-------------------------------------------------------------------------------------
Astrology கற்பூரம், கரி & வாழை மட்டை
மனிதர்களில் மூன்று வகை உண்டு என்று என் தந்தையார் சொல்வார்:
1. கற்பூர புத்திக்காரன்
2. கரி புத்திக்காரன்
3. வாழைமட்டை புத்திக்காரன்
என்று மனிதர்கள் மூன்று வகைப்படுவார்கள் என்பார்
தீயை அருகில் கொண்டுபோகும்போதே கற்பூரம் டக்’கென்று பிடித்துக் கொள்வதைப்போல கற்பூர புத்திக்காரன் சொன்னதை சொன்ன விநாடியே புரிந்து கொண்டுவிடுவான். கரி ஊத ஊதத்தான் நெருப்பைப் பிடித்துக் கொள்ளும். அந்தவகைப் புத்திக்காரனுக்கு, தொடர்ந்து சொல்லி, சொல்லிப் புரிய வைக்க வேண்டும். வாழைமட்டை புத்திக்காரனுக்கு என்ன சொன்னாலும், மண்டையில் ஏறாது.
ஜோதிடத்தில் புத்தியின் அளவை இன்னும் பல வகையாக்கலாம்.
புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அல்லது கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் ஜாதகனை கற்பூர புத்திக்காரன் எனலாம்
அதற்கு மாறாக இருந்தால், வித்தை குறைவு. கரிபுத்திக்காரன். ஆனால் அதே புதன் தீய கிரகங்களின் சேர்க்கையோடு வலுவாக இருந்தால், ஆசாமி நெகட்டிவான வேலைகளில் படு கில்லாடியாக இருப்பான். அதற்கு வாழை மட்டையை உதாரணமாகச் சொல்ல முடியது. காய்ந்த சருகுகளைச் சொல்லலாம். சருகுகளுக்கும் வைத்தவுடன் பற்றிக் கொள்ளும் தன்மை உண்டு. அப்பறம் அச்சுப்பிச்சு, அம்மாஞ்சி போன்றவர்கள்
அதற்குப் பிறகுபுத்தி சுவாதீனமின்மை. அது கொடுமையானது.
மனகாரகனை வைத்தும் புத்திநாதனை வைத்தும் அதுபோன்று புத்திகள் பலவகைப்படும். அது மேல் நிலைப்பாடம். விரிவாக எழுத உள்ளேன். பொறுத்திருங்கள்.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு. - குறள் எண் 396
என்றார் வள்ளுவப் பெருந்தகை!
(மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவிற்கே நீர் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்)
இன்று சொல்ல வந்த விஷயம் அதுதான். கற்பதை நிறுத்திவிடாதீர்கள். இன்று இணையத்தில் கோடிக்கணக்கான பக்கங்கள் அறிவை மேம்படுத்தும் முகமாக உள்ளன. தொடர்ந்து நல்ல ஆக்கங்களைப் படியுங்கள்.
தொடர்ந்து கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியைப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் அறிவை அவர் மேம்படுத்துவார். இன்று சரஸ்வதிக்கான பூஜை தினம். அவரை மனமுவந்து வணங்குவோம்!
---------------------------------------------------------------------------------------------------------
சரஸ்வதி தேவி எங்கெங்கே இருப்பார் என்று முண்டாசுக் கவிஞன் பட்டியல் இட்டுள்ளான். அசத்தலாக உள்ளது. அனைவருக்கும் தெரிந்த பாடல் என்றாலும், மீண்டும் ஒருமுறை படிப்பதால் ஒன்றும் குறைந்துவிடாது. படிப்போம். உங்களுடன் சேர்ந்து நானும் படிக்கிறேன்
அன்புடன்
வாத்தி (யார்)
---------------------------------------------------------------------------------------------------------
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
(வெள்ளை)
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்
(வெள்ளை)
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்
(வெள்ளை)
- மகாகவி சுப்ரமணிய பாரதி
வாழ்க வளமுடன்!
Astrology கற்பூரம், கரி & வாழை மட்டை
மனிதர்களில் மூன்று வகை உண்டு என்று என் தந்தையார் சொல்வார்:
1. கற்பூர புத்திக்காரன்
2. கரி புத்திக்காரன்
3. வாழைமட்டை புத்திக்காரன்
என்று மனிதர்கள் மூன்று வகைப்படுவார்கள் என்பார்
தீயை அருகில் கொண்டுபோகும்போதே கற்பூரம் டக்’கென்று பிடித்துக் கொள்வதைப்போல கற்பூர புத்திக்காரன் சொன்னதை சொன்ன விநாடியே புரிந்து கொண்டுவிடுவான். கரி ஊத ஊதத்தான் நெருப்பைப் பிடித்துக் கொள்ளும். அந்தவகைப் புத்திக்காரனுக்கு, தொடர்ந்து சொல்லி, சொல்லிப் புரிய வைக்க வேண்டும். வாழைமட்டை புத்திக்காரனுக்கு என்ன சொன்னாலும், மண்டையில் ஏறாது.
ஜோதிடத்தில் புத்தியின் அளவை இன்னும் பல வகையாக்கலாம்.
புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அல்லது கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் ஜாதகனை கற்பூர புத்திக்காரன் எனலாம்
அதற்கு மாறாக இருந்தால், வித்தை குறைவு. கரிபுத்திக்காரன். ஆனால் அதே புதன் தீய கிரகங்களின் சேர்க்கையோடு வலுவாக இருந்தால், ஆசாமி நெகட்டிவான வேலைகளில் படு கில்லாடியாக இருப்பான். அதற்கு வாழை மட்டையை உதாரணமாகச் சொல்ல முடியது. காய்ந்த சருகுகளைச் சொல்லலாம். சருகுகளுக்கும் வைத்தவுடன் பற்றிக் கொள்ளும் தன்மை உண்டு. அப்பறம் அச்சுப்பிச்சு, அம்மாஞ்சி போன்றவர்கள்
அதற்குப் பிறகுபுத்தி சுவாதீனமின்மை. அது கொடுமையானது.
மனகாரகனை வைத்தும் புத்திநாதனை வைத்தும் அதுபோன்று புத்திகள் பலவகைப்படும். அது மேல் நிலைப்பாடம். விரிவாக எழுத உள்ளேன். பொறுத்திருங்கள்.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு. - குறள் எண் 396
என்றார் வள்ளுவப் பெருந்தகை!
(மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவிற்கே நீர் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்)
இன்று சொல்ல வந்த விஷயம் அதுதான். கற்பதை நிறுத்திவிடாதீர்கள். இன்று இணையத்தில் கோடிக்கணக்கான பக்கங்கள் அறிவை மேம்படுத்தும் முகமாக உள்ளன. தொடர்ந்து நல்ல ஆக்கங்களைப் படியுங்கள்.
தொடர்ந்து கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியைப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் அறிவை அவர் மேம்படுத்துவார். இன்று சரஸ்வதிக்கான பூஜை தினம். அவரை மனமுவந்து வணங்குவோம்!
---------------------------------------------------------------------------------------------------------
சரஸ்வதி தேவி எங்கெங்கே இருப்பார் என்று முண்டாசுக் கவிஞன் பட்டியல் இட்டுள்ளான். அசத்தலாக உள்ளது. அனைவருக்கும் தெரிந்த பாடல் என்றாலும், மீண்டும் ஒருமுறை படிப்பதால் ஒன்றும் குறைந்துவிடாது. படிப்போம். உங்களுடன் சேர்ந்து நானும் படிக்கிறேன்
அன்புடன்
வாத்தி (யார்)
---------------------------------------------------------------------------------------------------------
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
(வெள்ளை)
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்
(வெள்ளை)
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்
(வெள்ளை)
- மகாகவி சுப்ரமணிய பாரதி
வாழ்க வளமுடன்!
நன்றி அய்யா. தங்களுக்கு எனது இதயம் கனிந்த சரஸ்வதி மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாத்தியாருக்கும், நண்பர்களுக்கும் நவராத்ரி, ஆயுதபூஜை,விஜயதசமி வந்தனங்களும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteபண்டிகை வாழ்த்துக்கள்; பொருத்தமான பதிவிற்கு நன்றி ஐயா.
ReplyDeleteமீன லக்கினத்தில் பிறந்து ஏழில் புதன் இருக்க ஆசைதான், ஆனால் நம் கையில்தான் எதுவும் இல்லையே.
கற்ற கல்வியே உபயோகப் படாமல் துன்பப் படுபவர்களையும் (புலமை பெற்றவர்கள் வறுமையில் வாடுவதும்), "வாத்தியார் பிள்ளை கோமாளி,வைத்தியர் பிள்ளை நோயாளி" என அந்த சேவை செய்பவர்களே பாதிக்கப் படுவதாக கூறப்படும் வழக்குகளையும் பற்றி ஜோதிட பாடங்கள் சொல்வதை உங்கள் பதிவுகள் வழியாக தெரிந்து கொள்ள விரும்ப்புகிறேன். நன்றி
புதன் உச்சத்தில் இருந்தால் சுக்கிரன் நீசத்தில் இருக்க வேண்டிய நிலை???!!! இதை நான் கவனித்ததில்லை இதுவரை .... யார் போட்ட திட்டம் இது....
ReplyDeleteFor longer burning coal is preferred than camphor. Every type of person has his own niche areas. Let us not call some more talented than the others.
ReplyDeleteஅதிகாலை பொழுது
ReplyDeleteஅருமையான பதிவு!..
அமரகவியவன் பாரதி -வெண்
ஆம்பல் அமர் பாரதி தேவியை
போற்றியப் பாடல் தாங்கிய
பதிவு அதனாலே அது
பெற்றது உயர்வு....
அருள் புரிவாய் அன்னையே என்று
கலைவாணி அவள் பாதம் பணிகிறேன்..
நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.
வகுப்பு மீண்டும் களைகட்டுகின்றது.
ReplyDeleteமெதுவாகத்தான் பாடங்களை கிரகிக்கின்றேன்.
பண்டிகை வாழ்த்துக்கள்;
வாத்தியாருக்கு நன்றிகள்.
பாரதியின் பாடலை நினைவுபடுத்தியதற்கு நன்றி ஐயா. வாத்தியாருக்கும், வகுப்பறை நண்பர்களுக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு இதயம் கனிந்த சரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜயா வணக்கம், விஜய தசமி வாழ்த்துக்கள்.பாடம் அருமை. He he he nan kaintha sarugu pondra type... Take care. God bless. . .
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்,
ReplyDeleteகாலை வேளையில் வித்தைகளுக்கு அதிபதியான கலைமகளை கொண்டாடும் நன் நாளில் மனதிற்க்கு இனிய பதிவு....என் ஜாதகத்தில் புத பகவான் லக்ன(தனுசு லக்னம்)கேந்த்திரத்தில் 7ல் ஆட்சி உடன் செவ்வாய் ,சந்திரன்.செவ்வாய் பாப கிரகமானாலும் லக்னத்துக்கு யோக காரகன் அதனால் சருகு ஆகாமல் (அ) ஆக்காமல் நல்ல புத்தியை வளர்க்க நல்ல குருமார்கள் மத்தியில் இருக்க வழி ஏற்படுத்தி உள்ளார் போலும்....அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்த்துக்கள்
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை / விஜய தசமி வாழ்த்துக்கள். நாம் விஜயதசமியை அம்பாள் அரக்கனைக்கொன்றதாகக் கொண்டாடுகிறோம். வடஇந்தியாவில் இராமர் இராவணனைக்கொன்ற நாளாக கொண்டாடப்படுகிறது. நாளை ஆங்காங்கே இராவணின் உருவ பொம்மை மெகா சைசில் செய்து (அதற்குள் வெடிமருந்து போன்றவற்றை போட்டிருப்பார்கள்) இரவு ஆனதும் கொளுத்துவார்கள்.
ReplyDeleteGuru Vanakkam,
ReplyDeleteWish you and all the bloggers a happy and continued learning.
Regards
RAMADU
அன்புள்ள அஸ்ட்ரோ! செவ்வாய் கடகத்திற்கும், சிம்மத்திற்கும் மட்டுமே யோககாரகன்.தனுசுக்கு எப்படி என்று சொன்னால் கேட்டுக் கொள்கிறோம்!
ReplyDeleteகுரு வனக்கம்,
ReplyDeleteநல்லதொரு ஆரம்பம். இனி எல்லாம் தமிழ் தான்.
ரமாடு
அனைவருக்கும் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துகள். என்னைப் போன்று புதிதாக எழுத ஆரம்பித்துள்ளவர்களுக்கு கலைமகளின் அருள் நிறையவே தேவைப்படுகிறது
ReplyDeleteவாத்தியார் அவர்களுக்கும், சீனியர் மாணவர்களுக்கும், ஜூனியர் மாணவர்களுக்கும், லாஸ்ட் பெஞ்ச் மாணவனின் உள்ளம் கனிந்த சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி
பாண்டியன்
அறிவை விலைகூறும்
ReplyDeleteஅறிவாளிகள் நிறைந்த உலகில்..
அன்போடும் அடக்கத்தோடும்
அளவில்லா பாசத்துடனும் பாடம்தரும்
வகுப்பறை வாத்தியாருக்கும் ..
வகுப்பிற்கு வந்து செல்லும் ..
அன்புத் தோழர்களுக்கும்
அளவில்லா விழாக்கால வாழ்த்துக்கள்.
அறிஞர் கூற்றை சிந்தனைக்கு
அள்ளித் தருகிறோம்..
"பொய்க்கல்வி பெருமை பேசும். உண்மை அறிவு தன்னடக்கம் சொல்லும்"-ரஸ்கின்.
//////Blogger Nila said...
ReplyDeleteநன்றி அய்யா. தங்களுக்கு எனது இதயம் கனிந்த சரஸ்வதி மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்!!//////
வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் மற்றும் அனைத்துக் கண்மணிகளுக்கும் சரஸ்வதி & விஜயதசமி பூஜை வாழ்த்துக்கள். அடுத்துவரும் ஆண்டு உங்கள் அனைவருக்கும் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆண்டாக அமையட்டும்.
அன்புடன்
வாத்தியார்
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteவாத்தியாருக்கும், நண்பர்களுக்கும் நவராத்ரி, ஆயுதபூஜை,விஜயதசமி வந்தனங்களும் வாழ்த்துக்களும்./////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
//////Blogger தேமொழி said...
ReplyDeleteபண்டிகை வாழ்த்துக்கள்; பொருத்தமான பதிவிற்கு நன்றி ஐயா.
மீன லக்கினத்தில் பிறந்து ஏழில் புதன் இருக்க ஆசைதான், ஆனால் நம் கையில்தான் எதுவும் இல்லையே.
கற்ற கல்வியே உபயோகப் படாமல் துன்பப் படுபவர்களையும் (புலமை பெற்றவர்கள் வறுமையில் வாடுவதும்), "வாத்தியார் பிள்ளை கோமாளி,வைத்தியர் பிள்ளை நோயாளி" என அந்த சேவை செய்பவர்களே பாதிக்கப் படுவதாக கூறப்படும் வழக்குகளையும் பற்றி ஜோதிட பாடங்கள் சொல்வதை உங்கள் பதிவுகள் வழியாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி/////
விரும்பியது நடக்கும். கவலையை விடுங்கள்!
/////Blogger தேமொழி said...
ReplyDeleteபுதன் உச்சத்தில் இருந்தால் சுக்கிரன் நீசத்தில் இருக்க வேண்டிய நிலை???!!! இதை நான் கவனித்ததில்லை இதுவரை .... யார் போட்ட திட்டம் இது....//////
என்ன சொல்ல வருகிறீர்கள்? சற்றுத் தெளிவாகச் சொல்லுங்கள் சகோதரி! புதன், சுக்கிரன் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் 120 பாகைகளுக்குள் சுழலக்கூடியவை. பொதுவாக அடுத்தடுத்து ஐந்து வீடுகளுக்குள் அடங்கிவிடும்.
////Blogger JT said...
ReplyDeleteFor longer burning coal is preferred than camphor. Every type of person has his own niche areas. Let us not call some more talented than the others./////
கிரகித்துக்கொள்ளும் தன்மைக்கும், வேகத்துக்கும்தான் அந்த உதாரணம்!
/////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteஅதிகாலை பொழுது
அருமையான பதிவு!..
அமரகவியவன் பாரதி -வெண்
ஆம்பல் அமர் பாரதி தேவியை
போற்றியப் பாடல் தாங்கிய
பதிவு அதனாலே அது பெற்றது உயர்வு....
அருள் புரிவாய் அன்னையே என்று
கலைவாணி அவள் பாதம் பணிகிறேன்..
நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
நல்லது விசுவநாதன்! போகும்போது பிரசாதம் வாங்கிக்கொண்டு போங்கள்!
///Blogger krishnar said...
ReplyDeleteவகுப்பு மீண்டும் களைகட்டுகின்றது.
மெதுவாகத்தான் பாடங்களை கிரகிக்கின்றேன்.
பண்டிகை வாழ்த்துக்கள்;
வாத்தியாருக்கு நன்றிகள்./////
நீங்கள் வந்தால் களைகட்டாமல் இருக்குமா கிருஷ்ணர்?
////Blogger Karthikeyan said...
ReplyDeleteபாரதியின் பாடலை நினைவுபடுத்தியதற்கு நன்றி ஐயா. வாத்தியாருக்கும், வகுப்பறை நண்பர்களுக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்!!////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger Rajaram said...
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு இதயம் கனிந்த சரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துக்கள்./////
நல்லது. நன்றி ராஜாரமன் அவர்களே!
////Blogger Nareshkumar said...
ReplyDeleteஜயா வணக்கம், விஜய தசமி வாழ்த்துக்கள்.பாடம் அருமை. He he he nan kaintha sarugu pondra type... Take care. God bless. . ./////
உண்மையைச் சொன்னதற்குப் பாராட்டுக்கள். நன்றி நரேஷ்குமார்!
/////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteஅதிகாலை பொழுது
அருமையான பதிவு!..
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
/////நல்லது விசுவநாதன்! போகும்போது பிரசாதம் வாங்கிக்கொண்டு போங்கள்!///
"சாமி" "விரும்பி" வந்ததால்
சடுக்கென நினைவில் வரும்
அய்யருக்கு தரலாமா
அந்த பிரசாதத்தை..
சிங்கைக்கு வந்தாவது
இலங்கைக்கு வந்தாவது தந்தால்
சுவைக்கும்..
சுகமாக இனிக்கும்..
/////Blogger astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்,
காலை வேளையில் வித்தைகளுக்கு அதிபதியான கலைமகளைக் கொண்டாடும் நன் நாளில் மனதிற்கு இனிய பதிவு....என் ஜாதகத்தில் புத பகவான் லக்ன(தனுசு லக்னம்)கேந்த்திரத்தில் 7ல் ஆட்சி உடன் செவ்வாய் ,சந்திரன்.செவ்வாய் பாப கிரகமானாலும் லக்னத்துக்கு யோக காரகன் அதனால் சருகு ஆகாமல் (அ) ஆக்காமல் நல்ல புத்தியை வளர்க்க நல்ல குருமார்கள் மத்தியில் இருக்க வழி ஏற்படுத்தி உள்ளார் போலும்....அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்த்துக்கள்////
நல்லது. நன்றி ஆதி!
////Blogger Uma said...
ReplyDeleteஅனைவருக்கும் சரஸ்வதி பூஜை / விஜய தசமி வாழ்த்துக்கள். நாம் விஜயதசமியை அம்பாள் அரக்கனைக்கொன்றதாகக் கொண்டாடுகிறோம். வடஇந்தியாவில் இராமர் இராவணனைக்கொன்ற நாளாக கொண்டாடப்படுகிறது. நாளை ஆங்காங்கே இராவணின் உருவ பொம்மை மெகா சைசில் செய்து (அதற்குள் வெடிமருந்து போன்றவற்றை போட்டிருப்பார்கள்) இரவு ஆனதும் கொளுத்துவார்கள்./////
தொலைக்காட்சியில் பார்த்ததோடு சரி!
////Blogger RAMADU Family said...
ReplyDeleteGuru Vanakkam,
Wish you and all the bloggers a happy and continued learning.
Regards
RAMADU////
நல்லது. நன்றி நண்பரே!
//Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅன்புள்ள அஸ்ட்ரோ! செவ்வாய் கடகத்திற்கும், சிம்மத்திற்கும் மட்டுமே யோககாரகன்.தனுசுக்கு எப்படி என்று சொன்னால் கேட்டுக் கொள்கிறோம்!////
அதானே! அடைப்படைப் பாடத்தையே மறந்துவிட்டாரே!
/////Blogger RAMADU Family said...
ReplyDeleteகுரு வனக்கம்,
நல்லதொரு ஆரம்பம். இனி எல்லாம் தமிழ் தான்.
ரமாடு////
ராமுடு’ என்று எழுதுங்கள் சுவாமி! வணக்கத்திற்கு மூன்று சுழி ண’ வரும்!
////Blogger ananth said...
ReplyDeleteஅனைவருக்கும் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துகள். என்னைப் போன்று புதிதாக எழுத ஆரம்பித்துள்ளவர்களுக்கு கலைமகளின் அருள் நிறையவே தேவைப்படுகிறது////
ஆமாம். ஆமாம். உங்கள் கணக்காய்வுத் தொழிலுக்கும் அவர் அருள் தேவை!
////Blogger bhuvanar said...
ReplyDeleteவாத்தியார் அவர்களுக்கும், சீனியர் மாணவர்களுக்கும், ஜூனியர் மாணவர்களுக்கும், லாஸ்ட் பெஞ்ச் மாணவனின் உள்ளம் கனிந்த சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்...
நன்றி
பாண்டியன்////
நல்லது. நன்றி பாண்டியன்!
அனைவரின் சரஸ்வதி பூஜா, விஜயதசமி வாழ்த்துக்களுக்கும் நன்றி..ரிடர்ன் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநமக்கு கட்டத்துலே லக்கினத்துலே வித்யாகாரகன் புதன் வர்கோத்மத்துலே ஹாயா சுக்ரன் தோள்மேலே கைபோட்டுட்டு இன்டிவிஜுவல் பரல் 7 ன்னு கொஞ்சம் அமர்க்களமாவே இருக்கார்..லாபாதிபதிங்குற நல்ல போஸ்ட்டை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்வோம்..
/////bhuvanar said...
ReplyDeleteவாத்தியார் அவர்களுக்கும், சீனியர் மாணவர்களுக்கும், ஜூனியர் மாணவர்களுக்கும், லாஸ்ட் பெஞ்ச் மாணவனின் உள்ளம் கனிந்த சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்...
நன்றி
பாண்டியன்////
வாருங்கள் பாண்டியன் பார்த்து ரொம்ப நாளாச்சு...
எப்படி இருக்கிறீங்க? நலமா?....
வெகுநாட்களுக்கு பிறகு வருவதால்
மீண்டு வரவேற்கிறோம்!..
ஆலாசியம் கோ.
இன்று சரஸ்வதி பூஜை தினமாகையால் ஒரு சேஞ்சுக்காக சரஸ்வதி சபதம் படத்தை TVயிலே youtube லே பார்த்த வண்ணம் எழுதுகிறேன்..
ReplyDeleteஎப்படிப்பார்த்தாலும் கல்வியா? செல்வமா? வீரமா?
கல்விதான்; கலைதான் என்றுதான் இறுதித் தீர்ப்பெழுதத்தொன்றுகிறது..
ஐயா,எனக்கு புதன் 10-ல் (சுயவர்க்கத்தில் -6பரல்)அதி மித்திரனான சுக்கிரனின் ரிஷப வீட்டில் அதுவும் தனியாக எந்தப்பாவிப் பயலுக கூட்டும்,பார்வையும் இல்லாமல் இங்கெ நானே ராஜா,நானே மந்திரினு சொல்லிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறார்.இப்பொ எனக்கு ஏழரையில் 2-வது சுற்று,நடப்பு ஜென்மச்சனி அதனால் அதிக மறதி இப்பொ.அதை ஒன்னும் கண்டுக்காத மாதிரி Mr.Mercury சுற்றி வருவது எனக்கு நல்லதாப்படலை.
ReplyDelete//என்ன சொல்ல வருகிறீர்கள்? சற்றுத் தெளிவாகச் சொல்லுங்கள் சகோதரி! புதன், சுக்கிரன் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் 120 பாகைகளுக்குள் சுழலக்கூடியவை. பொதுவாக அடுத்தடுத்து ஐந்து வீடுகளுக்குள் அடங்கிவிடும்//
ReplyDeleteஇதில் செவ்வாய் என்பது தவறு. சூரியன் என்றுதான் இருக்க வேண்டும். புதன் சூரியனுடன் 28 பாகைக்குள்ளும், சுக்கிரன் 48 பாகைக்குள்ளும் இருக்க வேண்டும். மீறி போக எத்தனித்தால் வக்கிரமாகி பின்னோக்கி வர வேண்டியதிருக்கும்.
ஐயா,எனக்கு புதன் 10-ல் (சுயவர்க்கத்தில் -6பரல்)அதி மித்திரனான சுக்கிரனின் ரிஷப வீட்டில் அதுவும் தனியாக எந்தப்பாவிப் பயலுக கூட்டும்,பார்வையும் இல்லாமல் இங்கெ நானே ராஜா,நானே மந்திரினு சொல்லிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறார்.இப்பொ எனக்கு ஏழரையில் 2-வது சுற்று,நடப்பு ஜென்மச்சனி அதனால் அதிக மறதி அதை ஒன்னும் கண்டுக்காத மாதிரி Mr.Mercury சுற்றி வருவது எனக்கு நல்லதாப்படலை.கூடவே மன அழுத்தம் வேறு வீட்டு வேலை ஆரம்பித்தோம் ரொம்ப சவ்வாக இழுத்துக்கிட்டு வேற போகுது.கையிலிருந்த பணத்தோடு வட்டிக்கு வாங்கி ஆரம்பித்து வட்டிதான் குட்டி போடுது தேவையில்லாத அலைச்சல்.அது சரி ஐயா புதன் பகவானை நம்ம வகுப்பறைக்குக் கூட்டிவந்து பெஞ்ச் மேல ஏறி நிற்கவைத்துவிடுங்கள்.
ReplyDeleteவாருங்கள் பாண்டியன் பார்த்து ரொம்ப நாளாச்சு...
ReplyDeleteஎப்படி இருக்கிறீங்க? நலமா?....
வெகுநாட்களுக்கு பிறகு வருவதால்
மீண்டு வரவேற்கிறோம்!..
ஆலாசியம் கோ.///
நன்றி ஆலாசியம் சார்...இனி தொடர்ந்து பார்க்கலாம்...
அரசியல் கலப்பு நமது வகுப்பு அறையில் அதிகம் இருப்பதால் சற்று ஓய்வு எடுத்து கொண்டு இருந்தேன்...
இன்று சரஸ்வதி பூஜை தினமாகையால் ஒரு சேஞ்சுக்காக சரஸ்வதி சபதம் படத்தை TVயிலே youtube லே பார்த்த வண்ணம் எழுதுகிறேன்..
ReplyDeleteஎப்படிப்பார்த்தாலும் கல்வியா? செல்வமா? வீரமா?
கல்விதான்; கலைதான் என்றுதான் இறுதித் தீர்ப்பெழுதத்தொன்றுகிறது..////
உங்களை நம்பி நான் அரசியலில் குதிக்கலாம் என்று இருந்தேன்...நல்ல வேலை...
நமக்கு மணி...மணி...மணி... தான் மாம்ஸ் மேட்டர்...
கில்லி எரியுறதுக்கு தளை இல்ல...
தமிழ் நாட்டுடோட "தல"... மாம்ஸ் நீங்க...
நீங்க பொய் இப்படி...
(ஒரு வேலை அரசியல்வாதி ஆனதினால் இப்படி பப்ளிக்கா அல்லி
விடுறீங்களா ????)
பாண்டியன்
வணக்கம்,
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் மேலும் சகோதர சகோதரிகளின் வாழ்த்துக்கும் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துக்கும் நன்றி தங்களின் ஜாதக பாடம் ரொம்ப நன்றாக இருக்கிறது சார்.
பாவம் அந்த அண்ணாவின் தற்கொலை மிகவும் வேதனையை தந்தது அந்த மாதரி பாடம் தேவைதானா இருந்தாலும் ரொம்ப நல்ல அலசல் அடா நம்ப வகுப்புல்ல ரொம்ப Comment இருக்கிறது
சுந்தரி.
////என்ன சொல்ல வருகிறீர்கள்? சற்றுத் தெளிவாகச் சொல்லுங்கள் சகோதரி! புதன், சுக்கிரன் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் 120 பாகைகளுக்குள் சுழலக்கூடியவை. பொதுவாக அடுத்தடுத்து ஐந்து வீடுகளுக்குள் அடங்கிவிடும்.////
ReplyDeleteஐயா,
வர வர என் ஆர்வக் கோளாறு உளறலில் போய் முடியும் போலிருக்கிறது. உங்கள் பாடங்களில் படித்தவற்றை கொண்டு எல்லாம் சாதகமான ஜாதகம் ஒன்று இருந்தால்(???) என்ற ஆர்வத்தில் நானே கட்டம் போட்டு கிரகங்களை பிடித்த இடத்தில் எழுதி வைத்தேன்.
புதன் உச்சம் கற்பூரபுத்தி போன்றவர்கள் என்று படித்ததும், என் கட்டங்களில் மீன லக்னத்தில் இருந்து ஏழில் புதன் (ஆட்சி+உச்சம்) இருக்குமாறு பார்த்துக்கொண்டேன், கற்பனை ஜாதகத்தில் தொடர்ந்து லக்கினத்தில் சந்திரன் (ஹி. ஹி..), ஒன்பதில் குரு, பன்னிரண்டில் சனி (அங்கு சனி ஆட்சி) என்றும் ஏழில் சுக்கிரன் இருந்தால் அழகான வாழ்கைத் துணை (ஹி..ஹி..ஹீ. ) என்றும் என எண்ணி ஏழில் சுக்கிரனும் இருந்தால் என்ன ஆகும் என பார்த்தேன். ஹையோ.. அது சுக்கிரனுக்கு நீசமான இடமாமே. புதனுடன் சுக்கிரனும் சேர்ந்து கன்னி ராசியில் இருக்கும் வாய்ப்புள்ளதா? அப்படியானால் திருவிளையாடல் படத்தின் வசனம் போல் அது "சேர்ந்தே இருப்பது? வறுமையும் புலமையும்" அல்லவா? மன்னிக்கவும் எனக்கு கேள்விகளை கேட்க மட்டும்தான் தெரியும். நன்றி
Dear Sir,
ReplyDeleteMy Heart ful Saraswathi and Weapon's Wishes To You and all class students..
ஐயா,
ReplyDeleteமுன் பாடம் மறந்து விட்டதா அதற்குள்? அச்சுப்பிச்சு, அம்மாஞ்சி, அபிஷ்டு, நீசமும் உச்சமும் சேர்ந்திருந்தால் (கன்னியில் புதனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால்) அது நீசபங்க ராஜயோகம்! என்று சொல்லி உங்கள் மோதிரக் கையால் ஒரு குட்டு குட்டிவிடுங்கள் :)
அடுத்து ....நம் மாண்பு மிகு மைனர்வாள் கருத்தை தொடர்ந்து ...சரஸ்வதி கடாட்சம் கிடைக்க புதன் ஆதரவும், லக்ஷ்மி கடாட்சம் கிடைக்க சுக்ரனின் ஆதரவும் வேண்டும் எனத் தெரிகிறது. நான் ராணி வேலு நாச்சியார் போல பார்வதி கடாட்சம் பெற்று வீரத் திருமகளாக இருக்க எனக்கு எந்த கிரகத்தின் ஆதரவு தேவை என சொல்லுங்கள் ஐயா. நன்றி
(வாழை மட்டை) தேமொழி
//////////bhuvanar said...
ReplyDeleteஉங்களை நம்பி நான் அரசியலில் குதிக்கலாம் என்று இருந்தேன்...நல்ல வேலை...
நமக்கு மணி...மணி...மணி... தான் மாம்ஸ் மேட்டர்...
கில்லி எரியுறதுக்கு தளை இல்ல...
தமிழ் நாட்டுடோட "தல"... மாம்ஸ் நீங்க...
நீங்க பொய் இப்படி...
(ஒரு வேலை அரசியல்வாதி ஆனதினால் இப்படி பப்ளிக்கா அல்லி
விடுறீங்களா ????)
பாண்டியன்//////
போன தேர்தல்லேயே மக்கள் 'மணி'க்கு குட்பை சொல்லிட்டாங்க..திருந்திட்டாங்கலாம்..திடீர்னு திருந்தினதுதான் பலருக்கும் ரொம்ப ஷாக்..
நாமளும் திருந்தலைன்னா எப்புடி?
பத்தும் பத்தாததுக்கு அண்ணா ஹசாரே வேற வந்து இந்தியாவையே புரட்டிப் போட்டுட்டாராமே?
எங்கும் எதிலும் ஊழலற்ற நிர்வாகமா ஆகிப்போச்சாமே இந்தியா?
கரண்ட் ட்ரெண்டு இதுதான்னு நினைச்சுத்தான் இப்புடிப் பண்ணிட்டேன்..
இப்பப்போயி நீங்க இப்புடி சொல்றீங்க..இந்தியாவுக்குப் போன நீங்க வூட்டை வுட்டு வெளிலே வரலையா?
நாட்டுநடப்பு தெரியாம பேசுறீங்களே?இல்லை..நான்தான்..இன்னும் கனவு கலையாமப் பேசிட்டுருக்கேனா?
இன்னும் இந்தியாலேதானா? ரிடர்ன் ஆகிட்டீங்களா?
///ananth said...
ReplyDeleteபுதன் சூரியனுடன் 28 பாகைக்குள்ளும், சுக்கிரன் 48 பாகைக்குள்ளும் இருக்க வேண்டும். மீறி போக எத்தனித்தால் வக்கிரமாகி பின்னோக்கி வர வேண்டியதிருக்கும்///
அதனால்தான் பலரின் ஜாதகத்தில் புதன் சூரியனுடன் சேர்ந்து பெரும்பாலும் அஸ்தமனமாகி/ புத்த ஆதிபத்திய யோகமாகி,
அல்லது புதன் சுக்கிரன் சேர்ந்து நிபுணத்துவ யோகமாகிக் காணப்படுகிறது..அதிகமாக ஜாதகரில் பலருக்கும் இந்த யோகங்கள் அமைவதற்கு
இதுதான் காரணம்..
/////Blogger தேமொழி said...
ReplyDeleteபுதன் உச்சத்தில் இருந்தால் சுக்கிரன் நீசத்தில் இருக்க வேண்டிய நிலை???!!! இதை நான் கவனித்ததில்லை இதுவரை .... யார் போட்ட திட்டம் இது....//////
ஒண்ணுமே புரியலே..
உங்க ப்ளாக் டைட்டில்தான்..(கமென்ட்டாவும் எடுத்துக்கலாம்)
ரெண்டுசுழியை மூணுசுழியாப் போட்டுடுங்க..
அப்போதான் செம்மொழி மேம்பாடடையும்..
///sundari said...
ReplyDeleteஅண்ணாவின் தற்கொலை மிகவும் வேதனையை தந்தது///
அண்ணா தற்கொலை பண்ணிக்கிட்டாரா?
ஆஹா..ஈடு செய்யமுடியாத இந்த இழப்புக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
////தேமொழி said...
ReplyDeleteஏழில் சுக்கிரன் இருந்தால் அழகான வாழ்கைத் துணை (ஹி..ஹி..ஹீ. ) என்றும் என எண்ணி ஏழில் சுக்கிரனும் இருந்தால் என்ன ஆகும் என பார்த்தேன். ஹையோ.. அது சுக்கிரனுக்கு நீசமான இடமாமே. புதனுடன் சுக்கிரனும் சேர்ந்து கன்னி ராசியில் இருக்கும் வாய்ப்புள்ளதா? அப்படியானால் திருவிளையாடல் படத்தின் வசனம் போல் அது "சேர்ந்தே இருப்பது? வறுமையும் புலமையும்" அல்லவா? மன்னிக்கவும் எனக்கு கேள்விகளை கேட்க மட்டும்தான் தெரியும். நன்றி////
நல்ல கற்பனை..
உங்களுக்கு ஏற்கனவே எழிலே சுக்கிரன்தான் ஆஜராயிட்டாரே.. அப்புறம் என்னா?ராகு கூட இருந்தா diffrerent blend கான்செப்ட்..
உதாரணமா ராகு பிளஸ் புதன் என்றால் R & D ன்னு இருக்கு..
அப்பிடி எழாமிடத்தைப் பத்தி நீங்க ஒருவேளை அனுபவப்பூர்வமா ஆராய்ச்சியிலே இறங்குவீங்களோ என்னவோ?
ராகு பிளஸ் சுக்கிரன் combo கலைத்துறைன்னு வாத்தியார் ஏற்கனவே அறிவிச்சுருக்காரே?
////தேமொழி said...
ReplyDeleteஅடுத்து ....நம் மாண்பு மிகு மைனர்வாள் கருத்தை தொடர்ந்து ...சரஸ்வதி கடாட்சம் கிடைக்க புதன் ஆதரவும், லக்ஷ்மி கடாட்சம் கிடைக்க சுக்ரனின் ஆதரவும் வேண்டும் எனத் தெரிகிறது. நான் ராணி வேலு நாச்சியார் போல பார்வதி கடாட்சம் பெற்று வீரத் திருமகளாக இருக்க எனக்கு எந்த கிரகத்தின் ஆதரவு தேவை என சொல்லுங்கள் ஐயா. நன்றி
(வாழை மட்டை) தேமொழி///
செவ்வாய்தான் அவர்..உங்களுக்குத்தான் நாளுக்கும் பதினொண்ணுக்கும் அதிபதியாகி நாலாமிடத்துலே
S V4 பரல்.. அஷ்டவர்க்கம் 32 ன்னு அம்சமா இருக்காரே அவுரு..
வீரமங்கைதான் போங்க..
மைனர்வாள் அவர்களுக்கு வீரமங்கையின் வீர வணக்கம்,
ReplyDeleteமாற்ற வேண்டிய சுழியை / மாற்ற என்னால் முடிந்த சுழியை :) மாற்றிவிட்டேன்.
ஒன்று என்பது ஒன்னு என்றாகிவிட்டதாக நினைத்து சொதப்பி விட்டேன்.
ஏழில் சுக்கிரன் அதிர்ஷ்டம்தான் (ஹ்ம்ம். மாமா பார்க்க நல்லாத்தான் இருக்கார். ஆனால் மாமாதான் பாவம் ஏழில் சுக்கிரன் இருக்க கொடுத்து வைக்கவில்லை :)
நான் வீரத் திருமங்கை என்று கண்டுபிடித்து சொன்னதற்கு நன்றி.
வெற்றி வேல், வீரவேல்
minorwall said...
ReplyDeleteஇன்னும் இந்தியாலேதானா? ரிடர்ன் ஆகிட்டீங்களா?///
ரிடர்ன் ஆயாச்சு...
///////// தேமொழி said...
ReplyDeleteஏழில் சுக்கிரன் அதிர்ஷ்டம்தான் (ஹ்ம்ம். மாமா பார்க்க நல்லாத்தான் இருக்கார். ஆனால் மாமாதான் பாவம் ஏழில் சுக்கிரன் இருக்க கொடுத்து வைக்கவில்லை :)/////
லக்கினத்தை சுக்கிரன் பார்த்தாலோ இருந்தாலோ வசீகரத்தைத் தூண்டும் என்ற அடிப்படையிலே பார்த்தால் நீங்க அலுத்துக்குற அளவு உங்க மாமா ஒண்ணும் அதிர்ஷ்டசாலி இல்லாமல் போயிருக்கமாட்டார் என்பதுதான் என் கணிப்பு..
/////////தேமொழி said...
ReplyDeleteஏழில் சுக்கிரன் அதிர்ஷ்டம்தான் (ஹ்ம்ம். மாமா பார்க்க நல்லாத்தான் இருக்கார். ஆனால் மாமாதான் பாவம் ஏழில் சுக்கிரன் இருக்க கொடுத்து வைக்கவில்லை :)/////
லக்கினத்தை சுக்கிரன் பார்த்தாலோ இருந்தாலோ வசீகரத்தைத் தூண்டும் என்ற அடிப்படையிலே பார்த்தால் நீங்க அலுத்துக்குற அளவு உங்க மாமா ஒண்ணும் அதிர்ஷ்டசாலி இல்லாமல் போயிருக்கமாட்டார் என்பதுதான் என் கணிப்பு..
'மாண்புமிகு'க்கு ஒரு பெரிய நன்றி..விளையாட்டுக்குக் கூட இப்புடி கூப்பிட ஒரு பெரிய மனசு வேணும்..அது உங்களுக்கு இருக்கு..