24.1.12

Astrology: OMR ரோட்டில் பண்ணை வீடு இருப்பவன் எதற்கு ஆசைப்படுவான்?

 Astrology: OMR ரோட்டில் பண்ணை வீடு இருப்பவன் எதற்கு ஆசைப்படுவான்?

நட்சத்திரக் கோவில்கள் பகுதி 7

மிருகசீரிடம்

சொந்த வீடு என்பது எல்லா மனிதர்களுக்கும் உள்ள (பொதுவான) கனவு. ஒரு வீடு உள்ளவன்கூட இரண்டாவது வீட்டிற்கு ஆசைப்படுவது இயல்பே!
சென்னையில் சிலருக்கு தி.நகரில் சொந்தவீடு இருக்கும். பழைய மகாபலிபுரம் சாலையில் (அதாங்க ஓ.எம்.ஆர் ரோட்டில்) ஒரு பண்ணை வீடும் இருக்கும்.
அப்படி இருக்கும்போதே ஊட்டி அல்லது கொடைக்கானலில் ஒரு சொந்த வீட்டிற்கு அவன் ஆசைப்படுவான்.

கிரகங்களில் ராகு & கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடு உள்ளது. அரச கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒரு சொந்த வீடுதான். ஆனால் செவ்வாய், சுக்கிரன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு தலா இரண்டு வீடுகள் உள்ளன.

அதுபோல நடசத்திரங்களுக்கு சொந்த ராசியாக ஒவ்வொரு ராசி இருக்கும். சில நட்சத்திரங்களுக்கு இரண்டு ராசிகளைப் பங்கிட்டுக்கொண்டு சொந்தம் கொண்டாடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களுக்கு ரிஷப ராசியில் இடம். அடுத்த இரண்டு பாதங்களுக்கு மிதுன ராசியில் இடம். ஆகவே மிருகசீரிடத்தில் பிறந்த ஜாதகனுக்கு அவன் பிறந்த பாதத்தை வைத்து ராசிகள் மாறுபடும்.
----------------------------------------------------------------------------------------------
மிருகசீரிடம்

இது நட்சத்திர வரிசையில் ஐந்தாவது நட்சத்திரம் ஆகும். இது செவ்வாய் கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நட்சத்திரம்.

மிருகசீரிட நட்சத்திரம் தோற்றத்தில் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். சீர்ஷம் அல்லது சிரசு என்றால் தலை. நட்சத்திரத்தின் தலைப் பகுதி மானின் தலையைப் போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கும். அதனால்தான் அதற்கு - அந்த நட்சத்திரத்திற்கு மிருகசீரிடம் என்ற பெயரைச் சூட்டினார்கள்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

விசாலமான புத்தியும், திறமையும் பெற்றிருப்பார்கள். காசு, பணம் (செல்வம்) சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். துணிவு மிக்கவர்கள். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். பிறரின் மனதறிந்து நடப்பார்கள்.

They are seekers and are powerful investigators and researchers. Highly intelligent their quest will eventually take them to spiritual dimensions of their soul.
-----------------------------------------------------------------------------------------------
அந்த நட்சத்திரத்திற்கான கோவில்:

ஆதிநாராயண பெருமாள் திருக்கோவில், எண்கண் கிராமம், திருவாரூர் மாவட்டம்.

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், 50 கி.மீ தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. அங்கிருந்து, ஒரு கி.மீ. தூரத்தில் எண்கண் என்ற சிறுகிராமம் உள்ளது. அங்கேதான் ஆதிநாராயண பெருமாளின் திருக்கோவில் உள்ளது.

சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட திருத்தலம்.
சுவாமியின் பெயர்: ஆதிநாராயணப் பெருமாள்
அம்மன்களின் பெயர்: ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம்: வன்னி மரம்
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: மாலை 5 மணி முதல் - இரவு 7 மணி வரை.

தல வரலாறு:

முற்காலத்தில் வன்னி மரக்காடு என்று அழைக்கப்பெற்ற இத்தலத்தில், பிருகு முனிவர், பெருமாளின் அருள் வேண்டித் தவம் இருந்தாராம். அப்போது சோழ மன்னன் ஒருவன் (பெயர் தெரியவில்லை) தன் படைகளுடன் பெரும் சப்தம் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட அங்கே வந்தானாம். (அந்தக் காலத்தில் திருவாரூர் பகுதி பெரிய வனாந்திரமாக இருந்திருக்கிறது. அத்துடன் சிங்கம் போன்ற கொடிய வனவிலங்குகளும் இருந்திருக்கின்றன. Mr.KMRK note this point) அந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்ததாம். கோபம் கொண்ட முனிவர், முனிவர்கள் தவம் செய்யும் அந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து, தன் தவத்தைக் கலைத்த அரசனுக்கு சாபமிட்டுவிட்டார். என்ன சாபம்? சிங்க முகத்துடன் அவன் அலையக் கடவது என்று சாபமிட்டு விட்டாராம்.

வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாட, மனம் இரங்கிய முனிவர், விருத்தகாவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபாடு செய்து வரும்படி கூறினாராம். அரசனும் மனமுருகி வழிபாடு செய்து வந்தானாம். மகிழ்ந்த பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தர, பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்ததாம். அதன்காரணமாக இத்தலம் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குரிய கோயிலாக போற்றப் படுகிறது.

தான் உறைகின்ற கோவில்களில் பெருமாள், நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள் பாலிப்பது வழக்கம். எதிரில் அல்லது அருகில் கருடாழ்வார் இருப்பார். திரு விழாக்காலங்களில் கருடன் மீது எழுந்தருளி அருள்பாலிப்பார். ஆனால், இங்கு கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார். இதுபோன்ற அமைப்பைக் காண்பது அரிது. பெருமாளின் நித்யகருட சேவையைத் தினமும் இங்கு தரிசிக்கலாம்.

மிருகண்டு மகரிஷி இத்தல பெருமாளை தினமும் அரூப வடிவில் வழிபடுவதாக நம்பப்படுகிறது. நம்பிக்கைகளை யாரும் கேள்வி கேட்க முடியாது!

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று. இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், அவர்களின் பிரச்னை உடனடியாகத் தீரும் என்பதும் இங்கே நிலவுகின்ற நம்பிக்கை.

உற்சவர் ஆதிநாராயணப் பெருமாள் பிரயோகச் சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கின்றார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், தோல்நோய் மற்றும் பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அகால மரண சம்பவங்களால் மனநிலை பாதிக்கப்பெற்றவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் ஏற்பட்டு நிவாரணம் பெற விரும்புபவர்கள் ஆகியோர் பவுர்ணமி மற்றும் மிருகசீரிஷ நாட்களில் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்!

ஒருமுறை இத்தலத்திற்குச் சென்று வாருங்கள். வந்த பிறகு ஏற்படும் பலன்களைப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------
வாழ்க வளமுடன்!

37 comments:

  1. ஐயா, பதிவிற்கு நன்றி. இக்கோயிலின் மேலும் சில படங்களை இணையத்தில் தேடி பார்த்தேன். கோவில் மிகவும் புராதனமாக, சிதிலமடைந்து தொல்பொருள் துறைவசம் இருப்பது போல் இருக்கிறது. ஆண்டவனின் 1008 திருநாமங்களையும் பக்தர்கள் எல்லோரும் சேர்ந்து உரக்க உச்சரித்தால் மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது. பின்னால் இருக்கும் நீர்த்தொட்டி கண்ணை மிக உறுத்துகிறது.

    நகைச்சுவை பகுதியும் நன்றாக இருக்கிறது. மாண்புமிகு மைனர்வாள் அதை உங்களுக்கு அதை அனுப்பாதிருந்தால் சரி. இல்லாவிட்டால் அவரது நேற்றைய பின்னோட்டத்துடன் இணைத்து தேவையில்லாத கற்பனை எல்லாம் செய்ய வேண்டியிருக்கும்.

    ReplyDelete
  2. யார் அது...
    கதவை தட்டுவது...?

    திண்னை வீடுகள் எல்லாம் இப்போ
    பண்னை வீடுகளாக மாறுது..

    பண்னை வீடாக இருந்தாலும்
    சென்னையிலுள்ளதென சித்தரிப்பு நன்று

    பங்கு சந்தையில்
    புகுந்து விளையாடும் பலரும்

    இவரை சேர்ந்தவர் தான்
    இயற்றியது லாபாமோ நட்டமோ.

    அங்கு இருப்பார் அவர்
    அங்கும் களி திண்ண சொல்பவருக்கும்

    சேர்த்து வாழ்த்துக்களையும் ஒரு
    சேர வணக்கங்களையும் தருகிறோம்..

    ReplyDelete
  3. sir,
    vanabhadrakali amman temple at kathiramangalam is supposed to be the temple for mrigashira nakshatra....
    i think the amman is the same one worshipped by ravidasan, one character in the ponniyin selvan novel.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,
    என் தோழியும் மிருகசீரிடம் நட்சத்திரம் தான்...அவளது சொந்த ஊரும் தஞ்சாவூர் தான்...நிச்சயம் அவளிடம் ஆதி நாராயணக் கோவிலை பற்றி நிச்சயம் கூறுவேன்...

    நகைச்சுவை நன்றாக இருந்தது...அப்படி ஒரு வாத்தியார் இருந்தால் இப்படி தான் மாணவர்கள் இருப்பார்கள் போலும்...நல்ல "லீகலான லாஜிக்"...

    ReplyDelete
  5. Uma S

    14:59 (2 hours ago)

    to me
    நட்சத்திரக் கோயில்கள் பகுதி மீண்டும் தொடர்வதில் மகிழ்ச்சி. என் நட்சத்திரத்துக்காக ஆவலுடன் வெய்டிங்!

    S.உமா, தில்லி

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நட்சத்திரக் கோயில்கள் படங்களை தொடர்வதில் மகிழ்ச்சி எனது மகனின் நட்சத்திரம் மிருகசீரிடம் தான்,நன்றிகள் ஐயா

    ReplyDelete
  8. ///////மிருகசீரிட நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:
    விசாலமான புத்தியும், திறமையும் பெற்றிருப்பார்கள். காசு, பணம் (செல்வம்) சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். துணிவு மிக்கவர்கள்.
    சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். பிறரின் மனதறிந்து நடப்பார்கள். ////////

    'ஸ்டார் வேல்யூ' ன்னா அது இதுதான்..

    நம்ம ஸ்டாரைப் பத்தி சொல்லி இன்னிக்கு அசத்தியிருக்கீங்க..

    இதுல ஸ்பெஷல் மேட்டர் என்னான்னா மிருகசீரிஷத்துல பிறந்தவுங்க பொருத்தம் பார்க்க வேண்டியதில்லே..

    அதாவுது எல்லாமே செட் ஆகுமாம்..

    ஆதி நாராயணப் பெருமாளே..
    போற்றி..போற்றி..
    (பவுர்ணமியே நீ வாராயோ..)

    ReplyDelete
  9. ////// தேமொழி said...
    நகைச்சுவை பகுதியும் நன்றாக இருக்கிறது. மாண்புமிகு மைனர்வாள் அதை உங்களுக்கு அதை அனுப்பாதிருந்தால் சரி. இல்லாவிட்டால் அவரது நேற்றைய பின்னோட்டத்துடன் இணைத்து தேவையில்லாத கற்பனை எல்லாம் செய்ய வேண்டியிருக்கும்.//////

    அது நான் இல்லீங்க..உங்க கற்பனைக்கனவை கலைச்சதுக்கு ஒரு சாரி..

    ReplyDelete
  10. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

    ஜோதிடத்தின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளேன். தங்களுடைய இணைய தளம் மிகவும் உதவியாக உள்ளது. அணைத்து பாடங்களையும் மிகச் சிறப்பாக படைத்துள்ளீர்கள். ஒரு சில பதிவுகளை படிக்கும்போது நமது ஊரில் இருக்கும் உணர்வு மேலிடுகிறது (தற்போது அமெரிக்காவில் வசிக்கிறேன்). நான் கற்றுக்கொண்டவைகளை வைத்து எனது ஜாதகத்தை நானே ஓரளவுக்கு கணித்து, தங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பி இருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால் அதை பார்த்துவிட்டு எனக்கு பதில் எழுதவும். அத்துடன் நன் இந்தியா வரும்பொழுது தங்களை சந்திக்க ஆரவமாக உள்ளேன். செட்டிநாடு பகுதிகளை பார்க்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

    நன்றி.
    குமரன்.

    ReplyDelete
  11. அய்யா, என்னுடைய ஜாதகத்தில் ஆயுள் பாவமான 8ம் இடத்தில் பரல்கள் 18தான் உள்ளது ("மிதுன லக்னம்" > மகர பரல்கள் 18). 8,9ம் அதிபதியான சனி 5ம் இடமான துலாத்தில் இருக்கிறார். சுய பரல் 2 (துலாத்தில்). நான் ஆயுள் குறித்து கவலைப் பட வேண்டுமா??

    ReplyDelete
  12. //////Blogger தேமொழி said...
    ஐயா, பதிவிற்கு நன்றி. இக்கோயிலின் மேலும் சில படங்களை இணையத்தில் தேடி பார்த்தேன். கோவில் மிகவும் புராதனமாக, சிதிலமடைந்து
    தொல்பொருள் துறைவசம் இருப்பது போல் இருக்கிறது. ஆண்டவனின் 1008 திருநாமங்களையும் பக்தர்கள் எல்லோரும் சேர்ந்து உரக்க உச்சரித்தால் மேலும்
    சேதமடைய வாய்ப்புள்ளது. பின்னால் இருக்கும் நீர்த்தொட்டி கண்ணை மிக உறுத்துகிறது.
    நகைச்சுவை பகுதியும் நன்றாக இருக்கிறது. மாண்புமிகு மைனர்வாள் அதை உங்களுக்கு அதை அனுப்பாதிருந்தால் சரி. இல்லாவிட்டால் அவரது
    நேற்றைய பின்னோட்டத்துடன் இணைத்து தேவையில்லாத கற்பனை எல்லாம் செய்ய வேண்டியிருக்கும்.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
    பொறுத்திருங்கள் மைனர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!

    ReplyDelete
  13. ////Blogger iyer said...
    யார் அது...
    கதவை தட்டுவது...?
    திண்னை வீடுகள் எல்லாம் இப்போ
    பண்னை வீடுகளாக மாறுது..
    பண்னை வீடாக இருந்தாலும்
    சென்னையிலுள்ளதென சித்தரிப்பு நன்று
    பங்கு சந்தையில்
    புகுந்து விளையாடும் பலரும்
    இவரை சேர்ந்தவர் தான்
    இயற்றியது லாபாமோ நட்டமோ.
    அங்கு இருப்பார் அவர்
    அங்கும் களி திண்ண சொல்பவருக்கும்
    சேர்த்து வாழ்த்துக்களையும் ஒரு
    சேர வணக்கங்களையும் தருகிறோம்../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  14. /////Blogger sriganeshh said...
    sir,
    vanabhadrakali amman temple at kathiramangalam is supposed to be the temple for mrigashira nakshatra....
    i think the amman is the same one worshipped by ravidasan, one character in the ponniyin selvan novel.//////

    ரவிதாசன் வணங்கிய கோவிலைப் பற்றி நினைவில்லை. உங்களுடைய தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  15. ////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    என் தோழியும் மிருகசீரிடம் நட்சத்திரம் தான்...அவளது சொந்த ஊரும் தஞ்சாவூர் தான்...நிச்சயம் அவளிடம் ஆதி நாராயணக் கோவிலை பற்றி நிச்சயம்
    கூறுவேன்... நகைச்சுவை நன்றாக இருந்தது...அப்படி ஒரு வாத்தியார் இருந்தால் இப்படி தான் மாணவர்கள் இருப்பார்கள் போலும்...நல்ல "லீகலான லாஜிக்"...////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. ////Blogger SP.VR. SUBBAIYA said...
    Uma S
    to me
    நட்சத்திரக் கோயில்கள் பகுதி மீண்டும் தொடர்வதில் மகிழ்ச்சி. என் நட்சத்திரத்துக்காக ஆவலுடன் வெய்டிங்!
    S.உமா, தில்லி/////

    உங்கள் நட்சத்திரம் என்ன? சொல்லாமல் விட்டுவீட்டீர்களே!

    ReplyDelete
  17. /////Blogger முருகராஜன் said...
    நட்சத்திரக் கோயில்கள் படங்களை தொடர்வதில் மகிழ்ச்சி எனது மகனின் நட்சத்திரம் மிருகசீரிடம் தான்,நன்றிகள் ஐயா/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!/////

    ReplyDelete
  18. ////Blogger minorwall said...
    ///////மிருகசீரிட நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:
    விசாலமான புத்தியும், திறமையும் பெற்றிருப்பார்கள். காசு, பணம் (செல்வம்) சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். துணிவு மிக்கவர்கள்.
    சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். பிறரின் மனதறிந்து நடப்பார்கள். ////////
    'ஸ்டார் வேல்யூ' ன்னா அது இதுதான்..
    நம்ம ஸ்டாரைப் பத்தி சொல்லி இன்னிக்கு அசத்தியிருக்கீங்க..
    இதுல ஸ்பெஷல் மேட்டர் என்னான்னா மிருகசீரிஷத்துல பிறந்தவுங்க பொருத்தம் பார்க்க வேண்டியதில்லே..
    அதாவுது எல்லாமே செட் ஆகுமாம்..
    ஆதி நாராயணப் பெருமாளே..
    போற்றி..போற்றி..
    (பவுர்ணமியே நீ வாராயோ..)//////

    எத்தனை தடவை பொருத்தம் பார்ப்பீர்கள்? இனிமேல் பார்த்து என்ன பிரயோசனம்?

    ReplyDelete
  19. /////Blogger minorwall said...
    ////// தேமொழி said...
    நகைச்சுவை பகுதியும் நன்றாக இருக்கிறது. மாண்புமிகு மைனர்வாள் அதை உங்களுக்கு அதை அனுப்பாதிருந்தால் சரி. இல்லாவிட்டால் அவரது நேற்றைய பின்னோட்டத்துடன் இணைத்து தேவையில்லாத கற்பனை எல்லாம் செய்ய வேண்டியிருக்கும்.//////
    அது நான் இல்லீங்க..உங்க கற்பனைக்கனவை கலைச்சதுக்கு ஒரு சாரி../////

    அதானே! உங்கள் நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள் சகோதரி!

    ReplyDelete
  20. /////Blogger Kumaran said...
    மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
    ஜோதிடத்தின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளேன். தங்களுடைய இணைய தளம் மிகவும் உதவியாக உள்ளது. அணைத்து பாடங்களையும் மிகச் சிறப்பாக படைத்துள்ளீர்கள். ஒரு சில பதிவுகளை படிக்கும்போது நமது ஊரில் இருக்கும் உணர்வு மேலிடுகிறது (தற்போது அமெரிக்காவில் வசிக்கிறேன்). நான் கற்றுக்கொண்டவைகளை வைத்து எனது ஜாதகத்தை நானே ஓரளவுக்கு கணித்து, தங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பி இருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால் அதை பார்த்துவிட்டு எனக்கு பதில் எழுதவும். அத்துடன் நன் இந்தியா வரும்பொழுது தங்களை சந்திக்க ஆரவமாக உள்ளேன். செட்டிநாடு பகுதிகளை பார்க்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
    நன்றி.
    குமரன்.//////

    ஆகா, வாய்ப்பிருந்தால், மலை மேலிருக்கும் குமரனின் அருள் இருந்தால், சந்திப்போம்!

    ReplyDelete
  21. /////Blogger Rajaram said...
    Good Evening Sir,////

    நல்லது. நன்றி ராஜாராம்!

    ReplyDelete
  22. //////Blogger Selvakumar said...
    அய்யா, என்னுடைய ஜாதகத்தில் ஆயுள் பாவமான 8ம் இடத்தில் பரல்கள் 18தான் உள்ளது ("மிதுன லக்னம்" > மகர பரல்கள் 18). 8,9ம் அதிபதியான சனி 5ம் இடமான துலாத்தில் இருக்கிறார். சுய பரல் 2 (துலாத்தில்). நான் ஆயுள் குறித்து கவலைப் பட வேண்டுமா??//////

    சனி திரிகோணத்தில் இருக்கிறாரே! கவலையை விடுங்கள். கவலைப்படுவதால் என்ன கிடைக்கும் நினைத்துப் பாருங்கள்!

    ReplyDelete
  23. பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  24. திருவாருர் பகுதியில் சிங்கம் இருந்தது சரி! அந்த செய்தி ஏன் கே எம் ஆர் கே நோட் பண்ண வேண்டும்? சிங்கம் போல நானும் கொஞ்சம் சோம்பேறி என்ற 'சர்காசம்' ஏதாவதா? ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
  25. எனது நட்சத்திரமும் மிருகசீரிடம்தான். 4ம் பாதத்தில் பிறந்தேன். (சிலர் பாதம் என்பதைக் கால் என்று சொல்வதையும் கேட்டிருக்கிறேன், ஓரிரு புத்தகங்களில் படித்தும் இருக்கிறேன்). நான் தமிழ் நாட்டிற்கு வந்தால் இந்த இடத்திற்கும் போய் வர எண்ணியுள்ளேன். நான் வருவது மே, ஜூன் அல்லது ஜூலை மாதமாக இருக்கும்.

    ReplyDelete
  26. //நான் வருவது மே, ஜூன் அல்லது ஜூலை மாதமாக இருக்கும்.//

    மகிழ்ச்சி ஆனந்த்!நீங்கள் வரும் தேதியை முன்கூட்டித்தெரிவித்துவிடுங்கள்.
    நேரில் சந்திக்க விருப்பம். அதுவும் பெரிய அளவில் அறுவை சிகிச்சையெல்லாம் முடிந்து புனர்ஜென்மமாகப் பிழைத்து வந்துள்ள உங்களை நேரில் காண வேண்டும். சுக்கிரனுக்கு உகந்த தலம் ஸ்ரீரெங்கம்.அது லால்குடியில் இருந்து 17 கிமி தான். எனவே ஸ்ரீரெங்கம், திருவானைக்கா,சமயபுரம் வயலூருக்கு ஒரு நாள் ஒதுக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  27. ஸ்ரீரெங்க‌த்தில் தன்வந்திரிக்கு தனிச்சந்நிதி உள்ளது. அங்கே ஒரு பிரார்த்தனை செய்து கொள்ளலாம், ஆனந்த்!

    ReplyDelete
  28. "அமைதிக்கு வழியே இல்லை.அமைதியே வழி!"

    சொல்லாடல் என்பது இதுதான். ஆனந்த முருகனுக்குப் பாராட்டுக்கள்.
    அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    இந் நாளில்,

    வெளிநாட்டு வங்கியில் உள்ள நம் நாட்டுப் பணம் திரும்பவும், மீண்டும் பணக் கடத்தல் நடக்காமல் அந்த் இருட்டு வழிகளை அடைக்கவும்,அயர்ச்சியுற்ற
    மக்கள் உற்சாகம் பெறவும், சுதந்திரப் போரட்ட காலத்தில் இருந்த ஒற்றுமையும் நல்லெண்ணமும் பரவவும்

    பாரத்தத்தாயை வேண்டுவோம்.

    ReplyDelete
  29. பனிமூட்டம் டெல்லியில் தானே?
    செங்கோட்டை அம்மாவால் கூட‌ ஒன்றும் செய்யமுடியவில்லையோ?

    ReplyDelete
  30. உச்சி பிள்ளையாரையும், தாயுமானவரையும் மறக்கலாமா?

    சிலர் ஆண்டார் வீதியையும் தெப்பக்குளத்தையும் கூட மூன்று முறை சுற்றினால் நல்லது என அறிவுரை கூறியுள்ளார்கள் :)))

    ReplyDelete
  31. //உச்சி பிள்ளையாரையும், தாயுமானவரையும் மறக்கலாமா?
    சிலர் ஆண்டார் வீதியையும் தெப்பக்குளத்தையும் கூட மூன்று முறை சுற்றினால் நல்லது என அறிவுரை கூறியுள்ளார்கள் :)))//

    ஆம்! அவர்கள் இருவரையும் மறக்கக் கூடாது.அப்படியானால் ஆனந்த் இரண்டு நாள் இங்கே தங்க வேண்டும்.

    அது சரி! அந்த சிலரில் ஜப்பான்காரரும் உண்டோ?
    ஆன்டார் வீதியையும் தெப்பக்குளத்தையும் சுற்றுவது அவரைப்போன்ற இளைஞர்கள் செய்யலாம். அவர் வந்தால் நன் 'டை', 'விக்' என்று ரஜினி,கமல் போல 'மேக்கப்'புடன் கிளம்பி விடுகிறேன்

    ReplyDelete
  32. //மகிழ்ச்சி ஆனந்த்!நீங்கள் வரும் தேதியை முன்கூட்டித்தெரிவித்துவிடுங்கள்.
    நேரில் சந்திக்க விருப்பம். அதுவும் பெரிய அளவில் அறுவை சிகிச்சையெல்லாம் முடிந்து புனர்ஜென்மமாகப் பிழைத்து வந்துள்ள உங்களை நேரில் காண வேண்டும். சுக்கிரனுக்கு உகந்த தலம் ஸ்ரீரெங்கம்.அது லால்குடியில் இருந்து 17 கிமி தான். எனவே ஸ்ரீரெங்கம், திருவானைக்கா,சமயபுரம் வயலூருக்கு ஒரு நாள் ஒதுக்க வேண்டுகிறேன்.//

    நிச்சயமாக சந்திப்போம். தங்களுக்கு முன் கூட்டியே தெரியப் படுத்தி விடுகிறேன்.

    ReplyDelete
  33. ///////kmr.krishnan said...
    //தேமொழி said உச்சி பிள்ளையாரையும், தாயுமானவரையும் மறக்கலாமா?
    சிலர் ஆண்டார் வீதியையும் தெப்பக்குளத்தையும் கூட மூன்று முறை சுற்றினால் நல்லது என அறிவுரை கூறியுள்ளார்கள் :)))//

    ஆம்! அவர்கள் இருவரையும் மறக்கக் கூடாது.அப்படியானால் ஆனந்த் இரண்டு நாள் இங்கே தங்க வேண்டும்.

    அது சரி! அந்த சிலரில் ஜப்பான்காரரும் உண்டோ?///////////

    அந்த அனுபவ சோதிட விளக்கத்தை அறிவுறுத்தியவனே அடியவன்தான் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் KMRK அவர்களே..முக்கியமா NSB ரோட்டை மறக்கக்கூடாது..

    இது இரவா பகலா பாடலில் ஆரம்பித்து அடுத்தடுத்து எங்கெங்கோ தேடலில் இறங்கிய தேமொழி சிரத்தை எடுத்துக் கண்டுபிடித்து அரிய அறிவுரைகளை உலகுக்கு நினைவூட்டியதற்கு நன்றி..

    ReplyDelete
  34. //அந்த அனுபவ சோதிட விளக்கத்தை அறிவுறுத்தியவனே அடியவன்தான் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் KMRK அவர்களே..முக்கியமா NSB ரோட்டை மறக்கக்கூடாது..//

    ஆனந்த் பாவம் நல்லபிள்ளை. அவரோடு போகும்போது சுத்தபத்தமா போகணும்.
    மைனர் வரும் போது பார்க்காலாம் எல்லா ரோடுகளையும் வலம் வந்து....

    ReplyDelete
  35. அன்புள்ள அண்ணன்,

    மிருகசீரிஷ விளக்கத்திற்க்கு மிக்க நன்றி. ஊருக்கு வரும் போது சென்று வருகிறோம்.

    நன்றி,
    -கேசி

    ReplyDelete
  36. Hello Sir,

    Thanks for your article.

    My nakshatra is Mrigashira. I was planning to go to Tiruvarur on 25-Jan. On 24-Jan, I read your article. I visited the temple on 26-Jan.

    I see this as more than a coincidence - reading about my nakshatra's temple just a day before going to Tiruvarur.

    I once again thank you for your article.

    Regards,
    Sathya.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com