1.4.11

ஏனிந்த சாய்ந்த கோலம் சுவாமி?

 திருப்புடைமருதூர் கோவிலின் எழில்மிகு தோற்றம்
--------------------------------------------------------------------------------
நறுமணம் மிக்க சிவனாருக்கு உகந்த நாகலிங்கப்பூ
 -------------------------------------------------------------------------------------
 இன்றைய பக்தி மலரை நம் வகுப்பறை மூத்த மாணவர் ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து  மகிழுங்கள்.தரிசித்து வணங்குங்கள்!
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏனிந்த சாய்ந்த கோலம் சுவாமி?

"நரம்புநாதன்!" வருகைப்பதிவின்போது கூப்பிட்டவுடன் ஒரு ஒல்லியான இளைஞர் எழுந்து "உள்ளேன்" என்று  பதில் அளித்தார்.

ந‌ரம்புநாதன்!

அதென்ன பெயர்? பெயருக்கு ஏற்றாற்போல அந்த இளைஞரும் படு ஒல்லி என்பதால், அந்தப் பெயர் அவருக்கு  அவருடைய உடல் அமைப்பைப் பார்த்து வைக்கப்பட்டதுதான் என்று தோன்றியது.

ந‌ரம்புநாதனைக் குறுக்கி "யோவ்!நரம்பு!"என்று எல்லோரும் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.இன்னும் சில  ஆங்கில மோகம் பிடித்தவர்கள் நரம்பை மொழி ஆக்கம் செய்து "வீன்ஸ்" என்று கூட கூப்பிட  ஆரம்பித்துவிட்டார்கள்.

சும்மா பதிவுக்காக எழுதுகிறேன் என்று யாரும் நினைக்காதீர்கள். உண்மையாகவே அந்தப் பெயருடன் ஒருவர்

என்னோடு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்தார்.

அவரைக் கேட்டாலும் பெயருக்கான காரணம் அவருக்கும் தெரியவில்லை.அந்த நண்பருடன் தொடர்பும் விட்டுப்

போயிற்று.ஆனால் அந்தப் பெயருக்கு என்ன பொருள் என்பது மட்டும் மனதின் ஓரத்தில்  என் 22 வயது முதல்  இன்றுவரை (27 மார்ச் 2011 வரை) இருந்தது அந்தப் பெயருக்கான விளக்கத்தை கடந்த 27 தேதி அன்று  ஆண்டவனாகத்  தெரிவித்தார்.

என் தந்தையாரின் தந்தை அய்யாஅய்யர்!அப்படித்தான் அவருடைய
பெயர் பள்ளியில் பதிவு செய்யப்பட்டு  இருந்திருக்கிறது.என்
தந்தையாரின் மறைவுக்குப்பின்னர்  தர்ப்பணம் செய்ய மூதாதையர் பெயர்களைத் தேடிஅறிந்தபோது அப்பாவின் அப்பா பெயர்
புடார்ஜுனேஸ்வர சர்மா என்று தெரிய வந்தது. எந்தப் பெயரால்
அவர்கள் ஊருக்கு அறிமுகமானாலும், முப்புரிநூல் அணிவிக்கும்
சடங்கின் போது வைக்கப்படும் சர்மா  பெயர்தான் சாங்கியம்
சடங்கில் பயன் படுத்தப்படும். எனவே அய்யாஅய்யர் தான்
புடார்ஜுனேஸ்வர சர்மா என்பது உறுதியானது. அது சரி இந்த புடார்ஜுனேஸ்வர சர்மா என்ற பெயரும் விநோதமாக இருக்கிறதே!
அந்தப்  பெயருக்கான காரணம் என்ன என்று தேடினேன்.

திருப்புடைமருதூர் என்ற ஊரில் உள்ள சுவாமி பெயர் புடார்ஜுனேஸ்வரர் என்று அறியலாயிற்று.

திருப்புடைமருதூர் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள ஸ்தலம்.

மூன்று கோவில்களுக்கு அர்ஜுன க்ஷேத்திரங்கள் என்று பெயராம். அர்ஜுனம் என்றால் மருதமரம்.

1
த‌லை மருதூர் என்பது ஸ்ரீஸைலம். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் உள்ளது. மல்லிகார்ஜுனேஸ்வரர் என்பது ஸ்வாமி பெயர்.
2
இடை மருதூர் என்பது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவிடைமருதூர்.
மஹாலிங்கேஸ்வரர் என்பது சுவாமி பெயர்.
3
கடை மருதூர் என்பது திருப்புடைமருதூர்.
ஸ்வாமி பெயர் புடார்ஜுனேஸ்வரர்.

தாத்தாவுக்குப் பெயர் கொடுத்த‌ சுவாமியை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் மீதூர திருப்புடைமருதூர்  சென்றோம்.

வாசலிலேயே "நாறும் பூ நாதர் திருக்கோயில்" என்று எழுதப்பட்ட
அறிவிப்புப் பலகை.பொறிதட்டியது. ஆஹா!  நரம்புநாதன என்பது தவறு! நாறும் பூ நாதனையே நரம்புநாதன் ஆக்கிவிட்டது பொல்லாத உலகம்.

கருவூர் தேவர் நதியின் அக்கரையில் சென்று கொண்டிருந்தாராம்.
நதியில் வெள்ளம் பெருக்கு எடுத்து  ஓடிக்கொண்டு இருந்ததாம்.
இக்கரையில் சிவாலயம் கண்ணுக்குத்தெரிகிறது. ஸ்வாமியின்
பெயர் தெரியவில்லையே

என்று கருவூரார் நினைத்தபோது, சிவன் கோவிலீல் இருந்து
மலர்களின் மணம் அக்கரையில் இருந்த  கருவூராருக்குத்
தெரிந்ததாம். "நாறும் பூ நாதரே!" என்று கருவூரார் மனம் உருகி
அழைத்தாராம். வெள்ளம் விலகி வழிவிட இக்கரை சேர்ந்து ஸ்ரீ புடார்ஜுனேஸ்வரரைத் தரிசித்தாராம்.

கருவூரார் தரிசித்தபோது லிங்கம் சாய்ந்த நிலையில் இருந்ததாம்.
கருவூரார் ஸ்வாமியையே காரணம் கேட்க, "உம்  ஓலத்தையும், வாழ்த்துக்களையும் செவிசாய்க்கவே சாய்ந்த கோலம் கொண்டோம்" என்றாராம்

"அவ்வாறாயின் மற்றெல்லோருக்கும் இவ்வண்ணமே இருந்து மக்கள் அனைவரின் குறைகளைச் செவிமடுத்து, களைதல் வேண்டும்" என்று வேண்டிக்கொண்டாராம் கருவூர் சித்தர். "அங்ங்னமே ஆகுக!" என்று
சொல்லி,  சாய்ந்த வண்ணமே உள்ளார் ஸ்ரீ புடார்ஜுனேஸ்வரர்
என்கிற நாறும் பூ நாதர்!

பின் குறிப்பு: நாற்றம் என்ற தமிழ்ச்சொல்லுக்கு நல்ல நறுமணம்,
வாசனை என்று  தமிழில் பொருள். ஆனால்  இப்போது நடைமுறையில் நாற்றம்,  நாத்தம் என்ற எதிமறையான பொருளைத் தருகிறது..

நன்றி, வணக்கத்துடன்
கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK),
லால்குடி

 கட்டுரையாளர் KMRK என்ற முத்துராமகிருஷ்ணரின் எழில்மிகு தோற்றம்
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

13 comments:

  1. நன்றி அய்யா! கடைசி வரிகளில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அருள் கூர்ந்து சரி செய்க

    ReplyDelete
  2. வணக்கம் KMRK சார்,

    ஆகா ... நரம்பு நாதன் லே இப்படி ஒரு கதை இருக்கா ?

    நாறும் பூ நாதன் = நரம்பு நாதன் ஆன
    கதை நல்லா இருக்கு ...


    ++ ஒரு சிறிய சிந்தனை ++

    ' நரன் ' - என்ற சொல்லுக்கு
    மனிதன் என்பது பொருள் ...

    ' பூ ' - என்ற சொல்லுக்கு
    உலகம் என்பது பொருள் ...

    ' நாதன் ' - என்ற சொல்லுக்கு
    தலைவன் என்பது பொருள் ..

    நரன் + பூ = நரம்பூ என்று ஆகி

    நரம்பூ + நாதன் = நரம்புநாதன் என்று ஆயிற்று என்று கொண்டால்,

    நரம்பு நாதன் என்பது - இந்த உலகில் மனிதர்களின் தலைவன் என்ற பொருளை தருமே ?

    விவேகானந்தரின் பெயரும் கூட
    நரேந்திரன் - மனிதர்களின் தலைவன்
    என்பது தானே ?

    எமது சிந்தனை சரியா ?

    விசு சார் உள்ளே வாங்க இன்னுமா என்மேல் கோபம் .. சத்தியமா உங்கமேலே எனக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கு...

    ( கற்றாரை கற்றாரே காமுறுவர் )

    வகுப்பறை என்பது நமது அன்பையும் அறிவையும் வளர்த்து ஒன்றுசேர்க்கும் சங்கமம்தானே...

    மொத்தத்தில் இன்றை கட்டுரை சிந்தனைக்குரியது ,,,

    நன்றி KMRK சார்,

    நன்றி வாத்தியார் ஐயா..

    ReplyDelete
  3. ஐயா

    வணக்கம், வந்தனம், நமஸ்காரம்.

    ReplyDelete
  4. நாறும்பூ நாதனைப் பற்றிய விவரங்கள் அருமை. நரம்புனாதனும் மகிழ்ச்சி அடைவார். இந்த வரலாற்றில் கருவூர்த்தேவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைக் கேட்டதும் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. கருவூரில் எழுந்தருளியுள்ள பசுபதீஸ்வரர் எனும் ஆநிலையப்பர் ஆலயத்தின் தென்புற திருச்சுற்றில் கருவூராரின் அதிஷ்டானம் உள்ளது. அந்த ஆலயத்தின் மூலத்தானத்து ஈசர் பசுபதீஸ்வரர் எனும் ஆநிலையப்பர். அவரும் வடபுறமாக சாய்ந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அவ்வாலயம் இருந்த இடம் ஒரு காலத்தில் வனாந்தரமாக இருந்ததாம். அங்கு புல் மேயப்போகும் பசுக்கள் அங்கு ஓரிடத்தில் தங்கள் பாலைச் சுரந்துவிட்டு வீட்டுக்கு வருமாம். வீட்டுக்காரர்கள் பசுவிடம் பால் கறக்க முடியாமைக்குக் காரணம் தேடிச் செல்கையில் வனத்தில் ஓரிடத்தில் பசுக்கள் பால் சுரப்பதைப் பார்த்தார்களாம். ஒரு முறை பசு பால் சுரந்த இடம் சற்று தள்ளியிருந்ததால், பசுபதி தன் தலையைச் சாய்த்து அந்த பாலை ஏற்றுக் கொண்ட நிலையில் சற்று சாய்ந்தே இருப்பதாகச் சொல்வார்கள். தல புராணம் தெரிந்தவர்கள் சொல்லலாம். கட்டுரைக்கும், எழுதிய கே.எம்.ஆர். வெளியிட்ட ஆசிரியர் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  5. Dear Mr KMRK

    Thanks Sir. My birth place is Ambasamudram.

    Naan Valardhadhu Vellanguli village (near by tirupadaimarudhur).

    Padithadhu Kallidaikurichi Sir.

    Arumai Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  6. பாண்டி நாடு கண்ட "முத்தே.."
    வகுப்பறையின் "சொத்தே.."

    தலயாத்திரை செல்லாமல்
    தலங்களுக்கு அழைத்துச் செல்வதால்

    மதிப்புள்ள பாராட்டுக்கள்..
    மனமகிழ்ந்து இந்த பதிவுகளில்..

    வாசம் வீசும் பூ உம் பதிவால்
    வலைப்"பூ"வையும் மணக்க செய்கிறது

    வணக்கமும் வாழ்த்துக்களும்
    வழக்கம் போல் இந்த பதிவுகளில்

    ReplyDelete
  7. ///விசு சார் உள்ளே வாங்க இன்னுமா என்மேல் கோபம் .. சத்தியமா உங்கமேலே எனக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கு...கற்றாரை கற்றாரே காமுறுவர்///


    விசுவுக்கு கோபம் என சொன்னது யார்
    வித்தியாசமான சிந்தனை இது தானோ


    சினத்திற்கு விசுவிடம் உண்டு சிறப்பான வேறு ஒரு பொருள்


    வாங்க என அழைப்பவருக்கு விசு
    வந்து கொண்டிருப்பது தெரியும் தானே


    கற்றாரை கற்றாரே காமுறுவர் சரி
    கற்றார் என குறிப்பிடுவது யாரை?


    எண்ணங்களை எழுத்தாக்கும்போது
    எழுதுவது புத்தியா? மனமா?


    சிந்தியுங்கள் நண்பரே..
    சிறப்பாக இருந்தாலே கண் திறக்கும்

    வாழ்த்துக்களும் வணக்களும்
    வழக்கம் போல் உங்களுக்கும்..

    ReplyDelete
  8. முதல்ல உங்க ஞாபக சக்தியைப் பாராட்டறேன். எப்படித்தான் இவ்ளோ விஷயத்தையும் நினைவில் வைத்திருந்து எழுதுகிறீர்களோ! அர்ஜுன ஷேத்திரங்களைப் பற்றிய தகவல்கள் அருமை.

    ReplyDelete
  9. பெயர்களுக்கான காரண விளக்கம் நன்று. இப்படி என்னென்ன பெயர்கள் காலத்தின் கோலத்தால் என்னவாக மாறியிருக்கிறதோ தெரியவில்லை.

    ReplyDelete
  10. //விசு சார் உள்ளே வாங்க இன்னுமா என்மேல் கோபம் .. சத்தியமா உங்கமேலே எனக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கு...//

    உள்ளே வாங்க என்றதுஎனது கருத்துகளுக்கு அவரது கருத்துகளை கேட்டது ...

    //விசுவுக்கு கோபம் என சொன்னது யார் வித்தியாசமான சிந்தனை இது தானோ//

    ஐயா இதில் என்ன வித்தியாசமான சிந்தனை ? புரியவில்லை ...

    விசு சாரோடு நல்ல நட்பு பாராட்ட வேண்டும் என்ற கருத்தில்
    இங்கு குறிப்பிட்டேன்

    அவர் தொடர்ந்து வகுப்பறைக்கு வந்து கொண்டிருக்கிறார் என்பது பின்னூட்டங்களை பார்க்கும்போது தெரிந்துகொள்கிறேன் ஐயா...

    //( கற்றாரை கற்றாரே காமுறுவர் )//

    என்றது விசுவநாதன் சாரை
    கற்றவர்கள் சிறியோரை
    ( எம்மைபோன்ற ) பொறுப்பர் என்ற கருத்தில் எழுதினேன்..

    பொறுப்பரன்றோ பெரியோர் - என்று எழுதியிருக்கலாம் ...


    //எண்ணங்களை எழுத்தாக்கும்போது
    எழுதுவது புத்தியா? மனமா?
    சிந்தியுங்கள் நண்பரே..
    சிறப்பாக இருந்தாலே கண் திறக்கும்//

    புரியவில்லை KMRK சார்...

    என்னமோ போங்க... எனக்கு நேரம் சரியில்லை அவ்வளவுதான்...

    நன்றி...

    ReplyDelete
  11. நாறும்பூநாதன் பெயரை தவறாக உச்சரிப்பவர் அநேகர் உண்டு.ஆனால் தன் பெயருக்கு விளக்கம் தெரியாத செய்தி அறிந்து வருந்தினேன்.என் பெயரும் நாறும்பூநாதன் தான்.என் தாத்தாவின் பெயர்.திருப்புடைமருதூர்
    பல முறை சென்று வந்த்த்ள்ளேன்.
    நான் இந்த்தியன் வ்ங்கியில் மேலாளராக
    இருந்து விருப்ப ஒய்வு பெற்றுள்ளேன்....நன்றி
    நாறும்பூநாதன்.
    narumpupurani@hotmail.com

    ReplyDelete
  12. நாறும்பூநாதன் பெயரை தவறாக உச்சரிப்பவர் அநேகர் உண்டு.ஆனால் தன் பெயருக்கு விளக்கம் தெரியாத செய்தி அறிந்து வருந்தினேன்.என் பெயரும் நாறும்பூநாதன் தான்.என் தாத்தாவின் பெயர்.திருப்புடைமருதூர்
    பல முறை சென்று வந்த்த்ள்ளேன்.
    நான் இந்த்தியன் வ்ங்கியில் மேலாளராக
    இருந்து விருப்ப ஒய்வு பெற்றுள்ளேன்....நன்றி
    நாறும்பூநாதன்.
    puraninarumpu@gmail.com

    ReplyDelete
  13. //////Annapurani has left a new comment on your post "ஏனிந்த சாய்ந்த கோலம் சுவாமி?":
    நாறும்பூநாதன் பெயரை தவறாக உச்சரிப்பவர் அநேகர் உண்டு.ஆனால் தன் பெயருக்கு விளக்கம் தெரியாத செய்தி அறிந்து வருந்தினேன்.என் பெயரும் நாறும்பூநாதன் தான்.என் தாத்தாவின் பெயர்.திருப்புடைமருதூர்
    பல முறை சென்று வந்த்த்ள்ளேன்.
    நான் இந்த்தியன் வ்ங்கியில் மேலாளராக
    இருந்து விருப்ப ஒய்வு பெற்றுள்ளேன்....நன்றி
    நாறும்பூநாதன்.
    puraninarumpu@gmail.com /////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com