17.10.11

நீரில் மீனாக இரு, வானில் பறவையாக இரு!

நீரில் மீனாக இரு, வானில் பறவையாக இரு!

வணக்கம்.  வலைத்தளங்களில் எனது பெயரைத் 'தஞ்சாவூரான்' என்றுதான் எழுதுகிறேன். என் மீது என்ன கோபமோ தெரியவில்லை நண்பர்
கே.எம்.ஆர். கே , அவரை அலுவலகத்தில் ஏமாற்றி மூவாயிரம் ரூபாயை அபகரித்து சீட்டு விளையாடிய நபரைப் பற்றி எழுதுகையில்
'தஞ்சாவூர்க்காராள்' பற்றி காலைவாரிவிட்டிருக்கிறார். இதில் மேலுமொரு கொடுமை அவர் எனது உறவுக்காரரும்கூட, கே.எம்.ஆர்.அல்ல,
அவரிடம் 'ஆட்டை' போட்டவர். சரி! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். உண்மையிலேயே தஞ்சாவூர்க்காராள் எல்லாம் இப்படிப் பட்டவர்களா? அல்லது அப்படிப்பட்ட அபிப்பிராயம் உண்டாக்கப்பட்டதா தெரியவில்லை.

நான் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், ஏதோ பேச்சு வாக்கில் அங்கிருந்த ஒருவரிடம் இந்த 'அய்யம்பேட்டை' வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம் என்று சொன்னேன். அய்யம்பேட்டை வேலை என்று நான் சொன்னது இருவரிடையே சிண்டு முடிந்து  விட்டு வேடிக்கப் பார்ப்பது என்ற பொருளில்தான். அப்படியொரு பேச்சு வழக்கு இருந்து வந்தது அப்போது. அங்கு வந்திருந்த எங்கள் முகவர் ஒருவர், அய்யம்பேட்டைக்காரர், காங்கிரஸ்காரர், அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

என்னைப் பார்த்து என்ன அப்படிச் சொல்லிட்டீங்க. அய்யம்பேட்டைன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா? அப்படிச் சொன்னதை வாபஸ்
வாங்கிக்குங்க. இல்லைன்னா நான் சும்மா விடமாட்டேன் என்று சண்டைக்கு வந்து விட்டார். அது மட்டுமல்லாமல், "எங்க கட்சி கூட்டமொன்றில்
ஆர்.வி. (முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன்) அப்படி சொல்லிவிட்டு அவரை வாபஸ் வாங்க வச்சிட்டோம்" என்றார்.

எனக்கு அப்போது இளம் வயது. அத்தனை சுலபத்தில் பணிந்து போகும் குணம் அப்போது இல்லை. நானும் விடாப்பிடியாக எனது  நிலைப்பாட்டில் இருந்தேன். இருவரும் 'கர்' 'புர்' என்று முறைத்துவிட்டுப் போய்விட்டோம். அப்படியிருக்கை யில் இப்போது கே.எம்.ஆர். எப்படி 'தஞ்சாவூர்க்காராள்' என்றால் இரக்க மில்லாமல் இருந்து விடுவார்கள், நீங்கள் நெல்லையில் பிறந்து சேலத்தில் வளர்ந்தவர் என்பதால்  இப்படிப்பட்ட இரக்க குணம் (அல்லது ஏமாளித்தனமா?) கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லி, மெல்ல இவர் தலையைத் தடவியிருக்கிறார்.

நான் தஞ்சை மாவட்டத்துக்காரன், காவிரிக் கரையில் வளர்ந்து படித்தவன், ஆனால் பணியின் காரணமாக கரூரில் இருந்தவன், பின்னர்  தஞ்சைக்கு வந்தவன், இப்போதும் தஞ்சாவூர்க்காரன் என்று நினைத்துக் கொண்டிருப்பவன். ஆனால் எனக்கு இப்படியெல்லாம் சாமர்த்தியம்  இருந்ததில்லை. ஆனால், நிறைய 'தஞ்சாவூர்' காராளால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

கரூர் மாவட்டத்திலிருந்து தஞ்சைக்கு மாற்றலாகி வந்து சேர்ந்த நேரம். எனக்குப் பிடிக்காமலே தஞ்சைக்கு வரும்படியாயிற்று. இங்கு  எல்லோரையும் பார்த்து எனக்கு மனதில் திகில். அந்தச் சூழ்நிலையில் தொழிற்சங்கத் தேர்தல் ஒன்று வந்தது. பிரதிநிதிகள் தேர்வுக்கு நானும்  மனுச் செய்திருந்தேன். தேர்தல் நடந்தது. சங்கத்தின் ஆளும்கட்சி அவர்களுடைய பிரதிநிதிகள் என்று ஒரு லிஸ்ட் கொடுப்பார்கள். நான்  பணியாற்றிய பிரிவில் மட்டும் என் பெயர் சேர்க்கப் பட்டிருந்தது. மற்ற பிரிவுகளில் என் பெயர் இல்லை. அதை சிலர் என்னிடம் சொன்னார்கள்.

நானும் பேசாமல் இருந்து விட்டேன். பின்னர் சங்கம் பிளவு பட்டது. 'பிளவுவாதிகள்' என்ற பெயரோடு நானும் பிரிந்து வந்தேன். அப்போதுதான் இதுபோன்ற சூட்சுமங்கள் பற்றியெல்லாம் முதன்முதலில் தெரிந்து கொண்டேன். ஒருவனை ஆதரிப்பது போலவும் இருக்க  வேண்டும், அதே நேரம் கச்சிதமாகக் காலை வாரிவிடவும் வேண்டும். இதில் ஒரு விளக்கம். அந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றேன்.

அதுபற்றி பின்னர் அவர்கள் மத்தியில் விவாதம் நடந்தது. என் வெற்றிக்குக் காரணம், நான் பல ஊர்களில் பணியாற்றியவன், அந்த  தொடர்புகளால் நான் வெற்றி பெற்றேன் என்று. நானும் 'தஞ்சாவூரான்' ஆனேன்.

பதவி உயர்வுக்காகவும், சில தவறுகளைச் சுட்டிக் காட்டவும் சிலர் நீதிமன்றங் களுக்குச் செல்வார்கள். அப்படி பல இடங்களில் உள்ளவர்கள் தலைமை அலுவலகம் வரும்போது என்னிடம் வந்து அமர்ந்து பேசிவிட்டுச் செல்வார்கள். என்னை வேவு பார்க்கவென்று ஒரு சிலர்  இருந்தார்கள். அவ்வப்போது என்னிடம் யார் யார் வருகிறார்கள் என்றெல்லாம் போய்ச் சொல்ல வேண்டிய இடத்தில் போய்ச் சொல்வார்கள்.

அப்படி என்னிடம் வருபவர்கள், தான் வழக்குப் போடும் விவரங்களை என்னிடம் விவரித்து விட்டு, சென்னை சென்று வழக்குத் தொடர்வார்கள்.
இதெல்லாம் சேர்ந்து வழக்கு என்றால், நான் தூண்டிவிட்டுத்தான் நடக்கிறது என்று பெயர் வந்துவிட்டது. விளைவு, நிர்வாகம் எனது பதவி உயர்வை இதைக் காரணம் காட்டி நிறுத்தி விட்டார்கள், பல முறை.

ஒருக்கால் நான் தஞ்சாவூர் வரவில்லையென்றால், ஒரு அப்பிராணியாக கே.எம்.ஆர்.போல இருந்திருப்பேன். இப்போது நல்ல பயிற்சியும்,
அனுபவமும் சேர்ந்து தேர்ந்த 'தஞ்சாவூரானாக' ஆகிவிட்டேன். சுயபுராணம் பாடுவதற்காக இதனைச் சொல்லவில்லை. இப்படி ஒரு ஊரை வைத்துச் சொல்லும்போது, அதில் நல்லதும் உண்டு, தீமையும் உண்டு. நான் இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். நீரில் இருக்கும்போது
மீனாகவும், வானில் இருக்கும் போது பறவையாகவும் இருப்பதுதான் பிழைக்கும் வழி.
என்ன சரிதானே?

தங்கள் அன்புள்ள,
வெ.கோபாலன்
VGopalan

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரண்டு விஷயங்கள் மிகவும் கஷ்டமானவை:

1. உங்களுடைய ஐடியாவை அடுத்தவன் தலையில் திணிப்பது.
2. அடுத்தவனுடைய பணத்தை உங்கள் பைக்குக் கொண்டுவருவது.


அவை இரண்டையும் வெற்றிகரமாகச் செய்யக்கூடியவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் மனைவி!:-))))
---------------------------------------------------------------------------------------------------
கூகுள் ஆண்டவர் கொடிகாட்டிய பின் பாடங்கள் தொடரும். படங்கள், அட்டவணைகள் இல்லாமல் எப்படி பாடம் நடத்துவது? ஆகவே
அதுவரை பொறுத்திருங்கள்.

அன்புடன்
வாத்தியார்


31 comments:

  1. 'அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே' என்று பெரியவர் கோபாலன்ஜி நினைவு கூர்ந்துள்ளார்.

    'உருவுகண்டு எள்ளாமை வேண்டும்' என்பது போல ஊரைக் கண்டும் எள்ளாமை வேண்டும்.சொக்கத் தங்கத்தால் நகை செய்ய முடியாது. சிறிது செம்பு கலக்க வேண்டும். எனவே மனிதர்களில் உள்ள குறைபாட்டை ஊர் மேல் ஏற்றக் கூடாது.

    'எத்தன்'என்ற பெயர் தஞ்சாவூருடன் தான் இணைத்துப் பேச‌ப்படுகிறது.
    தில்லானா மோகனாம்பாள் வைத்தி போன்ற ஆசாமிகள் தஞ்சையில் சற்று கூடுதல் எண்ணிக்கையில் உண்டு என்றாலும் எல்லோரும் அப்படி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

    'அய்யம்பேட்டை வேலை' என்பது போல 'கும்பகோணம்' அகில உலகப் பெயர் பெற்றது.

    'அவன் சரியான கும்பகோணம்' என்றோ 'கும்போணத்தான்னா அவன்'
    என்றோ சொலவது தஞ்சாவூரில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வழக்காயிற்று.எப்படியென்றால் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில்
    Kumbakonam= A cheat, Cunning man
    என்று போட்டுவிட்டார்கள்.

    குடந்தையில் அப்போது நகராட்சித் தலைவராக இருந்த மறைந்த காசிராமன் இந்தப் பிரச்சனயை எடுத்துக்கொண்டு போராடி அடுத்து வந்த வெளியீடுகளில் ஆங்கில அகராதியில் இருந்து நீக்க வைத்தார். ஒருமுறை வெளி வந்தது வந்ததுதானே!

    இந்தச் செய்தியைதிரு. பி பி பாட்டிலிடம்(மஹராஷ்டிராவைச் சேர்ந்த தொழிற் சங்கத் தலைவர்) குடந்தயைக் கடக்கும் போது கூறினேன்.எல்லா மாநிலங்களிலும் ஒரு சில ஊர்களுக்கு இப்படிப் பட்ட அவப் பெயர் உள்ளது என்றார்.உதாரண‌மாக 'புனேவாலே'(புனாக்காரன்)என்று மஹாராஷ்ட்ராவில் கூறுவதுண்டாம்.

    தமிழின் முதல் நாவல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ள ராஜம் அய்யரின்
    கமலாம்பாள் சரித்திரத்தில் ஒரு வில்லி பாத்திரம் 'தஞ்சாவூராள்'என்றே குறிப்பிடப்படும்.

    நான் சேலத்திலேயே பிற‌ந்து சேலதிலேயே 21 வயதுவரை வளர்ந்தேன்.பின்னர் 38.5 ஆண்டுகள் தஞ்சாவூர். ஓர் ஆண்டு கோவை. ஓர் ஆண்டு சென்னை. அரை ஆண்டு மேட்டூர். என் பெற்றோர்தான் திருநெல்வேலிக்காரர்கள்.

    பல ஊர் மக்களிடம் பழகும் வாய்ப்பு எனக்கு என் தந்தையாரால் கிடைத்தது.
    தஞ்சாவூர்காரர்களிடம் சகஜ பாவம் இன்றுவரை வரவில்லை.ஏனோ தெரியவில்லை.நன்றி.

    ReplyDelete
  2. ஆசிரியர் ஐயா அவர்களுக்கு நன்றி. 'தஞ்சாவூராள்' எனும் குறிப்பு என் மனதில் கிளறிவிட்ட எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டேன். அதனை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. ஒன்றை கவனித்தீர்களா? அரசியலாகட்டும், இலக்கியமாகட்டும், தில்லுமுல்லாகட்டும் எல்லாவற்றிலும் தஞ்சாவூர் முன்னணியில் இருப்பதற்குக் காரணம் இவை அனைத்திலும் தஞ்சை மாவட்டக் (பழைய)காரர்கள் சூராதி சூரர்கள். நண்பர் முத்துராமகிருஷ்ணன் உடனே தன் கருத்தைத் தெரிவித்து விட்டார், அதை எதிர்பார்த்துத்தானே எழுதினேன்.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா!
    உண்மையில் நல்ல பதிவு...
    சுயபுராணம் என்பது வேறு.
    இது அனுபவ பொக்கிஷம்...

    தங்களைப் போற்ற பெரியவர்களின்
    அனுபவம் எங்களைப் போற்ற
    இளையவர்களுக்கு வேதம்...

    வேலையிட அரசியல் தான் இருப்பதிலே மிகவும் கடுமையான அரசியல் அதில் நல்லவனாகவும் பணிக்கு விசுவாசமாகவும் இருப்பதை விட வேறு சிலவும் இருக்கிறது என்பதுவும் உண்மையே அதை இங்கேயும் என் போன்றோர் அனுபவிக்கிறோம்..

    ஒரே ஒரு நிகழிச்சி போன வாரம் நடந்தது... என்னுடைய மூத்த மேலாளர் ஒருவர் தனது குத்தகை முடிந்து தனது நாட்டிற்கு (நார்வே) திரும்பினார். அப்போது எங்கள் அலுவலக உதவியாளரிடம் தனது அலுவலக பொருள்களை பார்சல் சர்வீசில் அனுப்ப பணித்து விட்டு சென்றார். அவரும் அனைத்தும் பேக்கிங் செய்துவிட்டு... டாக்குமேன்ட்டுக்கு என்னிடம் வந்தார் அதில் ஒரு குடையும் இருந்தது... அது ஒரு பத்து ஆஸ்திரேலிய வெள்ளி இருக்கும். அதை அனுப்பினால் ஆகும் கூலி ஒரு நூறு வெள்ளி வரலாம். எனக்கு மனமில்லை எனது சக அலுவலக நண்பர்களிடம் சொன்னேன். அவர்கள் சிரிப்பைத் தவிர வேறு பதிலை தரவில்லை. என்ன செய்வது வேறு வழியில்லாமல் நானும் சத்தமில்லாமல் பேப்பர்ஸை தயார் செய்து கொடுத்து விட்டேன். காரணம் பழைய நிறுவனத்தில் விறைப்பாக இருந்து பெற்ற அனுபவம் தான்... அப்படி இருந்தால் நம்மீது பயமும் மரியாதையும் இருக்கும். ஆனால், தயக்கமில்லாமல் பழகும் ஆட்கள் நம்மருகில் இருக்க மாட்டார்கள். சந்தன மரம் என்றாலும் தோப்புக்குள் இருப்பதே பாதுகாப்பு.
    நீண்டப் பின்னூட்டம்.. மன்னிக்கணும்.

    திரு.வெ.கோ. ஐயா தடர்ந்து இது போன்ற அனுபவங்களை வகுப்பறையில் எழுதணும்.

    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. Dont worry, They use to call me as
    "Tanjavoor Ethan" Idhallam thanjavoor karargalukku sagajam.

    Ramadu

    ReplyDelete
  5. தஞ்சாவூர் ஐயா, உங்கள் பதிவு அருமை. " நீரில் இருக்கும்போது மீனாகவும், வானில் இருக்கும் போது பறவையாகவும் இருப்பதுதான் பிழைக்கும் வழி" என்பது நல்ல அறிவுரை.

    தஞ்சை மாவட்டம் சிறந்த திறமையாளர்களையும், சாதனையாளர்களையும் அளித்த மாவட்டம். ஒரு காலத்தில், தங்கள் ஊர்ப் பெயரை பெயரின் முன் வைக்கும் வழக்கம் இருந்த காலம் இதை உறுதிப் படுத்தும். தஞ்சையில் ஆரம்பித்து தஞ்சை ராமையாதாஸ், கிழக்கே போகப் போக பாபநாசம் சிவன், வடுவூர் துரைசாமி ஐயங்கார், மன்னை நாராயணசாமி, மல்லியம் ராஜகோபால் என எந்த ஊரை குறிப்பிட்டாலும் ஒரு புகழ் பெற்ற பெயரைக் குறிப்பிடலாம். இந்த பெருமையை மற்ற மாவட்டங்கள் முறியடிக்க முடியாது என்பது என் கருத்து. ஊர் பெயரை தன்னுடன் இணைக்காத எத்தனையோ மேதைகளையும் பல துறைகளில் உதாரணம் காட்டலாம். பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  6. "சந்தன மரம் என்றாலும் தோப்புக்குள் இருப்பதே பாதுகாப்பு" ... இதுவும் நல்ல அறிவுரையே ஆலாசியம் அவர்களே.

    ReplyDelete
  7. ஆகா..
    அருமை...

    ஆரோக்கியமில்லா விமர்சனங்களானால்
    அதை பொருட்படுத்தாமலிருப்பது சிறப்பு

    நாலு வரிகளில்
    ஐந்து பிழை தருபவன் என்பவர் மாறி

    புது கவிதைகளை
    புனையும் கவிஞன் என சொல்வதும்

    அன்று அறிவிலி என்றவனை
    இன்று மேட்டிமைக்குரியவன் என்பதும்

    அடுத்தவரின் எண்ணத்திலே
    அதனால் நம் வெற்றி தோல்விகளை

    மற்றவர்களின் எண்ணத்தில் நம்
    மதிப்பை வைக்காமால்

    சுயமதிப்பினை நிலையாக வைத்தால்
    நம் மதிப்பு தானே உயரும் என்பது

    அய்யரின் கருத்து.. இது..
    அறிஞரின் கருத்து இன்றைய வகுப்பில்

    "முடிவு எடுத்த பின் காரண காரியம் சொல்பவர்கள் அநீதி மான்கள்

    காரண காரியம் ஆராய்ந்த பிறகு முடிவு எடுப்பவர்கள் தவறான முடிவு எடுக்க மாட்டார்கள்"

    ReplyDelete
  8. //தஞ்சை மாவட்டம் சிறந்த திறமையாளர்களையும், சாதனையாளர்களையும் அளித்த மாவட்டம். ஒரு காலத்தில், தங்கள் ஊர்ப் பெயரை பெயரின் முன் வைக்கும் வழக்கம் இருந்த காலம் இதை உறுதிப் படுத்தும். தஞ்சையில் ஆரம்பித்து தஞ்சை ராமையாதாஸ், கிழக்கே போகப் போக பாபநாசம் சிவன், வடுவூர் துரைசாமி ஐயங்கார், மன்னை நாராயணசாமி, மல்லியம் ராஜகோபால் என எந்த ஊரை குறிப்பிட்டாலும் ஒரு புகழ் பெற்ற பெயரைக் குறிப்பிடலாம். இந்த பெருமையை மற்ற மாவட்டங்கள் முறியடிக்க முடியாது என்பது என் கருத்து. ஊர் பெயரை தன்னுடன் இணைக்காத எத்தனையோ மேதைகளையும் பல துறைகளில் உதாரணம் காட்டலாம். பதிவிற்கு நன்றி//

    தஞ்சையின் பெருமை நாட்டுக்குத் தெரியும், நம்மவர்க்குத்தான் தெரியவில்லை. சென்னையில் பிரபலமான சங்கீத சபையில் ஒரு இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். உட்கார இடமில்லை. ஒருவர் மூன்று இடங்களைத் துணி போட்டு 'ரிசர்வ்' செய்திருந்தார். நான் நிற்பதைப் பார்த்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஒரு இடத்தைக் காலி செய்து உட்காரச் சொன்னார். உங்களுக்கு எந்த ஊர் என்றார். தஞ்சாவூர் என்றேன். அடடே! சங்கீதத்தின் பிறப்பிடத்திலிருந்து வந்திருக்கும் உங்களுக்கு இல்லாத இடமா என்றார். அதுதான் தஞ்சாவூரின் சிறப்பு. நன்றி தேமொழி அவர்களே, உங்கள் ஊக்க மொழிகளுக்கு.

    ReplyDelete
  9. //Dont worry, They use to call me as
    "Tanjavoor Ethan" Idhallam thanjavoor karargalukku sagajam.//

    எத்தர்கள் எந்த ஊரில்தான் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அடைமொழி. பிக்பாக்கெட்டும், வீடுபுகுந்து திருடும் திருடர்களும் நாடு முழுவதும் இருக்கிறார்கள். தஞ்சாவூர்க்காரன் அதிபுத்திசாலி என்ற காழ்ப்பினால் விளைந்தது இந்த பெயர். மறப்போம், மன்னிப்போம் ராமுடு அவர்களே.

    ReplyDelete
  10. //ஆகா..
    அருமை...

    ஆரோக்கியமில்லா விமர்சனங்களானால்
    அதை பொருட்படுத்தாமலிருப்பது சிறப்பு//

    ஐயர் அவர்கள் கொடுத்திருக்கும் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது அனுபவத்தினால்.

    ReplyDelete
  11. //உண்மையில் நல்ல பதிவு...
    சுயபுராணம் என்பது வேறு.
    இது அனுபவ பொக்கிஷம்...//

    தமிழ் விரும்பி அவர்களுக்கு நன்றி. அனுபவங்கள் மனிதனைத் தலைகீழாக மாற்றிவிடும் இயல்புடையது என்பதை என்னைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். 'துர்வாசர்' என்றும் 'சற்று எட்டத்தில் இருக்க வேண்டும், நெருங்கக்கூடாது' என்றெல்லாம் பெயர் வாங்கியிருந்தேன் ஒரு காலத்தில். அனுபவம் என்னைப் புடம்போட்டுவிட்டது. கே.எம்.ஆருக்கு நன்கு தெரியும்.

    ReplyDelete
  12. thanjavoor miga nalla kovilagal suzhundha ooru.

    ReplyDelete
  13. ///"முடிவு எடுத்த பின் காரண காரியம் சொல்பவர்கள் அநீதி மான்கள்///

    எடுத்துவிட்டேன் முடிவு.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    இனி ஐயர் பக்கம் திரும்புவதே இல்லை என்று.

    போதுமடா சாமி.கண்ணைக் கட்டுகிறது.

    ஜானகிராமன் எடுத்த முடிவுக்கு என்னையும் ஐயர் மெதுவாக நகர்த்திக்கொண்டு இருக்கிறார்.விட்டு விட்டு ஓடிவிட்டார் ஜானகி.அவர் பாடு தேவலை.

    'விமானத்தில் ப்ரெட் சாப்பிட்டென்' என்றால், 'நான் கொலைப் பட்டினியாகவே போனேனே' என்பார்.

    'காபி சப்பிட்டேன்' என்றால் 'நான் காபி சாப்பிட்டு ஒரு யுகம் ஆயிற்று' என்பார்.

    'தியானம்' என்றேன் என்றால் 'திருக்குரானைத் தெரியுமா?'என்பர்

    'தெரியாது சொல்லுங்கள்' என்றால்

    "சொன்னாலும் புரியாது
    புரிந்தாலும் சொல்லாது

    சொன்னதெல்லாம் நில்லாது.
    நின்னதெல்லாம் சொல்லாது..'

    என்பது போல் புதிர் போடுவார்.

    'அவர்கள் 'அறிவாலி'என்கிறார்கள்' என்பார்.
    'யார் அவர்கள்? உங்க‌ள் அறிவாளித் தனம் என்ன?'என்றால்

    'அறிவுக்குத் தெரியாது இருட்டு
    இருட்டுக்குத் தெரியுமோ உருட்டு

    சொல்லித்தருவது இல்லை அறிவு
    கெல்லி எறிவதில்லை சுருட்டு'

    என்பது போல எதையோ எழுதுவார்.

    இவருடைய புதுக் கவிதை எரிச்சல் ஊட்டுகிறது என்று பல முறை சொல்லிவிட்டேன்.இவருக்கு இப்போ நான் புதுக்கவிஞ்ர் பட்டத்தைக் கொடுத்து விட்டேனாம்.அது கெட்டுது போங்கள். அப்படிப்பட்ட தப்பை நான் செய்யவில்லை.


    'நான் ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறேனே' என்று 'பிட்'போடுவார்.
    என்ன ,ஏது என்றால் அதற்கும் ஒரு புரியாத‌ பாட்டு.

    'விவேகனந்தர்' என்றால் 'அவர் ஆன்மீக வாதியில்லை;சமூக மாற்றம் கொண்டுவந்த‌வர்;பெரியார் போல' என்பார்

    'என்ன கரணத்தால் அப்படிச் சொல்கிறீர்கள்' என்றால்

    அதுக்கு ஒரு குழப்பப் பாட்டு.புதுக்கவிதை? இல்லை இல்லை. என்னமோ ஒன்று.

    நல்லதனமாகச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்.

    இதுதான் 'ஐயர்'தனம் என்றால்,

    சிவன் அறிய, அவருடைய‌ சிவ‌னெறிப்படி,நான் தினமும் வலம் வரும் சப்தரிஷீஸ்வரர் சாட்சியாக

    எல்லோருக்கும் சொல்லிக் கொள்கிறேன்:

    "நான் ஐயர் இல்லை ஐயர் இல்லை ஐயர் இல்லை"

    ஜானகிராமன் முடிவினை நான் எடுத்தால், இப்போதே சொல்லிக் கொள்கிறேன்
    அதற்கு 100 சதவிகிதம் ஐயருடைய குடைச்சல் தான் காரணம்.

    நான் எல்லாம் வெட்டியாக எதோ எழுதுவது போலவும், இவருடைய சரக்கு மிகப் பெரியது போலவும் ஒரு பாவனை.

    கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடப்போகிறேன் என்று பாவ்லா காட்டும் வீதி
    வித்தைக்காரர்? (மோடிமஸ்தான்?)

    இதோடு ஐய‌ரை என் எண்ணத்தில் இருந்து விலக்கி விட்டேன். இனி எதுவும் அவரைப்பற்றி பேசவில்லை. இதுவே கடைசி. இன்றே கடைசி.!

    ReplyDelete
  14. இந்த ஊர்ப்பெயர் எல்லாம் பொதுப்படையாக போகிறபோக்கில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். நடைமுறையில் கோபாலன் சார் சொல்வதுபோல் எல்லா ஊரிலும் எல்லா தரப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். இங்கும் பொதுப்படையாக 'மலையாளி கொலையாளி' என்பார்கள். ஆனால் நான் பழகியவரையில் அப்படி ஏதும் இல்லை. அதிலும் மருத்துவமனைகளில் செவிலிகளாக இருப்பவர்களின் முகம் சுளிக்காமல் செய்யும் சேவைக்கு ஈடு எதுவுமேயில்லை. அதேபோன்று பிஹாரி என்று அவர்களை முட்டாள்கள் போன்று பேசுவதும் நடைமுறையில் இருக்கிறது. இதைவிடக்கொடுமை, என் தம்பிக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தபோது பெண்ணின் அம்மா என் அம்மாவிடம் 'தஞ்சாவூர் / கும்பகோணத்துக்காரர்கள் மருமகளை மிகவும் கொடுமைப்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டேன், அதுதான் பயமாக இருக்கிறது' என்றார்களாம்.

    ReplyDelete
  15. வேலையிட அரசியல் தான் இருப்பதிலே மிகவும் கடுமையான அரசியல் //

    இதை நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  16. நல்ல விளக்கமான சுவாரஸ்யமான பதிவு..
    ஆங்காங்கே நீங்கள் தஞ்சாவூரார் என்று காட்டு காட்டென்று காட்டியிருக்கிறீர்கள்..உதாரணத்துக்கு
    ////நெல்லையில் பிறந்து சேலத்தில் வளர்ந்தவர் என்பதால் இப்படிப்பட்ட இரக்க குணம் (அல்லது ஏமாளித்தனமா?) கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லி, மெல்ல இவர் தலையைத் தடவியிருக்கிறார்.///////
    ///////ஒருக்கால் நான் தஞ்சாவூர் வரவில்லையென்றால், ஒரு அப்பிராணியாக கே.எம்.ஆர்.போல இருந்திருப்பேன். இப்போது நல்ல பயிற்சியும், அனுபவமும் சேர்ந்து தேர்ந்த 'தஞ்சாவூரானாக' ஆகிவிட்டேன்.///////

    ReplyDelete
  17. ////தேமொழி said...

    /////////இந்த பெருமையை மற்ற மாவட்டங்கள் முறியடிக்க முடியாது என்பது என் கருத்து. ஊர் பெயரை தன்னுடன் இணைக்காத எத்தனையோ மேதைகளையும் பல துறைகளில் உதாரணம் காட்டலாம். ////////

    தமிழகம் என்றுமே இந்தியாவிலே ஒரு தனித்தன்மை கொண்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம்..
    அதேபோல தமிழகத்திலே தஞ்சாவூர் என்றால் அதே அளவு எள்ளளவும் குறியாத அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது..
    நிகழ்கால அரசியலின் சூத்ரதாரிகளைப் பார்த்தால் தஞ்சாவூரே முழுக்கமுழுக்க ஆதிக்கத்தில் உள்ளது தெரியும்..மற்றைய துறைகளை விட அரசியலில் தஞ்சாவூருக்கு உள்ள ஆதிக்கத்தைப் பார்த்தால் ஒருவேளை சூரியனின் ஆதிக்கத்தில் வருகிறதோ என்னவோ?

    ReplyDelete
  18. ///////// kmr.krishnan said...

    'அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே' என்று பெரியவர் கோபாலன்ஜி நினைவு கூர்ந்துள்ளார்.

    'உருவுகண்டு எள்ளாமை வேண்டும்' என்பது போல ஊரைக் கண்டும் எள்ளாமை வேண்டும்.சொக்கத் தங்கத்தால் நகை செய்ய முடியாது. சிறிது செம்பு கலக்க வேண்டும். எனவே மனிதர்களில் உள்ள குறைபாட்டை ஊர் மேல் ஏற்றக் கூடாது.

    'எத்தன்'என்ற பெயர் தஞ்சாவூருடன் தான் இணைத்துப் பேச‌ப்படுகிறது.
    தில்லானா மோகனாம்பாள் வைத்தி போன்ற ஆசாமிகள் தஞ்சையில் சற்று கூடுதல் எண்ணிக்கையில் உண்டு என்றாலும் எல்லோரும் அப்படி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

    'அய்யம்பேட்டை வேலை' என்பது போல 'கும்பகோணம்' அகில உலகப் பெயர் பெற்றது.

    'அவன் சரியான கும்பகோணம்' என்றோ 'கும்போணத்தான்னா அவன்'
    என்றோ சொலவது தஞ்சாவூரில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வழக்காயிற்று.எப்படியென்றால் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில்
    Kumbakonam= A cheat, Cunning man
    என்று போட்டுவிட்டார்கள்.

    குடந்தையில் அப்போது நகராட்சித் தலைவராக இருந்த மறைந்த காசிராமன் இந்தப் பிரச்சனயை எடுத்துக்கொண்டு போராடி அடுத்து வந்த வெளியீடுகளில் ஆங்கில அகராதியில் இருந்து நீக்க வைத்தார். ஒருமுறை வெளி வந்தது வந்ததுதானே!

    இந்தச் செய்தியைதிரு. பி பி பாட்டிலிடம்(மஹராஷ்டிராவைச் சேர்ந்த தொழிற் சங்கத் தலைவர்) குடந்தயைக் கடக்கும் போது கூறினேன்.எல்லா மாநிலங்களிலும் ஒரு சில ஊர்களுக்கு இப்படிப் பட்ட அவப் பெயர் உள்ளது என்றார்.உதாரண‌மாக 'புனேவாலே'(புனாக்காரன்)என்று மஹாராஷ்ட்ராவில் கூறுவதுண்டாம்.

    தமிழின் முதல் நாவல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ள ராஜம் அய்யரின்
    கமலாம்பாள் சரித்திரத்தில் ஒரு வில்லி பாத்திரம் 'தஞ்சாவூராள்'என்றே குறிப்பிடப்படும்.

    நான் சேலத்திலேயே பிற‌ந்து சேலதிலேயே 21 வயதுவரை வளர்ந்தேன்.பின்னர் 38.5 ஆண்டுகள் தஞ்சாவூர். ஓர் ஆண்டு கோவை. ஓர் ஆண்டு சென்னை. அரை ஆண்டு மேட்டூர். என் பெற்றோர்தான் திருநெல்வேலிக்காரர்கள்.

    பல ஊர் மக்களிடம் பழகும் வாய்ப்பு எனக்கு என் தந்தையாரால் கிடைத்தது.
    தஞ்சாவூர்காரர்களிடம் சகஜ பாவம் இன்றுவரை வரவில்லை.ஏனோ தெரியவில்லை.நன்றி.//////


    எதார்த்த மனநிலையை அப்படியே வெளியிடவென்று ஒரு தைரியம் வேண்டும்..அது தங்களின் எழுத்துக்களில் தெரிகிறது..

    கும்பகோணம் மேட்டர் எனக்குப் புது செய்தி..நன்றி..

    எந்த விமர்சனத்தையும் ஸ்போர்டிவ் ஆக எடுத்துக்கொண்டு உற்சாகம் தரும் உங்கள் attitude க்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  19. ஜப்பானில் குளிர்காலம் கொஞ்சம்கொஞ்சமாய்த் தொடங்கிவிட்டது..அதுனாலே கொஞ்சம் தணப்பு இருந்தால் இதமா இருக்கும்ன்னு நினைச்சேன்..அது நேத்திலேருந்து ஆரம்பிச்சுட்டுது..இந்த campfire லே சேர்ந்து இருந்து அந்த கணங்களை என்ஜாய் பண்ண காரணமாயிருந்த எல்லோருக்கும் ஒரு 'ஒ'...

    ReplyDelete
  20. ///எந்த விமர்சனத்தையும் ஸ்போர்டிவ் ஆக எடுத்துக்கொண்டு உற்சாகம் தரும் உங்கள் attitude க்கு மிக்க நன்றி..///

    சொல்லி வாய் மூடவில்லை.அப்படி நான் இல்லை என்று மேலே என் பின்னூட்டம் ஒன்று பறை சாற்றுகிறது பாருங்கள்.

    ReplyDelete
  21. /////தமிழகம் என்றுமே இந்தியாவிலே ஒரு தனித்தன்மை கொண்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம்..
    அதேபோல தமிழகத்திலே தஞ்சாவூர் என்றால் அதே அளவு எள்ளளவும் குறியாத அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது..
    நிகழ்கால அரசியலின் சூத்ரதாரிகளைப் பார்த்தால் தஞ்சாவூரே முழுக்கமுழுக்க ஆதிக்கத்தில் உள்ளது தெரியும்..மற்றைய துறைகளை விட அரசியலில் தஞ்சாவூருக்கு உள்ள ஆதிக்கத்தைப் பார்த்தால் ஒருவேளை சூரியனின் ஆதிக்கத்தில் வருகிறதோ என்னவோ?/////

    இதை சோழ மண்டலம்னு சொல்லலாமா!
    எங்க சத்திய மூர்த்தி அதுக்குள்ளே வந்து விடுவார்!!
    ஹி...ஹி.....ஹி...

    ReplyDelete
  22. இந்த campfire லே சேர்ந்து இருந்து அந்த கணங்களை என்ஜாய் பண்ண காரணமாயிருந்த எல்லோருக்கும் ஒரு 'ஒ'...//

    இவரு எந்த ஊர்க்காரருன்னு இதுலேர்ந்து எல்லாருக்கும் தெரிஞ்சுருக்குமே?

    ReplyDelete
  23. காத்தலா? அழித்தலா?ன்னு பார்த்தால் ரெண்டுமே எதிரெதிர் துருவங்கலாப் போச்சே?என்ன பண்ண?
    அதுனாலே அழித்தலிளிருந்து காத்தல் தொழில் சரிவர செய்யப்படவேண்டும்னா
    நீங்க excite ஆகக்கூடாது KMRK சார்..பிரம்மாஸ்த்திரம் ஏதும் ஸ்டாக் இருக்கான்னு தேடிப்பாருங்க..
    'போர்க்களத்துலே பங்காளிஎல்லாம் பார்க்கக்கூடாது..பார்த்தனுக்கு அடாத உளச்சோர்வை நீக்கு..
    கடமையைச் செய்'ன்னு
    தத்துவம் சொன்னவரு பேரை வெச்சுகிட்டு நீங்க இப்புடி சோர்ந்தா
    எப்ப எப்பன்னு தன் தொழிலே குறியா இருக்கும் மெய்கண்டவர் அழிச்சுடமாட்டாரா?
    'போரில் வீரமரணம்...சொர்க்கம் - வெற்றி..தோல்வி.. அடைஞ்ச ரெண்டு பேருக்குமே உண்டு'
    அதுனாலே உங்க கடமையா நீங்க செய்யுங்க சார்..நாங்க எல்லோரும் வெயிடிங் லிஸ்ட்லே இருக்கோம்லே?

    ReplyDelete
  24. ///////kmr.krishnan said...
    ///எந்த விமர்சனத்தையும் ஸ்போர்டிவ் ஆக எடுத்துக்கொண்டு உற்சாகம் தரும் உங்கள் attitude க்கு மிக்க நன்றி..///

    சொல்லி வாய் மூடவில்லை.அப்படி நான் இல்லை என்று மேலே என் பின்னூட்டம் ஒன்று பறை சாற்றுகிறது பாருங்கள்.///////

    காத்தலா? அழித்தலா?ன்னு பார்த்தால் ரெண்டுமே எதிரெதிர் துருவங்கலாப் போச்சே?என்ன பண்ண?
    அதுனாலே அழித்தலிளிருந்து காத்தல் தொழில் சரிவர செய்யப்படவேண்டும்னா
    நீங்க excite ஆகக்கூடாது KMRK சார்..பிரம்மாஸ்த்திரம் ஏதும் ஸ்டாக் இருக்கான்னு தேடிப்பாருங்க..
    'போர்க்களத்துலே பங்காளிஎல்லாம் பார்க்கக்கூடாது..பார்த்தனுக்கு அடாத உளச்சோர்வை நீக்கு..கடமையைச் செய்'ன்னு
    தத்துவம் சொன்னவரு பேரை வெச்சுகிட்டு நீங்க இப்புடி சோர்ந்தா
    எப்ப எப்பன்னு தன் தொழிலே குறியா இருக்கும் மெய்கண்டவர் அழிச்சுடமாட்டாரா?
    'போரில் வீரமரணம்...சொர்க்கம் - வெற்றி..தோல்வி.. அடைஞ்ச ரெண்டு பேருக்குமே உண்டு'
    அதுனாலே உங்க கடமையா நீங்க செய்யுங்க சார்..நாங்க எல்லோரும் வெயிடிங் லிஸ்ட்லே இருக்கோம்லே?

    ReplyDelete
  25. ///// Uma said...
    இந்த campfire லே சேர்ந்து இருந்து அந்த கணங்களை என்ஜாய் பண்ண காரணமாயிருந்த எல்லோருக்கும் ஒரு 'ஒ'...//

    இவரு எந்த ஊர்க்காரருன்னு இதுலேர்ந்து எல்லாருக்கும் தெரிஞ்சுருக்குமே?///

    haa..haa...haa...

    Precisely!!!

    ReplyDelete
  26. ////Uma said...
    இந்த campfire லே சேர்ந்து இருந்து அந்த கணங்களை என்ஜாய் பண்ண காரணமாயிருந்த எல்லோருக்கும் ஒரு 'ஒ'...//

    இவரு எந்த ஊர்க்காரருன்னு இதுலேர்ந்து எல்லாருக்கும் தெரிஞ்சுருக்குமே?////

    இப்படிக்காட்டிக் கொடுக்கிறகுணம்கூட இந்த ஊரில் கூடவே இருக்கிறதே..என் செய்வேன்..

    ReplyDelete
  27. ////தமிழ் விரும்பி said...
    இதை சோழ மண்டலம்னு சொல்லலாமா!
    எங்க சத்திய மூர்த்தி அதுக்குள்ளே வந்து விடுவார்!!
    ஹி...ஹி.....ஹி...

    ////பதினொண்ணாம் நூற்றாண்டிலே இராசராச சோழன் இலங்கையை வென்று ஆட்சி நடத்தியிருக்கிறார்.

    எனவே பறந்துவிரிந்த சோழமண்டலத்தை மீண்டும் விரிவுபடுத்துவதில் ஒன்றும் தவறில்லை..மகிழ்ச்சியே..

    ////

    ReplyDelete
  28. அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கும்
    அன்பு வகுப்பறை தோழர்களுக்கும்

    அய்யரின்
    அன்பு வணக்கங்கள்...

    கடைசியாக எழுதும் அய்யரின்
    கருத்து எண்ணங்களுடன்

    படிக்கும் மாணவர்களுக்கு
    படிப்பதற்கு எளிதாக இருக்கவே

    இரண்டு வரிக்கு ஒரு வரி என
    இடையே இடைவெளியாக தருகிறோம்

    வகுப்பில் வரும் பின் ஊட்டத்திற்கு
    வரும் அனைத்து மாணவர்களுக்கும்

    அனுமதி உள்ளது போல்
    அய்யருக்கும் உண்டு தானே...

    யாரையும் புண்படுத்தாத வகையில்
    யதார்த்தமாக சொல்லும் செய்திகளை

    மாறுபட்டட கண்ணோட்டத்தில் பார்க்க
    மதி குட்ட அய்யரின் பின் ஊட்டங்கள்

    என்ன தவறு செய்தனவோ?
    எதற்கு இப்படி அந்த பின் ஊட்டமோ..

    வேறு பட்டு அவர் எழுதுவது மெய்யாக
    வேதனையை அளிக்கிறது..

    அய்யரின் பின் ஊட்டங்களை
    அவர் விருப்பப்படியே

    இனி வராது.. பின் ஊட்டமும்
    இதுவே கடைசி கடிதமும் இதுவே..

    நாம் அழைக்காவிட்டாலும் அவர்
    நம்முடனே சாட்சியாக இருக்கும் போது

    அவரை சாட்சிக்கு
    அழைப்பது போன்ற

    எந்த பழக்கமும் அய்யருக்கு என
    எப்போதுமே இருந்தது இல்லை..

    ஒரு மூத்த மாணவரை
    ஆர்வமாக எழுதும் அந்த சிந்தனைகளை

    அவர் ஆக்கங்களை ஆர்வமாக படிக்கும்
    ஆர்வலர் அதிகம் இருப்பதால்
    (அய்யர் உட்பட)

    அமைதியாக வகுப்பிற்கு வந்து
    அப்படியே செல்லவோம்

    பின் ஊட்டங்களை எதுவும்
    தான் முன்னாலே தாராமல்

    அவர் விருப்பப்படியே இனி
    அய்யரின் பின் ஊட்டங்கள் வராது

    புனைப் பெயரில் எழுதும்
    புதிய எண்ணமும் இல்லை..

    எண்ணங்களும் எழுத்துக்களும் சிறக்க
    எளிமையான வாழ்த்துக்ளுடன்

    தீபாவளி வாழ்த்துக்களையும்
    தொடர்ந்து வரும் கிருத்துமஸ் வாழ்த்து

    அடுத்தாண்டு வரும் புத்தாண்டு வாழ்த்து
    அன்பு இஸ்லாமியர்களின்

    தியாக திருநாள்
    பக்ரீத்துக்கும்

    வாழ்த்துக்களையும் அன்பு
    வணக்கங்களையும் சொல்லி

    அறிஞர் அண்ணாவை பற்றிய இந்த பாடலினை பரிசாக தந்து

    "எதையும் தாங்கும்
    இதயம் கொண்டு

    தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவுக்கொண்டு

    வைதவர் யாவரும் வாழட்டும் என்று வாழ்த்திய இதயம் அது

    வள்ளுவன் காட்டிய வழியல்லவா
    மற்றான் தோட்டத்து மாளிகைக்கும்

    நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர்

    பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை பாரினில் மீண்டும் காட்டியவர்

    நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர்
    நல்லோர்கள் உள்ளம் எல்லாம்
    நாள்தோறும் வாழுபவர்"



    இந்த கடைசி கடிதத்துடன்
    இனிமையாக விடைபெறுகிறோம்..

    விசு அய்யர்...

    ReplyDelete
  29. அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கும்
    அன்பு வகுப்பறை தோழர்களுக்கும்

    அய்யரின்
    அன்பு வணக்கங்கள்...

    கடைசியாக எழுதும் அய்யரின்
    கருத்து எண்ணங்களுடன்

    படிக்கும் மாணவர்களுக்கு
    படிப்பதற்கு எளிதாக இருக்கவே

    இரண்டு வரிக்கு ஒரு வரி என
    இடையே இடைவெளியாக தருகிறோம்

    வகுப்பில் வரும் பின் ஊட்டத்திற்கு
    வரும் அனைத்து மாணவர்களுக்கும்

    அனுமதி உள்ளது போல்
    அய்யருக்கும் உண்டு தானே...

    யாரையும் புண்படுத்தாத வகையில்
    யதார்த்தமாக சொல்லும் செய்திகளை

    மாறுபட்டட கண்ணோட்டத்தில் பார்க்க
    மதி குட்ட அய்யரின் பின் ஊட்டங்கள்

    என்ன தவறு செய்தனவோ?
    எதற்கு இப்படி அந்த பின் ஊட்டமோ..

    வேறு பட்டு அவர் எழுதுவது மெய்யாக
    வேதனையை அளிக்கிறது..

    அய்யரின் பின் ஊட்டங்களை
    அவர் விருப்பப்படியே

    இனி வராது.. பின் ஊட்டமும்
    இதுவே கடைசி கடிதமும் இதுவே..

    நாம் அழைக்காவிட்டாலும் அவர்
    நம்முடனே சாட்சியாக இருக்கும் போது

    அவரை சாட்சிக்கு
    அழைப்பது போன்ற

    எந்த பழக்கமும் அய்யருக்கு என
    எப்போதுமே இருந்தது இல்லை..

    ஒரு மூத்த மாணவரை
    ஆர்வமாக எழுதும் அந்த சிந்தனைகளை

    அவர் ஆக்கங்களை ஆர்வமாக படிக்கும்
    ஆர்வலர் அதிகம் இருப்பதால்
    (அய்யர் உட்பட)

    அமைதியாக வகுப்பிற்கு வந்து
    அப்படியே செல்லவோம்

    பின் ஊட்டங்களை எதுவும்
    தான் முன்னாலே தாராமல்

    அவர் விருப்பப்படியே இனி
    அய்யரின் பின் ஊட்டங்கள் வராது

    புனைப் பெயரில் எழுதும்
    புதிய எண்ணமும் இல்லை..

    எண்ணங்களும் எழுத்துக்களும் சிறக்க
    எளிமையான வாழ்த்துக்ளுடன்

    தீபாவளி வாழ்த்துக்களையும்
    தொடர்ந்து வரும் கிருத்துமஸ் வாழ்த்து

    அடுத்தாண்டு வரும் புத்தாண்டு வாழ்த்து
    அன்பு இஸ்லாமியர்களின்

    தியாக திருநாள்
    பக்ரீத்துக்கும்

    வாழ்த்துக்களையும் அன்பு
    வணக்கங்களையும் சொல்லி

    அறிஞர் அண்ணாவை பற்றிய இந்த பாடலினை பரிசாக தந்து

    "எதையும் தாங்கும்
    இதயம் கொண்டு

    தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவுக்கொண்டு

    வைதவர் யாவரும் வாழட்டும் என்று வாழ்த்திய இதயம் அது

    வள்ளுவன் காட்டிய வழியல்லவா
    மற்றான் தோட்டத்து மாளிகைக்கும்

    நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர்

    பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை பாரினில் மீண்டும் காட்டியவர்

    நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர்
    நல்லோர்கள் உள்ளம் எல்லாம்
    நாள்தோறும் வாழுபவர்"



    இந்த கடைசி கடிதத்துடன்
    இனிமையாக விடைபெறுகிறோம்..

    விசு அய்யர்...

    ReplyDelete
  30. இது என்ன? பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்ததே! கருத்து மோதல்கள் அறிவு வளர்ச்சியின் அறிகுறி என்பார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. இங்கு விவாதிக்கும் அனைத்தும் எதிரும் புதிருமாக இருப்பது சுவாரசியம் தானே! இதில் ஏன் இப்படியொரு மல்லுக்கட்டு. இரு முக்கிய மாணவர்களுக்குள் இப்படியொரு உரசல் வந்தது வருத்தமளிக்கிறது. யாரும் விலகவோ, மெளனம் காக்கவோ தேவையில்லை. அவரவர் கருத்து அவரவருக்கு. சிலர் மெல்ல நையாண்டி செய்வர். சிலர் எதிர் வந்து மோதுவர். இதெல்லாம் சகஜமில்லையா? இதற்காக கே.எம்.ஆர். ஒரு புறமும், ஐயர் ஒரு புறமும் மனவருத்தம் கொண்டு விலகிச் செல்வது நல்லது இல்லை என்பது என் கருத்து. இருவரும் மீண்டும் வகுப்புக்குள் வரவேண்டும். மோதல் இல்லாமல்கூட நம் கருத்தை வலிமையோடு சொல்ல முடியுமே! சொல்லிக்கொண்டிருங்கள். கேட்கத்தான் நாங்கள் இருக்கிறோமே, ஜப்பான் காரரும் இதையேதானே சொல்லியிருக்கிறார். கேளுங்கள், கேட்பீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  31. நல்லாத்தானே போய்கிட்டிருந்தது ....சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில், ராஜாவும், பாரதி பாஸ்கரும் ஒருத்தரை ஒருத்தர் விவாதத்தில் கவிழ்க்க முயலும் போது மின்சாரம் போய் தொலைக்காட்சி பார்க்க முடியாத அவஸ்தையாய் ஆய்டுச்சி. திருப்பி எப்ப மின்சாரம் வரும்னு காத்துக்கிட்டுருக்கேன் .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com