12.12.11

Astrology உள்ளம் கவர் கள்வனின் நட்சத்திரம்!



Astrology உள்ளம் கவர் கள்வனின் நட்சத்திரம்!

என் நண்பர் ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டுத் (Boston, USA) திரும்பியவர் சொன்னார்:

“என் மகள் மிகவும் அவதிப்படுகிறாள்”

“ஏன், என்ன பிரச்சினை?”

“பிரச்சினை எல்லாம் அவளுடைய நான்கு வயது மகனைவைத்துத்தான். பயல் படுசுட்டி. அசாத்தியக் குறும்பு. தாங்கமுடியாத குறும்பு. எதை எப்போது கொட்டி மொழுகுவான் என்று தெரியாது. மொத்தத்தில் படு துஷ்டன்!”

நான் இடை மறித்துக் கேட்டேன்: “பையன் ரோஹிணி நட்சத்திரமா?”

தூக்கி வாரிப்போட்டது போல் ஆகிவிட்டது அவருக்கு, ஆதங்கத்துடன் கேட்டார், “எப்படிக் கரெக்டாகச் சொல்கிறீர்கள்?”

“அந்த நட்சத்திரக்காரர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள். மாயக் கண்ணன், வெண்ணெய் திருடிக் கள்ளன் - உள்ளம் கவர் கள்வன்
கண்ணனின் நட்சத்திரம் அது!”

“கடைசிவரை அப்படித்தான் இருப்பார்களா?”

“பதினான்கு அல்லது பதினெட்டுவயதுவரை அப்படித்தான் இருப்பார்கள். அதற்குப்பிறகு சூப்பராக மாறிவிடுவார்கள்”

“ரோஹிணி நட்சத்திரத்தைப் பற்றி மேலும் சொல்லுங்கள்” 

“ரோகிணி நட்சத்திரக்காரர்கள் பொதுவாக அனைவரும் விரும்புகின்ற தோற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஊர் சுற்றிகள். இறை
நம்பிக்கை இருக்கும். எல்லாக் கலைகளிலும் ஈடுபாடு இருக்கும்.”

“அவ்வளவுதானா?”

“இன்னும் நிறைய இருக்கிறது. 
Rohini nakshatra is the birth nakshatra of Lord Krishna. Those born in the star Rohini are experts, well-behaved, handsome, good speakers and poets. They are stable minded, respected  and interested in lovemaking. They are of sweet-speech, intelligent, capable and bright. They are long-lived and perform accepted jobs, religious, truthful and help 
those who have helped them. Kings respect them.They respect gods They are able servants of their lords and determined. They are endowed with good looking and wide forehead, handsome, independent, loved by their children, experts, wealthy with respect 
to corns and money, have desire to wear new clothes,suffer from eye diseases and little feared”

“வாழ்க்கையில் கஷ்டங்களும், துன்பங்களும் இல்லாமல் இருப்பார்களா?”

“அதெப்படி? இரவு பகலைப் போல இன்பங்களும் துன்பங்களும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. எந்த நட்சத்திரமும் விதிவிலக்கல்ல! ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு துவக்க திசை சந்திர திசை. அது சந்திரனின் நட்சத்திரம். ஆகவே  ஸ்டார்ட்டிங் திசை சந்திர திசை. அதில் கர்ப்பச்செல் இருப்பு எத்தனை ஆண்டுகள் உள்ளதோ அத்தனை ஆண்டுகளுடன் அடுத்து வரும்  செவ்வாய் மகாதிசையின் ஏழு ஆண்டு களையும் கூட்டிக்கொள்ளூங்கள் ப்ளஸ் அதற்கு அடுத்துவரும்
ராகுதிசையின் சுயபுத்திக்காலமான 2 ஆண்டுகள் 8 மாதங்கள்
12 நாட்களையும் கூட்டிக் கொள்ளுங்கள். அதுவரை நன்றாக
இருப்பார்கள். அதற்குப்பிறகு சுமார் 15 ஆண்டு காலம்  கஷ்டம்தான்.
அது ஒருவருடைய இளமைக்காலம். அதாவது 15 வயது முதல்
30 வயது வரை அல்லது 20 வயது முதல் 35 வயதுவரைஉள்ளகாலம்.
அதில் அவர்கள் பல முட்டுக்கட்டைகளை அவர்கள் சந்திக்க
வேண்டியதாக இருக்கும்”

“அதற்குப் பரிகாரம் இருக்கிறதா?”
   
“இருக்கிறது. ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கான திருக்கோவில் ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ளது. அதன் பெயர் அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில். அந்தக் கோவிலுக்கு தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று சென்று அங்கே உறையும் பெருமாளை மனம் உருக  வணங்கிவிட்டு வருவதுதான் பரிகாரம்”
---------------------------------------------------------------------------------------
அக்கோவிலைப் பற்றிய மேலதிகத்தகவல்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 11 மணிவரை; மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணிவரை!
இங்கே உறைந்திருக்கும் இறையனாரின் பெயர் பாண்டவ தூதர்
அம்மைகளின் பெயர்கள்: சத்யபாமா, ருக்மணி
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதணக் கோவில்!
ஆழ்வார்கள் பலரின் பாடல் பெற்ற திருத்தலம் இது.
கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, மார்கழித் திங்களில் வரும் வைகுண்ட ஏகாதசி ஆகிய காலங்கள் இக்கோவிலின் திருவிழாக்காலமாகும்

கிருஷ்ண பகவான் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். அருள்பாலிக்கின்றார்.

வேறு எந்த வைணவத் தலங்களிலும் காணக்கிடைக்காத சிறப்பம்சம் இது!     

நீர் மோரில் வெண்ணெய் எடுத்துப் பொட்டலம் போடும் திறமை வாய்ந்த அன்பர்களுக்காக இத்திருக்கோவிலின் முழு முகவரியை அடுத்துக்
கொடுத்துள்ளேன்.
  
அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்,
திருப்பாடகம்,
எண். 28, பாண்டவதூதப் பெருமாள் கோயில் தெரு,
காஞ்சிபுரம் - 631 502.

பரந்தாமன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோகசக்திகளைக் கொண்டு அருளுகின்றார். ஆகவே இங்கே அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களுக்கு மிகுந்த நன்மைகள் உண்டாகும். எல்லாம் நம்பிக்கையின் அடைப்படையில்தான் நடக்கின்றது. நம்பிக்கையோடு வழிபடுங்கள். வக்கிரமான கேள்விகளைத் தவிர்க்கவும். புதன்கிழமைகள், சனிக்கிழமைகள், ரோகிணி நட்சத்திரநாட்கள், அஷ்டமி திதிகள், எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது நல்லது.

கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக செயல்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து
தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். அதனால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப் படுகின்றார்.  பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள  கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப்பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை  கொண்டு அருளுகின்றார்.  இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி  என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.

ரோகிணி நட்சத்திர தேவி, இத்தலத்தில் உறையும் பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாளாம். சந்திரன் தனது 27 நட்சத்திர
தேவியர்களில் முதலில் ஞானசக்தியைக் கொண்ட ரோகிணியையும், அக்னி சக்தியைக் கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே மற்ற
நட்சத்திர தேவிகளையும் மணந்தாராம்.

(அக்காலத்தில் பலதார மணத் தடுப்புச் சட்டம் எல்லாம் இல்லை என்று தெரிகிறது. பல பெண்களை மணந்து கொள்வது தவறில்லை என்றும்
தெரிகிறது. அத்துடன் அக்காலத்துப் பெண்களும் தங்கள் கணவனை
முட்டிக்கு முட்டி தட்டி எடுக்கும் வழிமுறைகளை அறியாதவர்களாகவும் இருந்திருக் கிறார்கள் என்றும் தெரிகிறது. மகளிர் காவல் நிலையங்கள் எல்லாம் ஒரு பதினைந்து ஆண்டு காலத்திற்குள் ஏற்பட்டவைதான்
அதையும் மனதில் கொள்க!)

ரோகிணி தேவியார் தனக்கு ஞானசக்தியைக் கொடுத்த பெருமாளை அருவ வடிவில் தினமும் வந்து வணங்குவதாக ஒரு நம்பிக்கை  உள்ளது.அதற்கு ஏதாவது காணொளி (Video) சான்று உள்ளதா என்று அசட்டுத் தனமாகக்
கேட்டுக் கொண்டிருக்காமல், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
புதன், சனிக் கிழமை, அஷ்டமி திதி, மற்றும் 8ஆம் தேதிகளில்
இத்தலத்திற்கு வந்து இங்கே உறையும் பெருமாளை  வழிபடுவது
நன்மை பயக்கும்!

பாண்டவர்கள் கவுரவர்களிடம் தங்கள் நாட்டை இழந்தார்கள். அட்லீஸ்ட் ஆளுக்கொரு வீடுகளையாவது கேட்டுப்பெற விரும்பினார்கள். அவர்களின் பொருட்டு பகவான் கிருஷ்ணர் துரியோதனனிடம் தூது சென்றார், அவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். கிருஷ்ணர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்) உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை  போட்டு மறைத்தான். கிருஷ்ணனும் அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கே அவரை சூப்பர் சுப்பராயன் குரூப்பைப் போன்ற பைட்டர்கள் மறைந்திருந்து தாக்கினார்கள். தாக்கியவர்களை துவம்சம் செய்ததுடன் தந்து விஸ்வரூப  தரிசனத்தையும் காட்டினார் பகவான். பாண்டவர்களுக்காக தூது சென்ற இவரை பாண்டவதூதப் பெருமாள் என்று அழைப்பார்கள்.

ஸ்ரீகிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், அமர்ந்த திருக்கோலத்தில் காட்சிகொடுப்பது நீங்கள் வேறு எங்கும் காண முடியாத  காட்சியாகும்.

பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்கு பிறகு, ஜனமேஜயர் என்ற மன்னன், வைசம்பாயனர் என்னும் முனிவரிடம் பாரதக்கதையை முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஸ்ரீகிருஷ்ணர் தூது சென்றபோது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும்  தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான வழியை அம்முனிவரிடம் கேட்க, அவரின் அறிவுரையின்படி காஞ்சிபுரம் வந்து இத்திருக்கோவிலில் தவம் செய்து பெருமாளை வணங்க, பெருமாளும் அவருக்காக ஒருமுறை விஸ்வரூப தரிசனம் காட்டி அருள்பாலித்தார்.

Janamejaya was a Kuru king. He was the son of Parikshit and Madravati. He was the grandson of Abhimanyu and the great - grandson of  Arjuna, the valiant warrior hero of the Mahābhārata. He was ascended to the Kuru throne following the death of his father. His significance  comes as the listener of the first narration of the Mahābhārata, narrated by Vaishampayana, pupil of Vyasa. மேலும் படிக்க விரும்புகின்றவர்கள் கீழே கொடுக்கப்பெற்றுள்ள சுட்டியைக் கிளிக்கிப் படிக்கலாம்.
http://en.wikipedia.org/wiki/Janamejaya
--------------------------------------------------------------------  
ரோகிணி நட்சத்திரக்காரர்களே உங்களுக்கான கோவில் இது. உங்களுக்கு ஏற்படும் துன்பங்கள், க‌ஷ்டங்கள் நீங்க இத்தலத்திற்கு ஒருமுறை
சென்று அங்கே உறையும் பெருமாளை மனமுருக வழிபடுட்டுவிட்டு வாருங்கள்! பிறகு நடப்பதைப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

49 comments:

  1. அது சரி சூரியனை தொடர்ந்து சந்திரன் அப்ப நம்ம நட்சத்திரம் தான் கடைசி...!

    ReplyDelete
  2. ஒரு ஆச்சரியம்..great surprising co-insidence..

    சென்ற பதிவுக்கு கீதாபதேச ஸ்டைலில் ஒரு கமென்ட் அடிச்சுட்டு அப்லோட் ஆச்சான்னு செக் பண்ண திரும்ப கிளாசுக்கு வந்தா கண்ணனே காட்சி தருகிறான்..ஆஹா..இப்படி ஒரு புது பக்தனை லிஸ்ட்டிலே ஏத்திட்டியே கண்ணா..

    ReplyDelete
  3. நீங்கள் சொல்லும் பெருமாள் இங்கு தான் இருக்கிறார்.


    PANDAVA THOOTHA PERUMAL, KANCHEEPURAM 

    meenachi paatti

    ReplyDelete
  4. வணக்கம் குருவே. சிறப்பான பதிவு. இக்கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்று என்பதும் இதன் சிறப்பம்சாகும். காஞ்சியைச் சுற்றிப் பல கோயில்கள் இருப்பினும் அவற்றின் சிறப்பம்சங்கள் அறியாமல் இருப்பது பலரின் துரதிர்ஷ்டமே.

    ReplyDelete
  5. ஆசிரியரே ,
    உங்கள் வகுப்பில் சில நாட்களுக்கு முன் சேர்ந்த மாணவன் தான் நான். உங்கள் வகுப்பு ஜோதிடப் பாடங்களை முதலில் இருந்து படித்து வருகிறேன். ஜோதிடத்தில் மிக நாட்டம் கொண்டு கேட்டும் கற்றும் வருகிறேன். உங்கள் வகுப்பறைப் பாடங்கள் இப்போது எனக்குத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி. சமீபத்தில் பண்டவ துதப் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தேன்.
    அருணாசலம்

    ReplyDelete
  6. ஆசிரியருக்கு வணக்கம்,

    இன்றைய கிருஷ்ணரின் படம் அருமை... எனது ஜாதகத்தில் மேல் அட்டையில் இந்தப் படம் தான் இருக்கும் நான் சிறுவயதில் இருந்து இந்தக் உள்ளம் கவர்ந்தக் கள்வனை ரசித்து வருவது வழக்கமாக கொள்வேன்... நானும் எட்டாவதாகப் பிறந்ததை அறிந்த எங்கள் குடும்ப ஜோதிடர் இந்த படத்தை தேர்ந்தெடுத்து இருக்கலாம். எனினும் இன்றைய பதிவு..

    சூப்பர் என்னுடைய நெருங்கிய நண்பர் அவரின் பெயரும் கண்ணன் ரோஹிணியில் பிறந்தவர்... இங்கு தான் இருக்கிறார்... நல்லபடியாக கால் ஊன்ற முப்பத்தைதுக்கு மேல் தான் ஆனது, போடாத குட்டிக் கர்ணம் இல்லை.. இப்போது தேறி வந்துவிட்டார். அதே போல் நல்ல மனிதர் காதலின் மேல் தீராத காதல் கொண்டு கரம் பிடித்தார்...

    நான் பதிவை வாசிக்கும் பொது அவரின் வாழ்க்கை குறிப்பைப் படிப்பதாகவே உணர்கிறேன்.

    அருமை..
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  7. அப்பாடா என் கணிப்பை உறுதி செய்த வாத்தியாருக்கு நன்றி. தேமொழி அவர்களே நான் என் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாமா?

    ReplyDelete
  8. திருமணை
    திராவிட வேதம் சொல்லும்

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருமணையா என குறித்துச் சொன்னால் நன்று..

    வகுப்பறை தோழர்கள் மேல் அதிக தகவல் தந்தால் மிக்க நன்று

    இந்த மார்கழி முழுதும்
    இப்படித்தான் போல


    இந்த பாடலினை இன்று சுழல விட
    இந்த அய்யருக்கு விரும்பமில்லை

    மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா
    ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா

    ReplyDelete
  9. ///அத்துடன் அக்காலத்துப் பெண்களும் தங்கள் கணவனை முட்டிக்கு முட்டி தட்டி எடுக்கும் வழிமுறைகளை அறியாதவர்களாகவும் இருந்திருக் கிறார்கள் என்றும் தெரிகிறது.///

    ஐயா, இதில் ஏதும் உள்குத்து இருக்கிறதா? என்று "நீர் மோரில் வெண்ணெய் எடுத்துப் பொட்டலம் போடும் திறமை" உள்ள உங்கள் மாணவியான எனக்கொரு சம்சயம்.

    என் தங்கை ரோஹிணி நட்சத்திரத்தில், ஒரு திங்கள் கிழமை காலை ராகு காலத்தில் பிறந்த குணவதி. "ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தால் மாமாவிற்கு ஆகாது" என்று சொல்வதுண்டு. என் அப்பா மேற்படிப்பிற்கு சென்றுவிட்டதால், கைக்குழந்தையான என் தங்கையுடனும் என்னுடனும் தாய்வீடு சென்று தங்க நினைத்த என் அம்மாவை, என் மாமாக்கள், நவீன காலத்து கம்சர்கள், வீட்டை விட்டு விரட்டிவிட்ட கதையை அம்மா சொல்லியுள்ளார்.

    சென்னையில் இருக்கும் தெய்வ பக்தி நிறைந்த என் தங்கையை இந்தக் கோவிலுக்கு ஓர் நடை போகச் சொல்ல வேண்டும் என்று குறிபெடுத்துக் கொண்டேன். பரணீதரன் பாணியில் இதுபோன்று நட்சட்சிரக் கோயில் தலபுராணப் பதிவுகளுக்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தை ஆராய்சிக்காக செவழிக்காமல் எழுத முடியாது. உங்கள் நேரத்திற்கும், பொறுமையுடன் பதிவு எழுதி செய்திகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் நன்றி.

    ReplyDelete
  10. இரண்டு ரோகினி நட்சத்திர நண்பர்கள் உள்ளனர். பலன்கள் பெரும்பாலும் பொருந்துகிறது. நன்றிகள் பல.
    -சதீஷ் கனகராஜ். கோயம்புத்துர்.

    ReplyDelete
  11. அய்யா வணக்கம்,

    நான் தாங்கள் நடத்தும் பாடத்தை வகுப்புக்கு
    வெளியில் இருந்து படிக்கும் மாணவன் என்று தாங்கள் அறிந்த ஒன்று.
    இந்த நட்சத்திர கோயில் பதிப்புக்கள் கண்டிப்பாக வகுப்புக்கு வருவோர்க்கும்
    அவர்களை சார்ந்தோர்க்கும் பயனுள்ளதாக அமையும்
    ஹஸ்தம் பற்றி எப்போது சொல்வீர்கள் என்று ஆவள உள்ளேன்

    நன்றி!

    ReplyDelete
  12. நன்றி ஐயா அசத்தல் ஆரம்பத்துடன் அழகான பதிவு

    ReplyDelete
  13. மிகவும் நல்ல தகவல். நாங்கள் காஞ்சிபுரம் அடுத்த முறை செல்லும் போது போவோம்

    ReplyDelete
  14. Unforgettable article sir. My name is also kannan. Star is ROHINI. Amazing sir. Epdi sir idhellam nadakkudhu? God is great. Ennoda name ipdi amaindhadhai ninaikum podhu kandippa GOD IS GREAT sir. Kandippa indha koviluku poganum sir.

    ReplyDelete
  15. ///அப்பாடா என் கணிப்பை உறுதி செய்த வாத்தியாருக்கு நன்றி. தேமொழி அவர்களே நான் என் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாமா?///

    ஆஹா தாராளமாக,.... வெற்றி வாகை சூடிய தனுசுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. ஆஹா! ஆவலுடன் எதிர்பார்த்த எனது நட்சத்திரம் ரோகிணி இன்றைய பதிவில் மட்டற்ற மகிழ்ச்சி!!!

    "எதை எப்போது கொட்டி மொழுகுவான் என்று தெரியாது. மொத்தத்தில் படு துஷ்டன்!”
    உண்மை!உண்மை! ஐயா இது போன்ற நிரைய பாராட்டுகள் பெற்றுள்ளேன் சிறுவயதில்,

    "பதினான்கு அல்லது பதினெட்டுவயதுவரை அப்படித்தான் இருப்பார்கள். அதற்குப்பிறகு சூப்பராக மாறிவிடுவார்கள்”
    “ரோஹிணி நட்சத்திரத்தைப் பற்றி மேலும் சொல்லுங்கள்”
    “ரோகிணி நட்சத்திரக்காரர்கள் பொதுவாக அனைவரும் விரும்புகின்ற தோற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஊர் சுற்றிகள். இறை
    நம்பிக்கை இருக்கும். எல்லாக் கலைகளிலும் ஈடுபாடு இருக்கும்.”
    "சுமார் 15 ஆண்டு காலம் கஷ்டம்தான்.
    அது ஒருவருடைய இளமைக்காலம். அதாவது 15 வயது முதல்
    30 வயது வரை அல்லது 20 வயது முதல் 35 வயதுவரைஉள்ளகாலம்.
    அதில் அவர்கள் பல முட்டுக்கட்டைகளை அவர்கள் சந்திக்க
    வேண்டியதாக இருக்கும்”

    இதுவும் முழுவதுமாக பொருந்துகிறது.
    இன்னும் 6 மாதங்கள்தான் ராகு தசை பிறகு லக்கினாதிபதி குரு தசை,

    ஐயாவின் அறிவுரை படி உம்மை காண விரைவில் வருகிறேன் பாண்டவ தூதப் பெருமாளே!
    அனைவருக்கும் அருள் தாருங்கள்!!!
    பதிவை மிக அருமையாக பதிவிட்டு எம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கவிட்ட வாத்தியார் ஐயாவிற்கு மிக்க நன்றி!!!
    அன்புடன் உங்கள் மாணவன்

    ReplyDelete
  17. வணக்கம் ஐயா,
    கண்ணணின் ஜென்ம நட்சத்திரத்தின் கோவில் விளக்கங்கள் அருமை...ஐயா நட்சத்திர கோவில்கள் அனைத்திலும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று சென்று வணங்கினால் பலன்கள் உண்டு என்று இன்று அறிந்து கொண்டேன்...

    ReplyDelete
  18. Ayya,

    Very good info about Rohini. I heard this nackshtra is not good Maternal uncle..Is that true?

    Student,
    Trichy Ravi

    ReplyDelete
  19. ஆசிரியர் ஐயா, உங்கள் அனுமதியோடு இந்த ரோஹிணி நட்சத்திரத்தைப் பற்றிய கட்டுரையில் தலை நீட்டுகிறேன். ஜோசியத்தில் நான் பூஜ்யம்தான். நம்முடைய வழக்கத்தில் சில நட்சத்திரங்களுக்கென்று எதுகை மோனையுடன் சில பலன்களைப் பாமரர்கள் சொல்லி வருகிறார்கள். அப்படிச் சொல்வதால் பெண் மூலம் நிர்மூலம் என்றதும் மூல நட்சத்திரப் பெண்ணுக்குத் திருமணம் தடைப் படுகிறது. ரோஹிணி நட்சத்திர ஆண் குழந்தையென்றால் மாமனுக்கு ஆகாது என்று சொல்லி சில பரிகாரங்கள் செய்கின்றனர். கிருஷ்ண பரமாத்மா இந்த நட்சத்திரத்தில் அவதரித்துவிட்ட காரணத்தால், அவர் தன் மாமனான கம்ஸனை வதம் செய்ததால் இதே பலன் அனைவருக்கும் வரும் என்பதுபோல ஒரு பிரமையை உண்டாக்கி விடுகின்றனர். இந்த கண்மூடி வழக்கத்தை உங்கள் கட்டுரை உடைத்தெறிவதோடு, இந்த நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கைப் பலன் எந்த வயது வரை எப்படியிருக்கும் என்று ஜோசிய சாஸ்திரப்படி தந்திருக்கிறீர்கள். அதோடு, பொய்யான சில பாமர வழக்கங்களையும் மறுத்து ஆணித்தரமாகக் கருத்துச் சொல்வீர்களானால், மூட நம்பிக்கைகளால் பாதிக்கப்படும் பலரது, குறிப்பாகப் பெண்கள் திருமணம் தடைபடாமல் நடக்கும் எனக் கருதுகிறேன். நன்றி.

    ReplyDelete
  20. பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவில் சொற்சித்திரம் வாசித்து மகிழ்ந்தேன் .நன்றி ஐயா!

    மகளிர் காவல் நிலையங்களில் முன்பெலாம் புகார் அளித்தவுடன் கணவன் வீட்டுக்காரரகளை கைது செய்து துன்பப்படுத்துவார்கள். ஏற்பட்ட அனுபவங்களின்
    அடிப்படையில் பெண்கள் சார்பில் அதிக எண்ணிக்கையில் பழிவாங்கும் நோக்கத்துடன் புனைவுப் புகார்கள் அதிகமானதால் இபோதெல்லாம் உடனடியாகக் கணவன் வீட்டார் கைது கிடையாது. தீர விசாரித்து விட்டுதான் தேவைப்பட்டால் தான் கைது என்று ஆகியுள்ளது.

    ReplyDelete
  21. ஆசிரியரும் சக மாணவர்களும் மன்னிக்கவும். "மாமாவுக்கு ஆகாது" என்ற வழக்கை பின்னூட்டத்தில் குறிப்பிட்ட நான் கதையை முழுமையாக முடித்திருக்க வேண்டும். ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்த என் தங்கையினால் என் மாமாக்கள் எந்த ஒரு வித பாதிப்பையும் இதுவரை அடைந்ததில்லை. மற்றவர்கள் அவர்களுக்கு தொல்லை கொடுத்ததைவிட அவர்களே தங்களுக்குள் சொத்து தகராறில் அடித்துக்கொள்வதே அதிகம்.

    எழுபது வயதைத் தாண்டி இருவரும் நல்ல சுகத்துடன் இருக்கிறார்கள். எல்லோர் குடும்பத்திலும் இருப்பது போன்ற கருத்து பேதங்கள், சண்டை சச்சரவுகள், உறவுக்குள் மன வருத்தங்கள் என இவைகளை மட்டுமே இதுவரை அவர்கள் வாழ்விலும் சந்தித்துள்ளார்கள். தஞ்சாவூர் ஐயாவின் பின்னூட்டத்தைக் கண்டதும் முழு செய்தியையும் குறிப்பிடாத என் சமூகப் பொறுப்பற்ற தன்மையை உணர்ந்தேன். தஞ்சாவூர் ஐயாவின் வழிகாட்டுதலுக்கு நன்றி.

    ReplyDelete
  22. ரோஹிணி நட்சத்திர ஆண் குழந்தையென்றால் மாமனுக்கு ஆகாது என்று சொல்லி சில பரிகாரங்கள் செய்கின்றனர். கிருஷ்ண பரமாத்மா இந்த நட்சத்திரத்தில் அவதரித்துவிட்ட காரணத்தால், அவர் தன் மாமனான கம்ஸனை வதம் செய்ததால் இதே பலன் அனைவருக்கும் வரும் என்பதுபோல ஒரு பிரமையை உண்டாக்கி விடுகின்றனர். இந்த கண்மூடி வழக்கத்தை உங்கள் கட்டுரை உடைத்தெறிவதோடு, இந்த நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கைப் பலன் எந்த வயது வரை எப்படியிருக்கும் என்று ஜோசிய சாஸ்திரப்படி தந்திருக்கிறீர்கள். அதோடு, பொய்யான சில பாமர வழக்கங்களையும் மறுத்து ஆணித்தரமாகக் கருத்துச் சொல்வீர்களானால், மூட நம்பிக்கைகளால் பாதிக்கப்படும் பலரது, குறிப்பாகப் பெண்கள் திருமணம் தடைபடாமல் நடக்கும் எனக் கருதுகிறேன். நன்றி.

    இது மிகச்சரியானது கருத்து திரு.கோபலன் ஐயா அவர்களே, எனது நட்சத்திரம் ரோகிணி ஆனால் எந்த பரிகாரமும் செய்யவில்லை மறாக எனது தாய் மாமன்கள் அதிகமாக பாசத்துடன் வளர்த்தனர், இன்றளவும் உள்ளனர்.

    ReplyDelete
  23. ////Blogger vidyapathi said...
    அது சரி சூரியனை தொடர்ந்து சந்திரன் அப்ப நம்ம நட்சத்திரம்தான் கடைசி...!/////

    எதைவைத்துச் சொல்கிறீர்கள்? மாற்றி எழுத வாய்ப்பில்லையா என்ன?
    உங்கள் நட்சத்திரத்தைச் சொல்லுங்கள். வரிசையை மாற்றிவிடுகிறேன்:-))))

    ReplyDelete
  24. /////Blogger minorwall said...
    ஒரு ஆச்சரியம்..great surprising co-insidence..
    சென்ற பதிவுக்கு கீதாபதேச ஸ்டைலில் ஒரு கமென்ட் அடிச்சுட்டு அப்லோட் ஆச்சான்னு செக் பண்ண திரும்ப கிளாசுக்கு வந்தா

    கண்ணனே காட்சி தருகிறான்..ஆஹா..இப்படி ஒரு புது பக்தனை லிஸ்ட்டிலே ஏத்திட்டியே கண்ணா../////

    கண்ணனை நினைக்காத நாளில்லையே! நானும் கண்ணனின் பக்தன்தான் மைனர்!ஆஷா பரேக்கிற்கும் மனதில் இடமுண்டு.அபிநயசரஸ்வதிக்கும் இடமுண்டு. முருகனுக்கும் இடமுண்டு.அவனுடைய மாமனுக்கும் (மனதில் )இடமுண்டு மைனர்!

    ReplyDelete
  25. ///Blogger sury said...
    நீங்கள் சொல்லும் பெருமாள் இங்கு தான் இருக்கிறார்.
    PANDAVA THOOTHA PERUMAL, KANCHEEPURAM
    meenachi paatti////

    நல்லது மீனாட்சி பாட்டி! தாத்தாவிற்கு நன்றி சொல்லுங்கள். தொணதொணக்காமல் உங்களைப் பதிவெல்லாம் படிக்க விடுகிறாரே!

    ReplyDelete
  26. ////Blogger Jagannath said...
    வணக்கம் குருவே. சிறப்பான பதிவு. இக்கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்று என்பதும் இதன் சிறப்பம்சாகும். காஞ்சியைச்
    சுற்றிப் பல கோயில்கள் இருப்பினும் அவற்றின் சிறப்பம்சங்கள் அறியாமல் இருப்பது பலரின் துரதிர்ஷ்டமே.////

    இல்லை.இல்லை. இப்போது அனைவரிடமும் இறையுணர்வு மேலோங்கி நிற்கிறது. முதலில் அதற்கு சந்தோசப்படுவோம்.

    ReplyDelete
  27. ////Blogger VCTALAR said...
    ஆசிரியரே ,
    உங்கள் வகுப்பில் சில நாட்களுக்கு முன் சேர்ந்த மாணவன் தான் நான். உங்கள் வகுப்பு ஜோதிடப் பாடங்களை முதலில் இருந்து படித்து
    வருகிறேன். ஜோதிடத்தில் மிக நாட்டம் கொண்டு கேட்டும் கற்றும் வருகிறேன். உங்கள் வகுப்பறைப் பாடங்கள் இப்போது எனக்குத்
    தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி. சமீபத்தில் பண்டவ துதப் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தேன்.
    அருணாசலம்/////

    நல்லது. நன்றி ஆனாரூனா!

    ReplyDelete
  28. Blogger தமிழ் விரும்பி said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    இன்றைய கிருஷ்ணரின் படம் அருமை... எனது ஜாதகத்தில் மேல் அட்டையில் இந்தப் படம் தான் இருக்கும் நான் சிறுவயதில் இருந்து

    இந்தக் உள்ளம் கவர்ந்தக் கள்வனை ரசித்து வருவது வழக்கமாக கொள்வேன்... நானும் எட்டாவதாகப் பிறந்ததை அறிந்த எங்கள் குடும்ப
    ஜோதிடர் இந்த படத்தை தேர்ந்தெடுத்து இருக்கலாம். எனினும் இன்றைய பதிவு சூப்பர் என்னுடைய நெருங்கிய நண்பர் அவரின் பெயரும்
    கண்ணன் ரோஹிணியில் பிறந்தவர்... இங்கு தான் இருக்கிறார்... நல்லபடியாக கால் ஊன்ற முப்பத்தைதுக்கு மேல் தான் ஆனது, போடாத குட்டிக் கர்ணம் இல்லை.. இப்போது தேறி வந்துவிட்டார். அதே போல் நல்ல மனிதர் காதலின் மேல் தீராத காதல் கொண்டு கரம் பிடித்தார்.
    நான் பதிவை வாசிக்கும் பொது அவரின் வாழ்க்கை குறிப்பைப் படிப்பதாகவே உணர்கிறேன்.
    அருமை..
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!////

    நல்லது. உங்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  29. /////Blogger thanusu said...
    அப்பாடா என் கணிப்பை உறுதி செய்த வாத்தியாருக்கு நன்றி. தேமொழி அவர்களே நான் என் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாமா?//////

    காலரைத் தூக்கிவிடுவதற்கு என்ன அவசரம்? அவர் நம் சகோதரி! அவரிடம் பணிந்தே போவோம். அம்பிகை அருள் புரிவாள்!

    ReplyDelete
  30. ////Blogger iyer said...
    திருமணை திராவிட வேதம் சொல்லும்
    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருமணையா என குறித்துச் சொன்னால் நன்று..
    வகுப்பறை தோழர்கள் மேல் அதிக தகவல் தந்தால் மிக்க நன்று
    இந்த மார்கழி முழுதும்
    இப்படித்தான் போல
    இந்த பாடலினை இன்று சுழல விட
    இந்த அய்யருக்கு விரும்பமில்லை
    மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா
    ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா///////

    ஆண்டாளின் பாசுரத்தை கடைசி வரியை மாற்றித் தந்துள்ளார் கவிஞர் வைரமுத்து. அதனால் அது பாமரர்களைச் சென்றடைந்ததுடன்,
    அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது!

    ReplyDelete
  31. /////Blogger தேமொழி said...
    ///அத்துடன் அக்காலத்துப் பெண்களும் தங்கள் கணவனை முட்டிக்கு முட்டி தட்டி எடுக்கும் வழிமுறைகளை அறியாதவர்களாகவும் இருந்திருக் கிறார்கள் என்றும் தெரிகிறது.///
    ஐயா, இதில் ஏதும் உள்குத்து இருக்கிறதா? என்று "நீர் மோரில் வெண்ணெய் எடுத்துப் பொட்டலம் போடும் திறமை" உள்ள உங்கள்
    மாணவியான எனக்கொரு சம்சயம்.
    என் தங்கை ரோஹிணி நட்சத்திரத்தில், ஒரு திங்கள் கிழமை காலை ராகு காலத்தில் பிறந்த குணவதி. "ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தால் மாமாவிற்கு ஆகாது" என்று சொல்வதுண்டு. என் அப்பா மேற்படிப்பிற்கு சென்றுவிட்டதால், கைக்குழந்தையான என் தங்கையுடனும் என்னுடனும் தாய்வீடு சென்று தங்க நினைத்த என் அம்மாவை, என் மாமாக்கள், நவீன காலத்து கம்சர்கள், வீட்டை விட்டு விரட்டிவிட்ட கதையை அம்மா சொல்லியுள்ளார்.
    சென்னையில் இருக்கும் தெய்வ பக்தி நிறைந்த என் தங்கையை இந்தக் கோவிலுக்கு ஓர் நடை போகச் சொல்ல வேண்டும் என்று
    குறிபெடுத்துக் கொண்டேன். பரணீதரன் பாணியில் இதுபோன்று நட்சட்சிரக் கோயில் தலபுராணப் பதிவுகளுக்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட
    காலத்தை ஆராய்சிக்காக செவழிக்காமல் எழுத முடியாது. உங்கள் நேரத்திற்கும், பொறுமையுடன் பதிவு எழுதி செய்திகளை எங்களுடன்
    பகிர்ந்து கொள்வதற்கும் நன்றி.////

    உங்களின் நிறைவான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி! செலவழிக்காமல் எதையும் செய்ய முடியுமா என்ன? உங்களுக்காக (வகுப்பறைக் கண்மணிகளுக்காக) செலவழிக்க நான் தயங்குவதில்லை!

    ReplyDelete
  32. ///Blogger Sathish K said...
    இரண்டு ரோகினி நட்சத்திர நண்பர்கள் உள்ளனர். பலன்கள் பெரும்பாலும் பொருந்துகிறது. நன்றிகள் பல. -சதீஷ் கனகராஜ். கோயம்புத்துர்./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. /////Blogger Bala said...
    அய்யா வணக்கம்,
    நான் தாங்கள் நடத்தும் பாடத்தை வகுப்புக்கு வெளியில் இருந்து படிக்கும் மாணவன் என்று தாங்கள் அறிந்த ஒன்று.
    இந்த நட்சத்திர கோயில் பதிப்புக்கள் கண்டிப்பாக வகுப்புக்கு வருவோர்க்கும் அவர்களை சார்ந்தோர்க்கும் பயனுள்ளதாக அமையும் ஹஸ்தம் பற்றி எப்போது சொல்வீர்கள் என்று ஆவள உள்ளேன்
    நன்றி!////

    இது திறந்தவெளி இணைய வகுப்பு. இதில் உள்ளே, வெளியே என்ற பேதத்திற்கு இடமில்லை நண்பரே!

    ReplyDelete
  34. ////Blogger redfort said...
    Ayya Vanakkam,
    Well article.Thanks////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. ////Blogger Raja said...
    நன்றி ஐயா அசத்தல் ஆரம்பத்துடன் அழகான பதிவு////

    உங்கள் இரசனை உணர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  36. /////Blogger arul said...
    nice post////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. ///Blogger Sukanya said...
    மிகவும் நல்ல தகவல். நாங்கள் காஞ்சிபுரம் அடுத்த முறை செல்லும் போது போவோம்////

    ஆகா, சென்று வாருங்கள் சகோதரி! நன்றி!

    ReplyDelete
  38. ////Blogger KANNAN said...
    Unforgettable article sir. My name is also kannan. Star is ROHINI. Amazing sir. Epdi sir idhellam nadakkudhu? God is great. Ennoda name ipdi amaindhadhai ninaikum podhu kandippa GOD IS GREAT sir. Kandippa indha koviluku poganum sir.////

    ஆகா, சென்று வாருங்கள். அதுவும் உங்கள் ஜென்ம நட்சத்திரன்று சென்று வாருங்கள் நண்பரே! நன்றி!

    ReplyDelete
  39. /////Blogger தேமொழி said...
    ///அப்பாடா என் கணிப்பை உறுதி செய்த வாத்தியாருக்கு நன்றி. தேமொழி அவர்களே நான் என் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாமா?///
    ஆஹா தாராளமாக,.... வெற்றி வாகை சூடிய தனுசுக்கு வாழ்த்துக்கள்./////

    உங்களின் பெருந்தன்மை வாழ்க!

    ReplyDelete
  40. ////Blogger முருகராஜன் said...
    ஆஹா! ஆவலுடன் எதிர்பார்த்த எனது நட்சத்திரம் ரோகிணி இன்றைய பதிவில் மட்டற்ற மகிழ்ச்சி!!!
    "எதை எப்போது கொட்டி மொழுகுவான் என்று தெரியாது. மொத்தத்தில் படு துஷ்டன்!”
    உண்மை!உண்மை! ஐயா இது போன்ற நிரைய பாராட்டுகள் பெற்றுள்ளேன் சிறுவயதில்,
    "பதினான்கு அல்லது பதினெட்டுவயதுவரை அப்படித்தான் இருப்பார்கள். அதற்குப்பிறகு சூப்பராக மாறிவிடுவார்கள்”
    “ரோஹிணி நட்சத்திரத்தைப் பற்றி மேலும் சொல்லுங்கள்”
    “ரோகிணி நட்சத்திரக்காரர்கள் பொதுவாக அனைவரும் விரும்புகின்ற தோற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஊர் சுற்றிகள். இறை நம்பிக்கை இருக்கும். எல்லாக் கலைகளிலும் ஈடுபாடு இருக்கும்.”
    "சுமார் 15 ஆண்டு காலம் கஷ்டம்தான்.
    அது ஒருவருடைய இளமைக்காலம். அதாவது 15 வயது முதல் 30 வயது வரை அல்லது 20 வயது முதல் 35 வயதுவரை உள்ளகாலம்.
    அதில் அவர்கள் பல முட்டுக்கட்டைகளை அவர்கள் சந்திக்க
    வேண்டியதாக இருக்கும்”///
    இதுவும் முழுவதுமாக பொருந்துகிறது.
    இன்னும் 6 மாதங்கள்தான் ராகு தசை பிறகு லக்கினாதிபதி குரு தசை,
    ஐயாவின் அறிவுரை படி உம்மை காண விரைவில் வருகிறேன் பாண்டவ தூதப் பெருமாளே!
    அனைவருக்கும் அருள் தாருங்கள்!!!
    பதிவை மிக அருமையாக பதிவிட்டு எம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கவிட்ட வாத்தியார் ஐயாவிற்கு மிக்க நன்றி!!!
    அன்புடன் உங்கள் மாணவன்/////

    உங்களின் சொந்த அனுபத்தைப் பகிர்ந்து கொண்ட மேன்மைக்கு நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  41. /////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    கண்ணணின் ஜென்ம நட்சத்திரத்தின் கோவில் விளக்கங்கள் அருமை...ஐயா நட்சத்திர கோவில்கள் அனைத்திலும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று சென்று வணங்கினால் பலன்கள் உண்டு என்று இன்று அறிந்து கொண்டேன்...////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  42. Blogger Ravichandran said...
    Ayya,
    Very good info about Rohini. I heard this nackshtra is not good Maternal uncle..Is that true?
    Student,
    Trichy Ravi////

    அதில் உண்மை இல்லை. மாமாக்களின் ஜாதகம் அவரவர்களுக்கு விதிக்கப்பெற்ற விதிகளின் படிதான் நடக்கும்! அதில் மற்றவர்களின் குறுக்கீடு
    இருப்பதற்கு வாய்ப்பே இல்லை!

    ReplyDelete
  43. /////Blogger Thanjavooraan said...
    ஆசிரியர் ஐயா, உங்கள் அனுமதியோடு இந்த ரோஹிணி நட்சத்திரத்தைப் பற்றிய கட்டுரையில் தலை நீட்டுகிறேன். ஜோசியத்தில் நான் பூஜ்யம்தான். நம்முடைய வழக்கத்தில் சில நட்சத்திரங்களுக் கென்று எதுகை மோனையுடன் சில பலன்களைப் பாமரர்கள் சொல்லி வருகிறார்கள்.
    அப்படிச் சொல்வதால் பெண் மூலம் நிர்மூலம் என்றதும் மூல நட்சத்திரப் பெண்ணுக்குத் திருமணம் தடைப் படுகிறது. ரோஹிணி நட்சத்திர
    ஆண் குழந்தையென்றால் மாமனுக்கு ஆகாது என்று சொல்லி சில பரிகாரங்கள் செய்கின்றனர். கிருஷ்ண பரமாத்மா இந்த நட்சத்திரத்தில்
    அவதரித்துவிட்ட காரணத்தால், அவர் தன் மாமனான கம்ஸனை வதம் செய்ததால் இதே பலன் அனைவருக்கும் வரும் என்பதுபோல ஒரு பிரமையை உண்டாக்கி விடுகின்றனர். இந்த கண்மூடி வழக்கத்தை உங்கள் கட்டுரை உடைத்தெறிவதோடு, இந்த நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கைப் பலன் எந்த வயது வரை எப்படியிருக்கும் என்று ஜோசிய சாஸ்திரப்படி தந்திருக்கிறீர்கள். அதோடு, பொய்யான சில பாமர
    வழக்கங்களையும் மறுத்து ஆணித்தரமாகக் கருத்துச் சொல்வீர்களானால், மூட நம்பிக்கைகளால் பாதிக்கப்படும் பலரது, குறிப்பாகப் பெண்கள்
    திருமணம் தடைபடாமல் நடக்கும் எனக் கருதுகிறேன். நன்றி.//////

    ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர்களுக்கு விதிக்கப்பெற்ற வழியில்தான் செல்லும். அதில் மாமன் மருமகன் உறவு எல்லாம் குறுக்கே வந்து எந்த இம்சையையும் கொடுப்பதற்குச் சான்சே இல்லை. அனைவரும் அதை மனதில் கொள்ள வேண்டும்! இதை அவ்வப்போது எனது பதிவுகள் மூலமாகவும் சிறுகதைகள் மூலமாகவும் சொல்லிக்கொண்டுதான் உள்ளேன் கோபாலன் சார்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  44. Blogger kmr.krishnan said...
    பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவில் சொற்சித்திரம் வாசித்து மகிழ்ந்தேன் .நன்றி ஐயா!
    மகளிர் காவல் நிலையங்களில் முன்பெலாம் புகார் அளித்தவுடன் கணவன் வீட்டுக்காரர்களை கைது செய்து துன்பப்படுத்துவார்கள்.
    ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் பெண்கள் சார்பில் அதிக எண்ணிக்கையில் பழிவாங்கும் நோக்கத்துடன் புனைவுப் புகார்கள்
    அதிகமானதால் இபோதெல்லாம் உடனடியாகக் கணவன் வீட்டார் கைது கிடையாது. தீர விசாரித்து விட்டுதான் தேவைப்பட்டால் தான் கைது என்று ஆகியுள்ளது.//////

    உங்களின் மேலதிகத்தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  45. Blogger தேமொழி said...
    ஆசிரியரும் சக மாணவர்களும் மன்னிக்கவும். "மாமாவுக்கு ஆகாது" என்ற வழக்கை பின்னூட்டத்தில் குறிப்பிட்ட நான் கதையை
    முழுமையாக முடித்திருக்க வேண்டும். ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்த என் தங்கையினால் என் மாமாக்கள் எந்த ஒரு வித பாதிப்பையும் இதுவரை அடைந்ததில்லை. மற்றவர்கள் அவர்களுக்கு தொல்லை கொடுத்ததைவிட அவர்களே தங்களுக்குள் சொத்து தகராறில்
    அடித்துக்கொள்வதே அதிகம்.
    எழுபது வயதைத் தாண்டி இருவரும் நல்ல சுகத்துடன் இருக்கிறார்கள். எல்லோர் குடும்பத்திலும் இருப்பது போன்ற கருத்து பேதங்கள், சண்டை சச்சரவுகள், உறவுக்குள் மன வருத்தங்கள் என இவைகளை மட்டுமே இதுவரை அவர்கள் வாழ்விலும் சந்தித்துள்ளார்கள். தஞ்சாவூர் ஐயாவின் பின்னூட்டத்தைக் கண்டதும் முழு செய்தியையும் குறிப்பிடாத என் சமூகப் பொறுப்பற்ற தன்மையை உணர்ந்தேன். தஞ்சாவூர்
    ஐயாவின் வழிகாட்டுதலுக்கு நன்றி.//////

    ஒருவரின் வாழ்க்கை அவருக்கு விதிக்கப்பெற்ற வழியில்தான் செல்லும். இதில் மாமன் மருமகன் உறவு எல்லாம் குறுக்கே வந்து எந்த
    இம்சையையும் கொடுப்பதற்குச் சான்சே இல்லை. அனைவரும் அதை மனதில் கொள்ள வேண்டும்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி
    சகோதரி!

    ReplyDelete
  46. //////Blogger முருகராஜன் said...
    ரோஹிணி நட்சத்திர ஆண் குழந்தையென்றால் மாமனுக்கு ஆகாது என்று சொல்லி சில பரிகாரங்கள் செய்கின்றனர். கிருஷ்ண பரமாத்மா இந்த நட்சத்திரத்தில் அவதரித்துவிட்ட காரணத்தால், அவர் தன் மாமனான கம்ஸனை வதம் செய்ததால் இதே பலன் அனைவருக்கும் வரும்
    என்பதுபோல ஒரு பிரமையை உண்டாக்கி விடுகின்றனர். இந்த கண்மூடி வழக்கத்தை உங்கள் கட்டுரை உடைத்தெறிவதோடு, இந்த
    நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கைப் பலன் எந்த வயது வரை எப்படியிருக்கும் என்று ஜோசிய சாஸ்திரப்படி தந்திருக்கிறீர்கள். அதோடு, பொய்யான சில பாமர வழக்கங்களையும் மறுத்து ஆணித்தரமாகக் கருத்துச் சொல்வீர்களானால், மூட நம்பிக்கைகளால் பாதிக்கப்படும் பலரது, குறிப்பாகப் பெண்கள் திருமணம் தடைபடாமல் நடக்கும் எனக் கருதுகிறேன். நன்றி.
    இது மிகச்சரியானது கருத்து திரு.கோபலன் ஐயா அவர்களே, எனது நட்சத்திரம் ரோகிணி ஆனால் எந்த பரிகாரமும் செய்யவில்லை
    மாறாக எனது தாய் மாமன்கள் அதிகமாக பாசத்துடன் வளர்த்தனர், இன்றளவும் உள்ளனர்./////

    உண்மைதான். உங்களின் தகவல் பகிர்விற்கு நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  47. ////எதைவைத்துச் சொல்கிறீர்கள்? மாற்றி எழுத வாய்ப்பில்லையா என்ன?
    உங்கள் நட்சத்திரத்தைச் சொல்லுங்கள். வரிசையை மாற்றிவிடுகிறேன்:-))))///

    தங்கள் அன்பிற்கு நன்றி அய்யா....!

    ReplyDelete
  48. ////Blogger vidya pathi said...
    ////எதைவைத்துச் சொல்கிறீர்கள்? மாற்றி எழுத வாய்ப்பில்லையா என்ன?
    உங்கள் நட்சத்திரத்தைச் சொல்லுங்கள். வரிசையை மாற்றிவிடுகிறேன்:-))))///
    தங்கள் அன்பிற்கு நன்றி அய்யா....!////

    உங்களின் பெருந்தன்மைக்கு நன்றி வித்யாபதி! உண்மையில் பொருத்தமான பெயர்தான்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com