14.7.11

நகைச்சுவை: வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?

---------------------------------------------------------------

நகைச்சுவை: வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?

ஒன்றிற்கு நான்கு நகைச்சுவைத் துணுக்குகள் உள்ளன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
_____________________________________________--

1
பணம் செலுத்தி உடற் பயிற்சி செய்யும் ஜிம்’மிற்கு வந்த முதியவர், பத்து நிமிடங்கள் ஜிம்மைச் சுற்றிப்பார்த்துவிட்டு, அங்கே இருந்த பயிற்சியாளரிடம், மெல்லக் கேட்டார்

“அங்கே நிற்கும் அந்த அழகான யுவதியைக் கவர வேண்டுமென்றால், இங்கே இருக்கும் மெஷின்களில் எந்தமெஷினை நான் பயன்படுத்த வேண்டும்?”

பயிற்சியாளர் பளிச் சென்று பதில் சொன்னார். “ஜிம்மிற்கு வெளியே இருக்கும் ஏ.டி.எம் மெஷினைப் பயன்  படுத்துங்கள்!”
-------------------------------------------------
2
பெரிய புத்தகக் கடைக்கு வந்த அப்பாவிக் கணவன், அங்கே நின்று கொண்டிருந்த பெண் ஊழியரிடம் கேட்டான்

“வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?” என்ற புத்தகம் இருக்கிறதா?

அந்தப் பெண் மெல்லிய புன்னகையுடன் பதில் சொன்னாள்

“கதைப் புத்தகங்களுக்கான பகுதி மூன்றாவது தளத்தில் உள்ளது. அங்கே சென்று பாருங்கள்!”
-------------------------------------------------------
3.

பண்பலை வானொலி நிலையத்திற்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. பேசியவன் சொன்னான்.

“ தெருவில் ஒரு மணி பர்ஸ் கிடைத்தது. அதில் பதினைந்தாயிரம் ரொக்கம், கிரிடிட் கார்டு இரண்டும் உள்ளன”

அறிவிப்பாளர் உற்சாகமடைந்து வினவினார்:

“புகைப்படத்துடன் கூடிய முகவரி அட்டை - அதாவது ID card அத்துடன் இருக்கிறதா?”

“ஆகா இல்லாமலா... இருக்கிறது. பரங்கிமலை பழநிசாமி. முழு முகவரியும் இருக்கிறது!”

“ஆகா எத்தனை நேர்மை? அதை உரியவரிடம் திருப்பிக் கொடுக்க விரும்புகிறீர்களா?”

”இல்லை! அவருக்காக சோகப் பாடல் ஒன்றை ஒலிபரப்ப இயலுமா? டெடிகேட் செய்ய விரும்புகிறேன்!”
-----------------------------------------------------------------------------------------
அடுத்து வருவது அசைவம். அசைவத்தைக் கண்டு முகம் சுழிப்பவர்கள், பதிவை விட்டு விலகிச் செல்லவும்!
--------------------------------------------------------------------------------------------------
4

இளமையான வேலைக்காரி ஒருத்தி, தான் வேலை செய்யும் பங்களாவின் முதலாளியம்மாவிடம் பேசினாள்:

“எனக்கு நீங்கள் சம்பளத்தை ஏற்றித்தர வேண்டும். இப்போது தருகின்றதைவிட ஆயிரம் ரூபாய் அதிகமாகத் தர  வேண்டும்”

சற்றுக் கோபமுற்ற முதலாளியம்மா, கடுகடுவென்று திருப்பிக் கேட்டார். “எதற்காக ஏற்றித் தர வேண்டும்?”

“நான் சம்பளத்தை ஏற்றிக் கேட்பதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. நான் உங்களைவிட சட்டைகளைநன்றாகத் துவைத்து, நன்றாக அயர்ன் செய்து பளிச்சென்று கொடுக்கிறேன்”

“யார் சொன்னார்கள்”

“உங்கள் கணவர்தான் அம்மா!”

“அப்படியா அவர் வரட்டும் பேசிக் கொள்கிறேன். அடுத்த காரணத்தைச் சொல்”

”உங்களைவிட நான் நன்றாக சமையல் செய்கிறேன்”

“நான்சென்ஸ்! இதை யார் சொன்னது?”

“இதையும் உங்கள் கணவர்தான் சொன்னார் அம்மா!”

“ஒகோ, அடுத்தது என்ன?”

“உங்களை விட நான் நன்றாகக் காதல் செய்கிறேனாம். படுக்கையில் அதிக சந்தோஷத்தைத் தருகிறேனாம்”

முதலாளியம்மா கோபத்தின் உச்சத்திற்குச் சென்று கத்தத் துவங்கிவிட்டார், “இந்தக் கருமத்தை யார் சொன்னது?

இதையும் அவர்தான் சொன்னாரா?”

“அவர் சொல்லவில்லை”

“வேறு யார் சொன்னார்கள்?”

“நம் வீட்டுத் தோட்டக்காரர்”

முதலாளியம்மாவின் கோபம் காணாமல் போய்விட்டது. அதே வேகத்தில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிட்டார்.

“நீ விரும்பும் சம்பளத்தை நீ வாங்கிக் கொள். தோட்டக்காரனுக்கும் சம்பளத்தை ஏற்றிக் கொடுத்துவிடுகிறேன். இதைப் பற்றி நீங்கள் இருவரும் இனி வாயைத் திறக்காதீர்கள்”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனைத்தும் இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. மொழிமாற்றம் மட்டும் அடியேனுடைய கைங்கர்யம்
--------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

11 comments:

  1. வணக்கம் வாத்தியார் ஐயா,

    ஏடிஎம் - மனம் விட்டு சிரிக்கச் செய்தது

    நாட்டாமை - யதார்த்தத்தைத் தந்து சிரிக்கச் செய்தது..

    சோகப்பாடல் டெடிகேட் - அல்வா

    அசைவம் - கற்பு

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  2. ////“ஆகா எத்தனை நேர்மை? அதை உரியவரிடம் திருப்பிக் கொடுக்க விரும்புகிறீர்களா?”

    ”இல்லை! அவருக்காக சோகப் பாடல் ஒன்றை ஒலிபரப்ப இயலுமா? டெடிகேட் செய்ய விரும்புகிறேன்!”////

    ஹா, ஹா, ஹா...

    ReplyDelete
  3. நகைச்சுவைகளை ரசித்தோம்==அசைவ‌த்தையும் சேர்த்துத்தான்!

    ReplyDelete
  4. அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா
    நகை சுவைல சைவ்முண்டு அசைவமுண்டு ...ரெண்டில் நாம் எந்த வகை என
    நமக்கு தேவையானதை படித்து கொள்ள வேண்டியாது
    ரெண்டுமே நல்லா இருக்கு!
    நன்றி

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சிரிக்கச் சொன்னால்
    சிரிக்கின்றோம்..எதுவும் சொல்லாமல்

    அழச் சொன்னால்
    அழுகின்றோம் எதற்கு என கேட்டபடி

    ReplyDelete
  7. ஏடிம் -- உண்மையே...
    சோகப்பாடல் ---சந்தோசம் எடுத்தவருக்கு...
    comedy super sir...
    rajeshnedveera
    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  8. நகைச்சுவை என்ற பெயரில் நீங்கள் அலம்பல் பண்ணுவது நன்றாக இல்லை பாஸ். ரசிக்கிற மாதிரி எழுதுங்க.

    ReplyDelete
  9. நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்க வேண்டுமானால் 5ல் சுப கிரகங்கள் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அசைவ நகைச்சுவை பிரியர்களுக்கு அரக்க குரு 5ல் இருப்பாரோ?

    ReplyDelete
  10. sir, actro rajesh is writing ,in rani magazine,about his experiences with astrlogers n sooth sayers n the likes . very interesting all the students n youself shuld check it out, i feel.
    thnx

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com