12.1.12

Astrology பாளையங்கோட்டையும் திகாரும்!

 Astrology பாளையங்கோட்டையும் திகாரும்!

அலசல் பாடம்
-----------------------

   “டேய், மாப்பிள்ளை எங்கேடா இருக்காரு?

   “பாளையங்கோட்டையில”

   “அவரோட மாமனாரு?

   “அவரு, அவரோட தகுதிக்குத் தகுந்தாற்போல திகாரில இருக்காரு!”

   “ஆகா, கேட்கவே புல்லரிக்குதேடா!”

இதுபோல இருவருடைய உரையாடலை நீங்கள் கேட்டால் என்ன நினைப்பீர்கள்?

அதுபோன்ற நிலைமை எந்தக் குடும்பத்துக்கும் வரக்கூடாது. இரண்டு பேர்கள் சிறையில் இருந்தால், வீட்டில் உள்ள மற்றவர்களின் மனநிலைமை என்ன ஆகும்?

சரி, வேறு ஒரு உரையாடலைத் தருகிறேன்.

    “டேய் உங்க மாமா மந்திரியாக இருக்காரேடா, கொடுத்துவைத்த மகராசன்டா நீ”

    “என்னவிட அவருடைய மாப்பிள்ளைதான்டா கொடுத்துவைத்தவர்!”

    “எப்படிச் சொல்றே?”

    “மாப்பிள்ளை மத்திய அமைச்சரா இருக்கார்டா, மாமனார் தன்னோட செல்வாக்கில வாங்கிக்கொடுத்தாராக்கும். அதுவும் கேபினெட் மினிஸ்டர்னா பார்த்துக்கயேன்!”

இதுபோன்ற நிலைமையில் ஒரு குடும்பம் இருந்தால் அங்கே எப்படி மகிழ்ச்சி தாண்டவமாடும்?

இதை ஒரு உதாரண உரையாடலாகத்தான் சொல்லியிருக்கிறேன். யாரும் விவகாரமாக்கவேண்டாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலே உள்ள உரையாடல்கள் இரண்டையும் நினைவில் வைத்துக்கொண்டு இன்றையப் பாடங்களைப் படியுங்கள்

யோகங்களில் முதன்மையான யோகம். பரிவர்த்தனை யோகம் ஆகும்.

இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒருவர் வீட்டில் மற்றவர் அமர்வது பரிவர்த்தனை யோகம் ஆகும்
----------------------------------------------------------------
பரிவர்த்தனை யோகத்திற்கு உதாரணமாக அனைவரும் கையில் எடுக்கும் ஜாதகம் மறைந்த நம் முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் ஜாதகம் ஆகும். அதைக் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்

Horoscope of Indira Gandhi
முதல் பரிவர்த்தனை 1/7 ஆம்  நிலையில் பரிவர்த்தனை
சந்திரனின் (கடக வீட்டில்) சனி
சனியின் (மகர வீட்டில்) சந்திரன்

இரண்டாவது பரிவர்த்தனை 4/10 ஆம் நிலையில் பரிவர்த்தனை
சூரியனின் (சிம்ம வீட்டில்) செவ்வாய்
செவ்வாயின் (விருச்சிக வீட்டில்) சூரியன்
செவ்வாய்க்கு நான்காம் இடத்தில் சூரியன்.சூரியனுக்குப் பத்தாம் இடத்தில் செவ்வாய்

மூன்றாவது (பரிவர்த்தனை) 6/8 ஆம் நிலையில் பரிவர்த்தனை
குருவின் தனுசு வீட்டில் சுக்கிரன்
சுக்கிரனின் (ரிஷப வீட்டில்) குரு
சுக்கிரன் இருக்கும் இடத்தில் இருந்து குரு ஆறாம் இடத்தில். குரு இருக்கும் இடத்தில் இருந்து சுக்கிரன் எட்டாம் இடத்தில்

மொத்தம் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றுள்ளன.
அது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்றதற்குச் சமம்.
அவரைப் பற்றி புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை

நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சியைத் தருக என்று பலரும் விரும்பிய வண்ணம் அவர் ஆட்சியில் அமர்ந்து, உலக அளவில் பெரும் புகழைப்பெற்றார்.

அந்த மூன்று நிலைப் பரிவர்த்தனைகளில், அந்த மூன்றாம் நிலைப்பாடுதான் கொஞ்சம் சுமாரானது. 6/8 ஆம் நிலைப் பரிவர்த்தனை சிலாக்கியமானதல்ல.

ஆனாலும் அதில் சம்பந்தப்பட்ட இரண்டு கிரகங்களுமே சுபக்கிரகங்கள் ஆகும். அதிலும் குருபகவான் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டிற்கும் உரியவர் (அதாவது பாக்கியாதிபதி. Lord for gains) அவர் லக்கினத்தில் இருந்து பதினொன்றில் அமர்ந்ததால் ஜாதகியைக் காப்பாற்றியது.

6/8 நிலையைப் போலவே 1/12 நிலைப்பாட்டில் பரிவர்த்தனையும் மோசமானது. ஜாதகத்தில் அந்த மோசமான நிலைப்பாட்டிற்கு வேறு சுபக்கிரகங்களின் பார்வை இல்லை என்றால் ஜாதகனை அல்லது ஜாதகியை அது படுத்தி எடுத்துவிடும்.

அதை உங்களுக்கு விளக்குவதற்காக கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்
------------------------------------------------------------------------------------


ஜாதகிக்குக் குழந்தை இல்லை.

மருத்துவ சோதனைகள் ஜாதகிக்கு எந்தவித உடற்குறைபாடுகளும் இல்லை என்று சொல்லிவிட்டன.

ஆனாலும் குழந்தை இல்லை.

ஏன் குழந்தை இல்லை?

என்ன கிரகக் கொளாறு?

லக்கினாதிபதி குருவும், ஐந்தாம் அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்கள். ஆகா, அப்படியென்றால் ஜாதகிக்கு உடனே குழந்தை பிறந்திருக்க வேண்டுமே?

அதுதான் இல்லை. என்ன நிலையில் பரிவர்த்தனையாகி உள்ளார்கள் என்று பாருங்கள்.

லக்கினாதிபதி குரு 12ஆம் வீட்டில். செவ்வாயின் வீட்டில். விருச்சிகத்தில்.
செவ்வாய் லக்கினாதிபதி குருவின் வீட்டில் தனுசுவில்

இருவரும் 1/12 நிலைப்பாட்டில் பரிவர்த்தனை.

லக்கினாதிபதி 12ல் இருந்தாலே ஜாதகன் அல்லது ஜாதகி ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்படப் பிறந்தவர்கள் ஆவார்கள். அத்துடன் லக்கினாதிபதிக்கு வேறு எந்த சுபப்பார்வையும் இல்லை.

அத்துடன் ஐந்தாம் வீட்டில் (குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில்) சனீஷ்வரன்!


கேட்கவும் வேண்டுமா?

உடையவர்கள் ஒழுங்காக இல்லாததால் ஐந்தில் நுழைந்த சனி ஜாதகியைப் போட்டுத்தள்ளிவிட்டான்.

ஜாதகிக்குக் கடைசிவரை குழந்தையே இல்லாமல் போவிட்டது.

இங்கே உள்ள சனி  நீச சனி. நீசமடைந்திருந்தாலும் சனி சனிதான். நீசம் பெற்றிருந்தாலும் குரு குருதான் என்பதைப்போல - கெட்டாலும் மேன்மக்கள் மக்களே. என்பதைப்போல, கெட்டாலும் தீயவர்கள் தீயவர்களே. அதை மனதில் வையுங்கள்.
----------------------------------------------------
மோசமான பரிவர்த்தனைக்கு மேலே துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாளையங்கோட்டை திகார் உதாரணத்தையும், நல்ல பரிவர்த்தனைக்கு அதற்கு அடுத்துக் குறிப்பிட்டுள்ள அமைச்சர்கள் திகார் உதாரணத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்

பரிவர்த்தனையாகியும் கிரகங்கள் 6, 8 அல்லது 12ல் அமர்ந்தால், அது சிறப்பானதல்ல!

ஜாதகத்தை ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு  - அதாவது குழந்தை இல்லையே என்பது போன்ற அல்லது திருமணம் நடைபெற வில்லையே அல்லது  நல்ல வேலை கிடைக்கவில்லையே என்பது போன்ற கேள்விகளுக்கு  இப்படித்தான் அதாவது இந்தக் கோணத்திலும் அலச வேண்டும். அர்த்தம் ஆனதா?

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச் சேர்க்கை

தன்னிலை விளக்கம்:

10.1.2012ல் எழுதிய “இந்தியாவைப் பற்றி என்ன(டா) நினைத்துக் கொண்டிருக் கிறீர்கள்?” என்ற தொடர் பதிவைத் தொடராமல் நிறுத்தியதில் சிலருக்கு மகிழ்ச்சி.

சிலருக்கு வருத்தம். சிலர் அதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சிலர் வெளிப்படுத்தவில்லை.

உங்களுக்காக அவற்றை - அதாவது வந்த பின்னூட்டங்களைத் தொகுத்துக் கொடுத்து, என்னுடைய பதிலையும் அடிக்குறிப்பாக எழுதியுள்ளேன். படித்துப்
பாருங்கள்

1. மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பின்னூட்டம்

Blogger csekar2930 said...
    ஆசிரியர்க்கு வணக்கம். இறைவன் கருணை மிக்கவன். அதனால் தான் ஆசிரியரை இறைவன் என்கிறோம். வேண்டுதல் வேண்டாமை இறைவனுக்கு

கிடையாது. ஆசிரியரும் அதை கடை பிடித்து, மாணவனின் உள்ளத்தில் என்றும் குடி கொண்டுள்ளார். இது தான் கல்வியின் சிறந்த தன்மை என்பது.
மிக்க மகிழ்ச்சி. நன்றி
----------------------------------
2. வருத்தத்தை வெளிப்படுத்திய நான்கு பின்னூட்டங்கள்

Blogger redfort said...
    ஐயா வணக்கம், நீங்கள் இந்தியாவின் ஜாதக அலசலை தொடராததில் மிகவும் வருத்தமே.மேலும் தற்போதைய சூழ்நிலையில் இது தேவையானதே.
அப்படியிருக்க திரு அய்யர் அவர்கள் வேண்டாம் என்பதற்கான காரணத்தை கூற வேண்டுகிறேன். பெரும்பான்மையோரின் விருப்பம் இதுவாயிருக்க நீங்கள்  திரு அய்யர் அவர்கள் ஒருவரின் கருத்திற்க்காக மட்டும் இந்தியாவின் ஜோதிட அலசலை நிறுத்தியிருப்பது சரியா ஐயா?

Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    காய்ச்சலால் சரியாக வகுப்பறைக்கு வர இயலவில்லை...மாணவர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவின் ஜாதகத்தை பற்றிய அலசலை படிப்பதற்காகவே அம்மாவிடம் கெஞ்சி கேட்டு கொண்டு வகுப்பறைக்கு வந்தால்...ஏமாற்றமாக இருந்தது(அம்மாவுக்கும் தான்!)...
அய்யர் அவர்களின் கருத்து சரியாகத் தோன்றினாலும்,அவதார மூர்த்திகளான இராம பிரான்,கிருஷ்ணர்,அனுமந்தர் போன்ற தெய்வங்களுக்கும் ஜாதகங்கள் எழுதப்பட்டு,கணிப்புகளும் மிக சரியாகவும் இருக்கின்றனவே!!!

Blogger Ramanathan said...
Was eagerly expecting India's Prospects in Astrology. If Iyer is not interested that is fine. But for other's sake, pls publish.

Blogger Rajaram said...
ஐயா வகுப்பறையில் இத்தனை மாணவர்கள் இருக்கும் போது ஒரு மாணவருக்காக மட்டும் இந்தியாவின் ஜாதகத்தை அலசாமல் விட்டது கொஞ்சம் வருத்தம்.அலசியிருந்தால் முண்டேன் ஜோதிடம் பற்றியும் அலசித் துவைத்துக் காண்பித்திருப்பீர்கள்.கற்றுக்கொண்ட மாதிரியும் இருந்திருக்கும்.பழனியாண்டி பேரைச் சொன்னவுடனே சும்மா அதிருதுல்ல.
+++++++++++++++++++++++++
அடியவனுடைய பதில்.

1. வாத்தியார் ஒன்றைச் செய்தால், அது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை வேண்டும் உங்களுக்கு. ஆகவே நம்பிக்கை வையுங்கள். நேரம் கனியட்டும்
அப்போது நிச்சயம் அலசுவோம்.

2. ஆர்வமாக இருந்தவர்கள் வருந்த வேண்டாம். வாத்தியார் அலசாவிட்டால் என்ன? வேறு பெரியவர்கள், அதாவது மகான்கள், பெரிய ஜோதிடர்கள்
இந்தியாவின் மேன்மையைப் பற்றி சொல்லிவைத்த செய்திகள் வாத்தியாரின் சேகரிப்பில், News Paper Cuttings வடிவில் உள்ளன. வாத்தியாரின் முப்பது
ஆண்டுகால சேமிப்புக்கள் அவை. அவற்றில், இரண்டு அல்லது மூன்றை ஸ்கேன் செய்து உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பத் தயாராக உள்ளேன்.
பார்த்து மகிழ விருப்பம் உள்ளவர்கள் வாத்தியாருக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

classroom2007@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்
சப்ஜெக்ட் பாக்சில் Subject: Paper cutting என்று மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

51 comments:

  1. வணக்கம் ஐயா,
    நீங்கள் இந்தியாவின் ஜாதக அலசலை தொடர வேண்டும்,பழனி முருகா எங்கள் வாத்தியார்கிட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  2. ஐயா காலை வணக்கம். பாடத்திற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  3. GoodMorning Sir ,

    Yenna irundhaalum vaathiyaar vaathiyaar thaan ...Belated NewYear wishes and advanced pongal wishes sir ..
    Awaiting your posts eagerly
    Thanks
    Sowmya

    ReplyDelete
  4. இணைய பிரச்சினை காரணமாக இரு தினங்கள் வகுப்புக்கு வரமுடியவில்லை.

    அன்னை இந்திராவின் ஜாதக அலசலில் இரண்டாம் பரிவர்த்தனையாக அய்யா குறிப்பிட்டு இருப்பது ,சூரியன்-செய்வாய் 4 /10 நிலை என்று. ஆனால் ஜாதக கட்டத்தில் இரண்டும் ஐந்துமாக இருக்கிறது. கவனிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. அய்யாவுக்கு வணக்கம், இந்திரா ஜாதகத்தை அடிப்படை பாடங்களில் படித்து உள்ளேன். மீண்டும் நினைவு படுத்தி பார்த்துக்கொண்டேன். என்னகொரு சந்தேகம், எட்டாம் இடமும்( கெட்ட வீடு) ஒன்பதாம் இடமும் பரிவர்த்தனை ஆகி இருந்தால் பலன் எப்பிடி பார்க்க வேண்டும்? எனக்கு எட்டில் சுக்ரனும்(கன்னி) , ஒன்பதில் புதனும் (துலாம்) பரிவர்த்தனை. --- Kalai Seattle

    ReplyDelete
  6. Sir,

    Second exchange is between 2nd and 5 th lord(Sun and Mars) and third exchange is between 6th and 11 th lord(Venus and Jupiter).

    ReplyDelete
  7. Ayya,

    Small Request from your humble student. Initially you were very punctual and continuity was there in each topic. But you are deviating into various topics nowadays. Examples like Thesa/Puthi lessons and Nachstra lessons got stopped abruptly. Please forgive me If I would've told something wrong.

    Student,
    Trichy Ravi

    ReplyDelete
  8. இணைய பிரச்சினை காரணமாக இரு தினங்கள் வகுப்புக்கு வரமுடியவில்லை.

    வந்த பின் ஏமாற்றத்தையே பார்த்தேன்.

    மதிப்பிற்குரிய iyer அவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல்நல் வாழ்த்துக்களுடன் வணக்கம்.

    நான் வகுப்பிற்கு இளையவன் . தாங்கள் மூத்தவர் .உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது உங்களின் பாடல்களைப் போல உங்களின் போர்க்குணம் கொண்ட அமைதியான பிடிவாதம்.

    இந்திய ஜாதக அலசலில் ஏற்படக்கூடிய நிறை குறைகள் தாங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் என்போன்றோருக்குஅது தெரியாது.ஆனால் அதை அறிந்துகொள்ள ஆவலில் இருந்தோம். அதை தெரிந்துக் கொண்டு நாம் ஏதும் செய்ய போவதில்லை . அதனை ஒரு பாடமாகவே எடுத்துக் கொள்ள நினைத்தோம்.

    ஜாதக அலசல் வெளி வந்து அதில் உள்ள நிறை குறைகளை நீங்கள் விமர்சிக்கும் போது அதையும் நாங்கள் ஒரு பாடமாகவே எடுத்து கொண்டு இருப்போம்.

    சில வாரங்களுக்கு முன்பு கூட "உதித்தல்-தோன்றுதல்" பற்றிய கருத்து பரிமாற்றம் பின்னூட்டத்தில் நடந்தது அதையும் நானும் மற்றவர்களும் விவாத மன்றமாகவே பார்த்தோம். அதில் தங்களின் மொழி ஆக்கமும் தமிழும் நன்றாக இருந்தது. அப்போது தங்களின் தமிழையும் நான் ரசித்தேன் .

    அதைப்போன்று, இந்திய அலசல் வெளிவந்து தாங்களின் பின்னூட்டமும் நிறை குறைகளுடன் வந்திருந்தால் அதனையும் ஒரு பாடமாகவே எடுத்துக் கொண்டு இருப்போம் . ஜாதக அலசல் மற்றும் தாங்களின் பின்னூட்டம் என்ற இரண்டு பாடங்களையும் நாங்கள் தவற விட்டுவிட்டோம்.

    ஒரு தந்தையிடம், ஒரு மூத்த அண்ணனிடம் மகனோ தம்பியோ தனது ஆசையையும் குறையையும் தெரிவிப்பது போலவே நான் தங்களிடம் எனது விருப்பத்தை சொல்லி இருக்கிறேன்

    முடிவுகள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது தத்துவ மேதைகள் முதல் மாவீரர்கள் வரை கையாண்ட ஒரு கொள்கை .

    நன்றிகலந்த வணக்கத்துடன் -தனுசு

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்,

    அன்னை இந்திராவின் ஜாதக அலசல் அருமை.ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.

    நீங்கள் 1/7,4/10,6/8 ம் நிலைகள் என்று சொல்லிருப்பது அவைகள் ஒன்றுக்கொன்று அமர்ந்திருக்கும் நிலைப்பாடு என்று நினைக்கிறேன்.

    அதேபோல் 8/6 நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.சனியும் புதனும் (சனி மிதுனத்தில்,புதன் மகரத்தில்)(லக்னம்-மகர லக்னம்.)

    மேலும் சிம்ம லக்னம், பாக்கியதிபதி செவ்வாய் 12ல் நீசம், ராசியதிபதி சந்திரன் 4ல் நீசம் அவர்கள் ஒன்றுக்கொன்று 9/4 நிலையில் நீசமாகி பரிவர்த்தனை பெற்றுள்ளார்கள். இந்த பரிவர்த்தனைக்கு பலன் எப்படி இருக்கும்.

    ReplyDelete
  10. /////Blogger Prabu said...
    வணக்கம் ஐயா,
    நீங்கள் இந்தியாவின் ஜாதக அலசலை தொடர வேண்டும்,பழனி முருகா எங்கள் வாத்தியார்கிட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்.////

    ஆகா. உங்கள் வேண்டுகோளை அவர் ஏற்று, வந்து, சொல்லட்டும். நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger Sathish K said...
    ஐயா காலை வணக்கம். பாடத்திற்கு நன்றிகள் பல./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. ///Blogger Sowmya said...
    GoodMorning Sir ,
    Yenna irundhaalum vaathiyaar vaathiyaar thaan ...Belated NewYear wishes and advanced pongal wishes sir ..
    Awaiting your posts eagerly
    Thanks
    Sowmya/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. Blogger thanusu said...
    இணைய பிரச்சினை காரணமாக இரு தினங்கள் வகுப்புக்கு வரமுடியவில்லை.
    அன்னை இந்திராவின் ஜாதக அலசலில் இரண்டாம் பரிவர்த்தனையாக அய்யா குறிப்பிட்டு இருப்பது ,சூரியன்-செய்வாய் 4 /10 நிலை என்று. ஆனால்

    ஜாதக கட்டத்தில் இரண்டும் ஐந்துமாக இருக்கிறது. கவனிக்க வேண்டுகிறேன்./////

    இரண்டும் ஐந்து என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது அவர்களுடைய வீடுகளை. பரிவர்த்தனையான பிறகு அவர்களுடைய position என்னவென்று பாருங்கள்
    செவ்வாய்க்கு நான்காம் இடத்தில் சூரியன் இருக்கிறார். சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்று எண்ணிப்

    பாருங்கள். பத்தாவது இடத்தில் இருக்கிறாரா - இல்லையா?

    ReplyDelete
  14. /////Blogger Kalai said...
    அய்யாவுக்கு வணக்கம், இந்திரா ஜாதகத்தை அடிப்படை பாடங்களில் படித்து உள்ளேன். மீண்டும் நினைவு படுத்தி பார்த்துக்கொண்டேன். என்னகொரு

    சந்தேகம், எட்டாம் இடமும்( கெட்ட வீடு) ஒன்பதாம் இடமும் பரிவர்த்தனை ஆகி இருந்தால் பலன் எப்பிடி பார்க்க வேண்டும்? எனக்கு எட்டில்

    சுக்ரனும்(கன்னி) , ஒன்பதில் புதனும் (துலாம்) பரிவர்த்தனை. --- Kalai Seattle/////

    பரிவத்தனையாகியுள்ள கிரகங்களை வைத்து பலன்கள் மாறுபடும்!

    ReplyDelete
  15. Blogger govind said...
    Sir,
    Second exchange is between 2nd and 5 th lord(Sun and Mars) and third exchange is between 6th and 11 th lord(Venus and Jupiter).///////

    பரிவர்த்தனையான பிறகு உள்ள நிலைமை என்னவென்று பார்த்தீர்களா? மறுபடியும் ஒருமுறை பதிவைப்பாருங்கள்
    ownership வேறு placement வேறு

    ReplyDelete
  16. அறிந்து கொள்வதில் இரண்டு வகை இருப்பதாக (எனக்குத்) தோன்றுகிறது.
    மனித உடலைக் கூறுபோட்டு கற்கும் மருத்துவம் ஒரு உதாரணம். அது கல்வி. அந்த வகுப்பின் பாடம், ஆராய்ச்சி மனப்பாண்மையும் ஆர்வமும் உள்ளவர்களுக்கே அது. என்போன்ற ஒரு மனித உடலை வெட்ட மாட்டேன் என்பது அங்கு உதவாது. தன் தாய்க்கும் அறுவைச் சிகிச்சை செய்ய நேரும் பொழுது மருத்துவர்கள் தயங்குவதில்லை. இது ஒரு கண்ணோட்டம்.

    கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிந்து கொள்ளும் அறிவியல் முன்னேற்றத்திலும், எதுவாயிருந்தாலும் என் குழந்தை இது. பிறக்கும்பொழுது அதைத் தெரிந்து கொள்கிறேன், நடப்பது தொடர்ந்து நடக்கட்டும் என்பது அன்பு மிகுதியில் உள்ள கண்ணோட்டம். இது ஐயர் ஐயா அவர்களின் மனப்போக்கினை குறிக்கிறது.

    அவர் கருத்துக்கும் தலை வணங்குகிறேன். அவர் காட்டிய வழியைப் பின்பற்றி அவரைப்போலவே என்கருத்தையும் ஆணித்தரமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். இது வகுப்பு, கல்வியில் ஆராய்சிக் கண்ணோட்டம் தேவை. "களவும் கற்று மற" என்பது கற்றலின் கோட்பாடு.

    ReplyDelete
  17. /////Blogger Ravichandran said...
    Ayya,
    Small Request from your humble student. Initially you were very punctual and continuity was there in each topic. But you are deviating into various

    topics nowadays. Examples like Thesa/Puthi lessons and Nachstra lessons got stopped abruptly. Please forgive me If I would've told something wrong.
    Student,
    Trichy Ravi/////

    அது தொடரும். Thesa/Puthi lessons and Nachstra lessons பின்னால் வரும். ஒரேயடியாக ஒரே தலைப்பில் பாடங்களை எழுதினால் சுவை குன்றிவிடும் என்பதற்காக வெரைட்டியாக எழுதிக்கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  18. /////Blogger thanusu said...
    இணைய பிரச்சினை காரணமாக இரு தினங்கள் வகுப்புக்கு வரமுடியவில்லை.
    வந்த பின் ஏமாற்றத்தையே பார்த்தேன்.
    மதிப்பிற்குரிய iyer அவர்களுக்கு, புத்தாண்டு மற்றும் பொங்கல்நல் வாழ்த்துக்களுடன் வணக்கம்.
    நான் வகுப்பிற்கு இளையவன் . தாங்கள் மூத்தவர் .உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது உங்களின் பாடல்களைப் போல உங்களின் போர்க்குணம்

    கொண்ட அமைதியான பிடிவாதம்.
    இந்திய ஜாதக அலசலில் ஏற்படக்கூடிய நிறை குறைகள் தாங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் என்போன்றோருக்குஅது தெரியாது.ஆனால் அதை

    அறிந்துகொள்ள ஆவலில் இருந்தோம். அதை தெரிந்துக் கொண்டு நாம் ஏதும் செய்ய போவதில்லை . அதனை ஒரு பாடமாகவே எடுத்துக் கொள்ள

    நினைத்தோம்.
    ஜாதக அலசல் வெளி வந்து அதில் உள்ள நிறை குறைகளை நீங்கள் விமர்சிக்கும் போது அதையும் நாங்கள் ஒரு பாடமாகவே எடுத்து கொண்டு

    இருப்போம்.
    சில வாரங்களுக்கு முன்பு கூட "உதித்தல்-தோன்றுதல்" பற்றிய கருத்து பரிமாற்றம் பின்னூட்டத்தில் நடந்தது அதையும் நானும் மற்றவர்களும் விவாத

    மன்றமாகவே பார்த்தோம். அதில் தங்களின் மொழி ஆக்கமும் தமிழும் நன்றாக இருந்தது. அப்போது தங்களின் தமிழையும் நான் ரசித்தேன்
    அதைப்போன்று, இந்திய அலசல் வெளிவந்து தாங்களின் பின்னூட்டமும் நிறை குறைகளுடன் வந்திருந்தால் அதனையும் ஒரு பாடமாகவே எடுத்துக்

    கொண்டு இருப்போம் . ஜாதக அலசல் மற்றும் தாங்களின் பின்னூட்டம் என்ற இரண்டு பாடங்களையும் நாங்கள் தவற விட்டுவிட்டோம்.
    ஒரு தந்தையிடம், ஒரு மூத்த அண்ணனிடம் மகனோ தம்பியோ தனது ஆசையையும் குறையையும் தெரிவிப்பது போலவே நான் தங்களிடம் எனது

    விருப்பத்தை சொல்லி இருக்கிறேன்
    முடிவுகள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது தத்துவ மேதைகள் முதல் மாவீரர்கள் வரை கையாண்ட ஒரு கொள்கை .
    நன்றிகலந்த வணக்கத்துடன் -தனுசு////

    இந்தப்பின்னூட்டத்திற்கு திருவாளர் விசுவநாதன் வந்து பதில் சொல்வார். அதுதான் முறையும்கூட.பொறுத்திருங்கள் தனுசு!

    ReplyDelete
  19. /////Blogger eswari sekar said...
    arumiuna jathka alasel//////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. ஐயா இன்றைய ஜாதகப் பாடத்திற்கு நன்றி. மீண்டும் ஜாதக அலசல்கள் கலை கட்டுகிறது.

    நேற்றைய கதை நன்றாக இருந்தது. உங்கள் கதை முடிவுகளும் எழுத்து நடையும் எனக்கு மிகவும் பழகி விட்டது போல் தோன்றுகிறது. அடுத்த சிறுகதை தொகுப்பினை நூல் வடிவில் விரைவில் எதிர் பார்க்கலாம் என நினைக்கிறேன். நன்றி

    ReplyDelete
  21. ஐயா வணக்கம்,

    நானும் தனுசு அவர்களின் கருத்துக்கு வலுச்சேர்க்கிறேன்.ஆம் திரு அய்யர் அவர்களே நீங்கள் உங்கள் முடிவுகளில் சிறு மாற்றங்களைச் செய்தால் எங்களைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கெல்லாம் நிறைய ஜோதிட பாடங்கள் கிடைக்கும்.

    ReplyDelete
  22. தோழமைக் குழுவிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்:
    யாராவது இந்த எழுத்துருவை தமிழ் வடிவமாகப் பார்க்க என்ன செய்ய வேண்டும் எனக் கூறுங்கள். நான் வழக்கமாக உபயோகிக்கும் இணையத் தளத்தினால் (http://kandupidi.com/converter/) உதவ இயலவில்லை. நன்றி.
    ______

    ïu£il¡»sÉ: mt‹ fyfybtd¢ áǤjh‹ - v‹D« bjhlÇš fyfy v‹gij
    ïu©lhf¥ ãǤjhš bghUŸ juhJ. ãǤJ¢ brhšyî« KoahJ. Mjyhš, ïu£il¡
    »sÉ (»sÉ-brhš) vd¥gL«. ïit xÈ¡F¿¥ò, Éiuî¡F¿¥ò, Éa¥ò¡ F¿¥ò, ád¡
    F¿¥ò v‹gd nghy¥ gytif¡ F¿¥òfis cz®¤J«.

    ReplyDelete
  23. Dear Guruji,

    thanks for today's lesson...it is very informative.

    yours truly,
    kannan

    ReplyDelete
  24. Dear Guruji,

    Re: India's Future !!! astro-prediction

    i don't think others predictive paper cutting will match your view of analysing INDIA'S FUTURE.

    Hence , we humbly request your goodselves to reconsider your position and thereby provide us your analysis on above issue.

    awaits eagerly
    kannan

    ReplyDelete
  25. ஆசிரியர் அவர்களுக்கு பரிவர்த்தனை விளக்கம் அருமை.சிம்ம லக்கினத்திற்கு குரு(துலாத்தில்),சுக்கிரன்(உச்சம்),6/8 ஆம் இடப் பரிவர்த்தனை எந்த மாதிரியான பலனைக் கொடுக்கும்.குருவிற்கு லக்கினாதிபதி சூரியனின்(உச்சம்) பார்வை.நல்ல பலனை எதிர்பார்க்கலாமா?.இல்லைக் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாத கதை தானா?.

    ReplyDelete
  26. வணக்கம், இந்தியாவின் ஜாதக அலசலை எதிர்பார்த்து எமாற்றம் அடைந்தேன், பரவாயில்லை வாழ்கையில் இது எல்லாம் சகஜம் எதிபார்ப்பும் எமாற்றமும் கலந்தது தான் வாழ்க்கை.தங்கள் ஜோதிட புத்தக வெளியிட்டை பற்றி தகவல் அறிந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

    ReplyDelete
  27. Dear sir, i have a big doubt. i am trying to get answer for the below question from various sources. but no answer. please clarify me. if three planets are in parivarthana, like 1st in 4th house and 4th in 9th house and 9th in 1st house. another example like venus in cancer(kadagam), moon in capricon (magaram), saturn in libra. can we conosider this as parivarthana yoga. please teach me sir.

    Regards,
    young student,
    Ramkumar

    ReplyDelete
  28. ///Blogger redfort said...
    ஐயா வணக்கம்,
    அன்னை இந்திராவின் ஜாதக அலசல் அருமை.ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
    நீங்கள் 1/7,4/10,6/8 ம் நிலைகள் என்று சொல்லிருப்பது அவைகள் ஒன்றுக்கொன்று அமர்ந்திருக்கும் நிலைப்பாடு என்று நினைக்கிறேன்.
    அதேபோல் 8/6 நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.சனியும் புதனும் (சனி மிதுனத்தில்,புதன் மகரத்தில்)(லக்னம்-மகர லக்னம்.)
    மேலும் சிம்ம லக்னம், பாக்கியதிபதி செவ்வாய் 12ல் நீசம், ராசியதிபதி சந்திரன் 4ல் நீசம் அவர்கள் ஒன்றுக்கொன்று 9/4 நிலையில் நீசமாகி பரிவர்த்தனை பெற்றுள்ளார்கள். இந்த பரிவர்த்தனைக்கு பலன் எப்படி இருக்கும்./////
    1
    Yes, you are correct. It is called as placement. Some students are confused by taking it with ownership
    2
    உதிரியான கிரக நிலைகளை வைத்துப் பலன் சொன்னால் தவறாகிவிடும். முழு ஜாதகத்தையும் பார்த்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  29. //////Blogger தேமொழி said...
    அறிந்து கொள்வதில் இரண்டு வகை இருப்பதாக (எனக்குத்) தோன்றுகிறது.
    மனித உடலைக் கூறுபோட்டு கற்கும் மருத்துவம் ஒரு உதாரணம். அது கல்வி. அந்த வகுப்பின் பாடம், ஆராய்ச்சி மனப்பாண்மையும் ஆர்வமும் உள்ளவர்களுக்கே அது. என்போன்ற ஒரு மனித உடலை வெட்ட மாட்டேன் என்பது அங்கு உதவாது. தன் தாய்க்கும் அறுவைச் சிகிச்சை செய்ய நேரும் பொழுது மருத்துவர்கள் தயங்குவதில்லை. இது ஒரு கண்ணோட்டம்.
    கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிந்து கொள்ளும் அறிவியல் முன்னேற்றத்திலும், எதுவாயிருந்தாலும் என் குழந்தை இது. பிறக்கும்பொழுது அதைத் தெரிந்து கொள்கிறேன், நடப்பது தொடர்ந்து நடக்கட்டும் என்பது அன்பு மிகுதியில் உள்ள கண்ணோட்டம். இது ஐயர் ஐயா அவர்களின் மனப்போக்கினை குறிக்கிறது.
    அவர் கருத்துக்கும் தலை வணங்குகிறேன். அவர் காட்டிய வழியைப் பின்பற்றி அவரைப்போலவே என்கருத்தையும் ஆணித்தரமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். இது வகுப்பு, கல்வியில் ஆராய்சிக் கண்ணோட்டம் தேவை. "களவும் கற்று மற" என்பது கற்றலின் கோட்பாடு./////

    நல்லது.உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  30. /////Blogger தேமொழி said...
    ஐயா இன்றைய ஜாதகப் பாடத்திற்கு நன்றி. மீண்டும் ஜாதக அலசல்கள் கலை கட்டுகிறது.
    நேற்றைய கதை நன்றாக இருந்தது. உங்கள் கதை முடிவுகளும் எழுத்து நடையும் எனக்கு மிகவும் பழகி விட்டது போல் தோன்றுகிறது. அடுத்த சிறுகதை தொகுப்பினை நூல் வடிவில் விரைவில் எதிர் பார்க்கலாம் என நினைக்கிறேன். நன்றி/////

    ஆமாம். அனேகமாக வரும் ஜூன் மாதம் எதிர்பார்க்கலாம். பதிவில் அறிவிப்பு வரும் சகோதரி!

    ReplyDelete
  31. /////Blogger redfort said...
    ஐயா வணக்கம்,
    நானும் தனுசு அவர்களின் கருத்துக்கு வலுச்சேர்க்கிறேன்.ஆம் திரு அய்யர் அவர்களே நீங்கள் உங்கள் முடிவுகளில் சிறு மாற்றங்களைச் செய்தால் எங்களைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கெல்லாம் நிறைய ஜோதிட பாடங்கள் கிடைக்கும்./////

    அதற்காக வருந்தாதீர்கள். காலம் கனியும் போது எழுதினால் போகிறது.

    ReplyDelete
  32. /////Blogger தேமொழி said...
    தோழமைக் குழுவிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்:
    யாராவது இந்த எழுத்துருவை தமிழ் வடிவமாகப் பார்க்க என்ன செய்ய வேண்டும் எனக் கூறுங்கள். நான் வழக்கமாக உபயோகிக்கும் இணையத் தளத்தினால் (http://kandupidi.com/converter/) உதவ இயலவில்லை. நன்றி.
    ïu£il¡»sÉ: mt‹ fyfybtd¢ áǤjh‹ - v‹D« bjhlÇš fyfy v‹gij
    ïu©lhf¥ ãǤjhš bghUŸ juhJ. ãǤJ¢ brhšyî« KoahJ. Mjyhš, ïu£il¡
    »sÉ (»sÉ-brhš) vd¥gL«. ïit xÈ¡F¿¥ò, Éiuî¡F¿¥ò, Éa¥ò¡ F¿¥ò, ád¡
    F¿¥ò v‹gd nghy¥ gytif¡ F¿¥òfis cz®¤J«.//////

    நீங்கள் கேட்டதை எழுத்து உரு மாற்றிப் படிக்கும் வடிவில் கீழே கொடுத்துள்ளேன்

    இரட்டைக்கிளவி: அவன் கலகலவெனச் சிரித்தான் - என்னும் தொடரில் கலகல என்பதை
    இரண்டாகப் பிரித்தால் பொருள் தராது. பிரித்துச் சொல்லவும் முடியாது. ஆதலால், இரட்டைக்
    கிளவி (கிளவி-சொல்) எனப்படும். இவை ஒலிக்குறிப்பு, விரைவுக்குறிப்பு, வியப்புக் குறிப்பு, சினக்
    குறிப்பு என்பன போலப் பலவகைக் குறிப்புகளை உணர்த்தும்.

    http://www.suratha.com/reader.htm என்ற தளம் உள்ளது. அங்கே சென்றால், எந்த எழுத்துருவையும் யுனிகோட் தமிழுக்கு நொடியில் மாற்றிக்கொள்ளூம் வசதி உள்ளது. சென்று பாருங்கள்

    ReplyDelete
  33. ////////Blogger kannan said...
    Dear Guruji,
    thanks for today's lesson...it is very informative.
    yours truly,
    kannan/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. /////Blogger kannan said...
    Dear Guruji,
    Re: India's Future !!! astro-prediction
    i don't think others predictive paper cutting will match your view of analysing INDIA'S FUTURE.
    Hence , we humbly request your goodselves to reconsider your position and thereby provide us your analysis on above issue.
    awaits eagerly
    kannan/////

    பொறுத்திருங்கள். பிறகு செய்வோம்!

    ReplyDelete
  35. ////Blogger Rajaram said.
    ஆசிரியர் அவர்களுக்கு பரிவர்த்தனை விளக்கம் அருமை.சிம்ம லக்கினத்திற்கு குரு(துலாத்தில்),சுக்கிரன்(உச்சம்),6/8 ஆம் இடப் பரிவர்த்தனை எந்த மாதிரியான பலனைக் கொடுக்கும்.குருவிற்கு லக்கினாதிபதி சூரியனின்(உச்சம்) பார்வை.நல்ல பலனை எதிர்பார்க்கலாமா?.இல்லைக் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாத கதை தானா?./////

    உதிரியான கிரக நிலைகளை வைத்துப் பலன் சொன்னால் தவறாகிவிடும். முழு ஜாதகத்தையும் பார்த்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  36. /////Blogger Maheswaran said...
    வணக்கம், இந்தியாவின் ஜாதக அலசலை எதிர்பார்த்து எமாற்றம் அடைந்தேன், பரவாயில்லை வாழ்கையில் இது எல்லாம் சகஜம் எதிபார்ப்பும் எமாற்றமும் கலந்தது தான் வாழ்க்கை.தங்கள் ஜோதிட புத்தக வெளியிட்டை பற்றி தகவல் அறிந்தால் மகிழ்ச்சி அடைவேன்//////

    புத்தகம் தயாரிப்பில் உள்ளது. கூடிய விரைவில் வரும் பொருத்திருங்கள் நண்பரே!

    ReplyDelete
  37. இந்திய ஜாதக அலசல் பற்றி திரு தனுசு,மைனர்வாள்,ஸ்ரீசோபான அவர்களின் கருத்துகளை நானும் அமோதிக்கிறேன்,

    மேலும் எங்களை போன்ற இளைஞர்களுக்கு முண்டேன் ஜோதிடம் போன்ற அறிந்திராத விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பக இருக்கும்!

    நானும் தைப்பூச பழனிபாதயாத்திரை பக்தன் என்ற வகையில் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!

    ReplyDelete
  38. Astrology பாளையங்கோட்டையும் திகாரும்! பரிவர்த்தனை யோகம் பற்றிய விரிவான
    பாடம் மிக அருமை!

    ReplyDelete
  39. இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளைஞர் தின வாழ்த்துகள்!!!

    "ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்' என்று விவேகானந்தர் கூறினார்"

    அவரது பொன்மொழிகளை பின்பற்றூவோம்!
    நன்றி

    ReplyDelete
  40. வணக்கம் ஐயா,
    பரிவர்த்தனை பற்றிய பாடம் என்றவுடனே இந்திரா காந்தி அம்மையாரின் ஜாதகமே நினைவிற்கு வருவதினால் அவருடைய ஜாதகம் எனக்கு பார்க்காமலே ஜாதகம் மனக்கண்ணில் தெரிகிறது.அந்த அளவிற்கு அவருடைய ஜாதகம் பரீட்சயமாகிவிட்டது எனக்கு...மேலே,கீழே என்று இரு வகையான ஜாதக அலசல் விளக்கங்கள் அருமை...நன்றி ஐயா

    ஐயா,என் ஜாதகத்தில் பாக்கியாதிபதியும் ஆன நான்காம் அதிபதி ஏழிலும்,ஏழாம் அதிபதி நான்காம் வீட்டிலும் பரிவர்த்தனை பெற்றுள்ளனர்.இவ்வாறான பரிவர்த்தனை எனக்கு எவ்வாறான பலன்களை தரும் என்று விளக்கினால் மிகவும் மகிழ்வேன்...நன்றி ஐயா

    ReplyDelete
  41. ////Blogger SRIRAM said...
    Dear sir, i have a big doubt. i am trying to get answer for the below question from various sources. but no answer. please clarify me. if three planets are in parivarthana, like 1st in 4th house and 4th in 9th house and 9th in 1st house. another example like venus in cancer(kadagam), moon in capricon (magaram), saturn in libra. can we conosider this as parivarthana yoga. please teach me sir.
    Regards,
    young student,
    Ramkumar//////

    அதற்குக் கூட்டுப் பரிவர்த்தனை என்று பெயர். அதைப்பற்றி முன்பே விரிவாக எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் உள்ளது. முதலில் பழைய பாடங்களை எல்லாம் பொறுமையாகப் படியுங்கள். எந்த சந்தேகமும் வராது.

    ReplyDelete
  42. ////Blogger முருகராஜன் said...
    இந்திய ஜாதக அலசல் பற்றி திரு தனுசு,மைனர்வாள்,ஸ்ரீசோபான அவர்களின் கருத்துகளை நானும் அமோதிக்கிறேன்,
    மேலும் எங்களை போன்ற இளைஞர்களுக்கு முண்டேன் ஜோதிடம் போன்ற அறிந்திராத விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்!
    நானும் தைப்பூச பழனிபாதயாத்திரை பக்தன் என்ற வகையில் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!/////

    அவர் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் முருகராஜன்!

    ReplyDelete
  43. /////Blogger முருகராஜன் said...
    Astrology பாளையங்கோட்டையும் திகாரும்! பரிவர்த்தனை யோகம் பற்றிய விரிவான
    பாடம் மிக அருமை!/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  44. //////Blogger முருகராஜன் said...
    இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளைஞர் தின வாழ்த்துகள்!!!
    "ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்' என்று விவேகானந்தர் கூறினார்"
    அவரது பொன்மொழிகளை பின்பற்றூவோம்!
    நன்றி/////

    ஆகா பின்பற்றுவோம்! இன்றைய பொருளாதார சூழ்நிலையில், கசக்கிப் பிழியும் விலைவாசி உயர்வில் அனைவரும் டவுன் பஸ் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எதற்கும் நேரமில்லை என்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது சாத்தியமில்லை

    ReplyDelete
  45. /////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    பரிவர்த்தனை பற்றிய பாடம் என்றவுடனே இந்திரா காந்தி அம்மையாரின் ஜாதகமே நினைவிற்கு வருவதினால் அவருடைய ஜாதகம் எனக்கு பார்க்காமலே ஜாதகம் மனக்கண்ணில் தெரிகிறது.அந்த அளவிற்கு அவருடைய ஜாதகம் பரீட்சயமாகிவிட்டது எனக்கு...மேலே,கீழே என்று இரு வகையான ஜாதக அலசல் விளக்கங்கள் அருமை...நன்றி ஐயா
    ஐயா,என் ஜாதகத்தில் பாக்கியாதிபதியும் ஆன நான்காம் அதிபதி ஏழிலும்,ஏழாம் அதிபதி நான்காம் வீட்டிலும் பரிவர்த்தனை பெற்றுள்ளனர்.இவ்வாறான பரிவர்த்தனை எனக்கு எவ்வாறான பலன்களை தரும் என்று விளக்கினால் மிகவும் மகிழ்வேன்...நன்றி ஐயா/////

    உதிரியான கிரக நிலைகளை வைத்துப் பலன் சொன்னால் தவறாகிவிடும். முழு ஜாதகத்தையும் பார்த்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  46. நல்லது...விளக்கமான பாடங்களுக்கு நன்றி..ஆசிரியர் அவர்களே..

    ReplyDelete
  47. ///SP.VR. SUBBAIYA said...
    http://www.suratha.com/reader.htm என்ற தளம் உள்ளது. அங்கே சென்றால், எந்த எழுத்துருவையும் யுனிகோட் தமிழுக்கு நொடியில் மாற்றிக்கொள்ளூம் வசதி உள்ளது. சென்று பாருங்கள்///

    ஐயா, உங்கள் உதவிக்கு நன்றி

    ReplyDelete
  48. பரிவர்த்தனை யோகம் பாடம் சூப்பர்!!! என் சந்தேகங்களை முன்னரே பின்னூட்டங்களில் தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்.. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  49. // வாத்தியார் ஒன்றைச் செய்தால், அது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை வேண்டும் உங்களுக்கு. ஆகவே நம்பிக்கை வையுங்கள். நேரம் கனியட்டும்
    அப்போது நிச்சயம் அலசுவோம்.//

    நிச்சயம் காத்திருப்போம் :)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com