6.12.11

Astrology பெயரிலேயே ’கிக்’ உள்ள ஊர்!


Astrology பெயரிலேயே ’கிக்’ உள்ள ஊர்!

நட்சத்திரக் கோவில்கள் என்ற இந்தத் தொடரில் முதல் நட்சத்திரமாக கார்த்திகை நட்சத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளேன். எம்பெருமான் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் அது!

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லாம் இயற்கையாகவே முருகப்பெருமானின் அருளைப் பெற்றவர்கள்.

நட்சத்திர வரிசையில் இது மூன்றாவது நட்சத்திரம். கிரகங்களில் சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு சூரிய திசைதான் முதல் திசை.

ஆக்கபூர்வமான வயதில் அதாவது 20ல் இருந்து 45 வயதிற்குள் இவர்களுக்கு ராகு மகா திசை வந்து படுத்தி எடுக்கும். அடிப்படை ஜாதகம் நன்றாக இருப்பவர்கள் மட்டும் அதிலிருந்து தப்பிக்கலாம். மற்றவர்கள் தப்பிக்க முடியாது. என்ன கஷ்டமென்றாலும் தாங்கிக்கொண்டு, கடந்து வர வேண்டியதிருக்கும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் மனக் குறைகள் நீங்கி மன அமைதிபெற தங்கள் நட்சத்திரதினத்தன்று, தங்கள் நட்சத்திரத்திற்கான கோவிலுக்குச் சென்று அங்கு உறைகின்ற சிவனாரை மனம் உருக பிரார்த்தனை செய்துவிட்டு வரலாம். நல்ல பலன் கிடைக்கும். நம்பிக்கைதான் முக்கியம். நம்பிக்கையோடு சென்று வாருங்கள். உங்கள் நட்சத்திரத்திற்கான கோவிலைப் பற்றி இன்று  பதிவிட்டுள்ளேன்
-------------------------------------------------------------------------------------
சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உருவெடுத்து மேற்கு நோக்கி அருள் பாலிக்கும் முக்கிய ஸ்தலமான அருள்மிகு காத்ரா சுந்தரேஸ்வரர்
திருக்கோவில்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்கான கோவில்!

எங்கே இருக்கிறது அது?

மயிலாடுதுறையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. அக்கோவில். அக்கோவில் இருக்கும் ஊருக்கு
கஞ்சா நகரம் என்று பெயர்.

பெயரைப் பார்த்தவுடன் பெயரே ‘கிக்’காக இருக்கிறது என்று நினைக்காதீர்கள். அங்கே உறையும் சிவனாரும் உங்களை ஈர்க்கும் வண்ணம் முறுக்கோடுதான் இருப்பார். அதாவது அவரும் ‘கிக்’ காகத்தான் இருப்பார்.

கஞ்சாச் செடிகள் எல்லாம் மலைப் பிரதேசங்களில்தான் விளையும். இந்த ஊருக்கும் அந்த செடிக்கும் சம்பந்தமில்லை. 63 நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் என்ற பெயருடைய நாயனார் அவதரித்து வாழ்ந்த ஊர்     இது. கஞ்சாற நாயனார் நகரம் என்ற பெயர் மருவி கஞ்சா நகரம் என்றாகிவிட்டது. வேறொன்றுமில்லை. கஞ்சா என்ற சொல்லிற்கு வேறு ஒரு பொருளும் உண்டு. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
முழு முகவரி: அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம் போஸ்ட்-609 304 தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

பத்மாசுரன் மற்றும் சிங்கமுகன் போன்ற அசுரர்களால் பாதிக்கப்பெற்ற முனிவர்களும், தேவர்களும் தங்களைக் காப்பாற்றி உதவும்படி அன்னை
உமையவளிடம் முறையிட்டனர். அவர்களது குறைபோக்க அன்னையும் சிவனிடம் மனுக்கொடுத்தார். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகத்துடன் தவமிருந்த நேரம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் வெளிவந்தன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் என்னும் பெயரை உடைய முருகப் பெருமான் அவதரித்தார்.

இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப் பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது.

காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக நம்பப்படுகிறது. அதனால் இத்திருத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது. கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.

புராணங்கள் எல்லாம் உங்களின் பரிசோதனைகளுக்கு அப்பாற்பட்டவை. ஆகவே அவற்றை ஆராய்ந்து கொண்டிருக்காமல், நம்பிக்கையோடு
படியுங்கள். அல்லது படிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ அல்லது பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை.

ஒருமுறை சென்றுவாருங்கள்! பலனைப் பெற்று வாருங்கள்

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

18 comments:

  1. ///அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் என்னும் பெயரை உடைய முருகப் பெருமான் பிறக்கக் காரணமாயின.///

    வாத்தியார் அய்யா..
    வழக்கம் போல் மன்னிக்க...

    திருமுருக பெருமான் பிறக்கவில்லை
    திருமுருக வாரியார் சொல்வது போல்

    உதித்தல் வேறு பிறத்தல் வேறு
    துதிப்பதற்காகவே உதித்தல்

    பிறத்தல் என்ற சொல்லை மாற்றுங்கள்
    பிறைமதியினான் திருக்கண்ணின்று

    உதித்தல்... என
    உள்ளபடியே சொல்லுங்கள்..

    கடவுள் பற்றிய செய்திகளையும்
    கடவுள் கொள்கைகளையும்

    வேறு மாதிரி சொல்லும் போது
    பேறு பெற்ற நாம் பேசாமலிருக்க முடியுமா?

    சுட்டிக் காட்ட வருகின்றோம்
    சுருட்டிக்கெண்டபடி..

    போர் அம்புகளையும்
    சொல் வம்புகளை சேர்த்துக்கொண்டு

    இந்த பாடலினை
    இந்த வகுப்பில் சுழல விடுகிறோம்

    அவன் ஆறுமுகம்
    நம்மை ஆளும் முகம்

    அதில் புண்ணகை மின்னுதைய்ய
    கண்களில் ஆனந்த வெள்ளம் அய்யா

    அஞ்சுதலை நீக்குகின்றாய்
    ஆறுதலும் ஆகின்றாய்
    ஏழிசை தாருமய்யா

    சொந்தம் எனும் அடியார்க்கு
    சோதனைகள் ஏன்னய்யா
    தாரணை காக்குமய்யா

    வடிவேலா சிவ பாலா
    வழிகாட்டுவாய் எம் நிகழ்காலம் எதிர்காலம் ஒளி ஏற்றுவாய்

    மும்மலமும் போக்கின்றாய்
    இருவினைகள் தீரய்யா
    முக்தியை தாருமய்யா

    அண்டிவரும் அன்பருக்கு
    ஆசி தரும் கந்தய்யா
    உன் புகழ் விந்ததை அய்யா


    குருநாதா குகநாதா
    திசை காட்டுவாய் எம் குலம் வாழ
    குணம் வாழ விளக்கேற்றுவாய்

    ReplyDelete
  2. இந்த பதிவில் ஒரே பின் ஊட்டத்தினை 3 முறை இட்டுள்ளோம்..

    பிறத்தல் என்ற சொல்லை நீக்கி
    உதித்தல் என மாற்றி அமைக்க வேண்டும் என்ற எம் எண்ணத்தை தெரிவிக்க அன்பு வேண்டுகோளை விடுத்தபடி..

    கண்டிப்பில்லா வகுப்பறைக்கு - அன்பு
    கட்டளை இடுகிறோம்

    பிறத்தல் அல்ல
    உதித்தல்..

    வாத்தியார் அய்யா

    மாற்றி அமைப்பீர்கள் என்ற
    உறுதியான நம்பிக்கையில்

    வணக்கமும்
    வாழ்த்துக்களும்

    ReplyDelete
  3. இன்றைய பதிவில் கார்த்திகை நட்சத்திரம் என்று சரியாக யூகித்த செங்கோட்டையருக்கு வாழ்த்துக்கள், வழக்கம்போல் ஆர்வமூட்டும் தலைப்பை கொடுத்து சிறந்த பதிவையும் கொடுத்த ஆசிரியர் ஐயாவுக்கு நன்றிகள், தொடர்ந்து என் நட்சத்திரம் வரக் காத்திருப்பேன்.

    ReplyDelete
  4. நன்றி ஐயா. கார்த்திகை நட்சத்திர நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  5. Ayya Vannakkam,

    Yes nan netre sonnathu mathiri KARRTHIGAI natchachiram.

    Because neengal than PALINIYAPPANIN aachi pettravarayittre, Melum ithu kaarthigai matham veru,

    So, MY guess was correct.Thank u.

    ReplyDelete
  6. Dear Thenmozhi Madam,

    Thank you for your Wishes.

    Sengotaian,P.K,Tirupur.

    ReplyDelete
  7. அருமையான பதிவு. பொங்கல் விடுமுறையில் திருசெந்தூர் சென்று வர எண்ணி உள்ளோம். இன்னொரு விடுமுறையில் இந்த கொவிலுக்கு சென்று வர பயன்னுள்ள தகவல்.

    ReplyDelete
  8. சுவை கூட்ட 'கஞ்சா'என்ற போதைப் பொருளை குறிப்பிட்டுள்ளீர்கள். காரல் மார்க்ஸ் தெய்வ நம்பிக்கை, மத நம்பிக்கை ஆகியவற்றை அபினுடனே ஒப்பிடுவார்.ஸ்ரீ ராமகிருஷ்ணரும், முன்னர் நான் எழுதியது போல, கிரீஷ் கோஷுக்கு 'சரக்கு' கிடைக்கும் இடத்தைச்சொல்லித் தருகிறேன் என்றே இறைவனுடைய இருப்பை விளக்குகிறார்.

    கார்த்திகை நட்சத்திரக்கோவிலுக்கு அருமையான ஸ்தல‌புராணம். நன்கு எழுதியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. Guru vanakkam,

    Very very informative. As you said, my sisters Son who is born in this nakshatra is suffering from Rahu dasa. Stopped higher studies after 20, lost his father Went abroad and starying alone, delay in marriage - (KS dosha added to this).

    Regards
    RAMADU

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,
    நல்ல பயனுள்ள தகவல்களை தங்களுக்கே உரிய பாணியில் தந்துள்ளமைக்கு நன்றிகள் ஐயா.முருகப் பெருமானின் தீவிர பக்தர் தாங்கள்,அதனால் இன்று "கார்த்திகை" நட்சத்திரம் வரும் என்று எதிர்ப்பார்த்தேன்...ஆனாலும் "திருக்கார்த்திகை"தினத்தன்றும் கூட வரலாம் என்று நினைத்தேன்.நான் முதலில் யோசித்தது சரியாக இருந்தது!

    ஐயா,ஒரே ஒரு விண்ணப்பம்,நட்சத்திர கோவில்களோடு நட்சத்திரங்களின் குணாதிசயங்களையும் சேர்த்து தந்தால் "ஜோதிடமும்" சேர்ந்தே கற்றுக் கொள்வோம்.நன்றி ஐயா

    ReplyDelete
  11. //உதித்தல் வேறு பிறத்தல் வேறு
    துதிப்பதற்காகவே உதித்தல்

    பிறத்தல் என்ற சொல்லை மாற்றுங்கள்//

    "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று நம்மைவிடவும் பெரியவர்கள் சொல்லியுள்ளார்கள்.

    உதித்தல் என்ற சொல் பிறத்தல் என்ற சொல்லைவிடப் பொருத்தமானது என்றே வைத்துக் கொள்ளுவோம்.அதிலும் கூட அஸ்தமித்தல் தொக்கி நிற்பதால் அதனையும் வேறு ஒருவர் ஆட்சேபிக்கலாம்.

    ஐயா எழுதிக்கொண்டு இருக்கும் 'ஆடியென்ஸ்' பெரும்பாலும் ஆங்கில வழிக்கல்வி கற்றவர்கள்.அவர்களுக்குப் புரியும் எளிய சொற்களில் ஐயா எழுதி வருகிறார்கள்.எனவே ஐயர் அவர்கள் இந்த சொற் சிலம்பத்தினைக் கைவிடக் கோருகிறேன்.

    ReplyDelete
  12. கார்த்திகை நட்சத்திரத்திற்கான கோவில் ,அருள்மிகு காத்ரா சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய விபரங்கள்,மிக மிக அருமை.
    நன்றி!!

    ReplyDelete
  13. ///உதித்தல் என்ற சொல் பிறத்தல் என்ற சொல்லைவிடப் பொருத்தமானது என்றே வைத்துக் கொள்ளுவோம்.அதிலும் கூட அஸ்தமித்தல் தொக்கி நிற்பதால் அதனையும் வேறு ஒருவர் ஆட்சேபிக்கலாம். ///

    தொக்கவில்லை அஸ்தமில்லை
    தொடர்கிறது..

    மறைவது வேறு
    மடிவது வேறு..

    ///ஐயா எழுதிக்கொண்டு இருக்கும் 'ஆடியென்ஸ்' பெரும்பாலும் ஆங்கில வழிக்கல்வி கற்றவர்கள்.அவர்களுக்குப் புரியும் எளிய சொற்களில் ஐயா எழுதி வருகிறார்கள்.எனவே ஐயர் அவர்கள் இந்த சொற் சிலம்பத்தினைக் கைவிடக் கோருகிறேன்.///

    அய்யாவின் ஆடியென்ஸ்
    அய்யருக்கும் தெரியுமே நண்பரே

    விளக்கம் சொல்ல அய்யாவிற்கு
    விவரம் சொல்லித் தரவேண்டியதில்லை

    எழுபதை தாண்டி இன்னமும்
    எழுதிக் கொண்டிருக்கும் விரல்களுக்கு

    தெரியுமென்பது அன்பு அய்யருக்கும்
    தெரியும் தானே..

    பையவே என்றாலும்
    அய்யா அவர்கள் திருத்தம் செய்வார்

    வேலைப் பளு தான் காரணம்
    வேளை வரட்டும் திருத்தம் வரட்டும்

    ஆட்சியாளர்கள் மக்களுக்கு
    அன்பு வேண்டுகோள் வைப்பது போல்

    அடுத்த பின் ஊட்டத்தில்
    அய்யரின் வேண்டுகோள்..

    ReplyDelete
  14. "மௌனம் கலையாதோ..."


    வணக்கம்
    வாத்தியார் அய்யா..

    மவுனம் கலையாதோ..
    மதியே மனம் திறவாதோ...

    பிறத்தலை உதித்தல் என
    மாற்றி எழுத மறுப்பதேன்..

    முகம் மறைப்பதே
    கௌரவ குறைச்சலா..

    முருகனையே வந்து
    சொல்லச் சொல்லவா

    வாதம் செய்யாமால்
    வகுப்பின் பதிவினில் திருத்தம் செய்க

    அப்படி விரும்பாவிடினும் இதனை
    அன்பு கட்டளையாக ஏற்றுக் கொள்க

    அந்த முருகனுக்காக வேண்டாமய்யா..
    அய்யருக்காக திருத்தம் செய்யுங்கள்

    வழக்கம் போல்
    வாழ்த்துக்களுடன்

    இந்த பாடலினை
    இங்கு சுழல விடுகிறோம்..


    இருட்டு அறையில்
    இருந்தபடியே கண்களை மூடிக்கொண்டு

    ரசித்துப் பாருங்கள் பாடல்
    ருசி நன்றாக இருக்கும்...

    மனம் திறக்க
    மதிக்கும் படி பதிவில் திருத்த

    இறைவன் திருமுன்
    இப்பவும் வேண்டுகிறோம்...


    நீயும் நானுமா கண்ணா
    நீயும் நானுமா

    காலம் மாறினால் கவுரவம் மாறுமா
    அறிவை கொடுத்ததோ துரோனரின் கவுரவம்

    அவர் மேல் தொடுத்ததே
    அர்சுனன் கவுரவம்

    நடந்தது அந்த நாள்
    முடிந்ததா பாரதம்

    நாளைய பாரதம்
    யார் அதன் காரணம்

    ஆகட்டும் பார்க்கலாம்
    ஆட்டத்தின் முடிவிலே

    60யை 20
    வெல்லுமா உலகிலே

    ReplyDelete
  15. வணக்கம்,சார்!கார்த்திகை நட்சத்திரம் பற்றிய விளக்கம் நன்று!இப்போதும் கூட பழையபடி காஞ்சன நகரம் என்று மாற்றி விடலாமே?அரசு மனது வைத்தால் முடியுமே?

    ReplyDelete
  16. ///எனவே ஐயர் அவர்கள் இந்த சொற் சிலம்பத்தினைக் கைவிடக் கோருகிறேன்.///

    இந்த வேண்டுகோளை ஐயாவிற்கு
    இப்பவும் வைக்கலாமே...

    ஒரு சொல்லை சேர்த்து மாற்றம் செய்து
    ஒவ்வொரு மனதிலும் அன்பு விதைக்க

    இப்பவும் வைக்கலாமே அய்யாவிற்கு
    இந்த வேண்டுகோளினை..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com