8.3.12

Devotional ஆண்டியுடையும் அரசமனமும் கொண்டவன்!



Devotional ஆண்டியுடையும் அரசமனமும் கொண்டவன்!

முருகன் மீது அவன் பக்தர்கள் பாடிய பாடல்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றில் ஒன்றை இன்று வலை ஏற்றியுள்ளேன். பாடலில் உள்ள சந்தம், சீர், எதுகை, மோனை, சொல்விளயாட்டு என்று அனைத்தையும் படித்து ரசிக்க வேண்டுகிறேன். மனதில் ஏற்ற வேண்டுகிறேன்.முருகன் அருளைப் பெற வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
Devotional ஆண்டியுடையும் அரசமனமும் கொண்டவன்!

பக்கமிரு மாதிருக்கச் சொக்கவெள்ளி வேலெடுத்த்ப்
பச்சைமயில் உச்சிவரும் வேலனே - உன்றன்
பஞ்சடிய நெஞ்சழுத்திப் பாற்குடத்தைத் தோளெடுத்தால்
அஞ்சிமிகக் கெஞ்சிடுவான் காலனே!


பழநிமலை மீதமர்ந்து பாட்டமுதை வேட்டருந்திப்
பாருலகைக் காத்தருளும் கந்தனே! - உன்றன்
பால்வ்டியும் பூமுகத்தை நாள்முடியப் பார்த்திருந்தால்
வேல்முடித்து வைத்திடும் பந்தமே!


ஆறுபடை வேலவனும் ஏறுமயில் மீதெழுந்தால்
கூறுமடி யார்வினைகள் மாறுமே - அந்த
ஆறுமுக வேலவனை ஆண்டியுடை கொண்டவனைப்
பழநிமலை மீதுவந்து பாருமே!


ஆண்டியுடை கொண்டிருந்தும் அரசமனம் கொண்டவனை
அண்டியதும் ஓடிவிடும் துன்பமே - அவன்
ஆறெழுத்து மந்திரத்தின் ஒரெழுத்தை ஓதிடினும்
பாரனைத்தும் பெற்றுவரும் இன்பமே!
-- பேராசான், முனைவர், அர.சிங்கார வடிவேலன், கண்டனூர்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

29 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    படங்கள் நன்றாக உள்ளது,
    //////ஆறெழுத்து மந்திரத்தின் ஒரெழுத்தை ஓதிடினும்
    பாரனைத்தும் பெற்றுவரும் இன்பமே!//////
    அருமையான பாடல் வரிகள்.

    நன்றி!

    ReplyDelete
  2. 'ஆண்டியுடை கொண்டிருந்தும் அரசமனம் கொண்டவன்' நல்ல சொல்லாட்சி.

    ஜனகரைப் பற்றி அவர் ஒரு சக்கரவர்த்தி என்றாலும், ஒரு யோகியைப்போல வாழ்ந்தார் என்கிறார்கள்.ஜனகர் அரச உடையில் ஆண்டி மனப்பான்மை கொண்டவர்.பரதன் அயோத்திக்கு அரசனாக இருந்தாலும் ராமரைப் போலவே மரவுரி தரித்து சந்யாசக் கோலத்தில் அர‌சாட்சியைச் செய்தார் அல்லவா?பரதன் ஆண்டிக் கோலத்தில் அரசனாக வாழ்ந்தார்.

    நல்லதோர் கவிதையைத் தந்தற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. சிங்கங்களைச் சுதந்திரமாக விட்டு, மனிதன் தன்னைக் கூண்டில் அடைத்துள்ள படம் அருமை.ஆமாம், ஏன் எல்லாம் பெண் சிங்கங்களாக உள்ளன? நம்ம சிங்க ராஜா மரத்தடியில் தூங்கிக் கொண்டு இருக்கிறாரா?

    ReplyDelete
  4. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    படங்கள் நன்றாக உள்ளது,
    //////ஆறெழுத்து மந்திரத்தின் ஒரெழுத்தை ஓதிடினும்
    பாரனைத்தும் பெற்றுவரும் இன்பமே!//////
    அருமையான பாடல் வரிகள்.
    நன்றி!/////

    நல்லது. பாராட்டுக்கள் ஆக்கியவரையே சேரும்!

    ReplyDelete
  5. /// kmr.krishnan said...
    'ஆண்டியுடை கொண்டிருந்தும் அரசமனம் கொண்டவன்' நல்ல சொல்லாட்சி.
    ஜனகரைப் பற்றி அவர் ஒரு சக்கரவர்த்தி என்றாலும், ஒரு யோகியைப்போல வாழ்ந்தார் என்கிறார்கள்.ஜனகர் அரச உடையில் ஆண்டி மனப்பான்மை கொண்டவர்.பரதன் அயோத்திக்கு அரசனாக இருந்தாலும் ராமரைப் போலவே மரவுரி தரித்து சந்யாசக் கோலத்தில் அர‌சாட்சியைச் செய்தார் அல்லவா?பரதன் ஆண்டிக் கோலத்தில் அரசனாக வாழ்ந்தார்.
    நல்லதோர் கவிதையைத் தந்தற்கு நன்றி ஐயா/////

    பாலடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசனின் நண்பர். கல்லூரி ஒன்றில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். சொல்லாட்ச்சிக்குக் கேட்க வேண்டுமா?

    ReplyDelete
  6. //// kmr.krishnan said...
    சிங்கங்களைச் சுதந்திரமாக விட்டு, மனிதன் தன்னைக் கூண்டில் அடைத்துள்ள படம் அருமை.ஆமாம், ஏன் எல்லாம் பெண் சிங்கங்களாக உள்ளன? நம்ம சிங்க ராஜா மரத்தடியில் தூங்கிக் கொண்டு இருக்கிறாரா?////

    படம் எடுப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கலாம்:-))))

    ReplyDelete
  7. இப்போதெல்லாம் சந்தக் கவி பாட நல்ல கவிஞனில்லை என்கிற குறையை நீக்கும் விதத்தில் பேராசானின் கவிதை அமைந்துள்ளது. திருப்புகழில் ஊறித் திளைத்திருக்க வேண்டும் அவர். அதனால்தான் இப்படிப்பட்டதொரு அருமையான சந்தக் கவியை முருகன் மீது படைக்க முடிந்திருக்கிறது. நல்ல கவிதை. இதுபோன்ற மரபுக் கவிதைகளை உருவாக்க நம்மவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய இந்த பாடல் துணை புரியும். நன்றி.

    ReplyDelete
  8. வெள்ளிக் கிழமை கந்தக் கடவுளின் சந்தப் பாடல் மனதுக்கு இன்பம் தந்தது.
    'பஞ்சடியை நெஞ்சழுத்தி பாற்குடத்தைத் தோளெடுத்தால்' மென்மையான இறைவன் திருவடியைக் குறிக்க மெல்லினச் சொற்களே பயன்பட்டிருக்கின்றன.
    அழகான பாடல். மிக்க நன்றி.

    ஒரு வ‌ண்டியை எத்த‌னை பெண் சிங்க‌ங்க‌ள் முற்றுகையிடுகின்ற‌ன‌!. ப‌ம்ம‌ல்.கே.ச‌ம்ம‌ந்த‌ம் ப‌ட‌த்தில், க‌ம‌லின் ட‌ய‌லாக் நினைவு வ‌ருகிற‌து.' பெண் சிங்க‌ம் வேட்டையாடிக்கிட்டு வ‌ரும். அதை ஆண் சிங்க‌ம் சாப்பிட்டுவிட்டு, மீதியை 'டிஸ்பிட்' ப‌ண்ணும், அதாவது விநியோக‌ஸ்த‌ உரிமை'. ம்... 'காட்டு ராஜா 'அல்ல‌வா, அவ‌ர் வேலைய‌ அவ‌ர் பாக்க‌ மாட்டார்.

    ReplyDelete
  9. மிகவும் அற்புதமானப் பாடல்
    அருமை....
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  10. Ayya,

    Me, My wife & son planned to go to Thiruchendur tonight to See Muruga Peruman. After reading todays blog, I thought of its posted for me..Very happy to read today...:)

    Student,
    Trichy Ravi

    ReplyDelete
  11. படத்தில் சிங்கங்களின் கைக்கு(காலுக்கு?) எட்டிய தூரத்தில் உள்ள உணவு வாய்க்கு எட்டப் போவதில்லை.

    முனைவர். சிங்கார வடிவேலன் அவர்களின் கவிதைகளை முன்பே பல்சுவை பதிவுகளிலும் , வகுப்பறை பதிவுகளிலும் எங்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளீர்கள் ஐயா. அந்த கவிதை ஆய்வுக் கட்டுரைகள் படித்தது நன்றாக நினைவில் உள்ளது. சிலருக்கு சொல்லின் செல்வர்களாக வார்த்தைகள் தானாக வந்து விழும், இவர் அந்த வகையைச் சேர்ந்தவர். கொடுக்கப் பட்டுள்ள பக்திப் பாடலில் கடைசி பத்தியின் நான்கு வரிகளுமே நன்றாக இருக்கிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  12. பாடல் அருமையாக உள்ளது, பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  13. "ஊருக்குள்ள அழிச்சாட்டியம் பன்னிக்கிடிருந்த திடீர் அரசியல் வாதிகளை ஒரு வழிய்யா கூண்டுக்குள்ள போட்டாச்சி ,இனிமேல் ஊர் ஜனங்கள் நிம்மதியா இருப்பாங்க.
    பசிக்கும் போது ஒவ்வொருத்தரையா சாப்பிடுக்கொள்ளலாம் சரியாடி,"

    "அக்கா சொன்னா சரிதான் நம்ம எல்லாம் யாரு சிங்கம்ல"

    ReplyDelete
  14. பால்வ‌டியும் பூமுகத்தை நாள்முடியப் பார்த்திருந்தால்
    வேல்முடித்து வைத்திடும் பந்தமே!

    மிக சிறந்த சொல்விளையாட்டு!

    மிக மிக ரசித்து மீண்டும் மீண்டும் பாட துண்டக்ககூடிய பாடலை எழுதிய முனைவர்க்கும்,பதிவிட்ட வாத்தியார் ஐயாவுக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  15. சூப்பர் தனுசு! நல்ல கற்பனை! நல்ல வசனம்!
    ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

    ReplyDelete
  16. முருக வேல் பற்றி பாடல் பதிவென்றால்
    முகம் காட்ட மறுப்பரோ அய்யர்..

    வருகை பதிவினை
    வழக்கமான வாழ்த்துக்களுடன்

    பதிவிடுகிறேன்
    பாடலினை படித்து மனமுகியபடியே...

    ReplyDelete
  17. kmr.krishnan said...
    சூப்பர் தனுசு! நல்ல கற்பனை! நல்ல வசனம்!
    ரூம் போட்டு யோசிப்பீங்களோ?



    அப்படி எல்லாம் போட்டு யோசிச்ச இப்படி எல்லாம் வராது.பார்த்தவுடன் மனசுல என்ன வருதோ அதை எழுதுகிறேன் சார்.

    ReplyDelete
  18. ///// Thanjavooraan said...
    இப்போதெல்லாம் சந்தக் கவி பாட நல்ல கவிஞனில்லை என்கிற குறையை நீக்கும் விதத்தில் பேராசானின் கவிதை அமைந்துள்ளது. திருப்புகழில் ஊறித் திளைத்திருக்க வேண்டும் அவர். அதனால்தான் இப்படிப்பட்டதொரு அருமையான சந்தக் கவியை முருகன் மீது படைக்க முடிந்திருக்கிறது. நல்ல கவிதை. இதுபோன்ற மரபுக் கவிதைகளை உருவாக்க நம்மவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய இந்த பாடல் துணை புரியும். /////

    உண்மைதான். முருகன் பாமாலையுடன் துவங்கும் ஒவ்வொரு நாளும் இனியதாகத்தான் அமையும். நனறி கோபாலன் சார்!

    ReplyDelete
  19. //// Parvathy Ramachandran said...
    வெள்ளிக் கிழமை கந்தக் கடவுளின் சந்தப் பாடல் மனதுக்கு இன்பம் தந்தது.
    'பஞ்சடியை நெஞ்சழுத்தி பாற்குடத்தைத் தோளெடுத்தால்' மென்மையான இறைவன் திருவடியைக் குறிக்க மெல்லினச் சொற்களே பயன்பட்டிருக்கின்றன.
    அழகான பாடல். மிக்க நன்றி.
    ஒரு வ‌ண்டியை எத்த‌னை பெண் சிங்க‌ங்க‌ள் முற்றுகையிடுகின்ற‌ன‌!. ப‌ம்ம‌ல்.கே.ச‌ம்ம‌ந்த‌ம் ப‌ட‌த்தில், க‌ம‌லின் ட‌ய‌லாக் நினைவு வ‌ருகிற‌து.' பெண் சிங்க‌ம் வேட்டையாடிக்கிட்டு வ‌ரும். அதை ஆண் சிங்க‌ம் சாப்பிட்டுவிட்டு, மீதியை 'டிஸ்பிட்' ப‌ண்ணும், அதாவது விநியோக‌ஸ்த‌ உரிமை'. ம்... 'காட்டு ராஜா 'அல்ல‌வா, அவ‌ர் வேலைய‌ அவ‌ர் பாக்க‌ மாட்டார்./////

    பாடலுக்கு உரிய பாராட்டுக்கள், அதனை ஆக்கிய கவிஞருக்கே சேரும். நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. /// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    மிகவும் அற்புதமானப் பாடல்
    அருமை....
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  21. /// Ravichandran said...
    Ayya,
    Me, My wife & son planned to go to Thiruchendur tonight to See Muruga Peruman. After reading todays blog, I thought of its posted for me..Very happy to read today...:)
    Student,
    Trichy Ravi////

    நல்லது. செந்தூர்ர் வேலனை எங்களுக்கும் சேர்த்து வணங்கிவிட்டு வாருங்கள். நன்றி!

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. //// தேமொழி said...
    படத்தில் சிங்கங்களின் கைக்கு(காலுக்கு?) எட்டிய தூரத்தில் உள்ள உணவு வாய்க்கு எட்டப் போவதில்லை.
    முனைவர். சிங்கார வடிவேலன் அவர்களின் கவிதைகளை முன்பே பல்சுவை பதிவுகளிலும் , வகுப்பறை பதிவுகளிலும் எங்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளீர்கள் ஐயா. அந்த கவிதை ஆய்வுக் கட்டுரைகள் படித்தது நன்றாக நினைவில் உள்ளது. சிலருக்கு சொல்லின் செல்வர்களாக வார்த்தைகள் தானாக வந்து விழும், இவர் அந்த வகையைச் சேர்ந்தவர். கொடுக்கப் பட்டுள்ள பக்திப் பாடலில் கடைசி பத்தியின் நான்கு வரிகளுமே நன்றாக இருக்கிறது. நன்றி ஐயா.///

    உங்களின் மனம் நிறைந்த பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  24. //// Uma said...
    பாடல் அருமையாக உள்ளது, பகிர்விற்கு நன்றி!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி உமாஜி!

    ReplyDelete
  25. ///// thanusu said...
    "ஊருக்குள்ள அழிச்சாட்டியம் பன்னிக்கிடிருந்த திடீர் அரசியல் வாதிகளை ஒரு வழிய்யா கூண்டுக்குள்ள போட்டாச்சி ,இனிமேல் ஊர் ஜனங்கள் நிம்மதியா இருப்பாங்க.பசிக்கும் போது ஒவ்வொருத்தரையா சாப்பிடுக்கொள்ளலாம் சரியாடி,"
    "அக்கா சொன்னா சரிதான் நம்ம எல்லாம் யாரு சிங்கம்ல"/////

    அவர்களைச் சாப்பிட்டால் அஜீரணம் உண்டாகாதோ?

    ReplyDelete
  26. /////முருகராஜன் said...
    பால்வ‌டியும் பூமுகத்தை நாள்முடியப் பார்த்திருந்தால்
    வேல்முடித்து வைத்திடும் பந்தமே!
    மிக சிறந்த சொல்விளையாட்டு!
    மிக மிக ரசித்து மீண்டும் மீண்டும் பாட துண்டக்ககூடிய பாடலை எழுதிய முனைவர்க்கும்,பதிவிட்ட வாத்தியார் ஐயாவுக்கும் நன்றிகள்!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  27. //// kmr.krishnan said...
    சூப்பர் தனுசு! நல்ல கற்பனை! நல்ல வசனம்!
    ரூம் போட்டு யோசிப்பீங்களோ?////

    உற்சாகப்பானப் பிரியர்கள்தான் ரூம் போட்டு யோசிக்க வேண்டும். தனுசுவிற்கு வெய்ய்லில், கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டிருக்கும்போதும் யோசனைகள் வரும்!

    ReplyDelete
  28. ///// அய்யர் said...
    முருக வேல் பற்றி பாடல் பதிவென்றால்
    முகம் காட்ட மறுப்பரோ அய்யர்..
    வருகை பதிவினை
    வழக்கமான வாழ்த்துக்களுடன்
    பதிவிடுகிறேன்
    பாடலினை படித்து மனமுகியபடியே.../////

    மனம் உருகியப்டியே என்று சொல்லுங்கள் விசுவநாதன்!

    ReplyDelete
  29. /////thanusu said...
    kmr.krishnan said...
    சூப்பர் தனுசு! நல்ல கற்பனை! நல்ல வசனம்!
    ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
    அப்படி எல்லாம் போட்டு யோசிச்ச இப்படி எல்லாம் வராது.பார்த்தவுடன் மனசுல என்ன வருதோ அதை எழுதுகிறேன் சார்./////

    அதானே! அதை நான் அவருக்குச் சொல்லிவிட்டேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com