7.1.12

Old is Gold என்பது உண்மையா? பொய்யா?

பூமிக்கு வெளிச்சமெல்லாம்....!
Old is Gold என்பது உண்மையா? பொய்யா?

பேராசிரியர் அறிவொளி அவர்கள் மேடைகளில் பேசும் போது உண்மைகளில் பல விதங்கள் உள்ளது என்பார்.

தெரிந்த உண்மை, தெரியாத உண்மை, பாதி உண்மை, முழு உண்மை என்று உண்மைகளை வகைப்படுத்துவார்.

உலகில் மூன்று பங்கு நீர் உள்ளது என்பது பாதி உண்மை. நீர் எங்கிருந்தாலும் அதற்கடியில் பூமி உள்ளது என்பதுதான் முழு உண்மை. வலிகளில் அதீதமான வலி பிரசவ வலி என்பது நம்மில் பாதிப்பேர்களுக்கு (அதாவது ஆண்களுக்கு) தெரியாத உண்மை. நீரின்றி அமையாது இவ்வுலகு என்பது தெரிந்த உண்மை.

அதுபோல Old is Gold என்பது உண்மையா? என்றால் அது பாதி உண்மை. பழையது தங்கம் என்பதுபோல புதியதிலும் தங்கம் உள்ளது. Sometime, new things are also gold

எத்தனை நாட்களுக்குத்தான் பழையதையே தங்கம் என்று சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?

50 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கேட்டால் பழைய பாடல்களைத்தான் தங்கம் என்பார்கள்

“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே”


என்பதுபோன்ற பாடல்களுக்கு இப்போது உள்ள பாடல்கள் இணையில்லை என்பார்கள்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடலான   “தீன கருணாகரனே நடராஜா.....நீலகண்டனே!”  என்ற பாடலைக் குறிப்பிட்டால் முகத்தைச் சுளிப்பார்கள். பாடல் அக்காலத்தில் பிரபலமானது. அனைவராலும் முணுமுணுக்கப்பெற்ற பாடல். படம். திருநீலகண்டர், ஆண்டு 1939 பாடலாக்கம். பாபநாசம் சிவன். எங்கள் அப்பா காலத்துப் பாடல்!

அதனால் காலத்தை வைத்துப் பாடல்களை ஒதுக்காதீர்கள். இன்றும் சில நல்ல பாடல்கள் வருகின்றன. அதையும் ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

அன்று மூன்று அல்லது நான்கு இசைக்கருவிகளை வைத்துப் பாடலை வடிவமைத்தார்கள். பிறகு பத்திற்கும் மேற்பட்ட இசைக்கருவிகளும், 50ற்கும் மேற்பட்ட வாத்தியக்காரர்களும் சேர பாடல்களைக் கேட்பதற்கு ரம்மியமாக அமைத்தார்கள். இன்று பல மின்னணு இசைக்கருவிகள் சேர்ந்து கொண்டுள்ளது. இன்று பல பாடல்கள் அதன் இசையால் மனதைக் கிறங்க வைக்கின்றன!

உங்களுக்காக இந்தப் பகுதியில் இன்று ஒரு புதுப் பாடலைப் பதிவு செய்துள்ளேன். வாரம் ஒரு புதுப் பாடலைத் தேடிப்பிடித்துத் தரவுள்ளேன். கேட்டு மகிழுங்கள். பாடல் வரிகளையும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++
நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி ஒன்று

பூமிக்கு வெளிச்சமெல்லாம்......!
----------------------------------------------

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காலம் வந்தபிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்


------------------------------------------------------------------------------------------------
பூமிக்கு வெளிச்சமெல்லாம் சூரியனால்தான். ஆனால் காதல் வயப்பட்டவர்கள் உன்னால் என்று பிதற்றிக்கொள்வார்கள். காதல் மயக்கம் உச்ச நிலை அடையும்போது என்ன எழுதுகிறோம், என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்பது தெரியாது. அதேபோல் காதலில் சற்று சருக்கல் ஏற்பட்டாலும் பிதற்றுவார்கள். எங்கே மனிதன் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்பார்கள். எனது கைகள் தீண்டும்போது மலரும் சுடுகின்றது என்பார்கள். மலர் எப்படிச் சுடும்? ஆனால் தன் நிலையை வெளிப்படுத்த அதைவிடச் சிறந்த வரி கிடையாது. நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை என்பார்கள்.
நாம் பார்க்காத காதலா? கவியரசர் கண்ணதாசன் எழுதாத காதற்பாடல்களா?

ஆகவே பூமிக்கு வெளிச்சமெல்லாம் அவன் கண் திறப்பதினால்தான் என்பதை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்வோம்!

கானொளி - http://youtu.be/xTxRwwuX96I


நன்றி: இப் பாடலை வலையேற்றிய முகம் தெரியாத அந்த நண்பருக்கு  நம் நன்றி உரித்தாகுக! (Our sincere thanks to quality clipz.com)

பாடலாக்கம்: கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள்: காயத்ரி, ராகுல் நம்பியார்
நடிப்பு: ஜீவா & சந்தியா
இசையமைத்தவர்: விஜய் ஆண்ட்டனி
இயக்குனர்: சசி
படம்: டிஷ்யூம் (2006)

பாடலில் நெஞ்சைத் தொட்ட வரிகள் சிகப்பு நிற எழுத்துருவில் கொடுக்கப்பெற்றுள்ளன!

காலம் வந்தபிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை


என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்

வாழ்க வளமுடன்!

31 comments:

  1. புதிய பகுதியாக வரும் புதிய பாடல்களுக்கு வரவேற்ப்பு கண்டிப்பாக இருக்கும் .அவரவர் காலங்களில் அவர்கள் மிகவும் ரசித்த பாடல்கள் அவரவர்க்கு எப்போதும் பிடிக்கும் அந்த அவர்களுக்கு வயது கூடிவிடுவதால் அவர்கள் ரசித்த பாடல்களுக்கும் வயதாகி பழையதாகி விடுகிறது.

    இந்த பாடல் சம்பந்தமாக இரண்டு தினங்களுக்கு முன்பு நமது வகுப்பறை பின்னூடமும் சற்றே சூடு பிடித்தது .உபயம் உமா அவர்கள்.

    அந்த கொலைவெறி பாடலை வைத்து வந்த பின்னூட்டத்திற்கும் இந்த புதிய பாடல் பகுதிக்கும் தொடர்பு இல்லை என்றே நினைக்கிறேன்.

    நானும் செய்திகளை பார்த்தேன் கொலைவெறி பாடலின் பிரபலம். பதிவிறக்கம் செய்தும் கேட்டேன்.பாடலில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் இருந்தன.ஆனால் பாடலின் கரு வெள்ளை மனிதர்களின் கருப்பு மனங்களை பற்றியது . பாடலை கேட்கும் போது அத்தனை விசஷமில்லை .இதற்க்கு தானா CNN அவார்ட் பிரதமருடன் விருந்து என்று நினைத்தேன் .அன்று மாலை குளிக்கும்போது என்னைஅறியாமல் நான் அப்பாடலை ஹம்மிங் செய்தேன் .அப்படி என்றால் இப்பாடல் என் மனதிற்கு பிடித்திருக்கிறது என்று தானே அர்த்தம்.

    நண்பர் இலங்கை கிருஷ்ணன் அவர்கள் வேறு ஒரு பாடலை அதற்கு மாற்றாக எழுதி இருந்ததை சுட்டிக் காட்டினார்.

    திரை இசை எனபது வியாபாரம். இங்கு லாபமே பிரதானம் . மக்களுக்கு எதை பிடிக்கிறது என்பதை பார்த்து கொடுத்து நல்ல வியாபாரம் பார்பவனே நல்ல வியாபாரி.அந்த வகையில் தான் நான் அதை எண்ணுகிறேன் .

    இதோ அய்யா கூட புதிய பாடலை புதிய பகுதியாக அறிவித்திருப்பது .வகுப்பறைக்கு புதியவர்களையும் புதிய இளையவர்களையும் கொண்டுவரும் யுக்தியாக இருக்கலாம். அதுபோல் தான் அந்த பாடலும் என்று நான் நினைக்கிறேன்

    ReplyDelete
  2. உன்மையான வார்தைகள்

    ReplyDelete
  3. ஏதாவது புதுமையாகச்செய்து கொண்டே இருக்கிறீர்கள் ஐயா! பாடல் நன்றாக உள்ளது.

    ஆனால் பாடும் போது சொற்கள் புரியாமல் பாடுவதல்லாவோ இன்றைய இசை அமைப்பு!

    ReplyDelete
  4. சபாஷ் பாண்டியா..

    புதுசு எப்பவுமே ஒரு
    தினுசு... அதுக்கும் இருக்குதா தனி

    மவுசு.. என எண்ணிப்பார்க்கையில்
    கிசுகிசுக்கும் பாடல்களை வலையேற்றியது

    வகுப்பறை விடுமுறையில் கண்டு
    வந்த அனுபவம் போல் தெரிகிறது
    (சும்மா ஒரு இதுக்குத் தான்)

    காட்டுத் தேன் சுவைக்கு வெல்லம்
    கலந்த தேன் சுவை ஈடாகுமா

    காயை வைத்தே பாடல் தந்து நம்மை
    காய வைத்த ஒரு சோறு போதாதா
    (அத்திக்காய் காய் என்ற பலே பாண்டியா பாடல்)

    முத்தையா நம் பாண்டி நாட்டு
    சொத்து அய்யா என சொல்ல அவரும்

    குடிகாரர் என எல்லோருக்கும் தெரியும்
    குடிப்பழக்கத்தால் அல்ல அவர் ஊர்

    (காரை)குடி என்பதால் அவர்
    குடிக்க தந்த தேனை ரு(ர)சிக்க ...

    பார்த்"தேன்" சிரித்"தேன்"
    பக்கத்தில் அழைத்"தேன்" அன்று

    உன்னை "தேன்" என
    நான் நினைத்"தேன்" அந்த

    மலை "தேன்" இதுவென
    மலைத்"தேன்"
    (ஒரு மெய்யெழுத்தில் பொருள் மாறுகிறது பாருங்கள்)
    .

    கொடித்"தேன்" இனியங்கள்
    குடித்"தேன்" – என

    ஒரு படி "தேன்" பார்வையில்
    குடித்"தேன்" துளிர் "தேன்" சிந்தாமல்

    களித்"தேன்" கைகளில் அணைத்"தேன்" அழகினை ரசித்"தேன்"

    மலர் "தேன்" போல்
    நானும் மலர்ந்"தேன்"

    உனக்கென வளர்ந்"தேன்"
    பருவத்தில் மணந்"தேன்"

    எடுத்"தேன்" கொடுத்"தேன்"
    சுவைத்"தேன்"

    இனி "தேன்" இல்லாதபடி கதை
    முடித்"தேன்"

    நிலவுக்கு நிலவு சுகம்
    பெற நினைந்"தேன்"

    உலகத்தை நான் இன்று மறந்"தேன்"
    உறக்கத்தை மறந்"தேன்"

    உன்னுடன் நான் ஒன்று கலந்"தேன்"

    வணக்கமும்
    வாழ்த்துக்களும்

    ReplyDelete
  5. திரைப்படப் பாடல்களையும், பள்ளியில் படிக்கும் செய்யுள்களையும் மட்டுமே அறிந்திருந்த எனக்கு நாட்டுப்புறப் பாடல்களும் (கரையெல்லம் செண்பகப்பூ), புதுக்கவிதைகளின் அறிமுகமும் (மு. மேத்தாவின் கவிதை, மனைவி ஊருக்கு சென்றுவிட்ட பொழுது "இருமலா என்று யாராவது கேட்டால் நிர்மலா ஞாபகம் வருகிறது" என்ற கருத்து ... வரிகள் சரியாக நினைவில்லை :( ] கிடைத்தது திரு. சுஜாதா அவர்களால்.

    ஐயாவின் பதிவுகளிலும் முன்பு மு மேத்தாவின் புதுக்கவிதைகள் பல படித்துள்ளேன் (எனக்குப் பிடித்தது "இந்தியா என் காதலி'' என்ற கவிதை...
    "உண்மையை நான்
    ஒப்புக் கொள்கிறேன்
    காதலித்து உன்னைக்
    கட்டிக் கொள்ளவில்லை...
    கட்டிக்
    கொண்டதால்தான்
    காதலித்துக்
    கொண்டிருக்கிறேன்!")

    திரையிசைப் பாடல்களில் திருப்பம் ஏற்படுத்தியவர் வைரமுத்து, குறிப்பாக ராஜபார்வை, பயணங்கள் முடிவதில்லை படப் பாடல்கள் வேறுபட்டு தெரிந்தன. அவருடைய
    "காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
    வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
    சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
    இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்"
    என்ற பாட்டும் எனக்குப் பிடித்தது.

    ஐயா, உங்கள் பதிவுகள் மூலம் மேலும் பல புதுக்கவிதைகள் அறிமுகம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்து மகிழ்ச்சி, நன்றி :))))

    ReplyDelete
  6. நண்பர் கிருஷ்ணன் குறிப்பிட்ட கருத்தில் இருந்தது, தமிழக தமிழர்களைவிட அயல்நாட்டில் வாழும் தமிழர்களிடம் உள்ள அதீத தமிழார்வ உணர்வு பற்றியது. அது யாரும் மறுக்க முடியாத உண்மை என்பதற்கு நம் வகுப்பறையின் பின்னூட்டங்களே சான்று. உலகின் பல பகுதிகளில் இருந்து தமிழில் வரும் பின்னூட்டங்கள் அதிகம். அதிலும் சின்ன வாத்தியார் ஆனந்த் போன்று குடும்பம் புலம் பெயர்ந்து பல தலைமுறையானாலும் தமிழ் எழுதும் பாங்கு வியக்கத் தக்கது.

    குஷ்புவிற்கும், தமன்னாவிற்கும் தமிழ் பேசுவதில் உள்ள ஆர்வம் நம் இளம் தலைமுறையினருக்கு இல்லை என்பதையும் நான் கவனித்துள்ளேன். தசவதாரம் பல்ராம் நாயுடு வழியாக கமல் தமிழர்களின் இந்தப் பண்பை வாரியுள்ளார். அதில் விஞ்ஞானி கமல் சொன்னது போல் வேறு யாரவது தமிழை ஆதரிக்க வெளியில் இருந்து வருவார்கள், ஜி யு போப், கால்டுவெல் போன்றவர்கள் என்றோ ஆரம்பித்து வைத்ததுதான் அது.

    கொலைவெறிப் பாட்டு பற்றி தனுசு குறிப்பிட்டது போல் பாட்டு நல்ல மெட்டுடன் இருக்கிறது. ஆனால் கொலைவெறி என்ற வார்த்தையைத் தவிர வேறு வார்த்தைகள் தமிழில் இல்லாததால் அது தமிழ்ப் பாடல் இல்லை, அது ஆங்கிலப் பாடல். இடைக்காலத்தில், இங்கிலீஷ் மேல் ஏனிந்தக் கொலைவெறி என்று கிரேட் பிரிட்டனில் இருந்து யாராவது நொந்து போய் நம் மேல் வழக்கு தொடராமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  7. பெரும்பாலான பாடல் வரிகள் ரசிக்கும்படியாகத்தான் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து‍ இல்லை. ஆனால் அவற்றை ஆண்மை கலந்த குரலி்ல் பெண்கள் பாடுவதாலும், ஹஸ்கி வாய்‌ஸ் எனப்படும் போதைக் குரலில் பாடுவதாலும் அந்தப் பாடலை கேட்கும் போது‍ வேறுவேறு‍ அர்த்தங்கள் வருகின்றன! இடையில் காதைப் பிளக்கும் இசை வேறு. எப்படி‍ ரசிப்பது?

    ReplyDelete
  8. நன்றாக உள்ளது பாடல் வரிகள்

    http://astrovanakam.blogspot.com/

    ReplyDelete
  9. ஆசிரியர் ஐயா அவர்களுக்கும் ஏனைய வகுப்பறை நண்பர்களுக்கும் முதலில் என் புத்தாண்டு வணக்கங்கள். திருவையாற்று தியாகரஜ சுவாமிகள் ஆராதனையை முன்னிட்டு பாரதி இயக்கம் நடத்தும் புத்தகத் திருவிழா மற்றும் நாட்டியாஞ்சலி வேலையில் இருந்ததால் இந்த தாமதம். மன்னியுங்கள். சினிமா பாட்டு பற்றி ஆசிரியர் ஐயாவின் முகவுரை பாராட்டத் தக்கது. அன்றைய "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" எனும் பாடல் ஆகட்டும், பி.சுசீலாவின் "நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி நடக்கும் இளம் தென்றலே" என்னும் கண்ணதாசன் வரிகளாகட்டும் மனத்தில் ஏற்படுத்திய உணர்வை மற்றவை ஏற்படுத்த முடியுமா என்பது ஐயத்துக்குரியதுதான். பாடல்கள் நெஞ்சின் ஆழத்திலிருந்து உணர்வு மயமாகப் புறப்பட்டு, மனங்களை இளகச் செய்யும் ஆற்றல் கொண்டு பிரவாகமெடுக்க வேண்டும். வார்த்தைகளைக் கோர்த்து செப்பிடுவித்தை செய்வது கவிதையுமல்ல, அத்தகைய பாடல்கள் காலத்தால் நிலைப்பதும் இல்லை. இளம் நெஞ்சங்கள் இந்தக் கருத்தை ஏற்காமல் போகலாம். வயது முதிர்ந்தவர்கள் சொல்லும் வழக்கமான புலம்பல் என்றும்கூட சொல்லலாம். ஆனால் அன்றும் சரி இன்றும் சரி உணர்வுபூர்வமான பாடல்களை ரசிக்கும் பழக்கம் இருப்பதால் இவ்விரு வகைகளையும் ஒப்பிட்டுக் கூறுகிறேன். மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்.

    ReplyDelete
  10. /////Blogger thanusu said...
    புதிய பகுதியாக வரும் புதிய பாடல்களுக்கு வரவேற்ப்பு கண்டிப்பாக இருக்கும் .அவரவர் காலங்களில் அவர்கள் மிகவும் ரசித்த பாடல்கள் அவரவர்க்கு எப்போதும் பிடிக்கும் அந்த அவர்களுக்கு வயது கூடிவிடுவதால் அவர்கள் ரசித்த பாடல்களுக்கும் வயதாகி பழையதாகி விடுகிறது.
    இந்த பாடல் சம்பந்தமாக இரண்டு தினங்களுக்கு முன்பு நமது வகுப்பறை பின்னூடமும் சற்றே சூடு பிடித்தது .உபயம் உமா அவர்கள்.
    அந்த கொலைவெறி பாடலை வைத்து வந்த பின்னூட்டத்திற்கும் இந்த புதிய பாடல் பகுதிக்கும் தொடர்பு இல்லை என்றே நினைக்கிறேன்.
    நானும் செய்திகளை பார்த்தேன் கொலைவெறி பாடலின் பிரபலம். பதிவிறக்கம் செய்தும் கேட்டேன்.பாடலில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் இருந்தன.ஆனால் பாடலின் கரு வெள்ளை மனிதர்களின் கருப்பு மனங்களை பற்றியது . பாடலை கேட்கும் போது அத்தனை விசஷமில்லை .இதற்க்கு தானா CNN அவார்ட் பிரதமருடன் விருந்து என்று நினைத்தேன் .அன்று மாலை குளிக்கும்போது என்னைஅறியாமல் நான் அப்பாடலை ஹம்மிங் செய்தேன் .அப்படி என்றால் இப்பாடல் என் மனதிற்கு பிடித்திருக்கிறது என்று தானே அர்த்தம்.
    நண்பர் இலங்கை கிருஷ்ணன் அவர்கள் வேறு ஒரு பாடலை அதற்கு மாற்றாக எழுதி இருந்ததை சுட்டிக் காட்டினார்.
    திரை இசை எனபது வியாபாரம். இங்கு லாபமே பிரதானம் . மக்களுக்கு எதை பிடிக்கிறது என்பதை பார்த்து கொடுத்து நல்ல வியாபாரம் பார்பவனே நல்ல வியாபாரி.அந்த வகையில் தான் நான் அதை எண்ணுகிறேன் .
    இதோ அய்யா கூட புதிய பாடலை புதிய பகுதியாக அறிவித்திருப்பது .வகுப்பறைக்கு புதியவர்களையும் புதிய இளையவர்களையும் கொண்டுவரும் யுக்தியாக இருக்கலாம். அதுபோல் தான் அந்த பாடலும் என்று நான் நினைக்கிறேன்//////

    யுக்தி எல்லாம் ஒன்றுமில்லை. இருக்கிற எண்ணிக்கையே நமக்குப் போதுமானது

    ReplyDelete
  11. /////Blogger 149 said...
    உன்மையான வார்தைகள்/////

    நல்லது. நன்றி

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    ஏதாவது புதுமையாகச்செய்து கொண்டே இருக்கிறீர்கள் ஐயா! பாடல் நன்றாக உள்ளது.
    ஆனால் பாடும் போது சொற்கள் புரியாமல் பாடுவதல்லாவோ இன்றைய இசை அமைப்பு!/////

    என்ன செய்வது? இன்றைய இளைஞனைக்கேட்டால், சங்கீதக் கச்சேரிகளில் அதிகமாகப் பாடப்பெறும் தெலுங்குக் கீரத்தனைகளுக்கு என்ன சொல்கிறீர்கள் என்கிறார்கள்.

    ReplyDelete
  13. ///////Blogger iyer said...
    சபாஷ் பாண்டியா..
    புதுசு எப்பவுமே ஒரு
    தினுசு... அதுக்கும் இருக்குதா தனி மவுசு.. என எண்ணிப்பார்க்கையில்
    கிசுகிசுக்கும் பாடல்களை வலையேற்றியது
    வகுப்பறை விடுமுறையில் கண்டு
    வந்த அனுபவம் போல் தெரிகிறது
    (சும்மா ஒரு இதுக்குத் தான்)//////

    சுற்றுப்பயணம் முடிந்துவந்த உற்சாகம் உங்களிடமும் தேனாகத் தெரிகிறது விசுவநாதன்!

    ReplyDelete
  14. Blogger தேமொழி said...
    திரைப்படப் பாடல்களையும், பள்ளியில் படிக்கும் செய்யுள்களையும் மட்டுமே அறிந்திருந்த எனக்கு நாட்டுப்புறப் பாடல்களும் (கரையெல்லம் செண்பகப்பூ), புதுக்கவிதைகளின் அறிமுகமும் (மு. மேத்தாவின் கவிதை, மனைவி ஊருக்கு சென்றுவிட்ட பொழுது "இருமலா என்று யாராவது கேட்டால் நிர்மலா ஞாபகம் வருகிறது" என்ற கருத்து ... வரிகள் சரியாக நினைவில்லை :( ] கிடைத்தது திரு. சுஜாதா அவர்களால்.
    ஐயாவின் பதிவுகளிலும் முன்பு மு மேத்தாவின் புதுக்கவிதைகள் பல படித்துள்ளேன் (எனக்குப் பிடித்தது "இந்தியா என் காதலி'' என்ற கவிதை...
    "உண்மையை நான்
    ஒப்புக் கொள்கிறேன்
    காதலித்து உன்னைக்
    கட்டிக் கொள்ளவில்லை...
    கட்டிக்
    கொண்டதால்தான்
    காதலித்துக்
    கொண்டிருக்கிறேன்!")
    திரையிசைப் பாடல்களில் திருப்பம் ஏற்படுத்தியவர் வைரமுத்து, குறிப்பாக ராஜபார்வை, பயணங்கள் முடிவதில்லை படப் பாடல்கள் வேறுபட்டு தெரிந்தன. அவருடைய
    "காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
    வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
    சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
    இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்"
    என்ற பாட்டும் எனக்குப் பிடித்தது.
    ஐயா, உங்கள் பதிவுகள் மூலம் மேலும் பல புதுக்கவிதைகள் அறிமுகம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்து மகிழ்ச்சி, நன்றி :))))//////

    உங்கள் எதிர்பார்ப்பிற்கு நன்றி!

    ReplyDelete
  15. ////Blogger தேமொழி said...
    நண்பர் கிருஷ்ணன் குறிப்பிட்ட கருத்தில் இருந்தது, தமிழக தமிழர்களைவிட அயல்நாட்டில் வாழும் தமிழர்களிடம் உள்ள அதீத தமிழார்வ உணர்வு பற்றியது. அது யாரும் மறுக்க முடியாத உண்மை என்பதற்கு நம் வகுப்பறையின் பின்னூட்டங்களே சான்று. உலகின் பல பகுதிகளில் இருந்து தமிழில் வரும் பின்னூட்டங்கள் அதிகம். அதிலும் சின்ன வாத்தியார் ஆனந்த் போன்று குடும்பம் புலம் பெயர்ந்து பல தலைமுறையானாலும் தமிழ் எழுதும் பாங்கு வியக்கத் தக்கது.
    குஷ்புவிற்கும், தமன்னாவிற்கும் தமிழ் பேசுவதில் உள்ள ஆர்வம் நம் இளம் தலைமுறையினருக்கு இல்லை என்பதையும் நான் கவனித்துள்ளேன். தசவதாரம் பல்ராம் நாயுடு வழியாக கமல் தமிழர்களின் இந்தப் பண்பை வாரியுள்ளார். அதில் விஞ்ஞானி கமல் சொன்னது போல் வேறு யாரவது தமிழை ஆதரிக்க வெளியில் இருந்து வருவார்கள், ஜி யு போப், கால்டுவெல் போன்றவர்கள் என்றோ ஆரம்பித்து வைத்ததுதான் அது.
    கொலைவெறிப் பாட்டு பற்றி தனுசு குறிப்பிட்டது போல் பாட்டு நல்ல மெட்டுடன் இருக்கிறது. ஆனால் கொலைவெறி என்ற வார்த்தையைத் தவிர வேறு வார்த்தைகள் தமிழில் இல்லாததால் அது தமிழ்ப் பாடல் இல்லை, அது ஆங்கிலப் பாடல். இடைக்காலத்தில், இங்கிலீஷ் மேல் ஏனிந்தக் கொலைவெறி என்று கிரேட் பிரிட்டனில் இருந்து யாராவது நொந்து போய் நம் மேல் வழக்கு தொடராமல் இருந்தால் சரி.///////

    வழக்கா? அதுவும் இந்தியாவில் இருக்கும் பிரஜை மீதா? நொந்துபோவார்கள் சகோதரி. ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கையே 21 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிக்காமல் இருக்கிறார்கள்!

    ReplyDelete
  16. /////Blogger நிழற்குடை said...
    பெரும்பாலான பாடல் வரிகள் ரசிக்கும்படியாகத்தான் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து‍ இல்லை. ஆனால் அவற்றை ஆண்மை கலந்த குரலி்ல் பெண்கள் பாடுவதாலும், ஹஸ்கி வாய்‌ஸ் எனப்படும் போதைக் குரலில் பாடுவதாலும் அந்தப் பாடலை கேட்கும் போது‍ வேறுவேறு‍ அர்த்தங்கள் வருகின்றன! இடையில் காதைப் பிளக்கும் இசை வேறு. எப்படி‍ ரசிப்பது?/////

    ஐம்பதைத் தாண்டியவரா நீங்கள்? ஆமாம் என்றால் ரசிப்பது கஷ்டம்தான்:-))))))

    ReplyDelete
  17. /////Blogger arul said...
    nice song/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  18. ////Blogger rajesh said..
    நன்றாக உள்ளது பாடல் வரிகள்////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  19. //////Blogger vprasana kumar said...
    new effort, good sir/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  20. //////Blogger Thanjavooraan said...
    ஆசிரியர் ஐயா அவர்களுக்கும் ஏனைய வகுப்பறை நண்பர்களுக்கும் முதலில் என் புத்தாண்டு வணக்கங்கள். திருவையாற்று தியாகரஜ சுவாமிகள் ஆராதனையை முன்னிட்டு பாரதி இயக்கம் நடத்தும் புத்தகத் திருவிழா மற்றும் நாட்டியாஞ்சலி வேலையில் இருந்ததால் இந்த தாமதம். மன்னியுங்கள். சினிமா பாட்டு பற்றி ஆசிரியர் ஐயாவின் முகவுரை பாராட்டத் தக்கது. அன்றைய "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" எனும் பாடல் ஆகட்டும், பி.சுசீலாவின் "நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி நடக்கும் இளம் தென்றலே" என்னும் கண்ணதாசன் வரிகளாகட்டும் மனத்தில் ஏற்படுத்திய உணர்வை மற்றவை ஏற்படுத்த முடியுமா என்பது ஐயத்துக்குரியதுதான். பாடல்கள் நெஞ்சின் ஆழத்திலிருந்து உணர்வு மயமாகப் புறப்பட்டு, மனங்களை இளகச் செய்யும் ஆற்றல் கொண்டு பிரவாகமெடுக்க வேண்டும். வார்த்தைகளைக் கோர்த்து செப்பிடுவித்தை செய்வது கவிதையுமல்ல, அத்தகைய பாடல்கள் காலத்தால் நிலைப்பதும் இல்லை. இளம் நெஞ்சங்கள் இந்தக் கருத்தை ஏற்காமல் போகலாம். வயது முதிர்ந்தவர்கள் சொல்லும் வழக்கமான புலம்பல் என்றும்கூட சொல்லலாம். ஆனால் அன்றும் சரி இன்றும் சரி உணர்வுபூர்வமான பாடல்களை ரசிக்கும் பழக்கம் இருப்பதால் இவ்விரு வகைகளையும் ஒப்பிட்டுக் கூறுகிறேன். மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்.//////

    உங்களின் ஒப்பீடு சரிதான். திரைப்படத் துறையில் அதீதமான கற்பனையாளர்கள் உள்ளார்கள். அவர்கள் ரசிகனுக்குக் கிடைக்காதவற்றை கதாநாயகனுக்கு சர்வசாதாரணமாகக் கிடைப்பதாகக் காட்டுகிறார்கள். அதே நிலையில் பாடல்களையும் புனைகிறார்கள். It is mere fantasy. The creative imagination; unrestrained fancy. The formation of a mental image of something that is neither perceived as real nor present to the senses. கால மாற்றத்தில் அவைகள் அதிகமாகிவிட்டன. எம்.கே.டி, கண்ணாம்பாள் காலத்தில் நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் தொடக்கூட மாட்டார்கள். இன்றைய நிலமை அனைவருக்கும் தெரியும். ஆகவே சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே நமக்கு நல்லது என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  21. தற்போது வெளிவரும் திரைப்பாடல்களில் பல இசைக் கருவிகளின் அதீத தாக்கத்தினால் சொற்களைச் சரியாக கேட்கமுடிவதில்லை.வாத்தியாரின் முய‌ற்சி பாடல் வரிகளை தெரிந்துகொள்ள உதவும்.
    நன்றி.

    ReplyDelete
  22. புதுப் பாடல் பகுதி என்று ஆறு வருடத்துக்கு முந்தியிலிருந்து தொடங்கி இருக்கும் ரகசியம் என்னவென்று தெரியவில்லை..பாடல் கேட்டதைவிட வரிகள் எழுத்தாகப் படிக்கும்போது வேறுவிதமாக ரசிக்கமுடிகிறது..அந்த வாய்ப்பை அளித்த ஆசிரியருக்கு நன்றி..
    பாடல் வரிகளே கவிதை வரிகளைப் போல..கவிதையின் பக்கமாக ஈர்க்கிறது!!!??? என் ஆர்வத்தை வாழ்த்தி வரவேற்ற என் அன்பிற்கினியவரை கவிதையிலே ஏற்றி ஒரு ஊர்வலம் செய்து ஆராதிக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது..
    மற்றபடி இங்கே தனுசு, தேமொழி சொல்லியிருக்கும் விஷயங்களை ரிபீட் வுட்டுக்குறேன்..

    ReplyDelete
  23. இதே படத்து 'நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே..நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்' என்ற பாடல் எனக்கு ரொம்ம்பப் பிடித்தது..

    இந்தப்படம் வெளியான நேரம்..
    'நெஞ்சாங்கூடு' என்ற வார்த்தையை பிரயோகித்து செய்த சில லீலைகள் மனதில் இனிமையாக நிழலாடுகிறது..

    ReplyDelete
  24. /////Blogger krishnar said...
    தற்போது வெளிவரும் திரைப்பாடல்களில் பல இசைக் கருவிகளின் அதீத தாக்கத்தினால் சொற்களைச் சரியாக கேட்கமுடிவதில்லை.வாத்தியாரின் முய‌ற்சி பாடல் வரிகளை தெரிந்துகொள்ள உதவும்.
    நன்றி./////

    பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. //////Blogger minorwall said...
    புதுப் பாடல் பகுதி என்று ஆறு வருடத்துக்கு முந்தியிலிருந்து தொடங்கி இருக்கும் ரகசியம் என்னவென்று ெரியவில்லை..பாடல் கேட்டதைவிட வரிகள் எழுத்தாகப் படிக்கும்போது வேறுவிதமாக ரசிக்கமுடிகிறது..அந்த வாய்ப்பை அளித்த ஆசிரியருக்கு நன்றி..
    பாடல் வரிகளே கவிதை வரிகளைப் போல..கவிதையின் பக்கமாக ஈர்க்கிறது!!!??? என் ஆர்வத்தை வாழ்த்தி வரவேற்ற என் அன்பிற்கினியவரை கவிதையிலே ஏற்றி ஒரு ஊர்வலம் செய்து ஆராதிக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது..
    மற்றபடி இங்கே தனுசு, தேமொழி சொல்லியிருக்கும் விஷயங்களை ரிபீட் வுட்டுக்குறேன்..//////

    அதில் ரகசியம் ஒன்றுமில்லை. குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 12 ஆண்டுகள். ஒவ்வொரு புதுமைக்கும் 12 ஆண்டுகள் பிடிக்கும். அதை பின்னால் ஜோதிட வகுப்பில் விளக்குகிறேன். புதிய பாடல் என்ற பகுதியில் சென்ற 12 ஆண்டுகளில் வந்த படங்களின் பாடல்கள் இடம் பெறும்

    ReplyDelete
  26. /////Blogger minorwall said...
    இதே படத்து 'நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே..நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்' என்ற பாடல் எனக்கு ரொம்பப் பிடித்தது..
    இந்தப்படம் வெளியான நேரம்.. 'நெஞ்சாங்கூடு' என்ற வார்த்தையை பிரயோகித்து செய்த சில லீலைகள் மனதில் இனிமையாக நிழலாடுகிறது.////

    அதையெல்லாம் வெளியே சொல்லாமல் அசை போடுவதே சுகம்! keep it with you!
    'நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே..நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்' என்ற பாடல் கூடிய விரைவில் வலையேறும்.
    இதுபோல மற்றவர்களும் தங்களுக்குப் பிடித்த புதுப் பாடல்களைத் தெரிவிக்கலாம்.

    ReplyDelete
  27. ரசீகனாய் இருந்தால் எப்பாடலும் ரசனையாய் இருக்கும். காலத்திற்கு ஏற்ப சங்கீதக் கருவிகளின் எண்ணிக்கை, பயன்களுக்கு தகுந்த மாதிரி வார்த்தைகளின் ஒலி அமுங்கி வார்த்தைகளின் அர்த்தம் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியாதவாறு உள்ளது. நான் எல்லா காலப் பாடல்களையும் ரசிப்பேன். வாழ்க கலை ! வளர்க தமிழ் வளம் !
    அருணாசலம்

    ReplyDelete
  28. // தெரிந்த உண்மை, தெரியாத உண்மை, பாதி உண்மை, முழு உண்மை என்று உண்மைகளை //
    ஆசிரியர் அவர்களின் முகவரி
    எண்ணை மிகவும் கவர்ந்து உள்ளது.
    ஒரு முறை, என் நண்பர் புலவர் கீரன் ,
    " உண்மை" என்ற சொல்லை என்னிடம் விளக்கி கூறும் பொழுது ,
    உண்மை என்றால், " காலத்தினால் மாறாத ஒரு கருத்தை , தானும் உணர்ந்து , மற்றவர்களும் உணர்ந்து ஆமோதிப்பது . உண்மையின் இருப்பிடமே கல்வி. கல்வியின் இருப்பிடமே மனிதனின் அறிவு ".
    என் நண்பரின் கருத்தை என் சிந்தனைக்கு கொண்டு வந்த ஆசிரியர் அவர்களுக்கு
    என் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் .
    புது வருடம் , புது முயற்சி, புது பாடல் , நன்றாக உள்ளது.
    சந்திரசேகரன்

    ReplyDelete
  29. என்ன செய்வது? இன்றைய இளைஞனைக்கேட்டால், சங்கீதக் கச்சேரிகளில் அதிகமாகப் பாடப்பெறும் தெலுங்குக் கீரத்தனைகளுக்கு என்ன சொல்கிறீர்கள் என்கிறார்கள்.//


    இளைஞ‌ர்க‌ளின் இந்த‌ ஒப்பீடு என‌க்கு உட‌ன்பாடில்லை.நிச்ச‌ய‌மாக‌ தெலுங்கு அறிந்த‌வ‌ர்க‌ளுக்கு அவ‌ற்றில் எந்த‌ மொழிக் குழ‌ப்ப‌மும் இல்லை.தெலுங்கு அங்கு தெலுங்காகவே இருக்கும். நமக்குத் தெலுங்கு தெரியாவிட்டாலும் அந்த ராகம் தெரிந்து இருப்பதால் ராகத்தை அனுபவிப்போம். ராகம் பற்றிய ஞானமும் இல்லாவிடட்டால்தான் ச‌ங்க‌ட‌ம்.


    ஆனால் த‌மிழ்ப்பாடலா, ஆங்கில‌ப்பாட‌லா, வேறு எந்த மொழிப்பாட‌ல் என்றே அறியாத‌ப் ப‌டிக்கு வெறும் ஒலிக் க‌ல‌வையாக‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ வாத்திய‌ங்க‌ள் சூழ‌ ஆர‌வார‌ம் செய்வ‌து ச‌ரியா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com