே சென்றேன். அங்கு வரிசையில் நிறைய பேர் அங்கபிரதக்ஷணம் செய்ய தயாராக தரையில் படுத்திருந்தார்கள். நாடும் அதில் சேர்ந்துகொள்ள இடைவெளி தேடி அங்கும் இங்குமாக அலைந்தேன். அங்கு இடமிருந்தும் பக்கத்தில் இருந்தவர்கள் குறிப்பாக இளைஞர்கள், நடுவயதுக்காரர்கள் என்னை அங்கு அனுமதிக்கவில்லை. பிடித்துத் தள்ளினார்கள். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். ப்ரதக்ஷணம் தொடங்கிய் எல்லோரும் உருண்டார்கள். எனக்கு வாய்ப்போ, இடமோ இல்லை. ஒழியட்டும் என்று வந்து விட்டேன். இத்தகையவர்களை அந்த வேங்கடேசப் பெருமாள் உடனே தன்னுடன் சேர்த்துக் கொண்டு எல்லா செல்வங்களையும் வாரி வழங்கிவிடுவாரா? அல்லது இதையெல்லாம் புறக்கணித்து விட்டு, பிறருக்குச் சேவை செய்யும் ஆட்களுக்கு நற்கதி வழங்குவாரா? எனக்கு வீடு கட்டிய பொறியாளர் கிணறு தோண்டும்போது சொன்னார், மனதில் ஈரம் இருந்தால் உன் கிறணற்றிலும் ஈரம் இருக்கும் என்று. என் கிணற்றில் 18 அடியில் நல்ல ஊற்று நீர் கிடைத்தது.

    ReplyDelete
  16. //// csekar2930 said...
    வணக்கம் .
    மிகவும் நன்றாக கூறினீர்கள் . " தர்மோ தர்மக " என்று வேதம் கூறுகிறது .
    தினமும், குறைந்த பட்சம் நாம் சாப்பிடும் உணவில் ஒரு பிடி அளவாவது மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு நாம் உண்ணவேண்டும் . காக்கை, குருவி பறவை களுக்கு உணவு கொடுத்து விட்டாவது நாம் உண்ணவேண்டும். இது காலம் காலமாக செய்து வருகின்ற செயல் . இன்று எத்தனை பேர் கடை பிடிகிறார்கள் .
    ஒரு மனிதனின் தர்மம் என்னவென்று நான் பத்து பக்கங்களுக்கு கூறினால், என்னை எல்லோரும் அடிக்க வருவார்கள் .
    என் உள்ளம் துடிக்கிறது எழுதுவதற்கு . அனால் , கைகள் தான் கட்டி போட்டு உள்ளன.
    கர்ணன் சரித்திரிரத்தில் நமக்கு தெரியாத தர்மம் நிறைய உள்ளது.
    நேரம் வரும் காத்திருப்போம் எழுதுவதற்கு.////

    யாரும் அடிக்க வரமாட்டார்கள். எழுதுங்கள் நண்பரே!

    ReplyDelete
  17. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    ஆஹா! அருமையானப் பதிவு...
    "ஈயார் கேட்டைத் தீயார் கொள்வர்"
    "செல்வத்துப் பயனே ஈதல்"
    சொந்த மனைவி மக்களோடு அவர்களையும் சந்தோசப் படுத்தி வாழ்ந்தாலாவது கூட பரவாயில்லை அதைக் கூடாத செய்யாதவர்களையும் காண முடிகிறது.
    இன்னும் சிலரோ நான் தான் இதை எல்லாம் அனுபவிக்க வில்லை அதனாலே எனது பிள்ளை இவைகளெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று எதைக் கேட்டாலும் அது தேவையா என்றுக் கூட யோசிக்காமல் உடனே வாங்கிக் கொடுத்தும் விடுகிறார்கள்... பணம் தான் கொட்டுகிறதே. இதுவும் ஒருவித சுய நலம் தான்.
    நாம் அனுபவிக்காதவற்றை பிள்ளைகளையும் அனுபவிக்க செய்தாலும், இதை தான் ஏன்? எப்படி அனுபவிக்க வில்லை என்றுக் கூறி அதற்காக எவ்வளவு வருந்தினேன் என்பதையும் கூறி; பிறகு அது அவசியமான ஒன்றா என்பதையும் அவர்களையே சற்று சிந்திக்கவும் செய்து வளர்ப்பது நன்று...
    பணம் கொட்டுபவர்கள் இதை மனதில் கொள்வதோடு, தங்கள் பிள்ளைகளோடு அவர்கள் கையாலே நல்லக் காரியங்களையும் செய்யச் சொன்னால் பணம் சம்பாதித்ததோடு அல்லாமல் வாழும் முறையையும் கற்றுக் கொடுத்ததாக இருக்கும்.
    தான்; தானே, தான் மட்டுமே இவை அனைத்துக்கும் காரணம், என்னால் மாத்திரமே இவைகளை சம்பாதிக்க முடியும் என்ற கீழான எண்ணம் கொண்டவர்கள் தாம் அதிகம். இதற்கு காரணம். எல்லாவற்றிற்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது அதன் ஆசியால் தான் இவைகள் விளைந்தது என்பதையும் அதன் துணை எப்போதும் வேண்டும் என்பவன் மட்டுமே சற்று சிந்திப்பான்.
    வாழ்வில் இரண்டு நிலையிலிலும் இருந்தவர்கள் சிலருக்காது இவைகள் புரிவதால் தான்... ஆங்காங்கே ஆதரவற்றோர் விடுதிகள் இருக்கின்றன...
    "பில் கேட்சும்" மனைவியோடு ஏழை நாடுகளுக்கு பயணமாகிறார்... உண்மையை அறிந்தவர் அவர். அவரின் அந்தப் படங்களை பதிவில் சேர்த்து இருக்கலாம் ஐயா!
    "ஊருணி நீர் நிறைந்தற்றாம் பேரறிவாளன் திரு"
    நல்லப் பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!////

    உங்களின் மனம் கனிந்த நிறைவான பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  18. /// krishnar said...
    நல்ல பதிவு.
    "ஈயார் தேட்டை தீயார் கொள்வர்".
    நாள்தொறும் நினைவில் நிற்க வேண்டத்தக்கது.
    நன்றி////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. //// Gee Tax Clinic said...
    ஆமாம்..
    அதற்காகதான் அது...
    அய்யா அவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன
    அந்த நகரத்தார் சத்திரத்திற்கு
    அய்யா சொன்ன
    அடுத்த நாளோ நல்தொண்டு செய்த
    அன்பு லால்குடி சகோதரரை தவிர
    அடுத்தவர் யாரும் தொகை அனுப்பி
    கைத் தொண்டு முடியாவிடினும்
    பைத்தொண்டு புரிந்தனரோ தெரியலை
    வருடத்திற்கு 4000 என தொகையனுப்ப
    வகுப்பறை தோழருக்கு சிரமமில்லை
    வகுப்பறை மாணவர்கள் என 5 லட்சம்
    வரவு வைக்க சத்திரத்திற்கு அனுப்புக
    மொத்தமாக முடியாதவர்கள்
    பத்திரமாக சேர்த்து வைத்து
    மாதமொரு தொகையினை
    மறக்காமல் அனுப்புக..
    நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்
    என்று கேட்க வில்லை நீங்களே தரவேண்டும் என்பது தான் எண்ணம்
    அதற்காகவே
    அய்யர் மௌனம்.../////

    இல்லை விசுவநாதன். அந்த விடுதிக்கு வேண்டிய அளவு தர்மநிதி உள்ளது. மேலும் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. ஆகவே யாரும் சிரமம் கொள்ளல் வேண்டாம். அங்கு செல்லும் வாய்ப்புக்கிடைக்கும்போது மட்டும், முடிந்த தொகையைக் கொடுக்கலாம்.

    ReplyDelete
  20. //// sekar said...
    எத்தனை உண்மையான வரிகள் , அர்த்தங்கள் . நன்றி அய்யா///

    உங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. /// V Dhakshanamoorthy said...
    ////பெற்ற தந்தையைத் --யோழி என்கிறான். அவன் மன நிலைமை அப்படி!/////
    --யோழி -- என்பது திட்டும் சொல் என்று மட்டும்
    தெரிகிறது.ஆனால்,அதன் அர்த்தம் ?////

    இழிவான தாயை உடையவன் என்று பொருள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    சிக்கனமாக வாழ்பவனை கருமி என்றும்,
    தகாத வழியில் செலவு செய்பவனை ஊதாரி என்றும்,
    கூறுவார்கள்.
    சிக்கனமாக வாழ்ந்து பொருள் சேர்த்து வைப்பவர்களுக்கு
    அவர்களின் வாரிசுகளால் பிற்காலத்தில் ஏற்படும்
    விபரீதங்களை தெளிவுப் படுத்தி,
    அவரவர்களும் தங்களின் வாழ் நாளிலேயே
    தங்களால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுத்து,
    உதவ வேண்டும் என்பதுடன்,
    /////அதுதான் செல்வத்தின் பயன். வாழ்வியல் தர்மம்! ///////
    என்ற கருத்தினை வலியுறித்தியுள்ள ஆசிரியர்
    அவர்களுக்கு நன்றி!!////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  22. //// Thanjavooraan said...
    ஈயார் தேட்டை தீயார் கொள்வர் என்பதோடு, ஈதல் இசைபட வாழ்தல் அஃதல்லது ஊதியமில்லை உயிர்க்கு என்றெல்லாம் பெரியோர்கள் சொல்லி வைத்துவிட்டுச் சென்றாலும், காசு என்றால் 'ஆ'வென்று வாயைப் பிளந்து கொண்டு ஒருவழிப்பாதையாக வாங்கிப் போட்டுக் கொண்டு, பிறருக்குக் கொடுப்பது என்றால் 'பிசினாறி'யாக இருக்கும் ஜன்மங்களை பார்த்து வருகிறோம். அலஹாபாத்தில் சங்கமத்தில் நீராட என் மகன், மகள் உள்ளிட்ட குழந்தைகளுடன் சென்றிருந்தேன். அங்குள்ள சிவமடத்தினர் ஒரு 'டோங்கா' வண்டி ஏற்பாடு செய்து அழைத்துப் போய் வர ஏற்பாடு செய்து கொடுத்தனர். நாங்கள் யமுனைக் கரையில் அமைந்த படகுத் துறைக்குப் போய் அங்கு படகில் ஏறி கங்கையும் யமுனையும் கலக்குமிடத்தில் நங்கூரமிட்டு நிறகும் இரு பெரிய படகுகளுக்கிடையே அமைந்த மேடையில் இறங்கி ஸ்னானம் செய்ய வேண்டும். படகை நெருங்கும் சமயம் முப்பது பேர் அமரக்கூடிய படகில் சுமார் பத்து பதினைந்து பேர் மட்டும் இருந்தனர். படகு புறப்படத் தயாராக இருந்தது. நாங்கள் அவசர அவசரமாக டோங்காவிலிருந்து இறங்கி ஓடிப்போய் படகில் ஏறப்போகும் சமயம், அதில் உட்கார்ந்திருந்த சென்னை வாசிகள், தமிழ் பேசுபவர்கள் (ஜாதி தெரியும், ஆனால் வேன்டாம்) எங்களை ஏறவிடவில்லை. படகுக்காரனை படகை விடச் சொல்லி அவசரப்படுத்தினர். சரி ஒழியட்டும், நாம் அடுத்த படகில் போவோம் என்று பின் தங்கி விட்டோம். பின்னர் ஒரு படகில் நாங்கள் சென்று நங்கூரமிட்ட படகில் ஏறி சுகமாக ஸ்னானம் செய்து கொண்டிருந்த சமயம் அருகில் இருந்து பலர் ஓலமிடும் சப்தம் கேட்டது. கரையிலிருந்து நங்கூரமிட்ட படகுக்குச் செல்வோர் தங்கள் படகுகளை அந்தப் பெரிய படகில் கயிற்றால் கட்டி வைத்திருப்பார்கள். அப்படி எங்களை ஏறவிடாமல் தடுத்துவிட்டு புண்ணிய ஸ்னானம் செய்யச் சென்ற சென்னை கூட்டம் ஒரு படகில் ஸ்னானம் முடித்து ஏறி உட்காரவும், படகு கயிறு அவிழ்ந்து கங்கையின் புலிப்பாய்ச்சல் நீரோட்டத்தில் ஓடத் துவங்கிவிட்டது. படகுக்காரன் அப்போதுதான் இதை கவனித்தான், இருந்தும் அவனால் அந்த படகுக்குப் போக முடியவில்லை. படகில் இருந்தவர்கள் குய்யோ முறையோ என்று அலறினர். அப்போது கங்கையில் அங்கும் இங்குமாக படகுக்ளை ஓட்டிக் கொண்டிருந்த சில படகுக்காரர்கள் நீரோட்டத்தோடு மிக வேகமாகப் படகுகளைச் செலுத்தி அந்தப் படகைப் பிடித்து மிக சிரமப்பட்டு நங்கூர கப்பலுக்குக் கொண்டு வந்தனர். அந்த ஒரு மணி நேர போராட்டத்தில் அந்த படகில் இருந்தவர்கள் உயிர் போய் திரும்பியிருக்க வேண்டும். வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தில் நான் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட இல்லை. அவர்கள் பொருள் பணம் தானம் செய்ய வேண்டாம். அவர்களைப் போலவே கங்கையில் நீராட வந்தவர்களை படகில் ஏறவிடாமல் சுய நலத்தோடு போனாவர்களுக்கு கங்கா மாதா கொடுத்த தண்டனை அது என்றுதான் நான் நினைக்கிறேன். பணம் காசு தர்மம் செய்யாவிட்டல்கூட பரவாயில்லை, சமயம் நேரும்போது பிறருக்கு உதவியாக இருக்கவும் வேண்டும் என்பதை சில நிகழ்ச்சிகளால் இறைவன் நமக்கு புத்தி புகட்டுகிறான். ஆனாலும் நாம்தான் புரிந்து கொள்வதில்லை. உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை. வாழ்த்துக்கள். நன்றி./////

    உங்களின் எண்ணப் பகிர்வுகளுக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  23. //// thanusu said...
    பேரத்தை நீட்டுவதால்
    காலம் கூடும்
    கறி கோழிக்கு மட்டும்
    காசுள்ளவன் கடவுளாகிறான்./////

    காசு உள்ளவன் வாங்கிக்கொண்டு போய்விடுவான்! காசு இல்லாதவன் வேண்டுமென்றால் நீங்கள் சொல்கின்றபடி இருக்கலாம்!

    ReplyDelete
  24. //// thanusu said...
    நல்ல தலைப்பு நல்ல செய்தி இன்றைய ஆக்கம் .
    இது போன்ற மனவளர் கட்டுரைகளையும் அவ்வப்போது கொடுங்கள் அய்யா .
    சம்பாதிக்கும் போதே சுகப்படு .சுகம் என்பது நாவின் சுகமோ, உடல் சுகமோ அல்ல,மன சுகம்.மனம் சுகப்படுவது பணம் செலவழிப்பதில் அல்ல, தர்மமாய் தனம் தருவதில் தான்
    தானத்தை தர்மமாய் தரும்போது நாம் சம்பாதிப்பது பல மனிதர்களை .காடுவரை வந்து குழியில் குடியேற்றுவது இந்த கால்கள் மட்டும்தான்.
    கட்டடங்களோ , காணி நிலங்களோ அல்ல .
    தரும் குணம்
    வளர்ப்போம்
    தர்மம்-நம்
    தலை காக்க வைப்போம்
    ஈகை கொடுப்போம்
    வறியவரின் மனதை
    வாகை சூடுவோம்
    இறைக்கும் கிணறுதான்
    ஊற்றெடுக்கும்
    இரை இல்லாருக்கு
    இறைக்கும் கிணறாவோம் ./////

    தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் முண்டாசுக்கவி. நாம் நமமால் முடிந்த உதவிகளையாவது செய்யலாம்.

    ReplyDelete
  25. ஈயாமல் சேர்த்த பணம் ஒட்டாது என்பது மிகவும் சரியான வாக்கு! இதோ என் அனுபவம்! நான் வியாபாரம் செய்து வந்த போது ஒரு பொருளின் விலை கிலோ106ரூ லாபமும் சேர்த்து! எங்களிடம் வாங்கிய ஒரு நிறுவனம் பர்சேஸ் ஆர்டர் அடிக்கும் போது தவறுதலாக கிலோ156ரூ என அடித்து அனுப்பி விட்டார்கள்.நாங்களும் கண்டுகொள்ளாமல் வியாபாரம் செய்து அடைந்த லாபம் கணிசமானது! சில வருடங்கள் சென்ற பின்,அந்த வியாபாரம் கால வெள்ளத்தில் முடங்கி விட்டு வெளியே வரும்போது, கணக்கிட்டுப் பார்க்கும்போது, வராக்கடன் அளவும், நாங்கள் அதிக கட்டணமிட்டு சம்பாதித்த பணத்தின் அளவும் மிகச்சரியாக இருந்தது!

    அன்று முதல் மிக நாணயமாகவே தொழிலிலும்,வாழ்க்கையிலும் நடந்து வருகிறோம்!

    ReplyDelete
  26. //// eswari sekar said...
    nalla paddam sir/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  27. அய்யா, அருமையான பதிவு. அற்புதமான சொல்லாடல். நெஞ்சைத் தொடும் தீர்க்கம். படித்து முடித்து சில நேரம் மௌனம் காத்தேன்.

    பழனியப்பன் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருள்வாராக.

    பதிவிற்கு நன்றிகள்.

    ReplyDelete
  28. //// Thanjavooraan said...
    அலகாபாத் அனுபவத்தை எழுதியிருந்தேன். சென்னைக்குப் பிழைப்புதேடி குடிபெயர்ந்த சிலருடைய நடவடிக்கைகள் என்னை மிகவும் புண்படுத்தியிருக்கிறது. அப்படியொரு நிகழ்ச்சியையும் சொல்லாவிட்டால் என் மனம் அமைதியடையாது என்பதால் சொல்கிறேன். திருப்பதி சென்றேன். அங்கு விடியற்காலைப் பொழுதில் அங்கப் பிரதக்ஷணம் செய்வார்கள். எனக்கு அதில் அதிக ஈடுபாடு இல்லாவிட்டாலும் உடன் இருந்தவர்கள் வற்புறுத்தலுக்காக நானும் புஷ்கரணியில் நீராடிவிட்டு குளிரில் உடல் நடுங்க அங்க பிரதக்ஷணம் செய்ய உள்ளே சென்றேன். அங்கு வரிசையில் நிறைய பேர் அங்கபிரதக்ஷணம் செய்ய தயாராக தரையில் படுத்திருந்தார்கள். நாடும் அதில் சேர்ந்துகொள்ள இடைவெளி தேடி அங்கும் இங்குமாக அலைந்தேன். அங்கு இடமிருந்தும் பக்கத்தில் இருந்தவர்கள் குறிப்பாக இளைஞர்கள், நடுவயதுக்காரர்கள் என்னை அங்கு அனுமதிக்கவில்லை. பிடித்துத் தள்ளினார்கள். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். ப்ரதக்ஷணம் தொடங்கிய் எல்லோரும் உருண்டார்கள். எனக்கு வாய்ப்போ, இடமோ இல்லை. ஒழியட்டும் என்று வந்து விட்டேன். இத்தகையவர்களை அந்த வேங்கடேசப் பெருமாள் உடனே தன்னுடன் சேர்த்துக் கொண்டு எல்லா செல்வங்களையும் வாரி வழங்கிவிடுவாரா? அல்லது இதையெல்லாம் புறக்கணித்து விட்டு, பிறருக்குச் சேவை செய்யும் ஆட்களுக்கு நற்கதி வழங்குவாரா? எனக்கு வீடு கட்டிய பொறியாளர் கிணறு தோண்டும்போது சொன்னார், மனதில் ஈரம் இருந்தால் உன் கிணற்றிலும் ஈரம் இருக்கும் என்று. என் கிணற்றில் 18 அடியில் நல்ல ஊற்று நீர் கிடைத்தது./////

    உண்மை! மனதில் இரக்க உணர்வு, மனித நேயம் வேண்டும். இன்று பலருக்கு அது இரண்டும் இல்லை! அதனால்தான் கால தேவனுக்கே பொறுக்காமல் பல இயற்கைச் சீரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  29. //// ரமேஷ் வெங்கடபதி said...
    ஈயாமல் சேர்த்த பணம் ஒட்டாது என்பது மிகவும் சரியான வாக்கு! இதோ என் அனுபவம்! நான் வியாபாரம் செய்து வந்த போது ஒரு பொருளின் விலை கிலோ106ரூ லாபமும் சேர்த்து! எங்களிடம் வாங்கிய ஒரு நிறுவனம் பர்சேஸ் ஆர்டர் அடிக்கும் போது தவறுதலாக கிலோ156ரூ என அடித்து அனுப்பி விட்டார்கள்.நாங்களும் கண்டுகொள்ளாமல் வியாபாரம் செய்து அடைந்த லாபம் கணிசமானது! சில வருடங்கள் சென்ற பின்,அந்த வியாபாரம் கால வெள்ளத்தில் முடங்கி விட்டு வெளியே வரும்போது, கணக்கிட்டுப் பார்க்கும்போது, வராக்கடன் அளவும், நாங்கள் அதிக கட்டணமிட்டு சம்பாதித்த பணத்தின் அளவும் மிகச்சரியாக இருந்தது!
    அன்று முதல் மிக நாணயமாகவே தொழிலிலும்,வாழ்க்கையிலும் நடந்து வருகிறோம்!///

    ஒளிவு மறைவு இன்றி உங்கள் கருத்தைப் பகிர்விட்ட மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. திரு கோபாலன் ஐயா அவர்கள் கூறிய அனுபவம் ஒரு நிமிடம் என்னை அதிர வைத்து விட்டது... நல்ல பல ஆத்மாக்களுடன் இருக்கும் போது அந்த ஆத்மாக்களின் பாதுகாப்பு வளையத்தில் நாமும் இருப்போம் என்பதை அறியாதோர்... விரைந்து வேகமாக சென்றவர்கள் நோகும் படி (இதுவும் ஒரு அப சகுனம் என்று எண்ணத் தோன்றும் அல்லவா அந்நேரம்) தடுத்து நிறுத்தியவர்களின் தவற்றிற்கு தான் உடனே புரிதல் கிடைத்திருக்கிறது. அதையும் அவர்கள் புரிந்து இருந்தால் நன்றாக இருக்கும். புரிந்து இருப்பார்கள்....
    தர்மம் தான் எத்தனையாகிறது...

    /////ஒரு மனிதனின் தர்மம் என்னவென்று நான் பத்து பக்கங்களுக்கு கூறினால், என்னை எல்லோரும் அடிக்க வருவார்கள் .
    என் உள்ளம் துடிக்கிறது எழுதுவதற்கு . அனால் , கைகள் தான் கட்டி போட்டு உள்ளன.
    கர்ணன் சரித்திரிரத்தில் நமக்கு தெரியாத தர்மம் நிறைய உள்ளது.////

    போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்" உங்களின் எண்ணம் அதுவானால் எழுதுங்கள் அரணாக நாங்கள் நிற்கிறோம் ஐயா!

    ReplyDelete
  31. //// Govindasamy said...
    அய்யா, அருமையான பதிவு. அற்புதமான சொல்லாடல். நெஞ்சைத் தொடும் தீர்க்கம். படித்து முடித்து சில நேரம் மௌனம் காத்தேன்.
    பழனியப்பன் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருள்வாராக.
    பதிவிற்கு நன்றிகள்./////

    பதிவைப் படித்துவிட்டு, மனம் நெகிழ்ந்த உங்களுக்கும் பழநிஅப்பன் எல்லா நன்மைகளையும் அருள்வான்!

    ReplyDelete
  32. அய்யா, இத்தகைய குணமுடையொரின் (ஈயாரின்)சாதக அம்சம் எப்படி யிருக்கும்?

    தீய பழக்கங்கள் உடையவரின் சாதக அம்சம் எப்படி யிருக்கும்?

    செலவாளிகளின் சாதக அம்சம் எப்படி யிருக்கும்?

    தயவு செய்து விளக்குங்கள்.

    ReplyDelete
  33. //// ரமேஷ் வெங்கடபதி said...
    ஈயாமல் சேர்த்த பணம் ஒட்டாது என்பது மிகவும் சரியான வாக்கு! இதோ என் அனுபவம்! நான் வியாபாரம் செய்து வந்த போது ஒரு பொருளின் விலை கிலோ106ரூ லாபமும் சேர்த்து! எங்களிடம் வாங்கிய ஒரு நிறுவனம் பர்சேஸ் ஆர்டர் அடிக்கும் போது தவறுதலாக கிலோ156ரூ என அடித்து அனுப்பி விட்டார்கள்.நாங்களும் கண்டுகொள்ளாமல் ...///

    ஆஹா! இது சத்தியமான வார்த்தை....

    பணம் மாத்திம் அல்ல....

    பரணியில் வேறெந்தப் பொருளையும்,
    பலகையில் அடுக்கிய வேறெந்தப் புத்தகத்தையும்
    பார்த்தாலும் அது சொல்லும் ஆசையின் காரணமாய்
    பிறரோடதையோ! பொதுவானதையோ! அல்லது
    அடுத்தவருக்கு உபயோகமாகக் கூடிய
    ஒன்றை சுய நலத்தோடு தனதாக்கி
    உபயோகமில்லாமல் இடத்தை
    அடைத்துக் கொண்டிருப்பதையோ...

    கூர்ந்துக் கவனித்தால் வாழ்வின் ஒவ்வொரு
    தருணத்தில் நிகழ்ந்த அதர்ம செயலின்
    வேதி வினையை (Immoral (chemical)reaction - ai கவனிக்கலாம்.

    ReplyDelete
  34. //காக்கை, குருவி பறவை களுக்கு உணவு கொடுத்து விட்டாவது நாம் உண்ணவேண்டும். இது காலம் காலமாக செய்து வருகின்ற செயல் . இன்று எத்தனை பேர் கடை பிடிகிறார்கள்//

    சி எஸ் சேகர் அவர்களே! கடைப் பிடிக்காமல் போனாலும் போகட்டும். கேலி கிண்டல் செய்யாமலாவது இருக்கலாம்.ஒரு திரைப்படத்தில் விவேக் ஒரு
    சுயமரியாதைக் கருத்துப் பேசும் சாஸ்திரிகளாக நடித்திருக்கிறார்.அதில் ஒரு காட்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தியை ஒரு அய்யர் மாமாவாக சித்தரித்து அவர் காக்கைக்கு உணவிடும் காட்சியைக் காண்பித்து, விவேக்கை இப்படி வசனம் பேச வைத்து இருப்பார்கள்."ஒரு ஏழை மனிதனுக்கு ஒரு கை உணவு கொடுக்க மாட்டீங்கோ! காக்காயுக்கு சாதம் வப்பீங்கோ..."

    ஏழை மனிதனுக்கும் ஒரு வேளை உணவு அளிக்கலாம்.அதற்காக காகத்திற்கும் அளிப்பது எவ்வாறு தவறாகும்? எல்லாப் பறவைகளும் வர‌ட்சி காலத்தில் இடம் மாறிவிட்டாலும், காகம் மனிதனுடன் வாழ்ந்து சுத்திகரிப்பு வேலையைச் செய்யும்.செத்த எலியை மட்டும் தின்றுகொள் என்று காகத்தை விடலாமா? நமக்கு சுகாதாரப்பணி செய்யும் காகத்திற்கு நல்ல உணவையும் நாம் அளிப்பது அவசியமல்லவா?

    காகத்தை சனி பகவானின் வாகனம் என்பது நமது புராணம். எனவே காகத்திற்கு உணவளிப்பது சனிப் பிரீதியும் ஆகும்.

    காகத்திற்கு உணவளிக்காமல் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடு, நம்மை அறியாமல் பிற‌ர் நலம் பேணல் என்ற நல்ல‌ குணத்தை நமக்கு இயல்பாகப் போதிக்கிறது.

    தங்களுடைய ஆக்கங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.பத்து பக்கங்களை 5 கட்டுரைகளாக்கித் தாருங்கள்.

    ReplyDelete
  35. ///csekar2930 said... என் உள்ளம் துடிக்கிறது எழுதுவதற்கு . அனால் , கைகள் தான் கட்டி போட்டு உள்ளன.///

    இது தகுமோ, இது முறையோ, இது தர்மம்தானோ?

    ReplyDelete
  36. "நாணயம்"மனிதருக்கு அவசியம்
    "காசு" என்ற சொல்லின் பொருள் குற்றம் என்பது
    அப்போ பணம் தேவை என்று எடுத்துக்கொள்வதா தேவை இல்லை என்று பொருள் கொள்வதா ?

    ReplyDelete
  37. பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
    தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை

    பதிவும் பின்னூட்டக் கருத்துக்களும் மிகவும் சிறப்பு இன்று

    அடுத்தவர்களுக்கு கொடுக்கிறார்களோ இல்லையோ, இல்லை ஐந்தறிவு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கொடுக்கிறார்களோ இல்லையோ, குறைந்தது பெற்றோர்களுக்கு கடைசி காலதில் காஞ்சி ஊத்தி ஆதரித்தால், கடமையைச் செய்தால் அதுவே பாராட்டத் தக்கது

    ReplyDelete
  38. ஐயா வணக்கம்,

    நல்ல பதிவு.இருப்பவனிடம் கொடுக்க மனமில்லை,கொடுக்க நினைப்பவனுக்கு பை காலியாக இருக்கிறது,இது தான் உண்மை. நீங்கள் சொல்லும் அவனவன் வாங்கிவந்த வரம் தானே. நம்மில் எத்தனை பேர் ஒரு பரதேசிக்கு ஒரு நேர உணவளிக்க மனமுவந்து ஒரு பத்து ரூபாய் தாளை நீட்டுகிறோமோ?என்றால் இல்லை.
    சில வித்தியாசமான பிறவிகளையும் நான் பார்த்து இருக்கிறேன் அதாவது செய்வது மொத்தம் மொல்லமாரித்தனம்,ஆனால் பட்டையும்,கொட்டையுமாகத் திரிவார்கள்.கேட்டால் நான் சிவனடிமை அடியாருக்குத் தொண்டு செய்வது தான் தன் கடன் என்று சொல்வர். நான் முகத்துக்கு நேரே கேட்டேன் அடுத்தவனைக் கெடுத்துவிட்டு இப்படித்திரிந்தால் கடவுள் மன்னிப்பாரா?.அதுக்கு அந்த அதிமேதாவி சொன்ன பதில் அதுக்காகத்தான் கோவில்,குளம் என்று சுற்றி தனது பாவத்தை சமன் செய்கிறாராம்.
    இன்னும் பாவத்திற்கும்,புண்ணியத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை.பாவமும்,புண்ணியமும் இணையாத இருகோடுகள் என்பது யாருக்கும் புரிவதில்லை.இதை வைத்து அதை எப்படிக்கழிக்க முடியும்.ரயில் தண்டவாளம் போல் எப்போதும் ஒன்று சேராது.
    எங்க‌ள் ஊரில் மிக‌ப்பெரிய‌ செல்வந்த‌ர்(செட்டியார்).அவ‌ர‌து தந்தையார் எங்க‌ள் ஊர் சுற்று வ‌ட்டார‌ப்ப‌குதி முழுவ‌தும் நிறைய ப‌ள்ளிக்கூட‌ம்,கோவில்க‌ள்,வாச‌க‌ சாலைக‌ள் எல்லாம் க‌ட்டிக்கொடுத்து இருக்கிறார்.இன்றும் க‌ல்வெட்டுக‌ள் எல்லாம் அவ‌ர‌து ம‌னைவி பெய‌ரில் அ.அ.சோம.செட்டிச்சி ஆச்சி உப‌ய‌ம் என்று இருக்கிற‌து.ஆனால் அவ‌ர‌து ஒரே ம‌க‌னுக்கு இதுவ‌ரை குழ‌ந்தைக‌ளேயில்லை.திரும‌ணமாகி ஒரு 40ஆண்டுக‌ளாவ‌து இருக்கும்.அவ‌ரும் ந‌ல்ல‌ ஈகையாள‌ர்,வேண்டாம் என‌ச்சொல்லும‌ள‌விற்கு இன்றும் செல்வ‌ம் சேர்கிற‌து.ஆனால் அதை ஆண்டு அனுப‌விக்க‌,பெய‌ர் சொல்ல‌ ஒரு குழ‌ந்தையில்லை.அவ‌ர்க‌ளுக்கும் எத்த‌னையோபேர் அறிவுரை சொல்லிவிட்ட‌ன‌ர்,சொந்த‌த்தில் தானே ஒரு குழந்தையாக‌ப் பார்த்து த‌த்துஎடுத்துக் கொள்ளுங்க‌ள் என்று அவ‌ர்க‌ளுக்கு ம‌ன‌மில்லை.
    இதை நாம் எந்த‌க் க‌ண‌க்கில் எடுத்துக்கொள்வ‌து.

    ReplyDelete
  39. வடமானிலங்களில் வாசலிலும்,முற்றத்திலும்,புழக்கடையிலும் எங்காவது தாம்பாளம் போன்ற அகன்ற பாத்திரங்களில்,தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள்! அருகில் சிறு பாத்திரங்களில் தானியங்கள்..பறவைகளுக்காக..!தரையில்,சுவர்களில் எச்சங்கள்..இருந்தபோதிலும் பறவைகளை விருந்தினர்களை விட மேன்மையுடன் நடத்துகின்றனர்!

    எங்கள் வீட்டிற்கு ஒரு காக்கை கூட்டம் தினமும் 3 வேளை வந்து கத்தி ரகளை செய்து,உணவு வாங்கி பகிர்ந்து சப்ப்பிட்டுவிட்டு தான் செல்லும்!சிந்துவதை சிட்டுக் குருவிகள் எடுத்துக் கொள்ளும்! ஆனால், இந்த காக்கைகளுக்கு ஒரு லொள்ளு என்னவெனில் அமாவாசை அன்றைக்கு மட்டும் எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளும்! வருந்தி அழைத்தாலும் மிக பிகு செய்து கொண்டுதான் வரும்.வந்தாலும் வடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விடும்!

    ReplyDelete
  40. /// Govindasamy said...
    அய்யா, இத்தகைய குணமுடையொரின் (ஈயாரின்)சாதக அம்சம் எப்படி யிருக்கும்?
    தீய பழக்கங்கள் உடையவரின் சாதக அம்சம் எப்படி யிருக்கும்?
    செலவாளிகளின் சாதக அம்சம் எப்படி யிருக்கும்?
    தயவு செய்து விளக்குங்கள்.////

    குணாதிசயங்களுக்குப் பலவிதமான அமைப்பு இருக்கிறது. தனகாரகன் 12ல் மறைந்தால் ஜாதகன் கருமியாக இருப்பான். லக்கினத்தில் மாந்தி இருந்தால் ஜாதகன் தன்னிச்சையானவன்.... இப்படி. பின்னொரு நாளில் அதை விவரமாக அலசுவோம்!

    ReplyDelete
  41. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    //// ரமேஷ் வெங்கடபதி said...
    ஈயாமல் சேர்த்த பணம் ஒட்டாது என்பது மிகவும் சரியான வாக்கு! இதோ என் அனுபவம்! நான் வியாபாரம் செய்து வந்த போது ஒரு பொருளின் விலை கிலோ106ரூ லாபமும் சேர்த்து! எங்களிடம் வாங்கிய ஒரு நிறுவனம் பர்சேஸ் ஆர்டர் அடிக்கும் போது தவறுதலாக கிலோ156ரூ என அடித்து அனுப்பி விட்டார்கள்.நாங்களும் கண்டுகொள்ளாமல் ...///
    ஆஹா! இது சத்தியமான வார்த்தை....
    பணம் மாத்திம் அல்ல....
    பரணியில் வேறெந்தப் பொருளையும்,
    பலகையில் அடுக்கிய வேறெந்தப் புத்தகத்தையும்
    பார்த்தாலும் அது சொல்லும் ஆசையின் காரணமாய்
    பிறரோடதையோ! பொதுவானதையோ! அல்லது
    அடுத்தவருக்கு உபயோகமாகக் கூடிய
    ஒன்றை சுய நலத்தோடு தனதாக்கி
    உபயோகமில்லாமல் இடத்தை
    அடைத்துக் கொண்டிருப்பதையோ...
    கூர்ந்துக் கவனித்தால் வாழ்வின் ஒவ்வொரு
    தருணத்தில் நிகழ்ந்த அதர்ம செயலின்
    வேதி வினையை (Immoral (chemical)reaction - ai கவனிக்கலாம்./////

    அதைத்தான் இப்படிச் சொல்வார்கள். அரசன் அன்றே கொல்வான். தர்மம் (தெய்வம்) நின்று கொல்லும்!

    ReplyDelete
  42. //// kmr.krishnan said...
    //காக்கை, குருவி பறவை களுக்கு உணவு கொடுத்து விட்டாவது நாம் உண்ணவேண்டும். இது காலம் காலமாக செய்து வருகின்ற செயல் . இன்று எத்தனை பேர் கடை பிடிகிறார்கள்//
    சி எஸ் சேகர் அவர்களே! கடைப் பிடிக்காமல் போனாலும் போகட்டும். கேலி கிண்டல் செய்யாமலாவது இருக்கலாம்.ஒரு திரைப்படத்தில் விவேக் ஒரு
    சுயமரியாதைக் கருத்துப் பேசும் சாஸ்திரிகளாக நடித்திருக்கிறார்.அதில் ஒரு காட்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தியை ஒரு அய்யர் மாமாவாக சித்தரித்து அவர் காக்கைக்கு உணவிடும் காட்சியைக் காண்பித்து, விவேக்கை இப்படி வசனம் பேச வைத்து இருப்பார்கள்."ஒரு ஏழை மனிதனுக்கு ஒரு கை உணவு கொடுக்க மாட்டீங்கோ! காக்காயுக்கு சாதம் வப்பீங்கோ..."
    ஏழை மனிதனுக்கும் ஒரு வேளை உணவு அளிக்கலாம்.அதற்காக காகத்திற்கும் அளிப்பது எவ்வாறு தவறாகும்? எல்லாப் பறவைகளும் வர‌ட்சி காலத்தில் இடம் மாறிவிட்டாலும், காகம் மனிதனுடன் வாழ்ந்து சுத்திகரிப்பு வேலையைச் செய்யும்.செத்த எலியை மட்டும் தின்றுகொள் என்று காகத்தை விடலாமா? நமக்கு சுகாதாரப்பணி செய்யும் காகத்திற்கு நல்ல உணவையும் நாம் அளிப்பது அவசியமல்லவா?
    காகத்தை சனி பகவானின் வாகனம் என்பது நமது புராணம். எனவே காகத்திற்கு உணவளிப்பது சனிப் பிரீதியும் ஆகும்.
    காகத்திற்கு உணவளிக்காமல் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடு, நம்மை அறியாமல் பிற‌ர் நலம் பேணல் என்ற நல்ல‌ குணத்தை நமக்கு இயல்பாகப் போதிக்கிறது.
    தங்களுடைய ஆக்கங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.பத்து பக்கங்களை 5 கட்டுரைகளாக்கித் தாருங்கள்.///

    ஆமாம். ஆமாம் லால்குடியார் சொன்னது போல செய்யுங்கள்!

    ReplyDelete
  43. //// தேமொழி said...
    ///csekar2930 said... என் உள்ளம் துடிக்கிறது எழுதுவதற்கு . அனால் , கைகள் தான் கட்டி போட்டு உள்ளன.///
    இது தகுமோ, இது முறையோ, இது தர்மம்தானோ?////


    யார் கையை யார் கட்டிப்போட முடியும்? இந்தியன் பீனல் கோடெல்லாம் எதற்கு இருக்கிறது? மனித உரிமைக் கழகமெல்லாம் எதற்கு இருக்கிறது?

    ReplyDelete
  44. ////தேமொழி said...
    "நாணயம்"மனிதருக்கு அவசியம்
    "காசு" என்ற சொல்லின் பொருள் குற்றம் என்பது
    அப்போ பணம் தேவை என்று எடுத்துக்கொள்வதா தேவை இல்லை என்று பொருள் கொள்வதா ?/////

    அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை
    பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!
    பொருளை (பணத்தை) வேண்டாம் என்று சொல்வார்களா?
    இப்போது கேள்வி இதுதான். தேவைக்கு மேல் உள்ள பணத்தை என்ன செய்வது?
    பதிலை நீங்களே சொல்லுங்கள்!

    ReplyDelete
  45. //// தேமொழி said...
    பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
    தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
    பதிவும் பின்னூட்டக் கருத்துக்களும் மிகவும் சிறப்பு இன்று
    அடுத்தவர்களுக்கு கொடுக்கிறார்களோ இல்லையோ, இல்லை ஐந்தறிவு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கொடுக்கிறார்களோ இல்லையோ, குறைந்தது பெற்றோர்களுக்கு கடைசி காலதில் காஞ்சி ஊத்தி ஆதரித்தால், கடமையைச் செய்தால் அதுவே பாராட்டத் தக்கது////

    கரெக்ட். அதுதான் முக்கியமான மேட்டர். எனக்குத் தெரிந்து ஒரு அந்தனர் வீட்டுப் பெண்மணி இங்கே கோவையில் இருக்கிறார். அவருடைய 3 குழந்தைகளும் வெளி நாட்டில் பெரும் வசதியுடன் உள்ளார்கள். ஆனால் யாரும் தங்கள அன்னையைக் கூட்டிக்கொண்டு சென்று உடன் வைத்துக்கொள்ள வில்லை. அந்தப் பெண்மணி இப்போது பாதுகாப்புக் காரணம் கருதி ஒரு முதியோர் இல்லத்தில் பணம் கட்டித் த்ங்கியுள்ளார். வயதான காலத்தில் ஆதரவாகப் பேசக் கூட அந்தத் தாய்க்கு ஒரு ஆதரவான பிள்ளை இல்லை

    ReplyDelete
  46. //// Rajaram said...
    ஐயா வணக்கம்,
    நல்ல பதிவு.இருப்பவனிடம் கொடுக்க மனமில்லை,கொடுக்க நினைப்பவனுக்கு பை காலியாக இருக்கிறது,இது தான் உண்மை. நீங்கள் சொல்லும் அவனவன் வாங்கிவந்த வரம் தானே. நம்மில் எத்தனை பேர் ஒரு பரதேசிக்கு ஒரு நேர உணவளிக்க மனமுவந்து ஒரு பத்து ரூபாய் தாளை நீட்டுகிறோமோ?என்றால் இல்லை.
    சில வித்தியாசமான பிறவிகளையும் நான் பார்த்து இருக்கிறேன் அதாவது செய்வது மொத்தம் மொல்லமாரித்தனம்,ஆனால் பட்டையும்,கொட்டையுமாகத் திரிவார்கள்.கேட்டால் நான் சிவனடிமை அடியாருக்குத் தொண்டு செய்வது தான் தன் கடன் என்று சொல்வர். நான் முகத்துக்கு நேரே கேட்டேன் அடுத்தவனைக் கெடுத்துவிட்டு இப்படித்திரிந்தால் கடவுள் மன்னிப்பாரா?.அதுக்கு அந்த அதிமேதாவி சொன்ன பதில் அதுக்காகத்தான் கோவில்,குளம் என்று சுற்றி தனது பாவத்தை சமன் செய்கிறாராம்.
    இன்னும் பாவத்திற்கும்,புண்ணியத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை.பாவமும்,புண்ணியமும் இணையாத இருகோடுகள் என்பது யாருக்கும் புரிவதில்லை.இதை வைத்து அதை எப்படிக்கழிக்க முடியும்.ரயில் தண்டவாளம் போல் எப்போதும் ஒன்று சேராது.
    எங்க‌ள் ஊரில் மிக‌ப்பெரிய‌ செல்வந்த‌ர்(செட்டியார்).அவ‌ர‌து தந்தையார் எங்க‌ள் ஊர் சுற்று வ‌ட்டார‌ப்ப‌குதி முழுவ‌தும் நிறைய ப‌ள்ளிக்கூட‌ம்,கோவில்க‌ள்,வாச‌க‌ சாலைக‌ள் எல்லாம் க‌ட்டிக்கொடுத்து இருக்கிறார்.இன்றும் க‌ல்வெட்டுக‌ள் எல்லாம் அவ‌ர‌து ம‌னைவி பெய‌ரில் அ.அ.சோம.செட்டிச்சி ஆச்சி உப‌ய‌ம் என்று இருக்கிற‌து.ஆனால் அவ‌ர‌து ஒரே ம‌க‌னுக்கு இதுவ‌ரை குழ‌ந்தைக‌ளேயில்லை.திரும‌ணமாகி ஒரு 40ஆண்டுக‌ளாவ‌து இருக்கும்.அவ‌ரும் ந‌ல்ல‌ ஈகையாள‌ர்,வேண்டாம் என‌ச்சொல்லும‌ள‌விற்கு இன்றும் செல்வ‌ம் சேர்கிற‌து.ஆனால் அதை ஆண்டு அனுப‌விக்க‌,பெய‌ர் சொல்ல‌ ஒரு குழ‌ந்தையில்லை.அவ‌ர்க‌ளுக்கும் எத்த‌னையோபேர் அறிவுரை சொல்லிவிட்ட‌ன‌ர்,சொந்த‌த்தில் தானே ஒரு குழந்தையாக‌ப் பார்த்து த‌த்துஎடுத்துக் கொள்ளுங்க‌ள் என்று அவ‌ர்க‌ளுக்கு ம‌ன‌மில்லை.இதை நாம் எந்த‌க் க‌ண‌க்கில் எடுத்துக்கொள்வ‌து.//////

    இப்போது எல்லோர் வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான். தத்துக் கொடுப்பத்ற்கு யாரும் தயாராக இல்லை. அதுதான் உண்மை!

    ReplyDelete
  47. //// ரமேஷ் வெங்கடபதி said...
    வடமானிலங்களில் வாசலிலும்,முற்றத்திலும்,புழக்கடையிலும் எங்காவது தாம்பாளம் போன்ற அகன்ற பாத்திரங்களில்,தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள்! அருகில் சிறு பாத்திரங்களில் தானியங்கள்..பறவைகளுக்காக..!தரையில்,சுவர்களில் எச்சங்கள்..இருந்தபோதிலும் பறவைகளை விருந்தினர்களை விட மேன்மையுடன் நடத்துகின்றனர்!
    எங்கள் வீட்டிற்கு ஒரு காக்கை கூட்டம் தினமும் 3 வேளை வந்து கத்தி ரகளை செய்து,உணவு வாங்கி பகிர்ந்து சப்ப்பிட்டுவிட்டு தான் செல்லும்!சிந்துவதை சிட்டுக் குருவிகள் எடுத்துக் கொள்ளும்! ஆனால், இந்த காக்கைகளுக்கு ஒரு லொள்ளு என்னவெனில் அமாவாசை அன்றைக்கு மட்டும் எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளும்! வருந்தி அழைத்தாலும் மிக பிகு செய்து கொண்டுதான் வரும்.வந்தாலும் வடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விடும்!////

    அமாவாசை அன்று அத்ற்குத் திருவிழா.அன்றைக்கு மட்டுமே காக்கைக்கு உணவு படைப்பதற்கு ஒரு கூட்டம் தயாராக இருக்கும். அதனால்தான் அன்றை தினம் காக்கைகளுக்குக் கொண்டாட்டமாகிவிடுகிறது. போகட்டும் விட்டுவிடுவோம்!

    ReplyDelete
  48. // எனக்கு வாய்ப்போ, இடமோ இல்லை. ஒழியட்டும் என்று வந்து விட்டேன். இத்தகையவர்களை அந்த வேங்கடேசப் பெருமாள் உடனே தன்னுடன் சேர்த்துக் கொண்டு எல்லா செல்வங்களையும் வாரி வழங்கிவிடுவாரா? அல்லது இதையெல்லாம் புறக்கணித்து விட்டு, பிறருக்குச் சேவை செய்யும் ஆட்களுக்கு நற்கதி வழங்குவாரா? எனக்கு வீடு கட்டிய பொறியாளர் கிணறு தோண்டும்போது சொன்னார், மனதில் ஈரம் இருந்தால் உன் கிறணற்றிலும் ஈரம் இருக்கும் என்று. என் கிணற்றில் 18 அடியில் நல்ல ஊற்று நீர் கிடைத்தது.// :)
    அய்யா, த‌ங்க‌ளின் வாய்மொழி கெட்டாலும் மேன்ம‌க்க‌ள் மேன்ம‌க்க‌ளே என்ப‌தை சொல்கின்றது.

    ReplyDelete
  49. முகப்பில் உள்ள கவிதை சூப்பர்.

    இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் நன்றாக இருந்தால் பணம் வரும். இரண்டாம் வீடு, ஆறாம் வீடு, பத்தாம் வீடு ஆகிய 3 வீடுகள் நன்றாக இருந்தாலும் பணம் வரும்.//

    எல்லாமே நல்லாத்தான் இருக்கு, இருந்தும் தேவைக்கு மட்டுமே பணம் வருகிறது. அதுவே போதும் என்ற திருப்தியுடன் நான் இருக்கிறேன். இரண்டில் தனகாரகன் குரு (அவர் விரயாதிபதி ஜாதகப்படி), இரண்டின் அதிபதி அந்த வீட்டிற்கு ஐந்தில் / திரிகோணத்தில், ஆறு/ஒன்பது அதிபதியுடன் (இருவரும் ஒருவரே). இந்த கூட்டணிக்கு ஸ்ட்ராங்கான குருவின் ஐந்தாம் பார்வை. ஆறில் சனி இருப்பதும் பணம் வருவதற்கான நல்ல அமைப்பு. பத்தாம் வீட்டு அதி கேந்திரத்தில் இருந்து நேரடியாக தன் வீட்டைப்பார்வையில் வைத்துள்ளார். பதினொன்றில் சந்/ராகு சேர்ந்து நீசபங்க ராஜயோக அமைப்பு. இருந்தும் குட்டையைக்குழப்புவது எந்த அமைப்பு என்று புரியவில்லை.

    தாத்தா கணித்து சொன்னது ராகு தசையில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று (ஒரு கண்டமும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்). ஏழாவது மாரக தசையாக வருவதால் சொல்லியிருக்கலாம். ஆனா அது வரும் ஒரு 52 வயதில். அப்போது டீல் பண்ணிக்கொள்ளலாம்.

    ReplyDelete
  50. ஒரு மனிதனின் தர்மம் என்னவென்று நான் பத்து பக்கங்களுக்கு கூறினால், என்னை எல்லோரும் அடிக்க வருவார்கள் .
    என் உள்ளம் துடிக்கிறது எழுதுவதற்கு . அனால் , கைகள் தான் கட்டி போட்டு உள்ளன.
    கர்ணன் சரித்திரிரத்தில் நமக்கு தெரியாத தர்மம் நிறைய உள்ளது.//

    நானும் படிக்க ஆவலாக இருக்கிறேன், எழுதுங்கள். முக்கியமாக கர்ணன் சரித்திரத்தில் தெரியாத தர்மங்கள்.

    ReplyDelete
  51. பதிவு அருமை, வாத்தியாரின் மனவளக்கட்டுரைகளுக்குக் கிடைக்கும் வரவேற்புக்கு இன்றைய பின்னூட்டங்களே சாட்சி.

    ReplyDelete
  52. இல்லை விசுவநாதன். அந்த விடுதிக்கு வேண்டிய அளவு தர்மநிதி உள்ளது. மேலும் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. ஆகவே யாரும் சிரமம் கொள்ளல் வேண்டாம். அங்கு செல்லும் வாய்ப்புக்கிடைக்கும்போது மட்டும், முடிந்த தொகையைக் கொடுக்கலாம்.//

    யதார்த்தமான பதில்.

    ReplyDelete
  53. எங்களிடம் வாங்கிய ஒரு நிறுவனம் பர்சேஸ் ஆர்டர் அடிக்கும் போது தவறுதலாக கிலோ156ரூ என அடித்து அனுப்பி விட்டார்கள்.நாங்களும் கண்டுகொள்ளாமல் வியாபாரம் செய்து அடைந்த லாபம் கணிசமானது! சில வருடங்கள் சென்ற பின்,அந்த வியாபாரம் கால வெள்ளத்தில் முடங்கி விட்டு வெளியே வரும்போது, கணக்கிட்டுப் பார்க்கும்போது, வராக்கடன் அளவும், நாங்கள் அதிக கட்டணமிட்டு சம்பாதித்த பணத்தின் அளவும் மிகச்சரியாக இருந்தது!//

    இன்றைய பின்னூட்டங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய பின்னூட்டம். இவ்வளவு வெளிப்படையாக பொது இடத்தில் போலி கௌரவம் பார்க்காமல் உண்மையை எழுதியது, கிரேட்!

    ReplyDelete
  54. வடமானிலங்களில் வாசலிலும்,முற்றத்திலும்,புழக்கடையிலும் எங்காவது தாம்பாளம் போன்ற அகன்ற பாத்திரங்களில்,தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள்! அருகில் சிறு பாத்திரங்களில் தானியங்கள்..பறவைகளுக்காக..!//

    வீட்டில் வைப்பது மட்டும் அல்ல. இங்கு தில்லியில் இரண்டு மூன்று சாலைகள் கூடுமிடத்திலும், யமுனையின் மேல் கட்டப்பட்ட பாலத்திலும் தினமும் காகம் / புறா சாப்பிடுவதற்காக தானியங்களைப் போட்டுவிட்டுப்போவதைப் பார்க்கிறேன். இதில் ஸ்கூட்டர் / காரில் வருபவர்களும் அடக்கம். பஸ் ஹாரன் சத்தம் கேட்டால் எல்லாம் கூட்டமாக மேலே பறந்துவிட்டு திரும்ப கீழே சாப்பிட வரும் காட்சி அழகாக இருக்கும். இதற்காகவே மளிகைக்கடையில் மாத சாமான் வாங்கும்போது கம்பு / சோளம் சேர்த்து வாங்குவார்கள் இங்கிருப்பவர்கள். நானும் தினமும் மொட்டைமாடியில் காகம் / புறா / அணிலுக்காக சாதம் வைக்கும் வழக்கமுண்டு.

    ReplyDelete
  55. வணக்கம் ஐயா,
    இன்றைய ஆக்கமும்,பின்னூட்டங்களும் மிக அருமை...அனைத்து பின்னூட்டங்களிலும் நல்ல பல கருத்துக்களை அறிந்து கொள்ள முடிந்தது...நன்றி...

    பிள்ளைகளை வளர்க்கும் போது பணத்தின் அருமையை விட குணத்தின் மேன்மையை பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து வளர்த்தால் 'முதியோர் இல்லங்கள்' எதிர்காலத்தில் மறைந்து போகும்...

    சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்தேன்...ஒரு இளைஞர் பகுதி நேர வேலையாக மிகவும் சாதாரண வேலையே பார்க்கும் அவர்,மீதி நேரம் செய்யும் வேலை பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களையும்,நோய்வாய்ப்பட்ட வயதானவர்களையும் தன் சொந்த செலவில் மருத்துவ உதவியையும்,உணவையும் அளித்து உதவும் குணத்தை என்னவென்று சொல்லி பாராட்டுவது...அதோடு நில்லாமல் நோய்வாய்பட்ட முதியவர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதி சடங்கும் செய்கின்றார்...அவர் தான் சம்பாதிக்கும் குறைந்த பணத்தைக் கொண்டே எவ்வளவு பெரிய சேவை செய்கிறார்,இன்னும் பணமிருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்!!!...
    இவரை போன்றவர்களுக்கு பணத்தைக் கொடுக்காமல் கடவுள் யாருக்கும் உதவ எண்ணாத கருமிகளுக்கெல்லாம் ஏன் கடவுள் பணத்தை கொடுக்கின்றார்? என்று எண்ணத் தோன்றுகிறது...

    ReplyDelete
  56. //என் உள்ளம் துடிக்கிறது எழுதுவதற்கு . அனால் , கைகள் தான் கட்டி போட்டு உள்ளன.
    கர்ணன் சரித்திரிரத்தில் நமக்கு தெரியாத தர்மம் நிறைய உள்ளது.
    நேரம் வரும் காத்திருப்போம் எழுதுவதற்கு.////

    தங்களுக்குத் தெரியாததல்ல, 'நன்றே செய்க அதுவும் இன்றே செய்க' என்ற கூற்று. தயவு செய்து எழுதுங்கள். தர்மம் தெரிந்தவர்களே அதைப்பற்றிச் சொல்லத் தயங்கினால் எதிர்காலச் சந்ததியினரின் நிலை என்ன?. சகோதரர் திரு.ஆலாசியம் அவர்கள் சொன்னது போல, இத்தனை தோழர்கள் தோள் கொடுக்க இருக்கிறோம்.

    //அடுத்தவர்களுக்கு கொடுக்கிறார்களோ இல்லையோ, இல்லை ஐந்தறிவு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கொடுக்கிறார்களோ இல்லையோ, குறைந்தது பெற்றோர்களுக்கு கடைசி காலதில் காஞ்சி ஊத்தி ஆதரித்தால், கடமையைச் செய்தால் அதுவே பாராட்டத் தக்கது//.

    கஞ்சியாவது? இஞ்சியிலே மஞ்சள் எடுக்கிற கஞ்சத்தனமெல்லாம் பிச்சை வாங்கணும். ஒரு உண்மைச் சம்பவம். என் அண்ணன் வீட்டில் சமையல் செய்யும் அம்மாவுக்கு புடவை கொடுத்தபோது, 'நான் நாளை வந்து வாங்கிக்
    கொள்கிறேன்' என்றார். காரணம், அன்று அவர் பெண் (நல்ல வங்கிப் பணியில் இருப்பவர்) வீட்டுக்கு வருவாராம். அம்மாவிடம் நல்ல புடவை இருந்தால், 'ஆபீஸிற்குக் கட்டிக் கொள்ளக் கொடு' என்று வாங்கிப் போய்விடுவாராம் (சிலருக்குப் பெண்குழந்தைகள் தான் பாசமாக இருக்கும் என்ற கருத்து உண்டு). பையன்? காஸ் இணைப்பைப் பறித்துக் கொண்டு,'
    உனக்கும் அப்பாவுக்கும் சமைக்க எதுக்குக் காஸ்? வேணுமானா புதுசா அப்ளை
    பண்ணி வாங்கிக்க' என்று தனிக்குடித்தனம் போய்விட்டான். கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், இவர் சமையல் வேலை செய்ய வருகிறார். குழந்தைகளை ' மக்கட் செல்வம்' என்பது, அவர்கள் நம் மீது வைக்கும் பாசத்தின் நிலையாமையைச் சொல்லவா?

    ReplyDelete
  57. எரிகிற வீட்டில் உள்ள பொருட்களை எவ்வளவு வேகமாக வெளியேற்றுகிறோமோ , அவ்வளவு துடிப்போடு வேகமாக தர்மம் செய்ய வேண்டும் என்று தன் சிஷ்யர்களிடம் சொன்னார் ராம கிருஷ்ண பரமஹம்சர் ... நல்ல பதிவு அய்யா !

    அய்யா , பண வரவு நன்றாக இருக்க இரண்டாம் வீடும் , பதினொன்றாம் வீடும் முக்கியம் என்கிறோம் . ஆனால் ஒருவன் வாழ்வில் இன்பம் அதிகம் இருக்குமா இல்லை துன்பம் அதிகம் இருக்குமா என்று கணக்கிட அஷ்டவர்க்க பரல்களை கூட்டும் போது போன்ற 1,4,5,7,9,10 ஸ்தானங்களை மட்டும் எண்ணிக்கைக்கு எடுத்து கொள்கிறோம் . பண வரவை தரும் 2,11 ஸ்தானங்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை ? பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை என நம் தாத்தா சொன்னது போல வாழ்வின் மகிழ்ச்சியை பண வரவை தரும் இந்த வீடுகளும் தீர்மானிக்கின்றன தானே ?

    ReplyDelete
  58. //// மகாலிங்கம் said...
    // எனக்கு வாய்ப்போ, இடமோ இல்லை. ஒழியட்டும் என்று வந்து விட்டேன். இத்தகையவர்களை அந்த வேங்கடேசப் பெருமாள் உடனே தன்னுடன் சேர்த்துக் கொண்டு எல்லா செல்வங்களையும் வாரி வழங்கிவிடுவாரா? அல்லது இதையெல்லாம் புறக்கணித்து விட்டு, பிறருக்குச் சேவை செய்யும் ஆட்களுக்கு நற்கதி வழங்குவாரா? எனக்கு வீடு கட்டிய பொறியாளர் கிணறு தோண்டும்போது சொன்னார், மனதில் ஈரம் இருந்தால் உன் கிறணற்றிலும் ஈரம் இருக்கும் என்று. என் கிணற்றில் 18 அடியில் நல்ல ஊற்று நீர் கிடைத்தது.// :)
    அய்யா, த‌ங்க‌ளின் வாய்மொழி கெட்டாலும் மேன்ம‌க்க‌ள் மேன்ம‌க்க‌ளே என்ப‌தை சொல்கின்றது./////

    ஆமாம். இந்த வயதிலும் தளாராமல் அவர் நம் பதிவுகளைப் படித்து பின்னூட்டங்கள் இடுகிறார் பாருங்கள் - அதற்கே ஒரு மேன்மையான குணம் வேண்டும். அவரிடம் அது இருக்கிறது!

    ReplyDelete
  59. //// Uma said...
    முகப்பில் உள்ள கவிதை சூப்பர்.
    இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் நன்றாக இருந்தால் பணம் வரும். இரண்டாம் வீடு, ஆறாம் வீடு, பத்தாம் வீடு ஆகிய 3 வீடுகள் நன்றாக இருந்தாலும் பணம் வரும்.//
    எல்லாமே நல்லாத்தான் இருக்கு, இருந்தும் தேவைக்கு மட்டுமே பணம் வருகிறது. அதுவே போதும் என்ற திருப்தியுடன் நான் இருக்கிறேன். இரண்டில் தனகாரகன் குரு (அவர் விரயாதிபதி ஜாதகப்படி), இரண்டின் அதிபதி அந்த வீட்டிற்கு ஐந்தில் / திரிகோணத்தில், ஆறு/ஒன்பது அதிபதியுடன் (இருவரும் ஒருவரே). இந்த கூட்டணிக்கு ஸ்ட்ராங்கான குருவின் ஐந்தாம் பார்வை. ஆறில் சனி இருப்பதும் பணம் வருவதற்கான நல்ல அமைப்பு. பத்தாம் வீட்டு அதி கேந்திரத்தில் இருந்து நேரடியாக தன் வீட்டைப்பார்வையில் வைத்துள்ளார். பதினொன்றில் சந்/ராகு சேர்ந்து நீசபங்க ராஜயோக அமைப்பு. இருந்தும் குட்டையைக்குழப்புவது எந்த அமைப்பு என்று புரியவில்லை.
    தாத்தா கணித்து சொன்னது ராகு தசையில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று (ஒரு கண்டமும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்). ஏழாவது மாரக தசையாக வருவதால் சொல்லியிருக்கலாம். ஆனா அது வரும் ஒரு 52 வயதில். அப்போது டீல் பண்ணிக்கொள்ளலாம்./////

    52 வயதில் நீங்கள் இன்னும் ஸ்ட்ராங் ஆகிவிடுவீர்கள். டீல் செய்வதில் பிரச்சினை இருக்காது!:-))))

    ReplyDelete
  60. /// Uma said...
    ஒரு மனிதனின் தர்மம் என்னவென்று நான் பத்து பக்கங்களுக்கு கூறினால், என்னை எல்லோரும் அடிக்க வருவார்கள் .
    என் உள்ளம் துடிக்கிறது எழுதுவதற்கு . அனால் , கைகள் தான் கட்டி போட்டு உள்ளன.
    கர்ணன் சரித்திரிரத்தில் நமக்கு தெரியாத தர்மம் நிறைய உள்ளது.//
    நானும் படிக்க ஆவலாக இருக்கிறேன், எழுதுங்கள். முக்கியமாக கர்ணன் சரித்திரத்தில் தெரியாத தர்மங்கள்./////

    தெரியாத சரித்திரத்தை அவர் சொன்னால், நாம் தெரிந்து கொள்ளலாம். எழுதுவார் என்று எண்ணுகிறேன்!

    ReplyDelete
  61. //// Uma said...
    பதிவு அருமை, வாத்தியாரின் மனவளக்கட்டுரைகளுக்குக் கிடைக்கும் வரவேற்புக்கு இன்றைய பின்னூட்டங்களே சாட்சி./////

    எடுத்துச் சொன்ன மேன்மைக்கு நன்றி. நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து எழுதுகிறேன்!

    ReplyDelete
  62. //// Uma said...
    இல்லை விசுவநாதன். அந்த விடுதிக்கு வேண்டிய அளவு தர்மநிதி உள்ளது. மேலும் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. ஆகவே யாரும் சிரமம் கொள்ளல் வேண்டாம். அங்கு செல்லும் வாய்ப்புக்கிடைக்கும்போது மட்டும், முடிந்த தொகையைக் கொடுக்கலாம்.//
    யதார்த்தமான பதில்./////

    அதுதான் உணமை. உண்மை எப்போதுமே யதார்த்தமாகத்தான் இருக்கும்!

    ReplyDelete
  63. //// Uma said...
    எங்களிடம் வாங்கிய ஒரு நிறுவனம் பர்சேஸ் ஆர்டர் அடிக்கும் போது தவறுதலாக கிலோ156ரூ என அடித்து அனுப்பி விட்டார்கள்.நாங்களும் கண்டுகொள்ளாமல் வியாபாரம் செய்து அடைந்த லாபம் கணிசமானது! சில வருடங்கள் சென்ற பின்,அந்த வியாபாரம் கால வெள்ளத்தில் முடங்கி விட்டு வெளியே வரும்போது, கணக்கிட்டுப் பார்க்கும்போது, வராக்கடன் அளவும், நாங்கள் அதிக கட்டணமிட்டு சம்பாதித்த பணத்தின் அளவும் மிகச்சரியாக இருந்தது!//
    இன்றைய பின்னூட்டங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய பின்னூட்டம். இவ்வளவு வெளிப்படையாக பொது இடத்தில் போலி கௌரவம் பார்க்காமல் உண்மையை எழுதியது, கிரேட்!/////

    உண்மைதான். உங்களின் பாராட்டு முக்கியமானது. அவ்ரைப் போன்றவர்களை ஊக்குவிக்கும்!

    ReplyDelete
  64. //// R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    இன்றைய ஆக்கமும்,பின்னூட்டங்களும் மிக அருமை...அனைத்து பின்னூட்டங்களிலும் நல்ல பல கருத்துக்களை அறிந்து கொள்ள முடிந்தது...நன்றி...
    பிள்ளைகளை வளர்க்கும் போது பணத்தின் அருமையை விட குணத்தின் மேன்மையை பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து வளர்த்தால் 'முதியோர் இல்லங்கள்' எதிர்காலத்தில் மறைந்து போகும்...
    சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்தேன்...ஒரு இளைஞர் பகுதி நேர வேலையாக மிகவும் சாதாரண வேலையே பார்க்கும் அவர்,மீதி நேரம் செய்யும் வேலை பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களையும்,நோய்வாய்ப்பட்ட வயதானவர்களையும் தன் சொந்த செலவில் மருத்துவ உதவியையும்,உணவையும் அளித்து உதவும் குணத்தை என்னவென்று சொல்லி பாராட்டுவது...அதோடு நில்லாமல் நோய்வாய்பட்ட முதியவர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதி சடங்கும் செய்கின்றார்...அவர் தான் சம்பாதிக்கும் குறைந்த பணத்தைக் கொண்டே எவ்வளவு பெரிய சேவை செய்கிறார்,இன்னும் பணமிருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்!!!...
    இவரை போன்றவர்களுக்கு பணத்தைக் கொடுக்காமல் கடவுள் யாருக்கும் உதவ எண்ணாத கருமிகளுக்கெல்லாம் ஏன் கடவுள் பணத்தை கொடுக்கின்றார்? என்று எண்ணத் தோன்றுகிறது.../////

    God is only a silent spectator அவர் உங்கள் புண்ணியத்திற்கும் வரமாட்டார். பாவத்திற்கும் வரமாட்டார். காலதேவனின் கர்ம வினை நிர்வாகம் அதைப் பார்த்துக்கொள்ளூம்!

    ReplyDelete
  65. //// Parvathy Ramachandran said...
    //என் உள்ளம் துடிக்கிறது எழுதுவதற்கு . அனால் , கைகள் தான் கட்டி போட்டு உள்ளன.
    கர்ணன் சரித்திரிரத்தில் நமக்கு தெரியாத தர்மம் நிறைய உள்ளது.
    நேரம் வரும் காத்திருப்போம் எழுதுவதற்கு.////
    தங்களுக்குத் தெரியாததல்ல, 'நன்றே செய்க அதுவும் இன்றே செய்க' என்ற கூற்று. தயவு செய்து எழுதுங்கள். தர்மம் தெரிந்தவர்களே அதைப்பற்றிச் சொல்லத் தயங்கினால் எதிர்காலச் சந்ததியினரின் நிலை என்ன?. சகோதரர் திரு.ஆலாசியம் அவர்கள் சொன்னது போல, இத்தனை தோழர்கள் தோள் கொடுக்க இருக்கிறோம்.
    //அடுத்தவர்களுக்கு கொடுக்கிறார்களோ இல்லையோ, இல்லை ஐந்தறிவு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கொடுக்கிறார்களோ இல்லையோ, குறைந்தது பெற்றோர்களுக்கு கடைசி காலதில் காஞ்சி ஊத்தி ஆதரித்தால், கடமையைச் செய்தால் அதுவே பாராட்டத் தக்கது//.
    கஞ்சியாவது? இஞ்சியிலே மஞ்சள் எடுக்கிற கஞ்சத்தனமெல்லாம் பிச்சை வாங்கணும். ஒரு உண்மைச் சம்பவம். என் அண்ணன் வீட்டில் சமையல் செய்யும் அம்மாவுக்கு புடவை கொடுத்தபோது, 'நான் நாளை வந்து வாங்கிக் கொள்கிறேன்' என்றார். காரணம், அன்று அவர் பெண் (நல்ல வங்கிப் பணியில் இருப்பவர்) வீட்டுக்கு வருவாராம். அம்மாவிடம் நல்ல புடவை இருந்தால், 'ஆபீஸிற்குக் கட்டிக் கொள்ளக் கொடு' என்று வாங்கிப் போய்விடுவாராம் (சிலருக்குப் பெண்குழந்தைகள் தான் பாசமாக இருக்கும் என்ற கருத்து உண்டு). பையன்? காஸ் இணைப்பைப் பறித்துக் கொண்டு,'
    உனக்கும் அப்பாவுக்கும் சமைக்க எதுக்குக் காஸ்? வேணுமானா புதுசா அப்ளை பண்ணி வாங்கிக்க' என்று தனிக்குடித்தனம் போய்விட்டான். கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், இவர் சமையல் வேலை செய்ய வருகிறார். குழந்தைகளை ' மக்கட் செல்வம்' என்பது, அவர்கள் நம் மீது வைக்கும் பாசத்தின் நிலையாமையைச் சொல்லவா?/////

    அன்பு, பாசம், நன்றி, விசுவாசம் உள்ள குழந்தைகள் உண்மையான மக்கட் செல்வம்! மற்ற்தெல்லாம் தொல்லைகள்!

    ReplyDelete
  66. //// naren said...
    எரிகிற வீட்டில் உள்ள பொருட்களை எவ்வளவு வேகமாக வெளியேற்றுகிறோமோ , அவ்வளவு துடிப்போடு வேகமாக தர்மம் செய்ய வேண்டும் என்று தன் சிஷ்யர்களிடம் சொன்னார் ராம கிருஷ்ண பரமஹம்சர் ... நல்ல பதிவு அய்யா !
    அய்யா , பண வரவு நன்றாக இருக்க இரண்டாம் வீடும் , பதினொன்றாம் வீடும் முக்கியம் என்கிறோம் . ஆனால் ஒருவன் வாழ்வில் இன்பம் அதிகம் இருக்குமா இல்லை துன்பம் அதிகம் இருக்குமா என்று கணக்கிட அஷ்டவர்க்க பரல்களை கூட்டும் போது போன்ற 1,4,5,7,9,10 ஸ்தானங்களை மட்டும் எண்ணிக்கைக்கு எடுத்து கொள்கிறோம் . பண வரவை தரும் 2,11 ஸ்தானங்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை ? பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை என நம் தாத்தா சொன்னது போல வாழ்வின் மகிழ்ச்சியை பண வரவை தரும் இந்த வீடுகளும் தீர்மானிக்கின்றன தானே ?/////

    கேந்திர திரிகோணங்களில் எல்லாம் அடக்கம் சுவாமி! அதனால் மற்றவற்றிற்கு அக்கால முனிவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
    மெத்தையை வாங்கினேன்
    தூக்கத்தை வாங்கலே!
    ஒருபாடலின் வரிகள்
    தூக்கம்தான் முக்கியம். மெத்தை முக்கியமில்லை!

    ReplyDelete
  67. ///இல்லை விசுவநாதன். அந்த விடுதிக்கு வேண்டிய அளவு தர்மநிதி உள்ளது. மேலும் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. ஆகவே யாரும் சிரமம் கொள்ளல் வேண்டாம். அங்கு செல்லும் வாய்ப்புக்கிடைக்கும்போது மட்டும், முடிந்த தொகையைக் கொடுக்கலாம்....///

    மன்னிக்க
    அங்கு நிதியில்லை என்பதற்காக அதனை குறிப்பிடவில்லை..

    அதிக நிதி யிருக்கிறது என்பதனை
    நம் ஊர் மக்கள் நாம் அறியமாட்டோமா

    நாம்
    மண்னின் மைந்தர்கள் தானே..


    தகவல் தந்தும் தருபவர் நான் என சொல்லும் மனம் வர வேண்டும்.

    அதற்காகத்தான் இதனை
    அங்கே சொன்னது...

    இதைப் பார்த்து படித்தபின்பாவது
    இதோ கிளம்பபிட்டேன் என தருபவர் வரட்டுமே..

    அண்ணலாருக்கு அமுது செய்வித்தல் என்பார் சேக்கிழார்

    அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் என்பர் சம்பந்தர்..

    ஒரு நாள் உணவை ஒழியாய் என்பார் ஔவையார்

    காயசண்டிகைக்கு பசிப்பிணி போக்கிய மணிமேகலை என பட்டியல் நீளும்

    திருக்கோயில்களில் வருடத்திற்கு 2000 அல்லது வைப்பு நிதியாக ரூ 20000 தந்து விட்டால் வருடத்திற்கு ஒரு முறை அண்ணதானம்

    இன்னமும் இன்னமும்

    ReplyDelete
  68. //// thanusu said...
    பேரத்தை நீட்டுவதால்
    காலம் கூடும்
    கறி கோழிக்கு மட்டும்
    காசுள்ளவன் கடவுளாகிறான்./////

    உள்ளபடியே சொன்னால்
    உரித்து தொங்க விட்டிருப்பதை பார்த்து

    கண்களில் (மனதில்) நீர் கசிந்தால் சைவம்
    நாக்கில் நீர் சுரந்தால் அசைவம்..

    நீங்கள் தான் அவராயிற்றே..

    ReplyDelete
  69. மெத்தையை வாங்கினேன்
    தூக்கத்தை வாங்கலே!
    ஒருபாடலின் வரிகள்
    தூக்கம்தான் முக்கியம். மெத்தை முக்கியமில்லை! ////

    thanks ayya ...remba clear ah purintadu :)

    ReplyDelete
  70. வணக்கம் அய்யா,
    இன்றைய பதிவும்,பின்னுட்டமும் மிகமிக அனுபவத்துக்கு தேவையான பதிவு.எனக்குதான் வாய்ப்புகல் இல்லை.தொடர்ந்து படிக்கவும்,
    பின்னூட்டமிடவும் என்க்கு ஆசைதான்,சூழ்னிலை ஒத்துவ‌ர‌வில்லை.
    ம‌ன்னிக்க‌வும்.ந‌ன்றியுட‌ன் அரிபாய். வாழ்க‌ வ‌ள‌முட‌ன்.

    ReplyDelete
  71. ////சகோதரர் திரு.ஆலாசியம் அவர்கள் சொன்னது போல, ////

    'திரு'வெல்லாம் வேண்டாம் சகோதரியாரே!
    திரு என்பது ஒரு சுவராக இடையில் நிற்கிறது:):)

    ReplyDelete
  72. கடவுள் கருனையில் மிகவும் ஆடம்பரமாகவோ அல்லது கருமியாகவோ வாழும் நிலையோ அல்லது அதற்கான ஆசையோ, குனமோ இல்லாதவனாய் இருந்துவிட்டேன். ஆனாலும் வாழ்க்கையின் சில‌ நிலைகளில் முறையான சில தேவைகளுக்குக் கூட ஏதுமிலாதவனாய் நிற்க வெய்த்தும் விட்டவனவன்.

    வாழ்க்கையின் அனேகங்கள் இன்றையப்பதிவில் சொல்லியதைப்போல் நிலையில்லாதவைகளாக இருக்கலாம். ஆனால் உன்மையான, உன்மையான அன்பாலான உறவிலே இறப்பு என்ப‌தேது.

    மனிதனென்றப் பெயரிலே மிருகம் வாழும் நாட்டிலே நீதியென்றும் நேர்மையென்றும் எழுதிவெய்ப்பார் ஏட்டிலே...

    ReplyDelete
  73. பாவ‌ம் ப‌த்தாவ‌தாக‌ பிற‌ந்த பிள்ளை எவ்வளவு பாதிப்பிற்கு பிறகு எந்த‌ ம‌ன‌நிலையில் அப்ப‌டி சொன்னானோ தெரிய‌வில்லை அய்யா.

    ReplyDelete
  74. நோக‌டிக்கும் பின்னோட்ட‌ங்க‌ள் இன்றும் பார்கிறேன்.

    ReplyDelete
  75. Guru Vanakkam,

    Arumayana padhivu. at the right time when "karnan" is scheduled to be released.
    Thanks to Krishnan Sir also as I get to know about.
    ஈயார் தேட்டை தீயார் கொள்வர்".

    Regards
    RAMADU

    ReplyDelete
  76. //// அய்யர் said...
    ///இல்லை விசுவநாதன். அந்த விடுதிக்கு வேண்டிய அளவு தர்மநிதி உள்ளது. மேலும் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. ஆகவே யாரும் சிரமம் கொள்ளல் வேண்டாம். அங்கு செல்லும் வாய்ப்புக்கிடைக்கும்போது மட்டும், முடிந்த தொகையைக் கொடுக்கலாம்....///
    மன்னிக்க
    அங்கு நிதியில்லை என்பதற்காக அதனை குறிப்பிடவில்லை..
    அதிக நிதி யிருக்கிறது என்பதனை
    நம் ஊர் மக்கள் நாம் அறியமாட்டோமா
    நாம்
    மண்னின் மைந்தர்கள் தானே..
    தகவல் தந்தும் தருபவர் நான் என சொல்லும் மனம் வர வேண்டும்.
    அதற்காகத்தான் இதனை
    அங்கே சொன்னது...
    இதைப் பார்த்து படித்தபின்பாவது
    இதோ கிளம்பபிட்டேன் என தருபவர் வரட்டுமே..
    அண்ணலாருக்கு அமுது செய்வித்தல் என்பார் சேக்கிழார்
    அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் என்பர் சம்பந்தர்..
    ஒரு நாள் உணவை ஒழியாய் என்பார் ஔவையார்
    காயசண்டிகைக்கு பசிப்பிணி போக்கிய மணிமேகலை என பட்டியல் நீளும்
    திருக்கோயில்களில் வருடத்திற்கு 2000 அல்லது வைப்பு நிதியாக ரூ 20000 தந்து விட்டால் வருடத்திற்கு ஒரு முறை அண்ணதானம்
    இன்னமும் இன்னமும்////

    பூவைக் கசக்கி முகர்ந்து பார்க்கலாமா சுவாமி? பூக்கள அதுவாக மலரட்டும். வாசம் கிடைக்கும்போது கிடைக்கட்டும்!

    ReplyDelete
  77. //// அய்யர் said...
    //// thanusu said...
    பேரத்தை நீட்டுவதால்
    காலம் கூடும்
    கறி கோழிக்கு மட்டும்
    காசுள்ளவன் கடவுளாகிறான்./////
    உள்ளபடியே சொன்னால்
    உரித்து தொங்க விட்டிருப்பதை பார்த்து
    கண்களில் (மனதில்) நீர் கசிந்தால் சைவம்
    நாக்கில் நீர் சுரந்தால் அசைவம்..
    நீங்கள் தான் அவராயிற்றே../////

    பழக்கம் காரணம். காலம் கனியும்போது அசைவம் சைவமாக மாறும்.பொறுத்திருங்கள்

    ReplyDelete
  78. //// naren said...
    மெத்தையை வாங்கினேன்
    தூக்கத்தை வாங்கலே!
    ஒருபாடலின் வரிகள்
    தூக்கம்தான் முக்கியம். மெத்தை முக்கியமில்லை! ////
    thanks ayya ...remba clear ah purintadu :)////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  79. //// aryboy said...
    வணக்கம் அய்யா,
    இன்றைய பதிவும்,பின்னுட்டமும் மிகமிக அனுபவத்துக்கு தேவையான பதிவு.எனக்குதான் வாய்ப்புகள் இல்லை.தொடர்ந்து படிக்கவும்,
    பின்னூட்டமிடவும் என்க்கு ஆசைதான்,சூழ்னிலை ஒத்துவ‌ர‌வில்லை.
    ம‌ன்னிக்க‌வும்.ந‌ன்றியுட‌ன் அரிபாய். வாழ்க‌ வ‌ள‌முட‌ன்.////

    புரிகிறது நண்பரே. நேரம் கிடைக்கும்போது படியுங்கள்.

    ReplyDelete
  80. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    ////சகோதரர் திரு.ஆலாசியம் அவர்கள் சொன்னது போல, ////
    'திரு'வெல்லாம் வேண்டாம் சகோதரியாரே!
    திரு என்பது ஒரு சுவராக இடையில் நிற்கிறது:):)/////

    அதானே சகோதரர் என்று அழைத்த பிறகு, திரு எதற்கு?

    ReplyDelete
  81. //// த‌ர்ம‌லிங்க‌ம் said...
    கடவுள் கருனையில் மிகவும் ஆடம்பரமாகவோ அல்லது கருமியாகவோ வாழும் நிலையோ அல்லது அதற்கான ஆசையோ, குனமோ இல்லாதவனாய் இருந்துவிட்டேன். ஆனாலும் வாழ்க்கையின் சில‌ நிலைகளில் முறையான சில தேவைகளுக்குக் கூட ஏதுமிலாதவனாய் நிற்க வைத்தும் விட்டவனவன்.
    வாழ்க்கையின் அனேகங்கள் இன்றையப்பதிவில் சொல்லியதைப்போல் நிலையில்லாதவைகளாக இருக்கலாம். ஆனால் உண்மையான, உன்மையான அன்பாலான உறவிலே இறப்பு என்ப‌தேது.
    மனிதனென்ற பெயரிலே மிருகம் வாழும் நாட்டிலே நீதியென்றும் நேர்மையென்றும் எழுதிவெய்ப்பார் ஏட்டிலே...////

    நல்லது. உங்கள் கருத்தைச் சொன்ன மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  82. //// த‌ர்ம‌லிங்க‌ம் said...
    பாவ‌ம் ப‌த்தாவ‌தாக‌ பிற‌ந்த பிள்ளை எவ்வளவு பாதிப்பிற்கு பிறகு எந்த‌ ம‌ன‌நிலையில் அப்ப‌டி சொன்னானோ தெரிய‌வில்லை அய்யா.////

    என்ன மனநிலை வேண்டுமென்றாலும் இருக்கட்டும். தாய், தந்தையைப் பழிக்கலாமா? அது கர்மவினைக் கணக்கில் வரவாகும். அடுத்த பிறவியில் செலவாகும்!

    ReplyDelete
  83. ///// த‌ர்ம‌லிங்க‌ம் said...
    நோக‌டிக்கும் பின்னோட்ட‌ங்க‌ள் இன்றும் பார்கிறேன்.////

    நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள். அல்லதை விட்டுவிடுங்கள் நண்பரே!

    ReplyDelete
  84. //// RAMADU Family said...Guru Vanakkam,
    Arumayana padhivu. at the right time when "karnan" is scheduled to be released.
    Thanks to Krishnan Sir also as I get to know about.
    ஈயார் தேட்டை தீயார் கொள்வர்".
    Regards
    RAMADU

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  85. ஐயா, கோழிப் பாட்டு நன்றாக இருந்தது. ஆனால் சீக்கிரமே பேரம் படிந்துவிட்டால் நன்றாக இருக்கும். முடிவு என்னவென்று தெரிந்தபின் உயிருடன் அதை எதிர்பார்துக்கொண்டிருப்பது சித்திரவதை இல்லையா. பாவம் அந்த கோழி எவ்வளவு நேரம்தான் பயத்துடன் இருக்கும்.

    ReplyDelete
  86. நமது பித்ருகளும் காக வடிவத்தில் வருகிறார்கள்.காகத்திற்கு கொடுக்கப்படும் உணவு பித்ருகளுக்கு
    சென்று அவர்களுடைய அன்பும், ஆசியும் கிட்டும். பித்ருக்களின் ஆசி இருந்தால் நம்முடைய பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்து விடும். இதை போல நாம் இடும் உணவை சாப்பிடும்
    காகமும் உணவு இட்டவரின் நலனை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றது.

    ஜீவகாருண்யத்தை (ஜீவன்களிடம் கருணை) நாம் அனைவரும் செயல்படுத்த இதை விட
    வேறு எளிமையான வழி உண்டா என்ன ?

    ReplyDelete
  87. //// தேமொழி said...
    ஐயா, கோழிப் பாட்டு நன்றாக இருந்தது. ஆனால் சீக்கிரமே பேரம் படிந்துவிட்டால் நன்றாக இருக்கும். முடிவு என்னவென்று தெரிந்தபின் உயிருடன் அதை எதிர்பார்துக்கொண்டிருப்பது சித்திரவதை இல்லையா. பாவம் அந்த கோழி எவ்வளவு நேரம்தான் பயத்துடன் இருக்கும்.////

    அதனால்தான் கோழியையும் உடன் இருந்தவர்களையும் அனுப்பிவிட்டேன்!:-))))

    ReplyDelete
  88. //// ஓம் தத் சத் said...
    நமது பித்ருகளும் காக வடிவத்தில் வருகிறார்கள்.காகத்திற்கு கொடுக்கப்படும் உணவு பித்ருகளுக்கு
    சென்று அவர்களுடைய அன்பும், ஆசியும் கிட்டும். பித்ருக்களின் ஆசி இருந்தால் நம்முடைய பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்து விடும். இதை போல நாம் இடும் உணவை சாப்பிடும் காகமும் உணவு இட்டவரின் நலனை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றது.
    ஜீவகாருண்யத்தை (ஜீவன்களிடம் கருணை) நாம் அனைவரும் செயல்படுத்த இதை விட வேறு எளிமையான வழி உண்டா என்ன ?//////

    நகரங்களில், அதுவும் நெருக்கமாக மக்கள் வாழும் பிரதேங்களில் இன்று காகங்கள் கிடையாது! குருவி போன்ற் மற்ற பறவை இனங்களும் கிடையாது. செல்போன் டவர்கள்தான் காரணமென்று சொல்கிறார்கள். உண்மை தெரியவில்லை!

    ReplyDelete
  89. நகரங்களில், அதுவும் நெருக்கமாக மக்கள் வாழும் பிரதேங்களில் இன்று காகங்கள் கிடையாது! குருவி போன்ற் மற்ற பறவை இனங்களும் கிடையாது.//

    இதற்கு முன் நான் போட்ட பின்னூட்டம் வரவில்லை, ஒருவேளை
    நான்தான் பேஸ்ட் செய்ய மறந்துவிட்டேன் என நினைக்கிறேன்.

    தில்லியில் நிறைய காகங்கள் இருக்கின்றன. குருவியும் அவ்வப்போது பார்க்கிறேன் என்றாலும் அதிகம் கண்ணில் படுவதில்லை. தினமும் நானும் மொட்டை மாடியில் காகம் / புறா / அணில் சாப்பிடும் என சாதம் வைப்பது வழக்கம். இங்கிருக்கும் வட இந்தியர்கள் தினமும் பறவைகள் சாப்பிடுவதற்கென கம்பு / சோளம் (மாத சாமான் வாங்கும்போது இதையும் சேர்த்தே வாங்குகிறார்கள்) வீட்டு வெளியில் வைப்பதோடல்லாமல் இரண்டு மூன்று சாலைகள் கூடுமிடத்திலும், யமுனையின் மேல் கட்டப்பட்ட பாலத்திலும் போட்டுவிட்டுப்போவது தினசரி நிகழ்வு. இதில் ஸ்கூட்டர் / காரில் செல்பவர்களும் அடக்கம். பஸ் ஹாரன் அடிக்கும்போது எல்லா புறாக்களும் மேலெழும்பி பின் திரும்ப சாப்பிடுவதற்காக கீழிறங்கும் காட்சி பார்க்க அழகாக இருக்கும்.

    ReplyDelete
  90. ஐயா,
    சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கிறேன். நேரம் தப்பாமல் மதிய வேளையில் ஒன்று அல்லது நிறைய காக்கைகள் வந்து விடுகின்றது. சில நேரங்களில், சாதத்தை வைத்து விட்டு, சனிஸ்வர பகவானின்/பித்ரு மந்திரத்தை சொல்லி விட்டு சென்று சிறிது நேரம் கழித்து பார்த்தல் எங்கிருந்தாவது காக்கை(ள்) வந்து விடுகின்றது. பொதுவாக இந்நிகழ்வுகள் நம்முடைய நம்பிக்கை சார்ந்த விஷயமே. கடவுள்/குரு எப்பொழுதும் நம் வேண்டுதலை கேட்டு கொண்டே தான் இருக்கிறார்கள். அதுவும் பிற ஜீவன்களுக்கு உதவும் பொழுது மிகவும் மகிழ்ந்து நம்முடைய வேண்டுகோளுக்கு இணங்கி வேண்டியதை அருளுகிறார்கள் . இதை பல நேரங்களில் அடியேன் அனுபவித்து இருக்கிறேன். காரியத்தை நம்பிக்கையுடன் தொடங்குவது நம் கடமை, அதை தெளிவுற நடத்தி முடித்து வைப்பது குருவின்/இறைவனது அருளும்/ஆசியும்.

    ஓம்

    ReplyDelete
  91. Nalla vidayankal. Therinthirunthaalum pirar sollum poathu Putthuyir peruhirathu. Namathu seyhaihalai naame urasip paarthu mahilchiyum varuthamum adainthuviduhiroam. Ellam oar padippinaiye.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com