21.12.11

Astrology உலகம் அழிந்தால் அழியட்டும் போடா!

Astrology உலகம் அழிந்தால் அழியட்டும் போடா!

நிறைய மின்னஞ்சல்கள். அத்துடன் இணையத்தைத் திறந்தால் நிறையக் கட்டுரைகள். நம் நிம்மதியைக் குலைக்கும் கட்டுரைகள்.

உலகம் இந்த ஆண்டின் இறுதியில் அழியப்போகிறதாம்!

இயற்கைச் சீரழிவுகளால் மனிதகுலம் அழியப்போகிறதாம்.

பூச்சாண்டி காட்டும் பதிவுகள். எண்ணற்ற பதிவுகள், ஆயிரக் கணக்கான பதிவுகள்.

கூகுள் ஆண்டவரிடம் Mayan calender என்று தேடித் தரும்படி கேட்டால், சுமார் 55 லட்சம் கட்டுரைகள் இருப்பதாகச் சொல்லி, அதற்கான சுட்டிகளைத்
தருகிறார். அவை அனைத்தையும் படித்து முடிப்பதற்குள் நம் ஆயுள் தீர்ந்துவிடும்.

ஆகவே விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள இரண்டே இரண்டு சுட்டிகளை உங்களுக்காகக் கிழே கொடுத்துள்ளேன். அவற்றைப் பொறுமையாகப் படித்துப்பாருங்கள். நேரம் இல்லையென்றால், படிப்பதைத் தவிர்த்து விட்டு, உங்களுக்கு ஆறுதலான செய்திகள் சிலவற்றைப் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன். அதற்குத் தாவி வந்து விடுங்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------------------------

இதற்கான சுட்டி: http://www.whatwillhappenin2012now.com/category/mayan-prophecies/



Yahoo News இதற்கான சுட்டி: http://in.lifestyle.yahoo.com/reasons-world-end-2012-160356171.html

------------------------------------------------------------------------------------------
சரி, வந்துவிட்டீர்களா?

உலகவெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறது. துருவப் பனிப் பாறைகள் உருகிக்கொண்டே இருக்கின்றன. கடல் மட்டம் உயரலாம். சுனாமி, சூறாவளி
போன்றவைகள் ஏற்படலாம். அதில் கடலோரம் உள்ள நகரங்கள் பாதிப்பிற்கு உள்ளாகலாம். அதையெல்லாம் மறுப்பதற்கில்லை

ஆனால் உலகம் அழிந்துவிடும் என்பதை மட்டும் ஏற்பதற்கில்லை.

நம்  பாரதப் பூமி புண்ணிய பூமி. பல மகான்கள் அவதரித்த நாடு. பல சித்தர்கள் இன்னும் அருவ வடிவத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு.
அத்துடன் நம்நாடு சூப்பர் பவராகப் போகிறது. அந்தக் கனவோடு நாம் இருக்கிறோம், நமது கனவுகள் எல்லாம் நனவாவது தூரம் வெகு தூரத்தில் இல்லை.

அதை நாம் மட்டும் பார்த்து இரசிக்காமல் உடன் இரசிப்பதற்கு மற்ற நாடுகளும் இருக்க வேண்டும். நாம் ஆடப்போகும் ஆட்டங்களைப் பார்ப்பதற்குப்
பார்வையாளர்கள் வேண்டாமா?

மற்ற நாடுகள்தான் பார்வையாளர்கள்!

ஆகவே துணிவோடு இருங்கள். இத்தகைய கட்டுரைகளை எல்லாம் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதீர்கள்.

அந்தக் கட்டுரைகள் சிலவற்றில் நாஸ்டர்டாமஸை வம்பிற்கு துணை சேர்த்துள்ளார்கள். அதே நாஸ்டர்டாமஸ்தான் இந்தியா சூப்பர் பவராகும் என்று கணித்து எழுதிவைத்துள்ளார். அதை மறக்க வேண்டாம்!

என் கருத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நாசாவின் கட்டுரை ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். அதைப் படியுங்கள். குறிப்பாக நாஸா விஞ்ஞானிகளின்
நேர்காணல் பதில்களில் உள்ள கடைசி வரிகளை ஒன்றிற்கு இரண்டு முறையாவது படியுங்கள்


இதற்கான சுட்டி: http://www.nasa.gov/topics/earth/features/2012.html
-------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

38 comments:

  1. "நாம் ஆடப் போகும் ஆட்டங்களைக் காணப் பார்வையாளர்கள் வேண்டாமோ?"
    என்ற கேள்வி உங்களுக்கு சின்மயானந்தா, த‌யானந்தா ஆகியவர்களின் ஸ்ரீமத்
    பகவத்கீதை உபன்யாசங்களைக் கேட்டதால் மனதில் பதிந்து இருக்க வேண்டும்.

    வில்லுக்கோர் விஜயன் சோர்ந்து அமர்ந்து தாவாங்கட்டையில் கைவைத்துக் கவலைப் படுகிறான்."என்ன கவலை?" என்று அந்த மாயக்கண்ணன் கேட்க, அர்ச்சுனன் சொல்வான்: "என் தாத்தாக்கள்,பெரியப்பன் மகன்களான அண்ணன் தம்பிகள், நண்பர்கள் என என் உற்றார் உற‌வினர்களையெல்லாம் கொன்றழித்த பின்னர் நான் அடையப்போகும் அரச பதவியால் என்ன பயன்? அவர்கள் எல்லாம் இருந்து பார்த்தால் தானே நான் அரசனாக இருப்பதில் ஏதாவது பொருள் உண்டு?ஆகவே இந்தக் கொல்லும் தொழிலைச் செய்ய மாட்டேன்."

    ஆகவே ஆட்டத்தினைக் காண 'ஆடியென்சே' இல்லை என்றால் எப்படி ஆடுவது என்ற உங்கள் கேள்வியில் கீதையின் சாயல் அடிக்கிறது என்று சொல்ல வந்தேன்.

    அழியப் போகிறது உலகம் என்று அச்சப்படுவதால் ஆகப்போவது என்ன? வேண்டுமானால் வங்கியிருப்பை எல்லாம் காலி செய்து கையில் வைத்துக் கொள்ளலாம்.பனி உருகி வரும் வெள்ளத்தில் நாமும் நம்மோடு அந்தக் காகிதப் பணமும் அடித்து செல்லப்படும் போது அந்தப் பணம் நமக்கு ஒரு சுமையாகத்தான் இருக்கும்.பணத்தோடு நாம் தப்பித்தாலும் அதனைச் செலாவணி செய்ய மற்றவர்களும் இருக்க வேண்டுமே!

    எளிமையாகவும், சீராகவும் சிந்தித்து நம்பிக்கையூட்டும் வண்ணம் பதிவிட்டுள்ளீர்கள் ஐயா! நன்றி!நம்பிக்கையோடு இருப்போம்.!

    ReplyDelete
  2. ஐயா, உலகெங்கிலும் உள்ள அனைத்துக் கலாச்சாரங்களிலும் மதங்கள்/கடவுள் நம்பிக்கை உள்ளது போல், இந்த பேரழிவு நம்பிக்கைகளும் ஊடுருவியுள்ளது. பெரும்பாலும் அழிவுக்குப்பின் ஆண்டவன் அருள் புரிவார்...நல்லவர்களைக் காப்பார் என்ற நம்பிக்கையும் அத்துடன் கூடவே உள்ளது.

    அப்படியானால் இவ்வாறு நடந்தால் ஆண்டவனைப் பார்க்க ஒரு வாய்ப்பு வருகிறது என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? இவ்வாறு பயப்படுபவர்களுக்கு அவர்கள் நாம் நல்லவர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள், கடவுள் அருளால் தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கையில்லையா? இல்லை... அவர்கள் நல்லவர்களா என்பதிலேயே அவர்களுக்கு சந்தேகமா?

    எது எப்படியோ, மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்கள் இந்த பேரழிவு சந்தேகங்களால் வாழ்நாளை வீணடிப்பதில்லை. ஆறாம் அறிவு அளவுக்கதிகமாக வேலை செய்வதால் வரும் கோளாறு போலிருக்கிறது.

    ReplyDelete
  3. இதற்கு முன்பும் இதுபோன்ற செய்திகள் பரவின. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை உலகம் அழையப் போகிறது என்ற செய்தி பரவி, அந்தக் குறிப்பிட்ட நாளில் ஐரோப்பாவில் பலர் உயர்ந்த மலைகளின் மீது ஏறி உலகம் நீரால் மூழ்கும்போது தாங்கள் மலை உச்சியில் இருந்துகொண்டு தப்பிவிடலாம் என்று ஏறி உட்கார்ந்திருந்தார்கள். ஐயோ பாவம்! அவர்கள் எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் கிழே இறங்கி வந்து வழக்கம் போல தங்கள் வாழ்க்கையை உண்டு, உறங்கி, பிறர்க்கு இடர்செய்து பின் காலன் வந்தபோது செத்தும் போனார்கள். மனிதனுக்கு எங்காவது யாராவது ஒரு பீதியைக் கிளப்பி விட்டால் உடனே அதை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

    ReplyDelete
  4. "காலத்தின் வளர்ச்சி" என்பதற்கு வாக்களிக்க விரும்புகிறேன் ஐயா, என் போன்ற மறதி உள்ளவர்களுக்கு தொழில் நுட்பத்தின் உதவியினால் நண்பர்களின் பிறந்தநாட்கள் நினைவூட்டப் பட்டு வாழ்த்து சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறதே.

    ReplyDelete
  5. சாவிற்கு பயந்த கோழைகள்..
    சாவோம் அல்லது சாகடிப்போம் என

    கங்கனம் கட்டிக் கொண்டு
    கலக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி இது..

    அழிவதென்பது உறுதியென்றபின்
    அழிய தவிர்ப்பது அறியாமையன்றோ

    அச்சமில்லை அச்சமில்லை என
    அறைகூவல் செய்த பாரதியின்

    வரிகள் வீழ்த்திடுமோ நம்மையும்
    வாரி வழங்கும் ஊழி முதல்வன் கருணையில்..

    ஊழிக்காலத்தை பற்றிய செய்தி
    உயர்வாக சொல்லும் திருமுறைகளில் ..

    கூகுள் ஆண்டவரை துணைசேர்க்கும்
    கூட்டாளிகள் திருமுறைகளை தொட

    தொலைந்தோடும் பயமும்..
    தொல்லையில்லா வாழ்வும்..

    இவ்வகுப்பில் மனதில் பதிய
    இந்த திருப்பாடலை

    மார்கழி மாதத்தினை ஒட்டி ஊழி பற்றிய
    மனமுருகி பாடும் திருஎம்பாவையும்

    பதிவிட்டு வழக்கம் போல்
    பரவ விடுகிறோம் மாசில்லா அன்போடு

    வணக்கமும்
    வாழ்த்துக்களும்

    ஊழி யாய பாரில் ஓங்கும் உ யர்செல்வக்
    காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்
    ஆறாழு மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார் வாழி நீங்கா வானோர் உலகின் மகிழ்வாரே.


    திருஎம்பாவையிலிருந்து..

    கோழி சிலம்பச் சிலம்புங் குருகு எங்கும்
    ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்கேழில் பரஞ்சோதி

    கேழில் பரங்கருணைகேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

    வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

    "ஊழி முதல்வனாய்" நின்ற ஒருவனை
    ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

    ReplyDelete
  6. பணம் சம்பாதிக்க முடியும் என்ற அறிவும் திறமையும் தைரியமும் இல்லாத கோழைகள் வேண்டுமானால்

    பணத்தை வாரி சுருட்டிக் கொண்டு வங்கி இருப்புகளை காலி செய்து எடுத்துச் செல்லலாம்..

    மானத்தை விட பணம் பெரிதா..செருக்கு
    மதிக்கும் பணம் உணவைவிட பெரிதா

    குணத்தை சீரழிக்கும் காகித
    குப்பை காந்தி படமிட்டதால் பெரிதோ..

    கொடுக்கில்லாதனை"பாரியே" என்று கூறினும் கொடுப்பார் இல்லை என்ற

    சுந்தரின் திருவாக்கினை மறந்திருப்போர்
    சுத்தமாக மனதில் வையுங்கள்

    உள்ளபடியே சொல்லுங்கள்
    உயிரை விட பணம் பெரிதா..

    பணம் இருந்தால் புத்தகம் வாங்கலாம்
    அறிவை அல்ல...

    பணம் இருந்தால் சோறு வாங்கலாம்
    பசியை அல்ல

    பணம் இருந்தால் மருந்து வாங்கலாம்
    ஆரோக்கியமல்ல..

    பணம் இருந்தால் மனிதனை வாங்கலாம் இறைவனை அல்ல..

    பொருளியலில் பணத்தை (Multiplier என்பதால்) K என குறிப்பிடுவர் அதனை இப்படி சேர்த்து பாருங்கள்..

    MONEY யில் K சேர்த்து விட்டால் அது MON"K"EY ஆகிவிடும்.. பணப்பெட்டி

    KEY இடுப்பில் ஏறிவிட்டால்

    குணம் குப்பையிலே போய் புத்தி
    குரங்காய் முடியும்.(எதையும் அனுபவிக்காமல்..)

    வாழ்க்கைக்கு பணம் தேவை ஆனால்
    வாழ்க்கையே பணமில்லை..

    பணம் சம்பாதிப்பது எளிது
    செலவு செய்வது தான் கடினம்..

    (இப்படி சொன்னால் அய்யரை வேறு விதமாக பார்க்கும் கூட்டமும் இருக்கத் தான் செய்யும். இருக்கட்டும் உண்மையை சொல்ல நாம் ஏன் தயங்கனும்)

    ReplyDelete
  7. குரு வணக்கம் ,

    உலகம் 2012 அழியபோவதில்லை என்ற நல்ல கருத்தையும் !!!
    அதற்க்கு மேல் "இந்தியா வல்லரசு ஆகும்" என்ற அற்புதமான
    கருத்தையும் !!! இன்றைய செய்தியாக கொடுத்தமைகாக எனது
    நன்றிகள் .

    இப்படிக்கு
    கண்ணன்

    ReplyDelete
  8. இப்படி சொன்னால் அய்யரை வேறு விதமாக பார்க்கும் கூட்டமும் இருக்கத் தான் செய்யும்.//

    இது போன்ற பிரதாபங்களே பிரச்சனைகளின் ஆரம்பம். சொல்வதை இது போன்ற 'கூட்டம், கும்பல்' என்று மற்றவர்களை விளிப்பதையும், முறையாக விமர்சனமும்,குழப்பம் இல்லாத நடையும், சொல்வதை விவரமாகவும் சொல்லிவிட்டால் ஏன் மற்றவர்கள் மறுக்கப் போகிறார்கள்?

    ReplyDelete
  9. Dear Guruji,

    Arab sense of humor is really fantastic and logically it seems to suit their stand on these restrictions.

    ReplyDelete
  10. //இதற்கு முன்பும் இதுபோன்ற செய்திகள் பரவின. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை உலகம் அழையப் போகிறது என்ற செய்தி பரவி, அந்தக் குறிப்பிட்ட நாளில் ஐரோப்பாவில் பலர் உயர்ந்த மலைகளின் மீது ஏறி உலகம் நீரால் மூழ்கும்போது தாங்கள் மலை உச்சியில் இருந்துகொண்டு தப்பிவிடலாம் என்று ஏறி உட்கார்ந்திருந்தார்கள். //

    ஆமாம்.அது எட்டு கிரஹங்கள் ஒரே ராசியில் சந்தித்த போது கிளம்பிய பீதி. அப்போதுதான் 'வேயுறு தோளிபங்கன்'பாராயணம் செய்யச் சொல்லி காஞ்சி மாமுனிவர் அறிவுரை கூறினார்.

    ReplyDelete
  11. //////Blogger kmr.krishnan said...
    "நாம் ஆடப் போகும் ஆட்டங்களைக் காணப் பார்வையாளர்கள் வேண்டாமோ?"
    என்ற கேள்வி உங்களுக்கு சின்மயானந்தா, த‌யானந்தா ஆகியவர்களின் ஸ்ரீமத்
    பகவத்கீதை உபன்யாசங்களைக் கேட்டதால் மனதில் பதிந்து இருக்க வேண்டும்.
    வில்லுக்கோர் விஜயன் சோர்ந்து அமர்ந்து தாவாங்கட்டையில் கைவைத்துக் கவலைப் படுகிறான்."என்ன கவலை?" என்று அந்த மாயக்கண்ணன் கேட்க,

    அர்ச்சுனன் சொல்வான்: "என் தாத்தாக்கள்,பெரியப்பன் மகன்களான அண்ணன் தம்பிகள், நண்பர்கள் என என் உற்றார் உற‌வினர்களையெல்லாம் கொன்றழித்த

    பின்னர் நான் அடையப்போகும் அரச பதவியால் என்ன பயன்? அவர்கள் எல்லாம் இருந்து பார்த்தால் தானே நான் அரசனாக இருப்பதில் ஏதாவது பொருள்

    உண்டு?ஆகவே இந்தக் கொல்லும் தொழிலைச் செய்ய மாட்டேன்."
    ஆகவே ஆட்டத்தினைக் காண 'ஆடியென்சே' இல்லை என்றால் எப்படி ஆடுவது என்ற உங்கள் கேள்வியில் கீதையின் சாயல் அடிக்கிறது என்று சொல்ல

    வந்தேன்.
    அழியப் போகிறது உலகம் என்று அச்சப்படுவதால் ஆகப்போவது என்ன? வேண்டுமானால் வங்கியிருப்பை எல்லாம் காலி செய்து கையில் வைத்துக்

    கொள்ளலாம்.பனி உருகி வரும் வெள்ளத்தில் நாமும் நம்மோடு அந்தக் காகிதப் பணமும் அடித்து செல்லப்படும் போது அந்தப் பணம் நமக்கு ஒரு

    சுமையாகத்தான் இருக்கும்.பணத்தோடு நாம் தப்பித்தாலும் அதனைச் செலாவணி செய்ய மற்றவர்களும் இருக்க வேண்டுமே!
    எளிமையாகவும், சீராகவும் சிந்தித்து நம்பிக்கையூட்டும் வண்ணம் பதிவிட்டுள்ளீர்கள் ஐயா! நன்றி!நம்பிக்கையோடு இருப்போம்.!/////

    ஆகா, அப்படியே இருப்போம் கிருஷ்ணன் சார்! பழநிஅப்பனும் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான்!

    ReplyDelete
  12. //கூகுள் ஆண்டவரை துணைசேர்க்கும்
    கூட்டாளிகள் திருமுறைகளை தொட
    தொலைந்தோடும் பயமும்..//

    எந்தக் கூட்டாளிக்கோ இது?

    யாருமே எதுவும் அறியாதவர்கள்?

    புரிந்த கூட்டாளிகள் விளக்கம் கொடுக்கலாமே!

    ReplyDelete
  13. /////Blogger தேமொழி said...
    ஐயா, உலகெங்கிலும் உள்ள அனைத்துக் கலாச்சாரங்களிலும் மதங்கள்/கடவுள் நம்பிக்கை உள்ளது போல், இந்த பேரழிவு நம்பிக்கைகளும் ஊடுருவியுள்ளது. பெரும்பாலும் அழிவுக்குப்பின் ஆண்டவன் அருள் புரிவார்...நல்லவர்களைக் காப்பார் என்ற நம்பிக்கையும் அத்துடன் கூடவே உள்ளது.
    அப்படியானால் இவ்வாறு நடந்தால் ஆண்டவனைப் பார்க்க ஒரு வாய்ப்பு வருகிறது என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? இவ்வாறு
    பயப்படுபவர்களுக்கு அவர்கள் நாம் நல்லவர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள், கடவுள் அருளால் தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கையில்லையா? இல்லை...
    அவர்கள் நல்லவர்களா என்பதிலேயே அவர்களுக்கு சந்தேகமா?
    எது எப்படியோ, மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்கள் இந்த பேரழிவு சந்தேகங்களால் வாழ்நாளை வீணடிப்பதில்லை. ஆறாம் அறிவு அளவுக்கதிகமாக
    வேலை செய்வதால் வரும் கோளாறு போலிருக்கிறது.//////

    இந்தப் பய உணர்வு மனிதனின் கூடவே பிறந்தது. அதைத் தவிர்க்க முடியாது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. ///Blogger Thanjavooraan said...
    இதற்கு முன்பும் இதுபோன்ற செய்திகள் பரவின. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை உலகம் அழையப் போகிறது என்ற செய்தி பரவி, அந்தக் குறிப்பிட்ட நாளில் ஐரோப்பாவில் பலர் உயர்ந்த மலைகளின் மீது ஏறி உலகம் நீரால் மூழ்கும்போது தாங்கள் மலை உச்சியில் இருந்துகொண்டு
    தப்பிவிடலாம் என்று ஏறி உட்கார்ந்திருந்தார்கள். ஐயோ பாவம்! அவர்கள் எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் கிழே இறங்கி வந்து வழக்கம் போல தங்கள் வாழ்க்கையை உண்டு, உறங்கி, பிறர்க்கு இடர்செய்து பின் காலன் வந்தபோது செத்தும் போனார்கள். மனிதனுக்கு எங்காவது யாராவது ஒரு பீதியைக் கிளப்பி விட்டால் உடனே அதை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறான்./////

    எதிர்பார்த்துக் கொண்டிருப்பதோடு மட்டும் அல்லாமல், மற்ரவர்களையும் கிளப்பிவிட்டுத் துணைக்கு ஆள் பிடிப்பான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு
    நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  15. ///Blogger தேமொழி said...
    "காலத்தின் வளர்ச்சி" என்பதற்கு வாக்களிக்க விரும்புகிறேன் ஐயா, என் போன்ற மறதி உள்ளவர்களுக்கு தொழில் நுட்பத்தின் உதவியினால் நண்பர்களின் பிறந்தநாட்கள் நினைவூட்டப் பட்டு வாழ்த்து சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறதே.////

    நீங்கள் சொன்னால் சரிதான். நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. /////Blogger iyer said...
    சாவிற்கு பயந்த கோழைகள்..
    சாவோம் அல்லது சாகடிப்போம் என
    கங்கனம் கட்டிக் கொண்டு
    கலக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி இது..
    அழிவதென்பது உறுதியென்றபின்
    அழிய தவிர்ப்பது அறியாமையன்றோ
    அச்சமில்லை அச்சமில்லை என
    அறைகூவல் செய்த பாரதியின்
    வரிகள் வீழ்த்திடுமோ நம்மையும்
    வாரி வழங்கும் ஊழி முதல்வன் கருணையில்..
    ஊழிக்காலத்தை பற்றிய செய்தி
    உயர்வாக சொல்லும் திருமுறைகளில் ..
    கூகுள் ஆண்டவரை துணைசேர்க்கும்
    கூட்டாளிகள் திருமுறைகளை தொட
    தொலைந்தோடும் பயமும்..
    தொல்லையில்லா வாழ்வும்..
    இவ்வகுப்பில் மனதில் பதிய
    இந்த திருப்பாடலை
    மார்கழி மாதத்தினை ஒட்டி ஊழி பற்றிய
    மனமுருகி பாடும் திருஎம்பாவையும்
    பதிவிட்டு வழக்கம் போல்
    பரவ விடுகிறோம் மாசில்லா அன்போடு
    வணக்கமும்
    வாழ்த்துக்களும்
    ஊழி யாய பாரில் ஓங்கும் உ யர்செல்வக்
    காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்
    ஆறாழு மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார் வாழி நீங்கா வானோர் உலகின் மகிழ்வாரே.
    திருஎம்பாவையிலிருந்து..
    கோழி சிலம்பச் சிலம்புங் குருகு எங்கும்
    ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்கேழில் பரஞ்சோதி
    கேழில் பரங்கருணைகேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
    வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
    "ஊழி முதல்வனாய்" நின்ற ஒருவனை
    ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.//////

    உங்களின் மேலான, மற்றும் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  17. //////Blogger iyer said...
    பணம் சம்பாதிக்க முடியும் என்ற அறிவும் திறமையும் தைரியமும் இல்லாத கோழைகள் வேண்டுமானால்
    பணத்தை வாரி சுருட்டிக் கொண்டு வங்கி இருப்புகளை காலி செய்து எடுத்துச் செல்லலாம்..
    மானத்தை விட பணம் பெரிதா..செருக்கு
    மதிக்கும் பணம் உணவைவிட பெரிதா
    குணத்தை சீரழிக்கும் காகித
    குப்பை காந்தி படமிட்டதால் பெரிதோ..
    கொடுக்கில்லாதனை"பாரியே" என்று கூறினும் கொடுப்பார் இல்லை என்ற
    சுந்தரின் திருவாக்கினை மறந்திருப்போர்
    சுத்தமாக மனதில் வையுங்கள்
    உள்ளபடியே சொல்லுங்கள்
    உயிரை விட பணம் பெரிதா..
    பணம் இருந்தால் புத்தகம் வாங்கலாம்
    அறிவை அல்ல...
    பணம் இருந்தால் சோறு வாங்கலாம்
    பசியை அல்ல
    பணம் இருந்தால் மருந்து வாங்கலாம்
    ஆரோக்கியமல்ல..
    பணம் இருந்தால் மனிதனை வாங்கலாம் இறைவனை அல்ல..
    பொருளியலில் பணத்தை (Multiplier என்பதால்) K என குறிப்பிடுவர் அதனை இப்படி சேர்த்து பாருங்கள்..
    MONEY யில் K சேர்த்து விட்டால் அது MON"K"EY ஆகிவிடும்.. பணப்பெட்டி
    KEY இடுப்பில் ஏறிவிட்டால்
    குணம் குப்பையிலே போய் புத்தி
    குரங்காய் முடியும்.(எதையும் அனுபவிக்காமல்..)
    வாழ்க்கைக்கு பணம் தேவை ஆனால்
    வாழ்க்கையே பணமில்லை..
    பணம் சம்பாதிப்பது எளிது
    செலவு செய்வது தான் கடினம்..
    (இப்படி சொன்னால் அய்யரை வேறு விதமாக பார்க்கும் கூட்டமும் இருக்கத் தான் செய்யும். இருக்கட்டும் உண்மையை சொல்ல நாம் ஏன் தயங்கனும்)//////

    உண்மையை எங்கே வேண்டுமென்றாலும் சொல்லலாம் அய்யர். அதற்குத் தயக்கம் வேண்டாம் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  18. /////Blogger kannan said...
    குரு வணக்கம் ,
    உலகம் 2012 அழியபோவதில்லை என்ற நல்ல கருத்தையும் !!!
    அதற்கு மேல் "இந்தியா வல்லரசு ஆகும்" என்ற அற்புதமான கருத்தையும் !!! இன்றைய செய்தியாக கொடுத்தமைகாக எனது
    நன்றிகள் .
    இப்படிக்கு
    கண்ணன்//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  19. நாசாவுக்கு போய் வந்ததால் தாமதமாகிவிட்டது.
    இதற்கு முன்புகூட இப்படி செய்திகள் வந்துள்ளன.

    இணையத்தில்
    எதை ஏற்றினாலும் ஏறும்
    எதை ஏற்றவும் செய்யலாம் யாரும்.
    வேகத்தை கணக்கிட புரளியை பயன் படுத்தலாம்.அத்தனை வேகம் .

    ஒரு படத்தில் தேங்காய் வாங்க காசு இல்லாததால் கவுண்டமணி தேங்காய் உள்ளே பாம் இருப்பதாக புரளி கிளப்புவார்.அந்த படத்தில் அதன் பின்பு வரும் காட்சிகள் வயிற்றை புண்ணாக்கிவிடும் அத்தனை காமடியாக இருக்கும் .

    உலகம் அழிந்தால்
    சேர்ந்து அழிவோம்
    உலகம் இருந்தால்
    சேர்ந்து இருப்போம்
    இன்றைக்கு செத்தால்
    நாளைக்கு பால்
    என்றைக்கும் இதுவே
    பிடித்தமான சொல் .

    ReplyDelete
  20. சந்தோஷமா இருக்கு வாத்தியரே , இந்த பதிவ படிக்கறதுக்கு . என்னோட மெய்லுக்கு பதில் பதிவா போட்டுடீங்க. சனி பெயர்ச்சி நல்லாவே ஆரம்பிச்சி இருக்கு .கண்டிப்பா நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது நடக்கும் தோணுது . வாத்தியாருக்கு நன்றி . Kalai from seattle

    ReplyDelete
  21. from Uma S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 21 December 2011 13:21
    subject comment

    மைனருக்கு சக்கர‌வர்த்திப் பட்டம் எனக்கு ஓகே! டெல்லிக்காரவுக தான் என்ன சொல்வாங்களோ தெரியலயே!//

    இந்த ஆனந்துக்கு மைனரை உசுப்பி விடறதே வேலையாப்போச்சு. ஏற்கனவே ஒருதடவை சக்கரவர்த்தி யோகம் இருக்குன்னு உறுதி செஞ்சதிலேர்ந்தே அவர் கால் தரையில படரதில்லைன்னு கேள்விப்பட்டேன்.

    S.உமா, தில்லி

    ReplyDelete
  22. உள்ளேன் ஐயா, ரொம்ப நாட்களாகிவிட்டது,பின்னூட்டங்கள் இட்டு,வேலைப்பளுவால் வகுப்பறைக்கு வந்து பாடங்கள் படிப்பதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை.ஆனாலும் தவறாமல் வந்து படித்துவிடுகிறேன்.நாளை என்பதே நம்பிக்கை தானே.நாமும் ஒரு நாள் வல்லரசாவோம் என்ற நம்பிக்கையில் தான் அனைவருமே இருக்கிறோம்.நமது ஆசைகள் கடலின் பெரிது.தமிழனுக்கு ஒரு தனி ஈழம் மலரும் நாள் எந்நாளோ எனக் காத்திருக்கிறோம், அதுவும் ஒரு நாள் கை கூடும் எனும் நம்பிக்கையில்.

    ReplyDelete
  23. உள்ளேன் ஐயா, ரொம்ப நாட்களாகிவிட்டது,பின்னூட்டங்கள் இட்டு,வேலைப்பளுவால் வகுப்பறைக்கு வந்து பாடங்கள் படிப்பதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை.ஆனாலும் தவறாமல் வந்து படித்துவிடுகிறேன்.நாளை என்பதே நம்பிக்கை தானே.நாமும் ஒரு நாள் வல்லரசாவோம் என்ற நம்பிக்கையில் தான் அனைவருமே இருக்கிறோம்.நமது ஆசைகள் கடலின் பெரிது.தமிழனுக்கு ஒரு தனி ஈழம் மலரும் நாள் எந்நாளோ எனக் காத்திருக்கிறோம், அதுவும் ஒரு நாள் கை கூடும் எனும் நம்பிக்கையில்.

    ReplyDelete
  24. வணக்கம் ஐயா,
    இதே போன்ற பயத்தை 2000மாவது ஆண்டோடு உலகம் அழியபோவதாக என்று "பைபில்"லில் உள்ள‌ வாசகத்தில் குறிப்பிடப்பட்டதாக கூறி பயமுறுத்தினார்கள்...ஆனால் அதையும் தாண்டி பல புத்தாண்டுகளையும் கடந்தும் வந்தபிறகும் இது போன்ற வதந்திகள் பொய்யன்றி வேறெதுவும் இல்லை...

    சில மாதங்களுக்கு முன்னர் "டிஸ்கவரி"சானலில் இது பற்றிய முழு ஆராய்ச்சி கட்டுரையை ஆவண படமாகவே தந்தார்கள் "நாசா" மற்றும் பன்னாட்டு விஞ்ஞானிகள்.அவர்கள்"2012"படத்தில் காட்டுப்பட்ட‌தை போன்ற நிகழ்வுகள் எல்லாம் சூரியனில் நடக்கும் "சிறிய" மாற்றத்தை "பூதாகரமாக" சித்தரித்து காட்டியுள்ளனர் என்று சுட்டிக் காட்டினர்...அதோடு அவர்கள் "மாயன்" நாள்காட்டியின் தவறான அம்சங்களையும் தெளிவாக விவரித்தனர்...ஆனால் இறுதியில் நிறைவு செய்யும் பொழுது எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் நிகழும் என்றும் அதன் அளவு இதைவிட மோசமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும் அது நிகழ இன்னும் பல நாற்றாண்டுகள் இருக்கின்றன என்று கூறி மீண்டும் ஆரம்பத்திற்கே கொண்டு வந்துவிட்டார்கள்

    உலகத்தை பற்றி ஆராய்ச்சி செய்வதாக கூறுபவர்கள் பிற நாட்டு குறிப்பேடுகளையோ,நாள்காட்டிகளையோ மட்டும் தேடி இவ்வாறான தவறான கருத்துக்களை தேடாமல்,நம் நாட்டு பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ள உண்மைகளை தெரிந்து அவற்றை உலகம் அறிய செய்யலாம்...வரலாற்றை பார்த்தால் பூமி மீண்டும் மீண்டும் அழிந்து கொண்டு தன்னை புதுப்பித்துக் கொண்ட உண்மைகளை அறிந்து கொள்ளலாம்...அதனால்"A Rumour is a Rumour" என்று தான் இதை எடுத்து கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  25. குரு வணக்கம்,

    ராசியில் ஏழில் சனி நீசம்
    நவாம்சத்தில் ஏழில் சனி நீசம்

    வர்கோத்தமம் என்பதை புரிந்துகொண்டேன் ஆனால் நீசமான நிலையில் ..சனி தசை நல்லது செய்வாரா ??

    இந்த அமைப்பு நல்ல பலன் கொடுக்குமா ....??

    உங்கள் பதிலை எதிர்பார்த்து ...
    கண்ணன்

    ReplyDelete
  26. //அந்தக் கட்டுரைகள் சிலவற்றில் நாஸ்டர்டாமஸை வம்பிற்கு துணை சேர்த்துள்ளார்கள். அதே நாஸ்டர்டாமஸ்தான் இந்தியா சூப்பர் பவராகும் என்று கணித்து எழுதிவைத்துள்ளார். அதை மறக்க வேண்டாம்!//
    நிஜம் தான் ஐயா,பொய்களை திரித்து பேசினால் தான் உண்மையாக்க முடியும் என்பதால் தான் இப்படி நாஸ்டர்டாமஸை வம்புக்குயிழுக்கிறார்கள் குழப்பவாதிகள்...நாட்டை ஆள்பவர்களால் ஏற்படும் பின்னடைவுகளை வைத்து பார்த்தால் நம் நாடு நிச்சயம் சூப்பர் பவராகும்,ஆனால் அதற்கு "2020" விட இன்னும் சில ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கின்றேன்...

    ReplyDelete
  27. 'ஆறாமிடத்துக்கு சனீஸ்வரர் வந்து ரெண்டரை வருஷம் இருக்குறதுக்குள்ளே ரிஷப ராசிக்கார ஆளுங்க பெரியாளா ஆகிடுவாங்க'ன்னு
    பொறுக்கமுடியாம பொறாமையிலே டெல்லிக் காரங்க கொளுத்திப் போட்ட விஷயம்தான் இந்த வருஷமே உலக அழிவு புரளி..யாரும் நம்பாதீங்கோ....
    எவிடென்ஸ் இன்றைய பின்னூட்டம்

    //// Uma said
    மைனருக்கு சக்கர‌வர்த்திப் பட்டம் எனக்கு ஓகே! டெல்லிக்காரவுக தான் என்ன சொல்வாங்களோ தெரியலயே!//

    இந்த ஆனந்துக்கு மைனரை உசுப்பி விடறதே வேலையாப்போச்சு. ஏற்கனவே ஒருதடவை சக்கரவர்த்தி யோகம் இருக்குன்னு உறுதி செஞ்சதிலேர்ந்தே அவர் கால் தரையில படரதில்லைன்னு கேள்விப்பட்டேன்.///////
    ஒரே ஒரு உண்மையை சொல்லியிருக்காங்க..
    ஜப்பானிலே வீட்டுக்குள்ளே கூடநான் சாக்ஸ் ஷூ இல்லாம எங்குமே போறதில்லே..அதுனாலே கால் தரையில் பட சான்ஸ் இல்லேதான்..

    அல்ரெடி டெம்ப்பறேச்சர்
    ஜீரோவை டச் பண்ணி இன்னும் ரெண்டு நாளிலே மைனஸ் 4டிகிரி வரைக்கும் போகும்..

    ReplyDelete
  28. minorwall said...ஆறாமிடத்துக்கு சனீஸ்வரர் வந்து ரெண்டரை வருஷம் இருக்குறதுக்குள்ளே ரிஷப ராசிக்கார ஆளுங்க பெரியாளா ஆகிடுவாங்க'ன்னு
    பொறுக்கமுடியாம பொறாமையிலே டெல்லிக் காரங்க கொளுத்திப் போட்ட விஷயம்தான் இந்த வருஷமே உலக அழிவு புரளி..யாரும் நம்பாதீங்கோ....
    எவிடென்ஸ் இன்றைய பின்னூட்டம்

    //// Uma said
    மைனருக்கு சக்கர‌வர்த்திப் பட்டம் எனக்கு ஓகே! டெல்லிக்காரவுக தான் என்ன சொல்வாங்களோ தெரியலயே!//

    இந்த ஆனந்துக்கு மைனரை உசுப்பி விடறதே வேலையாப்போச்சு. ஏற்கனவே ஒருதடவை சக்கரவர்த்தி யோகம் இருக்குன்னு உறுதி செஞ்சதிலேர்ந்தே அவர் கால் தரையில படரதில்லைன்னு கேள்விப்பட்டேன்.///////
    ஒரே ஒரு உண்மையை சொல்லியிருக்காங்க..
    ஜப்பானிலே வீட்டுக்குள்ளே கூடநான் சாக்ஸ் ஷூ இல்லாம எங்குமே போறதில்லே..அதுனாலே கால் தரையில் பட சான்ஸ் இல்லேதான்..

    அல்ரெடி டெம்ப்பறேச்சர்
    ஜீரோவை டச் பண்ணி இன்னும் ரெண்டு நாளிலே மைனஸ் 4டிகிரி வரைக்கும் போகும்..

    கலகலன்னு கமகமன்னு கலக்கலா போகுது. வேலை டென்ஷனின் போது வீட்டுக்கு போன் பேசி டென்ஷனை குறைக்கிறது போய் டென்ஷனைக் குறைக்க இங்க வர்றது தான் இப்போ அதிகமாகிக்கிட்டு இருக்கு எனக்கு.

    ReplyDelete
  29. கீதைக்கே ஆதரவு தேவைப்படுகிற காலம் இது...என்ன செய்வது.
    எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ‍says கிருஷ்ண பரமாத்மா. ஆகவே கவலைப்படுவதை விட காலைப் பிடிப்பதால் கால(னை)த்தை வெல்ல‌லாம்.
    எனக்கு பிரியமான கந்தர் அலங்காரப் பாடல். எப்போதும் நாவில் இருந்தால், எது வந்தாலும் பயமில்லை.

    " நாளென் செயும்வினை தானென் செயும் எனை நலிய வந்த கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும் கும ரேசரிரு நாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் என்க்கு முன்னே வந்து தோன்றிடினே "

    ReplyDelete
  30. //இந்த ஆனந்துக்கு மைனரை உசுப்பி விடறதே வேலையாப்போச்சு.//

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்கே என்று மைனர் நடிகர் வடிவேலு போல் புலம்பும் நிலைக்கு ஆளாக மாட்டார் என்று நினைக்கிறேன்.

    நாடுகளுக்கு ஜாதகம் இருப்பது போல் பல நாடுகளைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருக்கும் பூமியின் ஜாதகம் இல்லாமல் போய் விட்டது. இருந்திருந்தால் அதன் பலனை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து பார்த்திருக்கலாம். எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் எல்லாம் அவன் செயல்.

    ReplyDelete
  31. அய்யா ,
    அழிவு என்பது திண்ணம். நாம் என்றோ ஒரு நாள் மடியத்தான் போகிறோம். பிரளயம் வந்து எல்லோரும் ஒன்றாக மறைந்தாலும் இயற்கையாக தனியாக இறந்தாலும் இதில் பயப்படுவதற்கோ கவலைப் படுவதற்கோ ஒன்றும் இல்லை. வாழும் வரைக்கும் ஒழுங்காகவும், நிம்மதியாகவும், தர்மத்துடனும் பிறர் போற்ற வாழ எண்ணவேண்டுமே தவிர உலகம் அழியப்போவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
    அருணாசலம்

    ReplyDelete
  32. பானை படைத்தவன்
    பானை உடையும்
    நோக்கில் படைக்கவில்லை

    உலகை படைத்தவன்
    உலகை காக்கும்
    நோக்கில் படைத்தான்

    பொழுது போகாத
    மனிதன் பொய்யை
    படைத்துக்கொண்டு இருக்கிறான்

    படைத்தவன் படைத்த
    பொருளிலும் இருக்கிறான்
    படைத்தவனுக்குத்தான் தெரியும்
    படைத்த பொருளின் கஷ்டம்

    படைத்த பூமியை
    காக்க நவ கிரகங்கள்
    இருகின்றன .

    நம்பிக்கைதான் மனிதனுக்கு
    நம்புவோம் பல்லாயிரம்
    ஆண்டு இந்த பூமி
    இருக்கும் என்று .

    சந்திரசேகரன்

    ReplyDelete
  33. /////// ananth said...
    //இந்த ஆனந்துக்கு மைனரை உசுப்பி விடறதே வேலையாப்போச்சு.//

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்கே என்று மைனர் நடிகர் வடிவேலு போல் புலம்பும் நிலைக்கு ஆளாக மாட்டார் என்று நினைக்கிறேன்.////

    உசுப்பி வுட்டா ஏதோ கூட ரெண்டு கமென்ட் அடிப்போமே தவிர
    ப்ளாக் ஆரம்பிக்கிறேன் பேர்வழி ன்னு என் பேர்லே
    கிளாஸ் ரூம் ப்ளாக்-காமெடி கலாட்டா ஆரம்பிக்கிற அளவுக்கெல்லாம் போயிடமாட்டேன்..

    ReplyDelete
  34. ஒட்டுமொத்தத் தமிழர்களும் கிளர்ந்தெழுந்திருக்கும் இந்த வேளையிலே
    டெல்லி 'பேரிடர்க்குழு அமைக்கிறேன்' என்று சொல்லியிருப்பது அணை உடையும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை வலுப்படுத்ததி
    மக்கள் அழிந்து போவர் என்று இன்றைய பதிவினை ஒத்த கருத்தை

    விஷவிதையாகத் தூவும் முயற்சி
    என்பது சிறு குழந்தைக்கும் புரியும் விஷயமென்பதால்

    டெல்லிக்காரவுகளின் அறிவிப்பைப் புறக்கணிப்பு செய்து

    'காப்போம்.. காப்போம்..அணையைக் காப்போம்..

    உடைப்போம்.. உடைப்போம்..டெல்லி சதித் திட்டத்தை உடைப்போம்'

    என்று உரக்க முழக்கமிட்டு இந்த சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  35. வாத்தியார் ஐயா !

    வணக்கம்கள் ஓராயிரம் .

    இரத்தின சுருக்கமாக கூறுவது என்றால் வாத்தியார் ஐயாவே கூறி விட்டீர்கள் நமது

    " பாரத தேசம் நல்லவனுக்கு நல்லவனாகவும், வில்லனுக்கு கதாநாயன் ஆகவும்"!

    ஆக போகின்றது என்று, . இந்த இரத்தின வரிகளை விட வேறு எண்ணத்தை கூற அல்லது .இன்னும் அதிகமாக " படித்து! படித்து "
    மண்டையை போட்டு குழப்ப தாங்களே கூறுங்கள் ஐயா ?

    ReplyDelete
  36. minorwall said...
    ///பேரரசியார் ஆழ்ந்த நித்திரைக்குப் போக, சக்கரவர்த்திப் பொறுப்பை சுமந்திருக்கும் இந்த வேளையிலே பின்னூட்ட மன்னர்களாக தமிழ்விரும்பியாரையும், தனுசுராசிக்காரையும் பட்டம் வழங்கி அறிவித்து, இந்த நியமன அறிவிப்புக் கோப்பில் பதவியேற்றபின் முதல் கையொப்பத்ததை இடுகிறேன்.. ///

    ///டெல்லிக்காரவுகளின் அறிவிப்பைப் புறக்கணிப்பு செய்து
    'காப்போம்.. காப்போம்..அணையைக் காப்போம்..
    உடைப்போம்.. உடைப்போம்..டெல்லி சதித் திட்டத்தை உடைப்போம்'
    என்று உரக்க முழக்கமிட்டு இந்த சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.. ////

    விபரீத ராஜயோகம் என்பது இதுதானோ!!!!!!!!!!! நான் கொஞ்சம் தூங்கி எழுந்திரிக்கிரதுக்குள்ள என்னென்னமோ நடக்குது இங்கே.
    மாண்புமிகு மைனரே, உங்களுக்கு இந்த ஆறாம் இடத்து சனிப்பெயர்ச்சி விபரீத ராஜயோகத்தை கொடுத்திருக்கிறது. வேறு யாருக்கோ மன்னர் பட்டம் கொடுத்தால், சந்தடி சாக்கில் நீங்கள் சக்கரவர்த்தியாக மாறியதுடன் நில்லாமல் நியமனக் கோப்பில் கையெழுத்திட்டு, மற்றவர்களுக்கும் பதவி வழங்கியதுடன் நிறுத்தாமல், டெல்லியை வேறு நோக்கி அறைகூவல் விட்டு கொண்டிருக்கிறீர்கள். அசந்தா என்னையும் நாடு கடத்தியிருப்பீங்களோ?

    ReplyDelete
  37. ////தேமொழி said...
    அசந்தா என்னையும் நாடு கடத்தியிருப்பீங்களோ?
    //////

    விபரீத ராஜயோகம் குறித்துப் பாராட்டிய தேமொழி அம்மையாருக்கு நன்றி..நன்றி..

    ///////அசந்தா என்னையும் நாடு கடத்தியிருப்பீங்களோ?///////

    பேரரசியாரை எளிதில் நாடுகடத்திவிட முடியுமா?பேரரசியார் மக்கள் சொத்தைத் தனதாக்கிக் குவித்துக் கொண்டது குறித்த வழக்கில் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கவேண்டும்..பேரரசியார் நித்திரையில் ஆழ்ந்த நேரத்தில் கட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கலாம்..இப்படிப் படிப்படியாகத்தானே முடியும்..

    இதுதானே ரீசென்ட் ட்ரென்ட்..

    இவ்வளவும் நித்திரையைக் கலைக்கும் சனிப் பெயர்ச்சிக்குப் பின் சாதகமான பலனைத் தருமா..இல்லை தனக்கே வைத்துக் கொண்ட ஆப்பா..
    சனியன் பூங்குன்றனார்தான் சொல்ல வேண்டும்..?

    எது எப்படியோ வேடிக்கைமட்டுமே பார்த்து பேரரசிப் பட்டம் கட்டும் மக்கள் இருக்கும் வரை பேரரசியார் தொடர்ந்தும் ஆனந்த சயனத்தைத் தொடரலாம்..

    ReplyDelete
  38. இன்னும் பல கோடி பதிவுகள் நீங்கள் எழுதுவீர்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com