6.8.11

எளியவன் மனதில் எஞ்சி நிற்பவை!

எனது அன்னை உமையாள் ஆச்சி அவர்களின் படம். 
அவரது ஐம்பதாவது வயதில் எடுக்கப்பெற்றது.

---------------------------------------------------------------------------------------
எளியவன் மனதில் எஞ்சி நிற்பவை!

என்னுடைய பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய எனது அன்னை திருமதி உமையாள் ஆச்சி அவர்கள் முன் இரவு 9:30 மணீயளவில்  இயற்கை எய்திவிட்டார்கள்  என்னும் துக்கச்செய்தியை, வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அவருக்கு வயது 94. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர். ஒருமுறைகூட மருத்துவமனைக்கு சென்று சிறு  சிகிச்சைக்கூட ஆளாகாதவர். சென்ற
10 தினங்களாக வயிற்று உபாதையால், இங்கே உள்ள பெரிய  மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை. இறைவனடி சேர்ந்துவிட்டார்

  "காலையிளங் காற்று பாடிவரும் பாட்டு
   எதிலும் அவர் குரலே!"


என்னும் கவியரசர் எழுதிய அற்புதவரிகள்தான் இந்த எளியவன் மனதில் எஞ்சி நிற்கின்றன!

தவிர்க்கமுடியாத சூழ்நிலையால் அடுத்த 10 நாட்களுக்கு வகுப்பறைக்கு விடுமுறை

மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்!

76 comments:

  1. ஆசிரியரின் தாயார் இயற்கை எய்தியது குறித்து எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

    ReplyDelete
  2. Very Sorry to hear about this news. May her soul rest in peace. May God give the family enough strength to bear this loss. From Balasubramanian, Riyadh.

    ReplyDelete
  3. மற்ற அனைத்தையும்விட தாயைப் பிரிவது என்பது ஈடுசெய்யமுடியாத இழப்புதான். தங்களுக்கு எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தெய்வமாகிவிட்ட தங்கள் தாயாரின் ஆசிகளை நானும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. அன்னை உமையாள் ஆச்சி அவர்கள் சிவலோகப் பதவி அடைந்த தகவல் அறிந்து நாங்கள் மிகுந்த வருத்தம் அடைகிறோம். அன்னையின் ஆத்மா சாந்தியடைய எங்கும் நிறை ஆண்டவனை வேண்டிக் கொள்கிறோம்.

    அன்புடன்,
    ஆலாசியம் மற்றும் குடும்பத்தார்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. my deep condolences to you and prayer to the Great Soul to attain rest and peace in the feet of GOD
    from
    Jagadesh

    ReplyDelete
  7. திருச்சிற்றம்பலம்.
    ===================
    ப‌ட்டின‌த்தார் தாயாருக்குத் தகனகிரியை செய்கையிற் பாடிய வெண்பா.
    ==============================================================

    ஐயிரண்டுதிங்களாவங்கமெலாநொந்துபெற்றுப்
    பையலென்றபோதேபரிந்தெடுத்துச் -செய்யவிரு
    கைப்புறத்திலேந்திக்கனகமுலைதந்தாளை
    யெப்பிறப்பிற்காண்பேனினி. 1

    முந்தித்தவங்கிடந்துமுந்நூறுநாட்சுமந்தே
    யந்திபகலாச்சிவனையாதரித்துத் -தொந்தி
    சரியச்சுமந்துபெற்றதாயார்தமக்கோ
    வெரியத்தழன்மூட்டுவேன். 2

    வட்டிலிலுந்தொட்டிலிலுமார்மேலுந்தோண்மேலுங்
    கட்டிலிலும்வைத்தென்னைக்காதலித்து - முட்டச்
    சிறகிலிட்டுக்காப்பாற்றிச்சீராட்டுந்தாய்க்கோ
    விறகிலிட்டுத்தீமூட்டுவேன். 3

    நொந்துசுமந்துபெற்றுநோவாமலேந்திமுலை
    தந்துவளர்ந்தெடுத்துத்தாழாமே - யந்திபகல்
    கையிலேகொண்டென்னைக்காப்பாற்றுந்தாய்தனக்கோ
    மெய்யிலேதீமூட்டுவேன். 4

    அரிசியோநானிடுவேனாத்தாடனக்கு
    வரிசையிட்டுப்பாத்துமகிழாம - லுருசியுள்ள
    தேனேயமிர்தமேசெல்வத்திரவியபு
    மானேயனவழைத்தவாய்க்கு. 5

    அள்ளியிடுவதரிசியோதாய்தலைமேற்
    கொள்ளிதனைவைப்பேனோகூசாமன் - மெள்ள
    முகமேன்முகம்வைத்துமுத்தாடியென்றன்
    மகனேயெனவழைத்தவாய்க்கு. 6
    விருத்தம்.

    முன்னையிட்டதீமுப்புரத்திலே
    பின்னையிட்டதீதென்னிலங்கையி
    லன்னையிட்டதீயடிவயிற்றிலே
    யானுமிட்டதீமூள்கமூள்கவே. 7

    வெண்பா.

    வேகுதேதீயதனில்வெந்துபொடிசாம்ப
    லாகுதேபாவியேனையகோ - மாகக்
    குருவிபறவாமற்கோதாட்டியென்னைக்
    கருதிவளர்த்தெடுத்தகை. 8

    வெந்தாளோசோணகிரிவித்தகாநின்பதத்தில்
    வந்தாளோவென்னைமறந்தாளோ - சந்ததமு
    முன்னையேநோக்கியுகந்துவரங்கிடந்தென்
    றன்னையயீன்றெடுத்ததாய். 9

    வீற்றிருந்தாளன்னைவீதிதனிலிருந்தாள்
    நேற்றிருந்தாளின்றுவெந்துநீறானாள் - பாற்றெளிக்க
    வெல்லீரும்வாருங்களேதென்றிரங்காமல்
    எல்லாஞ் சிவமயமே யாம். 10

    மிகவும் வருந்துகிறேன். பழனியப்பன் உங்க‌ளுக்கு ஆறுத‌ல் அளிக்கட்டும்.

    ReplyDelete
  8. My deep condolence for the untimely demise of your mother. May God give you the strength to bear the loss of your mother and I pray for her soul to rest in peace.

    A.M.Gobu

    ReplyDelete
  9. ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்த உங்கள் தாயார் மறைவிற்கு எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  10. அன்புமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

    தங்களின் தெய்வ தாயார் தெய்வ திருவடி சேர்த்தார் என்பதை அறிந்து ஆழ்ந்த துயர் கொண்டேன், இந்த பிரிவு எந்த அளவு துயர் கொள்ள செய்யும் என்பதை உணர்வேன்,

    தங்களின் துயர்வுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இதை தவிர தங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்தைகள் ஏதும் அறிதிடேன் யாம்.

    தங்கள் அன்புள்ள

    மனோகரன்
    (சிங்கப்பூர்)

    ReplyDelete
  11. அன்னை உமையாள் ஆச்சி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எங்கும் நிறை ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்!தங்களின் தாயார் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  12. தங்களுடைய அன்னையாரின் மறைவுச் செய்தி கேட்டு மனவருத்தம் அடைகிறேன். ஆண்டுகள் பல வாழ்ந்தவராயினும், அன்புள்ளமும் பாசமும் கொண்ட அன்னையின் அருமை அளப்பற்கரியது. உங்கள் எழுத்தில் மனதில் ஊடாடும் சோகம் வெளிப்படுகிறது. ஆறுதல் பல சொன்னாலும் இழப்பை ஈடுகட்ட முடியாது. உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற இந்த சோகத்தைத் தாங்கும் வலிமையை இறைவன் அளிக்கட்டும். தங்களுடைய மனபாரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  13. பெரிய ஆச்சி அவர்கள் சிவலோக பதவி அடைந்த செய்தி அறிந்து மிக வருத்தமடைந்தோம்.
    அவர்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறோம்

    ReplyDelete
  14. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    தங்களுடைய தாயார் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
    தங்களைப்போன்ற சிறந்த மனித நேயமிக்க சான்றோனை மகனாகப்பெற்ற‌
    தாயின் பூத வுடல் மறைந்தாலும் அவரின் ஆன்மா தங்களை என்றென்றும்
    நல் வழி நடத்திச்செல்லும் என்பதில் அய்யமில்லை.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்
    வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வ‌ருத்த‌த்துட‌ன் த‌ங்க‌ள் மாண‌வ‌ன்,
    அர‌சு.

    ReplyDelete
  15. மற்ற அனைத்தையும்விட தாயைப் பிரிவது என்பது ஈடுசெய்யமுடியாத இழப்பு. தங்களுக்கு எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    அன்னை ஆச்சி அவர்களின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்!

    MURUGARAJAN,COIMBATORE.

    ReplyDelete
  16. அன்னை உமையாள் ஆச்சி
    ஆத்மா சாந்தியடைய எங்கும் நிறை ஆண்டவனை வேண்டிக் கொள்கிறோம்.

    ReplyDelete
  17. dear sir,
    very sorry to hear the news.my deep condolences.

    sanjay ramanathan

    ReplyDelete
  18. வணக்கம் வாத்தியார் அய்யா !!!***முன்னையிட்டதீமுப்புரத்திலே
    பின்னையிட்டதீதென்னிலங்கையி
    லன்னையிட்டதீயடிவயிற்றிலே
    யானுமிட்டதீமூள்கமூள்கவே. 7
    அய்யா
    தங்களின் தெய்வ தாயார் சிவலோக பதவி அடைந்தார்கள் !!!பிரிந்து வாடும் உங்களுக்கு எனது மனங்கனிந்த ஆறுதல்கள் !!! என்றும் உங்கள் துணையாக இருப்பார்கள் வணக்கம் !!!

    ReplyDelete
  19. அம்...மா...

    உச்சரிக்கும் போது
    உலர்ந்த உதடுகள்

    உதறினாலும் அவர் ஈர நினைவுகள்
    உள்ளத்தில் உறைந்திருக்கும் - அவர்

    உருவத்தினால் படத்திலும்
    உள்ளத்தால் மனதிலும்

    உங்களோடு
    உண்மையாகவே வாழ்வார்கள்..

    அன்றுபோல்
    இன்றும் .. என்றும்..

    ReplyDelete
  20. Sir,
    Please accept my heartfelt condolences on the loss of your mother.May god give her soul rest in peace.

    ReplyDelete
  21. ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. எனது மனவருத்தங்களை பகிர்ந்துகொள்கிறேன் அய்யா...

    தங்கள் மாணவன்
    சுதாகர்

    ReplyDelete
  22. அய்யா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ..

    ReplyDelete
  23. தங்களின் துயர்வுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இதை தவிர தங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்தைகள் ஏதும் அறிதிடேன் யாம்.
    தெய்வமாகிவிட்ட தங்கள் தாயாரின் ஆசிகளை நானும் வேண்டுகிறேன்.

    தங்கள் அன்புள்ள

    விவேக் ,
    (சிங்கப்பூர்)

    ReplyDelete
  24. வாழ்க வளமுடன்!
    நமது அன்பு தாயார் ஆன்மா இறைநிலையுடன் கலந்து நிறைந்திட எல்லாம்வல்ல இறையருள் துணைபுரிய பிரார்த்திக்கின்றேன்.
    நன்றி! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  25. ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

    ReplyDelete
  26. தாயாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கிரேன். ஆதிமுலம். புதுச்சேரி.

    ReplyDelete
  27. My deep condolences and may her soul rest in peace.

    ReplyDelete
  28. sorry to hear to this news.May God will give enough strength to you your family to overcome the situation.may her soul rest in the peace.

    ReplyDelete
  29. தாயிற்ச் சிறந்த கோவில் இல்லை,அன்னை உமையாள் ஆச்சி அவர்களின் ஆத்மா சாந்திஅன்னை உமையாள் ஆச்சி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எங்கும் நிறை ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்!தங்களின் தாயார் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
    வருத்தத்துடன் பாலாஜி கண்ணண்.

    ReplyDelete
  30. வாத்தியார் ஐயா வணக்கம்.

    தங்களை பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்! அதாவது என்னுடைய ஆச்சி இறைவன் அடி சேர்ந்தார் என்பதனை அறிந்த நான் ஆச்சியின் ஆத்மா எல்லாம் வல்ல பகவான்னோடு மறு பிறவி இல்லாமல் சேர பகவானை வேண்டுகின்றேன் ஐயா .

    அம்மாவடோ அம்மா அதாவது என்னுடைய ஆச்சி கூறுவார்கள் இந்த பிறவி ஆனது எதனை எல்லாம் அனுபவிக்கனுமோ அனைத்தையும் அனுபவித்து இயற்கையாக மரணம் அடைய வேண்டும் என்று . அப்பம் தான் ஆத்மா இறைவன் அடி சேரும் என்பார்கள் . ஆச்சி கூறியது படி ஆச்சி இயற்கையாக மரணம் அடைந்தமைக்கு ஆச்சி மிகவும் பாக்கியசாலி தான் என்பது எனது கருத்து .

    ReplyDelete
  31. May her soul rest in peace. Sorry for your loss.

    -Meena

    ReplyDelete
  32. தங்கள் துயர்வுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  33. தற்போதுதான் இச் சோகச் செய்தியை அறிந்தேன்.

    எனது ஆழ்ந்த அனுதாபங்களத் தெரிவிக்கின்றேன்.

    எமக்கு சோதிடத்தில் ஓர் குருவை தந்த அன்னையின் ஆத்மா சாந்தியடைவதாக.

    ReplyDelete
  34. அம்மா தருவாள் நிம்மதி..
    ---------------------------

    நெஞ்சுக்கு நிம்மதி
    ---------------------


    என்னமாய்த் தருவாள் உன் அன்னை என்றவரே

    அவள் வயிறு பசிக்கும்போது

    அன்னமாய்த் தருவாள்; அன்பு நெஞ்சு

    வண்ணமாய்த் தருவாள் இன்னும் கேண்மின்!

    சொன்னமாய்த் தருவாள் நெறிகொண்ட

    நேரிழையின் கன்னமாய்த் தருவாள் பளிச்சிடுமோர்

    எண்ணமாய்த் தருவாள் செவிகுளிரப்

    பண்ணுமாய்த் தருவாள் நெஞ்சுக்கு நிம்மதியே!
    FROM veniyinkavithaikal.blogspot.com

    ReplyDelete
  35. தங்களின் தயார் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

    நைனார்

    ReplyDelete
  36. மற்ற எல்லா இழப்பிற்கும் ஆறுதல் சொல்லாம்... இந்த இழப்பிற்கு எப்படி ஆறுதல் சொல்வது...

    இந்த இழப்பில் இருந்த ஐயாவை வெளிக்கொண்டுவர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்....

    ReplyDelete
  37. எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அய்யா...
    அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிறார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  38. அன்னையார் அவர்களின் மறைவுச் செய்தி குறித்து மிகுந்த வருத்தம் அடைகிறோம். அன்னையின் ஆத்மா சாந்தியடைய எங்கும் நிறை இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

    ReplyDelete
  39. My deepest condolence to you and your family on the untimely demise of your mother. Our prayers are you with you Sir.

    Sukanya

    ReplyDelete
  40. My deep condolences sir. May GOD give you and your family the strength to bear this loss.

    ReplyDelete
  41. My heartfelt condolences for your bereavement. May God give you more than enough mental strength to come out of your trauma.

    ReplyDelete
  42. Ayya,

    After reading this, i got shocked. Anyway God is with you...God will help you for any future activites..

    Sincer Student,
    Ravi

    ReplyDelete
  43. அன்பிற்குரிய தங்களின் தாயாரின் மறைவிற்கு எனது மனமார்ந்த வருத்தத்தை தங்களுடன் பகிர்கிறேன்

    பவானி கே.ராஜன்

    ReplyDelete
  44. Very sorry to hear this. Deepest condolences, please take care, sir.

    ReplyDelete
  45. ஆசிரியரின் அன்னை சிவபதம் எய்தியைதயிட்டு எனது ஆழ்ந்த வருத்தத்தையும்,அன்னையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்

    விஜய்.S

    ReplyDelete
  46. Sorry to hear this. May her soul rest in peace.

    Praying Almighty to give strength and courage for this loss.


    -Shankaralingam

    ReplyDelete
  47. Very Sorry to hear about this news. I pray God for narkathi to her soul. May God give the family enough strength to bear this loss. From A.Lakshmanan,Musiri

    ReplyDelete
  48. Dear Sir,

    I am so sorry to hear this.

    My deep condolences.

    No one in the world replace our mother. I feel your sadness.

    I am sorry.

    ReplyDelete
  49. இழப்புகளில் மிகப்பெரிய இழப்பு அன்னையை இழப்பது.

    அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.

    ராஜேஷ்சுப்பு மற்றும் குடும்பத்தினர்

    http://astrovanakam.blogspot.com/

    ReplyDelete
  50. Dear Sir,
    My deep condolences for this great loss of yours. May God give you the strength to get through this loss. We all pray for your Mother's Soul to rest in peace.
    From, Meena.

    ReplyDelete
  51. ஆழ்ந்த அனுதாபங்கள்!..அன்னையின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!!
    இந்த நேரத்தில் பட்டினத்தார் பாடிய பாடல் வரிகள் நினைவிற்க்கு வருகின்றன! ("முன்னையிட்ட தீ முப்புரத்திலே,பின்ன இட்ட தீ தென் இலங்கையிலே,அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே.....")
    ‍-ஜவகர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  52. தங்களின் தயார் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை மற்றும் வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்,அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  53. My deep condolonces sir.

    May the soul of your mother rest in peace.

    I pray to God to give strength for your family to bear the loss.

    ReplyDelete
  54. தங்களின் தாயார் ஆத்மா சிவா சாயுஜ்யம் அடையவும், தங்களும் மற்றும் தங்கள் குடும்பத்தாரும் இவ்வீடு செய்யமுடியா இழப்பில் இருந்து விரைவில் மீண்டு வர எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  55. Very sorry Sir.May god gives all your family members to overcome her loss.

    ReplyDelete
  56. தங்களின் எழுத்துக்களில் மட்டுமே தங்களைக் கண்டு உருகியவன்;தங்களை ஈன்று புறந் தந்த தெய்வம் - உமையவள் தன் மைந்தன் சுப்பையாவை- என்றும் காக்கும்; துணை நிற்கும்.
    - கம்பன் அடிசூடி பழ பழனியப்பன்

    ReplyDelete
  57. My Deep Condolences. The place can not be replaced any other relationship. It is a universal rule

    ReplyDelete
  58. dear sir,
    very sorry to hear this news.my deepest condolences

    swami

    ReplyDelete
  59. தங்கள் தாயார் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கர்ம ஞானியான தாங்கள் இந்த துயரத்திலிருந்து வெகு விரைவில் மீண்டு விடுவீர்கள் என்றும் நம்புகிறேன். தங்கள் தாயாரின் ஆன்மா இறைவனோடு இரண்டற கலக்க என் பிரார்த்தனைகள்.
    -இவண்
    உங்களால் சோதிட அடிப்படைகளைப் பயின்ற ஒரு புதிய மாணவன்.

    ReplyDelete
  60. திருமதி உமையாள் ஆச்சி அவர்கள் இயற்கை எய்திவிட்டார்கள் என்னும் துக்கச்செய்தியை கேள்விப்பட்டு தாங்கவொண்ணாத துயரம் அடைந்தேன்.

    தங்களுக்கு இந்த இழப்பைத்தங்கும் மனவலிமையை தருமாறு எல்லாம்வல்ல இறைவனிடம் பிறார்த்திக்கிறேன்.

    தங்களன்புள்ள,
    மீ. இராஜேந்திரன்.

    ReplyDelete
  61. Heart felt condolence for your mother. May her soul rest in peace.

    ReplyDelete
  62. i felt very sad , may her soul get peace


    ganesan

    ReplyDelete
  63. ஐயா,

    இன்று தான் இந்த துக்கச் செய்தியை அறிந்தேன். தங்கள் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். அன்னையாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  64. தன்னை மறந்து
    உன்னை சுமந்தாள்
    மறு பிறவி
    தான் கண்டு
    உன்னை எடுத்தாள்.

    பசியால் நீ....
    அழ தன் ரத்தத்தை
    பாலாக்கினாள்.

    கல்லில் செதுக்கிய கடவுளை விட
    கருவில் நம்மை செதுக்கிய அன்னை

    உன்னைமுத்துப்போல் வளர்த்தெடுத்தாள்

    உன் மனம் மாறினாலும்...
    என்றும் தாய்மனம் மாறாது.

    தாயார் இயற்கை எய்தியது குறித்து எனது ஆழ்ந்த இரங்கலை மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இந்த அதிர்ச்சியை தாங்கும் வல்லமையை வளங்க பிராத்திக்கும்

    உங்கள் அன்பு மாணவன்
    வசந்தன்
    கனடா

    ReplyDelete
  65. My heartfelt deep condolence to you and your family , May her soul rest in peace

    ReplyDelete
  66. Dear Sir

    Kindly accept my heartfelt condolence. Mother is the one and only relationship which knows only to give the love and affection without expecting anyting in return. The memories are to be cherished. I pray the Almighty to rest her soul in peace and giove you enough strength to withstand the loss.

    With love
    S Subramanian Iyer

    ReplyDelete
  67. எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    நீண்ட நாட்கள் மருத்துவமனை வாசத்திற்கு பிறகு இன்றுதான் இதைக் காண முடிந்தது. என் பிரச்சனை முக்கியமல்ல. அதைப் பிறகு பார்க்கலாம்.

    ReplyDelete
  68. my deep condolences may ur mother,s soul rest in peace

    ReplyDelete
  69. ஆழ்ந்த வருத்தங்கள் என்று கூறி நல்லதொரு மரணத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. 94 வயது என்பது கொடுப்பினை.

    உங்களின் முகம் உங்கள் அம்மாவின் சாயலில் உள்ளது.

    ReplyDelete
  70. ஆழ்ந்த அனுதாபங்கள்!

    ReplyDelete
  71. உங்கள் தாயார் மறைவிற்கு எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    P NATARAJAN

    ReplyDelete
  72. Very sorry to hear about your this news. May her soul rest in peace. Auditor Hariharakrishnan from Tuticorin.

    ReplyDelete
  73. very sorry about this news...a very deep regrets on behalf of my family and friends

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com