10.11.11

Short Story எழுபது வயதில் இரண்டாவது திருமணம்

--------------------------------------------------------------------------------------
Short Story எழுபது வயதில் இரண்டாவது திருமணம்
                                            
                  ‘நியூஸ்பேப்பர்’ நாராயணனனைப் பார்த்தவுடன் ‘திக்’ கென்றிருந்தது.

                 அதிகாலை நேரத்தில் வீடு தேடி வருகிறான் என்றால் ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கும்.

              “வா அப்பச்சி....என்ன செய்தி?” என்றேன் சற்று பயத்துடன்.

              அவன் புன்னகைத்து, என்னுடைய பயத்தை மேலும் அதிகப்படுத்தினான்.

             ‘நியூஸ்பேப்பர்’ என்பது அவனுடைய அடையாளப் பெயர். எங்கள் ஊர் மகாஜனங்கள் எல்லாம் சேர்ந்து அவனுக்கு ஏக மனதாகச் சூட்டிய அடையாளப் பெயர். இரண்டு நாள் ஊருக்குப் போய்விட்டு வந்தால் குறைந்தது எட்டு செய்திகளோடு வருவான். நான்கு நாள் போய்விட்டு வந்தால் பதினைந்து செய்திகளோடு வருவான். குறிப்படுத்துக் கொண்டும் வருவான்.

              செட்டிநாட்டிலேயே இரண்டாவது பெரிய ஊர் எங்கள் ஊர். ஊரில் உள்ள அத்தனை பேர்களின் நல்லது கெட்டது அனைத்தும் அவனுக்குத் தெரியும். விரல்நுனியில் விவரங்கள் எல்லாம் இருக்கும். கார்த்திகை மாதத்தில் ஐந்து முகூர்த்தநாள் என்றால், ஐந்து முகூர்த்த  நாட்களிலும் நடக்க விருக்கும் திருமணங்களை, மாப்பிள்ளை, பெண் வீட்டாரின் விவரத்துடன் பட்டியல் இட்டுச் சொல்வான். யார் யாருக்கு  மணிவிழா நடக்க உள்ளது என்றும் சொல்வான். யார் யார் வீட்டில் திருமணத்திற்குத் தோதாக பெண்கள், பையன்கள் உள்ளார்கள், யாரைப் பிடித்தால் அவர்கள் வீட்டில் மணம் பேசலாம் என்பதையும் சொல்வான். சில வீடுகளில் உள்ள உரசல், புரசல்களை ரகசியமாகச் சொல்வான். சனீஷ்வரனிடம் போர்டிங்பாஸ் வாங்கிக்கொண்டு, கைலாசம், வைகுண்டம் போயிருப்பவர்களைப் பற்றிச் சொல்வான். இப்படிப் பல விஷயங்களைச் சொல்வான்.

           மதுரையில் இருக்கிறான் என்றுதான் பெயர். ஆனால் மாதத்தில் பத்து நாட்கள் ஊரில்தான் இருப்பான். இங்கே இருந்தாலும், காலை எட்டு மணிக்கு வண்டி கட்டிப் புறப்பட்டான் என்றால், அதாவது தன்னுடைய பல்சர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டான் என்றால் இரவு ஒன்பது மணிக்குத்தான் தன்னுடைய வீட்டிற்குத் திரும்புவான்.

          பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை - அதாவது கணவனுக்கு ஏற்ற மனைவி என்று சொல்லுவார்கள். அவன் மனைவியும் அவனைத் தேட  மாட்டாள். இவன் வெளியேறியவுடன்,  அவளும் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பி விடுவாள். கோச்சடை முதல் கோரிபாளையம்வரை - ஏன் மாட்டுத்தாவணிவரை உள்ள பகுதிகளில் அவளுக்கு உறவினர்கள், பழக்கமான பெண்மணிகள் என்று ஏகப்பட்ட சிநேகிதங்கள். அண்ணா நகர்,  கே.கே நகர், சொக்கிகுளம் பகுதிகளில் மட்டும் 50 குடும்பங்கள் தெரிந்த குடும்பங்கள் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

         மீண்டும் கேட்டேன், “என்ன அப்பச்சி செய்தி?”   

         “ஏன் நான் வந்தால் செய்திதான் இருக்குமா? வேறு வேலை இருக்காதா?”

         “அப்பச்சி, மணி ஆறரைதான் ஆகிறது. இந்த நேரத்தில் ஒருவன், ஒரு வீட்டிற்குப் போகிறான் என்றால் ஒன்று வராத கடனை வசூல் பண்ணுவதற் காக இருக்கும். அல்லது ஏதாவது துக்கச் செய்தியைச் சொல்வதற்காக இருக்கும். பழநிஅப்பன் அருளால், இன்றையத் தேதிவரை  எனக்குக் கடன் கப்பி இல்லை. அதனால்தான் பயந்துபோய்க் கேட்கிறேன்.”

            “எல்லாம் நல்ல செய்திதான். முதலில் வந்தவனுக்குக் காப்பி கொடு. குடித்துவிட்டுத் தெம்பாகப் பேச வேண்டும்.”

            அப்படியே செய்தேன்.

             என் மனைவி ஞானாம்பாள் கொண்டுவந்து கொடுத்த ஃபில்டர் காஃப்பியை அனு அனுவாகச் சுவைத்துக் குடித்தவன், தன்  கைப்பையில் இருந்து நாளிதழ் ஒன்றை எடுத்து, என் மேஜை மீது வைத்தான். வைத்ததோடு அல்லாமல் அதன் உட்பகுதியில் இருந்த  ‘சிவகங்கை மாவட்டச் செய்திகள்’ பகுதியைத் தனியாகக் கழற்றி என் கையில் கொடுத்துப் பார்க்கச் சொன்னான்.

            செய்திகளை முந்தித்தரும் அந்தப் பத்திரிக்கையில், வலது பக்கம் மூன்றுகாலப் பகுதியைக் கட்டம் கட்டிப் போடப்பட்டிருந்த செய்தி  கண்ணை யும் மனதையும் ஈர்க்கும்படியாக இருந்தது.

                ‘எழுபது வயதில் இரண்டாவது திருமணம்’ என்ற கவர்ச்சியான தலைப்பில் அச்செய்தி வந்திருந்தது. அத்துடன் செய்திக்குச் சுவை சேர்க்கும் விதமாக நாலுக்கு ஆறு அளவில் வண்ணப் புகைப்படம் ஒன்றையும் போட்டிருந்தார்கள்.

                    படத்தைப் பார்த்தவன் அதிர்ந்துபோய் விட்டேன். வாய் அடைத்துப் போய்விட்டது. ஒன்றும் பேசவரவில்லை.

                படத்தில் இருந்தது, என் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய பெரியவர். சாட்சாத் எங்கள் சின்ன அம்மான் அருணாசலம் செட்டியார். ஒரு தேசிய வங்கியில் தலைமை மேலாளராகப் பணிபுரிந்தவர். பணி ஓய்வு பெற்று பத்து ஆண்டுகள் ஆகிறது. அத்துடன் தன் அன்பு மனைவி   மீனாட்சி ஆச்சியைப் பறிகொடுத்துவிட்டுத் தனி மரமாக நிற்பவர். அவர் கண் எதிரேயே குடல் புற்று நோய் எங்கள் அம்மான்மிண்டியை  அள்ளிக் கொண்டுபோய் விட்டது. அது நடந்து ஒராண்டு ஆகிறது. எவ்வளவோ பணம் செலவழித்துச் சிகிச்சை மேற்கொண்டும் காலதேவனுக்குக் கருணை இல்லாமல் போய்விட்டது.

                  சரி, அதற்காக இப்படியா? அதுவும் இந்த வயதில்?

                 வெளியாகியிருந்த செய்தியில், பெண்ணின் வயது 38 என்று போட்டிருந் தார்கள்.

                 சின்ன அம்மானுக்கு மூன்று பிள்ளைகள். 45 வயதில் மகன். 40 & 42 வயதில் இரண்டு பெண்மக்கள். அவர்களின் குடும்பத்தில் தலா இரண்டு குழந்தைகள் வீதம் மொத்தம் ஆறு பேரன் பேத்திகள் உள்ளார்கள். இந்த நிலையில் இரண்டாவது திருமணமா? அதுவும் தன் சின்ன மகளைவிட இரண்டு வயது குறைவான பெண்ணுடன் திருமணமா? செய்தி மனதைப் பிசைந்தது.

                    நமக்கே இப்படிப் பிசைகிறதே? அவருடைய மூன்று பிள்ளைகளுக்கும் எப்படிப் பிசையும்?

                       மேற்தகவலுக்காக நாராயணனின் வாயைக் கிளறினேன்.

                      “அப்பச்சி, பேப்பர் செய்தி மட்டும்தானா? புலன் விசாரனை மேற்கொண்டிருப்பாயே - அந்தத் தகவல் ஏதாவது உண்டா?”

                        “ஆகா, அது இல்லாமலா? காலை ஆறு மணிக்கு செய்தித்தாளைப் பார்த்தவுடன் ஆடிப் போய்விட்டேன். உனக்கு வேண்டியவர் என்றால் எனக்கும் வேண்டியவர்தானே! திருமணம் முந்தாநாள் வியாழக்கிழமை அதிகாலை நம்ம ஊர் சிவன் கோவிலில் நடந்திருக்கிறது. உங்கள் அம்மான் சைடில் நண்பர்கள், மற்றும் தாய பிள்ளைகள் பத்துப் பேர்கள் வந்திருக்கிறார்கள். பெண் வீட்டுப் பக்கம் உறவினர்கள் பதினைந்து பேர்கள். பத்திரிக்கை நிருபரையும், புகைப்படக்காரரையும் உங்கள் அம்மானே வரவழைத்திருக்கிறார். வந்திருந்த அனைவருக்கும் அன்னலெட்சுமியில் இருந்து வரவழைக்கப்பெற்ற காலைப் பலகாரமும், மற்றும் மதிய உணவும் வழங்கப் பெற்றுள்ளது.. காலை 11 மணிக்கு சார்  பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பெற்றுள்ளது. அதற்கு மாலையும் கழுத்துமாக மணமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார்கள்”

                “பிள்ளைகள்?”

                “மகன் மட்டும் வந்திருந்தானாம். மற்ற இரண்டு பிள்ளைகளும் அமெரிக்காவில் அல்லவா இருக்கிறார்களாம்”

                  “அவன் ஒன்றும் சொல்லவில்லையாமா? எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையாமா”

                   “சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஒரே பந்தில் அவனைக் க்ளீன் போல்டாக்கி விட்டாராம் உங்கள் அம்மான். உன் தாயார் இறந்து ஒரு ஆண்டு ஆகிறதே. இங்கே தனி ஆளாக நான் அல்லாடிக் கொண்டிருக்கிறேனே - என்னுடன் சென்னையில் வந்து இருங்கள் அப்பச்சி என்று சொல்ல உனக்கு மனசு வந்ததா? ஒரு வேளைச் சாப்பாடாவது கூப்பிட்டுப் போட்டிருக்கிறாயா? என்று ஒரே போடாகப் போட்டு விட்டாராம்..”

                     சாப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாகத்தான் இந்தக் கல்யாணத்தை அம்மான் செய்து கொண்டிருப்பார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எங்கள் அம்மானைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். மிகவும் நேர்மையானவர். ‘லூஸ்டாக்’ கெல்லாம் இல்லாதவர். எதையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசக்கூடியவர். அவர் எதிரில் நின்று பேசவே பலரும் பயப்படுவார்கள். அவர் மீது எனக்கு ஒரு தனி மரியாதை உண்டு. தங்கச்சி மகன், வசதி இல்லாத குடும்பம், என்பதற்காக என்னை அந்தக்காலத்தில் பணம்கட்டி சிதம்பரம் அரசர் கல்லூரியில்,   பொறியியல் படிக்க வைத்தவர். தர்ம சிந்தனை மிக்கவர்.

                 இதற்கு மேல் அவனைக் கிளறுவதில், அர்த்தமில்லை என்பதால், அத்துடன் அந்தச் செய்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, வேறு தாக்கல்களைக் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, அவனை அனுப்பிவைத்தேன்.

                    மனம் கனத்தது.

                   +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

                  அடுத்த நாள் அதிகாலையில் கண்ணப்பா பேருந்தில் ஏறி காரைக்குடிச் சென்றுவிட்டேன். எங்கள் அம்மானின் புதிய வீடு காரைக்குடி புதுப்பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது. தொலைபேசி நிலையம் இருக்கும் வீதி. மாத்தூர்கோவில் நிர்வாகம் புதிதாகக் கட்டியுள்ள பாதுகாப்பு பெட்டக வளாகத்திற்கு எதிர்வரிசையில் வீடு.

                  மணி காலை ஏழு. என்னைப் பார்த்தவுடன், செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டிருந்த அம்மான், அதை மடக்கி வைத்துவிட்டு, “வா, வீரப்பா!” என்றார்.

               “ஆமாம்” என்று சொல்லிவிட்டு, அவர் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.
           
                 அங்கே செல்வதற்கு முன், அதாவது நாராயணன் வந்து செய்தியைச் சொல்லி விட்டுப் போன பின்பு, காரைக்குடியில் இருக்கும் என் சகோதரனுக்கு போன் செய்து விசாரித்தேன். அவன் அந்தச் செய்தி உண்மைதான் என்றான். அம்மானுக்கு நிறையப் பங்காளிகள். அவர்கள் யாரும் இந்த விஷயத்தை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லையாம். இரண்டொரு ஆச்சிமார்கள்தான், “இது அடுக்குமா..காலவினை!” என்று  பேசிக் கொள்கிறார்களாம். அம்மானை மிகவும் வருத்தப்பட வைத்தது அவருடைய மருமகள் சாலா அடித்த விமர்சனம்தானாம். “இந்த மனுஷனுக்கு சாப்பாட்டுப் பிரச்சினை என்றால், சமைத்துப்போட ஒரு சமையக்காரனை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டியதுதானே - எதற்காக இரண்டாவது கல்யாணம்? அவருக்கு இன்னும் பெண்ணாசை தீரவில்லை” என்றாளாம். அவள் அப்படித்தான் பேசுவாள். அது   தெரிந்த விஷயம்!

                   முத்துப் பட்டணத்தில் உள்ள பூர்வீக வீட்டில் அம்மானுக்குப் பாதிப்பங்கு, அம்மானுக்குப் பிறகு அது அவர் மகனுக்குத்தான்  சொந்தம். ஆனால் இந்த புதுத் திருமணத்தால், வந்தவளும் பங்குக்கு வருவாளே என்னும் ஆதங்கம் மருமகளுக்கு! ஆனால் எங்கள் அம்மான்  அதைத் தெளிவு செய்துவிட்டாராம். பூர்வீகவீடு மகனுக்கு மட்டும்தானாம். அவர் சுய சம்பாத்தியத்தில், பேருந்து நிலையத்திற்கு எதிரில் கட்டியிருக்கும் வீடு புது மனைவிக்காம்!

                அதெல்லாம் சரிதான். ஒரு மனிதனின் நியாயமான சொந்த விருப்பு, வெறுப்புக் களுக்குக் குறுக்கே நிற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

                “என்ன கேள்விப்பட்டாயா?” என்று அம்மான் பேச்சைத் துவங்கவும், ஏதாவது பொய் சொல்லிக் குழப்பக்கூடாது என்பதற்காக,   “ஆமாம்” என்றேன்.

                 “என்ன பேசிக்கொள்கிறார்கள்?”

                    “அடுத்தவர்கள் பேசிக்கொள்வதைப் பற்றி நாம் எதற்குக் கவலைப்பட வேண்டும்? நாம் நமக்காகத்தான் வாழ்கிறோம். நமக்கு  நியாயமாகப் படுவதைச் செய்வதற்கு நாம் யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை - என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே - அதனால் நானும் உங்களைப் போல மற்றவர்களின் விமர்சனங்களை சட்டை செய்வதில்லை. அது தேவையி ல்லாததும் கூட”

            “நீ சொல்வது சரிதான்...” என்றவர், பின் பக்கம் திரும்பி “சாரதா...” என்று குரல் கொடுக்க, அவருடைய புது மனைவி வந்து நிற்க என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். அந்தப் பெண் என்னைவிட நான்கு வயது குறைந்தவர் தான். இருந்தாலும் அம்மான் மனைவியல்லவா.    கைகூப்பி வணங்கினேன். அழகாகப் புன்னகை செய்தார்கள். பற்கள் எல்லாம் வரிசையாக இருந்தன. களையான முகம். அந்தக் காலத்து நடிகை  புஷ்பலதாவைப் போல இருந்தார்கள். கையெடுத்துக் கும்பிடக் கூடிய அழகு.

           “எங்கள் இருவருக்கும் காஃபி கொண்டு வா” என்று அம்மான் சொன்னதும் அவர்கள் உள்ளே சென்று விட்டார்கள்.
   
          அவர்கள் சென்றவுடன் எங்கள் அம்மான் முன்கதைச் சுருக்கத்தைச் சொன்னார்கள். உள்ளூர்ப் பெண்தானாம். துணைக்கு ஆயா மட்டும்தானாம். பெற்றோர்கள் இல்லையாம். பேருந்து விபத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு போய்ச் சேர்ந்துவிட்டார்களாம். அவர்கள்  இருக்கும்போது இந்தப் பெண்ணிற்கு பல வரன்களைப் பார்த்தும் ஒன்றும் கூடி வரவில்லையாம். மூல நட்சத்திரம் என்று சிலர் ஒதுக்க, எட்டில் சனியும், செவ்வாயும் உள்ளது - கடுமையான மாங்கல்ய தோஷம் என்று பலர் ஒதுக்க வீட்டிலேயே தங்கிப் போய் விட்டாளாம். உறவுகளிலும் யாரும் சொல்லிக்கொள்கிற அளவிற்கு வசதியுடன் இல்லையாம். ஆயாவையும் பேத்தியையும் கண்டுகொள்ள ஆள் இல்லையாம். சுய தொழில்  உதவிக்கு வங்கியில் ஏற்பாடு செய்து பணம் வாங்கித்தரமுடியமா? என்று கேட்டு வந்தபோதுதான் அம்மானுக்குப் பழக்கம் ஆனார்களாம். கடைசியில் அது திருமணத்தில் முடிந்ததாம்.

         ‘உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை நீ பார்த்துக்கொள்’ என்னும் மியூச்சுவல் ஒப்பந்தத்தில் திருமணத்தில் முடிந்ததாம்.    ஆயா உள்ளூரில் பழைய வீட்டில் இருக்கிறாராம். தினமும் ஒருமுறை வந்து போவாராம். பேத்திக்கு ஒரு வாழ்க்கை கிடைத்ததில் அவருக்கு  அளவில்லாத மகிழ்ச்சியாம்!

           எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு வந்த அம்மான் கடைசியாகச் சொன்னதைக் கேட்டவுடன் ஆடிப் போய்விட்டேன்.

         “வீரப்பா, வங்கியில் இருந்து ஓய்வு ஊதியத் தொகை மாதம் நாற்பதாயிரம் ரூபாய் வருகிறது. எனக்குப் பிறகு, அந்தத் தொகை நின்று விடக்கூடாது, யாருக்காவது பயன்படட்டும் - இந்தப் பெண்ணிற்குக் கிடைக்கட்டுமே என்றுதான், இவளை நான் மணந்து கொண்டேன். பாதுகாப்பான வாழ்க்கை அவளுக்குக் கிடைத்துள்ளது.. எனக்கும் வயதான காலத்தில் என்னைக் கவனித்துப் பார்த்துக்கொள்ள மற்றும் பேச்சுத் துணைக்கு ஒரு தோழி கிடைத்துள்ளாள். நன்றாகக் கவனி. மனைவியல்ல, தோழி. அவள் விரும்பினால் மட்டுமே தாம்பத்தியம். குழந்தை பிறக்காத பாதுகாப்பான தாம்பத்தியம். அதை எல்லாம் இருவரும் பேசித் தெளிந்துதான் ஒருவரை ஒருவர் மணந்து கொண்டிருக்கிறோம்.”

                 ஏற்ற இறக்கங்களுடன் அவர் சொல்லச் சொல்ல கண்கள் பனித்து விட்டன! என்னவொரு உயர்வான சிந்தனை. உயர்வான நோக்கம்!
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    இந்தக் கதைக்கான கரு திருவாளர் KMRK அவர்கள் கொடுத்தது. அதை நினைவுகூர்வதோடு, அவருக்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்
-----------------------------------------------------------------------------------------------------
ஒரு மாத இதழுக்காக எழுதப்பெற்ற கதை இது. இந்த மாத இதழில் அது வெளி வந்துள்ளது. நீங்கள் அனைவரும் படித்து மகிழ உங்களுக்காக இன்று அதை வலை ஏற்றியுள்ளேன்.
அன்புடன்,
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

41 comments:

  1. உண்மையில் எனக்கும் இதைப் படிக்கையில் கண்கள் பனித்தன....
    "பேச்சுத் துணைக்கு" என்பது சத்தியமான வார்த்தை...
    அதை அனுபவித்தால் தெரியும். இந்த அவசர உலகில் வீட்டில் இருக்கும் பெரியவர்களை அதிக பட்சம் கவனிப்பதோடு சரி... அவர்களோடு உட்கார்ந்து பேசக் கூட முடிவதில்லை ஆனால், அவர்களும் அதைத் தான் பெரிதும் எதிர் பார்க்கிறார்கள்... (வலுக்கட்டாயமாக அமர்ந்தால் தான் உண்டு). அதிலும் பெண்ணென்றால் கூட பரவாயில்லை ஆணென்றால் இன்னும் கஷ்டம் தான்.

    "இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
    இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
    வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
    புலிகிடந்த தூறாய் விடும்."

    /////சாப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாகத்தான் இந்தக் கல்யாணத்தை அம்மான் செய்து கொண்டிருப்பார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எங்கள் அம்மானைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். மிகவும் நேர்மையானவர். ‘லூஸ்டாக்’ கெல்லாம் இல்லாதவர். எதையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசக்கூடியவர். அவர் எதிரில் நின்று பேசவே பலரும் பயப்படுவார்கள். அவர் மீது எனக்கு ஒரு தனி மரியாதை உண்டு. தங்கச்சி மகன், வசதி இல்லாத குடும்பம், என்பதற்காக என்னை அந்தக்காலத்தில் பணம்கட்டி சிதம்பரம் அரசர் கல்லூரியில், பொறியியல் படிக்க வைத்தவர். தர்ம சிந்தனை மிக்கவர்.////

    புரிந்துணர்வு என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்... ஒரு சிலரின் சில நடவடிக்கைகளிலே அவர்களை சரியாக தீர்க்கமாக அபிப்ராயப் படுத்திக் கொள்ளவேண்டும் என்பதைக் காட்டும் வரிகள்... நல்ல மாமன்.. நன்றியும், நல்லறிவும் உள்ள மருமான்....... அருமை.

    கதையின் நாயகன் கூறும் காரணம் யாவும் உணரவேண்டியதே! அற்புதப் புனைவு.

    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  2. பெரியவர் இருக்கும்வரை பரஸ்பர பாதுகாப்பும், பெரியவர் இல்லாத எதிர்காலத்தில் பெண்மணிக்குச் சமூகத்தில் 'இன்னாரின் மனைவி' என்ற அந்தஸ்தும் கிடைப்பதான ஒரு நல்ல ஏற்பாடு. மொத்தத்தில், கூட்டுக் குடும்பம் அரிதாகிவிட்ட தற்கால சூழலில் இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.(கதையாக இருந்தபோதிலும்) ... நன்றி

    ReplyDelete
  3. இந்தச் செய்தியை நான் ஒரு பின்னூட்டத்தில் சொன்ன போதே 'இது கதைக்கு நல்ல கரு' என்று அன்றே சொன்னீர்கள்.

    எனக்கே இதைப் புனைவுக் கதையாக்க விருப்பம் எனிலும், மனதிலேயே ஊறிக்கொண்டே இருந்ததே தவிர சொற்களாகப் பிரசவிக்கவில்லை. தங்களுடைய தேர்ந்த நடையில் வெளிவர வேண்டும் என்ற
    கடவுள் சித்தம்.

    இது தஞ்சையில் நடந்த உண்மை நிகழ்ச்சி. தினமலரில் வெளியான செய்தி.
    குடும்பப் பென்ஷன் ஏழைப் பெண்ணுக்குக் கிடைக்க வழி செய்யவே முறையான திருமணம் என்று அன்றே மாப்பிள்ளைப் "பையன்" பேட்டி கொடுத்தார்.

    சமீபத்தில் மறைந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் தன் 90 வயதில் குடும்பப் பென்ஷன் ஒரு ஏழைக்குப்போய்ச் சேரும் வண்ணம் இதே போல் ஒரு ஏற்பாடு செய்துள்ளதாக ஒரு தகவல். கேள்வி ஞானம் தான். அவர் தன் 102 வது வயதில் மறைந்தார்.

    1949ல் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு இதே போன்ற ஒரு திருமணமும், திருமணம் செய்து கொண்ட‌ மாப்பிள்ளைக்கும் பொதுச் சொத்து பலரிடம் சென்று சிதறிவிடக் கூடாது என்பதும், சொத்துச் சண்டயால் இயக்கம் துவங்கப்ப‌ட்ட நோக்கம் வலுவிழக்க்க் கூடாது என்ற ஒரு காரணமும் உண்டு.

    நான் கொடுத்த கரு என்பதை வெளியிட்டுப் எனக்கு ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள்.நன்றி. எங்கீயோ போய்டீங்க சார்....!உங்க‌ ரேஞ்சே தனி.

    வழக்கம் போல் உங்கள் கதை சொல்லும் பாணி சூப்பர்.வணக்கம்.

    ReplyDelete
  4. miga arumayana intha kalathirku thevayana kathai.very nice.

    ReplyDelete
  5. சிலரின் செயல்களும்,செய்கைகளும் அருவருப்பாகவும் அர்த்தமில்லாததாகவும் இருக்கும். ஆனால் அதன் முடிவு ஆயிரம் அர்த்தங்களுடனும் அரியபெரிய காரியமாகவும் முடியும்.கண்ணால் காண்பதும்பொய் காதால் கேட்பதும் பொய்,தீரவிசாரிப்பதே மெய்.இதைதான் இக்கதை சொல்கிறது .

    தனது பென்சன்பணம் தனக்க பின் ஒரு வறியவருக்கு கிடைக்க பெரியவர் எடுத்தமுடிவு.நெஞ்சில் நிறைந்தது .

    இது
    ஆசானின்
    முதல்மரியாதை .

    ReplyDelete
  6. ஆசிரியர் ஐயா! தங்கள் கதையின் நடை அருமை. செட்டிநாட்டு சொற்பிரயோகங்கள் பாராட்டுக்குரியன. 'அம்மான்மிண்டி' 'தாக்கல் சொல்வது' போன்ற சொற்கள். "என்ன தாக்கல்" என்று வினவுவது எனக்குப் பழக்கமான சொல். ஆனால் முன்னது நான் கேள்விப்பட்டதில்லை. அது போகட்டும் மருமகள் சாப்பாட்டுக் கவலையென்றால் சமையல்காரன் வைத்துக் கொள்ளலாம் என்கிறாள். பொதுவாக தவசிப்பிள்ளை என்றுதானே சொல்வார்கள். சரி! அது போகட்டும். கதைக்கு வருகிறேன். அந்த அம்மான் சொன்ன காரணம் சரியென்று தமிழ் விரும்பி உட்பட பாராட்டியிருப்பது எனக்கு உடன்பாடாகத் தெரியவில்லை. அந்தப் பெண்ணுக்கு சரியான வாழ்க்கை தேவையா, பணம் தேவையா என்பதை முதலிலும், அந்தப் பெண்ணின் வயதுக்கு அவளது உணர்வுகள் எப்படிப்பட்டது என்பதையுமல்லவா புரிந்து அவர் செயல் பட்டிருக்க வேண்டும். எழுபது வயது முப்பத்திஎட்டை திருப்தி செய்ய முடியுமா? இவருக்கு உள்ள வசதிக்கு அந்தப் பெண்ணுக்கு வருமானம் வரும் வகையில் ஒரு வேலை வாங்கித் தந்திருக்கலாம். அல்லது ஒரு பெரும் தொகையை அவள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையாகப் போட்டு வட்டியில் பிழைத்துக் கொள்ளச் செய்திருக்கலாம். அல்லது அவள் விரும்பி அவரிடம் வந்த காரணத்தை, அதாவது அவளுக்கு வங்கிக் கடன் தந்து சொந்தத் தொழில் செய்ய உதவியிருக்கலாம். திருமணம் என்பது ஒரு பொருத்தமில்லாத பந்தம். அந்தக் காலத்தில் வயதில் மூத்த ஆண்கள் தங்கள் உடல் தேவைக்காக இளம் பெண்களைத் திருமணம் செய்துகொள்வது தவறு என்பதை பல கதைகளிலும், திரைப்படங்களிலும் சொல்லியிருக்கிறார்கள். பெரியாரின் திருமணம் ஒரு கட்சி உடைவதற்குக் காரணமாயிற்று. என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் எழுபதும் முப்பத்தி எட்டும் இணைவது நியாயமோ, ஏற்புடையதோ அல்ல. இருந்தாலும் இது ஒரு கதை. அதிலும் கே.எம்.ஆர். கொடுத்த கரு. அதனால் வாழ்க்கைத் தத்துவத்தில் இதனை ஒரு aberration என்று எடுத்துக் கொள்ளலாம். இப்படி நான் செய்த விமர்சனத்தைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். விமர்சனம் என்று வரும்போது விருப்பு வெறுப்பு நீக்கி எழுதுதல் அவசியம் என்பதால் எழுதினேன். நன்றி.

    ReplyDelete
  7. ஐயா, நன்றி. நல்ல கதை, அடுத்தவர் உணர்வுகளை மதிப்பதற்கான பாடம். அதை நீங்கள் இயல்பான உங்கள் நடையில் சொன்ன விதம் அருமை.
    சரி, தவறு என்பது ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும் வேறுபடும். கடைசி வரை துணையாய் இருபவர்களை மதித்து, வெறும் பேச்சோடு விலகிவிடுபவர்களின் கருத்துக்களை விலக்கிவிட வேண்டும். இது நாணயத்தின் ஒரு பக்கத்தை பார்ப்பது போன்றது.

    ஆனால் சில உறுத்தல்கள்...... தேவைகளும் உணர்வுகளும் இருபாலருக்கும் பொதுவாக, சமமாக இருப்பதை அங்கீகரிப்பதில்லை நம் சமுதாயம் இந்த நூற்றாண்டிலும். ஒரு திருமணத்திற்கே தாளம் போட்ட பெண்ணிற்கு கிடைப்பது இரண்டாம்தார வயோதிகரின் துணை. இதில் எங்கே மறுமணம் போன்றவைகளுக்கு வாய்ப்பு. வயோதிகருக்கு செல்வம் இல்லாவிட்டாலும், அந்த பெண்ணிற்கு குறைவட்ற செல்வம் இருந்திருந்தாலும் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். பணம்தான் முடிவுகளை மாற்றும், வாழ்கையை நிர்ணயிக்கும் என்பது தெளிவாகிறது. வயோதிகரை மணந்ததால், விரைவில் இறக்கப் போகும் அவரால், இந்தப் பெண்ணின் திருமணத் தடங்கல்களின் காரணம் உறுதி படப் போகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட பதிவு என்பதால், வெறும் கதை என மனம் சமாதானம் அடைய மறுக்கிறது.

    ஏன் அந்த வயோதிகர் தன் பெண்ணாக/பேத்தியாக பாவித்து அந்த பெண்ணிற்கு நிதியுதவி செய்து ஒரு இளைஞனுக்கு மணமுடித்து வைத்திருக்கக் கூடாது? அதன் பின் அந்தப் பாட்டியை துணையாய் வைத்துக் கொண்டாலும் சம வயது உள்ளவர்களுடன் அவர் அரட்டை அடிக்கலாமே. சின்னப் பெண்ணின் ஆதரவற்ற நிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டதாக தோன்றுகிறது. இது நாணயத்தின் மறு பக்கம் வேறு விதமாக இருக்கும் வேறு வகையில் திருப்பிப் பார்த்தால் என்பதற்கு சான்று.

    மனம் கனக்கிறது அந்த பெண்ணின் நிலையையைக் கண்டு. நம் நாட்டில் நல்ல மனம் கொண்ட இளைஞர்களுக்கு பஞ்சம் என்பதால்.

    ReplyDelete
  8. வாத்தியார் ஐயாவின் சிறுகதை ஆக்கங்களின் ஈர்ப்புக்கான காரணங்கள்:

    குழப்பம் இல்லாத நடை.

    வாசகனுக்கு மனதில் ஒரு எதிர் பார்ப்பைக் கிளப்புவது.

    கடைசி வரை ச‌ஸ்பென்ஸ் உடையாமல் கொண்டு செல்வது.

    இறுதியில் ஒரு திருப்பம்,ட்விஸ்ட்.

    அம்மானின் வீடு இருக்கும் தெருவைப்பற்றி ஒரு துல்லியமான விவரணை. நாமே அந்த இடத்தில் இருப்பது போன்ற பாவனை ஏற்படுத்துதல்.

    அந்தக்காலத்து நடிகையைப்போல அந்தப்பெண் இருந்தார்கள் என்பதின் மூலம்
    புஷ்பல‌தாவின் முகம் அறிந்தவர்களுக்கு ஒரு அந்நியோன்னிய பாவம் ஏற்படுத்துவது.

    வங்கியில் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற்வர்களுக்கு அந்த அளவு ஓய்வூதியம் வருகிறது.அதைத்தெரிந்து கொண்டு எழுதுவதால் ஒரு நிஜக்கதை போல உருவாக்கம்.

    தந்திமீனி ஆச்சி, நியூஸ்பேப்பர் நாராயணன், மேங்கோப்பு மேனா என்று பெயர் கொடுப்பதிலேயே அந்தக் கேரக்டரின் குணாம்சத்தை வெளிப்படுதுவது.

    கரு சின்னதாக இருந்தாலும்,அதனை விவரிக்க மேல் அதிகத் தகவல்களாக
    வம்பு பேசும் இரண்டு ஆச்சிகள், வெடுக்கு என்று பேசும் மருமகள்,மதுரை நகரைப் பற்றிய தகவல்,வெளிநாட்டில் இருக்கும் மகன்கள்,மகள்களால் பயன் ஒன்றும் இல்லாத சூழல்,உள்ளூரில் இருக்கும் மகனும் பயன்படாமை, திருமணம் நடந்த முறை, ஓய்வூதியத்திற்குத் தேவை என்பதாலோ, தன் மகவுகள் தன் காலத்திற்குப் பின்னர் இந்தத் திருமணத்தை அங்கீகரிப்பார்களோ என்ற சந்தேகத்தால் திருமண‌ம் பதிவு செய்தல், பத்திரிகையில் செய்தி வரும்படி செய்து அந்தத் திருமணத்திற்கு சட்ட அழுத்தம் கொடுத்த‌ல்
    தம்பத்தியம் 70 வயதிலும் முடியும் என்ற ஒரு கிளுகிளுப்புத் தகவல்....
    etc., etc.,

    சூப்பரான கதை சொல்லி நமது ஐயா!

    ReplyDelete
  9. arumayan padhivu ayya......

    chandhan-lakshmi.blogspot.com

    ReplyDelete
  10. @தஞ்சாவூரார்...
    ///அந்த அம்மான் சொன்ன காரணம் சரியென்று தமிழ் விரும்பி உட்பட பாராட்டியிருப்பது எனக்கு உடன்பாடாகத் தெரியவில்லை. அந்தப் பெண்ணுக்கு சரியான வாழ்க்கை தேவையா, பணம் தேவையா என்பதை முதலிலும், அந்தப் பெண்ணின் வயதுக்கு அவளது உணர்வுகள் எப்படிப்பட்டது என்பதையுமல்லவா புரிந்து அவர் செயல் பட்டிருக்க வேண்டும். எழுபது வயது முப்பத்திஎட்டை திருப்தி செய்ய முடியுமா? இவருக்கு உள்ள வசதிக்கு அந்தப் பெண்ணுக்கு வருமானம் வரும் வகையில் ஒரு வேலை வாங்கித் தந்திருக்கலாம். /////

    ஐயா! நான் உடன் பட்டதற் காண காரணங்கள் என்றால்???!!!!

    ////மூல நட்சத்திரம் என்று சிலர் ஒதுக்க, எட்டில் சனியும், செவ்வாயும் உள்ளது - கடுமையான மாங்கல்ய தோஷம் என்று பலர் ஒதுக்க வீட்டிலேயே தங்கிப் போய் விட்டாளாம். ////
    இது தான் அந்தப் பெண்ணிற்கு எழுபது வயது மனிதர் கனவணன் ஆனதற்கு பெரும் வழிகொடியது எனலாம்.

    அப்படி செய்தது தர்மமாகாது.... அத்தனையும் கொண்டு கூட்டுப் பொருள் கொண்டால் நியாயமாகிறது!

    முதலில் பெண்ணின் ஜாதகம் அடுத்ததாக அவளின் காலாவதியாக காத்துக் கொண்டு இருக்கும் வயது...
    இங்கே தனது உயிரையும் பணயம் வைத்துள்ளார் பெரியவர்.
    அடுத்ததாக அவர் சார்ந்த சமூகத்தில் தாய் தந்தை சகோதரன் இருக்கும் குடும்பத்தில் பிறந்த பெண்ணிற்கே அவள் வசதியாக இருந்தாலும் மாப்பிள்ளைக் கிடைப்பது அவ்வளவு சுலபம் ஆகாது....

    சகோதரன் அவளின் அறுபது, எண்பது திருமணம் வரை வரக் கூடியவன். சீர் வரிசை, செனத்தி என்று அத்தனைக்கும் தொடர்புடையவன் இல்லாததும் ஒரு பெருங் குறையே!.
    ஆக, கல்யாணம் முடித்தால் அத்தோடு முடிந்துப் போன காரியம் அல்ல...

    அவளுக்கு யாரும் உதவவே இல்லாவிட்டாலும் அவளும் அப்படியே இருந்து விட்டுப் போவாள்...

    /////உறவுகளிலும் யாரும் சொல்லிக்கொள்கிற அளவிற்கு வசதியுடன் இல்லையாம். ஆயாவையும் பேத்தியையும் கண்டுகொள்ள ஆள் இல்லையாம். சுய தொழில் உதவிக்கு வங்கியில் ஏற்பாடு செய்து பணம் வாங்கித்தரமுடியமா? என்று கேட்டு வந்தபோதுதான் அம்மானுக்குப் பழக்கம் ஆனார்களாம். கடைசியில் அது திருமணத்தில் முடிந்ததாம்.////

    உறவுகள் யாரும் இல்லை... சுய தொழில் செய்ய ஏது? எப்படி இருந்தது என்பதை கதையில் குறிப்பிடாத பொது முடிவினைக் கொண்டு அப்படியே தொடங்கினாலும் வேறு ஒரு துணை இல்லாமல் அவைகளை அவள் சாமர்த்தியமாக செய்து வாழ்வை ஜெயிப்பாலா? என்ற ஒருக் கேள்விக்கு பதில் இல்லை என்றே கொள்ளலாம்.

    சரி மரத்து போன மனதிற்கு தாம்பத்தியம் ஒரு பேராவலாக இருந்திருக்குமா? ஆம் என்றால்.... அவளின் நிலையில் அதை அவள் இரண்டாம் பட்சமாக கொண்டு இருக்க வேண்டும்... வாழ்வின் ஜீவாதாரம் முக்கியம். பிறகு தான் மற்றவைகள். ஆக, அவைகளை அவள் பாவம் வேறு வழியில்லாமல் ஒதுக்கி இருக்க கூடும்.

    உண்மை சம்பவம், எனது கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் அவரின் உடன் பிறந்த சகோதிரிகள் நான்கு பேர் அவரி தந்தையாரும் இவர்களை விட்டு சிறு வயதில் மறைந்து போனார். ஐவரும் கஷ்டப் பட்டு தனது மூத்த சகோதிரி ஒருத்திக்கு திருமணம் செய்து வைத்தார்... குடும்பத்தில் என்ன வேறு பியாரச்சனை அந்த சகொதிரியும் தாய் வீட்டிலே பெரும் பாலும் இருந்தார். மற்ற சகோதிரிகள் என்ன ஆயிற்று என்பதை அறிய முடியவில்லை... எனக்கு அடிக்கடி அவரின் ஞாபகம் வரும் இப்போதும் வரும்.

    அப்படி இருக்க நான் சமீபத்தில் கேள்விப் பட்டேன்.. அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் என்று... அவர்கள் சொந்த ஊரை விட்டு மற்ற ஊரில் இருந்திருந்திருந்தால் கூட இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்காது என்பது எனது எண்ணம்....

    அப்படிப் பட்ட சூழலில் ஒருப் பெண் இருந்திருந்தால் நமக்கு எண்ணத் தோன்றும்.... தர்மம் இல்லை என்றாலும் நியாயம் இருக்கிறது. அதனாலே அதை இந்த வழியாவது இருக்கிறதே என்று ஒத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  11. //அதிலும் கே.எம்.ஆர். கொடுத்த கரு. அதனால் வாழ்க்கைத் தத்துவத்தில் இதனை ஒரு aberration என்று எடுத்துக் கொள்ளலாம்.//

    ஹஹ்ஹா ஹிஹிஹி!

    இது தான் சார் தஞ்சை மண்ணுக்கே உரிய சொல் ஆற்றல். சமயம் கிடைத்தபோது கே எம் ஆர் ஒரு 'மென்டல் அபரேஷ்ன்' உள்ள‌ ஆளு என்ற தன் புரிதலை நாசுக்காகப் போட்டு விட்டார் பாருங்கள்.

    அவருக்கு என்னைப்பற்றி நன்றாகத் தெரியும். இன் அண்ட் அவுட். நான் மென்டலுக்கு எடுத்த ட்ரீட்மென்ட் எல்லாம் அவருக்குத் தெரியும்.

    நான் என்னுடைய சுய புராணத்தைதான் பல ஆக்கங்களில் சொல்லி வருகிறேன்.ஓரளவு சொல்லி விட்டேன் என்று தோன்றும் போது அவற்றை ஒரு தன் வரலாறு போல வெளியிட ஆவல்.அதில் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் அதற்கான காரணம் எல்லாமும் வர இருக்கின்றன.

    ஒரு பதிவில் கி.ராஜ நாராயணன், கு ப ராஜகோபாலன் இருவருடைய கதைகளின் சுருக்கத்தைக் கொடுத்து இருந்தேன்.அதைப் பெரியவர் ரசிக்கவில்லை.கி ராவின் அந்தக் கதையை நான் சென்னையில் அவரும் நானும் சேர்ந்து பேசிய ஒரு பாரதி அரங்கத்தில், குயில் பாட்டு பற்றி நான் பேசும் போது மனிதனுக்கும் மிருகங்களுக்கும் காதல் வருமா என்று கேட்டு
    கி ரா வின் அந்தக் கதையைக் கூறினேன். பெரியவர் அந்தக் 'கான்டெக்ஸ்டு'க்கு அது பொருந்தியதால் ரசித்துச் சிரித்தார்.அப்போது அவர் இன்னும் 10 வயதாவது இளையவர். கு ப ரா பாலியல் குறித்த மனோ தத்துவக் கதை தவிர வேறு எதுவும் எழுதவில்லை.அந்தப் பதிவினை நான் இலண்டனில் எழுதினேன். அங்கே எனக்கு ரெஃபெரென்ஸ்க்கு வழியில்லாததால் மனதில் சட்டென்று தோன்றுவதை எழுதிக்கொண்டு இருந்தேன். அப்படி வந்த கதைகள் அவை.அதனாலும் என்னை அப‌ரேஷன் என்று சொல்லியிருக்கலாம்.

    தற்சமயம் செங்கோவியின் பிளாகில் ஒரு முக்கியமான சமூகப்பிரச்சனையில் என் அழுத்தமான கருத்துக்களைச்சொல்லி வருகிறேன் அதில் நான் சொல்வது
    பெரியவருக்கு அபெரேஷனக இருக்கலாம்.

    எப்படி இருப்பினும் இது அவருடைய அசீர்வாதமாக எடுத்துக்கொள்கிறேன்.
    'எக்சென்ட்ரிக்' என்ற பெயர் வாங்காத கலைஞர்களே கிடையாது.
    நான் எக்சென்ட்ரிக் என்று பட்டம் வாங்கிய சம்பவமே என் வாழ்வில் ஒன்று சுவையானது உள்ளது.பின்னால் வரும்.

    நான் சொன்ன ஒரு உண்மைச் சமபவம், என் பக்கத்து வீட்டில் நடந்தது, சம்பவம் நடந்து கொண்டு இருக்கும் போதே பெரியவர் அதை நாடகமாக எழுதி,திருச்சி வானொலியில் ஒலி பரப்பாகியது.இந்த அபெரேட் கே எம் ஆர் அவருக்கும் கரு கொடுத்துள்ளேன்!

    அதே போல அவர் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியை பெயர்களை மாற்றி இங்கேயே அவர் அனுமதியுடன் வெளியிட்டுள்ளேன்.

    பெரியாருடைய திருமணமும் சொத்து சம்பந்தப் ப‌ட்ட விஷயமே.பாலியல் நோக்கம் அல்ல.

    பாலியல் நோக்கத்துடனேயே கடல் கடந்து வந்து, சிறுமிகளை விலை கொடுத்து வாங்கிச் செல்லும் பெட்ரோல் நாடுகளின் தாத்தாக்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

    பெரியவர் ரசிக்கும் ஜெயகாந்தன் அவர்களின் அக்னிப் பிரவேசம், ரிஷிமூலம் பற்றி என்ன சொல்வது?

    எனக்கு நன்றி சொல்லப் போக அது ஒரு கோணத்தில் திரும்பிவிட்டது.
    நல்லதுதான். விவாதத்திற்கு நல்ல கருப்பொருள்.

    ReplyDelete
  12. அய்யா வணக்கம்,
    கதை நன்றாக உள்ளது.

    அனால் கதையில் அந்த பெரியவர் சொல்லும் மூல கருத்தில்தான்
    உடன்பாடுஇல்லை.

    பணம் (40,000 ?!) கொடுப்பது மட்டும் தான் அவருடைய நோக்கம் என்றல்,
    அந்த பெண்ணை வாழ்கை துணையாக (wife) எண்ணக்கூடாது.

    " நன்றாகக் கவனி. மனைவியல்ல, தோழி"
    " அவள் விரும்பினால் மட்டுமே தாம்பத்தியம்"
    அந்த பெண்ணை தோழியாக தன் மனதில்
    முதலில் பார்த்தபிறகு அவளை மனைவியாக
    பார்ப்பது தவறு - என்பது என் கருத்து.

    -கிமூ-

    ReplyDelete
  13. ஆசிரியரின் இந்தக் கதைக்கு மிக அதிக அழுத்தமும், ஏற்றமும் கொடுத்து கே.எம்.ஆர். எழுதிவருவது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. ஆசிரியர் எழுத்து சிறப்பானது, ஒரு தலைசிறந்த எழுத்தாளனுக்குள்ள அனைத்து அம்சங்களையும் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தக் கதையின் கரு, உண்மை நிகழ்ச்சியின் நிழல் என்றாலும் கூட ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. எழுபது வயதிலும் தாம்பத்தியம் முடியும் என்று சொல்லுவதில் கே.எம்.ஆருக்கு என்ன அத்தனை கிளுகிளுப்பு? அது சரியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, தெரியவும் வாய்ப்பில்லை. ஊர் சிரிக்கும் இதுபோன்ற ஒரு வக்கிர நிகழ்ச்சிக்கு வக்காலத்து வாங்கி அதன் கரு தன்னுடையது என்று அவர் பெருமை கொள்வதற்கு ஒன்றுமில்லை. வேறு ஏதாவது சமூக நோக்கத்தோடு, பெண்மையின் சிறப்பை விளக்கும்படி, தியாகத்தை விளக்கும்படியான ஒரு நல்ல கருவைக் கொடுத்திருக்கலாம். அதுதான் சரியானதாக இருக்க முடியும். ஒரு பெண்ணுக்கு உதவவேண்டுமானால் அவளைத் திருமணம் செய்துகொண்டு தனக்குப் பின் தன் பென்ஷன் அவளுக்குக் கிடைக்க வழிசெய்ததாக சொல்லிக் கொள்வது வெறும் ஹம்பக்! உடல் இச்சை, ஆம்! அது ஒன்றுதான் இதுபோன்ற வக்கிர எண்ணங்களுக்குக் காரணம். நான் வெளிப்படையாக பேசுபவன். இந்த விஷயத்தில் என் மனம் அதிகம் சங்கடப் பட்டுவிட்டது. கதையால் அல்ல, கதையின் கருவால். நன்றி.

    ReplyDelete
  14. என் தந்தையாரின் தன்வரலாறு கூறும் பிளாக் http://gandhiashramkrishnan.blogspot.com/

    இதில் அப்பா பிரம்ம‌ச்சாரி ராமச்சந்திரா என்ற ஒரு பெரியவர் பற்றி எழுதியுள்ளார்.

    அவர் கன்னட காந்தி என்று அறியப்பட்ட‌வர்.அவருக்கும் ஒரு திருமணம் ஆன பெண்ணுக்கும் தெய்வீகக் காதல் ஏற்பட்டு அவர்கள் சேர்ந்ததை அப்பா விவரித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் படித்துப் பார்க்கலாம்.இயற்கையில் இப்படியெல்லாம் நடக்கலாம்.

    நண்பர் தமிழ் விரும்பி கிருபளானி சுசேதா கிருபளானி வயது வித்தியாசமான
    ஜோடி பற்றிக்கேட்டு நான் தக‌வல் கொடுத்துள்ளேன். அதுவும் 'தோழி'தான்.

    ReplyDelete
  15. குடும்பப் பென்ஷன் முழு பென்ஷன் 40000இல் பாதிதான் அதாவது 20000 மட்டும்தான் கிடைக்கும். அவர் பணியில் இருக்கும் காலத்திலேயே அவருடைய குடும்ப விவரங்களை எழுதிக் கொடுத்துவிட வேண்டும். அப்போது தனக்குப் பின் மனைவி, அல்லது மைனர் மகன் அல்லது மனநிலை சரியில்லாத குழந்தைகள் இருந்தால் மட்டுமே குடும்பப் பென்ஷன் அவர்களுக்குக் கிடைக்க வழி செய்யப் பட்டிருக்கிறது. 60 வயதில் ஓய்வு பெற்றுவிட்டு, அதன் பின் பத்து ஆண்டுகள் பென்ஷன் வாங்கி குப்பை கொட்டிவிட்டு, எழுபது வயதில் தனது மறைவுக்குப் பிறகு குடும்ப பென்ஷனை இவள் பெற்று சுகமாக இருக்கட்டும் என்று ஒருவன் நினைக்கிறான் என்றால் அதன் நோக்கம் புரியவில்லையா? அப்படியொன்றும் இதுபோன்ற கேஸகளில் குடும்பப் பென்ஷனை அவ்வளவு சீக்கிரம் கொடுத்து விட மாட்டார்கள். வங்கிகளில் 1993இல்தான் பென்ஷன் அறிமுகமானது. (ஸ்டேட் வங்கி தவிர). இது அரசாங்க பென்ஷன் போல அல்ல. இது One time Settlement Scheme.
    இது அரசாங்க பென்ஷன் போல வளைந்து நெளிந்து கொடுக்கம் திட்டம் இல்லை. ஆகவே இந்த கேசில் அந்தப் பெண்ணுக்குக் குடும்பப் பென்ஷன் கிடைப்பதுகூட சந்தேகம்தான். ஆகவே சந்தேகத்துக்கு இடமான நிலையில், அவளுக்குக் குடும்ப பென்ஷன் கிடைக்குமா கிடைக்காதா என்ற உறுதியான நிலை இல்லாதபோது அதைக் காரணம் காட்டுவது சரியா?

    கே.எம்.ஆர். என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் நான் ஒப்புக்கொள்ள முடியாது. இப்படி ஒரு வழி இருக்கிறது என்பதை கே.எம்.ஆர். எனக்கு ஏன் முன்னமேயே சொல்லவில்லை?

    ReplyDelete
  16. இந்த பிளாக்குக்கு இது போன்ற‌ கதைகள் வேண்டாமே என்று பெரியவர்
    நினைப்பது போல இருக்கிறது.அதுவும் சரிதான்.

    நான் எப்போதோ இட்ட பின் ஊட்டம் ஒன்றில் தஞ்சை மகர் நோன்புச் சாவடியில் நடந்த அந்த சம்பவத்தைச்சொல்லியிருந்தேன். அதை ஐயா நினைவு கூர்ந்து வெளியிட்டுள்ளார்கள்.

    ஆனால் இது போன்ற சம்பவங்கள்தான் செய்தி ஆகின்றன.

    நான் சுட்டியுள்ள என் தந்தையாரின் தன் வரலாறு பெரியவர் அது இங்கே வெளியாகு முன்பே படித்துள்ளார்.பெரியவ‌ருடைய முதல் ரியாக்ஷன் பிரம்மசாரி ராமச்சந்திர பற்றிய தகவல் அப்பா அளித்துள்ளதுதான்.அப்பா ஜெயிலுக்குப் போவதற்கு முன்பு வாங்கிய பிரம்படி பற்றியெல்லாம் எழுதியுள்ளர்கள்.ஆனால் அவ‌ற்றையெல்லாம் முதலில் பேசாமல் பிரம்மச்சாரி ராமச்சந்திர பற்றித்தான் பெரியவர் முதலில் கூறினார்.

    இவை போன்ற தகவல்கள்தான் செய்தி ஆவதுடன் மக்களால் பேசவும் படுகின்றன.

    ReplyDelete
  17. கதைக்குப் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, குறிப்பாக வெ. கோபாலன் சாருக்கு மிக்க நன்றி!

    கதையின் கருவில் உள்ள சிறு குறைபாட்டை எடுத்துச் சொல்லிக் கொண்டேதான் கதையை நகர்த்தியுள்ளேன். உதாரணத்திற்கு கீழ்க் கண்ட இரண்டு இடங்களை மீண்டும் படிக்கக்கோருகிறேன்.

    1
    ///////சின்ன அம்மானுக்கு மூன்று பிள்ளைகள். 45 வயதில் மகன். 40 & 42 வயதில் இரண்டு பெண்மக்கள். அவர்களின் குடும்பத்தில் தலா இரண்டு குழந்தைகள் வீதம் மொத்தம் ஆறு பேரன் பேத்திகள் உள்ளார்கள். இந்த நிலையில் இரண்டாவது திருமணமா? அதுவும் தன் சின்ன மகளைவிட இரண்டு வயது குறைவான பெண்ணுடன் திருமணமா? செய்தி மனதைப் பிசைந்தது. நமக்கே இப்படிப் பிசைகிறதே? அவருடைய மூன்று பிள்ளைகளுக்கும் எப்படிப் பிசையும்?///////

    2
    ////////அம்மானை மிகவும் வருத்தப்பட வைத்தது அவருடைய மருமகள் சாலா அடித்த விமர்சனம்தானாம். “இந்த மனுஷனுக்கு சாப்பாட்டுப் பிரச்சினை என்றால், சமைத்துப்போட ஒரு சமையக்காரனை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டியதுதானே - எதற்காக இரண்டாவது கல்யாணம்? அவருக்கு இன்னும் பெண்ணாசை தீரவில்லை” என்றாளாம். ///////
    ---------------------------------------------------------
    அவளுக்கு 38 வயதுவரை திருமணம் ஆகாமல் போனதற்கு என்ன காரணம் என்பதையும் கதையில் கொடுத்துள்ளேன்.

    கதையின் க்ளைமாக்ஸில் இருவரும் தோழமையுடன் சேர்ந்து வாழத் துவங்குகிறார்கள் என்று முடித்திருந்தால், வங்கியின் விதிமுறைகள் ஓய்வூதியத் தொகைக் கணக்கிற்கு அதை ஏற்றுக் கொள்ளாது. அதற்காகவே கதையில் ஒரு கல்யாணக் காட்சி!

    40 வயதாகியும் சூழ்நிலை காரணமாக திருமணம் ஆகாத பெண்களை எனக்குத் தெரியும். அவர்களுக்கெல்லாம் இப்படியொரு தீர்வு வந்தால் அது சரியா அல்லது தவறா? நீங்களே சொல்லுங்கள். அல்லது வேறு தீர்வு ஒன்று இருந்தாலும் சொல்லுங்கள்.

    திருமணம் செய்து கொண்டு மனைவி என்ற அந்தஸ்து இல்லாத நிலையில் பென்சன் தொகைக்கு எப்படி தகுதி உண்டாகும்? அதற்கும் ஒரு நல்ல பதில் இருந்தால் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி, வணக்கத்துடன்
    வாத்தியார்

    ReplyDelete
  18. //எழுபது வயதிலும் தாம்பத்தியம் முடியும் என்று சொல்லுவதில் கே.எம்.ஆருக்கு என்ன அத்தனை கிளுகிளுப்பு? //

    பாரதியின் வசனகவிதை வள்ளி முருகன் டூயெட்டில், நாகரிகம் தெரிந்து அவர்களுடைய அந்தரங்கத்தில் தலையிடாமல் கிளம்பப் பார்க்கும் பாரதியை 'போகாதே இருந்து இந்த வேடிக்கை வினோதங்களைப் பார்'என்று முருகன் நிறுத்துமே அப்போது ஏற்படும் கிளுகிளுப்புத் தான்.

    என் அவதானிப்பில் யானையைப் போல தொடு உணர்ச்சி இன்பம் வயது முதிர்ந்தோருக்கே அதிகம் தேவைப்படுகிறது. அதனை கட்டுப்படுத்துபவரும் உண்டு. எக்குத்தப்பா ஏதாவது செய்து கெட்ட பெயர் எடுப்பவர்களும் உண்டு.
    போலீஸில் கைதானவர்களும் உண்டு.நம் சமுதாயம் இதில் உள்ள மன ரீதியான வெளிப்பாடுகளை சிந்திக்கவே இல்லை. வயதாகிவிட்டது.அதனால்
    அவன் எல்லாவற்றிலும் லாயக்கு அற்றவனாக இருக்க வேண்டும்.கடவுளிடம் மனதைத் திருப்பு.அப்படி திருப்ப முடியாதவனுக்கு என்ன தீர்வு?

    குழந்தைகளுக்கான பிரச்சனையில் இன்று பெரிய பிரச்சனை பிடோஃபிலியா!

    ஒரு விளம்பரம் கலைமகள் மங்கையர் மலர் கல்கியில் 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தது.

    ஒரு 85 வயதான கேரள அய்யர் ஒருவருக்கு தொழிலும், நிறைய சொத்துக்களும் உள்ளன.மனைவியை இழந்தவர். அவர் வயது காரணமாக‌ எதையும் நிர்வகிக்க முடியவில்லை. அவருக்கு 3 பெண்கள். வெளி நாட்டில் செட்டில் ஆகிவிட்டனர்.அவர்களால் இங்கே வந்து இருந்து தந்தையைக் கவனிக்க முடியவில்லை. அவர்கள் தங்களுடைய தந்தைக்கு மறுமணம் செய்ய விரும்பினர். பெண் 50 வயதுக்குள் இருக்க வேண்டும் தொழில் நிர்வாகம் செய்ய வேண்டும், கிழவரையும் பார்த்துக் கொண்டு சொத்துக்களையும் காப்பாற்ற வேண்டும்;சொத்தில் பாகம் அளீக்கப்படும் என்று விளமபரம் கொடுத்து இருதார்கள்.

    மற்றொரு முதியவருக்கு அவருடைய மன வியாதி தீர மருத்துவர் அளித்த தீர்வு ஒரு சுறு சுறுப் பான இளம் நர்ஸ் எப்போதும் கூடவே இர்ந்து சேவை செய்ய வேண்டும்.

    நமது மறைந்த முதல்வர் ஒருவருக்கு ஒரு கூட்டத்தில் தூங்கிவிட்டதைப் பார்த்து, அதற்குத் தீர்வாக சொல்லப்பட்ட விஷயமே அவருடைய அரசியல்வாரிசை உருவாக்கியது.

    இப்படியெல்லாம் நடப்பது உண்டு.

    ReplyDelete
  19. நான் மகர் நோன்புச்சாவடி விஷயம் கூறியது அந்த மாப்பிள்ளைப்"பையன்'
    தமிழக அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.இங்கே வங்கி என்று வந்துவிட்டது.

    ReplyDelete
  20. நடிகை லக்ஷ்மி நடத்திய ஒரு 'டாக் ஷோ'வில் ஒரு குடு குடு கிழவர் தன் பையனுக்கு ஒரு விபத்தில் குழந்தை பெறமுடியாத நிலை ஏற்பட்டு விட்டதாகவும்'ஆகவே தான் திருமணம் செய்து கொண்டு வம்ச விருத்தி செய்யப் போவதாகவும் அதற்கு முன்வரும் பெண் தன்னுடன் கடிதத் தொடர்பு கொள்ளும் படியும் பேசினார். வெட்கத்தை விட்டு லக்ஷ்மி பல விஷயங்களையும் அவரிடம் கேட்டார்.மிகுந்த தன்னம்பிக்கையுடன் கிழவர் யதார்த்தமாகப் பேசினார்.

    பார்த்தவர்கள் எல்லோரும் சிரித்தனர். நான் மட்டும் 'அவருடைய நிலையில் இருந்து பாருங்கள்'என்றேன்.

    ReplyDelete
  21. பேங்க் மேனேஜர் லோன் கேட்டு வந்த சின்னப் பொண்ணுக்கு பிராக்கெட் போட்டு செட்டில் ஆன,ஆக்கிய கதை வாத்தியார் ஆக்கிய விதம் அருமை..

    இதே போல ஒரு மேனேஜர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று என்னிடம் தெரிவித்த ஒரு பெண்மணி இருந்தார்..கிட்டத்தட்ட இதே வயது வித்தியாசம் இருக்கும்..
    ஆனால் அந்தப் பெண் கணவனை இழந்தவராக இருந்தார்..கொஞ்சம் அர்த்தம் இருக்கிறது..இங்கே..ஒரே உல்ட்டாவாக உள்ளது..என்ன சொல்றது...?

    நல்ல வேளை..இந்தக் கருவெடுத்துக் கொடுத்தவர் இன்சுரன்ஸ் கம்பெனி அளவிலே நிறுத்தினார்..பேங்க் வேலைக்கு முயற்சிக்கவில்லை..

    இன்னிக்கு இதுபோல வயசாவுது?வெங்காயமாவுது?ஈசியா செட்டில் ஆக ஏதும் குறுக்குவழி இருக்கா? என்ற முனைப்புடன் இருக்கும் தொழில் முனைவோர்?????? பேங்க்கில் மட்டுமல்ல..ஆங்காங்கே டேட்டிங் சைட்டுகள் மூலமும் தேடலைத் தீவிரப்படுத்துகிறார்கள் என்று அறிகிறேன்..எல்லாம் காலத்தின் கோலம்..

    ஒரே ஒரு விஷயம்..இதுலே அனுதாபப் படுகிற விஷயம் ஒண்ணும் எனக்குத் தோணவில்லை..

    பாக்கியராஜ் விதி படத்தில்..கொஞ்சம் செக்ஸ்ஸியா இருக்கும் பரவாயில்லையா?ன்னு கேட்டுட்டு சொல்வார்.
    'தப்பு பண்ணும்போது ஆணும் பெண்ணும் ரெண்டுபெரும் சேர்ந்துதான் தப்பு பண்றாங்க..என்று ஆரம்பித்து ஆனா கர்ப்பமாயிட்டா மட்டும்
    ஆணுக்கு அதிலே அந்த வலியிலே சம்பந்தமில்லமே விலகிடுறான்' என்கிற ரீதியில் அன்றைய கால ஆண் பெண் உறவு நிலை பற்றி சொல்லிக்கொண்டு போவார்..

    அப்போவெல்லாம் இப்படி விஷயங்களில் அனுதாபத்துக்குரிய நிலையில் பெண்களும் இருந்தார்கள்..
    இப்போவெல்லாம் கணக்கீட்டு அடிப்படையிலேதான் பல விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதாக நினைக்கிறேன்..
    ஆனா 'தப்பு பண்ணும்போது ஆணும் பெண்ணும் ரெண்டுபெரும் சேர்ந்துதான் தப்பு பண்றாங்க..'என்ற வாசகம் மட்டும் இன்றும் என்றும் மாறப்போவது இல்லை....

    இது தப்பா ரைட்டா என்பதை ஆராய்வதைவிட 'தனிமனித சுதந்திரம்..அவரவர் விருப்பம்..' என்கிற அளவிலே பார்த்து விலகுவது நல்ல பார்வையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்..
    'pure matured kinky '
    'adults only ' can take this decision ...

    ReplyDelete
  22. நமது மஹாபாரதம் இது போன்ற தர்ம சங்கடங்களையெல்லாம் பேசுகிறது.

    சுக்ராச்சாரியாரால் சபிக்கப்பட்ட யயாதி கிழவனாகி உடலால் இயலாதவன் ஆகிறான்.ஆனால் மனத்தில் அவனுடைய இளமை அப்படியே இருக்கிறது.அவன் வெட்கத்தை விட்டு தன் பிள்ளைகளிடம் கெஞ்சி ஒரு பிள்ளையின் கருணையினால் வாலிபத்தைப்பெற்று சுகங்களை அனுபவித்துவிட்டு
    நமக்குச்சொல்கிறான்: 'இதில் எப்போதுமே திருப்தி ஏற்படாது'

    யாயாதிக்கு சாபத்துடன் யாராவது உன் கிழட்டுத்தனத்தை வாங்கிக்கொண்டால்
    உனக்கு இளமை கிடைக்கும் என்ற நிவ‌ர்த்தி கொடுக்கப்பட்டது.

    அந்த வசதி இங்குள்ள முதியோருக்கு இல்லை. அதனல் கிழட்டு உடலும் இளைய மனமும் கொண்டு திரிய வேண்டியதுதான்.

    ReplyDelete
  23. //நல்ல வேளை..இந்தக் கருவெடுத்துக் கொடுத்தவர் இன்சுரன்ஸ் கம்பெனி அளவிலே நிறுத்தினார்..பேங்க் வேலைக்கு முயற்சிக்கவில்லை..//

    சூப்பர் மைனர். நல்ல போடு. அரிவாள் கழுத்துல 'நச்'சுன்னு இறங்கி விட்டது.

    அங்கேயே (ஒரு பையன் இரண்டு பெண்களை உடைய) 40 வயதுக்கரரை மண‌ந்தே தீருவேன் என்று நின்ற‌ ஒரு 25 வயது அம்மணியையும் பார்த்துள்ளோம்.

    எல்லாமே விளையாட்டுத்தான்.நதியில் தண்ணீர் எப்போதும் சீராக ஓடுவதில்லை.
    ஒரு சமயம் நொங்கும் நுரையுமாக ஓடுகிறது வண்டலை அடித்துக்கொண்டு போகிறது. தெளிந்து ஓடுகிறது.மீண்டும் கலங்கி ஓடுகிறது.

    வித்தியாசமாக ஏதாவது நடக்கும் போது அது கவனத்தை பெறுகிறது.

    ReplyDelete
  24. ///kmr.krishnan said...
    நமது மஹாபாரதம் இது போன்ற தர்ம சங்கடங்களையெல்லாம் பேசுகிறது./////
    Taboo என்ற பெயர்தான் 'தபூ' என்றாக சரியாக பொருந்திவரும் வகையில் அந்த நடிகைக்கு வைக்கப்பட்டிருக்கிறதோ என்று கூட சிலசமயங்களில் நான் நினைத்ததுண்டு.. மகாபாரதத்தில் இல்லாத மரபுமீறல்களே இல்லை எனலாம்..அதைவிடப் பழைய புராணம் என்றொன்று இல்லாதபோது எப்படி இந்த 'மரபு' என்கிற வார்த்தை வழக்கில் வந்தது என்று புரியவில்லை..மரபுமீறலைக் கருவாகக் கொண்ட படங்களை மட்டுமே தொழிலாகக் கொண்டு திரையுலகின் ஒரு கணிசமான காலகட்டத்தை பாலச்சந்தர் கடத்தியிருந்தார்..

    ReplyDelete
  25. சத்தியவதிக்காக பீஷ்மரைப் பலிகடாவாக்கிய சந்தனு, குந்தி பஞ்ச பாண்டவர்களைப் பெற்றெடுத்த முறை,திரவுபதியை ஐவரும் சேர்ந்து பங்குபோட்டுக் கொள்வது என்று தொடரும் கிளுகிளுப்பு சீன்களுக்கெலாம் மகுடம் வைத்தாற்போன்றதொரு சீன்தான் அர்ஜுனன் அவன் தந்தை இந்திரனின் உல்லாச ஜோடிகளில் ஒருவரின் ஆசைக்கு தாய்முறையாகிப் போவதால் மரபு காரணம்கொண்டு இணங்கமறுத்து விலகுவதால் திருநங்கையர் உடல்நிலையை அடைந்து கஷ்டப்படுமாறு சபிக்கப்பட்டு விடுவது..

    அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் அந்த சாபத்துக்குத் தீர்வாக அதே இந்திரன் சொல்வது
    'அவள் ஆசைப்படி நீ இணங்கியிருக்கவேண்டும். அப்படி இணங்காதது தவறு என்ற காரணத்தால் அவளிட்ட சாபத்தை நான் வாபஸ் வாங்க முடியாது..ஆனால் கொஞ்சம் சலுகை பண்ணி உனக்கு விருப்பமான சமயத்தில் அந்த திருநங்கையர் உடல்நிலையை நீ அனுபவிக்குமாறு செய்து கொடுக்கிறேன்..பீரியடையும் கொஞ்சம் குறைச்சு ஒரு வருஷமாக்கி சலுகை பண்றேன்.' என்று கதை போகும்..

    மகாபாரதத்தை விமர்சிக்க சொல்லவில்லை..மரபு மீறலுக்காக சொன்னேன்..இப்படி விஷயங்கள் ஏதும் அங்கே இல்லையென்றால் தெரிந்தவர்கள் மறுப்புரை அளிக்கலாம்..

    ReplyDelete
  26. ////kmr.krishnan said...
    சூப்பர் மைனர். நல்ல போடு. அரிவாள் கழுத்துல 'நச்'சுன்னு இறங்கி விட்டது./////////
    இந்தப் போடுக்கெல்லாம் அசருகிற ஆளா நீங்க?
    ஒவ்வொரு ரத்தத்துளியிளிருந்தும் மீண்டும் பல KMRKக்களா துளிர்விட்டு கிளம்பி வர்ற ஆளாச்சே?

    ReplyDelete
  27. //40 வயதாகியும் சூழ்நிலை காரணமாக திருமணம் ஆகாத பெண்களை எனக்குத் தெரியும். அவர்களுக்கெல்லாம் இப்படியொரு தீர்வு வந்தால் அது சரியா அல்லது தவறா? நீங்களே சொல்லுங்கள். அல்லது வேறு தீர்வு ஒன்று இருந்தாலும் சொல்லுங்கள்.//


    தங்கள் கதையின் ஓட்டம் மிகச் சிறப்பானது. அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பது என் நோக்கம் இல்லை. ஜெயகாந்தனின் 'அக்னிபிரவேசம்' சந்திக்காத விவாதமா. கதையின் முடிவை மாற்றி வேறொருவர் கதை எழுதி வெளியிட்டார். இங்கு நீங்கள் எழுப்பியிருக்கும் இரு கேள்விகளுக்கும் சிறிது விளக்கம் அளிக்க அனுமதியுங்கள். வயது 40ஐத் தாண்டிய பெண் பற்றிய முதல் பகுதிக்கு என் விளக்கம். ஒரு பெண் வயதுக்கு வந்தவுடனேயே தாம்பத்தியத்துக்குத் தகுதிபடைத்தவளாகிறாள். அவள் உணர்ச்சிகள், ஆசைகள் அனைத்தும் அலைமோதும் வயது இளம் வயது. 40 என்பது அந்த அலைகளைத் தாண்டி அமைதியான கடல்போன்ற காலம். உணர்ச்சி அலைகளைத் தாண்டி வந்த அவளுக்கு திருமணம் அவசியமில்லை. தனியொரு பெண்ணாக வாழமுடியும், அதிலும் 40 வரை திருமணம் இல்லாமல் இருந்தவளுக்கு. இந்த வயதில் ஒருத்தி திருமணத்துக்குச் சம்மதிக்கிறாள் என்றால் காரணம் 'பணம்'. அந்தப் பணத்தைப் பெற அவள் தேர்ந்தெடுத்த முறை சரியில்லை என்பதுதான் என் வாதம்.


    //திருமணம் செய்து கொண்டு மனைவி என்ற அந்தஸ்து இல்லாத நிலையில் பென்சன் தொகைக்கு எப்படி தகுதி உண்டாகும்? அதற்கும் ஒரு நல்ல பதில் இருந்தால் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.//


    அடுத்தது நட்புடன் இருந்தால் குடும்பப் பென்ஷன் கிடைக்காது என்ற கருத்து. சரி, அப்படியானாலும் நான் சொன்னபடி, ஓய்வு பெற்று பத்து ஆண்டுகள் கழிந்து 70 வயதில் ஒரு இளம் பெண்ணை நான் பதிவுத் திருமணம் செய்துகொண்டேன், எனக்குப் பிறகு குடும்ப ஓய்வூதியம் அவளுக்குத் தரவேண்டுமென்று, இதுபோன்ற ஆட்கள் விண்ணப்பித்தால், உடனடியாக இதன் நோக்கம், அவசியம் இவைகள் பற்றியெல்லாம் விசாரணைகள் நடந்த பிறகு, பணத்துக்காகத்தான் இந்த அரேஞ்மெண்ட் என்று நிராகரிக்கவும் கூடும். எனவே இதுபோன்ற பெண்களின் எதிர்காலம் பாதுகாப்பு இவற்றுக்கெல்லாம் தற்போது அரசுகள் சரியான, நேர்மையான, உதவிகரமான திட்டங்களையெல்லாம் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த வழியில் சென்று பயனடையலாமே தவிர இதுபோன்ற வழிமுறை நேர்மையானதல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. அதிகப் பிரசங்கம் செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். கதையின் கரு பற்றியதுதான் நமது விவாதம், கதையின் நடை பற்றியது அல்ல.

    ReplyDelete
  28. ////// kmr.krishnan said...////////அந்த வசதி இங்குள்ள முதியோருக்கு இல்லை. அதனல் கிழட்டு உடலும் இளைய மனமும் கொண்டு திரிய வேண்டியதுதான்.///////

    இந்தியா இந்த விஷயத்திலே மோசம்தான்..தனிமனித சுதந்திரம் என்பது மோசமாக்கிப்பேசப்படும் நிலை என்பது நிகழும் பல வன்முறைகளுக்கெல்லாம் அடித்தளம்..லவ் ஹோட்டல் என்று ஆங்காங்கே மக்கள் சுயவிருப்பத்துடன் கூடிக்களிக்க வசதியாக என்று இப்படியொரு அமைப்பு இங்கே ஜப்பானில் உள்ளது..80 , 90 வயசு ஆட்களெல்லாம் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருபது வயது இளைஞர்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு உழைக்கிறார்கள்..உடலுறுப்புக்களுக்கு தொடர்ந்து நல்ல பயிற்சி கொடுக்கப்படுவதால் இளமையாகவே இருக்கிறார்கள்..(என்று சொல்லக் கேள்வி)
    வயசெல்லாம் ஒருபிரச்சினையில்லை..

    பணமிருந்தால் மார்க்கமுண்டு..

    ReplyDelete
  29. மீண்டும் வந்து தொந்தரவு கொடுப்பதற்கு மன்னிக்க வேண்டும். அந்தப் பெண்ணுக்குக் குடும்ப பென்ஷன் கிடைப்பது இருக்கட்டும், அந்த மனிதருக்கு சொந்த சம்பாத்தியம் இருந்தால் யாருக்கு விருப்பமோ, அவர்களுக்கு அதனைக் கொடுத்து விடலாம். ஒருக்கால் அவருக்கு மூதாதையர் சொத்து இருந்தால் அதில் முதல் வாரிசுரிமை இந்தப் பெண்ணுக்குப் போய்விடும். அவருடைய பிள்ளைகள் என்ன செய்வார்கள்? ஏமாற்றம்தான் அவர்களுக்கு மிஞ்சும். முந்தைய நாட்களில் திருவாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த வாரிசுரிமை உங்களுக்குத் தெரியும். சொந்த மக்களுக்கு சொத்து உரிமை கிடையாது. சகோதரியின் பிள்ளைகளுக்குத்தான் சொத்துக்கள். அதை எதிர்த்து கவிமணி கேலி செய்து கவிதைகள் எழுதினார். சர் சி.பி.ராமசாமி ஐயர் திருவாங்கூர் திவானாக இருந்த போது இந்த சொத்துரிமையை நீக்கி அரசாணைப் பிறப்பித்தார். அப்படிப்பட்ட நிலைமைதான் நமது வங்கிப் பெரியவர் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கும்.

    ReplyDelete
  30. //.இப்படி விஷயங்கள் ஏதும் அங்கே இல்லையென்றால் தெரிந்தவர்கள் மறுப்புரை அளிக்கலாம்..//

    மறுப்புரை தேவையே இல்லை. நீங்கள் சுட்டியதைவிட இன்னும் தற்கால வாழ்முறைக்குப் பொருந்தாத செய்திகள் இருக்கலாம். ஆனால் மஹபாரதம் அன்று இருந்த வாழ்முறையை மறைக்காமல், மறுக்காமல் சொல்லிருக்கிறது. சில சமயம் புனைவு என்று தோன்றும். சில சமயம் வரலாறு போலத் தோன்றும். இதுதான் இப்படித்தான் என்று யாராலும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

    ஐவருக்கு மனைவி என்பது கதையில் சொல்லப்பட்டு இருந்தாலும் அது எல்லோராலும் கடைப் பிடிக்கப் படவில்லை என்பதும் தெரியவரும்.
    பாண்டவர்களை மடக்கப் பலரும் யோசனை சொல்லும் போது,"அவர்கள் ஊரில் இல்லாத பழக்கத்தைச் செய்து உள்ளனர். அவர்களுடைய ஒற்றை மனைவியின் பெயரை அவர்களுக்குள் மித்ர பேதம் செய்யப் பயன் படுத்தலாம்'என்ற யோசனை வைக்கப்படுகிறது. அங்கே ஒரு பெண் பல ஆண்களை ம‌ணக்கும் பழக்கம் பொது சமூகத்தில் இல்லை என்று தெரிகிறது.இதுபோல கொன்டு கூட்டிப்பொருள் கொள்ள வேண்டியவை ஏராளம்.

    பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மரபுகள் இப்போது பல மாற்றம் கண்டு இருகலாம்.

    மேற்கொண்டு இது பற்றி மின் அஞலில் கேட்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  31. கதை நன்றாகதான் இருக்கிறது. ஆயினும் ஐயா தஞ்சாவூரார் அவர்கள் சொன்னது போல் கிழவர் இளம் பெண்ணை திருமணம் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யார் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நடந்தது நடந்ததுதானே.

    ReplyDelete
  32. கதை படைக்கப் பட்டது வேறொரு இடத்தில் நடந்த நிகழ்வைக் கேட்டு. அதே நேரம் அந்த நிகழ்வின் முழு விவரமும், சாரமும், நியாயமும் வாத்தியார் தெரிந்திருந்தாரா? என்பது எனக்கு தெரியாது!

    அப்படி ஒரு நிகழ்வை வேறு சில உண்மையில் சமுதாயத்தில் இது போன்று அவதி யுறும் பெண்களின் நிலைக்கு காரணமான விசயங்களை கருத்தில் கொண்டு அதைக் கதையோடு புகுத்தி வேறு விதமாக அதில் ஒரு நியாயம் இருக்க செய்து கதையை அமைத்து இருக்கிறார்.

    கதையின் எழுபது வயது நாயகர் மற்றும் அந்த நாற்பது வயது பெண் இருவரும் தங்களது உடல் பசிக்காக இந்தக் காரியத்தை செய்ததாகவும் தோன்றவில்லை...

    தர்மத்தை மீறி பெரியவர் செய்த காரியம் அப்படி எண்ணமிட ஏது வாக அமைத்தாலும்! அவரின் மற்ற குணாதிசயங்கள் கொண்டு அப்படி இல்லாமல் இருக்கலாம் என்றும் அனுமானிக்கவும் வழி உண்டு!

    பெரியவரின் நோக்கம் எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு தனது உதவிப் பணத்தை பெறவைக்க வேண்டும் என்பதும் அதோடு கடைசிகாலத்தில் நம்மைக் கவனிக்கவும் ஒரு ஆள் இருக்கும் என்பதும் கூட!?

    அந்தப் பெண்ணும் நமக்கு இனி ஏதும் நடக்கப் போவதில்லை... அப்படி இருக்க முதலில் வயித்துப் பாட்டுக்கு ஏதாவது இருந்தால் சரி என்றும் அதோடு நாமும் நமக்கு உதவ நினைக்கும் அந்தப் பெரியவருக்கு முடிந்தளவு உரிமையோடு உதவலாம் என்றும் சம்மதப் பட்டு இருக்கிறாள் எனவும் கொள்ளலாம்.
    (தொடரும்........)

    ReplyDelete
  33. ஐயா! தஞ்சாவூரார் அவர்களின் வாதம், சொல்லும் காரணம் சரியாகப் பட்டாலும்... இதில் வாத்தியார் அப்படி உள்ளவர்களைக் கண்டு அது போன்றவர்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தாலும் பரவாயில்லை... அவர்களைப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது என்று வருந்தியிருக்க கூடும் அப்படி இருக்க... உண்மையிலே இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை கேள்விப்பட்டு அது தவறு என்று உணர்ந்தே தான்..

    மற்ற காரணங்களையும், அதாவது வேறு வழியில் சரிசெய்ய கடினமானக் காரணங்களை தேடி பிடித்துக் கதையில் சேர்த்துள்ளார். இப்படி பலக் காரங்களை தேடி பிடித்ததாலே இதில் வாத்தியாரும் அவரை அறியாமலே அது தவறு தான் என்பதை உணர்த்திருக்கிறார் என்பதையும் உணர முடிகிறது.

    இருந்தும் இப்படிக் காரணங்களை ஒருவேளை கொண்டிருந்தால், அப்படிப் பட்டப் (தான் முன்பே கண்ட அது போன்றப் பெண்களை மனதிலே கொண்டு) பெண்களின் மீது தனக்கு உள்ள இறக்க சிந்தனையில் கதையை புனைந்து இருக்கிறார் என்றும் எண்ணுகிறேன்.

    ஆனால், நான் முதலில் வாசித்தப் பொது எனக்கும்... இரண்டு விஷயங்கள் தோன்றியது.. அவை இரண்டும் வேறு விதமானது.

    ஒன்று... அந்த அபலைப் பெண்ணிற்கு தன் வாழ்நாள் முழுவதும் வயிறாரக் கஞ்சிக்கு வழி கிடைத்ததே அதனால் இது சரி என்பதே.. வேறு ஒன்றையும் நான் பெரிதாக நினைக்கவில்லை... வறுமை அவ்வளவுக் கொடியது... நான் சிறு வயதில் அனுபவித்திருக்கிறேன்.... அதனால் இன்னமும் அதன் தாக்கம் என்னுள் உண்டு அப்படி இருப்பவர்களைக் கண்டால் இவர்களெல்லாம் என் குலம் என்று என்னுள் உணர்வு பொங்கி அவர்களைப் பார்த்து வருந்துவேன்... உதவவும் துணிவேன்.

    இரண்டாவது..... அப்படிப் பார்த்தால், ஒருவருக்கு ஓய்வு ஊதியம் கிடைப்பதும்... அவரின் மனைவிக்கும் / குடும்பத்திற்கும் கிடைப்பது நியதி.... அவைகளை தர்ம சிந்தனையால் புதிதாக வேறு வழியிலே வேறு ஒருவரைப் பெற செய்வது அதாவது சட்டத்தில் உள்ள ஓட்டையை வேறுமாதிரி பயன் படுத்தி... மலைக்கள்ளன் வேலையை செய்வது... அரசாங்கத்தை ஏமாற்ற நினைப்பது தவறு என்றேத் தோன்றியது....

    இருந்தும் ஏழைப் பெண்ணிற்கு அவள் வாழப் போகும் வாழ்க்கையின் ஜீவாதாரம் என்ற உடன் கூறிய காரணங்களை ஆறுதலுக்கு / ஞாயத்திற்கு அழைத்து கொண்டேன்.

    இதிலே.... என்னைப் போலவே வாத்தியாரின் எண்ணமும் ஏழைக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமிகுதி இருக்கிறது!... இருந்தும் அது தவறு என்பதால் தான் பல ... காரண காரியத்தை தேடி யுள்ளார்கள்.
    (தொடரும்.....)

    ReplyDelete
  34. நிற்க, ஐயா! தஞ்சாவூரார் "ஐ சல்யூட் அட் யு சார்" நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டது. இங்கே ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். தங்களின் மன வலிமை... இதை வாதிட்டததால் அல்ல... தங்களின் வயதிற்கு தகுந்தக் கதையால் தாங்களே இங்கு கதை நாயகனாக நின்று மறுத்த விதம்... என்னை அப்படி நினைக்கத் தோன்றியது...

    ReplyDelete
  35. இது எனது அனுபவமே வேறொன்றும் இல்லை...

    எனக்கு நாற்பத்து இரண்டு.... உடல் அது போன்ற உணர்வுகளை கொண்டதாக தோன்றவில்லை... வயது வந்த பெண் இருப்பதால் பார்ப்பவர்கள் எல்லோரும் அப்படி என் பிள்ளையாகவேத் தோன்றுகிறது.... குழந்தைகளோடு இருக்கவே அதிகம் விரும்புகிறேன்... எனது எண்ணத்தில் நல்ல மாற்றம் தெரிகிறது... இளமையில் இருந்த மன நிலை கனவிலும் இல்லை. அதுவரை வயதும் மனமும் சரியாக சீராக வளர்கிறது... அதோடு உடலும் சீராக தளர்கிறது என்பதை காட்டுவதாக உணர்கிறேன். மன நோய் இல்லை. ஒருவேளை தர்ம / கர்ம ஜாதகம் போலும். இங்கே வேறுவிதமான பின்னூட்டங்களையும் பார்த்ததால் இதைக் கூறத் தோன்றியது.

    அப்படி ஒரு தேடல் இருக்குமாயின் நன்கு கொதிக்கும் நீரை தலையோடு ஊத்த வேண்டும் என்றும் கூறவும் தோன்றுகிறது....

    நன்றி... நல்ல விவாதம்.

    ஆசிரியருக்கும், தஞ்சாவூரார் அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி வணக்கம்.

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  36. Eppoluthu mutual understand endru vanthu vittatho aduthavarukal vamarsanam seiya thakuthi illai . Nalla ullangaluku valthukal

    ReplyDelete
  37. இந்தப் பதிவில் வெளியான அத்துணை பின்னூட்டங்களையும் படித்தேன். எழுபது வயதைத் தாண்டியவருக்கு இரக்கம் இருக்குமாயின் நம்மைச் சுற்றி இருக்கும் பலவிதமான தேவை உள்ளவர்களுக்கும், அதாவது படிக்க உதவி, உடைகள் தந்து உதவி, இல்லங்கள் நடத்துவோருக்கு உதவி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி என்று பலவிதங்களில் நம்மால் உதவ முடியும். வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இல்லறத்தில் இருந்தாலும், அதை விட்டு விலகி இருக்க நமது சமயம் வழி சொல்லியிருக்கிறது. வானஸ்பிரஸ்தம் என்று அதற்குப் பெயர். திருவையாற்றை அடுத்த கடுவெளி எனும் கிராமத்தில் குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மாவின் அவார்டு பெற்ற ஒரு ஆதரவற்றோர் இல்லம் இருக்கிறது. இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், சுமார் இருபது மூத்த குடிமக்கள் இருக்கிறார்கள். அங்கு ஒரு நடுநிலைப் பள்ளியும் இருக்கிறது. அரசு உதவி நிதி போதுமானதாக இல்லை. எனக்குத் தெரிந்த பலரிடம், அவர்கள் முன்னோர்களின் நினைவு நாள், திருமண, பிறந்த நாள் வரும்போதெல்லாம் இந்த குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவுக்கு ரூ.3000 கொடுக்கச் சொல்லுவேன். கொடுப்பார்கள். நாமே போய் அவர்களுக்குப் பரிமாறலாம். ஒரு முறை ஐந்து அல்லது ஆறு வயது சிறுமி உணவு பரிமாறியதும் இறைவணக்கம் முடிந்து சாப்பிடும் நேரத்தில் உணவில் கை வைக்காமல் பரிமாறிய என் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்த நேரத்தில் என்னையறியாமல் கண்ணீர் உகுத்தேன். இரக்கம் எங்கு யாரிடம் காட்டவேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லை. இந்த விவரங்கள் அனைத்தும் நண்பர் கே.எம்.ஆர். அவர்களுக்கும் நன்கு தெரியும். நாற்பது வயதைக் கடந்த ஆண்கள் சேவை அல்லது உதவி செய்ய நினைத்தால் இதுபோன்ற தொகுப்பிடங்களைத் தேர்ந்தெடுங்கள். தனி மனித உதவிக்குப் பின் உங்களுக்கு நோக்கம் இருக்கிறதோ இல்லையோ, இருப்பதாக பிறர் நினைக்க வாய்ப்பு இருக்கிறது. அனைவருக்கும், குறிப்பாக ஆசிரியர், தமிழ்விரும்பி, ஜப்பான் மைனர், கே.எம்.ஆர். ஆகியோருக்கு நன்றி.

    ReplyDelete
  38. /////தமிழ் விரும்பி said...
    அப்படி ஒரு தேடல் இருக்குமாயின் நன்கு கொதிக்கும் நீரை தலையோடு ஊத்த வேண்டும் என்றும் கூறவும் தோன்றுகிறது....///////

    தலையிலே வெந்நீரை ஊத்தி அவிச்சி எடுத்து தோலை உரிச்சு உப்பு வெச்சு..

    இதெல்லாம் அந்நியன் படத்து
    கருட புராணத்தில் சீன்லே எங்கேயோப் பார்த்தமாதிரி ஒரு ஞாபகம்..பாவம் பேங்க் மேனேஜர்..

    ReplyDelete
  39. என் லண்டன் பயணக் கட்டுரைகளில் அங்கு பத்திரிகையில் வரும் மண‌மகன்/ மண‌மகள் தேவை விளம்பரங்களைப் பற்றியும் எழுதியுள்ளேன். அதில் ஒரு 76
    வயதுப் பாட்டியும் துணை தேவை என்று எழுதியிருந்தார்கள். 60க்கு மேல் வயது ஆனவர்கள் சுமார் 20பேர் விளமபரம் கொடுத்து இருந்தார்கள்.அவற்றில்
    கம்பானிய‌ன்ஷிப் + ஃப்ரென்ட்ஷிப்+ லிவ்டுகத‌ர்+ என்றெல்லாம் இருக்கும். இந்த +என்பதற்கு என்ன பொருள்?

    நுண்ணிய உணர்வுகள் எல்லோருக்கும் பொது.ஆங்கிலேயனாக இருந்தாலும் சரி,ஆவுடைஅப்பன் ஆனாலும் சரி.உணர்வுகள் ஒன்றுதான்.நம் சமூகம் திருட்டுத்தனமாக அனுபவித்தால் ,சமூகமும் கிசு கிசு பேசிவிட்டுக் கலைந்துவிடும். எக்குத்தப்பா மாட்டினால் தர்ம அடி கொடுக்கும்.
    இன்னும் கொஞ்சம் மேலே கட்டப் பஞ்சாயத்துப் பண்ணி' நறுக்' செய்ய உத்த்ரவிடும்.

    சிலபதிகாரக் காலத்தில் இதைப் புரிந்துதான் கணிகையர் எல்லாம் இருந்துள்ளனர்.மாதவி கோவலனின் 'ஈகோ'வை ஊடலில் சீண்டியதால் அன்றோ அவன் மீண்டும் கண்ணகியிடம் வந்தான்?கண்ணகியிடம் இல்லாத எதோ ஒன்றைத் தேடித்தானே மாதவியிடம் போனான்?இது போன்றவை வக்கரங்களாக் இருக்கலாம். ஆனால் அது இருக்கிறது என்பதே எதார்த்தம்.
    இது போன்ற சமயத்தில் நாம் ஜட்ஜ் ஆகிவிடாமல் This is also part of life என்று கடந்து செல்ல வேண்டும்.

    பலதார மணம் அனுமதிக்கப்பட்ட மதத்தில் அதற்கான காரணங்களை அந்த மார்க்க அறிஞர்கள் சொல்லும் போது ஆணின் உணர்வுகள் மங்க வெகு காலம்
    பிடிக்கிறது;பெண்ணுக்கு சீக்கிரம் இயற்கையிலேயே அது மரத்துவிடுகிறது அல்லது மறந்து விடுகிறது என்றனர். ஓரளவு உண்மை என்றாலும், நான் லண்டன் பெண்களைப் பார்த்த பின்னர் அந்த மார்க்க அறிஞர்கள் சொல்வது ஆய்வுக்கு உரியதே என்று கருத்தை மாற்றிக் கொண்டேன்.


    நான் சுட்டிய‌ பத்திரிகைச் செய்தியில் அந்தக் கிழவரும் அந்தப் பெண்ணும்
    ஏற்கனவே உறவினர்கள்.கிழவர் தன் சகோதரிகள் வாழ்வுக்காக திருமணமே
    செய்யவில்லை. 65 வயதுவரை பிரம்மச்சாரி.அந்தப் பெண்ணும் ஏழ்மை காரணமாக திருமணம் செய்யவில்லை.பெண் கிழவருக்கு அக்காள் மகள்.
    அக்காள் இறக்கும் போது மகளைத் தம்பியிடம் ஒப்படைத்துச் சென்று
    விட்டார்கள். அவர்கள் இருவரும் மட்டும் திருமணம் செய்யாமல் வாழ்ந்தால்
    அவதூறு பேச்சுக்கு இடமாகும் என்பது ஒரு காரணம். ஏற்கனவே சிறுவயது முதலே தாத்தாவுக்கு அந்தப் பெண் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது ஒரு காரணம்.
    பென்ஷன் மட்டும் இன்றி தன் பிற‌ சொத்துக்களும் அவளுக்குப் போய்ச் சேர
    வேண்டும் என்பது ஒரு காரணம்.அந்த முதியவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்து தமிழக அரசு ஓய்வூதியம் பெறுபவர்.தஞ்சாவூரார் கிளப்பிய பென்ஷன் கிடைக்குமா என்ற கேள்வியை அரசு அலுவகங்களில் கேட்டுத் தெளிவுற்றேன். அரசுப் பணியில் கேஸ் ஹிஸ்ட‌ரி உள்ளது. ஐயா தன் போக்கில் இந்த உண்மைச் சம்பவத்தினை சிறிது மாற்றி எழுதிவிட்டார். அதனால் மையக்கருத்து மாறவில்லை.

    ஸ்ரீ ராமாகிருஷ்ணரிடம் இப்படி ஓர் பிரச்சனை சென்ற போது 'சளியை சிந்துவது போல் சிந்திவிட்டு அடுத்த வேலையைப் பார்' என்று கிரஹஸ்த சீடருக்குச் சொன்னார்.அடக்கத் தேவை இல்லை. அவர் அவர்கள் பொருள் புரிந்து கொள்க.

    கடுவெளியில் தானமும் செய்துவிட்டு சிறிது ஆசைகளையும் பூர்த்தி செய்துகொள்ளலாம், தேவை இருப்பவர்கள். தேவை இல்லதவர்கள் வானப்பிரஸ்தம் சன்னியாசம் என்று மேலே மேலே போய் இந்த ஜன்மாவிலேயே முக்தியைப் பெறலாம். தாங்கள் மேலே மேலே போனவர்கள் கீழே உள்ளவர்களைப் பார்த்து ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள் தாமதமாக வரட்டுமே என்று பெருதன்மையோடு விட்டு விடலாம்.சபரி மலையில் சன்னிதனம் சென்று அடைந்தவர்கள் மலை ஏறிகொன்டு இருப்பவர்களைக் கருணையுடன் பார்க்கலாம்.

    இந்தப் பின்னூட்டத்திலேயே கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்று ஒரு நண்பர் சொல்லியிருக்கிறார். அதுதான் சரி.
    நன்றி!.

    ReplyDelete
  40. ////திருவையாற்றை அடுத்த கடுவெளி எனும் கிராமத்தில் குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மாவின் அவார்டு பெற்ற ஒரு ஆதரவற்றோர் இல்லம் இருக்கிறது. இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், சுமார் இருபது மூத்த குடிமக்கள் இருக்கிறார்கள். அங்கு ஒரு நடுநிலைப் பள்ளியும் இருக்கிறது. அரசு உதவி நிதி போதுமானதாக இல்லை. எனக்குத் தெரிந்த பலரிடம், அவர்கள் முன்னோர்களின் நினைவு நாள், திருமண, பிறந்த நாள் வரும்போதெல்லாம் இந்த குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவுக்கு ரூ.3000 கொடுக்கச் சொல்லுவேன். கொடுப்பார்கள். ////

    அருமையான தகவலை நல்லதொரு சமயத்தில் தந்துள்ளீர்கள் நன்றிகள் ஐயா!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com