Devotional அதிபதியே! அருள் நிதியே!
இன்றைய பாமாலைப் பகுதியை மிகவும் பிரபலமான பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
பாடல்: மருதமலை மாமணியே
பாடியவர்: மதுரை சோமு அவர்கள்
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்கு மணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை ...
ஆ ... ஆ ... ஆ ... மருதமலை ... மருதமலை ... முருகா ...
மருதமலை மாமணியே முருகையா
மருதமலை மாமணியே முருகையா
தேவரின் குலம் காக்கும் வேலையா அய்யா ...
மருதமலை மாமணியே முருகையா
தேவரின் குலம் காக்கும் வேலையா அய்யா ...
மருதமலை மாமணியே முருகையா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
அய்யா உனது மங்கல மந்திரமே
(மருதமலை)
தைப்பூச நன்னாளில் ... தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தையா ... ஆ ...
(மருதமலை)
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
ஆ ... ஆ ... ஆ ..
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடி என் வினை தீர ... நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ... ஆறுதல் உருவாக
எழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன் ... ஆ ...
(மருதமலை)
சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் ... நான் மறவேன்
பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் ... நான் வருவேன்
பரமனின் திருமகனே ... அழகிய தமிழ் மகனே
காண்பதெல்லாம் ... உனது முகம் ... அது ஆறுமுகம்
காலமெல்லாம் ... எனது மனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே ... அருள் நிதியே சரவணனே
பனி அது மழை அது நதி அது கடல் அது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் ... குகனே ... வேலையா ...
ஆ ... ஆ ... ஆ ... ஆ ...
தேவர் வணங்கும் மருதமலை முருகா .
(மருதமலை).
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்யநாதன்
படம் : தெய்வம் (1971)
பாடியவர்: 'மதுரை' சோமசுந்தரம்
காணொளி:
http://youtu.be/82qfhI7uZf0
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDelete"மருதமலை மாமணியே முருகையா"-
பாடல், அதிகாலையில் கேட்பதற்கு
வாய்ப்பு அளித்த ஆசிரியர் அவர்களுக்கு
நன்றி!!
ஆஹா! அருமையான ஒரு பாடல்...
ReplyDeleteசிறுவயதில் நான் அதிகம் பாடியப் பாடல்
நான் ஆறாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளிப் பாட்டுப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றுத் தந்தப் பாடல் இது...
இது இன்னொரு சுவையான ஒருச் செய்தி அந்தப் பாடல் காட்சியில் தம்புரா வாசித்துக் கொண்டு பின்புறம் ஒரு முருக பக்தர் அமர்ந்திருக்கிறாரே! அவர் பெயர் மலையூர் சதாசிவம் என்பதாகும். அவர் எங்கள் ஊரில் எங்கள் வீட்டிற்கு பின்வீதியில் தான் குடி இருந்தார்.. மேடைப் பாடகரும் கூட... அப்படிப் பாடும் போது... பக்திப் பாடல்களை அல்லாமல் வேறு எந்த சினிமாப் பாடல்களையும் எப்போதும் பாட மாட்டேன் என்றும் மறுத்து வந்தார்.
என் வாழ்வில் பல ஞாபகங்களை எப்போதும் மலரச் செய்யும் அற்புதப் பாடல். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!
ஐயா வணக்கம்!
ReplyDeleteமதுரை சோமுவின் குரலில் என் சிறுபிராயத்தில் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கக் கேட்டு இன்புற்ற பாடல் இது!
பகிர்ந்தமைக்கு நன்றி!
இன்று முதலில் வந்துள்ள படம் என்னை மிகவும் கவர்ந்தது.
ReplyDeleteகிருஷ்ணர் வீற்றிருக்கும் சிம்மாசனமும் ஓட்டி செல்லும் சாரதியையும் பாருங்கள் .எதிர் எதிர் துருவங்களாக இருக்கும். வட இந்தியாவில் எடுக்கப் பட்ட படமாக இருந்தாலும் மும்பை அல்லது டெல்லி போன்ற பெரு நகரம் என்றே பின்னணி காட்டுகிறது. முஸ்லின் பெற்றோர் அவர்கள் .இங்கு ஜாதி மதத்திற்கு வேலை இல்லை. அனைத்து மதமும் அனைவருக்கும் சமமே .யாரும் எந்த தெய்வத்தையும் பிரித்து பார்ப் பதில்லை.நம் நாட்டின் ஒற்றுமைக்கும் மக்களின் புரிந்துணர்வுக்கும் இங்கு ஜாதி மதம் குருக்கில்லை .இந்த உண்மையை தான் இந்த படம் சொல்கிறது .வாழ்க பாரதம்.வளர்க அவர்களின் ஒற்றுமை.
படம் வந்தபின் இந்த நாற்பதாண்டுகளில் மறைந்துவிட்டவர்கள் பலர். ஆனால் அவர்கள் திறமைகளைச் சொல்லும் பாடல் இன்னமும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. குன்னக்குடி பெரும்பாலும் பக்தி படங்களுக்கு மட்டுமே இசை அமைத்தாலும் மேல் நாட்டு மருமகளில் ஆங்கிலப் பாடல், மெல்லிசை என அசத்தியவர். இவரை நன்றாக உபயோகித்தவர் ஏ. பி. என். மட்டுமே எனத் தோன்றுகிறது. ' நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற நிகழ்ச்சிகளிலும் பழைய பாடல்களை பாடுபவர்கள் கூட யாரும் மதுரை சோமு பாடலைப் பாடத் துணிவதில்லை. தவில் வாசிப்பவர் வலையப்பட்டி என நினைத்திருந்தேன் ஆனால் வேறு யாரோ மேடையில் இருக்கிறார். மோர்சிங்கை அதிகமாக உபயோகித்த தமிழ்ப் பாடல் இதுமட்டும்தானோ?
ReplyDeleteஆஹா ...ஆறரை மணித்துளிக்கு ஒருவரைக் கட்டிப் போடும் பாடல்.
யாரைப் பாராட்டுவது? ....
"தேவரின் குலம் காக்கும்" என இரு பொருள் பட பாடல் எழுதிய கவியரசரையா?
மருத மலையை அறுபடை வீடுகள் நிலைக்கு உயர்த்திய தேவரையா?
அழகாக இசை அமைத்த குன்னக்குடியையா?
ஆத்மார்த்தமாக பாடிய மதுரை சோமுவையா?
இல்லை ...அருமையான பாடலை பதிவேற்றிய ஐயா உங்களையா?
நான் பாலகனாய் இருந்த நாட்களை மீண்டும் என் நினைவுக்கு கொண்டு வந்த பாடல்.
ReplyDeleteஇந்த பாடலை நான் மனப் பாடமாகவே பாடிய நாட்கள் பல உண்டு . காரணம் பக்கத்தில் இருந்த டூரிங் டாக்கீஸில் தினமும் மாலை வேளையில் திரைபடம் ஆரம்பிக்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு சவுன்ட் ஸ்பீக்கரில் இந்த பாடலைத்தான் முதலில் போடுவார்கள் அதை கேட்டு கேட்டு எனக்கு முழுமையாக மனனம் ஆன பாடல்.
M.G.R.அவர்களை பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்த காலங்களில் தேவரையும் அறிந்து கொண்டேன் . சாண்டோ M.M.A.சின்னப்பா தேவர் ,திவீர முருக பக்தர் .அதிலும் மருதமலை முருகனுக்கு இவர் அடிமை .
இவரின் முருக பக்தியே இவரை உயர்த்தியது.
நல்லதொரு படம் நல்லதொரு பாடல் .
வாத்தியார் ஐயா வணக்கங்கள்,
ReplyDeleteமதுரை சோமு அவர்களின் அற்புதமான பாடலை பதிவிட்டு எங்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்.உண்மையாக சோமுவின் அந்த கம்பீரமான குரலில் பாடலை கேட்டபொழுதுநீண்ட நாட்களின் பின் உள்ளத்திலும்,உடலிலும் உருவான உணர்ச்சிப் பிரவாகத்தை எழுத்தில் எழுதமுடியவில்லை.அதிகாலை 3;30 ற்கு பதிவிட்டுள்ளீர்கள்,பாடலை தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.
சுதன்.க
கனடா.
ஃபத்வா பற்றி பயமில்லாமல் இப்படி வேஷம் போட்டது துணிச்சல்தான்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
நாதஸ்வரக் குரல் கொண்டவர் சோமு. அவரது பாடல் கொடுத்தமைக்கு நன்றி அய்யா!
முஸ்லிம் பெற்றோர்களுடன் செல்லும் கிருஷ்ணர் மிகவும் அருமை. அர்த்தங்கள் ஆயிரம்.
ReplyDeleteவார்த்தைப்ரயோக டப்டு சார்.
ReplyDelete"வேலையா..." என்பது வேலய்யா... என்பது போலுல்லது.
பின்னாடியே இன்னெருப் பாடல்வரிகளும் நினைவிற்கு வருகின்றது.
"மங்கயரின் குங்குமத்தைக் காக்குமுகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளை கானுமுகம் ஒன்று
சஞ்ஜலத்தில் வந்தவரைத்தாங்குமுகம் ஒன்று
ஜாதிமதபேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நேய்நெடிகள் தீர்த்துவெய்க்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு,ஆறுமுகம் இங்கு.. என்று "திருச்செந்தூரின் கடலேரத்தில்" பாடலது. படத்தில் டி எம் எஸ் மற்றும் சீர்காளி கோவிந்தராஜன் அவர்கள் பாடியதாக வரும்.
கோவை மானகரதின் அழகு மிகு பெருமை மிகு மருதமலை பெருமயை உணர்திய பாட்ல் வெளியிடமைகு மிக்க நண்றி அய்யா
ReplyDelete////Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
"மருதமலை மாமணியே முருகையா"-
பாடல், அதிகாலையில் கேட்பதற்கு
வாய்ப்பு அளித்த ஆசிரியர் அவர்களுக்கு
நன்றி!!////
வாத்தியார்தான் அதிகாலை எழுந்து பதிவை வலை ஏற்றுகிறார் என்றால், நீங்களும் அந்த அதிகாலை நேரத்திலேயே எழுந்து, படித்துப் பின்னூட்டம் இடுகின்றீர்களே! உஙகளுடைய ஆர்வத்திற்கு நன்றி!
//// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
ReplyDeleteஆஹா! அருமையான ஒரு பாடல்...
சிறுவயதில் நான் அதிகம் பாடியப் பாடல்
நான் ஆறாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளிப் பாட்டுப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றுத் தந்தப் பாடல் இது...
இது இன்னொரு சுவையான ஒருச் செய்தி அந்தப் பாடல் காட்சியில் தம்புரா வாசித்துக் கொண்டு பின்புறம் ஒரு முருக பக்தர் அமர்ந்திருக்கிறாரே! அவர் பெயர்
மலையூர் சதாசிவம் என்பதாகும். அவர் எங்கள் ஊரில் எங்கள் வீட்டிற்கு பின்வீதியில் தான் குடி இருந்தார்.. மேடைப் பாடகரும் கூட... அப்படிப் பாடும்
போது... பக்திப் பாடல்களை அல்லாமல் வேறு எந்த சினிமாப் பாடல்களையும் எப்போதும் பாட மாட்டேன் என்றும் மறுத்து வந்தார்.
என் வாழ்வில் பல ஞாபகங்களை எப்போதும் மலரச் செய்யும் அற்புதப் பாடல். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!////
நல்லது. உங்கள் நினைவு புதிப்பிக்கப்பெற்றிருக்கும் அல்லவா? அதுவரைக்கும் மகிழ்ச்சிதான்!
//// ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஐயா வணக்கம்!
மதுரை சோமுவின் குரலில் என் சிறுபிராயத்தில் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கக் கேட்டு இன்புற்ற பாடல் இது!
பகிர்ந்தமைக்கு நன்றி!/////
நல்லது. உங்கள் நினைவு புதிப்பிக்கப்பெற்றிருக்கும் அல்லவா? அதுவரைக்கும் மகிழ்ச்சிதான்!
/// thanusu said...
ReplyDeleteஇன்று முதலில் வந்துள்ள படம் என்னை மிகவும் கவர்ந்தது.
கிருஷ்ணர் வீற்றிருக்கும் சிம்மாசனமும் ஓட்டி செல்லும் சாரதியையும் பாருங்கள் .எதிர் எதிர் துருவங்களாக இருக்கும். வட இந்தியாவில் எடுக்கப் பட்ட
படமாக இருந்தாலும் மும்பை அல்லது டெல்லி போன்ற பெரு நகரம் என்றே பின்னணி காட்டுகிறது. முஸ்லின் பெற்றோர் அவர்கள் .இங்கு ஜாதி மதத்திற்கு வேலை இல்லை. அனைத்து மதமும் அனைவருக்கும் சமமே .யாரும் எந்த தெய்வத்தையும் பிரித்துப் பார்ப்பதில்லை.நம் நாட்டின் ஒற்றுமைக்கும் மக்களின்
புரிந்துணர்வுக்கும் இங்கு ஜாதி மதம் குறுக்கில் இல்லை .இந்த உண்மையை தான் இந்த படம் சொல்கிறது .வாழ்க பாரதம்.வளர்க அவர்களின் ஒற்றுமை./////
வந்தேமாதரம். ஜெய்ஹிந்த்! வாழ்க பாரதம்! வளர்க அதன் பெருமை!
//// தேமொழி said...
ReplyDeleteபடம் வந்தபின் இந்த நாற்பதாண்டுகளில் மறைந்துவிட்டவர்கள் பலர். ஆனால் அவர்கள் திறமைகளைச் சொல்லும் பாடல் இன்னமும் உயிரோட்டத்துடன்
இருக்கிறது. குன்னக்குடி பெரும்பாலும் பக்தி படங்களுக்கு மட்டுமே இசை அமைத்தாலும் மேல் நாட்டு மருமகளில் ஆங்கிலப் பாடல், மெல்லிசை என அசத்தியவர். இவரை நன்றாக உபயோகித்தவர் ஏ. பி. என். மட்டுமே எனத் தோன்றுகிறது. ' நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற நிகழ்ச்சிகளிலும் பழைய பாடல்களை பாடுபவர்கள் கூட யாரும் மதுரை சோமு பாடலைப் பாடத் துணிவதில்லை. தவில் வாசிப்பவர் வலையப்பட்டி என நினைத்திருந்தேன் ஆனால் வேறு யாரோ மேடையில் இருக்கிறார். மோர்சிங்கை அதிகமாக உபயோகித்த தமிழ்ப் பாடல் இதுமட்டும்தானோ?
ஆஹா ...ஆறரை மணித்துளிக்குள் ஒருவரைக் கட்டிப் போடும் பாடல்.
யாரைப் பாராட்டுவது? ....
"தேவரின் குலம் காக்கும்" என இரு பொருள் பட பாடல் எழுதிய கவியரசரையா?
மருத மலையை அறுபடை வீடுகள் நிலைக்கு உயர்த்திய தேவரையா?
அழகாக இசை அமைத்த குன்னக்குடியையா?
ஆத்மார்த்தமாக பாடிய மதுரை சோமுவையா?
இல்லை ...அருமையான பாடலை பதிவேற்றிய ஐயா உங்களையா?/////
அது ஒரு கூட்டு முயற்சி. அவர்களை மட்டும் பாராட்டினால் போதும் சகோதரி! என ப்ங்கு ஒன்றுமில்லை. கடைத்தேங்காயை எடுத்து வழியில் உள்ள பிளளையாருக்கு உடைத்தேன். அவ்வளவுதான்.
//// thanusu said...
ReplyDeleteநான் பாலகனாய் இருந்த நாட்களை மீண்டும் என் நினைவுக்கு கொண்டு வந்த பாடல்.
இந்த பாடலை நான் மனப் பாடமாகவே பாடிய நாட்கள் பல உண்டு . காரணம் பக்கத்தில் இருந்த டூரிங் டாக்கீஸில் தினமும் மாலை வேளையில் திரைபடம்
ஆரம்பிக்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு சவுன்ட் ஸ்பீக்கரில் இந்த பாடலைத்தான் முதலில் போடுவார்கள் அதை கேட்டு கேட்டு எனக்கு முழுமையாக மனனம் ஆன பாடல்.M.G.R.அவர்களை பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்த காலங்களில் தேவரையும் அறிந்து கொண்டேன் . சாண்டோ M.M.A.சின்னப்பா தேவர் ,திவீர முருக பக்தர் .அதிலும் மருதமலை முருகனுக்கு இவர் அடிமை .
இவரின் முருக பக்தியே இவரை உயர்த்தியது.
நல்லதொரு படம் நல்லதொரு பாடல் .////
நல்லதொரு பின்னூட்டம். நன்றி தனூர் ராசிக்காரரே!
/////suthank said...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கங்கள்,
மதுரை சோமு அவர்களின் அற்புதமான பாடலை பதிவிட்டு எங்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்.உண்மையாக சோமுவின் அந்த கம்பீரமான குரலில்
பாடலை கேட்டபொழுதுநீண்ட நாட்களின் பின் உள்ளத்திலும்,உடலிலும் உருவான உணர்ச்சிப் பிரவாகத்தை எழுத்தில் எழுதமுடியவில்லை.அதிகாலை 3;30 ற்கு பதிவிட்டுள்ளீர்கள்,பாடலை தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.
சுதன்.க
கனடா./////
உங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!
//// kmr.krishnan said...
ReplyDeleteஃபத்வா பற்றி பயமில்லாமல் இப்படி வேஷம் போட்டது துணிச்சல்தான். பாராட்டுக்கள்.
நாதஸ்வரக் குரல் கொண்டவர் சோமு. அவரது பாடல் கொடுத்தமைக்கு நன்றி அய்யா!////
உங்களின் பின்னூடத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
///// josphin said...
ReplyDeleteமுஸ்லிம் பெற்றோர்களுடன் செல்லும் கிருஷ்ணர் மிகவும் அருமை. அர்த்தங்கள் ஆயிரம்./////
ஆமாம்! அதனால்தான் பதிவில் அந்தப் படத்தைக் கொடுத்தேன்!
///// ஏமாலியின் கனிப்பு said...
ReplyDeleteவார்த்தைப்ரயோக டப்டு சார்.
"வேலையா..." என்பது வேலய்யா... என்பது போலுல்லது.
பின்னாடியே இன்னெருப் பாடல்வரிகளும் நினைவிற்கு வருகின்றது.
"மங்கயரின் குங்குமத்தைக் காக்குமுகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளை கானுமுகம் ஒன்று
சஞ்ஜலத்தில் வந்தவரைத்தாங்குமுகம் ஒன்று
ஜாதிமதபேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நேய்நெடிகள் தீர்த்துவெய்க்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு,ஆறுமுகம் இங்கு.. என்று "திருச்செந்தூரின் கடலேரத்தில்" பாடலது. படத்தில் டி எம் எஸ் மற்றும் சீர்காளி கோவிந்தராஜன் அவர்கள் பாடியதாக வரும்/////
என்ன ஆயிற்று ராசா? த்மிழில் இத்தனை எழுத்துப்பிழைகள்?
ஏமாலியின் கனிப்பு - ஏமாளியின் கணிப்பு
போலுல்லது - போலுள்ளது
கானுமுகம் - காணுமுகம்
சஞ்ஜலத்தில் - சஞ்சலத்தில்
நேய்நெடிகள் - நோய்நொடிகள்
தீர்த்துவெய்க்கும் - தீர்த்துவைக்கும்
கடலேரத்தில் - கடலோரத்தில்
சீர்காளி - சீர்காழி
தட்டச்சியபிறகு ஒருமுறை படித்துப்பார்த்துவிட்டு - பின்னூட்டத்தைப் பதிவு செய்யுங்கள் நண்பரே!
//// Bala.N said...
ReplyDeleteகோவை மாநகரதின் அழகுமிகு பெருமை மிகு மருதமலை பெருமையை உணர்த்திய பாடல் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி அய்யா////
என ப்ங்கு ஒன்றுமில்லை. கடைத்தேங்காயை எடுத்து வழியில் உள்ள பிளளையாருக்கு உடைத்தேன். அவ்வளவுதான்.
ஓம் சரவணா பவ!!!ஷண்முகா சரணம்!!!பின்னூட்டதிற்கு பதில் அடித்து கொண்டு இருப்பது போல் தெரிகிறது!!
ReplyDeleteமருதமலை மாமணியே பாட்டு மனதில் நினைத்தாலே முருகபெருமானின் பக்தி உற்சாகம் வெள்ளமாய் பாயும்.அத்தகைய பாடலை பதிவிட்டு பக்தி மாலரை தந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteகிருஷ்ணர் பாடம் அருமை அவரின் ஒட்டுனர் அதைவிட அருமை!மருதமலை முருகபெருமானின் தேர் பவனி நல்ல காட்சி!
மிக்க நன்றி
வணக்கம் ஐயா,
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த பாடல்...இப்பாடலின் இசையும்,ராகமும் பாடல் வரிகளை அழகாக எடுத்து இயம்பும்...என் தந்தை முருகர் பாடல்களை தான் விரும்பிக் கேட்பார்,அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று...இப்பாடலை பார்ப்பதற்கும் அருமையாக உள்ளது...நல்ல பாடலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா...
அந்த முஸ்லிம் தம்பதியினரின் "கிருஷ்ணர்" பிள்ளை படம் அருமை...அநேகமாக மாறு வேட போட்டிக்காக போடப்பட்ட "வேஷம்" என்று நினைக்கின்றேன்...நல்ல வேளை "ஒசாமா பின்லேடனை" விட்டிவிட்டு "கிருஷ்ணரை" தேர்ந்தெடுத்தமைக்கு அவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம் .
ReplyDeleteநான் விரும்பிக் கேட்கும் முருக பக்தி பாடல்களில் இதுவும் ஒன்று. என்ன ஒரு சொல்லாடல். கவியரசருக்கு இணை அவர்தான்.
ReplyDelete///// Ananthamurugan said...
ReplyDeleteஓம் சரவணா பவ!!!ஷண்முகா சரணம்!!!பின்னூட்டதிற்கு பதில் அடித்து கொண்டு இருப்பது போல் தெரிகிறது!!////
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா! அனந்தமுருகனுக்கு அரோஹரா!
//// முருகராஜன் said...
ReplyDeleteமருதமலை மாமணியே பாட்டு மனதில் நினைத்தாலே முருகபெருமானின் பக்தி உற்சாகம் வெள்ளமாய் பாயும்.அத்தகைய பாடலை பதிவிட்டு பக்தி மாலரை தந்தமைக்கு மிக்க நன்றி!
கிருஷ்ணர் பாடம் அருமை அவரின் ஒட்டுனர் அதைவிட அருமை!மருதமலை முருகபெருமானின் தேர் பவனி நல்ல காட்சி!
மிக்க நன்றி////
உங்களின் மனம்திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி முருகராஜன்!
//// R.Srishobana said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...இப்பாடலின் இசையும்,ராகமும் பாடல் வரிகளை அழகாக எடுத்து இயம்பும்...என் தந்தை முருகர் பாடல்களை தான் விரும்பிக் கேட்பார்,அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று...இப்பாடலை பார்ப்பதற்கும் அருமையாக உள்ளது...நல்ல பாடலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா...////
உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
This comment has been removed by the author.
ReplyDelete//// R.Srishobana said...
ReplyDeleteஅந்த முஸ்லிம் தம்பதியினரின் "கிருஷ்ணர்" பிள்ளை படம் அருமை...அநேகமாக மாறு வேட போட்டிக்காக போடப்பட்ட "வேஷம்" என்று நினைக்கின்றேன்...நல்ல வேளை "ஒசாமா பின்லேடனை" விட்டுவிட்டு "கிருஷ்ணரை" தேர்ந்தெடுத்தமைக்கு அவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்...////
கரெக்ட்! நன்றி சகோதரி!
//// kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம் ./////
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல!
-கவியரசர் கண்ணதாச்ன்
//// ananth said...
ReplyDeleteநான் விரும்பிக் கேட்கும் முருக பக்தி பாடல்களில் இதுவும் ஒன்று. என்ன ஒரு சொல்லாடல். கவியரசருக்கு இணை அவர்தான்.
ஒரு பாராதிதான். அதற்குப் பிறகு ஒரு கண்ணதாசன்தான்! அதில் சந்தேகத்திற்கு இடமில்லை. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!