22.11.11

விஸ்வநாதா வேளை வேண்டும்


வாரணாசியில் உள்ள நகரத்தார் விடுதியின் முன்புறத் தோற்றம்

 விடுதியைப் பற்றிக் கட்டியம் கூறும் அறிவிப்புப் பலகை!

 அவ்விடுதியின் உட்புறம் உள்ள சிவாலயத்தின் வாயிலில் 
உங்களுக்கு அருள்பாலிக்கக் காத்திருக்கும் பிள்ளையார்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விஸ்வநாதா வேளை வேண்டும்

விஸ்வநாதா வேலை வேண்டும் என்ற பாடலைத்தானே உங்களுக்குத் தெரியும்.

இதென்ன கூத்து? “விஸ்வநாதா வேளை வேண்டும்”

இது புதுப்பாடல் : “விஸ்வநாதா வேளை வேண்டும்” என்று கூத்தனுக்கான பாடல்!

என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்!
-----------------------------------------------------------------------------------------------------

இந்தியாவில் உள்ள சிவ ஸ்தலங்கள் எண்ணற்றவை. அவற்றில் பாதி தமிழ் நாட்டில்தான் உள்ளன.

செட்டிநாடு ஒரு சிறிய பகுதி எனக்குத் தெரிந்து அங்கேயே எண்பதிற்கும் மேற்பட்ட சிவாலயங்கள் உள்ளன. இளையாற்றங்குடி, மாத்தூர், வைரவன்பட்டி, இலுப்பக்குடி,  பிள்ளையார்பட்டி, இரணியூர்க் கோவில், நேமம்கோவில், சூரக்குடிக் கோவில், வேலங்குடிக் கோவில் என்று ஒன்பது, பெரிய மற்றும் புராதனக் கோவில்கள் உள்ளன. மற்றும் செட்டிநாட்டில் இன்று உள்ள 75 கிராமங்களிலும்  ஊருக்கு ஒரு சிவன் கோவில் உள்ளது. மொத்தம் எத்தனை கோவில்கள் என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

1
இளையாற்றங்குடிக் கோவில்
சுவாமியின் பெயர்: கைலாசநாதர், அம்மையின் பெயர்: நித்தியகல்யாணி.
2.
மாத்தூர் கோவில்
சுவாமியின் பெயர்: ஐநூற்றீசுவரர், அம்மையின் பெயர்: பெரியநாயகி
3.
வைரவன் கோவில்
சுவாமியின் பெயர்: வளரொளிநாதர், அம்மையின் பெயர்: வடிவுடையம்மை.
4.
இரணியூர்க் கோவில்
சுவாமியின் பெயர்: ஆட்கொண்டநாதர், அம்மையின் பெயர்: சிவபுரந்தேவி.
5.
பிள்ளையார்பட்டிக் கோவில்
சுவாமியின் பெயர்: திருவீசர், அம்மையின் பெயர்: சிவகாமவல்லி.
6.
நேமங்கோவில்.
சுவாமியின் பெயர்: செயங்கொண்ட சோழீசர், அம்மையின் பெயர்: சவுந்தரநாயகி.
7.
இலுப்பக்குடி.
சுவாமியின் பெயர்: தான்தோன்றீசுவரர், அம்மையின் பெயர்: சவுந்தரநாயகி.
8
வேலங்குடிக் கோவில்.
சுவாமியின் பெயர்: கண்டீசுவரர், அம்மையின் பெயர்: காமாட்சியம்மை.
9.
சூரக்குடிக் கோவில்
சுவாமியின் பெயர்: தேசிகநாதர், அம்மையின் பெயர்: ஆவுடைநாயகி

இந்தக் கோவில்கள் அனைத்தும் காரைக்குடியில் இருந்து 10 முதல் 25 கிலோ மீட்டர் வட்டத்திற்குள் உள்ளன. வாகனத்தில் சென்றால் ஒரே நாளில் அத்தனை கோவில்களையும் பார்த்துவிடலாம்.

செட்டிநாட்டிலுள்ள மக்கள் எல்லாம் இந்தக் கோவில்களைச் சேர்ந்தவர்கள் தான். ஒரு கோவிலைச் சேர்ந்த மக்கள் எல்லாம் சகோதர உறவு உடைய வர்கள்.  அவர்கள் எல்லாம் எந்த ஊரில் வசித்தாலும் சகோதரர்களாக உறவு வைத்திருப்பார்கள். தங்கள் குடும்பங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். அடுத்த எட்டுக் கோவிலைச் சேர்ந்த குடும்பங்களுடன்தான் திருமண பந்தம்

தங்கள் வீட்டு அழைப்பிதழ்கள் அனைத்திலும் தாங்கள் சார்ந்துள்ள கோவிலின் சுவாமி மற்றும் அம்மனின் பெயரைக் குறிபிட்டு எழுதுவார்கள்.

உதாரணத்திற்கு:

அன்புடையீர்,
ஸ்ரீநித்தியகல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் திருவருளால் நிகழும் சுபஸ்ரீ கர வருடம் கார்த்திகை மாதம் 27ஆம் நாள் (13.12.2011) செவ்வாய்க்கிழமை புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் கும்ப லக்கினம் நிஷ்பஞ்சகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 11:30 க்கு மேல் 12:30 மணிக்குள் என் சகோதரர் so and so விற்கு நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி சாந்திக் கல்யாணத்திற்கு தாங்கள் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாயக் கேட்டுக்கொள்கிறோம்.


என்று எழுதுவார்கள். அதைவைத்து சம்பந்தப்பட்ட குடும்பத்தார் எந்தக் கோவிலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். அந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய முன்னோர்கள் கட்டியது. இன்றுவரை அவர்கள் அக்கோவிலைப் புதுப்பித்து 12 வருடங்களுக்கு ஒருமுறை திருப்பணி செய்து வருகிறார்கள். கோவிலின் நித்திய பூஜைக்குத் தேவையான நிதிக்கு, நிலபுன்கள், அறங்காவலர் குழு என்று எல்லா அமைப்புக்களும் இருக்கும். அது முக்கியமானது.
--------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் நாட்டில் பிரபலமான சிவன் கோவில்கள் பல உள்ளன. இடம் மற்றும் உங்கள் நேரம் கருதி பத்துக் கோவில்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அத்தனை கோவில்களையும் பற்றி எழுதுகிறேன்

1
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோவில்
சுவாமியின் பெயர்: ஸ்ரீசுந்தரேசுவரர், அம்மையின் பெயர்: மீனாட்சி.

2
திருவண்ணாமலை
அருள்மிகு அருணாச்சலேசுவரர் ஆலயம்
சுவாமியின் பெயர்: ஸ்ரீஅண்ணாமலையார், அம்மையின் பெயர்: உண்ணாமுலையம்மன்.

Thiruvannamalai is one of the Pancha Bootha Sthalangal representing the fire element along with Chidambaram, Sri Kalahasti, Thiruvanaikoil and Kanchipuram representing space, wind, water and earth respectively.

3.
காஞ்சிபுரம்
ஏகாம்பரநாதர் கோவில்
சுவாமியின் பெயர்: ஏகாம்பரநாதர், அம்மையின் பெயர்: காமாட்சி.

Kanchi is one of seven most holy places for Hindus in India where Varanasi is considered as the holiest of the seven holy cities.
“Ayodhyā Mathurā Māyā Kāsi Kāñchī Avantikā
Purī Dvārāvatī chaiva saptaitā moksadāyikāh II - Garuḍa Purāṇa I XVI .14”
A Kṣetra is a sacred ground, a field of active power, a place where Moksha, final release can be obtained. The Garuda Purana enumerates seven cities as giver of Moksha, They are Ayodhya, Mathura, Māyā, Kāsi, Kānchī, Avantikā and Dvārāvatī

4.
சிதம்பரம்
தில்லை நடராஜர் கோவில்
சுவாமியின் பெயர்: ஸ்ரீநடராஜர், அம்மையின் பெயர்: சிவகாமி.

5
திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவில்
சுவாமியின் பெயர்: ஸ்ரீநெல்லையப்பர், அம்மையின் பெயர்: காந்திமதி.

6.
திருவாணைக்காவல், திருச்சிராப்பள்ளி
ஸ்ரீஜம்புகேஷ்வரர் அகிலாண்டேஷ்வரி கோவில்
சுவாமியின் பெயர்: ஸ்ரீஜம்புகேஷ்வரர், அம்மையின் பெயர்: அகிலாண்டேஷ்வரி.

7.
ராமேச்சுவரம்
ராமநாதசுவாமி கோவில்

8.
திருவாரூர்
தியாகராஜ சுவாமி கோவில்
சுவாமியின் பெயர்: ஸ்ரீதியாகராஜர், வீதிவிடங்கர், அம்மையின் பெயர்: கமலாம்பிகை.

9
தஞ்சாவூர்
பெரியகோவில் (பிரஹதீஸ்வரர் ஆலயம்)

10
நாகபட்டினம்
நீலாயதாட்சி கோவில்
சுவாமியின் பெயர்: காயரோஹனேஷ்வரர் அம்மையின் பெயர்: நீலாயதாட்சி
--------------------------------------------------------------------------------------------------
இப்படி எண்ணற்ற கோவில்கள் தமிழ் நாட்டில் இருந்தாலும் அகில இந்திய அளவில் மிகவும் சிறப்பித்துக் கூறப்படுபவை 12 ஜோதிலிங்கக் கோவில்கள். அவற்றைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்

1. சோமநாதர் கோவில் (குஜராத்)
கடற்கரையில் உள்ள கோவில்
http://en.wikipedia.org/wiki/Somnath

2. மல்லிகார்ஜுன சுவாமி (ஸ்ரீசைலம், ஆந்திரா)
கிருஷ்ணா நதிகரையில் உள்ளது,
http://en.wikipedia.org/wiki/Srisailam

3. மஹாகாளீஸ்வரர் கோவில், உஜ்ஜெயின் (மத்திய பிரதேஷ்)
கிராமத்தில் உள்ளது
http://en.wikipedia.org/wiki/Mahakaleshwar_Jyotirlinga

4. ஓம்காரேஷ்வர் கோவில், சிவபுரி (மத்திய பிரதேஷ்)
இந்தூர் அருகே நர்மதை ஆற்றங்கரையில் உள்ளது
http://www.religiousportal.com/OmkareshwarTemple.html

5. வைத்தியநாதர் கோவில் பரேலி (மஹாராஷ்ட்டிரா)
காண்ட்டிபூர் என்னும் கிராமத்தில் உள்ளது.
http://www.shaivam.org/siddhanta/sp/spjyoti_vaidyanath.htm

6. நாகேஷ்வர் கோவில்
அல்மோரா மாவட்டம், உத்திரகாண்ட மாநிலம்
http://en.wikipedia.org/wiki/Jageshwar

7. கேதாரேஷ்வர் கோவில்
இமயத்தில் உள்ளது
http://jyotirlingaofindia.blogspot.com/2011/04/shri-kedarnath-in-himalayas.html

8. த்ரியாம்பகேஷ்வர் கோவில் நாசிக் ((மஹாராஷ்ட்டிரா)
கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது.
http://www.shaivam.org/siddhanta/sp/spjyoti_tryambak.htm

9. ராமேஷ்வர் கோவில், ராமேச்சுவரம் (தமிழ்நாடு)
கடற்கரையில் உள்ளது.
http://en.wikipedia.org/wiki/Rameswaram

10. பீமாஷங்கர் கோவில், தகினி, ((மஹாராஷ்ட்டிரா)
http://www.shaivam.org/siddhanta/sp/spjyoti_bimsankar.htm

11. விஸ்வேஸ்வர் கோவில் வாரணாசி (உத்திரப் பிரதேசம்)
கங்கை ஆற்றங்கரையில் உள்ளது
http://www.shaivam.org/siddhanta/sp/spjyoti_vishvesh.htm

12. கிரீஷ்னேஷ்வர் கோவில், தேவசரோவர் (மஹாராஷ்ட்டிரா)
ஒளரங்காபாத் அருகே வெரூல் என்னும் கிராமத்தில் உள்ளது
http://www.shaivam.org/siddhanta/sp/spjyoti_grishnesh.htm

இவற்றில் இரண்டு ஆலயங்கள் கடற்கரைப் பகுதியில் உள்ளன, மூன்று ஆலயங்கள் நதிக்கரையில் உள்ளன. நான்கு ஆலயங்கள் உயர்ந்த மலை முகடுகளில் உள்ளன. மூன்று ஆலயங்கள் கிராமப் பகுதிகளில் உள்ளன.

இந்தியாவில் உள்ள இந்த 12ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது. இரண்டாவது இடம் நமது ராமேச்சுவரத்திற்கு! அதை மனதில் வையுங்கள். இதைச் சொல்வதற்காகத்தான் இத்தனை பில்ட் அப் கொடுத்து எழுதியுள்ளேன்.

ஆகவே இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்து மதத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்களும் வாழ்வில் ஒரு முறையாவது வாரணாசிக்குச் சென்று விஸ்வநாதரைத் தரிசித்து வரவேண்டும்

சரி, எப்போது காசிக்குப் போக வேண்டும்?

எப்போது வேண்டுமென்றாலும் போகலாம். ஆனால் அதற்கு முன்பு உங்களுக்கு காசிநாதன் அதற்குரிய வேளையை (Time) உண்டாக்கித் தருவான். அவன் தந்தால்தான் நீங்கள் செல்ல முடியும். அதற்குரிய மன நிலையும் சூழ்நிலையும் அப்போதுதான் உங்களுக்குக் கிடைக்கும்

ஆகவே

கோவில் மேலே கோவில் கொண்டு
கோடி கோடி உள்ளங்களைக்
கொள்ளை கொண்ட சீமானே
ஹலோ ஹலோ காட்சி தாராய் சீமானே!
அன்ன பூரணியை அருகில் கொண்டு
கங்கைக் கரையில் உறைந்திருக்கும் சீமானே
ஹலோ ஹலோ காட்சி தாராய் கோமானே!

விஸ்வநாதா வேளை வேண்டும்
விஸ்வநாதா வேளை வேண்டும் - உம்மைக்
காண வரும் வேளை வேண்டும்!
ஹலோ ஹலோ வேண்டுதலைச் செவிமடுப்பாய் கோமானே!

என்று அட்லீஸ்ட் தினம் ஒரு முறையாவது பாடுங்கள். அதற்குரிய வேளை வந்து சேரும்


அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம்


அலகாபாத்தில் உள்ள முன்னாள் பாரதப் பிரதமர்கள்களின் 
(மொத்தம் மூன்று பேர்கள்) வீட்டு வாயிலில் வாத்தியார்
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(வாரணாசியைப் பற்றிய கட்டுரை தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

47 comments:

  1. வாசிக்க வேளைவந்துவிட்டது! விஸ்வநாதரைப்பற்றிய விரிவான பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. சிவாலயங்களின் சிறப்பையெல்லாம் சுட்டிக்காட்டி, செட்டிநாட்டில் அவரவர்க்குரிய குலதெய்வங்களான ஆலயங்களையும் எழுதி காசி யாத்திரைக்கு அனைவரையும் தயார் செய்து விட்டீர்கள். அலகாபாத்தின் இன்னொரு சிறப்பு பாரத்வாஜர் ஆசிரமம். நேருவின் ஆனந்தபவனில் நேரு, இந்திரா ஆகியோரின் உடைமைகள் அப்படியே காட்சிக்கு வைத்திருப்பது சிறப்பு. இப்படித் தனது சொந்த மாளிகையை நாட்டுக்குக் கொடுத்த நல்லவர்களும் அன்று இருந்திருக்கிறார்கள். அலகாபாத்தில் நம்மவர்கள் தங்குவதற்கென்று சிவமடம் உண்டு, அந்த விவரங்களையும் கொடுத்தால், அங்கு போகிறவர்களுக்குப் பயன்படும். நல்ல தொடக்கம்.

    ReplyDelete
  3. New admission. Present sir. Very informative links. It's not easy to compose all these details. Thank you.

    ReplyDelete
  4. அழகான அற்புதமான அறியத் தகவல்கள்...
    உண்மைதான் அவன் தானே அவனைக்
    காணும் வேளையைத் தரவேண்டும்...

    "விஸ்வநாதன் வேளை வேண்டும்"
    உருமாற்றுப் பாடல் அருமை ஆசிரியரே!
    தேவ உணர்வோடு செய்ததால்
    மிகவும் அசத்தலாக உள்ளது.

    பதிவிற்கு நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  5. தூள். இனிமேல் "விஸ்வநாதன் வேலை வேண்டும்" பாடல் கேட்கும்போதெல்லாம் உங்கள் நினைவே வரும் ஐயா. கடவுளை வணங்க தெரியாத மொழியில் புரியாத மந்திரம் சொல்வது தேவையில்லை, "கடவுளே காப்பாத்து" என்று சிறு பிள்ளை போல் வேண்டிக் கொண்டால் போதும் என்று சொல்லக் கேள்வி பட்டுள்ளேன்.

    அதே போல் பெரிய படையல், பூஜை புனஸ்காரம், கிடா வெட்டுவது, பொங்கல் வைப்பது போன்ற நேர்த்திகடன் எல்லாம் நம் மன ஆறுதலுக்காக நாமே செய்வது, அதை கடவுள் கேட்பதில்லை. சிறு அருகம் புல்லை கிள்ளிப் போட்டு வணங்கினாலும் போதும் என அறிவுரைகள் கேட்டுள்ளேன். கையூட்டு கொடுத்து பழக்கப்பட்ட நமக்கு கடவுளையும் விட்டு வைக்க மனமில்லை.

    இறை வழி பாட்டில் எளிமையை உணர்துகிறது உங்கள் பாடல். "ஆதி பராசக்தி" திரைப் படத்தில் "ஆத்தாடி மாரியம்மா" என்ற பாடல் காட்சியும் இந்தக் கருத்தை வலியுறுத்தும். உங்கள் பாடலைப் படித்து முதலில் சிரித்து விட்டேன், பின்பே சிந்திக்க ஆரம்பித்தேன், நல்ல பதிவு, நன்றி.

    ReplyDelete
  6. ///சிறு அருகம் புல்லை கிள்ளிப் போட்டு வணங்கினாலும் போதும் என அறிவுரைகள் கேட்டுள்ளேன். கையூட்டு கொடுத்து பழக்கப்பட்ட நமக்கு கடவுளையும் விட்டு வைக்க மனமில்லை.///

    சமயமும் சமூகமும் சங்கமிக்கும், அருமையான வரிகள்
    சமயத்தின் நோக்கமே சமூக அக்கரைத்தான் என்பதை காட்டியுள்ளீர்கள்!...

    இயல்பும், இருப்பும்
    அறிந்தவர்களுக்கு மட்டுமே
    இந்த இடர்பாடு இல்லாமல்
    போகிறது அல்லவா!

    கையில் இருப்பின்...
    படையல்களை பாமரனுக்கு பகிர்ந்துக் கொடு
    பகட்டை பாதாளத்தில் புதைத்து விடு
    பக்தி பரவசத்தில் பரசிவத்தை வணங்கி விடு...

    இல்லாது போயின்!....
    படையலும் வேண்டான், பணமும் வேண்டான்
    அன்போடு பணிந்தால் அருள்மழை பொழிவான்.

    சகோதிரி தேமொழி... தங்களின் சமய சமூக சிந்தனை அற்புதம்...
    நன்றி.

    ReplyDelete
  7. மாடி மேலே மாடி கட்டி...... வேண்டவே வேண்டாம்.

    வேண்டுவது கோவில் மேலே கோவில் கொண்டு பாடல்தான்.
    திருமுறையில் சேர்த்துவிடலாம்.

    ஹலோ என்பதற்கு, கடவுள் போன்று வேறு சொல் நன்றாக இருக்கும்.

    இருந்தும் நாள்தோறும் காலை மாலை பாடலாம்.

    ReplyDelete
  8. /--
    Thanjavooraan said...

    இப்படித் தனது சொந்த மாளிகையை நாட்டுக்குக் கொடுத்த நல்லவர்களும் அன்று இருந்திருக்கிறார்கள். அலகாபாத்தில் நம்மவர்கள் தங்குவதற்கென்று சிவமடம் உண்டு, அந்த விவரங்களையும் கொடுத்தால், அங்கு போகிறவர்களுக்குப் பயன்படும்
    --/
    நாட்டுக்கு மாளிகையைக் கொடுத்தார்களா, நாட்டை மாளிகையாக்கிக் கொண்டார்களா என்பது விவாதத்துக்கு உரியது!!

    காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான மடம் ஒன்று உள்ளது. நாங்கள் அதில்தான் தங்கினோம். அந்த பில்கூட வெகுநாட்களுக்குப் பத்திரப் படுத்தி வைத்திருந்தேன். Transfer ஆகி வரும்போது எங்கோ தொலைந்து விட்டது.

    காசிக்குச் செல்பவர்கள், காசியோடு சேர்த்து அருகிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்த்து வருவதற்குத் தகுந்த மாதிரி திட்டமிடுவது நல்லது. காசியில் இருந்து 1 மணி நேரப் பயணத்தில் சாரநாத் உள்ளது. இந்திய அரசுச் சின்னமான அசோகரின் ஸ்தூபி இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
    உ.ப் முழுவதுமே இந்த மாதிரி முக்கியமான இடங்கள் / கோவில்கள் உண்டு. ஒரே குறை சுத்தம் பேணாத முரட்டு குணமுடைய மக்கள்.

    ReplyDelete
  9. நல்ல பதிவொன்றை வெளியிட்டுத் தூள் கிளப்பிவிட்டீர்கள்.நானும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் செட்டிநாட்டில் உள்ள கோவில்களைப்பற்றித் தெரிந்து கொண்டேன்.நான் நமது கீழச்செவல்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் நகரத்தார் கட்டளைக்குட்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.ஆனால் அது பற்றிய தகவல்கள் தங்களது பதிவில் இடம்பெறவில்லை.மேலும் காசி மாநகர் பற்றிய அறிய தகவல்களை அறிய வேண்டி ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  10. எங்களுக்கு மஹாசங்கல்பம் செய்து வைக்கும் போது தான் இத்துணை தெய்வங்களின் பெயர்களையும் கூறுவார்கள்.எவ்வளவு கோயில் சுவாமிகளைக் குறிப்பிடுகிறார்களோ அவ்வளவுக்கு நமக்கு அனுக்கிர‌கம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அதற்கேற்ற ஒரு பட்டியல் கொடுத்ததற்கு மிக்க நன்றி அய்யா!

    ஸ்ரீமங்களாம்பிகா ஸமேத ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி சன்னிதெள....
    (மங்க‌ளாம்பிகா உடனுறை ஐயாரப்பர் முன்னிலையில்)
    இதுபோல நிறைய க்ஷேத்ரத்தினைக் கூறுவார்கள்.

    2 செப்டம்பர் 2011 வெள்ளி அன்று பக்திமலரில் அடியேனின் "துறவின் மகத்துவம்" என்ற தலைப்பில் வகுப்பறையில் வெளீயான கட்டுரையில் காசி ராமேஸ்வர யாத்திரை பற்றிக் கூறியுள்ளதை வாசிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  11. //நாட்டுக்கு மாளிகையைக் கொடுத்தார்களா, நாட்டை மாளிகையாக்கிக் கொண்டார்களா என்பது விவாதத்துக்கு உரியது!!//

    ஆம்! இது விவாதத்திற்கு உரியதே.ஆனால் ஆனந்த பவனத்தை நாட்டுக்கு அளித்த முன் தலை முறை மீது இவ்வளவு பெரிய மெகா ஊழல் குற்றச்சாட்டெல்லம் சுமத்த முடியாது.

    நேரு என்ற நல்ல மனிதர்,தான் நம்பியதை ஒரு பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டுப் போய் விட்டார்.

    "Small is beautiful" என்பது அப்போது ஒரு பொருளாதாரக் கருத்தாக்கமாக உருவாகவில்லை.

    மனித ஆற்றலை அதிகம் பயன்படுத்தும் பொருளாதாரமே வேண்டும்.இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் அப்படி ஒரு பொருளாதரக் கொள்கையுடைய‌வர்
    வருவாரோ?

    ReplyDelete
  12. "விஸ்வநாதா வேளை வேண்டும்” என்று கூத்தனுக்கான பாடல்!

    மிக அருமையாக ரசிக்கும்படி தங்களது நடையில் உள்ளது.

    மேலும் செட்டிநாடு சிவாலயங்கள் மற்றும் பிரசித்திபெற்ற சிவாலயங்கள்,12 ஜோதிர்லிங்கக் கோவில்கள் பற்றிய தகவல் பதிவில் மிக அருமையாக உள்ளது,

    தொடர்க தங்களது காசி பயணம் பற்றிய கட்டுரை,

    நன்றி.

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா,
    ஆஹா அருமையான தகவல்கள் ஐயா.எனக்கும் வாரணாசிக்கு செல்ல மிகவும் ஆசை.காசி மற்றும் கயிலாயம் என் வாழ்நாளில் எப்படியாவது தரிசிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டே இருக்கிறேன்.தாங்கள் கூறியபடியே,விஸ்வநாதரிடம் இனி "வேளை"யை தர வேண்டுவேன்!

    ReplyDelete
  14. அய்யா, எனக்கு காசி வில்வ நாதர் 2000 ஆண்டில் வேலை நிமித்தமாக வாரணாசி செல்லும் போது வேளை கொடுத்து விட்டார். திரிவேணி சங்கமத்தின் அசுத்தம் காரணமாக கும்ப மேளாவின் போது குளிக்கவில்லை. ஆனால் தற்போது நினைத்து வருந்துகிறேன். மீண்டும் வேளை கொடுப்பாரா?
    -ஜவஹர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  15. அய்யா. தங்களுடைய காசி பயணம் நல்ல விதமாக அமைந்ததில் மகிழ்ச்சி.

    இடைப்பட்ட காலத்தில் B.V.Raman அவர்களின் புத்தகங்கள் நிறைய வாங்கியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டும். அவர் பாடப் புத்தகம் எழுதும் நடையில் எழுதியவற்றை நீங்கள் சுவாரசியமான நடையில் எழுதுவதுதான் பலருக்கு சோதிடம் மீது ஒரு ஈர்ப்பை உண்டாக்குகிறது.

    ReplyDelete
  16. காசி யாத்திரை என்பது முந்தைய நாட்களில் மிகப்பெரிய சாதனை. கலைவாணர் கூட ஒரு படத்தில் கதையொன்று சொல்லுவார். இரட்டைக் காளை பூட்டிய ஒரு மாட்டு வண்டியில் ஒரு குடும்பம் காசி யாத்திரை சென்றதாம். பல மாதங்கள் கழிந்து வண்டியும் மாடும் திரும்ப வந்தது என்று கதை சொல்வார். அது ஒரு காலம். இப்போதெல்லாம் கங்கா காவிரி விரைவு வண்டி ஓடுகிறது. காசிக்குச் செல்பவர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த ஏதாவதொரு காய், பழம், உணவு வகை என்று ஏதாலுமொன்றை உண்பதை விட்டுவிடுவார்கள். பொதுவாகத் தங்களுக்குப் பிடிக்காத காய் எதையாவது சாமர்த்தியமாக விட்டுவிட்டு வருவார்கள். அதன் தத்துவம் அதுவல்ல. பற்று விடுதல் என்பது அதன் நோக்கம். நமக்கு அதிகமாக ஈடுபாடு உள்ள எதையாவது விடுதல் என்று. இதையெல்லாம் நான் ஏதாவது சொல்லப் போக நண்பர் கே.எம்.ஆர். நீங்கள் வேண்டுமானால் உயரர‌த்துக்குப் போய் இதையெல்லாம் விடுங்கள். வகுப்பு அறையில் நிறைந்திருப்போர் இளைஞர்கள். இனிதான் அவர்களுக்கு எதிர்காலமே. அவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டாம் என்பார். இங்கு நான் உபதேசம் செய்யவில்லை. இப்படியொரு பாரம்பரிய வழக்கம் உண்டு என்பதை நினைவு கூர்ந்தேன். ஆசிரியர் ஐயாவின் காசி யாத்திரை மனதில் உருவாக்கிய எண்ண அலைகளின் ஒரு பகுதி இது. நன்றி.

    ReplyDelete
  17. அலஹாபாத் திரிவேணி சங்கமம் படம் மகாநதித் திரைப்படத்தில் கல்கத்தாவில் இதேபோலே ஒரு படகுப் பயணத்தில் கமல் செல்லும்போது ஏதோ ஒரு வேற்றுமொழிப் பாடல் BGM ஆக வரும்..
    அந்தப்பாடல் நினைவுக்கு வந்துவிட்டது..
    கேட்க ரொம்ப வித்தியாசமாகவும் மனதில் ஓர் இனம் புரியாத உணர்ச்சியையும் தோற்றுவிக்கும்.

    வாத்தியாரின் காசி யாத்திரைத் தொடரை தொடர விரும்புகிறேன்..

    ReplyDelete
  18. ஆமா? KMRK சாரும் Visu அய்யரும் சேர்ந்து ஒரு காசி ட்ரிப் அடிச்சா என்ன?

    ReplyDelete
  19. வாத்தியார் ஐயா வணக்கம்.


    தங்களை ஒரு பதி இரண்டு ( 12 ) காலத்திற்கு முன்னர் அறிமுகம் ஆகாமல் போனது எனது அதிஸ்ட இன்மை ஆகும். 1999 வருடம் மஹாலய அமாவாசை அன்று அடியவன் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தேன் ஐயா.


    அடியவனின் தந்தையார் இராணுவத்தில் வேலை செய்தமையால் ஒரு உறவினரின் தயவால் இராணுவ விடுதில் தங்கினேன் . கோவிலுக்கு கூட்டி சென்றது எல்லாம் ஒரு இராணுவ வீரர் தான் .


    நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூஜை கொள்ள வாராய் பராபரமே

    அன்பர் பனி செய்ய ஆளாக்கி விட்டு விட்டால் இன்ப நிலை தானே வந்து விடும் பராபரமே என்ற

    பாசுரத்தை மனதில் ஆழமாக வைத்து கொண்டு தலை முடி இறக்கி கங்கை ஆற்றில் பெரும் வெள்ளத்தில் மூல்கி மனதார தந்தையார் மற்றும் தாத்தா ஆச்சியை மற்றும் முன்னோர்கள் அனைவரையும் நினைத்து

    தர்ப்பணம் கொடுத்து வந்தேன் , ஐயா.


    அன்ன பூரணி அம்மனையும் தரிசனம் செய்து விட்டு மறுநாள் திரி வேணி சங்கமத்திற்கு சென்று கங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் சங்கமம் ஆகும் இடத்திற்கு சென்று மனதார தந்தை மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நன்றாக தரிசனம் செய்து வந்தேன் ஐயா .


    காசிக்கு சென்றால் தம்மிடம் உள்ள ஒன்றை விடவேண்டும் என்று கேள்வி பட்டமையால் பாகற்காயை விட்டு வந்தேன் . அதற்க்கு முன்னரே காப்பி , டீ , முதல் அசைவம் வரை அனைத்தினையும் விட்டு விட்டமையால் மிகவும் பிடித்த உணவாகிய பாகற்காயை விட்டு விட்டு வந்தேன் ஐயா .
    --

    ReplyDelete
  20. /// நம்மவர்கள் தங்குவதற்கென்று சிவமடம் உண்டு, அந்த விவரங்களையும் கொடுத்தால், அங்கு போகிறவர்களுக்குப் பயன்படும்....///

    சிவமடம் உள்ளது
    அந்த இடத்திற்கு பெயர் தாராகஞ்

    தொடர்புக்கு
    திருசுந்தரம் அவர்களின் தொலைபேசி எண்,915322500799

    ஒரு குழுவாக வருவதை முன்னரே சொன்னால் அவர்களே ரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துச் செல்வர்கள்...

    தனிநபராக செல்பவர்கள் தாராகஞ்ச் காவல்நிலையம் வரை செல்லும் ஷேர் ஆட்டோவிலும் செல்லலாம்..

    மற்றதை வகுப்பறை வாத்தியாரும்
    மற்ற தோழர்களும் சொல்வார்கள்

    ReplyDelete
  21. ///ஆமா? KMRK சாரும் Visu அய்யரும் சேர்ந்து ஒரு காசி ட்ரிப் அடிச்சா என்ன?.///

    ஆகா.. பேஷா...
    இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அய்யருக்கும் மகிழ்ச்சியே..
    உங்களைப் போலவே

    ReplyDelete
  22. அருமையான பதிவு. மேலும் விவரங்க்க்ளை எதிர்பார்கிரேன்.

    இப்படிக்கு
    வெனக்ட்

    பின் குரிப்பு : என்னையும் உஙகள் மாணவர் பட்டியலில் சேர்து கொள்ளவும்.

    ReplyDelete
  23. //minorwall said...
    ஆமா? KMRK சாரும் Visu அய்யரும் சேர்ந்து ஒரு காசி ட்ரிப் அடிச்சா என்ன?//

    இங்கயே சொல்லவா அல்லது தனி மின் அஞ்சல் அனுப்பவா?

    இங்க எழுதினா 'செங்க‌ட் சீயம் ஊர்'க்காரர் பொங்கி எழுந்து 'சத்தியம் தவறிய அற்பனே, அகங்காரம் பிடித்த அலங்கோலனே!' என்று சரமாரியாக அன்பு, சாரி அம்பு விட்டா நீரா வந்து காப்பாதப் போகிறீர்?

    ReplyDelete
  24. /////Blogger ஷைலஜா said...
    வாசிக்க வேளைவந்துவிட்டது! விஸ்வநாதரைப்பற்றிய விரிவான பதிவுக்குக் காத்திருக்கிறேன்./////

    நன்றி சகோதரி. தொடர்ந்து படியுங்கள் இன்னும் மூன்று பதிவுகள் உள்ளன!

    ReplyDelete
  25. Blogger Thanjavooraan said...
    சிவாலயங்களின் சிறப்பையெல்லாம் சுட்டிக்காட்டி, செட்டிநாட்டில் அவரவர்க்குரிய குலதெய்வங்களான ஆலயங்களையும் எழுதி காசி யாத்திரைக்கு அனைவரையும் தயார் செய்து விட்டீர்கள். அலகாபாத்தின் இன்னொரு சிறப்பு பாரத்வாஜர் ஆசிரமம். நேருவின் ஆனந்தபவனில் நேரு, இந்திரா ஆகியோரின் உடைமைகள் அப்படியே காட்சிக்கு வைத்திருப்பது சிறப்பு. இப்படித் தனது சொந்த மாளிகையை நாட்டுக்குக் கொடுத்த நல்லவர்களும் அன்று இருந்திருக்கிறார்கள். அலகாபாத்தில் நம்மவர்கள் தங்குவதற்கென்று சிவமடம் உண்டு, அந்த விவரங்களையும் கொடுத்தால், அங்கு போகிறவர்களுக்குப் பயன்படும். நல்ல தொடக்கம்.///////

    கீழே விசுவநாதன் கொடுத்துள்ளார். நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  26. //////Blogger Unknown said...
    New admission. Present sir. Very informative links. It's not easy to compose all these details. Thank you./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. Blogger eswari sekar said...
    wait panniktu erukkom/////

    இன்னும் 3 பதிவுகள் உள்ளன. எல்லாம் அடுத்தடுத்து 3 நாட்களில் வெளியாகும். தொடர்ந்து படியுங்கள் நன்றி!

    ReplyDelete
  28. /////Blogger தமிழ் விரும்பி said...
    அழகான அற்புதமான அறியத் தகவல்கள்... உண்மைதான் அவன் தானே அவனைக் காணும் வேளையைத் தரவேண்டும்...

    "விஸ்வநாதன் வேளை வேண்டும்"
    உருமாற்றுப் பாடல் அருமை ஆசிரியரே!
    தேவ உணர்வோடு செய்ததால்
    மிகவும் அசத்தலாக உள்ளது.
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    நல்லது. உங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  29. //////Blogger தேமொழி said...
    தூள். இனிமேல் "விஸ்வநாதன் வேலை வேண்டும்" பாடல் கேட்கும்போதெல்லாம் உங்கள் நினைவே வரும் ஐயா. கடவுளை வணங்க தெரியாத மொழியில் புரியாத மந்திரம் சொல்வது தேவையில்லை, "கடவுளே காப்பாத்து" என்று சிறு பிள்ளை போல் வேண்டிக் கொண்டால் போதும் என்று சொல்லக் கேள்வி பட்டுள்ளேன்.
    அதே போல் பெரிய படையல், பூஜை புனஸ்காரம், கிடா வெட்டுவது, பொங்கல் வைப்பது போன்ற நேர்த்திகடன் எல்லாம் நம் மன ஆறுதலுக்காக நாமே செய்வது, அதை கடவுள் கேட்பதில்லை. சிறு அருகம் புல்லை கிள்ளிப் போட்டு வணங்கினாலும் போதும் என அறிவுரைகள் கேட்டுள்ளேன். கையூட்டு கொடுத்து பழக்கப்பட்ட நமக்கு கடவுளையும் விட்டு வைக்க மனமில்லை.
    இறை வழி பாட்டில் எளிமையை உணர்துகிறது உங்கள் பாடல். "ஆதி பராசக்தி" திரைப் படத்தில் "ஆத்தாடி மாரியம்மா" என்ற பாடல் காட்சியும் இந்தக் கருத்தை வலியுறுத்தும். உங்கள் பாடலைப் படித்து முதலில் சிரித்து விட்டேன், பின்பே சிந்திக்க ஆரம்பித்தேன், நல்ல பதிவு, நன்றி./////

    நல்லது. உங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  30. Blogger krishnar said...
    மாடி மேலே மாடி கட்டி...... வேண்டவே வேண்டாம்.
    வேண்டுவது கோவில் மேலே கோவில் கொண்டு பாடல்தான்.
    திருமுறையில் சேர்த்துவிடலாம்.
    ஹலோ என்பதற்கு, கடவுள் போன்று வேறு சொல் நன்றாக இருக்கும்.
    இருந்தும் நாள்தோறும் காலை மாலை பாடலாம்.//////

    மெட்டிற்காக அந்தப் பதத்தைப்போட்டேன். நன்றி கிருஷ்ணர் அவர்களே!

    ReplyDelete
  31. //////Blogger Duraisamy N said...
    /-- Thanjavooraan said...
    இப்படித் தனது சொந்த மாளிகையை நாட்டுக்குக் கொடுத்த நல்லவர்களும் அன்று இருந்திருக்கிறார்கள். அலகாபாத்தில் நம்மவர்கள் தங்குவதற்கென்று சிவமடம் உண்டு, அந்த விவரங்களையும் கொடுத்தால், அங்கு போகிறவர்களுக்குப் பயன்படும்
    --/ நாட்டுக்கு மாளிகையைக் கொடுத்தார்களா, நாட்டை மாளிகையாக்கிக் கொண்டார்களா என்பது விவாதத்துக்கு உரியது!!/////

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்றுள்ளதைப்போல நிலைமை இல்லை. ஆகவே அவர்கள் மாளிகையை நாட்டிற்கு அற்பணித்ததாகவே எடுத்துக்கொள்வோம் நண்பரே!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான மடம் ஒன்று உள்ளது. நாங்கள் அதில்தான் தங்கினோம். அந்த பில்கூட வெகுநாட்களுக்குப் பத்திரப் படுத்தி வைத்திருந்தேன். Transfer ஆகி வரும்போது எங்கோ தொலைந்து விட்டது.
    காசிக்குச் செல்பவர்கள், காசியோடு சேர்த்து அருகிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்த்து வருவதற்குத் தகுந்த மாதிரி திட்டமிடுவது நல்லது. காசியில் இருந்து 1 மணி நேரப் பயணத்தில் சாரநாத் உள்ளது. இந்திய அரசுச் சின்னமான அசோகரின் ஸ்தூபி இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. உ.ப் முழுவதுமே இந்த மாதிரி முக்கியமான இடங்கள் / கோவில்கள் உண்டு. ஒரே குறை சுத்தம் பேணாத முரட்டு குணமுடைய மக்கள்.//////

    நீங்கள் சொல்லும் மடங்களின் முகவரியை எல்லாம் இப்போது நெட்டில் பிடித்துவிடலாம். நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. Blogger Rajaram said...
    நல்ல பதிவொன்றை வெளியிட்டுத் தூள் கிளப்பிவிட்டீர்கள்.நானும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் செட்டிநாட்டில் உள்ள கோவில்களைப்பற்றித் தெரிந்து கொண்டேன்.நான் நமது கீழச்செவல்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் நகரத்தார் கட்டளைக்குட்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.ஆனால் அது பற்றிய தகவல்கள் தங்களது பதிவில் இடம்பெறவில்லை.மேலும் காசி மாநகர் பற்றிய அறிய தகவல்களை அறிய வேண்டி ஆவலுடன் காத்திருக்கிறேன்.//////

    கீழச்சிவல்பட்டி என்று இல்லை. நகரத்தார் கிராமங்கள் மொத்தம் 75 அத்தனை கிராமங்களிலும் சிவன் கோவில்கள் உள்ளன. அதைப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன் நண்பரே!

    ReplyDelete
  33. ///Blogger kmr.krishnan said...
    எங்களுக்கு மஹாசங்கல்பம் செய்து வைக்கும் போது தான் இத்துணை தெய்வங்களின் பெயர்களையும் கூறுவார்கள்.எவ்வளவு கோயில் சுவாமிகளைக் குறிப்பிடுகிறார்களோ அவ்வளவுக்கு நமக்கு அனுக்கிர‌கம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதற்கேற்ற ஒரு பட்டியல் கொடுத்ததற்கு மிக்க நன்றி அய்யா!
    ஸ்ரீமங்களாம்பிகா ஸமேத ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி சன்னிதெள....
    (மங்க‌ளாம்பிகா உடனுறை ஐயாரப்பர் முன்னிலையில்)
    இதுபோல நிறைய க்ஷேத்ரத்தினைக் கூறுவார்கள்.
    2 செப்டம்பர் 2011 வெள்ளி அன்று பக்திமலரில் அடியேனின் "துறவின் மகத்துவம்" என்ற தலைப்பில் வகுப்பறையில் வெளீயான கட்டுரையில் காசி ராமேஸ்வர யாத்திரை பற்றிக் கூறியுள்ளதை வாசிக்க வேண்டுகிறேன்/////

    நல்லது. மேலதிகத்தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  34. ////Blogger kmr.krishnan said...
    //நாட்டுக்கு மாளிகையைக் கொடுத்தார்களா, நாட்டை மாளிகையாக்கிக் கொண்டார்களா என்பது விவாதத்துக்கு உரியது!!//
    ஆம்! இது விவாதத்திற்கு உரியதே.ஆனால் ஆனந்த பவனத்தை நாட்டுக்கு அளித்த முன் தலை முறை மீது இவ்வளவு பெரிய மெகா ஊழல் குற்றச்சாட்டெல்லம் சுமத்த முடியாது.
    நேரு என்ற நல்ல மனிதர்,தான் நம்பியதை ஒரு பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டுப் போய் விட்டார்.
    "Small is beautiful" என்பது அப்போது ஒரு பொருளாதாரக் கருத்தாக்கமாக உருவாகவில்லை.
    மனித ஆற்றலை அதிகம் பயமனித ஆற்றலை அதிகம் பயன்படுத்தும் பொருளாதாரமே வேண்டும்.இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் அப்படி ஒரு பொருளாதரக் கொள்கையுடைய‌வர்
    வருவாரோ? இனிமேல்//////
    //நாட்டுக்கு மாளிகையைக் கொடுத்தார்களா, நாட்டை மாளிகையாக்கிக் கொண்டார்களா என்பது விவாதத்துக்கு உரியது!!//

    ஆம்! இது விவாதத்திற்கு உரியதே.ஆனால் ஆனந்த பவனத்தை நாட்டுக்கு அளித்த முன் தலை முறை மீது இவ்வளவு பெரிய மெகா ஊழல் குற்றச்சாட்டை எல்லம் சுமத்த முடியாது. நேரு என்ற நல்ல மனிதர்,தான் நம்பியதை ஒரு பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டுப் போய் விட்டார்.
    "Small is beautiful" என்பது அப்போது ஒரு பொருளாதாரக் கருத்தாக்கமாக உருவாகவில்லை./////

    நேருஜி இருந்தவரை (அதாவது 17 ஆண்டு காலம்) நாட்டில் எந்த ஊழலும் இல்லாமல் இருந்தது!

    ReplyDelete
  35. /////Blogger முருகராஜன் said...
    "விஸ்வநாதா வேளை வேண்டும்” என்று கூத்தனுக்கான பாடல்!
    மிக அருமையாக ரசிக்கும்படி தங்களது நடையில் உள்ளது.
    மேலும் செட்டிநாடு சிவாலயங்கள் மற்றும் பிரசித்திபெற்ற சிவாலயங்கள்,12 ஜோதிர்லிங்கக் கோவில்கள் பற்றிய தகவல் பதிவில் மிக அருமையாக உள்ளது,
    தொடர்க தங்களது காசி பயணம் பற்றிய கட்டுரை,
    நன்றி./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  36. ///Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    ஆஹா அருமையான தகவல்கள் ஐயா.எனக்கும் வாரணாசிக்கு செல்ல மிகவும் ஆசை.காசி மற்றும் கயிலாயம் என் வாழ்நாளில் எப்படியாவது தரிசிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டே இருக்கிறேன்.தாங்கள் கூறியபடியே,விஸ்வநாதரிடம் இனி "வேளை"யை தர வேண்டுவேன்!////

    ஆகா, அப்படியே செய்யுங்கள். அவரருளால், உங்களுக்கு எல்லாம் கூடி வரும்!

    ReplyDelete
  37. ////Blogger Jawahar Govindaraj said...
    அய்யா, எனக்கு காசி வில்வ நாதர் 2000 ஆண்டில் வேலை நிமித்தமாக வாரணாசி செல்லும் போது வேளை கொடுத்து விட்டார். திரிவேணி சங்கமத்தின் அசுத்தம் காரணமாக கும்ப மேளாவின் போது குளிக்கவில்லை. ஆனால் தற்போது நினைத்து வருந்துகிறேன். மீண்டும் வேளை கொடுப்பாரா?
    -ஜவஹர் கோவிந்தராஜ்/////

    அதெல்லாம் கிடைக்கும். அடுத்து கிடைக்கும் வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!

    ReplyDelete
  38. /////Blogger Jagannath said...
    அய்யா. தங்களுடைய காசி பயணம் நல்ல விதமாக அமைந்ததில் மகிழ்ச்சி.
    இடைப்பட்ட காலத்தில் B.V.Raman அவர்களின் புத்தகங்கள் நிறைய வாங்கியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டும். அவர் பாடப் புத்தகம் எழுதும் நடையில் எழுதியவற்றை நீங்கள் சுவாரசியமான நடையில் எழுதுவதுதான் பலருக்கு சோதிடம் மீது ஒரு ஈர்ப்பை உண்டாக்குகிறது./////

    நான் புலிப்பாணி, குமாரசுவாமியம் போன்று கிடைத்த நூல்களை எல்லாம் படித்து மனதில் உள்வாங்கிக் கொண்டுள்ளேன். உள்வாங்கியதை என்னுடைய நடையில் எழுதுகிறேன். நான் ஒரு கதாசிரியன். கதை எழுதுவதைப் போல பாடங்களையும் எழுதுகிறேன்.சுவாரசியத்திற்கு அதுதான் முக்கிய காரணம்.

    ReplyDelete
  39. //////Blogger Thanjavooraan said...
    காசி யாத்திரை என்பது முந்தைய நாட்களில் மிகப்பெரிய சாதனை. கலைவாணர் கூட ஒரு படத்தில் கதையொன்று சொல்லுவார். இரட்டைக் காளை பூட்டிய ஒரு மாட்டு வண்டியில் ஒரு குடும்பம் காசி யாத்திரை சென்றதாம். பல மாதங்கள் கழிந்து வண்டியும் மாடும் திரும்ப வந்தது என்று கதை சொல்வார். அது ஒரு காலம். இப்போதெல்லாம் கங்கா காவிரி விரைவு வண்டி ஓடுகிறது. காசிக்குச் செல்பவர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த ஏதாவதொரு காய், பழம், உணவு வகை என்று ஏதாலுமொன்றை உண்பதை விட்டுவிடுவார்கள். பொதுவாகத் தங்களுக்குப் பிடிக்காத காய் எதையாவது சாமர்த்தியமாக விட்டுவிட்டு வருவார்கள். அதன் தத்துவம் அதுவல்ல. பற்று விடுதல் என்பது அதன் நோக்கம். நமக்கு அதிகமாக ஈடுபாடு உள்ள எதையாவது விடுதல் என்று. இதையெல்லாம் நான் ஏதாவது சொல்லப் போக நண்பர் கே.எம்.ஆர். நீங்கள் வேண்டுமானால் உயரர‌த்துக்குப் போய் இதையெல்லாம் விடுங்கள். வகுப்பு அறையில் நிறைந்திருப்போர் இளைஞர்கள். இனிதான் அவர்களுக்கு எதிர்காலமே. அவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டாம் என்பார். இங்கு நான் உபதேசம் செய்யவில்லை. இப்படியொரு பாரம்பரிய வழக்கம் உண்டு என்பதை நினைவு கூர்ந்தேன். ஆசிரியர் ஐயாவின் காசி யாத்திரை மனதில் உருவாக்கிய எண்ண அலைகளின் ஒரு பகுதி இது. நன்றி.///////

    நல்லது. உங்களின் எண்ணப் பகிர்விற்கு நன்றி சார்!

    ReplyDelete
  40. /////Blogger minorwall said...
    அலஹாபாத் திரிவேணி சங்கமம் படம் மகாநதித் திரைப்படத்தில் கல்கத்தாவில் இதேபோலே ஒரு படகுப் பயணத்தில் கமல் செல்லும்போது ஏதோ ஒரு வேற்றுமொழிப் பாடல் BGM ஆக வரும்..
    அந்தப்பாடல் நினைவுக்கு வந்துவிட்டது.. கேட்க ரொம்ப வித்தியாசமாகவும் மனதில் ஓர் இனம் புரியாத உணர்ச்சியையும் தோற்றுவிக்கும்.
    வாத்தியாரின் காசி யாத்திரைத் தொடரை தொடர விரும்புகிறேன்../////

    ஆகா, தொடர்ந்து படியுங்கள் மைனர்! நன்றி!

    ReplyDelete
  41. /////Blogger minorwall said...
    ஆமா? KMRK சாரும் Visu அய்யரும் சேர்ந்து ஒரு காசி ட்ரிப் அடிச்சா என்ன?/////

    நல்ல யோசனைதான். சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நேரம் கிடைக்க வேண்டுமே! நன்றி மைனர்!

    ReplyDelete
  42. Blogger kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    தங்களை ஒரு பதி இரண்டு ( 12 ) காலத்திற்கு முன்னர் அறிமுகம் ஆகாமல் போனது எனது அதிர்ஷ்ட இன்மை ஆகும். 1999 வருடம் மஹாலய அமாவாசை அன்று அடியவன் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தேன் ஐயா.
    அடியவனின் தந்தையார் இராணுவத்தில் வேலை செய்தமையால் ஒரு உறவினரின் தயவால் இராணுவ விடுதில் தங்கினேன் . கோவிலுக்கு கூட்டி சென்றது எல்லாம் ஒரு இராணுவ வீரர் தான் .
    நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூஜை கொள்ள வாராய் பராபரமே
    அன்பர் பனி செய்ய ஆளாக்கி விட்டு விட்டால் இன்ப நிலை தானே வந்து விடும் பராபரமே என்ற
    பாசுரத்தை மனதில் ஆழமாக வைத்து கொண்டு தலை முடி இறக்கி கங்கை ஆற்றில் பெரும் வெள்ளத்தில் மூழ்கி மனதார தந்தையார் மற்றும் தாத்தா ஆச்சியை மற்றும் முன்னோர்கள் அனைவரையும் நினைத்து
    தர்ப்பணம் கொடுத்து வந்தேன் , ஐயா.
    அன்ன பூரணி அம்மனையும் தரிசனம் செய்து விட்டு மறுநாள் திரி வேணி சங்கமத்திற்கு சென்று கங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் சங்கமம் ஆகும் இடத்திற்கு சென்று மனதார தந்தை மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நன்றாக தரிசனம் செய்து வந்தேன் ஐயா
    காசிக்கு சென்றால் தம்மிடம் உள்ள ஒன்றை விடவேண்டும் என்று கேள்வி பட்டமையால் பாகற்காயை விட்டு வந்தேன் . அதற்கு முன்னரே காப்பி , டீ , முதல் அசைவம் வரை அனைத்தினையும் விட்டு விட்டமையால் மிகவும் பிடித்த உணவாகிய பாகற்காயை விட்டு விட்டு வந்தேன் ஐயா .//////

    நல்லது உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  43. //////Blogger iyer said...
    /// நம்மவர்கள் தங்குவதற்கென்று சிவமடம் உண்டு, அந்த விவரங்களையும் கொடுத்தால், அங்கு போகிறவர்களுக்குப் பயன்படும்....///
    சிவமடம் உள்ளது
    அந்த இடத்திற்கு பெயர் தாராகஞ்
    தொடர்புக்கு
    திருசுந்தரம் அவர்களின் தொலைபேசி எண்,915322500799
    ஒரு குழுவாக வருவதை முன்னரே சொன்னால் அவர்களே ரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துச் செல்வர்கள்...
    தனிநபராக செல்பவர்கள் தாராகஞ்ச் காவல்நிலையம் வரை செல்லும் ஷேர் ஆட்டோவிலும் செல்லலாம்..
    மற்றதை வகுப்பறை வாத்தியாரும்
    மற்ற தோழர்களும் சொல்வார்கள்/////

    தகவலுக்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  44. ////Blogger iyer said...
    ///ஆமா? KMRK சாரும் Visu அய்யரும் சேர்ந்து ஒரு காசி ட்ரிப் அடிச்சா என்ன?.///
    ஆகா.. பேஷா...
    இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அய்யருக்கும் மகிழ்ச்சியே..
    உங்களைப் போலவே//////

    நல்லது. இதுதான் நட்பு மனப்பான்மைக்கு அடையாளம். நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  45. ////////Blogger Balaji said...
    அருமையான பதிவு. மேலும் விவரங்க்க்ளை எதிர்பார்கிறேன்.
    இப்படிக்கு
    வெங்கட்
    பின் குறிப்பு : என்னையும் உஙகள் மாணவர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்./////

    பதிவின் முகப்பில், Join this site என்னும் option உள்ளதே. அதன் பயன் படுத்திச் சேர்ந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  46. /////SP.VR. SUBBAIYA said...
    ////Blogger iyer said...
    ///ஆமா? KMRK சாரும் Visu அய்யரும் சேர்ந்து ஒரு காசி ட்ரிப் அடிச்சா என்ன?.///
    ஆகா.. பேஷா...
    இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அய்யருக்கும் மகிழ்ச்சியே..
    உங்களைப் போலவே//////

    நல்லது. இதுதான் நட்பு மனப்பான்மைக்கு அடையாளம். நன்றி விசுவநாதன்!/////////////

    நல்லது..நன்றி..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com