+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தியாவிற்கான சேவகர்கள்
வாரமலர்
---------------------------------------------------------------------------------------------------------------------
இன்று காந்தி ஜெயந்தி நாள். இதே தேதியில் 1869ல் மஹாத்மாஜி பிறந்தார்.
இந்தியா கிழக்கு இந்திய கும்பனியாரிடமிருந்து,இங்கிலாந்து அரசியின் நேர் ஆளுகைக்கு வந்தபின்னர், 11 ஆண்டுகள் கழித்துத்தான் மஹாத்மாஜி பிறந்தார்.
தென் ஆப்பிரிக்க மண்ணில் சத்தியாகிரகப் போராட்ட முறைகளை வகுத்து, சிறிது நடைமுறைப் படுத்திவிட்டு அதனை சோதித்துப் பார்க்கத் தாயகமாம் பாரதம் வந்து தன் பணியைத் துவக்கினார்.
"இந்தியாவிற்கான சேவகர்கள்" (Servants of India) என்ற அமைப்பில் தொண்டாற்ற முனைந்தார்.
அப்போது 1 ஜூன் 1915ல் அவர் எழுதிய ஒரு கடிதத்தின் தமிழ் வடிவத்தைக் கீழே தந்துள்ளேன்.
-----------------------------------------------------------------------------------------------------------
அஹமதாபாத்
1 ஜூன் 1915
அன்புள்ள ஐயா!
திரு நடேசன் அவர்கள் தாங்கள் அவருக்கும் எனக்கும் எழுதிய கடிதங்களை எனக்கு அனுப்பி வைத்துள்ளார்.அக் கடிதங்களுக்காக என்
நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மகனுக்கும் எனக்கும் கடிதத் தொடர்பு இருந்துள்ளது. உங்களுடைய மகனின்
கடைசிக் கடிதத்தில் தான் தன் தந்தையால்(உங்களால்) வீட்டை விட்டு விரட்டப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதனால் நேற்று
உங்கள் மகனுக்கு இங்கே என்னிடம் வந்துவிடும்படி எழுதினேன்.இறுதியாக அவருடைய விருப்பம் "இந்தியாவிற்கான சேவகர்கள்" அமைப்பில் இணைந்து பணியாற்றுவதே போலும்!உங்கள் மகன் இங்கே வந்த பின்னர், அவருடைய வயது குறைவானது என்று தெரியவருமாயின் அவரை நான் கட்டாயம் தங்களிடம் திருப்பி அனுப்பி விடுவேன் என்று என்னளவில் கூறிக் கொள்கிறேன். பெற்றோர்களின் அனுமதியில்லாமல் குறைந்த வயதுள்ள இளைஞர்களை நான் எடுத்துக் கொள்வதில்லை.ஆகவே தாங்கள் என்னுடைய ஒத்துழைப்பின் மேல் முழுமையான
நம்பிக்கை வைக்கலாம்.
உங்கள் உண்மையுள்ள,
எம்.கே.காந்தி
பி.ஜி பாலசுந்திர சாஸ்திரி,
கோவிந்தபுரம் கிராமம்,
ஆடுதுறை அஞ்சல்,
தஞ்சாவூர் மாவட்டம்
சென்னை மாகாணம்.
--------------------------------------------------------------------------------
நேற்று ஆடுதுறையைக் கடந்துதான் திருக்கடையூர் சென்றேன்.ஆடுதுறை என்ற பெயர்ப் பலகையைக் கண்டபோது, காந்திஜியின் இக்கடிதத்தை எப்போதோ வாசித்தது நினைவுக்கு வந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைந்தேன்.
இக்கடிதம் பல செய்திகளை நமக்குத் தெரிவிக்கிறது.
1. எல்லா கடிதங்களையும் மதித்து உடனுக்குடன் பதிலளிக்கும் காந்திஜியின் பண்பு.
2. காந்திஜி தேசியத்தலைவர் ஆகாத கால கட்டத்திலேயே பாரதத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த
இளைஞன் அவருடைய பணிகள் பற்றி தெரிந்து வைத்துள்ளான்.
3. ஆச்சாரமான சாஸ்திரி குடும்பத்தில் பிறந்துவிட்டு, தேசப்பணிக்காகத் தன்னை மாற்றிக் கொள்ளவும், ஆசாரங்களையும் குடும்பத்தையும்
துறக்கவும் துணிந்து விட்டான் அந்த இளைஞன்.
4. அதற்காகத் தன் தந்தை தன்னை விரட்டி விட்டதாக ஒரு புளுகை(?) அவிழ்த்து விட்டுள்ளான்.
5. காந்திஜி ஏதோ ஒரு ஆள் கிடைக்கிறதே என்று நினைக்காமல், வயதுத்தகுதி இல்லையெனில் திருப்பி அனுப்பிவிடுவதாக உறுதி அளிக்கிறார்!
6. தகவல் தொடர்பு மிகவும் குறைந்த அக்காலத்திலேயே நாட்டின் தென்கோடி இளைஞனுடன் ஒரு சமபாவ சம்பாஷணையை செய்ய காந்திஜியால் முடிந்து இருக்கிறது
கோவிந்தபுரம் இன்றும் கூட மிகவும் சிறிய கிராமம்தான்.பகவன் நாம போதேந்திர சுவாமிகளின் அதிஷ்டானம்(பிருந்தாவனம்) அங்கு
உள்ளது.எனவே விவரம் அறிந்த ஆன்மீக அன்பர்கள் அங்கே யாத்திரை செல்வார்கள்.தற்சமயம் புதிதாக தட்சிண பண்டரிபுரம் என்று ஸ்ரீ
பாண்டுரங்கனுக்குக் கோவில் கட்டப்பட்டுள்ளது. எனவே சிறிது யாத்திரிகர்கள் நடமாட்டம் கடந்த 5 வருடங்களாக இந்த கிராமத்தில் உண்டு.
ஆனால் 1915ல் இது ஒரு குக்கிராமமே. காந்திஜியின் ஆன்ம வலிமையாலேயே இக்குக்கிராம இளைஞன் கவரப்பட்டு இருக்க வேண்டும்.
வாழ்க மஹாத்மா காந்திஜியின் புகழ்!
வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------
அந்த யூட்யூப் காணொளியில் வரும் பாடலுக்கான இந்திச் சொற்களை ஆங்கிலத்திலும்,அதன் ஆங்கில மொழியாக்கத்தையும், தமிழ் மொழிபெயர்ப்பையும் அளித்துள்ளேன். இந்திப்பாடல் பாடப்பட்டுள்ளது மிகவும் நன்றாக உள்ளது. அதனைப்போலவே அதே ராகத்தில் பாட தமிழில் யாராவது பாடல் எழுதிக் கொடுத்தால் நன்றியுடையவனாவேன்.
-கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
Ufak Pe Paanv Aur Chalon Akad Ke Chalon
Falak Pakad Ke Utho Aur Hawa Pakad Ke Chalo

Tum Chalo Toh Hindustan Chale
Tum Chalo Toh Hindustan Chale
Hindustan Chale
Chalo
ENGLISH TRANSLATION
=======================
Hold the sky to stand, and walk with the wind in your hands,
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Lend your hand to pull out the Sun in the morning,
Fill your hands with sunlight, and throw it around,
Keep you legs on the horizon, and walk with pride,

================================
தமிழ் மொழி பெயர்ப்பு
====================
வானத்தை கையகப்படுத்து;
காற்றினை உன் புயத்தில் ஏற்றிக் கொண்டு கைவீசி நட;
நீ முன்னோடு,ஏனெனில் இந்தியா உன் பின்னோடும்;
கதிரவனைக் காலையில் இழுத்துவரக் கைகொடு;
உன் கரங்களில் கதிரொளியை நிரப்பிக் கொண்டு எல்லாதிசைகளிலும் அவ்வொளியைத் தெளித்துவிடு;
வான்வெளியில் உன் பாதங்களைப் பதித்து செம்மாந்து நட;
வானத்தைக் கையகப்படுத்து;

நீ முன்னோடு,ஏனெனில் இந்தியா உன் பின்னோடும்;-----------------------------------------------------------------------------

ஆக்கியோன்:கே முத்துராமகிருஷ்ணன்.(லால்குடி)

அந்த யூட்யூப் காணொளியில் வரும் பாடலுக்கான இந்திச் சொற்களை ஆங்கிலத்திலும்,அதன் ஆங்கில மொழியாக்கத்தையும், தமிழ் மொழிபெயர்ப்பையும் அளித்துள்ளேன்.
ReplyDeleteஇந்திப்பாடல் பாடப்பட்டுள்ளது மிகவும் நன்றாக உள்ளது. அதனைப்போலவே அதே ராகத்தில் பாட தமிழில் யாராவது பாடல் எழுதிக் கொடுத்தால் நன்றியுடையவனாவேன்.
என் ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி. படிக்கப் போகும் அனைவருக்கும் நன்றி!
TRANSLITERATION
====================
Falak Pakad Ke Utho Aur Hawa Pakad Ke Chalo
Falak Pakad Ke Utho Aur Hawa Pakad Ke Chalo
Tum Chalo Toh Hindustan Chale
Tum Chalo Toh Hindustan Chale
Tum Chalo Toh Hindustan Chale
Tum Chalo Toh Hindustan Chale
Lagaaon Haath Ke Suraj Subaha Nikala Kare
Hatheliyon Mein Bhare Dhup Aur Ujaala Karen
Ho Lagaaon Haath Ke Suraj Subaha Nikal Na Chale
Hatheliyon Mein Bhare Dhup Aur Ujaala Karen
Ufak Pe Paanv Rakho Aur Chalon Akad Ke Chalon
Ufak Pe Paanv Aur Chalon Akad Ke Chalon
Falak Pakad Ke Utho Aur Hawa Pakad Ke Chalo
Falak Pakad Ke Utho Aur Hawa Pakad Ke Chalo
Tum Chalo Toh Hindustan Chale
Tum Chalo Toh Hindustan Chale
Hindustan Chale
Chalo
ENGLISH TRANSLATION
=======================
Hold the sky to stand, and walk with the wind in your hands,
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Lend your hand to pull out the Sun in the morning,
Fill your hands with sunlight, and throw it around,
Keep you legs on the horizon, and walk with pride,
Hold the sky to stand, and walk with the wind in your hands,
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
================================
தமிழ் மொழி பெயர்ப்பு
====================
வானத்தை கையகப்படுத்து;
காற்றினை உன் புயத்தில் ஏற்றிக் கொண்டு கைவீசி நட;
நீ முன்னோடு,ஏனெனில் இந்தியா உன் பின்னோடும்;
கதிரவனைக் காலையில் இழுத்துவரக் கைகொடு;
உன் கரங்களில் கதிரொளியை நிரப்பிக் கொண்டு எல்லாதிசைகளிலும் அவ்வொளியைத் தெளித்துவிடு;
வான்வெளியில் உன் பாதங்களைப் பதித்து செம்மாந்து நட;
வானத்தைக் கையகப்படுத்து;
காற்றினை உன் புயத்தில் ஏற்றிக் கொண்டு கைவீசி நட;
நீ முன்னோடு,ஏனெனில் இந்தியா உன் பின்னோடும்;
மகாத்மாவுக்கு ஜே..
ReplyDeleteநல்லதோர் ஆக்கம்..இது வரையிலே பொதுவிஷயங்களைப் பற்றிய
KMRK யின் படைப்புகளாய் வெளிவந்ததிலே நிறைவாக எனக்குப் பிடித்ததும் இதுவே..
கடிதத்தைப் பற்றிய அலசல் தனித்துவம் பெறுகிறது..
பின்னிணைப்பாக அமைந்த பாடல் ராகமும், அதைக் காட்சியமைதிருக்கும் விதமும்,மரத்தைத் தூக்க எத்தனிக்கும் போது சின்னப்பையனின் எக்ஸ்ப்ரேஷனும்,
தமிழில் மொழிபெயர்ப்பும்..என்று தனித்துவம் நீண்டுகொண்டே போகிறது..
நல்ல பதிவு..
ரசித்து வெளிட்ட
ஆசிரியருக்கும் நன்றி..
மகாத்மாவுக்கு ஜே..
Thanks for the post. I remember Einstein words on Mahatma Gandhi
ReplyDelete"Generations to come, it may be, will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth."
Regards
Ramadu
/////Comments from Iyer: பாடல் அருமை பாராட்டுக்கள்..வாழ்க பாரதம்; சிந்தனைக்கு இந்த வகுப்பில் கவிஞரின் வரிகளை பகிர்ந்து கொள்கிறேன் படித்து மகிழ்வோம்..வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! இன்று எமை வருத்தும் இன்னல்கள் மாய்க! நன்மை வந்து எய்துக! தீதெலாம் நலிக அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!//////
ReplyDeleteநன்றி விசுவநாதன்!
Thanks for the post. I remember Einstein words on Mahatma Gandhi
ReplyDelete"Generations to come, it may be, will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth."
Regards
Ramadu
///நல்லதோர் ஆக்கம்..இது வரையிலே பொதுவிஷயங்களைப் பற்றிய
ReplyDeleteKMRK யின் படைப்புகளாய் வெளிவந்ததிலே நிறைவாக எனக்குப் பிடித்ததும் இதுவே..///
ரொம்ப 'டச்சிங்' பண்ணிட்டீங்க மைனர்வாள்!
எதையுமே ஆத்மார்த்தமாகச் செய்தால் நன்றாக வருகிறது. என் தந்தையாருக்கு
உப்பிட்டவர் காந்திதான். காந்தி பெயரைச் சொல்லித்தான் என் ஒவ்வொரு கவளமும் குட்சிக்குள் போய் உள்ளது. அந்த நன்றியை நினைத்துக் கொண்டால்
தானக எழுத்து நனறாக அமைகிறது.
காப்பீட்டூக் கழகத்தில் காந்தியைப் பற்றி நான் அளித்த பதிலே எனக்கு வேலையைப் பெற்றுத் தந்தது.இதனை முன்னரே பதிவில் கூறியுள்ளேன்.
www.gandhitoday.in
என்ற வலை தளத்தை வாசிக்கவும்.நன்றி!
ராமுடு அவர்களுக்கும், விசு ஐயரவர்களுக்கும் நன்றி!
ReplyDeleteஆக்கம் நன்று...
ReplyDeleteகலியுக வரதர் கண்கண்ட மகாபுருஷர் -ஆன்ம
வலிமையில் இமயம் வென்றவர் நமது மகாத்மா அவர்களின் பிறந்த
இந்நாள் என்றும் நமக்கெல்லாம் பொன்னாள்.
இந்த சத்தியம் பெற்ற நித்தியக் குழந்தையை
புத்தியில் கொண்டே புனைவேன் ஒருப் பாடலை....
அன்பெனும் பேரொளியின் அற்புதக் குழந்தை
மண்ணுயிரெல்லாம் மாண்புற மாதவம் புரிந்தே
விண்ணவர்போற்ற விந்தைகள் செய்தார் - மகாத்மா
மண்ணுலகம் வந்த மாதவனே!.
செயற்கரிய செய்தார், செவ்வனே செய்தார்
செய்யும் யாவிலும் சத்தியம் கொண்டார்
அஹிம்சையெனும் யாகம் வளர்த்தே -அதிலே
அடிமை தளைகளை ஆகுதியாக்கி -அழகிய
விடுதலை வேள்வி, எங்கும் நடத்தியே
ஊமைமக்களை உரிமை முழக்கமிடச் செய்த
உலகம் போற்றும் உன்னதத் தலைவர்
மனிதநேய மகாபுருஷன்; பாரதம் ஈன்ற
தவப்புதல்வன், கத்தியும் ரத்தமும் இன்றியே
யுத்தம் செய்யும் புத்தம் புதிய கலையை
பூமியில் படைத்த கலியுக பிரம்மா
ஜீவமுக்தி பெற்ற ஸ்ரீராமபக்தர் -எங்கள்
அண்ணல் மகாத்மா வான் புகழ்
வாழிய! வாழிய!! வாழியவே!!!
அன்புடன்,
ஆலாசியம் கோ.
சிறந்த இந்திப் பாட்டும், படமும், பிரசுரித்த்மைககு மிக்க நன்றி.
ReplyDeleteஇதன் தமிழாக்கமாக பல வருடங்களுக்கு முன்பே வந்த ஒரு சினிமாப் பாடல் நினைவுக்கு வருகிறது.
நடடா ராஜா நடடா
நீ நடடா ராஜா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப பார்த்தே திருந்திடவே
நீ நடடா ராஜா
இதற்குமேல் தெரியவில்லை,
இதே மெட்டில் இன்த பாட்டை விரிவு படுத்தலாம்
ச.முத்துகுமாரசுவாமி, சென்னை
தேசப் பிதாவே
ReplyDeleteவணக்கம்.
ஒரு வேளை
நீ
இந்தியாவில்
ஜனிதிருக்கவிட்டால்,
இப்போது நடக்கும்
ஜனனங்களும்
அடிமை ஜனனங்களாகவே
இருந்திருக்கும்.
தந்தையே...
உன் உதய தினத்தில்
'வகுப்பறையில்'
ஒன்று கூடி
உச்சரிக்கிறோம் ஜெய் ஹிந்த் .
பின்னூட்டம் இட்ட நண்பர்கள் திருவாளர்கள் ஆலாசியம், முத்துக்குமாரசுவாமி ஆகியோர்களுக்கு நன்றி!
ReplyDeleteதனுசு அவர்களே! ஆம், ஜெய்ஹிந்த்!!
ReplyDeleteநல்ல ஆக்கம், மகாத்மாவின் நினைவு நாளில் எல்லா சானல்களும் சிறப்பு ஓலிபரப்பு என்ற பெயரில் மகாத்மாவைத்தவிர மற்ற எல்லா விஷயங்களையும் காட்டி காசு பார்க்கின்றன, உங்கள் தளத்தில் அவர் எழுதியக்கடிதத்தை வெளியிட்டு அதன் சிறப்பை விளக்கியது முற்றிலும் அபூர்வமானது. நன்றி
ReplyDeleteதங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி திரு தவநெறிச்செல்வன் அவர்களே!நல்ல ஊக்க டானிக்காக உள்ளது.
ReplyDeleteநல்ல ஆக்கம்
ReplyDeleteஎன்ன ஆயிற்று உமஜி?
ReplyDeleteவழக்கமான LOL இல்லையே?
மைனர்வாளைப் பற்றி போட்ட பின்னூட்டத்திற்கே வந்து கலாய்ப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்!
காந்தியைப்பற்றிய / மற்றும் உங்களது சில சீரியஸ் பதிவுகளில் கலாய்க்க எங்கே இடம் இருக்கிறது? அதான், வேறு ஒன்றும் காரணம் இல்லை.
ReplyDelete