14.1.12

காதலர்களுக்குத் தனியாக அஞ்சல்காரர்கள்!


 காதலர்களுக்குத் தனியாக அஞ்சல்காரர்கள்!

காதலர்களுக்கு இப்போது தனியாக அஞ்சல்காரர்கள் நியமைக்கப்பெற்றுள்ளார்கள். அவர்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
மேலே படியுங்கள்
--------------------------------------------------------------------------------------
நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி இரண்டு

காதல் கடிதம் தீட்டவே
-------------------------------

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

(காதல்..)

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எதன் உயிரல்லோ
 

பொன்னே  உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ

அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்துப் பூப்பூக்கிறேன்

(காதல்..)

கண்ணேஉன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா

காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா

தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா

(காதல்..)

படம்: ஜோடி (1999)
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், S ஜானகி
வரிகள்: வைரமுத்து
நடிப்பு: பிரசாந்த், சிம்ரன்

காணொளி: http://youtu.be/2hGON9d3_Gk


நன்றி: இப் பாடலை வலையேற்றிய முகம் தெரியாத அந்த நண்பருக்கு  நம் நன்றி உரித்தாகுக! Our sincere thanks to www.mediasite.net web site people

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

18 comments:

  1. கவிஞர்களின் கற்பனைக்கு எல்லையில்லை என்பதை நிரூபிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று (Only sky is the limit). வாத்தியாரும் தான் ஒரு சிறந்த கலா ரசிகர் என்பதை காட்டியிருக்கிறார்.

    ReplyDelete
  2. "காதல் இல்லையே சாதல்"
    காதலைக் கொண்டே இந்த உலகம் இயங்க செய்தான் அவன்...
    /// கண்ணேஉன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
    மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா

    காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
    உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா///

    கால் கொலுசாக்க வேண்டி நின்றவனை அவளோ!
    கண்ணோடு இது கண்ணின் வழிப் புகுந்தக் காதல்...

    "விழியில் விழுந்து
    இதயம் நுழைந்து
    உயிரில் கலந்த உறவே" என்பார் வைரமுத்து...

    இருந்தும் அவளின் உயிரின் கண்ணாக கொள்வதால்
    அது உறங்கவே மாட்டாது என்பதை அருமையாகக் கூறியிருக்கிறார்....

    இந்தப் பாடலின் சிறந்த வரிகள் அவைகள்... அதனினும் சிறப்பு...
    ஜானகி அம்மாவின் தேன் சொட்டும் இனியக் குரலோடு நமது
    உன்னிக் கிருஷ்ணனின் உன்னதக் குரலில் நம்மை கிறங்க வைத்தப் பாடல்...
    ஆஸ்கார்த் தமிழனின் இசையை சொல்லவும் வேண்டுமோ?

    பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. காலை வணக்கம் ஐயா..

    நேற்றிரவு நண்பர்களுடன் 'நண்பன்'. அதனால் வகுப்பறைக்குத் தாமதம்.

    இங்கே வந்து பார்த்தால் இங்கேயும் சினிமா சம்மந்தமான வகுப்பு(பாடம்).

    அழகான ஒரு பாடலை பதிவிட்டமைக்கு நன்றிகள் ஐயா.

    -Sathish K

    ReplyDelete
  4. எனக்குப் பிடித்த மற்றுமொரு பாடல் ஒலிக்கிறது இன்று, நன்றி ஐயா.
    எப்படி இது போன்ற கற்பனைகள் கவிஞர்களுக்கு தோன்றுகிறதோ?

    கடிதம், பேனா, மை, காகிதம், அஞ்சல்காரர் எல்லாம் சென்ற நூற்றாண்டு வழக்கிலிருந்தவை.
    தொலைபேசி, மிஸ்ட் கால், குறுஞ்செய்தி, இணைய வழி அரட்டை காலமாகிவிட்டது இப்பொழுது.
    தென்றல், நீரலை, பறவை, தோழி, மேகம், நிலா போன்றவைகள் கூட தூது போனகாலம் உண்டு என்று நினைத்தால் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
    போவோம் புதுக் கவிதை ஊர்கோலம். நன்றி.

    ReplyDelete
  5. அனவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள், புத்தாண்டு கொண்டாடுவோருக்கும் (???!!!) வாழ்த்துக்கள்.

    சம்பா அரிசி கிடைக்காவிட்டால், நியாய விலைக்கடை அரிசியில், அநியாயமாக புழுத்துக் கிடக்கும் பூச்சிகளையும் கற்களையும் பொறுக்கி எறிந்துவிட்டு, பிரஷர் குக்கரில் பொங்கல் செய்யவும். சமையல் குறிப்பு புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பது ஒரு "பிடி" உப்பு. ஒரு "படி" அல்ல. அத்துடன் அந்த அளவு பெரிய குடும்பங்களாக இருந்த பொழுது எழுதப்பட்டது. இப்பொழுது ஒரு தேக்கரண்டி உப்பு போதும். சக்கரைப் பொங்கலுக்கு அதுவும் போடக் கூடாது. கவனம், கவனம். "எனக்கு அந்த புத்தகத்தில் இருக்கும் டமில் பட்கிறது ரொம்ப கஷ்டம் யார்" என்பவர்கள் எதற்கும் முன் எச்சரிக்கையாக பீசா ஆர்டர் செய்துவிடவும்.

    ReplyDelete
  6. இயற்கையை வர்ணிப்பதில் கவிஞர்கள் யாரும் ஒருவரை ஒருவர் சளைத்தவரில்லை.இது போன்று சாந்தி நிலையம் படத்தில் வரும் "இயற்கையெனும் இளையகன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி" எனும் பாடலை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.கால ஓட்டத்தில் கவிஞர்களின் கற்பனைத்திறன் மட்டுமே மாறுகிறது.மற்றொன்று நேற்று வகுப்பறைக்கு வரமுடியவில்லை. தாங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தீர்கள். இந்தியாவின் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகு இருக்கிறது.ராகு இருந்தாலே மிகப்பெரிய சுய நலவாதிகள் தானே.அது நமது தலைவர்களின் தலைமையிலும் தெரிகிறது.இந்திய சுதந்திரத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பையே தமது குடும்பககட்சியாகப் பிரகடனம் செய்தவர்கள் எல்லாம் இந்த பாரதமண்ணில் தோன்றியவர்கள் தான். பாரத மண்ணைக்காக்க ஒரு மாவீரன் தோன்றுவான் என்று நாம் நம்புவோமாக!!!!!!.

    ReplyDelete
  7. வகுப்பறை சக வாசகர் அனைவருக்கும் என் இனிய போகிப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. ////Blogger iyer said...
    இது
    வருகை பதிவு..////

    நன்றி விசுவநாதன்!
    இது
    உங்களின் பின்னூட்டத்திற்கு!

    ReplyDelete
  9. ////Blogger ananth said...
    கவிஞர்களின் கற்பனைக்கு எல்லையில்லை என்பதை நிரூபிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று (Only sky is the limit). வாத்தியாரும் தான் ஒரு சிறந்த கலா ரசிகர் என்பதை காட்டியிருக்கிறார்.//////

    ஆமாம். ரசிக்கும் தன்மை இல்லாவிட்டால், வாழ்க்கை எப்ப்டி சுவைக்கும் ஆனந்தரே?

    சின்னச் சின்ன ஆசை
    சிறகடிக்கும் ஆசை
    மலேசியா வந்து
    உங்கள் முகம் பார்த்து - என்னை
    மறந்து நிற்க ஆசை!

    ReplyDelete
  10. Blogger தமிழ் விரும்பி said...
    "காதல் இல்லையே சாதல்"
    காதலைக் கொண்டே இந்த உலகம் இயங்க செய்தான் அவன்...
    /// கண்ணேஉன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
    மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
    காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
    உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா///
    கால் கொலுசாக்க வேண்டி நின்றவனை அவளோ!
    கண்ணோடு இது கண்ணின் வழிப் புகுந்தக் காதல்...
    "விழியில் விழுந்து
    இதயம் நுழைந்து
    உயிரில் கலந்த உறவே" என்பார் வைரமுத்து..
    இருந்தும் அவளின் உயிரின் கண்ணாக கொள்வதால்
    அது உறங்கவே மாட்டாது என்பதை அருமையாகக் கூறியிருக்கிறார்....
    இந்தப் பாடலின் சிறந்த வரிகள் அவைகள்... அதனினும் சிறப்பு...
    ஜானகி அம்மாவின் தேன் சொட்டும் இனியக் குரலோடு நமது
    உன்னிக் கிருஷ்ணனின் உன்னதக் குரலில் நம்மை கிறங்க வைத்தப் பாடல்...
    ஆஸ்கார்த் தமிழனின் இசையை சொல்லவும் வேண்டுமோ?
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!/////

    நெகிழ்ச்சியான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. Blogger Sathish K said...
    காலை வணக்கம் ஐயா..
    நேற்றிரவு நண்பர்களுடன் 'நண்பன்'. அதனால் வகுப்பறைக்குத் தாமதம்.
    இங்கே வந்து பார்த்தால் இங்கேயும் சினிமா சம்மந்தமான வகுப்பு (பாடம்).
    அழகான ஒரு பாடலை பதிவிட்டமைக்கு நன்றிகள் ஐயா.
    -Sathish K/////

    கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்திருக்கிறேன். அதற்கு எதற்கு நன்றி?

    ReplyDelete
  12. /////Blogger தேமொழி said...
    எனக்குப் பிடித்த மற்றுமொரு பாடல் ஒலிக்கிறது இன்று, நன்றி ஐயா. எப்படி இது போன்ற கற்பனைகள் கவிஞர்களுக்கு தோன்றுகிறதோ?
    கடிதம், பேனா, மை, காகிதம், அஞ்சல்காரர் எல்லாம் சென்ற நூற்றாண்டு வழக்கிலிருந்தவை.
    தொலைபேசி, மிஸ்ட் கால், குறுஞ்செய்தி, இணைய வழி அரட்டை காலமாகிவிட்டது இப்பொழுது.
    தென்றல், நீரலை, பறவை, தோழி, மேகம், நிலா போன்றவைகள் கூட தூது போனகாலம் உண்டு என்று நினைத்தால் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
    போவோம் புதுக் கவிதை ஊர்கோலம். நன்றி./////

    கட்டில், தொட்டில்
    கதவு, ஜன்னல்
    சட்டம், விட்டம்
    எதுவாக இல்லை நான்
    உன் வீட்டில்
    கொல்லையில் மரமாகத் தவிர!
    - தூரிகை சின்னராசு
    நேற்றுப் படித்த புதுக் கவிதை

    ReplyDelete
  13. ////Blogger தேமொழி said...
    அனவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள், புத்தாண்டு கொண்டாடுவோருக்கும் (???!!!) வாழ்த்துக்கள்.
    சம்பா அரிசி கிடைக்காவிட்டால், நியாய விலைக்கடை அரிசியில், அநியாயமாக புழுத்துக் கிடக்கும் பூச்சிகளையும் கற்களையும் பொறுக்கி எறிந்துவிட்டு, பிரஷர் குக்கரில் பொங்கல் செய்யவும். சமையல் குறிப்பு புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பது ஒரு "பிடி" உப்பு. ஒரு "படி" அல்ல. அத்துடன் அந்த அளவு பெரிய குடும்பங்களாக இருந்த பொழுது எழுதப்பட்டது. இப்பொழுது ஒரு தேக்கரண்டி உப்பு போதும். சக்கரைப் பொங்கலுக்கு அதுவும் போடக் கூடாது. கவனம், கவனம். "எனக்கு அந்த புத்தகத்தில் இருக்கும் டமில் பட்கிறது ரொம்ப கஷ்டம் யார்" என்பவர்கள் எதற்கும் முன் எச்சரிக்கையாக பீசா ஆர்டர் செய்துவிடவும்.///////

    பீசாவெல்லாம் காஸ்ட்லி அம்மா! இங்கே பானிபூரி, பேல்பூரிதான் மலிவு. அதை நாங்கள் வாங்கி வைத்துக்கொள்கிறோம்!

    ReplyDelete
  14. /////Blogger Rajaram said...
    இயற்கையை வர்ணிப்பதில் கவிஞர்கள் யாரும் ஒருவரை ஒருவர் சளைத்தவரில்லை.இது போன்று சாந்தி நிலையம் படத்தில் வரும் "இயற்கையெனும் இளையகன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி" எனும் பாடலை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.கால ஓட்டத்தில் கவிஞர்களின் கற்பனைத்திறன் மட்டுமே மாறுகிறது.மற்றொன்று நேற்று வகுப்பறைக்கு வரமுடியவில்லை. தாங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தீர்கள். இந்தியாவின் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகு இருக்கிறது.ராகு இருந்தாலே மிகப்பெரிய சுய நலவாதிகள் தானே.அது நமது தலைவர்களின் தலைமையிலும் தெரிகிறது.இந்திய சுதந்திரத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பையே தமது குடும்பககட்சியாகப் பிரகடனம் செய்தவர்கள் எல்லாம் இந்த பாரதமண்ணில் தோன்றியவர்கள் தான். பாரத மண்ணைக்காக்க ஒரு மாவீரன் தோன்றுவான் என்று நாம் நம்புவோமாக!!!!!!/////

    நல்லது. அப்படியே செய்வோம். நன்றி நண்பரே!.

    ReplyDelete
  15. ///Blogger minorwall said...
    வகுப்பறை சக வாசகர் அனைவருக்கும் என் இனிய போகிப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..////

    உங்களின் வாழ்த்துக்களால மனம் மகிழ்வு கொண்டது. நன்றி மைனர்!

    எங்கள் பதிவில் எல்லா நாளும் கார்த்திகை
    எங்கள் வகுப்பில் என்றும் இல்லை ஓர்குறை

    ReplyDelete
  16. பதிவிலும் கவிதை அதன் பதிலிலும் கவிதை
    எதிலும் கவிதை உங்கள் எழுத்திலும் கவிதை
    இனி எங்கும் கவிதை ... என்றும் கவிதை ...

    ReplyDelete
  17. //சின்னச் சின்ன ஆசை
    சிறகடிக்கும் ஆசை
    மலேசியா வந்து
    உங்கள் முகம் பார்த்து - என்னை
    மறந்து நிற்க ஆசை!//

    தாராளமாக வாருங்கள். தமிழகத்திற்கு போக வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய விருப்பம். முன்பு நேரம் நிறைய இருந்தது. போதிய பணம் இல்லை. இப்போது போதிய பணம் இருக்கிறது. நான் செய்யும் தொழில் மற்றும் வேறு காரணங்களால் எங்கும் நீண்ட நாட்களுக்கு செல்ல முடிவதில்லை. ’அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா’ என்ற ஔவையின் மூதுரை எவ்வளவு உண்மை என்று என் விஷயத்தில் நிரூபனமாகி விட்டது. எ(இ)தற்கும் சரியான காலம் கனிய வேண்டும். கனியும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com