4.4.11

Astrology கிடைக்க இருப்பது கிடைக்காமல் போகாது!

==========================================================
Astrology  கிடைக்க இருப்பது கிடைக்காமல் போகாது!

2.4.2011 சனிக்கிழமை மும்பையில் நடைபெற்ற இந்திய இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டியின் இறுதி ஆட்டத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.

இந்திய அணி ஆட்டத்தைத் துவக்கியவுடன், இரண்டாவது பந்திலேயே ‘ட்க்’ அவுட்டாகி விரேந்திர சேவக் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தார். தொடர்ந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் சச்சினும் அவுட்டாகி அடுத்த அதிர்ச்சியைத் தந்தார்.

ஆனால் மைதானத்தில் இருந்த மக்கள் அனைவரும் பொறுமை காத்தார்கள். துவக்கத்தில் ஏற்பட்ட சறுக்கல்தான் இது. எப்படியும் நாம் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. 121 கோடி மக்களின் பிரார்த்தனை வீண் போகாது என்ற நம்பிக்கை இருந்தது.

அடுத்து ஆடிய கெளதம் கம்பீர் சிறப்பாக ஆடி 97 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். ஸ்கிப்பர் தோனியும் சிறப்பாக விளையாடி 91 ரன்கள் எடுத்து வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுத்தார். நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான்.

ஆகவே எப்போதும் நம்பிக்கையுடன் இருங்கள். கிடைக்க இருப்பது கிடைக்காமல் போகாது

ஒரு திசைபுத்தி சரியாக இல்லையென்றால், பொறுத்துக்கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். அடுத்துவரும் திசை புத்தியில் கஷ்டங்கள் சரியாகி விடும் என்கின்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.

இன்று கேது திசையில் வியாழபுத்திக் காண பலனைக் கொடுத்துள்ளேன். வியாழ கிரகம் சுபக்கிரகம். ஆகவே அதன் கை ஓங்கி திசைபுத்தி நன்மைகளைத் தருவதாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் வியாழதிசையில் கேது புத்தியைப் பார்த்தால், அங்கே கேதுவின் கை ஓங்கி திசைபுத்தி முழுமையும் தீமையானதாக உள்ளது. அப்படித்தான் பலன்கள் மாறி மாறி வரும், இரவு பகலைப் போல!

அவற்றிற்கான பாடல்களைக் கொடுத்துள்ளேன். படித்துப் பயன்பெறுக!

காணவே கேது திசை வியாழபுத்தி
   கனமான மாதமது பதினொன்றாகும்
தோணவே நாளதுவும் ஆறதாகும்
   தொகையான தனங்களும் புத்திரனாலுண்டாம்
பூணவே பூவுடையாள் நர்த்தனம் செய்வாள்
   பூமிதனில் வெகு லாபம் பொருந்திகாணும்
நாணவே ராசாங்க யோகம் பெற்று
   நன்றாக சகடமது யோகந்தானே!

பாரப்பா வியாழதிசை கேதுபுத்தி
   பாழாகும் மாதமது பதினொன்றாகும்
சேரப்பா நாளதுவும் ஆறதாகும்
   செம்மையில்லா அதன்பலனை செப்பக்கேளு
வீரப்பா வியாதியது கூடிக்கொல்லும்
   விதமில்லா மனைவிதன்னால் நிலைவிட்டுப்போவான்
சாரப்பா சத்துருவும் சதஞ்செய்ய வருவான்
   சகலசன பாக்கியமும் ஷணத்தில்போமே!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

10 comments:

  1. எனது நடப்பு தசா புத்தி பலன்களுக்காக waiting.

    ReplyDelete
  2. உலகக்கோப்பை சவால் போட்டியில் முதல் பரிசு, மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக்கவும்:

    http://gokulathilsuriyan.blogspot.com/2011/03/2-points-table.html

    ReplyDelete
  3. கேது தசா வியாழ புக்தி,வியாழ தசா கேது புக்தி ஆகியவை பற்றிய பாடல்கள் எளிமையும், கனமும் கொண்டுள்ளன ஐயா!நன்றி!

    ReplyDelete
  4. சறுக்கல் என்றதுமே பலருக்கும்
    விக்கல்.. மனதிற்குள்ளே..


    கிள்ளலென்ற நேற்றையபதிவு இன்றும்
    துள்ளல் தந்தாலும் இன்று


    வெல்லல்எளிது பொறுமையிருப்பின்
    இல்லை இனியொரு துன்பம் எனவே


    தள்ளல் வேண்டாம் வாழ்க்கையை
    கொள்ளல்வேண்டும் நம்பிக்கையைஎன


    இரட்டையை எப்பவும் போல்
    ஒற்றையாக்கி காட்டிய பாணி அருமை

    ReplyDelete
  5. ஜோதிட ஆசானே வணக்கம்.

    எம்பெருமான் " ஈசன் " கையாலத்தில் அம்மை பார்வதியை கல்யாணம் செய்ய

    அதுவும் நியமத்தின் படி விரும்பிய பொழுது சித்தர்கள், முனிவர்கள், ரிசிகள், ஞானிகள், தவ புருசர்கள், தேவர்கள் என அனைவரும் திருமணத்தை காண விரும்பினர்.

    அப்படி அனைவரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்ய

    " அகஸ்திய மா முனிவரை ",

    தென் தமிழகத்திற்கு போக கூறினார் அப்பொழுது அகஸ்தியரின் ஆவலை பூர்த்தி செய்யும் பொருட்டு

    எமது திரு கல்யாணத்தை நீவீர்! தென் தமிழகமாம்
    " நெல்லை மலை சாரல் சூல்துள்ள
    " பொதிகை மலையில் "
    உள்ள " பாபநாச சாமி ", கோவிலில் காணலாம் என்றார் .

    அப்படி சிவ பெருமான் கூறிய கூற்றின் படி இன்று
    " வண்ண தொலை காட்சி ", பெட்டியும் வந்து விட்டது.

    மேலும் மிகவும் சிறப்பு செய்தி என்று ஒன்றும் உள்ளது .

    உலகத்தில் இருந்த மாயாஜால மாயமும் அறிவியல் பூர்வமாக வந்து விட்டது.

    100 % க்கு என்னில் அடங்காத
    ( 1000000000000000000000000000000 ௦௦ ...............etc % ) முறை " உம்மையிலும்", பெரிய
    " உண்மை", ஐயா

    எம்பெருமான்
    " திரு செந்தில் நாதன்,"
    " எம்குல தெய்வம் " ஆறு படை வீட்டில் அமர்ந்து இருக்கு எம்பெருமான் வேலவனின் வாகனமாம் மயில் கூட இன்று
    " ஆகாய விமானமாக ", வந்து விட்டது.

    காந்தாரின் புதல்வர்கள் ஆன வயிற்று எரிச்சலுக்கு பிறந்தவர்கள் ஆன மனிதர்களும் கூடவே வந்து விட்டார்கள் என்பது தான் பெரிய விஷயம் ஆக இருக்குலா வாத்தியார் ஐயா. ?

    எல்லாம் எம்குல குருவும் எமக்கு இந்த ஜென்மத்தில் ஞானத்தை போதித்தவரும் ஆன எல்லாம் வல்லவரும் ஆன திருவாவடுதுறை ஆதினம் திரு குமாரசாமி தம்பிரானின் ஞானமும் மற்றும் யாம் ஞானத்தை தேடி பழனிக்கு போகும் பொழுது பரதேசியாக போகிகொண்டு இருந்தவனை வழியில் இடை மறித்து ஞானம் போதித்த எல்லாம் வல்ல எம்பெருமான் பால தந்தாயூத பாணியின் மறு உருவம் மாக வந்த மூல குருநாதன் " மயில் வேல்", திரு விளையாடலே திருவிளையாடல் எமது அருமை வாத்தியார் ஐயா.

    உண்மையிலே ஞானத்தை போதிக்க யாம் ஒரு ஊடகமாக அமைத்தமைக்கு இந்த ஜென்மம் மட்டும் அல்லாது கோடான கூடி யுகங்களுக்கும் யாம் கடமை பட்டு உள்ளேன் வாத்தியார் ஐயா.

    அடியவனுக்கு எல்லாம் வல்ல எம்பெருமான் அம்மை அப்பனின் ஆசிவததால் யாம்

    " ண்மையிலே" , "உம்மையிலே " அதிஸ்ட சாலியே!

    குரு பிரம்மா, குரு விஷ்ணு! குருவே மகேஸ்வரா !

    எம்மால் திரு செந்தூர் முருகனின் ஆணையில் வீர பாகு வின் மகிமையும் தான் காரணம்.

    எல்லாம் சிவ மாயம்.

    ReplyDelete
  6. ////Uma said...
    எனது நடப்பு தசா புத்தி பலன்களுக்காக waiting.////

    வரிசையாக வரும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  7. ////Uma said...
    உலகக்கோப்பை சவால் போட்டியில் முதல் பரிசு, மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக்கவும்:
    http://gokulathilsuriyan.blogspot.com/2011/03/2-points-table.html/////

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. /////kmr.krishnan said...
    கேது தசா வியாழ புக்தி,வியாழ தசா கேது புக்தி ஆகியவை பற்றிய பாடல்கள் எளிமையும், கனமும் கொண்டுள்ளன ஐயா!நன்றி!/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////iyer said...
    சறுக்கல் என்றதுமே பலருக்கும்
    விக்கல்.. மனதிற்குள்ளே..
    கிள்ளலென்ற நேற்றையபதிவு இன்றும்
    துள்ளல் தந்தாலும் இன்று
    வெல்லல்எளிது பொறுமையிருப்பின்
    இல்லை இனியொரு துன்பம் எனவே
    தள்ளல் வேண்டாம் வாழ்க்கையை
    கொள்ளல்வேண்டும் நம்பிக்கையைஎன
    இரட்டையை எப்பவும் போல்
    ஒற்றையாக்கி காட்டிய பாணி அருமை//////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  10. //////kannan said...
    எம்மால் திரு செந்தூர் முருகனின் ஆணையில் வீர பாகு வின் மகிமையும் தான் காரணம்.
    எல்லாம் சிவ மாயம்.//////

    மாயம் அல்ல! மயம். எல்லாம் சிவமயம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com