Cinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் - பகுதி 3
குரல் வளம் மிக்கவர்கள் என்று சொல்லும்போது, பலரையும் சொல்லலாம். நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் என்று சொல்லும்போது, ஒரு சிலரைத்தான் குறிப்பிட முடியும்.
என் மனத்திரையில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் இருவருடைய குரல்களை சென்றவாரங்களில் பதிவிட்டேன். இன்று இன்னொரு மேன்மையான குரலைப் பதிவிடுகிறேன்.
குரலுக்குச் சொந்தக்காரர்: திரு.உதித் நாராயண்
1.12.1955ல் நேப்பாளத்தில் பிறந்தவர்
இந்தி மொழிப்பட ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடகர். அது தவிர தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒரியா என்று 26 மொழிகளில் பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றவர். தமிழில் இதுவரை 82 பாடல்களைப் பாடியுள்ளார். பல விருதுகளை வாங்கியவர்
அவர் பாடிய பிரபலமான இந்திப் படப் பாடல்களில் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். கேட்டுப் பாருங்கள்
படம்: குச் குச் ஹோதா ஹை
பாடல்: தும் பாஸ் ஆயி
நடிப்பு: ஷாருக்கான், கஜோல் & ராணி முகர்ஜி
Song Tum Pass Aaye
Fim: Kuch Kuck Hota Hai (1998)
Video clipping:
http://youtu.be/mqc7dBTl6LI
Our sincere thanks to the person who uploaded the video clipping
------------------------------------------------
தமிழ் திரைப்பாடல்களில் இரண்டைக் கொடுத்துள்ளேன்
1
படம்: கண்ணெதிரே தோன்றினாள்
பாடல்: ஈஷ்வரா வானும் மண்ணும் ஹாண்ட் ஷேக் பண்ணுது
நடிப்பு: பிரசாந்த், சிம்ரன்
இசை: தேவா
Video clipping
http://youtu.be/toatfXXJmZk
Our sincere thanks to the person who uploaded the video clipping
----------------------------------------------------------------------
2
படம்: காதலன் (17.9.1994)
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம்: ஷங்கர்
நடிப்பு: பிரபுதேவா & நக்மா
பாடல் உதித் நாராயணன். உடன் பாடியவர்கள் - S.P.B & பல்லவி
Video clipping
http://youtu.be/yqI-Uo2kWfs
Our sincere thanks to the person who uploaded the video clipping
பாடல் வரிகள்:
காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே பூமியின் பூபாளமே
(காதலின்)
காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தால் லக்ஷ ரூபாய்
(காதலிக்கும்)
காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபக்ஷி தேவையில்லையே
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜோதி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை
இது நட்பமாந்தோ எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரிவதில்லை
பாலும் வண்ணம் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல் காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா இல்லை யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று காதல் முள்ளின் வேலியா
இல்லை யாரும் செல்லலாம் நீ செல்லவேண்டும் இன்று
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
--------------------------------------------------
உதித் நாராயணனைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கான சுட்டி:
http://en.wikipedia.org/wiki/Udit_Narayan
------------------------------
udit Narayan's Song List URL
http://www.thiraipaadal.com/singer.php?SGRID=Udit%20Narayan&lang=en
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
காலை வணக்கம் ஐயா..
ReplyDeleteஎனக்குப் பிடித்த பாடகர்களில் ஒருவர்.
ஷாஜகான் படத்தில் 'அச்சச்சோ புன்னகை' பாடலும், நீங்கள் பதிவிட்டுள்ள காதலன் பட பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
பதிவிற்கு நன்றி ஐயா.
உதித் நாராயணின் இந்திப்பாடல் ஓகே தான். தமிழ்ப் பாட்டு உச்சரிப்பு 'ஐயஹோ'தான். 'வின்னும் மன்னும்' 'நேருக்கும்'(நீருக்கும்)..நிரப்புக்கும்(நெருப்புக்கும்)
ReplyDeleteஒரு வேளை சரியாக உச்சரித்தால் பாட்டில் அந்த 'இஸ்டைல்' கிடைக்காதோ?
யார் கண்டா? எனக்கெல்லாம் 'ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்'போன்ற 'டாண் டாண்' என்ற சுத்தமான உச்சரிப்புடன் கூடிய பாடல்களே கேட்டு கேட்டுக் காதுக்குப் பழக்கமாகிவிட்டது. புதுப்பாடல்களை எப்படி ரசிக்க வேண்டும் என்றே தெரியவில்லை.
"இது நட்பமாந்தோ..." என்ன பொருள் சார்?
ReplyDeleteஎதுவும் புரியவில்லை. ஹி ஹி ஹி....
http://bharathipayilagam.blogspot.in/
ReplyDeleteதஞ்சாவூராரின் மேற்படி வலைப்பூவைப் பார்க்கவும்.அங்கே 'இளமை(முதுமை?)
ஊஞ்சல் ஆடுகிறது.'
உதித் நாராயணின் குரல் நல்ல இனிமையான குரல் . இது இவருக்கு இறைவன் கொடுத்த பரிசு.
ReplyDeleteகுச் குச் ஹோதாஹை, இந்தப் படம் புருனையில் பெரிய பிரளயமே உண்டாக்கியது .கதையும் ஆடம்பர திரைக் கதையும் ஷாருக் கான் கஜோல் ஆகியோரின் அழகும் இளமையும் ,அனைத்திற்கும் மேலாக இப்படத்தின் பாடல்களும் புருனை மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது . இன்றளவிலும் இப்படத்தில் இடம் பெற்ற தும் பாஸ் ஆயே பாடலை முணுமுணுக்காத மலாய் காரர்களே இல்லை .இந்த படம் இங்கே வந்தபின் பெண்களுக்கு ஷாருக் காணும் ஆண்களுக்கு கஜோலும் மனம் கவந்தவராகி விட்டார்கள்.
புருனெய் சுல்தானின் பிள்ளைகளுக்கும் இப்படமும் பாடல்களுக்கும் பிடித்திருந்தது. ஆகிய காரணங்களால் ஷாருக் கான் புருனெய் சுல்தானின் விருந்தினராக இரு தினம் இங்கே வந்து அரண்மனையில் தங்கி சென்றார் .வேறு எந்த உலக நடிகர்கள் கூட இங்கே விருந்தினராக வந்தது இல்லை .
அதே போன்று விருந்தினராக வந்து சென்ற இன்னுமொரு நபர் மைக்கேல் ஜாக்சன்.
//// Sathish K said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா..
எனக்குப் பிடித்த பாடகர்களில் ஒருவர்.
ஷாஜகான் படத்தில் 'அச்சச்சோ புன்னகை' பாடலும், நீங்கள் பதிவிட்டுள்ள காதலன் பட பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
பதிவிற்கு நன்றி ஐயா.////
நல்லது. நன்றி சதீஷ்!
//// kmr.krishnan said...
ReplyDeleteஉதித் நாராயணின் இந்திப்பாடல் ஓகே தான். தமிழ்ப் பாட்டு உச்சரிப்பு 'ஐயஹோ'தான். 'வின்னும் மன்னும்' 'நேருக்கும்'(நீருக்கும்)..நிரப்புக்கும்(நெருப்புக்கும்)
ஒரு வேளை சரியாக உச்சரித்தால் பாட்டில் அந்த 'இஸ்டைல்' கிடைக்காதோ?
யார் கண்டா? எனக்கெல்லாம் 'ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்'போன்ற 'டாண் டாண்' என்ற சுத்தமான உச்சரிப்புடன் கூடிய பாடல்களே கேட்டு கேட்டுக் காதுக்குப் பழக்கமாகிவிட்டது. புதுப்பாடல்களை எப்படி ரசிக்க வேண்டும் என்றே தெரியவில்லை./////
T.M.S. அவர்களின் தாய் மொழி செள்ராஷ்ட்ரா. ஆனாலும் அவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழ் உச்சரிப்பு படு சுத்தமாக இருந்தது. அதுபோல ஜேசுதாஸ் அவர்களும், எஸ்.பி.பி அவர்களும் ஓரளவிற்கு தமிழை நன்றாக உச்சரிக்கிறார்கள். மற்ற பாடகர்களின் தமிழ் சற்று சொதப்பலாக இருக்கிறது. அதைச் சரி செய்ய வேண்டியது இசையமைப்பாளர்களின் வேலை. அதைச் செய்யாமல் விடும் அவர்களைத்தான் நாம் குறை சொல்ல வேண்டும்!
//// kmr.krishnan said...
ReplyDelete"இது நட்பமாந்தோ..." என்ன பொருள் சார்?
எதுவும் புரியவில்லை. ஹி ஹி ஹி..../////
நானும் ஒரு ஹி ஹி ஹி...சொல்லி விடுகிறேன். வேறு என்ன செய்ய முடியும்?
//// kmr.krishnan said...
ReplyDeletehttp://bharathipayilagam.blogspot.in/
தஞ்சாவூராரின் மேற்படி வலைப்பூவைப் பார்க்கவும்.அங்கே 'இளமை(முதுமை?)
ஊஞ்சல் ஆடுகிறது.'////
பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி!
//// thanusu said...
ReplyDeleteஉதித் நாராயணின் குரல் நல்ல இனிமையான குரல் . இது இவருக்கு இறைவன் கொடுத்த பரிசு.
குச் குச் ஹோதாஹை, இந்தப் படம் புருனையில் பெரிய பிரளயமே உண்டாக்கியது .கதையும் ஆடம்பர திரைக் கதையும் ஷாருக் கான் கஜோல் ஆகியோரின் அழகும் இளமையும் ,அனைத்திற்கும் மேலாக இப்படத்தின் பாடல்களும் புருனை மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது . இன்றளவிலும் இப்படத்தில் இடம் பெற்ற தும் பாஸ் ஆயே பாடலை முணுமுணுக்காத மலாய் காரர்களே இல்லை .இந்த படம் இங்கே வந்தபின் பெண்களுக்கு ஷாருக் காணும் ஆண்களுக்கு கஜோலும் மனம் கவந்தவராகி விட்டார்கள்.
புருனெய் சுல்தானின் பிள்ளைகளுக்கும் இப்படமும் பாடல்களுக்கும் பிடித்திருந்தது. ஆகிய காரணங்களால் ஷாருக் கான் புருனெய் சுல்தானின் விருந்தினராக இரு தினம் இங்கே வந்து அரண்மனையில் தங்கி சென்றார் .வேறு எந்த உலக நடிகர்கள் கூட இங்கே விருந்தினராக வந்தது இல்லை
அதே போன்று விருந்தினராக வந்து சென்ற இன்னுமொரு நபர் மைக்கேல் ஜாக்சன்./////
அந்தப்பாடல் மூலம்தான் எனக்கும் உதித் நாராயணன பிடித்த பாடகராக ஆனார். நன்றி தனூர்ராசிக்காரரே!
kmr.krishnan said...
ReplyDeletehttp://bharathipayilagam.blogspot.in/
தஞ்சாவூராரின் மேற்படி வலைப்பூவைப் பார்க்கவும்.அங்கே 'இளமை(முதுமை?)
ஊஞ்சல் ஆடுகிறது.'
ஆமாம் நேற்றே நானும் சென்று பார்த்து வாழ்த்திவிட்டே வந்தேன்
பொதுவாக இந்தியிலே மெலடி கிங்
ReplyDeleteதமிழிலே கலக்கல் கிங்காக இருக்கிறார்...
வேற்று மொழிக்காரர் நல்லக் குரல்வளம் உள்ளவர் உச்சரிப்புக்கு அதிக முயற்சி செய்திருப்பார்... அதைப் பாராட்டலாம்.... இளையர்களின் இதயங்களை இறுக கட்டிப் போட்டார் தனது குரலில் என்றால் அது மிகையாகாது... அவரின் இந்திப் பாடல் மிகவும் அருமை... அப்படியே சொந்த காரில் ஜன்னல்களைத் திறந்துக் கொண்டு இந்தப் பாடலை சத்தமாக இசைக்கச் செய்து கொண்டு கூடவே நாமும் பாடிக் கொண்டே மலையில் ஏறிப் பயணம் செய்தால் அப்படித்தான் இருக்கும்.. குறைந்த பட்சம் புஷ் பேக் பச்சிலேயாவது பயணிக்க வேண்டும்... மிகவும் ரம்மியமான குரல்.
பதிவுக்கு நன்றிகள் ஐயா!
i like his song kuluvalile from the movie muthu
ReplyDeleteஉதித் நாரயாணனின் இந்த ஹிந்திப்பாடல் நல்ல பாடல். இது நிறைய தடவை கேட்ட பாடல்தான் என்பதால் திரும்பக் கேட்கத் தோன்றவில்லை.
ReplyDelete"இது நட்பமாந்தோ..." என்ன பொருள் சார்? //
ReplyDeleteநுட்பமானது என்று நினைக்கிறேன். முன்னர் கேட்ட நினைவை வைத்தே எழுதுகிறேன், இப்போது இந்த பாடலைக்கேட்கவில்லை.
T.M.S. அவர்களின் தாய் மொழி செள்ராஷ்ட்ரா. ஆனாலும் அவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழ் உச்சரிப்பு படு சுத்தமாக இருந்தது. அதுபோல ஜேசுதாஸ் அவர்களும், எஸ்.பி.பி அவர்களும் ஓரளவிற்கு //
ReplyDeleteபாடகிகளை விட்டுவிட்டீர்களே! திருமதி. சுசீலாவின் தமிழ் உச்சரிப்பு இன்றளவும் நான் வியக்கும் ஒன்று. அடுத்தடுத்து வரும் 'ழ' , 'ல', 'ள' 'ந', 'னா' என வித்தியாசம் தெளிவாகத்தெரியும்.
kuluvalile from the movie முது//
ReplyDeleteஆமாம் முத்து படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் அசத்தலாக இருக்கும்.
//// kmr.krishnan said...
ReplyDelete"இது நட்பமாந்தோ..." என்ன பொருள் சார்?
எதுவும் புரியவில்லை. ஹி ஹி ஹி..../////
SP.VR. SUBBAIYA said...நானும் ஒரு ஹி ஹி ஹி...சொல்லி விடுகிறேன்.
இந்த ஹி ஹி ஹி மொழிக்கு என்ன பெயர். தேமொழி என்பதா?
Uma said...
ReplyDeletekuluvalile from the movie முது//
பார்த்தீர்களா யானைக்கும் அடி சறுக்கிவிட்டது
டீச்சரும் பெயிலாகிவிட்டார் .
"இதில் அற்பமானதோ எதுவுமில்லை
ReplyDeleteஇந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை"
என்று பாடுகிறார்.
தீபன் சக்கரவர்த்தி, சுரேந்தர் எனத் தமிழை தாய்மொழியாக கொண்டு நன்கு பாடுபவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு "தெருக் கோயிலே ஓடிவா" போன்று...
தவறகப் பாடுபர்களை கேட்பது தமிழர்களின் பிறப்புரிமை
இந்த நுட்பம் ஏனோ பலருக்குப் புரிவதில்லை
வணக்கம் ஐயா.
ReplyDelete