----------------------------------------------------------------------------------------------------
பாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி இரண்டு
வயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி
இளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்!)
-----------------------------------------------------------------------------------
over to table
பாஸந்தி முதல் கிண்ணம்
-----------------------------------------------------------------------------
மார்கழித் திங்கள் அல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடைபெறும் உயிரல்லவா!
- கவிஞர் வைரமுத்து
சங்கமம்’ என்னும் திரைப் படத்தில் வரும் பாடலின் துவக்க வரிகள் இவைகள். என்ன அசத்தலான வரிகள் பாருங்கள். நாயகி நாயகனை நினைத்துப் பாடுகிறாள். ஒரு முறை அவனது திருமுகம் பார்த்தால் போதும். அதற்குப் பிறகு உயிர் போனாலும் பரவாயில்லை என்னும் தொனியில் “ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடைபெறும் உயிரல்லவா!” என்கிறாள்
இதல்லவா காதல் மயக்கத்தில் வரும் கலக்கலான உணர்வு. கவிஞர் அசத்தியிருக்கிறார்.
இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை எங்கோ கேட்ட மாதிரி இருக்கும். அது வேறு ஒன்றுமில்லை. ஆண்டாள் பாசுரத்தில் வரும் வரிகள் அவைகள். அதையும் உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்.
(ஆண்டாள் பாமலை:
மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்?
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்,
கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!
நாராயணனே நமக்கே பறை தருவான்!!
பாரோர் புகழப் படிந்து, ஏலோர் எம்பாவாய்!)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாஸந்தி இரண்டாவது கிண்ணம்.
பாஸந்தி இனிப்பு. திகட்டும் என்று நினைப்பவர்கள் தாவிக்குதித்து அடுத்த ஐட்டத்திற்குப் போய் விடலாம்.
"பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா"
மலரையும். மங்கையையும், தேனையும் எப்படிக் கொக்கி போட்டு எழுதியுள்ளார் பார்த்தீர்களா? முழுப் பாடலும் வேண்டும் என்பவர்களுக்காக
பாடல் வரிகளை முழுமையாகக் கீழே கொடுத்துள்ளேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பக்கோடா
1.
சுடும்போதும் சிரிப்பேன்; துன்பம்
சுட்டபின் தென்றல் வந்து
தொடும்போதும் சிரிப்பேன்; தீய
சொல்லினால் நெஞ்சில் காயப்
படும்போதும் சிரிப்பேன்; இந்தப்
பாரெல்லாம் போற்றி மாலை
இடும்போதும் சிரிப்பேன்; என்றன்
இதயமே இறைவன் சோலை!
- கவிதாயினி திருமதி செளந்தரா கைலாசம்
2.
அண்டவெளிக்குச் சென்றவனும்
திரும்பி விட்டான்
அதையடுத்துச் சந்திரனுக்குச்
சென்றவனும் திரும்பிவிட்டான்
ஆனால்....
அடுத்துள்ள சுடுகாட்டிற்குச்
சென்றவன் எவனும்
இதுவரை திரும்பவில்லை - ஏனோ?
- கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஓமப்பொடி
(பக்கோடாவைக் கடித்து சாப்பிட முடியாதவர்களுக்காக)
கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் எழுதிய அசத்தலான திரையிசைப் பாடல்கள். பள்ளி ஆசிரியான இவர் நாடக உலகில் நுழைந்து, பிறகு திரையுலகில் கோலோச்சினார். கவியரசர் கண்ணதாசன் அவர்களே இவர் பாடல்களுக்கான ரசிகர் என்னும் போது, இவர் பாடல்களின் அருமை தெரியவரும்!
சில பாடல்களை இங்கே கொடுத்துள்ளேன். இவைகள் எல்லாம் அந்தக் காலத்தில் பல இதயங்களைக் கலக்கிய பாடல். அதை மனதில் கொள்க!
1
ஆடைகட்டி வந்த நிலவோ - கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ!
படம்: அமுதவல்லி (1959) பாடியவர்கள். டி.ஆர்.மகாலிங்கம். பி.சுசீலா இசை. விஸ்வநாதன் ராமமூர்த்தி
2
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜெகமே ஆடிடுதே..
இசை பாடிடுதே
-படம் மாயா பஜார் (1957) பாடியவர்கள். கண்டசாலா & பி.லீலா. இசை கண்டசாலா
3
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
படம்- மணாளனே மங்கையின் பாக்கியம் (1957) பாடியவர்.பி.சுசீலா, இசை: ஆதி நாராயண ராவ்
4.
இன்று போய் நாளை வா
படம்: சம்பூர்ணராமாயணம் (1961) பாடியவர். சி.எஸ். ஜெயராமன். இசை: கே.வி.மகாதேவன்
5
கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
- படம். மாயாபஜார் (1957) பாடியவர். திருச்சி லோகநாதன் இசை. கண்டசாலா
6.
கண்களும் கவி பாடுதே
படம் அடுத்த வீட்டுப் பெண் (1960) சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் & பி.பி.ஸ்ரீனிவாஸ், இசை:ஆதி நாராயண ராவ்
7.
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே
- படம்: அடுத்த வீட்டுப் பெண் (1960) பாடியவர் P.B ஸ்ரீநிவாஸ், இசை ஆதி நாராயணராவ்
8
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
- படம் குலேபகாவலி (1955) பாடியவர்கள் ஏ.ஏம்.ராஜா & ஜிக்கி இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
9.
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
- படம். வணங்காமுடி (1957) பாடியவர்கள். டி.எம்.எஸ் & பி.சுசீலா, இசை. ஜி.ராமநாதன்
10
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள்கதையை!
- படம்: மிஸ்ஸியம்மா (1955) இசை.எஸ். ராஜேஷ்வரராவ். பாடியவர்கள். ஏ.எம்.ராஜா & பி.லீலா
-------------------------------------------------------------------------------------
3
ஃபில்டர் காஃபி
“எல்லாம் முடிந்து விட்டது.இனி நம்மைக் காப்பாற்ற யாராலும் முடியாது” என்ற உச்சகட்ட சோதனைக்கு ஆளாகித் தற்கொலை பண்ணிக் கொள்ள நினைக்கிற அவசரக்காரப் பிறவிகளுக்கு விமோசனம் தரக்கூடிய பதிலைத் தேடியே அந்த மனிதன் அந்த அமாவாசை இருட்டில் மலைமேல் ஏறிக்கொண்டிருந்தான் போலிருக்கிறது.
ஏதோ விரக்தி. கல்லையும், முள்ளையும் இருட்டில் மித்துக்கொண்டு மலை உச்சியை நோக்கி வழி தெரியாமல் தட்டுத் தடுமாறிப் போய்க் கொண்டிருந் தான். மழையும் பிடித்துக் கொண்டது. மலை உச்சியை அடைய கொஞ்ச தூரம்தான் இருக்க வேண்டும். அவன் கால் வைத்த பாறை ஒன்று சறுக்கியது. கால் தடுமாறி கீழே உருளத் துவங்கிவிட்டான் அந்த மனிதன். அதிர்ஷ்ட வசமாக அந்த இருட்டிலும் ஒரு மரத்தின் கிளையைப் பற்றிக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி கதறி அழத் துவங்கினான். எந்த வினாடியும் மரணம் காத்திருக்கிறது. நேரம் ஆக ஆகப் பற்றியிருந்த கிளை முறியத்துவங்குகிறது. அவனோ பிடியை விடவில்லை. இதோ....மரணம்.....
காலை உதயம். எங்கும் வெளிச்சம். அந்த மனிதன் கீழே பார்த்தான். அப்படிப் பார்த்த பொழுது அவன் கால்களுக்கும் பூமிக்கும் இருந்த இடைவெளி ஒரு அடி தூரம்தான். ஒரே ஒரு அடிதான்!
எப்பேற்பட்ட பிரச்சினைக்கும் உரிய தீர்வு, விமோசனம், உங்கள் பக்கத்திலேயே இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வழியில்லாமல் வாழ்வில் தடுமாறுகின்றவர்களுக்காகத்தான், அந்த மனிதன் இரவு முழுவதும் மரக்கிளையில் தொங்கியபடி சித்திரவதையை அனுபவித்திருக்கிறான்.
ஆக்கம்: முள்ளும்மலரும் படப்புகழ் இயக்குனர் மகேந்திரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து இளைஞர்களுக்காக க.க.படம்: க.க. என்றால் முன்பே சொல்லியிருக்கிறேன். கவர்ச்சிக் கன்னி என்று பொருள் கொள்ளவும்.
இந்த வாரம் யாராக இருக்கும்?. நீங்களே பாருங்கள்
புதிர்
இதோ அந்தப் பாடல்:
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே
(சிட்டு)
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே

இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா
(சிட்டு)
படம்: புதிய பறவை
பாடியவர்: பி.சுசீலா
படலின் நாயகி. பி.சரோஜாதேவி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
======================================
வாழ்க வளமுடன்!

------------------------------------------------------------------------------
ஒரு பெண்ணின் ஏக்கத்தை, உள்ளத் துவளலை, எட்டு வரியில் என்னமாகச் சொல்லியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன். பாடல் வரிகளைப் பாருங்கள்:"பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
சத்தியமாக தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி இவர்தான்.
யாரென்று தெரிகிறதா? தெரியாவிட்டால் விட்டுவிடுங்கள்
நஷ்டம் ஒன்றுமில்லை. இவர் பெயரில் சென்னை பாண்டி பஜாரில்
இவர் கட்டிய திரையரங்கு ஒன்று இருக்கிறது.
மனோகரா திரைப் படத்தில் வசந்தசேனை என்ற பெயரில்
சிவாஜியுடன் கல்லா கட்டியவர் இவர்!
=========================================================புதிர்
இந்தப் பெண்மணி மிகவும் பிரபலமானவர்.
யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
இதோ அந்தப் பாடல்:
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே
(சிட்டு)
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே
(சிட்டு)
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா
(சிட்டு)
படம்: புதிய பறவை
பாடியவர்: பி.சுசீலா
படலின் நாயகி. பி.சரோஜாதேவி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
======================================
வாழ்க வளமுடன்!
அதிகாலை ஃபில்ட்டர் காஃபி அருமை..
ReplyDelete'காஃபி'ன்னா மகேந்திரன் காஃபிதான்..
பேஷ்..பேஷ்..
ரொம்ப நன்னாயிருக்கே..
////Blogger minorwall said...
ReplyDeleteஅதிகாலை ஃபில்ட்டர் காஃபி அருமை..
'காஃபி'ன்னா மகேந்திரன் காஃபிதான்..
பேஷ்..பேஷ்..
ரொம்ப நன்னாயிருக்கே../////
ஜப்பானில் ஃபில்டர் காஃபி உண்டா மைனர்? அதைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?
ஐயா,
ReplyDeleteஇனிப்புகளும், காரங்களும்
ஃபில்டர் காஃபியும் பிரமாதம்
இந்த ஆசிரியர் பிரசாதம்
இதுவே எனக்கு போதும்
புதியதாக அறிந்தது... பிரச்சனைகளுக்கு தீர்வு அருகில் என நம்பிக்கையூட்டிய இயக்குனர் மகேந்திரனின் படைப்பும், கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம், கவிதாயினி திருமதி செளந்தரா கைலாசம் அவர்களின் கவிதைகளையும். தமிழ் திரையுலகம் தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன், வைரமுத்து போன்ற கவிஞர்களின் படைப்புகளால் பெருமை அடைந்துள்ளது, அவைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம்.
க.க. யார் என்று பார்த்தவுடன் தெரிந்தது, நடமாணியை ஆவலை அடக்கமுடியாமல் இணையத்தில் அழுவிணி ஆட்டம் ஆடி தெரிந்து கொண்டதால் பதில் சொல்லும் தகுதியை இழக்கிறேன். மன்னிக்கவும்.
நல்ல படைப்புக்களை தெரிந்தெடுத்து பரிமாரியதற்க்கு நன்றி.
மாணவி தேமொழி
ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு கவிஞரும் தனது சிறப்பான கவிதைகளைப் பாடியிருக்கிறார்கள். வைரமுத்து தூக்கி வைக்கப்பட்டிருக்கிற இடம் கண்ணதாசனோடு ஒப்பிடும் வகையில் இல்லாவிட்டாலும் ஒவ்வோர் சமயம் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால் கண்ணதாசன் ஓர் இமயம். அதற்கு ஈடு இணை இல்லை. மகாகவி பாரதிக்குப் பிறகு கவிமழை பொழிந்தவன் அவன். ஆகையால் கண்ணதாசன் கிறுக்கிய வரிகள் கூட கவிதையாய் மலர்ந்தன. தஞ்சை ராமையாதாஸ் பற்றி என்னுடைய வலைப்பூ www.bharathipayilagam.blogspot.com இதில் எழுதியிருக்கிறேன். அவர் நாடகங்களுக்குப் பாடல் எழுதியவர். சில பாடல்கள் "ஜாலிலோ ஜிம்கானா" போல இருந்தாலும்,பல பாடல்கள் நாம் அந்த நாளில் ரசித்த பாடல்களே. அருமை. கனவுக்கன்னியாக அந்த நாளில் (என்னுடைய பீக் நாட்களில்) திகழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரியின் மயக்கும் கண்கள், முகம், பேச்சு இவற்றை 'ஹரிதாஸ்' படத்தில் "மன்மத லீலையைக் கண்டார் உண்டோ"வில் ரசிக்கலாம். பாஸந்தி உண்ண உண்ண தெவிட்டாதது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteதிரைவிருந்து திகட்டாத பெருவிருந்து - ஆசியாவின்
இக்கரை இருந்து ரசித்தேன் ருசித்தேன் எனை மறந்து
இயற்கை கவிஞன் இத்திரையில் இயற்கையை
இயற்கையாய்பாடி இதயம் புகுந்தவ(ற்)ன்.
வைரமுத்து மட்டுமல்ல பொன்மணி.. வைரமும், முத்தும், பொன்னும், மணியும் சேர்த்தே எப்போது ஜொலித்து நிற்கும்... வைரமுத்துவின் எத்தனையோ பாடல்கள் எண்ணையு கவர்ந்திருந்தாலும்.. காதல் ஓவியம் தான் அநதக் கவிஞன் மேல் என்னைக் காதல் கொள்ளச் செய்ததது....
இதோ சில வரிகளைத் தருகிறேன்...
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் -ஒரு
தேவ ரோஜா ஊர்வலம்.
..............................................
சலங்கை ஓசை போதுமே - எந்தன்
பசியும் தீர்ந்து போதுமே
உதய கானம் போதுமே - எந்தன்
உயிரில் அமுதம் ஊருமே
இரவு முழுதும் கீதமே
நிலவின் மடியில் ஈரமே
விரல்கள் விருந்தைக் கேட்குமே - ஒரு
விளக்கு விழித்துப் பார்க்குமே
இதழ்கள் இதழைத் தேடுமே - ஒரு
கனலில் படுக்கைப் போடுமே!
போதுமே.. ஏ..ஏ ..ஏ ... இதோ அந்தப் பாடலி இங்கே சென்றுக் கேளுங்கள்...
http://www.raaga.com/player4/?id=1842&mode=100&rand=0.04918040963821113
இந்தப்படம் வரும் போது நான் பதின்மவயதில் இருந்தேன்...
படத்தின் பெயர் காதல் ஓவியம்... ஆக,
வீட்டுக்கு தெரியாமல் சென்று படத்தை பார்த்தேன் எனது நண்பர்களோடு..
சரி அதுக்கென?.. அது தான் படம் விட்டது தான் தாமதம்
ஒரே ஓட்டமாக வீட்டிற்கு வந்து எனது அப்பாவை உடனே அடுத்த காட்சிக்கு அனுப்பினேன்... நாங்கள் இருவரும் பலகாலம் இன்னமும் அந்தப் பாடல்களை சிலாகித்து கேட்கிறோம்...
நான் ஒரு ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்..
ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்..
(பாரதி ராஜாவையும்.. இளையராஜாவையும்... மறக்கவும் கூடாது இருந்தும் இந்த முத்தமிழும் இனியும் சேராதோ என்ற ஏக்கத்தோடு..)
நன்றிகள் ஐயா!
அன்புடன்
ஆலாசியம் கோ.
புதிருக்கு பதில் தெரியவில்லை... இருந்தும் குழுக்களில் தேர்ந்தெடுத்து எழுதுவது போல ..
முதலமைச்சர் அம்மாவின் தாயாராக இருப்பார்களோ?
Guru Vanakkam,
ReplyDeleteBasanthi Malar is getting popular now. Filter coffee is superb. All the songs are my moms favourite and get to hear all the time.
RAMADU
Ayya,
ReplyDeleteAll song details are stored in your Kabala hard disk or how did you collect all details...It is amazing...:)- By the way, I have got request for higher studies from you, I will start my process next week. Thanks for that.
Sincere Student,
Ravi Trichy
பாசந்தி ஃபில்ட்டர் காஃபி அருமை. சிட்டுக்குருவி பாடல் சுசிலா பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று.
ReplyDeleteஇந்தப் பெண்மணி மிகவும் பிரபலமானவர். யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம். //
இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை.
Blogger மாணவி தேமொழி said...
ReplyDeleteஐயா,
இனிப்புகளும், காரங்களும்
ஃபில்டர் காஃபியும் பிரமாதம்
இந்த ஆசிரியர் பிரசாதம்
இதுவே எனக்கு போதும்
புதியதாக அறிந்தது... பிரச்சனைகளுக்கு தீர்வு அருகில் என நம்பிக்கையூட்டிய இயக்குனர் மகேந்திரனின் படைப்பும், கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம், கவிதாயினி திருமதி செளந்தரா கைலாசம் அவர்களின் கவிதைகளையும். தமிழ் திரையுலகம் தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன், வைரமுத்து போன்ற கவிஞர்களின் படைப்புகளால் பெருமை அடைந்துள்ளது, அவைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம்.
க.க. யார் என்று பார்த்தவுடன் தெரிந்தது, நடமாணியை ஆவலை அடக்கமுடியாமல் இணையத்தில் அழுவிணி ஆட்டம் ஆடி தெரிந்து கொண்டதால் பதில் சொல்லும் தகுதியை இழக்கிறேன். மன்னிக்கவும்.
நல்ல படைப்புக்களை தெரிந்தெடுத்து பறிமாரியதற்க்கு நன்றி.
மாணவி தேமொழி///////
தெரிந்திருந்தால் சொல்ல வேண்டியதுதானே சகோதரி!
Blogger Thanjavooraan said...
ReplyDeleteஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு கவிஞரும் தனது சிறப்பான கவிதைகளைப் பாடியிருக்கிறார்கள். வைரமுத்து தூக்கி வைக்கப்பட்டிருக்கிற இடம் கண்ணதாசனோடு ஒப்பிடும் வகையில் இல்லாவிட்டாலும் ஒவ்வோர் சமயம் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால் கண்ணதாசன் ஓர் இமயம். அதற்கு ஈடு இணை இல்லை. மகாகவி பாரதிக்குப் பிறகு கவிமழை பொழிந்தவன் அவன். ஆகையால் கண்ணதாசன் கிறுக்கிய வரிகள் கூட கவிதையாய் மலர்ந்தன. தஞ்சை ராமையாதாஸ் பற்றி என்னுடைய வலைப்பூ www.bharathipayilagam.blogspot.com இதில் எழுதியிருக்கிறேன். அவர் நாடகங்களுக்குப் பாடல் எழுதியவர். சில பாடல்கள் "ஜாலிலோ ஜிம்கானா" போல இருந்தாலும்,பல பாடல்கள் நாம் அந்த நாளில் ரசித்த பாடல்களே. அருமை. கனவுக்கன்னியாக அந்த நாளில் (என்னுடைய பீக் நாட்களில்) திகழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரியின் மயக்கும் கண்கள், முகம், பேச்சு இவற்றை 'ஹரிதாஸ்' படத்தில் "மன்மத லீலையைக் கண்டார் உண்டோ"வில் ரசிக்கலாம். பாஸந்தி உண்ண உண்ண தெவிட்டாதது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!//////
உங்கள் பாராட்டுக்களால் இந்த வாரமும், பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபிக்கு செலவு செய்த தொகை வந்து சேர்ந்துவிட்டது. நன்றி கோபாலன் சார்!
Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்.
திரைவிருந்து திகட்டாத பெருவிருந்து - ஆசியாவின்
இக்கரை இருந்து ரசித்தேன் ருசித்தேன் எனை மறந்து
இயற்கை கவிஞன் இத்திரையில் இயற்கையை
இயற்கையாய்பாடி இதயம் புகுந்தவர்.
வைரமுத்து மட்டுமல்ல பொன்மணி.. வைரமும், முத்தும், பொன்னும், மணியும் சேர்த்தே எப்போது ஜொலித்து நிற்கும்... வைரமுத்துவின் எத்தனையோ பாடல்கள் எண்ணையும் கவர்ந்திருந்தாலும்.. காதல் ஓவியம் தான் அநதக் கவிஞன் மேல் என்னைக் காதல் கொள்ளச் செய்ததது....
அன்புடன்
ஆலாசியம் கோ.
புதிருக்கு பதில் தெரியவில்லை... இருந்தும் குழுக்களில் தேர்ந்தெடுத்து எழுதுவது போல ..
முதலமைச்சர் அம்மாவின் தாயாராக இருப்பார்களோ?/’/////
இல்லை. உங்களின் கணிப்பு தவறு. நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
//////Blogger RAMADU Family said...
ReplyDeleteGuru Vanakkam,
Basanthi Malar is getting popular now. Filter coffee is superb. All the songs are my moms favourite and get to hear all the time.
RAMADU///////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger Ravichandran said...
ReplyDeleteAyya,
All song details are stored in your Kabala hard disk or how did you collect all details...It is amazing...:)- By the way, I have got request for higher studies from you, I will start my process next week. Thanks for that.
Sincere Student,
Ravi Trichy/////
நல்லது. நன்றி நண்பரே!
//////Blogger Uma said...
ReplyDeleteபாசந்தி ஃபில்ட்டர் காஃபி அருமை. சிட்டுக்குருவி பாடல் சுசிலா பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று.
இந்தப் பெண்மணி மிகவும் பிரபலமானவர். யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம். //
இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை.///////
இப்படி ஒதுங்கினால் எப்படி? க்ளூ வேண்டுமா? அவரின் பெயர் R என்னும் எழுத்தில் துவங்கும்!
Very good combination.
ReplyDeleteMy guess is 'Rukmani Devi Arundale' founder of Kalakshetra, Chennai.
அவரின் பெயர் R என்னும் எழுத்தில் துவங்கும்//
ReplyDeleteருக்மணி அருண்டேலா?
ராஜகுமாரி திரையரங்கு இப்போது இயக்கத்தில் இல்லை. நாகேஷ் திரையரங்குக்கும் இதே நிலைதான்.
ReplyDeleteஐயா பதில்கள்:
ReplyDeleteகனவு/கவர்ச்சி கன்னி: டி ஆர் ராஜகுமாரி
இந்தப் பெண்மணி மிகவும் பிரபலமானவர் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்: அவர் பரத நாட்டிய மாமேதை "ருக்மிணி தேவி அருண்டேல்"
நல்ல பதிப்பு ஐயா சுவை அபாரம்!
ReplyDeleteபுதிருக்கு விடை ருக்மனி அருன்டெல்?
/////Blogger Sukanya said...
ReplyDeleteVery good combination.
My guess is 'Rukmani Devi Arundale' founder of Kalakshetra, Chennai.//////
யூகம் எதற்கு? சரியான விடை - அவரே தான்! பாராட்டுக்கள்
////Blogger Uma said...
ReplyDeleteஅவரின் பெயர் R என்னும் எழுத்தில் துவங்கும்//
ருக்மணி அருண்டேலா?///////
ஆமாம். ஆமாம். பாரட்டுக்கள் சகோதரி!
////Blogger Jagannath said...
ReplyDeleteராஜகுமாரி திரையரங்கு இப்போது இயக்கத்தில் இல்லை. நாகேஷ் திரையரங்குக்கும் இதே நிலைதான்.//////
அவைகளெல்லாம் முன்பு சென்னையின் அடையாளச் சின்னங்கள்! தகவலுக்கு நன்றி நண்பரே!
////Blogger மாணவி தேமொழி said...
ReplyDeleteஐயா பதில்கள்:
கனவு/கவர்ச்சி கன்னி: டி ஆர் ராஜகுமாரி
இந்தப் பெண்மணி மிகவும் பிரபலமானவர் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்: அவர் பரத நாட்டிய மாமேதை "ருக்மிணி தேவி அருண்டேல்"//////
இரண்டுமே சரிதான். பாராட்டுக்கள் சகோதரி!
/////Blogger Sukanya said...
ReplyDeleteநல்ல பதிப்பு ஐயா சுவை அபாரம்!
புதிருக்கு விடை ருக்மனி அருண்டேல்?/////
கரெக்ட். பாராட்டுக்கள் சகோதரி!
'நாட்டியகலாஷேத்திரா ' மாணவிகள் எல்லோரும் அணிவகுத்து நின்று பதில்சொல்லியிருக்கிறார்கள்..
ReplyDeleteஎனக்கு யாருன்னு சுத்தமாத் தெரியலை..பேரு மட்டும் கேள்விப்பட்டமாதிரி தோணுது..
ஜப்பானில் ஃபில்ட்டர் காஃபி,
காஃபி மேக்கர் எல்லாம் விதம்விதமா உண்டு சார்..
அனைத்தும் அருமை என்றுதான் சொல்ல வேண்டும். 50கள் 60களின் ஆரம்பத்தில் வந்த பாடல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. இருப்பினும் அவை நல்ல கருத்துள்ள பாடல்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ReplyDeleteகவிதைக்கும் இடமுண்டு
ReplyDeleteகற்பனை விதைக்கும் இடமுண்டென
கலந்து தந்த இரண்டாவது கிண்ணம்
காதல் ரசத்தை பிழிந்து தந்தது..
சுவைக்காக தந்த ஓமப்பொடி
கழற்றி வைத்தபல்செட்டைநினைவூட்டி
இயக்குனர் மகேந்திரன் அய்யருக்கு
இஷ்டமானவர் வரிசை நிற்பவர்..
அரங்கேற்றிய அவர் தம் கருத்தும்
அப்படியே இன்றைய வகுப்பை
மகிழ்வித்தது.. வழக்கம் போல்
மகிழவிக்க கவிஞர் வரிகளிலிருந்து..
இது ஒரு குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
வெரும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்
வெரும் நாறில் கை கொண்டு
பூ மாலை தொடுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வாணத்தில் பார்க்கிறேன்
உறவுராத பெண்ணை எண்ணி
நாள் தோறும் வாழ்கிறேன்
ஒரு சதாபிஷேகத்துக்காகத் திருக்கடையூர் போய்விட்டேன் 29ந் தேதி பின்னிரவில் இதைபடித்'தேன்'. ஆம்! அனைத்தும் தேன் தான்.
ReplyDeleteநடனமணி ருக்மணிதேவி அவர்கள், அன்னிபெசண்ட் பங்கு கொண்ட தியாசாபிசல் இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்.
அருண்டேல் என்ற வெளி நாட்டவரை கலப்புத் திருமணம், காதல் திருமணம் செய்தார். அது அக்காலத்தில் பல பொது சர்ச்சைகளை உருவாக்கியது.
சாஸ்திரியமான நடனம், நாட்டிய நாடகம் ஆகியவற்றில் புதுமைகளைப் புகுத்தியவர்.
நல்ல படிப்பாளி.
அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்ட போது,ருக்மணிதேவியின் பெயரும் வேட்பாளராக அடிபட்டது
Hi sir , filter copy romba super. Epdi sir idhellam collect panni type paningalo. Difficult work .thank you sir.
ReplyDeleteஐயா வணக்கம்.
ReplyDelete" நெல்லை அப்பர் ", மற்றும் " காந்திமதி அம்பாள் " வீற்றிக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாசுதேவனின் பெயரை உடைய
" வாசுதேவநல்லூரில் ",
உள்ள
, அருள் மிகு அர்த்தனாரிஸ்வரரின் ",
ஆலையத்தையும் கோவிலின் தென் மேற்கில் அமைந்து உள்ள எம்பெருமான்
" பெருமாளையும் ",
மார்கழி மாதத்தின் அதிகாலையில்
" கோவிந்த நாம சங்கீர்த்தனம் ",
கூறி முதலில்
" எம்தேவி ", ஆண்டாள் ",
அருளிய
" திருப்பாவை ",
என்னும் பாசுரத்தை பாடிய பின்னர்
" மாணிக்கவாசகர் ", அருளிய
" திருவம்பாவை ", என்னும்
பாசுரத்தை பாடி சென்ற நாள்களை இந்த அதிகாலையில் உணர செய்தமைக்கு நன்றி ஐயா!.
பொருள் தேட வேண்டி கடல் கடந்து வந்த பின்னர் எல்லா தெய்வங்களையும் தரிசனம் செய்யும் பாக்கியம் இல்லாமல் போனதை நினைத்து மிகவும் வருத்தம் ஐயா!.
ஐயா!
ReplyDelete" சாமுத்திரிக இலட்சணம் ",
படித்தவர்கள் மற்றும் அறிந்தவர்கள் அனைவருக்கும் தாங்கள் கொடுத்து உள்ள என்னுடைய
"ஆச்சியின்",
படத்தை கண்ட மாத்திரத்தில் தன்னையே மெய்மறக்கும் அழகை உடைய இளம் மங்கையை எவருக்கு ஐயா பிடிக்காது.
நிலவை போன்ற முகம்,
சுருள் சுருளான என்னவன்று கூறுவது சுருளான அழகிய முடி,
அழகு இன்னும் நிறைய கூறலாம். ஆனால், என்னுடைய வயதிற்கு கூறுவது பொருத்தம் ஆகாததால் இத்துடன் முடித்து கொள்கின்றேன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சத்தியமாக தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி இவர்தான். யாரென்று தெரிகிறதா? தெரியாவிட்டால் விட்டுவிடுங்கள் நஷ்டம் ஒன்றுமில்லை. இவர் பெயரில் சென்னை பாண்டி பஜாரில் இவர் கட்டிய திரையரங்கு ஒன்று இருக்கிறது. மனோகரா திரைப் படத்தில் வசந்தசேனை என்ற பெயரில் சிவாஜியுடன் கல்லா கட்டியவர் இவர்!====================================