8.11.11

Astrology நீங்களும் உங்கள் சந்தேகங்களும்!

---------------------------------------------------------------------------------------
Astrology  நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பகுதி ஒன்று!

“சார், நான் ரிஷபலக்கினக்காரன். சுக்கிரன் எனக்கு லக்கினாதிபதி. அத்துடன் அவனே ஆறாம் இடத்திற்கும் அதிபதி. அவன் என்னுடைய  ஜாதகத்தில் 12ல் இருக்கிறான். அதாவது விரையத்தில் மறைந்துவிட்டான். ஆனால் நவாம் சத்தில் அவன் உச்சம் பெற்றுள்ளான். அவன் எனக்கு  ஹீரோவா? அல்லது வில்லனா?”

“இரண்டும்தான். இரண்டு இடங்களுக்கு அதிபதி என்னும் போது, அவன் இரண்டையுமே செய்வான்.”

“விளங்கவில்லையே சார்! ஒன்று ஹீரோ என்று சொல்லுங்கள். அல்லது வில்லன் என்று சொல்லுங்கள். ஏதாவது ஒன்றுதானே உண்மையாக இருக்கும்”

“உங்கள் வீட்டிற்கு நீங்கள் பிள்ளை. உங்கள் மாமனார் வீட்டிற்கு நீங்கள் மாப்பிள்ளை. அதில் ஏதாவது ஒன்றுதான் உண்மையா? அல்லது 
இரண்டுமே உண்மையா?”

“இரண்டுமே உண்மைதான்”

“அப்படித்தான் அதுவும். உங்கள் லக்கினத்திற்கு அவன் ஹீரோ. ஆறாம் வீட்டுக் காரியங்களுக்கு அவன் வில்லன். இரண்டு வீட்டு  வேலைகளையுமே அவன் கச்சிதமாகச் செய்வான். ஹீரோ என்பதால் வில்லன் வேலையை விட்டுக் கொடுக்க மாட்டான். இது எல்லாக்  கிரகங்களுக்கும் பொதுவான குணம்.”

“சரி, எப்போது செய்வான்?”

“தனது மகாதிசை, மற்றும் புத்திகளில் செய்வான்”

“ஒரே தசா புத்தியில் அவன் இரண்டு வேலைகளையும் எப்படிச் செய்ய முடியும்? ஏதாவது ஒன்றைத்தானே செய்ய முடியும்? அடுத்து எனக்கு
சுக்கிரபுத்தி வரவுள்ளது. அந்த புத்தியில் அவன் நன்மையைச் செய்வானா அல்லது தீமையைச் செய்வானா என்று எப்படித் தெரிந்து கொள்வது”

“இங்கே கோள்ச்சாரம் உங்களுக்கு உதவும். கோளாசாரச் சுக்கிரன் அல்லது சம்பந்தப்பட்ட கிரகத்தின் அன்றைய இருப்பிடம் (by placement) மற்றும் பார்வை (aspect) எந்த வீட்டின் மேல் விழுகிறதோ அந்த வீட்டிற்கான பலன்கள் கிடைக்கும். உதாரணத்திற்கு இன்றையத் தேதியில்  சுக்கிரன் கோச்சாரப்படி எங்கே இருக்கிறான் என்று படத்துடன் கீழே கொடுத்துள்ளேன். அதைப் பாருங்கள். இன்றையச் சுக்கிரன்  விருச்சிகத்தில் இருந்து கொண்டு உங்களுடைய லக்கினத்தைப் பார்க்கிறான். இப்போது அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் அது  நன்மையானதாக இருக்கும். இப்படித்தான் பார்க்க வேண்டும். விளக்கம் போதுமா?”



“இது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற வேலையாக இருக்கிறதே! குறுக்குவழி இல்லையா?”

“இருக்கிறது. அஷ்டகவர்க்கப் பாடம் நடத்தும்போது அதை எல்லாம் சொல்லித் தருகிறேன்”

“எப்போது துவங்கப் போகிறீர்கள்?

“விரிவாக எழுத வேண்டியதுள்ளது. தற்சமயம் நேரம் இல்லை! ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கலாம் என்றுள்ளேன். பொறுத்திருங்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------
1. மேஷ லக்கினத்திற்கு வில்லன் புதன் (6th Lord) அதோடு அவனே மூன்றாம் இடத்திற்கும் அதிபதி
2. ரிஷப லக்கினத்திற்கு வில்லன் சுக்கிரன் (6th Lord) அதோடு அவனே லக்கினாதிபதியும் ஆவான்.
3. மிதுன லக்கினத்திற்கு வில்லன் செவ்வாய் (6th Lord) அதோடு அவனே லாபாதிபதியும் (11th Lord) ஆவான்.
4. கடக லக்கினத்திற்கு வில்லன் குரு (6th Lord) அதோடு அவனே பாக்கியாதிபதியும் (9th Lord) ஆவான்.
5. சிம்ம லக்கினத்திற்கு வில்லன் சனி (6th Lord) அதோடு அவனே ஏழாம் வீட்டிற்கு அதிபதியும் (7th Lord) ஆவான்.
6. கன்னி லக்கினத்திற்கு வில்லன் சனி (6th Lord) அதோடு அவனே ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியும் (5th Lord) ஆவான்.
7. துலா லக்கினத்திற்கு வில்லன் குரு (6th Lord) அதோடு அவனே மூன்றாம் வீட்டிற்கு அதிபதியும் (3rd Lord) ஆவான்.
8. விருச்சிக லக்கினத்தற்கு வில்லன் செவ்வாய் (6th Lord) அதோடு அவனே லக்கினத்திற்கும் அதிபதி ஆவான்.
9. தனுசு லக்கினத்திற்கு வில்லன் சுக்கிரன் (6th Lord) அதோடு அவனே லாபாதிபதியும் (11th Lord) ஆவான்.
10. மகர லக்கினத்திற்கு வில்லன் புதன் (6th Lord) அதோடு அவனே பாக்கியாதிபதியும் (9th Lord) ஆவான்.
11. கும்ப லக்கினத்திற்கு வில்லன் சந்திரன் (6th Lord)
12.  மீன லக்கினத்திற்கு வில்லன் சூரியன் (6th Lord)
++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

43 comments:

  1. "தானே தன‌க்குப் பகையாவான்...." என்று சிவாஜி பாடுவதாக ஒரு தத்துவப் பாடல் உண்டு.

    'இர‌ண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன்.நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று'என்று பல்லவியோ? எனக்கு அவ்வளவா சினிமாப் பாடல் மனதில் நிற்பதில்லை.

    'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று சங்கப் பாடலும் கூறும்.

    கிரக‌ங்களும் அதைத்தான் சொல்லுகின்ற‌ன போலும்.

    தெளிவான நடை. மனதில் தங்கும் வண்ணம் சொல்வதில் வாத்தியாரை மிஞ்ச ஆள் கிடையாது.நன்றி அய்யா!

    ReplyDelete
  2. நன்றி ஐயா, மகர இலக்கினத்தில் பிறந்த எனக்கு, இந்தப் பாடம் மூலம் தெரிந்து கொண்டது அடுத்த தசா புக்தி நடக்கும் பொழுது பெரிதும் உதவும்.

    ReplyDelete
  3. ஒ....படம் புரியுது ...புரியுது.. டான் ஷாருக் மாதிரி ஆறாம் வீட்டின் கிரகமே நீங்க நல்லவரா? கெட்டவரா? அப்படித்தானே ஐயா?

    ReplyDelete
  4. "Because I don't want any of those bitches sleeping with your father after I'm gone."

    அருமை...

    இன்றையப் பாடமும் நன்று...
    நன்றிகள் அய்யா!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  5. மங்காத்தா படத்தில் அஜித் சொல்லுவது நினைவுக்கு வருகிறது - "நானும் நல்லவனா எத்தனை நாளைக்கு தான் நடிக்கிறது"

    ReplyDelete
  6. இதைப் படிக்கும்போது 'ஒரே மனிதர்' நடத்தும் ஹோட்டல் உதாரணம் ஞாபகத்துக்கு வருகிறது. அவரே கல்லாவிலும் உட்காருவார். 'ஒரு ரவா தோசை , ஒரு காபி' என்று சத்தம் போட்டுவிட்டு, அடுக்களைக்குச் சென்று அதையும் அவரே செய்து, எடுத்து வந்து பரிமாறி, இடத்தைச் சுத்தம் செய்து, .... (one-man show - he is the boss and he is the worker)

    உதாரணங்களுடன் இந்தப் பாடம் மிக அருமை. நன்றி

    ReplyDelete
  7. Guru Vanakkam,

    Thanks for the lesson.
    Is it true that Mars dasa as 5th dasa will produce bad results ?

    Regards
    Ramadu.

    ReplyDelete
  8. Ayya Vannakkam,

    Hero vum avan,Villanum avan enna seyya? Ellam vangi vantha varam.

    Nanri ayya.

    Sengotaian.P.K.
    Tirupur

    ReplyDelete
  9. //'தீதும் நன்றும் பிறர் தர வாரா' //

    Pirar thara vendam, nane 6aam idathukarane irandayum koduppan pola.

    ReplyDelete
  10. ஓ.. அஷ்டக வர்க்கத்தில் எந்த வீட்டுக்கு அதிக பரல்களோ அந்த வீட்டிற்கு அதிக நல்ல பலன்களையும் அதைவிடக் குறைவான பரல்கள் உள்ள வீட்டிற்கு குறைந்த நல்ல பலன்களும் விளையும்...

    அப்படித்தானே அய்யா..?

    பாடம் நன்று.

    ReplyDelete
  11. nice post sir expecting ashtavarga lessons in detail

    (www.astrologicalscience.blogspot.com)

    ReplyDelete
  12. Respected Sir,

    Lesson is superb and I need one clarification in the given example. What will be the result if 8 or 12th house lord (for Taurus lakna) in Taurus when venus in scorpio and its aspect in Taurus?

    Pls kindly clarify sir,

    With regards,
    Ravi

    ReplyDelete
  13. நன்றி ஐயா,
    மிக அருமையான & அவசியமான பாடம்,
    மேலும் ஒரு சந்தேகம் புத்தி நாதன் கோள்ச்சாரத்தில் வேறு நிலைகளில் இருந்து மற்ற இடங்களான கேந்திர,திரிகோண&2,11 இடங்களை பார்க்கும்போது ஹிரோவகவும்,மறைவிடங்களை பார்க்கும்போது வில்லனாகவும் எடுத்துக்கொள்ளலாம!

    விளக்கினால் மிக அருமையக இருக்கும்,

    மிக்க நன்றி.

    ReplyDelete
  14. வாத்தியாருக்கு வணக்கம்..
    இன்னிக்குப் பாடத்தில் சொல்லவந்ததை சொல்லியும் சொல்லாமலும் சொன்னதாக உணர்கிறேன்..
    'அட..என்னதாம்ப்பா சொல்றே?'ன்னு கேக்குறீங்களா?
    placement or by aspect of transiting planet மேட்டரை நட்டால் சார்ட்ட்டோட சுப்பெரிம்போஸ் பண்ணனும்ன்னு சொல்லிட்டேள்..
    உதாரணமும் சொல்லிட்டேள்..எப்புடி பலன் நடக்கும் என்னா எதுன்னு ஒண்ணுமே புரியலை..

    ReplyDelete
  15. ///அவரே கல்லாவிலும் உட்காருவார். 'ஒரு ரவா தோசை , ஒரு காபி' என்று சத்தம் போட்டுவிட்டு, அடுக்களைக்குச் சென்று அதையும் அவரே செய்து, எடுத்து வந்து பரிமாறி, இடத்தைச் சுத்தம் செய்து, .... ///

    'சூப்பர்' ஸ்ரீனிவாச ராஜுலு காரு!நல்ல நகைச்சுவை. இப்படி அடிக்கடி கலகலக்கப் பண்ணுங்கள்.இதுபோல 'டைமிங் சென்சும்', மொழி ஆற்றலும் நகைச்சுவைக்கு மிகவும் அவசியம்.உங்களுக்கு அது இருக்கிறது. மேலும் இது போல நகைசுவை 'டயலாக்' தாருங்கள்.வரவேற்கிறோம்.

    ReplyDelete
  16. அய்யா,

    நீங்களூம் உங்கள் சந்தேகஙளூம் பகுதிக்கு மிக்க நன்றீ,
    வில்லன் 6 ம் அதிபதி, 8ம் அதிபதி , 12ம் வீட்டு அதிபதிகளே
    கோண, கேந்திர இடங்களில் அமரும் போது தீமைகள் குறந்து நன்மைகளே
    அதிகம் செய்வாரா?
    உஙளின் இந்த புதிய பகுதி தொடர வேண்டுகிரோம்.
    சந்தனக்குழலி நாகரஜன்

    ReplyDelete
  17. //////Blogger kmr.krishnan said...
    "தானே தன‌க்குப் பகையாவான்...." என்று சிவாஜி பாடுவதாக ஒரு தத்துவப் பாடல் உண்டு.
    'இர‌ண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன்.நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று'என்று பல்லவியோ? எனக்கு அவ்வளவா சினிமாப் பாடல் மனதில் நிற்பதில்லை.
    'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று சங்கப் பாடலும் கூறும்.
    கிரக‌ங்களும் அதைத்தான் சொல்லுகின்ற‌ன போலும்.
    தெளிவான நடை. மனதில் தங்கும் வண்ணம் சொல்வதில் வாத்தியாரை மிஞ்ச ஆள் கிடையாது.நன்றி அய்யா!///////

    உங்களின் பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  18. ////Blogger Shyam Prasad said...
    மிக்க நன்றி./////

    நல்லது நண்பரே!

    ReplyDelete
  19. ////Blogger தேமொழி said...
    நன்றி ஐயா, மகர இலக்கினத்தில் பிறந்த எனக்கு, இந்தப் பாடம் மூலம் தெரிந்து கொண்டது அடுத்த தசா புக்தி நடக்கும் பொழுது பெரிதும் உதவும்.//////

    நல்லது. உங்களின் உள்ளப்பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. //////Blogger தேமொழி said...
    ஒ....படம் புரியுது ...புரியுது.. டான் ஷாருக் மாதிரி ஆறாம் வீட்டின் கிரகமே நீங்க நல்லவரா? கெட்டவரா? அப்படித்தானே ஐயா?/////

    ஆமாம். ஆமாம்.கரெக்டாகப் பிடித்துக்கொண்டுவிட்டீர்கள்! நன்றி!

    ReplyDelete
  21. /////தமிழ் விரும்பி said...
    "Because I don't want any of those bitches sleeping with your father after I'm gone."
    அருமை...
    இன்றையப் பாடமும் நன்று...
    நன்றிகள் அய்யா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  22. ///////Blogger Trading Options said...
    மங்காத்தா படத்தில் அஜித் சொல்லுவது நினைவுக்கு வருகிறது - "நானும் நல்லவனா எத்தனை நாளைக்கு தான் நடிக்கிறது"///////

    நல்லது. உங்களின் விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. //////Blogger Srinivasa Rajulu.M said...
    இதைப் படிக்கும்போது 'ஒரே மனிதர்' நடத்தும் ஹோட்டல் உதாரணம் ஞாபகத்துக்கு வருகிறது. அவரே கல்லாவிலும் உட்காருவார். 'ஒரு ரவா தோசை , ஒரு காபி' என்று சத்தம் போட்டுவிட்டு, அடுக்களைக்குச் சென்று அதையும் அவரே செய்து, எடுத்து வந்து பரிமாறி, இடத்தைச் சுத்தம் செய்து, .... (one-man show - he is the boss and he is the worker)
    உதாரணங்களுடன் இந்தப் பாடம் மிக அருமை. நன்றி//////

    கரெக்ட். அவரே தான். ஆனால் கிரகங்கள் தோசைக்கல்லில் நம்மைப் போட்டுப் புரட்டி எடுக்கும், மாவிற்குப் பதிலாக! பசியாவது. ஒன்றாவது. விட்டால் போதும் என்று ஓடிவந்துவிடுவோம்!

    ReplyDelete
  24. /////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Thanks for the lesson.
    Is it true that Mars dasa as 5th dasa will produce bad results ?

    Regards
    Ramadu.//////

    சிம்மம் & கடக லக்கினங்களுக்கு செவ்வாய் யோககாரகன். அவனுடைய திசையில் ஐந்து ஆறு என்ற வரிசைக் கணக்கில்லாமல் இதுபோன்ற விதிவிலக்குகள் உண்டு!

    ReplyDelete
  25. //////redfort said... Ayya Vannakkam,
    Hero vum avan,Villanum avan enna seyya? Ellam vangi vantha varam.
    Nanri ayya.
    Sengotaian.P.K.
    Tirupur//////

    இந்தப் புரிதல் இருந்தால் போதும். ஒரு கவலையும் இருக்காது!

    ReplyDelete
  26. //////Blogger RAMADU Family said...
    //'தீதும் நன்றும் பிறர் தர வாரா' //
    Pirar thara vendam, nane 6aam idathukarane irandayum koduppan pola.//////

    ஆமாம். நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. //////Blogger Govindasamy said...
    ஓ.. அஷ்டக வர்க்கத்தில் எந்த வீட்டுக்கு அதிக பரல்களோ அந்த வீட்டிற்கு அதிக நல்ல பலன்களையும் அதைவிடக் குறைவான பரல்கள் உள்ள வீட்டிற்கு குறைந்த நல்ல பலன்களும் விளையும்...
    அப்படித்தானே அய்யா..?

    பாடம் நன்று.//////

    அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் சில விதிகள் உள்ளன. அது பாடத்தில் வரும்!

    ReplyDelete
  28. ///////Blogger eswari sekar said...
    lesson nanrga erunthu/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  29. ////////Blogger ravichandran said...
    Respected Sir,
    Lesson is superb and I need one clarification in the given example. What will be the result if 8 or 12th house lord (for Taurus lakna) in Taurus when venus in scorpio and its aspect in Taurus?
    Pls kindly clarify sir,
    With regards,
    Ravi////////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு பலன் சொல்வது தவறாகிவிடும்! முழு ஜாதகத்தையும் வைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  30. ////////Blogger முருகராஜன் said...
    நன்றி ஐயா,
    மிக அருமையான & அவசியமான பாடம்,
    மேலும் ஒரு சந்தேகம் புத்தி நாதன் கோள்ச்சாரத்தில் வேறு நிலைகளில் இருந்து மற்ற இடங்களான கேந்திர,திரிகோண& 2,11 இடங்களை பார்க்கும்போது ஹிரோவகவும்,மறைவிடங்களை பார்க்கும்போது வில்லனாகவும் எடுத்துக்கொள்ளலாம!
    விளக்கினால் மிக அருமையாக இருக்கும்,
    மிக்க நன்றி.//////

    இப்படி உதிரியாக நாமே விதிகளை நிர்ணயம் செய்ய முடியாது.

    ReplyDelete
  31. ///////Blogger minorwall said...
    வாத்தியாருக்கு வணக்கம்..
    இன்னிக்குப் பாடத்தில் சொல்லவந்ததை சொல்லியும் சொல்லாமலும் சொன்னதாக உணர்கிறேன்..
    'அட..என்னதாம்ப்பா சொல்றே?'ன்னு கேக்குறீங்களா?
    placement or by aspect of transiting planet மேட்டரை நட்டால் சார்ட்ட்டோட சுப்பெரிம்போஸ் பண்ணனும்ன்னு சொல்லிட்டேள்..
    உதாரணமும் சொல்லிட்டேள்..எப்புடி பலன் நடக்கும் என்னா எதுன்னு ஒண்ணுமே புரியலை..///////

    கிரகத்தின் சுயவர்கப்பரல் தற்சமயம் அது இருக்கும் இடத்தில் 5ம் அல்லது அதற்கு மேலும் இருந்தால் அதிக அளவு நன்மைகள் இருக்கும்
    4 இருந்தால் சராசரியாக இருக்கும். அதற்குக் கீழே இருந்தால் குறைவாக இருக்கும். இது நன்மைக்கு. தீமைக்கு ரிவர்சில் நடக்கும்.

    பரல்கள் குறையக்குறைய தீமைகள் அதிகமாகிக் கொண்டே போகும்!

    ReplyDelete
  32. அதே ஆறாம் அதிபதி ஆறில் மறைந்தால் நல்லதா அல்லது தியதா....?

    ReplyDelete
  33. /////////SP.VR. SUBBAIYA said...


    ///////Blogger minorwall said...
    வாத்தியாருக்கு வணக்கம்..
    இன்னிக்குப் பாடத்தில் சொல்லவந்ததை சொல்லியும் சொல்லாமலும் சொன்னதாக உணர்கிறேன்..
    'அட..என்னதாம்ப்பா சொல்றே?'ன்னு கேக்குறீங்களா?
    placement or by aspect of transiting planet மேட்டரை நட்டால் சார்ட்ட்டோட சுப்பெரிம்போஸ் பண்ணனும்ன்னு சொல்லிட்டேள்..
    உதாரணமும் சொல்லிட்டேள்..எப்புடி பலன் நடக்கும் என்னா எதுன்னு ஒண்ணுமே புரியலை..///////

    கிரகத்தின் சுயவர்கப்பரல் தற்சமயம் அது இருக்கும் இடத்தில் 5ம் அல்லது அதற்கு மேலும் இருந்தால் அதிக அளவு நன்மைகள் இருக்கும்
    4 இருந்தால் சராசரியாக இருக்கும். அதற்குக் கீழே இருந்தால் குறைவாக இருக்கும். இது நன்மைக்கு. தீமைக்கு ரிவர்சில் நடக்கும்.

    பரல்கள் குறையக்குறைய தீமைகள் அதிகமாகிக் கொண்டே போகும்!//////////////


    நன்றி..அய்யா..புரிந்து புரியாததுபோலே இருக்கிறது..தொடர்ந்து தொந்தரவு கொடுக்க நினைக்கவில்லை..


    இதுகுறித்து அஷ்ட்ட வர்க்கத்தில் விளக்கமாக நடாத்துகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்..


    நானும் பொறுத்திருந்து விளக்கமாக அப்போது தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்..

    ReplyDelete
  34. எப்படி பார்த்தாலும் 6ம் அதிபதிதான் ஒரு ஜாதகத்தின் வில்லன் என்று சொல்கிறீகள் என்பது புரிகிறது.

    ReplyDelete
  35. அஷ்டவர்க்கம் என்று சொல்லி சொல்லி suspense எ அதிகமாக்கிட்டே இருக்கிறிங்க

    ReplyDelete
  36. /////Blogger santhanakuzhali said...
    அய்யா,
    நீங்களூம் உங்கள் சந்தேகஙளூம் பகுதிக்கு மிக்க நன்றி, வில்லன் 6 ம் அதிபதி, 8ம் அதிபதி , 12ம் வீட்டு அதிபதிகளே கோண, கேந்திர இடங்களில் அமரும் போது தீமைகள் குறந்து நன்மைகளே அதிகம் செய்வாரா?
    உங்களின் இந்த புதிய பகுதி தொடர வேண்டுகிரோம்.
    சந்தனக்குழலி நாகரஜன்/////

    அதுபோன்ற ஆதிபத்தியம் கிடைக்கும்போது, அவர்களால் உண்டாகவிருக்கும் தீமைகள் வெகுவாகக் குறைந்து விடும்!

    ReplyDelete
  37. //////Blogger vidya pathi said...
    அதே ஆறாம் அதிபதி ஆறில் மறைந்தால் நல்லதா அல்லது தியதா....?/////

    ஆறாம் அதிபதிக்கு அந்த வீடுதானே சொந்த வீடு? தன் வீட்டிலேயே அவர் எப்படி மறைவார்? என்ன சொல்ல வருகிறீர்கள்?

    ReplyDelete
  38. //////Blogger minorwall said...
    /////////SP.VR. SUBBAIYA said...
    ///////Blogger minorwall said...
    வாத்தியாருக்கு வணக்கம்..
    இன்னிக்குப் பாடத்தில் சொல்லவந்ததை சொல்லியும் சொல்லாமலும் சொன்னதாக உணர்கிறேன்..
    'அட..என்னதாம்ப்பா சொல்றே?'ன்னு கேக்குறீங்களா?
    placement or by aspect of transiting planet மேட்டரை நட்டால் சார்ட்ட்டோட சுப்பெரிம்போஸ் பண்ணனும்ன்னு சொல்லிட்டேள்..
    உதாரணமும் சொல்லிட்டேள்..எப்புடி பலன் நடக்கும் என்னா எதுன்னு ஒண்ணுமே புரியலை..///////
    கிரகத்தின் சுயவர்கப்பரல் தற்சமயம் அது இருக்கும் இடத்தில் 5ம் அல்லது அதற்கு மேலும் இருந்தால் அதிக அளவு நன்மைகள் இருக்கும்
    4 இருந்தால் சராசரியாக இருக்கும். அதற்குக் கீழே இருந்தால் குறைவாக இருக்கும். இது நன்மைக்கு. தீமைக்கு ரிவர்சில் நடக்கும்.
    பரல்கள் குறையக்குறைய தீமைகள் அதிகமாகிக் கொண்டே போகும்!//////////////
    நன்றி..அய்யா..புரிந்து புரியாததுபோலே இருக்கிறது..தொடர்ந்து தொந்தரவு கொடுக்க நினைக்கவில்லை..
    இதுகுறித்து அஷ்ட்ட வர்க்கத்தில் விளக்கமாக நடாத்துகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்..
    நானும் பொறுத்திருந்து விளக்கமாக அப்போது தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்..//////

    நல்லது. அப்படியே செய்யுங்கள் மைனர்!

    ReplyDelete
  39. //////Blogger ananth said...
    எப்படி பார்த்தாலும் 6ம் அதிபதிதான் ஒரு ஜாதகத்தின் வில்லன் என்று சொல்கிறீர்கள் என்பது புரிகிறது.////

    ஆமாம். நண்பரே!

    ReplyDelete
  40. //////Blogger Raja said...
    அஷ்டவர்க்கம் என்று சொல்லி சொல்லி suspenseஐஎ அதிகமாக்கிக்கிட்டே இருக்கிறிங்க/////

    சஸ்பென்ஸ் இல்லையென்றால் வழ்க்கையே சுவைக்காது ராசா!

    ReplyDelete
  41. Iya enakku lagnathil bhudan, irandil sani and sooriyan joind and 6th house guru uchhcam...
    Enakku sani dasai nallatha or kettatha....

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com