சங்கே முழங்கு; நல்ல தமிழை வழங்கு!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++உட்தலைப்பு: கண்மணி கையைவைத்தால் கலக்காமல் போனதில்லை!
மாணவர் மலர் (பிரதி ஞாயிறு தோறும்)
மலர் எண். ஒன்று
தேதி 23.11.2011
-------------------------------------
வரவேற்புக் கவிதை!
கொடியில்பூக்காத வாசமலர்
கொள்ளைகொள்ளும் செய்திமலர்
தோள்கொடுப்போம் வாருங்கள்
துவங்கிவிட்டது மாணவர்மலர்!
தஞ்சாவூரார் - எங்கள்
தலைவர், வழிகாட்டி!
மாணவர் மலருக்கு
அவர்தான் ஒளிகாட்டி!
அலசலில் விடுபடும்
கிரகச் சாரங்களை
ஆனந்தமாய் எடுத்துரைப்பார்
மலேசிய ஆனந்த்!
தமிழுக்கு பெயர் செம்மொழி
ஜாதக அலசலுக்கு தேமொழி!
மாண்புமிகு மைனர்வாள்
வகுப்பிற்கு அவரே போர்வாள்!
பொறுப்பான பகர்வுகளைத் தரும்
பொன்னான கே.எம்.ஆர்.கே.
என்றும் தொடரட்டும்
அவரது ஆக்கம்!
எல்லோரும் வாருங்கள்;
எல்லாம் நன்மைக்கே!
விடுபட்டோரும் வாருங்கள்
விருப்பமுள்ளோரும் வாருங்கள்
நோக்கத்தை மாற்றாமல்
நேர்கொண்டு செல்லும்
ஆசானின் மனம் வாழ்க/
அவர்தம் சேவை வளர்க //
---ஆக்கம் தனூர்ராசிக்காரன், Brunei ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சந்தனு மகராஜா - மீனவப் பெண்ணுடன் இருக்கும் காட்சி
படத்தை வரைந்தவர் -
படத்தை வரைந்தவர் -
இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்ட ஓவியர்
ராஜா ரவிவர்மா!
நியாயம் எது? தர்மம் எது?
பொதுவாக நாட்டில் அவரவரும் ஏதாவதொரு வகையில் தங்களுக்குள் சிலவற்றை நியாயம் என்றும், மற்றவற்றை அநியாயம் என்றும் நினைக்கிறார்கள். அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. அவற்றைச் சேர்ந்தவர்கள், தங்கள் கட்சி சொல்வதுதான் நியாயம், மற்றவை அநியாயம் என்று நினைக்கின்றனர். எனக்கு நியாயமாகத் தோன்றுவது மற்றவருக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. இது எதனால்?
நியாயம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு. நியாயம் என்பது நம்மளவில், நம் பார்வையில், நம் அனுபவத்தில் உணர்ந்து சொல்வது; தர்மம் என்பது எல்லோருக்கும், எல்லா நிலைகளிலும், எப்போதும் சரியாக இருப்பது. என்னை அடித்தவனை நான் திரும்ப அடிப்பதுதான் நியாயம் என்று நான் நினைக்கிறேன். இல்லை! யாரையும், எவரையும், எதற்காகவும் தண்டிப்பது என்பது எனது தர்மமல்ல என்று பிறர் நினைக்கின்றனர். தர்மத்தை நிலைநாட்டுவதற்கென்று ஆண்டவன் இருக்கிறான்; தர்மம் உணர்ந்த பெரியோர்கள் இருக்கின்றனர். தனி மனிதனைப் பொறுத்தவரை அவரவர்க்கு நியாயமாகப் படுவதைச் செய்வதுதான் சரி.
மகாபாரதம் அனைவரும் அறிந்த கதை. அதில் சந்தனு மகாராஜாவின் வாரிசுகள் ராஜ்யபாரத்தை நிர்வகித்து வருகிறார்கள். சந்தனுவின் காதலை அங்கீகரித்து, ஒரு மீனவப் பெண்ணின் தந்தைக்குக் கொடுத்த வாக்கை நிலைநாட்ட, தர்மத்தைக் காக்க, சந்தனுவின் மகன் தேவவிரதன் (பீஷ்மன்) ராஜ்யத்தை அந்த மீனவப் பெண்ணின் வாரிசுகளுக்கு விட்டுக் கொடுத்து விட்டான். தன் வாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தான் திருமணம் செய்து கொள்ளாமல் நைஷ்டிக பிரம்மச்சரியத்தை மேற்கொள்ளுகிறான்.
அந்த மீனவப் பெண்ணான சத்தியவதிக்கும் சந்தனுவுக்கும் சித்திராங்கதன், விசித்திரவீரியன் என இரு பிள்ளைகள் பிறந்தனர். சந்தனு இறந்தபின் தான் கொடுத்த வாக்குறுதிப்படி தேவவிரதன் தன் தம்பியான சித்திராங்கதனை அரசனாக்கினான். அவன் சீக்கிரத்தில் இறந்து போனான். அதன்பின், அவனுடைய தம்பி விசித்திர வீரியனை சிம்மாசனம் ஏற்றினான்.
அப்போது காசியை ஆண்ட அரசனுக்கு மூன்று பெண்கள் இருந்தனர். அவர்கள் அம்பா, அம்பிகா, அம்பாலிகா. இவர்களுக்குத் திருமணத்துக்காகச் சுயம்வரம் நடந்தது. தன் தம்பிகளுக்காக தேவவிரதன் தம்பிகளோடு சுயம்வரத்துக்குச் சென்றார். அங்கு வந்திருந்த ராஜகுமாரர்களுக்கும் தேவவிரதனுக்கும் சண்டை மூண்டது. தேவவிரதன் வெற்றி பெற்றார். அந்தப் பெண்கள் மூவரில் இருவரைத் தன் தம்பிகளுக்கு மணமுடித்தார். அதில் பிறந்த மக்களில் ஒருவன் கண்தெரியாத திருதராஷ்டிரன். மற்றவன் பாண்டு. தாதி ஒருவள் மூலம் பிறந்தவர் விதுரன்.
முறைப்படி, நியாயப்படி, வம்சத்தில் மூத்தமகனான திருதராஷ்டிரன் நாட்டை ஆளவேண்டும். ஆனால், பாவம் அவனுக்குக் கண் தெரியாது. ஆகையால் நியாயப்படி அவனுக்கு ஆட்சி இல்லை. அவன் தம்பி பாண்டு அரசனாக ஆனான். மூத்தவனும், கண் தெரியாதவனும், ஆட்சிக்கு உரிமையுடைய வனுமான திருதராஷ்டிரனுக்கு துரியோதனாதியர் நூறு பேரும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. இளையவன் பாண்டுவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தது, அவனுக்கு ஐந்து பிள்ளைகள் உண்டு.
பாண்டு இறந்த பிறகு ஆட்சி யாருக்கு? மூத்த மகனான திருதராஷ்டிரனுடைய பிள்ளைகளான துரியோதனனுக்கா? ஆட்சியில் இருந்து இறந்து போன பாண்டுவின் மூத்த மகன் தர்மனுக்கா? எது நியாயம்? எது தர்மம்?
இந்தச் சிக்கல் கடைச்சோழர்களான விஜயாலயன் பரம்பரையிலும் தோன்றியது. கண்டராதித்த சோழன் இறந்த போது சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார். அவர் இறந்த பிறகு அவருடைய மகனான அருண்மொழி வர்மன் என்கிற ராஜராஜசோழன் பதவிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அவருடைய சித்தப்பா உத்தம சோழன் இருந்ததால், அவரே பதவிக்கு வரட்டும் என்று அருண்மொழித்தேவன் விலகிக் கொண்டு சித்தப்பாவை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தார்.
தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களில் துளஜேந்திர ராஜாவுக்குப் பிள்ளைகள் பிறந்து தங்கவில்லை. அனைத்தும் இறந்து போயின. என்ன செய்வது? மராட்டியத்துக்குச் சென்று சரபோஜியை வாரிசாகத் தத்து எடுத்துக் கொண்டு வந்தார். அந்தப் பையன் சரபோஜிதான் அரசனாவான் என்று நினைத்த போது, துளஜேந்திரனின் தம்பி முறையில் அமரசிம்மன் (அமர்சிங்) என்பவர் இருப்பது தெரிந்தது. அப்படியானால் அவர்தானே ஆட்சிக்கு வரவேண்டும். ஆங்கில கம்பெனியார் அமரசிம்மனை அரசனாக்கினார்கள். சரபோஜி ஆட்சிக்கு வரும்வரை அமர்சிங்தான் காபந்து அரசை நடத்தினான். இது நியாயம், தர்மம் இதில் எந்த வகையைச் சேர்ந்தது?
இது நியாயம் மட்டுமல்ல, தர்மமும் கூட. இப்படி நியாயமும் தர்மமும் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளவும் சில நேரங்களில் சந்தர்ப்பம் அமைந்து விடுகிறது. ஆகவே நியாயமாக நடந்து கொள்வதாக நினைத்து சில நேரங்களில் தர்மத்துக்கு எதிராகவும் போய்விட நேர்ந்து விடுகிறது. தரமம் என்று சொல்லும்போது சில நேரங்களில் நியாயத்துக்குப் புறம்பாகவும் போகும்படி ஆகிறது.
ஆகவே நியாயமும், தர்மமும் அவரவர்க்கு நேரும் சந்தர்ப்பங்களை யொட்டி எதையாவது ஒன்றைக் கடைப்பிடிப்பதுதான் நியாயம், அல்ல அல்ல, தர்மம். என்ன குழப்பமாக இருக்கிறதா? இதைத்தான் ஆங்கிலத்தில் Subjective consideration என்பர். இந்தக் கட்டுரையின் நீதி என்னவென்றால், நியாயவான் முழுவதும் தர்மவானாக முடியாது; தர்மவான் முழுவதும் நியாயவானாக முடியாது. எதையோ மனதில் வைத்துக் கொண்டு இதை நான் எழுதவில்லை. நியாயம் சில நேரங்களிலும், தர்மம் சில நேரங்களிலும் வெற்றி பெற்று விடுகிறது. இவ்விரண்டுக்கும் மோதல் ஏற்படும் போதுதான் பிரச்சினை தொடங்குகிறது. அதனால் இவ்விரண்டின் மாறுபாட்டை இங்கே விளக்கிச் சொன்னேன்.
ஆக்கம்: மாணவர் மலரின் ஆலோசகர், மதிப்பிற்குரிய பெரியவர்.
V. கோபாலன், தஞ்சாவூர்
---------------------------------------------------------------------------------------------------------------------
பெண்கள் முதலில் (Ladies First)
முதல் ஆக்கத்தைத் தருகிறார் மாணவி தேமொழி
இணையத்தின் எதிர்காலம்
இணையத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? ... இணையத்தின் ஜாதகம் அதைப் பற்றி என்ன சொல்கிறது?(இணையத்தின் எதிர்காலமா? இணையத்திற்கு ஜாதகமா? என்ன உளறுகிறாய்? என்று கேட்கும் வகுப்பறைக் கண்மணிகள் இப்பொழுதே பதிவை விட்டு விலகிக் கொள்ளலாம்.......ஹி. ஹி. ஹீ....சும்மா ...சும்மா.... வாத்தியார் மாதிரி நினைச்சுக்கிட்டு......ஒரு சின்ன அலம்பல் ஹிஹி. ஹீ :))))))
ஸ்டீபன் ஸ்டேநெட்டைப் (Stefan Stenudd) பற்றி உங்களுக்குத் தெரியும். வகுப்பறையில் ஆசிரியர் அவரை அறிமுகப் படுத்தியுள்ளார். "அமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்?" என்று தலைப்பிடப்பட்ட வகுப்பில் (http://classroom2007.blogspot.com/2008/10/blog-post_19.html) அமெரிக்க பொருளாதாரச் சீர் குலைவு பற்றிய அவரது ஆய்வைப் படித்து விவாதித்தது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். எதேச்சையாக ஒரு வகுப்பறை பாடத்தை தேடியபொழுது, நம் ஆசாமி புன்னகையுடன் எதிர்பட்டார். சரி, அவர் சொன்னது நடந்ததா? மேற்கொண்டு நிதிநிலை சிக்கலைப் பற்றி என்ன கருத்து சொல்கிறார் என்று ஆவலுடன் அவர் இணைய தளத்தை எட்டிப் பார்த்த பொழுது, அவர் சமீபத்தில்...சென்ற மாதம்... இணையத்தின் எதிர்காலத்தைப் பற்றி எழுதியுள்ளதைப் படிக்க நேர்ந்தது. இணையத்தின் எதிர்காலம்
http://www.horoscoper.net/horoscopes/future-internet-world-wide-web-horoscope.htm
இந்தப் பதிவின் தலைப்பிற்கு ஏற்ப, இணையத்தின் எதிர்காலம் பற்றிய கணிப்புப் பகுதி மட்டுமே இங்கே மொழியாக்கம் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. ஸ்டீபன் ஸ்டேநெட் தன் பதிவில் இணையத்தின் ஜாதக அலசவும் செய்கிறார். அதை முழுவதுமாக அறிய விரும்புபவர்கள் மூலக்கட்டுரையைப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த அலசல் சூரிய ராசிகளின் அடிப்படையில் கணிக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.
Event: Origin of the Internet
Birth Time: born on August 6, 1991 at 4:37 PM CEST (Central European Summer Time)
Time Zone: UTC/GMT +1 hour
Daylight Saving Time: Yes
Birth Place, Geneva, Switzerland
Latitude: 46.14' North
Longitude: 6.04' East
இணையத்தின் எதிர்காலம்
கணித்தவர், ஸ்டீபன் ஸ்டேநெட்
-----------------------------------------------------------------
இணையத்தின் எதிர்காலம் அது நமக்கு எவற்றை அளித்தது, எவற்றை வழங்கத் தவறியது என்பதைப் பொருத்தே அமையும். அடுத்த ஆண்டின் தொடக்கம் முதல் தொடர்ந்து வரும் ஐந்தாண்டுகளில் (2012 முதல் 2017) இணையம் வெகு வேகமான மாறுதலை அடையும். பிறகு 2015 ம் ஆண்டு முதல் அழிவுப் பாதையை நோக்கி செல்லும் இணையத்தின் முடிவு 2040க்குள் முற்றுப்பெறும்.
ஜெனீவா நகரில் உள்ள "செர்ன்"/CERN (Conseil European pour la Recherche Nuclaire (as it called in French), or European Council for Nuclear Research (in English) குழுவைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி "டிம் பெர்னர்ஸ்-லீ" (Tim Berners-Lee) ஆகஸ்ட் 6, 1991 அன்று மாலை 4:37 PM மணிக்கு, அவர் உறுப்பினராக இருந்த தகவல் பரிமாற்ற குழுவில் ஒரு செய்தியைத் தன் சக வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட்டார். இணையத்தின் ஆதாரமான "hypertext" ஐ அறிமுகப்படுத்தி அதை அனைவரையும் முயன்று பார்க்க வெளியிட்ட அந்தக் கோரிக்கையே இணையத்தின் பிறப்பு நேரமாக அணைவராலும் கருதப்படுகிறது.
உலகின் மிகச் சில நிகழ்வுகளே அந்த நிகழ்வுகளைப் பற்றிய நேரத்தை ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு, அவற்றை பற்றிய ஜாதகம் எழுத உதவியாக இருந்துள்ளது. ஆனால், உலகத்தையே நம் கணிணிக்குள் கொண்டுவரும் சக்தி வாய்ந்த இணையத்தின் பிறப்பு நேரம் மிக மிகத் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு அதன் ஜாதகம் நமக்கு கிடைத்துள்ளது. பொதுவாக எந்த ஒரு நிகழ்வுக்கும் பல நேரங்களை ஆரம்பமாக குறிப்பிட வாய்ப்பிருந்தாலும், இணையம் மக்களை இணைக்கும் ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமாக பயன்படுத்தப்படும் முறையினைக் கருதி மேலேக் குறிப்பிட்ட நிகழ்வின் நேரத்தை இணையத்தின் பிறந்த நேரமாக கொள்வது பொருத்தமாக இருக்கும்.
நிகழப் போகும் மாறுதல்களின் சாராம்சம்:
நாம் இணையத்தின் ஆற்றலையும் அதை சிறப்பாக எப்படி உபயோகப் படுத்துவது என்பதையும் இப்பொழுது அறிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வரும் சில ஆண்டுகளில் இதுவரை இருந்திராத அளவு இணையத்திற்கான ஆதாரங்களும் அமைப்பும் புரட்சிகரமாக மாறப்போகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, இணையத்தின் ராசியில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வீடுகளின் வழியாக உள்ள கோள்களின் சாரம் இணையம் நட்புக்காகவும், குடும்பத்திற்காகவும், பொழுதுபோக்கு, பெரும்பாலும் உல்லாசங்களுக்காக உபயோகப் படுவதுபோல் தோற்றம் தந்தாலும், அது தற்காலிகமான தவறான மாயத்தோற்றமாகும். இணையத்தின் முக்கிய பயனும் பங்கும் என இணையத்தின் ஜாதகம் குறிப்பிடுவது உத்தியோகத் திற்காக பயன்படுத்தப்படும் தொலை தொடர்பு; இது சற்றும் மாறப் போவதில்லை.
விரைவில் வியக்கத்தகு மாற்றங்களை இணையம் சந்திக்கப் போகிறது. அவைகளில் சில ஆக்கபூர்வமான மாறுதல்களாகவும், சில அதற்கு எதிர்மறையாகவும் இருக்கும். இந்த மாற்றம் மெதுவாக, தொடர்ந்து பல ஆண்டுகளாகவும் நிகழும், ஆனால் இந்த மாற்றத்தின் முடிவு இணையத்தை முற்றிலுமாக மாற்றிவிடும்.
ஜனவரி 2012 ல் ஆரம்பிக்கும் இந்த மாற்றம் பலரும் அறியமுடியாத அளவிற்கும் ஒரு சிலராலேயே உணரப்படுவதாகவும் இருக்கும். அத்துடன் செப்டம்பர் மாதத்தில் அதுவரை ஏற்பட்ட மாற்றமும் மறைந்து முன்பிருந்த நிலைக்கு திரும்பியது போன்ற தோற்றத்தையும் அளிக்கும். ஆனால் அதைத் தொடர்ந்து வரும் மாதங்கள் உண்மையில் புதிதாக தோன்றிய மாறுதல்கள் நிரந்தரமாகவும், அந்த மாறுதல்களின் ஆதிக்கம் இணையத்தின் மாற்றத்தை அதிகரிக்கவும் செய்யும்.
2013 ம் ஆண்டின் தொடக்கத்தில், இணையத்தை முழுமையான உபயோகத்தை அடையக்கூடிய வகையில் எப்படி இணையம் பயன் படுத்தப்படும், எப்படி மேம்படுத்தப்படும் என்பது தெளிவாகும். பிப்ரவரி 2015 க்குப் பின், நாம் இதுவரை கற்பனை செய்து வைத்ததிலிருந்து இணையம் முற்றிலுமாக மாறுபட்டிருக்கும். இணையத்தின் வளர்ச்சியும் தொடர்ந்து இந்த மாறுதலுக்கு பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும். இணையத்தின் வளர்ச்சி 2017 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதன் பிறகு முற்றுப் பெற்றுவிடும். அப்பொழுது இணையத்தின் முக்கியப் பயனாக கருதப்படும், இணைந்து பணியாற்ற உதவும் பங்கினையும் தகவல் தொலைத்தொடர்பு உபயோகத்தின் பயனைப் பற்றிய கருத்தில் சர்ச்சைக்கும் ஏதும் இடம் இருக்காது. இணையத்தை எப்படியெல்லாம் பயன் படுத்தலாம் என்ற கனவுகள் குறைவதுடன், இணையத்தைப் பற்றிய ஆர்வமும் எதிர் பார்ப்புகளும் குறைந்துவிடும்.
இறுதி மாற்றம்: ஆனால் இந்த தடங்கலைப் பொய்ப்பிக்கும் வண்ணம் மற்றுமொரு பெரிய மாற்றம் 2023 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் தோன்ற ஆரம்பிக்கும். ஆனால் முழுமையான மாற்றம் அதைத் தொடர்ந்து வரும் இரண்டு ஆண்டிகளில் ஏற்படும். 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இணையம் பயிலுவதற்கான இடமாக, ஆதாரமான கருவியாகக் கருதப்படும் (என் இடைச்செருகல்: வகுப்பாசிரியர் தீர்க்கதரிசி என்பது இதன் மூலம் புலப்படுகிறது). இணையம் பெரும்பாலும் ஒரு கலைக் களஞ்சியமாக உபயோகப் படுத்தப்படும். அறிஞர்களின் ஆக்கங்கள் முழுமையாக இணையத்தில் சேகரிக்கப்படுவதுடன், இணையத்தின் முக்கிய பங்கே கலைக்களஞ்சியம் எனும் உபயோகம் எனக் கருதப்பட்டு, இணையத்தினை மற்றவற்றிற்காக பயன்படுத்துவது இணையத்தின் மதிப்பை குறைப்பதாக கருதி இகழ்ச்சியாகவும் எண்ணப்படும்.
இந்த மாறுதல் ஏற்பட ஓராண்டு காலம் ஆகும், அத்துடன் இதுதான் இணையத்தின் இறுதி மாறுதலாகவும் இருக்கும். இதன் பிறகு, இணையம் அனைவராலும் உபயோகப்படுத்தப்படும் அறிவுக்களஞ்சிய நூலகமாகவே கருதப்படும். இதுதான் இணையத்தின் எதிர்கால நிலை.
இதைத் தவிர வரும் நூற்றாண்டில் இணையத்தின் வளர்ச்சியில் எந்த ஒரு பிரமிக்கவைக்கும் மாற்றமும் இருக்காது. அதனால் 2026 க்குப் பிறகு இணையம் புதுமை என்ற தகுதியை இழப்பதால் உலகம் புதுமை எனக்கருதும் மற்றவைகள் மக்களை ஆக்கிரமித்து கொள்ளக்கூடும் . அப்படியே 2040 களில் இணையம் இருந்தாலும் அதன் கதை முடிக்கப்பட்டுவிடும். தொடர்து 15 ஆண்டுகளுக்கு மேலாக இணையம் பற்றிய எந்த செய்தியும் பேசப்படாமல் போகப் போவதால், இணையம் முயக்கியத்துவம் இழந்தது மக்கள் கவனத்தைக் கவராது.
அன்புடன்
தேமொழி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடைக்க வேண்டியதும், திறக்க வேண்டியதும்!
Article by KMRK, Lalgudi
'ஓட்டை' என்ற சொல்லைப் பற்றிச் சிந்திக்கும் போது, எதிர் வீட்டுக் குழந்தைகள் பலூனை வைத்து விளையாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்தேன்.
ஒரு சிறுமி வைத்து இருந்த பலூனை இன்னொரு மூத்த சிறுமி கையால் அழுத்தி உடைத்து விட்டாள்.இளையவள் பலூன் உடைந்து விட்டதே என்று அழத் துவங்கினாள்.பார்த்துக் கொண்டு இருந்த அண்ணன்காரன் உடைந்த பலூனை வாங்கி வாயில் வைத்து உள் பக்கமாக உறிஞ்சினான். ஒரு முட்டை அளவு பலூன் உப்பிவிட்டது.அதனை மீண்டும் கயிற்றால் சுற்றி தங்கை கையில் கொடுத்து 'பலூன் உடையவில்லை பார்'என்றான்.அடடா! அந்தப் பையனுடைய attitude- வளர்ந்த நமக்கு இல்லையே என்று எண்ணினேன்.
ஒரு வேளை அந்தக் குழந்தை மனது நமக்கும் இருந்தால்.....? சுகம். பரம சுகம்.
சிந்தித்துக் கொண்டே அண்ணாந்து பார்த்தேன். புல்லாங்குழலுடன் கண்ணபரமாத்மா அழகாக நின்றுகொண்டு இருந்தான் ஓவியத்தில்.அவன் அழகிய அதரத்தில் புல்லாங்குழல்.அதனை ஊத வேண்டி லேசாக உப்பிய கன்னம். தன் இசையில் தானே மயங்கியது போல கிறங்கிய கண்கள்.காற்றில் அசையும் மயிற்பீலி!அடடா! என்ன அற்புத் தோற்றம்! புல்லாங்குழல் மீது கோபியருக்கெல்லாம் பொறமையாம்! ஏனென்று சொல்லுங்கள் பார்ப்போம். ஆம்! புல்லாங்குழலுக்கு எப்போதும் கண்ணனின் அதர(உதடு) சம்பந்தம் கிடைக்கிறதே!தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று பொறாமையாம்.
புல்லாங்குழலில் 7 ஓட்டைகள் என்று கண்ணன் ஊத மாட்டேன் என்றா சொன்னான்?தூக்கியா வீசிவிட்டான்? அந்த ஓட்டைகளில் அடைக்க வேண்டியதை அடைத்து,திறக்க வேண்டியதைத் திறந்து அமுத கானம் அல்லவா பொழிகிறான்?அவன் கானத்தை கேட்டு இந்த புவனமே சொக்கி நிற்கிறதே.
நாமும் கண்ணனைப் போல ஓட்டைகளையும் செவ்வனே பயன்படுத்த முடியாதா? முயன்றால் முடியும்.
தொலைக் காட்சியைத் திறந்தேன். தில்லானா மோகனாம்பாள் படத்திலிருந்து 'நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா' என்று பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது. மதுரை எம் பி என் பொன்னுசாமி, சேதுராமனின் நாகஸ்வரம்.அந்த நாயனக் கருவிகள் அனைத்திலும் ஓட்டைகள்.அந்த 'ஓட்டைக் கருவி'யினை வைத்து என்ன அற்புத இசை.ஓட்டைகளுக்கும் பலன் உண்டு என்று அறிந்தேன்.அந்த இசையால் உடலும் உள்ளமும் நலம் பெறமுடியும் என்று அறிந்தேன்.
வீட்டில் பணியாற்றும் வேலையாள் மாவு சலித்துக் கொண்டு இருந்தார். சல்லடை அவர் கையில் அசைந்து கொண்டிருந்தது. அதனுடன் நான் பேசினேன்.இல்லை இல்லை என்னுடன் அது பேசிற்று."என்ன ஓய்! என்னையே உற்று உற்றுப் பார்க்கிறீர்? என் உடல் முழுதும் ஓட்டையாக இருக்கிறதே என்றா? அந்த ஓட்டைகள் இல்லை என்றால் எப்படி மாவில் உள்ள கசடினை நீக்க முடியும்? ஓட்டையாக இருப்பதுதான் எனக்கு இயல்பு. அப்போதுதான் என்னுடைய பயன் ஊருக்குக் கிடைக்கும்.
இந்த உடம்பைப் பற்றி 9 ஓட்டைகள் உள்ள வீடு என்பதாக சித்தர்களும் முனிவர்களூம் கூறியுள்ளனர்.
'மலம் சோரும் ஒன்பது வாயிற்குடில்...'என்பது உடலைப் பற்றி திருவாசகம் சொல்லும் கருத்து.
இந்த 9 உடல் ஓட்டைகளும் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.ஒன்று மூடப்பட்டாலும் உடல் வேலை செய்ய மறுக்கிறது.உடலுக்கு எவ்வளவு துன்பம் ஏற்படுகிறது!. உடலில் ஓட்டையாக இருப்பது அப்படியே தான் இருக்க வேண்டும். அடைக்க முயற்சிக்கக்கூடாது. அடைத்தால் விளைவுகள் விபரீதமாகும்.
கோவிலுக்குள் சென்றேன்.துவார பாலகர்களை முதலில் தரிசித்தேன்.துவாரம் என்றால் சமஸ்கிருதத்தில் ஓட்டை! ஓட்டையைக் காக்கும் உருவங்கள் துவார பாலகர்கள்.பாருங்கள் ஓட்டைகள் காக்கப்படவேண்டும் என்று அதற்கு ஆள் போட்டிருக்கிறார் எம் பெருமான். அதுவும் தஞ்சைப் பெரிய கோவிலில் துவாரபாலகர்கள் சுமார் 10 ஜோடிகள் உண்டு. ஒவ்வொன்றின் பிரமாண்டமும் சொற்களால் விவரிக்க முடியாது.
"தோசையைத் திங்கச் சொன்னாளா, தொளையை எண்ணச் சொன்னாளா?" என்பது பிராமணர் வீடுகளில் சொல்லும் சொல்லடை.மற்ற வகுப்பார் இதனையே "வடையைத் தின்னுடான்னா தொளை சரியில்லைங்கறான்" என்று சொல்லுவார்கள்.என்ன பொருள்? 'நடைமுறைக்கு உதவாத வீண் ஆராய்ச்சியைத் தவிர்' என்பதுதான்.மேலும் 'பிறரின் குறைகளைப்பெரிது படுத்தாதே' என்றும் கொள்ளலாம்.
இந்தப் பிரபஞ்சம் பெரு வெடிப்பால்(big bang) உருவானதாம். மீண்டும் இது ஒரு பெரிய ஓட்டைக்குள்(big hole) சென்று ஒடுங்கிவிடுமாம். அறிவியல் சொல்கிறது. அதைத்தான் 'அண்ட யோனியின் உண்டைப் பெருக்கம்'என்று சுந்தரம் பிள்ளை (இவர்தான் அரசின் தமிழ் வாழ்த்தை எழுதியவர்)சொல்லுவார்.அந்த அண்ட யோனியும் பெரிய ஓட்டைதான்.
எந்த உப்பிய பலூனிலும் ஓட்டை போடாதீர்கள். பலூனை ஓட்டை ஆக்குவது சிறு பிள்ளை விளையாட்டு. பெரியவர்கள் அந்த விளையாட்டைச் செய்யக் கூடாது,
சரிதானே?
வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:
கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கலக்கலான கானொளி. காண்ட்ரெக்ஸ்’ என்ற பெயரில் மினரல் வாட்டரை உற்பத்தி செய்து விற்கும் அமெரிக்கக் கம்பெனிக்காரர்களின் விளம்பர வீடியோ கிளிப்பிங். பார்த்து மகிழுங்கள். அனுப்பியவர்: எஸ். சபரி நாராயணன், சென்னை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மலரில் உள்ள ஆக்கங்களைப் பற்றிய உங்கள் கருத்தை, விமர்சனதைப் பின்னூட்டமிடுங்கள். எழுதுபவர்களுக்கு அதுதான் 'டானிக்’
அன்புடன்
வாத்தியார்
23.10.11
வாழ்க வளமுடன்!
மாணவர் மலர் எனும் புதிய பகுதியைத் தொடங்கியிருக்கிற ஆசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள். புதிய உத்வேகத்தோடு பல்வேறு தலைப்புகளில் கருத்து மழை கொட்டத் தொடங்கிவிட்டது; வடகிழக்கு பருவக் காற்றும் தொடங்கிய மாதிரி. எத்தனை பேர்; எத்தனை சிந்தனைகள்; எத்தனை அனுபவங்கள், அத்தனையும் இந்த வாய்ப்பில் ஒன்று சேரட்டும். ஆரோக்கியமான எண்ணப் பகிர்தலுடன் மாணவர் மலர் தொடர்ந்து நடைபயிலட்டும். முதலில் அடியேனுடைய படைப்பை வெளியிட்ட பெருந்தன்மைக்கு நன்றி.
ReplyDeleteமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், என் மொழியாக்க கட்டுரையை மாணவர் மலர் பதிவில் வெளியிட்டதற்கு நன்றி. அந்த வாத்தியாரின் மோதிரக் கையால் குட்டு பெற்ற எஸ். பி . பி யையும் விட இந்த வாத்தியாரின் மோதிரக் கையால் குட்டு பெற்ற தேமொழி மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் நன்றி.
ReplyDeleteவழக்கம்போலே மாணவர் மலர் வகுப்பறையை அலங்கரிக்க, ஆங்கே பூச்செண்டுகளுடன் வாழ்த்தைத் துவங்கியிருக்கும் அன்பர் தனுர்ராசிக்காரர் கவிவடிவிலே மைனரையும் இழுத்துவிட்டிருந்தார்..அவருக்கு எனது நன்றி..
ReplyDeleteநமது செம்மொழி இலாகா பத்தியும் சொல்லியிருந்தார்..
அவர் இன்றைக்கு தந்திருக்கும் கட்டுரை இதற்கு கட்டியம் கூறுகிறது..கடினமான சொற்றொடர்களை எழுத்திலே கொணரும்போது மிகவும் நிதானமும் தெளிவும் தேவை..அது இங்கே காணப்பட்டது..
தொடர்ந்து எழுத்துநடையும் அதை சொல்லிச்செல்கிற விதமும் என்று
எல்லாவகையிலும் எதிர்பார்த்த படியே சிறப்பாக ஆக்கியிருந்தார் தேமொழி.
அவருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..
தஞ்சாவூராரின் நியாயம் தர்மம் பற்றிய ஆக்கம்..'எல்லா நியாயங்களும் தெரியும்.. எல்லா தர்மங்களும் தெரியும்' என்ற
ReplyDelete'டிக் டிக் டிக்' வசனத்தை நினைவூட்டியது..
மகாபாரதத்திலே எனக்கு மிகவும் பிடித்த, வியந்து பார்க்கும் கதாபாத்திரம் பீஷ்மர்..
subjective consideration பற்றிய விளக்கம் அருமை..தகுந்த சமயத்தில் இதைப் பதிவிட்டிருப்பது அதை விட அருமை..
ஓட்டையில் உள்ள ஓட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்து பதிவிட்ட KMRK வுக்கு ஜே..நன்றாக புனையப்பட்டதொரு ஆக்கம்..
ReplyDeleteஆனால் நமது விசு அய்யர் இங்கே பதில் சொல்ல வருவாரா? என்ற கேள்வி எல்லோருக்கும் இருப்பது போலவே எனக்கும் இருக்கிறது..
அதனால் முதன்முதலில் பலூனில் 'ஓட்டை' விழுந்தபோது என்னிடம் தொடர்பு கொண்டு விசு அய்யர் மெயிலில் சொன்ன பதிலை
அவர் பொருட்டு நான் வகுப்பறைக்கும் இந்தப் பதிவு எழக் காரணமாயிருந்த KMRK வுக்கும் இங்கே சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்..
பலூனில் ஓட்டை இருந்ததைக் கண்டுபிடித்த அய்யர் 'அது KMRK பற்றி எண்ணி அப்படியொரு வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை..KMRK அவரைப் பற்றிக் குறிப்பிட்டதாக எண்ணி ஆவேசப்பட்டுவிட்டார்..' என்று விளக்கமளித்திருந்தார்..இது தொடர்பான எனது கருத்து அடுத்த பின்னூட்டத்திலும் தொடர்கிறது..
வில்லில் இருந்து கிழம்பிய அம்புகள்
ReplyDeleteவீழ்த்தியது விவேக மலர்களாய் - அவைகள்
தாழ்த்திய சிரத்தொடு வாத்தியாரின் மனத்தை
வாழ்த்தியே வனப்புடன் நிற்கிறது.
நன்றிகள் நண்பரே!
நியாய தர்மம் பற்றிய விளக்கம்
ReplyDeleteவழக்கம் போல் கலக்கம் தெளிவித்தது!
"மகாத்மாவின் நண்பர் என்று நினைக்கிறேன் (வயதானவர்) இரு இளம் பெண்ணை அந்திக் கால துணைக்கு ஒரு இளம் பெண்ணை மணக்க விரும்பியபோது அதை வினோபாவா அவர்கள் கடுமையாக ஆட்சேபித்தாராம் அது கடைசியாக மகாத்மாவிடம் வந்ததாம்... அப்போது மகாத்மா சொன்னாராம் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார விரும்புகிறீர்களா? அப்படி என்றால் மணப்பது தகும் என்று." நியாயம் தர்மம் இங்கே வேறுபடுகிறது... முழுக் கதையும் அறிந்தவர்கள் சொல்லலாம்.
தேமொழி இணையத்தின் எதிர்காலம் என்றக் கட்டுரை அருமை...
ReplyDeleteசமீபத்தில் நமது கலைவாணர் அவர்களின் பாடல் ஒன்றைக் கேட்டேன்
அதிலே ஒரு வரி பள்ளிக் கூடம் வீட்டிற்கே வந்துவிடும் காலம் வரும் எனும் படியானது...
இப்போதும் என் மகள் ஆறுமாதம் ஒருமுறை வீட்டிலே இருந்து பள்ளி இல்லாப் பாடம் என்று (கவனிக்கவும் உயர்நிலைப் பள்ளியில்) கணினியில் படிக்கிறாள்... என்.எஸ்.கே ஒரு தீர்க்க தரிஷி..
கணினி போன பிறகு வேறு ஒரு அறிநியோ! அணு நியோ! வரும் என எதிர் பார்க்கலாம்... நல்லக் கட்டுரை சகோதிரி...
ஓட்டையைக் கையாளத் தெரிந்து விட்டால் ஒசோனையும் அடைக்கலாம் தானே!
ReplyDeleteவாரம் தோறும் பூத்துக் குழுங்கட்டும் மாணவர் மலர்கள் தேனுண்ணும் வண்டுகளாய் வந்து போதை(போதனை)யேற்றிப் போகிறோம்...
நன்றிகள்,
அன்புடன்,
ஆலாசியம் கோ.
"சிந்துநதியின் மிசை நிலவினிலே சேரநன்நாட்டிளம் பெண்களுடுடனே"
ReplyDeleteரவிவர்மா தான் பாரதிக்கே இவர்களை அறிமுகம் செய்து வைத்திருப்பார் போலும்..
இத்தனை வனப்பும் அழகும் உள்ள இளநங்கை வேண்டுமென்றால் இமயம் கூட இடுப்பளவு கல் தானே...
கடந்த சில நாட்களாக கண்ணில்(மனதிலும்) ஏதோ துகள் விழுந்து நெருடலின் காரணமாக பின்னூட்டம் இடவில்லை..
ReplyDeleteகாரணம் unnecessary personnel என்ற வார்த்தைப் பிரயோகம்..அது யார் என்று தெளிவாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் வகுப்பறையை நடத்தும் ஆசிரியர் யாரெல்லாம் முன்பென்ச் மாணவர்கள் என்று அறிவித்து மாணவர்மலரைத் தொடர்வது குறித்தும்
pindrop silence தூக்கம் வரவழைக்கும், கலகலப்பாக நடத்திச்செல்வோம் வாருங்கள் என்றும் தெளிவுபடுத்தியதால்
இங்கே பழைய ஆர்வத்துடன் கூடியிருக்கிறோம்..
இப்படியான விமர்சனங்களை இன்னொருவரின் வலைமனைக்குச் சென்று
வாங்கிக்கட்டிக்கொள்ளும் அவசியம் அப்படி என்ன வந்தது என்றெல்லாம் பலவாறாக எண்ணமிட்டபடி
மனதின் தீவிர குணங்களான விவாதப் போக்கு என்பது சிலகட்டங்களில் தவிர்க்கமுடியாததாகவும் அவசியமானதாகவும் ஆகிவிடும்போது
அதை வகுப்பறை என்ற ஆசிரியரின் வலைமனையிலே தொடர்வதா?அல்லது 'கான்டீன்' ஒன்றை உருவாக்கி அங்கே ஆர்வமுள்ளவர்கள் கூடி இப்படி 'WWF ' 'ஜப்பானீஸ் சுமோ' போன்ற சூடான விஷயங்களை சூடான டீ, வடை, பஜ்ஜியுடன் பொழுதுபோக்குக்காகவென்றே தனித் தளமாகச் செய்தால் என்ன என்றெல்லாம் எண்ணமிட்டேன்..இப்போதைக்கு இப்படியே தொடர்வது உசிதம் என்று நினைத்துள்ளேன்..
Aaha, Super. KMRK Sir, Goplan Sir,Themozhi avargal, Kanmani Avargal, Ellorum kalakeetinga.
ReplyDeleteYou all made Guru proud. Keep writing.
Regards
RAMADU.
தர்மம் என்பதற்க்கு தன்மை என்றும் பொருள் உண்டு ஏறும்பின் தர்மம் (தன்மை)கடிப்பது....! அப்படி பார்த்தால் தர்மம் ஒருவருக்கொருவர் வேறுபடும் ஆனால் நியாயம் பொதுவானது
ReplyDelete///"மகாத்மாவின் நண்பர் என்று நினைக்கிறேன் (வயதானவர்) இரு இளம் பெண்ணை அந்திக் கால துணைக்கு ஒரு இளம் பெண்ணை மணக்க விரும்பியபோது அதை வினோபாவா அவர்கள் கடுமையாக ஆட்சேபித்தாராம் அது கடைசியாக மகாத்மாவிடம் வந்ததாம்... அப்போது மகாத்மா சொன்னாராம் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார விரும்புகிறீர்களா? அப்படி என்றால் மணப்பது தகும் என்று." நியாயம் தர்மம் இங்கே வேறுபடுகிறது... முழுக் கதையும் அறிந்தவர்கள் சொல்லலாம்.///
ReplyDeleteஆசார்ய ஜே பி கிருபளானி ,சுசேதா கிருபளானி ஆகியோரைப் பற்றிக் கூறுகிறீர்கள்..
வயது வித்தியாசம் கூடத்தான் அவர்களுக்கு. இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ முடிவு செய்தனர்.இது போன்ற விஷயங்களில் அவசர முடிவு எடுக்காமல், ஒத்திப்போடுவது காந்திஜியின் வழக்கம்.இவர்களையும் அதுபோலவே காத்திருக்கச் செய்து இறுதியில் ஒப்புதல் அளித்தார்.
காங்கிரஸ் மஹாசபையின் உள்ளேயே சோசலிச அமைப்புக்கு தலைவராக இருந்தார் கிருபளானி. ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஆசார்ய கிருபளானியும் நல்ல தோழர்கள்.
1975 அவசரகால கட்டத்தில் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது முதல் முதலில் கைது செய்யப்பட்டவர் அப்போதே 85 வயதைத் தாண்டிய கிருபளானிதான்.
சுதந்திர இந்தியாவில் முதல் பெண் முதல்வர் சுசேதாவே.அவரும் கிருபளானியும் உடலால் சம்பந்தம் இல்லாமலே வாழ்ந்துள்ளனர். நண்பர்கள் போலவே இருந்துள்ளனர். அது ஒரு தெய்வீகக் காதல் எனலாம்.
மஹாதமாவின் பிரம்மச்சரிய பரிசோதனைகளில் அவருடன் ஒத்துழைத்த பெண்களின் பட்டியலில் சுசேதாவுக்கும் இடமுண்டு.
2040ல் கணினியின் கதை முடிக்கப்பட்டுவிடுமா? எனக்கு அப்போது 91 வயதாக இருக்கும். எனது முடிவையே நெருங்கிக் கொண்டு இருக்கும் போது கணினியாவது, புதிய கண்டுபிடிப்புகளாவது.தேமொழிக்கு நல்ல தமிழ்நடையிருக்கிறது.
ReplyDeleteபாராட்டுக்கள்.
இந்த புருனை மன்னர் வகுப்புக்குப் புதுசா? அல்லது பழைய மாணவரா?
ReplyDeleteவரவேற்புக்கவித எழுதி அமர்க்களம் செய்கிறாரே!நன்றி!
"எதையோ மனதில் வைத்துக்கொண்டு நான் இதை நான் சொல்லவில்லை"
ReplyDeleteசரி,சரி புரிகிறது தஞ்சாவூர் பெரியவர்களே. மனதில் நீங்கள் எதையும் வைப்பதில்லை என்பது எனக்குத் தெரியாதா?
அவ்வப்போது கொட்டித் தீர்த்துவிட்டு அடுத்த காரியத்திற்குச்செல்லும் உங்கள் இயல்பை 1973 முதல் நான் அறிய மட்டேனா?
மாணவர் மலரின் சுக்கான் உங்களிடம்.வழி நடத்தி செல்க.
சபரி யின் காணொளியும் நன்றாக இருந்தது....பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி..
ReplyDelete///பலூனில் ஓட்டை இருந்ததைக் கண்டுபிடித்த அய்யர் 'அது KMRK பற்றி எண்ணி அப்படியொரு வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை..KMRK அவரைப் பற்றிக் குறிப்பிட்டதாக எண்ணி ஆவேசப்பட்டுவிட்டார்..' என்று விளக்கமளித்திருந்தார்.///
ReplyDeleteஅப்படியா மைனர்?
என்னை நினைத்துச் சொன்னாலும் வேறு யாரை நினைத்துச் சொல்லியிருந்தாலும் அவருடைய பின்னூட்டங்கள் இன்னும் கொஞ்சம்
புரியும்படி இருப்பது நலம்.
நான் ஒரு பதிவு எழுதுகிறேன்.அதில் என்னை ஏமாற்றிய ஒரு நபரைப் பற்றி எழுதுகிறேன்.அதற்குப் பின்னூட்டம்
"எண்ணங்களை எழுதுபவர்கள் மேலானவர்கள்; நிகழ்வுபற்றி எழுதுபவர்கள் நடுத்தரம்;நபரைப் பற்றி எழுதுபவர்கள் கடைத்தரம்" என்று தர வரிசைப் பட்டியல் போட்டால்?
நான் எண்ணங்களை எழுதியபோது எப்படிப்பட்ட பின்னூட்டம் இட்டார் அவர்?
நிகழ்வுகளைப் பற்றி எழுதிய போது?
ஜானகிராமன் ஏதோ சிவ அபவாதம் செய்துவிட்டார் என்று ஒரு தீவிர வீர சைவர் ரேஞ்சில் தனிப்பட்ட மின் அஞ்சல் அனுப்பினார். அதனால் அவரை சைவ சித்தாந்தி என்று கருத இடமாயிற்று.அதைச் சொன்னால், நான் எப்போது சொன்னேன் சைவ சித்தாந்தி என்று பின்னூட்டம்.
அவர் விவரமாகத் தன்னுடைய அறிவு ஆற்றலை தெளிவான மொழியில் வெளிப் படுத்தாத வரையில் இந்தக் குழப்பங்கள் தொடரும்.
விமர்சனங்களை வரவேற்கிறேன்.பாராட்டுக்களை மட்டும் அல்ல. விமர்சனக்களையும் வரவேற்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள் அதனைப் புரியும் படி எழுதுங்கள் என்பதுதான்.
செங்கோவியின் வலைப்பூவில் 19 அக் 2011 அன்று "பிராமண நண்பர்களுக்கு
ReplyDeleteவர்ணம் ஜாதி இட ஒதுக்கீடு==1" என்ற பதிவினை இட்டுள்ளார்.
அதில் நானும் டெல்லி உமாஜியும் பின்னூட்டங்கள் இட்டுள்ளோம்.இது தொடராக 6 கட்டுரைகள் வாரம் ஒன்றாக வர இருக்கிறது.ஒரு சமூக பிரக்ஞை உள்ள விஷயம்.மிகவும் சென்சிடிவ் ஆனது.விவாதம் சம்வாதமாக இருக்க முயற்சி செய்கிறோம்.விதண்டாவாதமாக ஆக்கக்கூடாது என்பதில் தனிக்கவனம் செலுத்துகிறோம்.
விருப்பம் உள்ளவர்கள் அங்கே வந்து நிதானத்துடன் எல்லாவற்றினையும் படித்துப் பார்த்து, சம்வாதத்தில் கருத்துக்களைச் சொல்ல வேண்டுகிறேன்.தொடர்ந்து வர உள்ள பதிவுகளையும் தொடர வேண்டுகிறேன்.
பதிவின் சுட்டி: http://sengovi.blogspot.com/2011/10/1.html
லில்லியின் பின்னூட்டத்தை வழி மொழிகிறேன் சபரியின் காணொளி நன்றாகவே உள்ளது.இது போன்ற அதிசயக் காணொளிகளை அடிக்கடி சுட்டுங்கள்.
ReplyDeleteஆமாம் லில்லி புதிதாகப் பின்னூட்டம் இடுகிறாரோ?
2750 பேர் பின் தொடர்பவர்கள் இருந்தும் ஒரு பதிவுக்கு 100 பின்னூட்டங்கள் கூட வரவில்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.
என் 62 வயதுக்கு சலிக்காமல் வகுப்பறையில் நாள்தோறும் ஒன்றுக்கு இரண்டாகப் பின்னூட்டம் இட்டு வருகிறேன்.பின்னூட்டங்களே நீங்கள் வகுப்பறையில் இருக்கிறீர்கள் என்பதைக் காட்டும்.
கருத்துச்சொல்ல விரும்பாவிட்டாலும் ஆக்கத்தைப் படித்துவிட்டு 'ஓகே' என்றோ, 'படித்தேன்' என்றோ,உள்ளேன் ஐயா என்றோ பின்னூட்டம் இடுங்கள்.
குறைந்த பட்சம் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது பின்னூட்டம் இடுங்கள். அப்போதுதான் எழுதுபவர்களுக்கு நீங்கள் படிக்கிறீர்கள் என்பது தெரிய வரும் அது ஐயா சொலவது போல டானிக் போல வேலை செய்யும்.
கல்யாண அவசரத்தில் தாலி கட்ட மறந்தது போல,ஐயாவுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன் பாருங்கள்.
பலூன் படத்தையும் போட்டு என் ஓட்டை ஆக்கத்தைப் பிரசுரித்ததற்கு நன்றி ஐயா!
சபரி நாராயணன் அவர்களின் கிளிப்பிங் அருமை..
ReplyDeleteஇன்று கொஞ்சம் தீபாவளி ஷாப்பிங் முடித்துவிட்டு வந்துதான் இதைப்பார்த்தேன்..
தஞ்சாவூர் பெரியவர் தலைமையில் மாணவர் மலர் நடைபோடுவதால் எல்லோருக்கும் போனஸாக ஒரு தஞ்சாவூர் செய்தி.
ReplyDelete'தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று' என்ற இந்தப் பதிவினையும் படித்து மகிழுங்கள்.
http://varungalamuthalvar.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
///ஆர்வமுள்ளவர்கள் கூடி இப்படி 'WWF ' 'ஜப்பானீஸ் சுமோ' போன்ற சூடான விஷயங்களை சூடான டீ, வடை, பஜ்ஜியுடன் பொழுதுபோக்குக்காகவென்றே தனித் தளமாகச் செய்தால் என்ன என்றெல்லாம் எண்ணமிட்டேன்..இப்போதைக்கு இப்படியே தொடர்வது உசிதம் என்று நினைத்துள்ளேன்..///
ReplyDeleteI second it, Minorwal
/////kmr.krishnan said...///////
ReplyDeleteவிமர்சனங்களை வரவேற்கிறேன்.பாராட்டுக்களை மட்டும் அல்ல. விமர்சனக்களையும் வரவேற்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள் அதனைப் புரியும் படி எழுதுங்கள் என்பதுதான்.
///////
ஆமாம்..
பழையன மறப்போம்..புதியன தொடர்வோம்..
/////Blogger Thanjavooraan said...
ReplyDeleteமாணவர் மலர் எனும் புதிய பகுதியைத் தொடங்கியிருக்கிற ஆசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள். புதிய உத்வேகத்தோடு பல்வேறு தலைப்புகளில் கருத்து மழை கொட்டத் தொடங்கிவிட்டது; வடகிழக்கு பருவக் காற்றும் தொடங்கிய மாதிரி. எத்தனை பேர்; எத்தனை சிந்தனைகள்; எத்தனை அனுபவங்கள், அத்தனையும் இந்த வாய்ப்பில் ஒன்று சேரட்டும். ஆரோக்கியமான எண்ணப் பகிர்தலுடன் மாணவர் மலர் தொடர்ந்து நடைபயிலட்டும். முதலில் அடியேனுடைய படைப்பை வெளியிட்ட பெருந்தன்மைக்கு நன்றி.////
பின்னூட்டத்திலும் நீங்கள்தான் முதல் (முதலில் உள்ளீர்கள்)!
/////Blogger தேமொழி said...
ReplyDeleteமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், என் மொழியாக்க கட்டுரையை மாணவர் மலர் பதிவில் வெளியிட்டதற்கு நன்றி. அந்த வாத்தியாரின் மோதிரக் கையால் குட்டு பெற்ற எஸ்.பி.பி யையும் விட இந்த வாத்தியாரின் மோதிரக் கையால் குட்டு பெற்ற தேமொழி மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் நன்றி./////
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி!
////Blogger minorwall said...
ReplyDeleteதஞ்சாவூராரின் நியாயம் தர்மம் பற்றிய ஆக்கம்..'எல்லா நியாயங்களும் தெரியும்.. எல்லா தர்மங்களும் தெரியும்' என்ற
'டிக் டிக் டிக்' வசனத்தை நினைவூட்டியது..
மகாபாரதத்திலே எனக்கு மிகவும் பிடித்த, வியந்து பார்க்கும் கதாபாத்திரம் பீஷ்மர்..
subjective consideration பற்றிய விளக்கம் அருமை..தகுந்த சமயத்தில் இதைப் பதிவிட்டிருப்பது அதை விட அருமை../////
அதைச் சுட்டிக்காட்டி நீங்கள் பின்னூட்டம் இட்டிருப்பதும் அருமை மைனர்!
////Blogger minorwall said...
ReplyDeleteஓட்டையில் உள்ள ஓட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்து பதிவிட்ட KMRK வுக்கு ஜே..நன்றாக புனையப்பட்டதொரு ஆக்கம்..
ஆனால் நமது விசு அய்யர் இங்கே பதில் சொல்ல வருவாரா? என்ற கேள்வி எல்லோருக்கும் இருப்பது போலவே எனக்கும் இருக்கிறது..
அதனால் முதன்முதலில் பலூனில் 'ஓட்டை' விழுந்தபோது என்னிடம் தொடர்பு கொண்டு விசு அய்யர் மெயிலில் சொன்ன பதிலை
அவர் பொருட்டு நான் வகுப்பறைக்கும் இந்தப் பதிவு எழக் காரணமாயிருந்த KMRK வுக்கும் இங்கே சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்..
பலூனில் ஓட்டை இருந்ததைக் கண்டுபிடித்த அய்யர் 'அது KMRK பற்றி எண்ணி அப்படியொரு வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை..KMRK அவரைப் பற்றிக் குறிப்பிட்டதாக எண்ணி ஆவேசப்பட்டுவிட்டார்..' என்று விளக்கமளித்திருந்தார்..இது தொடர்பான எனது கருத்து அடுத்த பின்னூட்டத்திலும் தொடர்கிறது../////
அதே விளக்கம் எனக்கும் வந்திருந்தது மைனர்!
///Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteவில்லில் இருந்து கிழம்பிய அம்புகள்
வீழ்த்தியது விவேக மலர்களாய் - அவைகள்
தாழ்த்திய சிரத்தொடு வாத்தியாரின் மனத்தை
வாழ்த்தியே வனப்புடன் நிற்கிறது.
நன்றிகள் நண்பரே!/////
நல்லது. நன்றி ஆலாசியம்!
////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteதேமொழி இணையத்தின் எதிர்காலம் என்றக் கட்டுரை அருமை...
சமீபத்தில் நமது கலைவாணர் அவர்களின் பாடல் ஒன்றைக் கேட்டேன்
அதிலே ஒரு வரி பள்ளிக் கூடம் வீட்டிற்கே வந்துவிடும் காலம் வரும் எனும் படியானது...
இப்போதும் என் மகள் ஆறுமாதம் ஒருமுறை வீட்டிலே இருந்து பள்ளி இல்லாப் பாடம் என்று (கவனிக்கவும் உயர்நிலைப் பள்ளியில்) கணினியில் படிக்கிறாள்... என்.எஸ்.கே ஒரு தீர்க்க தரிஷி..
கணினி போன பிறகு வேறு ஒரு அறிநியோ! அணு நியோ! வரும் என எதிர் பார்க்கலாம்... நல்லக் கட்டுரை சகோதிரி.../////
அதெல்லாம் வராமல் இருக்குமா? இன்று உள்ளதைவிட சூப்பராக வேறொன்று வந்துசேரும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தொலைபேசி
சட்டைப்பைக்குள் வந்து உட்காரந்து கொள்ளும் என்று யாராவது நினைத்திருப்போமா? அப்படித்தான் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருக்கிறது ஆலாசியம்!
///Blogger தமிழ் விரும்பி said...
ReplyDelete"சிந்துநதியின் மிசை நிலவினிலே சேரநன்நாட்டிளம் பெண்களுடுடனே"
ரவிவர்மா தான் பாரதிக்கே இவர்களை அறிமுகம் செய்து வைத்திருப்பார் போலும்..
இத்தனை வனப்பும் அழகும் உள்ள இளநங்கை வேண்டுமென்றால் இமயம் கூட இடுப்பளவு கல் தானே.../////
பிறவி மேதை அவர். ஒவ்வொன்றையும் இரசித்து வரைந்திருக்கிறார்!
////Blogger minorwall said...
ReplyDeleteகடந்த சில நாட்களாக கண்ணில்(மனதிலும்) ஏதோ துகள் விழுந்து நெருடலின் காரணமாக பின்னூட்டம் இடவில்லை..
காரணம் unnecessary personnel என்ற வார்த்தைப் பிரயோகம்..அது யார் என்று தெளிவாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் வகுப்பறையை நடத்தும் ஆசிரியர் யாரெல்லாம் முன்பென்ச் மாணவர்கள் என்று அறிவித்து மாணவர்மலரைத் தொடர்வது குறித்தும்
pindrop silence தூக்கம் வரவழைக்கும், கலகலப்பாக நடத்திச்செல்வோம் வாருங்கள் என்றும் தெளிவுபடுத்தியதால்
இங்கே பழைய ஆர்வத்துடன் கூடியிருக்கிறோம்..
இப்படியான விமர்சனங்களை இன்னொருவரின் வலைமனைக்குச் சென்று
வாங்கிக்கட்டிக்கொள்ளும் அவசியம் அப்படி என்ன வந்தது என்றெல்லாம் பலவாறாக எண்ணமிட்டபடி
மனதின் தீவிர குணங்களான விவாதப் போக்கு என்பது சிலகட்டங்களில் தவிர்க்கமுடியாததாகவும் அவசியமானதாகவும் ஆகிவிடும்போது
அதை வகுப்பறை என்ற ஆசிரியரின் வலைமனையிலே தொடர்வதா?அல்லது 'கான்டீன்' ஒன்றை உருவாக்கி அங்கே ஆர்வமுள்ளவர்கள் கூடி இப்படி 'WWF ' 'ஜப்பானீஸ் சுமோ' போன்ற சூடான விஷயங்களை சூடான டீ, வடை, பஜ்ஜியுடன் பொழுதுபோக்குக்காகவென்றே தனித் தளமாகச் செய்தால் என்ன என்றெல்லாம் எண்ணமிட்டேன்..இப்போதைக்கு இப்படியே தொடர்வது உசிதம் என்று நினைத்துள்ளேன்../////
வாத்தியாரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மைனர்!
////Blogger RAMADU Family said...
ReplyDeleteAaha, Super. KMRK Sir, Goplan Sir,Themozhi avargal, Kanmani Avargal, Ellorum kalakeetinga.
You all made Guru proud. Keep writing.
Regards
RAMADU./////
பெருமை என்பதைவிட மகிழ்ச்சியில் மனம் திளைக்கிறது என்று சொல்லலாம்!
///Blogger vidya pathi said...
ReplyDeleteதர்மம் என்பதற்க்கு தன்மை என்றும் பொருள் உண்டு ஏறும்பின் தர்மம் (தன்மை)கடிப்பது....! அப்படி பார்த்தால் தர்மம் ஒருவருக்கொருவர் வேறுபடும் ஆனால் நியாயம் பொதுவானது////
கரெக்ட். தேளின் தன்மை கொட்டுவது!
Blogger kmr.krishnan said...
ReplyDelete///"மகாத்மாவின் நண்பர் என்று நினைக்கிறேன் (வயதானவர்) இரு இளம் பெண்ணை அந்திக் கால துணைக்கு ஒரு இளம் பெண்ணை மணக்க விரும்பியபோது அதை வினோபாவா அவர்கள் கடுமையாக ஆட்சேபித்தாராம் அது கடைசியாக மகாத்மாவிடம் வந்ததாம்... அப்போது மகாத்மா சொன்னாராம் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார விரும்புகிறீர்களா? அப்படி என்றால் மணப்பது தகும் என்று." நியாயம் தர்மம் இங்கே வேறுபடுகிறது... முழுக் கதையும் அறிந்தவர்கள் சொல்லலாம்.///
ஆசார்ய ஜே பி கிருபளானி ,சுசேதா கிருபளானி ஆகியோரைப் பற்றிக் கூறுகிறீர்கள்..
வயது வித்தியாசம் கூடத்தான் அவர்களுக்கு. இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ முடிவு செய்தனர்.இது போன்ற விஷயங்களில் அவசர முடிவு எடுக்காமல், ஒத்திப்போடுவது காந்திஜியின் வழக்கம்.இவர்களையும் அதுபோலவே காத்திருக்கச் செய்து இறுதியில் ஒப்புதல் அளித்தார்.
காங்கிரஸ் மஹாசபையின் உள்ளேயே சோசலிச அமைப்புக்கு தலைவராக இருந்தார் கிருபளானி. ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஆசார்ய கிருபளானியும் நல்ல தோழர்கள்.
1975 அவசரகால கட்டத்தில் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது முதல் முதலில் கைது செய்யப்பட்டவர் அப்போதே 85 வயதைத் தாண்டிய கிருபளானிதான்.
சுதந்திர இந்தியாவில் முதல் பெண் முதல்வர் சுசேதாவே.அவரும் கிருபளானியும் உடலால் சம்பந்தம் இல்லாமலே வாழ்ந்துள்ளனர். நண்பர்கள் போலவே இருந்துள்ளனர். அது ஒரு தெய்வீகக் காதல் எனலாம்.
மஹாதமாவின் பிரம்மச்சரிய பரிசோதனைகளில் அவருடன் ஒத்துழைத்த பெண்களின் பட்டியலில் சுசேதாவுக்கும் இடமுண்டு.////
மெலதிகத் தகவலுக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteஇந்த புருனை மன்னர் வகுப்புக்குப் புதுசா? அல்லது பழைய மாணவரா?
வரவேற்புக்கவித எழுதி அமர்க்களம் செய்கிறாரே!நன்றி!////
பழைய மாணவர்தான். புனைப்பெயர் புதிது! யாரா? அது ரகசியம்!
////Blogger Lilly said...
ReplyDeleteசபரி யின் காணொளியும் நன்றாக இருந்தது....பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி..////
நல்லது. நன்றி சகோதரி!
///Blogger minorwall said...
ReplyDeleteசபரி நாராயணன் அவர்களின் கிளிப்பிங் அருமை..
இன்று கொஞ்சம் தீபாவளி ஷாப்பிங் முடித்துவிட்டு வந்துதான் இதைப்பார்த்தேன்..////
இப்படிப்பாராட்டினால்தான் அவருக்கும் ஒரு உற்சாகம் வரும் மைனர். தொடர்ந்து இதுபோன்ற காணொளிகளை அனுப்புவார்
இது வருகை பதிவு
ReplyDelete//////////SP.VR. SUBBAIYA said...
ReplyDelete///Blogger vidya pathi said...
தர்மம் என்பதற்க்கு தன்மை என்றும் பொருள் உண்டு ஏறும்பின் தர்மம் (தன்மை)கடிப்பது....! அப்படி பார்த்தால் தர்மம் ஒருவருக்கொருவர் வேறுபடும் ஆனால் நியாயம் பொதுவானது////
கரெக்ட். தேளின் தன்மை கொட்டுவது!\\\\\\\\\\\\\\\\\\\
தேள் தன் பாட்டுக்குப் போயிட்டே இருக்கும்..அதை இம்சிப்பவர்களை மட்டுமே கொட்டும்..
வேறு வழியில்லை..இதுதான் தேளின் தர்மம் (தன்மை)
//////SP.VR. SUBBAIYA said...
ReplyDelete////Blogger minorwall said...
கடந்த சில நாட்களாக கண்ணில்(மனதிலும்) ஏதோ துகள் விழுந்து நெருடலின் காரணமாக பின்னூட்டம் இடவில்லை..
காரணம் unnecessary personnel என்ற வார்த்தைப் பிரயோகம்..அது யார் என்று தெளிவாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் வகுப்பறையை நடத்தும் ஆசிரியர் யாரெல்லாம் முன்பென்ச் மாணவர்கள் என்று அறிவித்து மாணவர்மலரைத் தொடர்வது குறித்தும்
pindrop silence தூக்கம் வரவழைக்கும், கலகலப்பாக நடத்திச்செல்வோம் வாருங்கள் என்றும் தெளிவுபடுத்தியதால்
இங்கே பழைய ஆர்வத்துடன் கூடியிருக்கிறோம்..
இப்படியான விமர்சனங்களை இன்னொருவரின் வலைமனைக்குச் சென்று
வாங்கிக்கட்டிக்கொள்ளும் அவசியம் அப்படி என்ன வந்தது என்றெல்லாம் பலவாறாக எண்ணமிட்டபடி
மனதின் தீவிர குணங்களான விவாதப் போக்கு என்பது சிலகட்டங்களில் தவிர்க்கமுடியாததாகவும் அவசியமானதாகவும் ஆகிவிடும்போது
அதை வகுப்பறை என்ற ஆசிரியரின் வலைமனையிலே தொடர்வதா?அல்லது 'கான்டீன்' ஒன்றை உருவாக்கி அங்கே ஆர்வமுள்ளவர்கள் கூடி இப்படி 'WWF ' 'ஜப்பானீஸ் சுமோ' போன்ற சூடான விஷயங்களை சூடான டீ, வடை, பஜ்ஜியுடன் பொழுதுபோக்குக்காகவென்றே தனித் தளமாகச் செய்தால் என்ன என்றெல்லாம் எண்ணமிட்டேன்..இப்போதைக்கு இப்படியே தொடர்வது உசிதம் என்று நினைத்துள்ளேன்../////
வாத்தியாரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மைனர்!///////
பசி கொஞ்சம்.. ஸ்நாக்ஸ் கொரிச்சுக்கிட்டே சாட்டிங் பண்ணனும்..ரிலாக்ஸ் பண்ணனும்ன்னு நினைக்குற யாருமே அங்கதானே சார் வந்து சேரணும்..நீங்க வந்தா ஒரு பெரிய கூட்டமே அங்க உங்களைச் சுத்தி இருக்கும்..கலகலப்புக்குப் பேர் போன ஆளாச்சே நீங்க?இல்லேன்னா நானெல்லாம் இங்க இருப்பேனா?
/////////kmr.krishnan said...
ReplyDelete///ஆர்வமுள்ளவர்கள் கூடி இப்படி 'WWF ' 'ஜப்பானீஸ் சுமோ' போன்ற சூடான விஷயங்களை சூடான டீ, வடை, பஜ்ஜியுடன் பொழுதுபோக்குக்காகவென்றே தனித் தளமாகச் செய்தால் என்ன என்றெல்லாம் எண்ணமிட்டேன்..இப்போதைக்கு இப்படியே தொடர்வது உசிதம் என்று நினைத்துள்ளேன்..///
I second it, Minorwall /////
நியாயமா பார்த்தா you have to first it ..தேங்க்ஸ்.
///Blogger iyer said...
ReplyDeleteஇது வருகை பதிவு////
உங்கள் வரவு நல்வரவாகுக! நன்றி விசுவநாதன்!
///Blogger minorwall said...
ReplyDelete//////////SP.VR. SUBBAIYA said...
///Blogger vidya pathi said...
தர்மம் என்பதற்க்கு தன்மை என்றும் பொருள் உண்டு ஏறும்பின் தர்மம் (தன்மை)கடிப்பது....! அப்படி பார்த்தால் தர்மம் ஒருவருக்கொருவர் வேறுபடும் ஆனால் நியாயம் பொதுவானது////
கரெக்ட். தேளின் தன்மை கொட்டுவது!\\\\\\\\\\\\\\\\\\\
தேள் தன் பாட்டுக்குப் போயிட்டே இருக்கும்..அதை இம்சிப்பவர்களை மட்டுமே கொட்டும்..
வேறு வழியில்லை..இதுதான் தேளின் தர்மம் (தன்மை)////
தன்னை அது இம்சித்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிகையால் மனிதன் அதை இம்சிக்கிறான். தேளால் கொட்டுவாங்கியவர்களுகுத்தான் அந்த வலி தெரியும். ராகுதிசை சுயபுத்தி நடக்கும்போது மனிதனைத் தேள் அல்லது பாம்பு தீண்டும் என்பது பொதுவிதி. ஜாதகம் நன்றாக இருந்தால் குறைந்தபட்சம் நாயாவது அவனைக் கடித்து வைக்கும். என்னுடைய சிறுவயதில் ராகுதிசை சுயபுத்தியில் தேள் கொட்டிவிட்டுப் போய்விட்டது. பெரிய சாத்துக்குடிப் பழம் அளவிற்கு முன்கை வீங்கி விட்டது. அது பெரிய கதை. எப்படி நடந்தது என்பதை ஒருநாள் விவரிக்கிறேன். சுவையாக இருக்கும்!
///////Blogger minorwall said...
ReplyDelete//////SP.VR. SUBBAIYA said...
////Blogger minorwall said...
கடந்த சில நாட்களாக கண்ணில்(மனதிலும்) ஏதோ துகள் விழுந்து நெருடலின் காரணமாக பின்னூட்டம் இடவில்லை..
காரணம் unnecessary personnel என்ற வார்த்தைப் பிரயோகம்..அது யார் என்று தெளிவாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் வகுப்பறையை நடத்தும் ஆசிரியர் யாரெல்லாம் முன்பென்ச் மாணவர்கள் என்று அறிவித்து மாணவர்மலரைத் தொடர்வது குறித்தும்
pindrop silence தூக்கம் வரவழைக்கும், கலகலப்பாக நடத்திச்செல்வோம் வாருங்கள் என்றும் தெளிவுபடுத்தியதால்
இங்கே பழைய ஆர்வத்துடன் கூடியிருக்கிறோம்..
இப்படியான விமர்சனங்களை இன்னொருவரின் வலைமனைக்குச் சென்று
வாங்கிக்கட்டிக்கொள்ளும் அவசியம் அப்படி என்ன வந்தது என்றெல்லாம் பலவாறாக எண்ணமிட்டபடி
மனதின் தீவிர குணங்களான விவாதப் போக்கு என்பது சிலகட்டங்களில் தவிர்க்கமுடியாததாகவும் அவசியமானதாகவும் ஆகிவிடும்போது
அதை வகுப்பறை என்ற ஆசிரியரின் வலைமனையிலே தொடர்வதா?அல்லது 'கான்டீன்' ஒன்றை உருவாக்கி அங்கே ஆர்வமுள்ளவர்கள் கூடி இப்படி 'WWF ' 'ஜப்பானீஸ் சுமோ' போன்ற சூடான விஷயங்களை சூடான டீ, வடை, பஜ்ஜியுடன் பொழுதுபோக்குக்காகவென்றே தனித் தளமாகச் செய்தால் என்ன என்றெல்லாம் எண்ணமிட்டேன்..இப்போதைக்கு இப்படியே தொடர்வது உசிதம் என்று நினைத்துள்ளேன்../////
வாத்தியாரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மைனர்!///////
பசி கொஞ்சம்.. ஸ்நாக்ஸ் கொரிச்சுக்கிட்டே சாட்டிங் பண்ணனும்..ரிலாக்ஸ் பண்ணனும்ன்னு நினைக்குற யாருமே அங்கதானே சார் வந்து சேரணும்..நீங்க வந்தா ஒரு பெரிய கூட்டமே அங்க உங்களைச் சுத்தி இருக்கும்..கலகலப்புக்குப் பேர் போன ஆளாச்சே நீங்க?இல்லேன்னா நானெல்லாம் இங்க இருப்பேனா?//////
உங்களின் சான்றிதழுக்கு நன்றி! நான்கு லார்ஜ் அடித்ததுபோல கிக்காக இருக்கிறது மைனர்!
மணி IST 9:00. வகுப்பறை நேரம் முடிந்துவிட்டது. அதனால் ஸ்மால் & லார்ஜ்களைப் பற்றிப் பேசுவதில் தவறில்லை!:-))))
வணக்கம் வாத்தியார்.அருமையான "மலர்!".ஓட்டை,ஓசோனில் ஓட்டை விழுந்ததால் கால நிலையே மாறி விட்டது.அது கூட எங்கள் கைங்கரியம் தான்!
ReplyDeletewow,
ReplyDeleteall the four articles are good.
in particular impressed with the sportive spirit of kmrk....lovely article....
thanks to teacher also
என் கட்டுரையை ரசித்த அனைவருக்கும் மற்றும் பின்னூட்டமிட்டவர்களுக்கும் நன்றி சொல்லும் நேரமிது………
ReplyDeleteதனூர்ராசிக்காரன், Brunei
///தமிழுக்கு பெயர் செம்மொழி
ஜாதக அலசலுக்கு தேமொழி!///
மிகவும் நன்றி ....நன்றி
minorwall said...
///எழுத்துநடையும் அதை சொல்லிச்செல்கிற விதமும் என்று
எல்லாவகையிலும் எதிர்பார்த்த படியே சிறப்பாக ஆக்கியிருந்தார் தேமொழி.
அவருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..///
மாண்பு மிகு மைனர்வாள், செம்மொழி இலாகா எனக்குதான் என்று உறுதியாக சொல்லிவிட்டீர்கள், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. :)
தமிழ் விரும்பி said...
///தேமொழி இணையத்தின் எதிர்காலம் என்றக் கட்டுரை அருமை...
...கணினி போன பிறகு வேறு ஒரு அறிநியோ! அணு நியோ! வரும் என எதிர் பார்க்கலாம்... நல்லக் கட்டுரை சகோதிரி... ///
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி ஆலாசியம் சகோதரரே
RAMADU Family said...
///Aaha, Super. KMRK Sir, Goplan Sir,Themozhi avargal, Kanmani Avargal, Ellorum kalakeetinga. You all made Guru proud. Keep writing.///
Thanks a lot Mr. Ramadu and Family
kmr.krishnan said...
///தேமொழிக்கு நல்ல தமிழ்நடையிருக்கிறது.
பாராட்டுக்கள்.///
பாராட்டுகளுக்கு நன்றி ஐயா
SP.VR. SUBBAIYA said...
///தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி!///
சரி ஐயா, ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி
தஞ்சாவூர் ஐயா,
ReplyDeleteஉங்கள் கட்டுரையின் நீதி: நியாயவான் முழுவதும் தர்மவானாக முடியாது; தர்மவான் முழுவதும் நியாயவானாக முடியாது, என்பது என்னை சிந்தக்க வைத்தது.
“நியாயம்தான்” எனக்கு ஏனோ முக்கியமாகப் படுகிறது. நம் நீதி மன்றங்களும் அதன் அடிப்படையில்தான் செயல் படுவதாக தோன்றுகிறது.
தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அடுத்த உயிரை எடுப்பது, சித்திரவதையில் துடிக்கும் உயிரை நீக்குவது போன்றவை இதில் அடங்கும்.
அதனால் தர்மவானிடம் போய் "நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு" என்பது எடுபடாது. தர்மவான்கள் லட்சியவாதிகளைப் போன்றவர்கள். அவர்களை "hopeless idealist" என்று சொல்வதும் உண்டு.
நல்ல கட்டுரை, நன்றி.
kmr.கே ஐயா, ஓட்டைகளில் பல வகைகளும், சில சமயம் அதன் தேவைகளையும் விளக்கிச் சொன்னீர்கள் நன்றி.
ReplyDeleteநானும் பல ஓட்டைகள் போட்டுள்ளேன்; ஜாம், ஊறுகாய் பாட்டில்கள் என்று (to relieve the pressure) மூடியை சுலபமாக திறக்க. ஆனால் நான் போடா விரும்பி கனவு காணும் ஓட்டை நல்ல எண்ணெய் கிணறாக பார்த்து ஒன்று. அதற்கப்புறம் வாழ்க்கை ஆஹா. ... சென்ற தேர்தலில் அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட ஸாரா பாலின் சொன்னது போல் "Drill Bay Drill"
சபரியின் காணொளி நன்றாக இருந்தது, இதுபோன்று உண்மையிலேயே தினசரி வாழ்கைக்கு ஒன்று வடிவமைத்தால் உடல் பருமனை குறைக்க ஏதுவாக இருக்கும். காணொளியில் யாரையும் பார்த்தால் நடிப்பது போலவே தெரியவில்லையே.. அவசர அவசரமாக உடல் பயிற்சிக் கருவியை மாற்றிக்கொண்டு தொடரும் மனிதராகட்டும், அல்லது சீழ்கை அடிக்கும் பெண்ணாகட்டும் திரையை விட்டு கண்ணை எடுக்கவில்லை. சபரி நாராயணனுக்கு நன்றி நல்ல காணொளியை அறிமுகப் படுத்தியதற்கு.
ReplyDelete///வரவேற்புக் கவிதை!
ReplyDeleteகொடியில்பூக்காத வாசமலர்
கொள்ளைகொள்ளும் செய்திமலர்
தோள்கொடுப்போம் வாருங்கள்
துவங்கிவிட்டது மாணவர்மலர்!///
தனூர்ராசிக்காரரின் வரவேற்புக் கவிதை நன்றாக இருந்தது.
முதன் முதல் 1926 இல் ஆனந்த விகடன் ஆரம்பித்தபொழுது, முதல் பக்கம் கவிதையுடன் ஆரம்பித்ததாக விகடனனின் "காலப் பெட்டகம்" புத்தகத்தில் பார்த்தேன். அதை அதன் முதல் ஆசிரியர் வைத்தியநாதையர் எழுதியிருந்தார். அதுபோல் முதல் மாணவர் மலரின் முதல் பக்க கவிதையாக உங்கள் கவிதை அழகு சேர்க்கிறது
kmr.k ஐயா அவர்களுக்கு,
ReplyDeleteசெங்கோவியின் வலைப்பூ பதிவின் சுட்டி: http://sengovi.blogspot.com/2011/10/1.html
'தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று' சுட்டி:
http://varungalamuthalvar.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
அறிமுகப்படுதியதற்கு நன்றி
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteஇந்த புருனை மன்னர் வகுப்புக்குப் புதுசா? அல்லது பழைய மாணவரா?
வரவேற்புக்கவித எழுதி அமர்க்களம் செய்கிறாரே!நன்றி!////
SP.VR. SUBBAIYA said...
///பழைய மாணவர்தான். புனைப்பெயர் புதிது! யாரா? அது ரகசியம்! ///
பெயரிலும் அதே சாயல்...கவிதையிலும் அதே நடை .... தனுர்ராசிக்காரர் நீங்க கவிதை எழுதறப்ப thanusu எழுதறமாதிரி இருக்கு ...எழுதுங்க ...தொடர்ந்து எழுதுங்க …….
என் யூகம்:
http://www.blogger.com/profile/15604862556703739037
minorwall said...
ReplyDeleteதேள் தன் பாட்டுக்குப் போயிட்டே இருக்கும்..அதை இம்சிப்பவர்களை மட்டுமே கொட்டும்..
பாவம், விருச்சிக லக்கினக்காரர் தேளுக்கு ஆதரவு தராவிட்டால் யார்தான் தேளுக்கு ஆதரவு தருவார்கள், இல்லையா?
அப்பாடா!!! மின்சாரம் வந்தாச்சு, இனிமே நான் நிம்மதியா தூங்கலாம் காற்றாடியை சுழலவிட்டு....
ReplyDeleteகைகலப்பு இல்லாத கலகலப்பு ...நன்றி... நன்றி... :-)
//// தேமொழி said...
ReplyDeleteminorwall said...
தேள் தன் பாட்டுக்குப் போயிட்டே இருக்கும்..அதை இம்சிப்பவர்களை மட்டுமே கொட்டும்..
பாவம், விருச்சிக லக்கினக்காரர் தேளுக்கு ஆதரவு தராவிட்டால் யார்தான் தேளுக்கு ஆதரவு தருவார்கள், இல்லையா?//////
நீங்க ஷார்ப்புன்னு தெரியும்..
அதான் இப்புடி..
என்னதான் இருந்தாலும் கொட்டுறதுலே நாங்கதான் ஷார்ப்பு..எப்புடி?