+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதல் வணக்கம் யாருக்கு?
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
பூச் சொரிந்தே மனம் பாடி வரும்
(முதல்)
சிம்மாசனம் போன்ற மயிலாசனம்
செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல்
அடியார் தம் இதயங்கள் குடி மக்களே
அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே
(முதல்)
முதல் சங்கம் உருவாக மொழியானவன்
இடைச் சங்கம் கவிபாட புகழானவன்
கடைச் சங்க வாழ்வுக்கும் வழியானவன்
கடல் கொண்டும் அழியாத தமிழானவன்
(முதல்)
பாடி அசத்தியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வெண்கலக் குரலோன் வேலனைப் பாடுங்கால்
ReplyDeleteமண்பூக்கும் மகிமை காண்.
சார்.. ஆட்சேபனை இல்லை என்றால் இன்றையப் பதிவில் இந்த அரசியல் ஆத்திசூடியையும் சேர்த்துவிடுங்களேன். நன்றி.
ReplyDelete"அகர" வரிசை மின்னஞ்சலில் வந்தது!
"ககர" வரிசையை ஞான் தந்தது!!
அரசியல் ஆத்திச்சூடி..!!
அரிச்சந்திரன் மாதிரி ஆக்ட் குடு.,
ஆனவரை சுருட்டு.,
இலவசம் குடு.,
ஈயையும் கட்சியில் சேர்.,
உண்மையை மறை.,
ஊழலை உலகமயமாக்கு.,
எதிர்கட்சி மீது பழி போடு.,
ஏட்டிக்கு போட்டி அறிக்கை விடு.,
ஐந்து காலேஜாவது கட்டு.,
ஒன்னுமில்லாததை ஊதி பெரிதாக்கு.,
ஓடி ஓடி துட்டு சேர்.,
ஓளவை சொல் கேக்காதே.,
( Last but not Least.. )
ஃக்கு தப்பாய் மாட்டிக்காதே..!!
***********************************
கயவர்களை சேர்த்துக்கொள்!
காய்ச்சி பிளை
கிறுக்கனாய் பேசு
கீழேவிழுந்து கீர்த்திப் பாடு
குடும்பத்தையே உயர்த்து
கூடிக் கொள்ளையடி
கெட்டதை செய்
கேட்பாரை கவனி
கைபேசியில் கண்வை
கொடைக்கானலில் ஓய்வெடு
கோஷ்டிகளின் வேஷ்டி உரி
கெளரவம் வேண்டேல்
க்கு வைத்தே செக்கு கொடு.
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteசற்று மனக்கவலையில் இருந்தேன்.
முருகனை நினைவு படுத்தியுள்ளீர்கள்.
எந்த பிரச்னைக்கும் நான் நாடுவது பழனி முருகன் தான்.
எந்த ஒரு முருகன் பாடலையும், சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடும் விதமே நம்மை மனமுருக செய்துவிடும். அந்த வகையில் இந்த பாடலும்....
எம்பெருமான் முருகப்பெருமானின் படமும் அருமை.
மங்களகரமான வெள்ளியில் மங்களனின் (செவ்வாயின்) தலைவனின் பதிவு...அருமை.
பதிவிற்கு நன்றி.
வணக்கத்துடன்,
இராமச்சந்திரன்.
ஆசானே வணக்கம்.
ReplyDeleteமிகவும் அருமையாக விளக்கம் கூறிய எம்முடைய பெயர் udaiyavarukku nanri.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
kmr.krishnan
"கலக்கலாக ஒரு பதிவு!":
சந்திரன் 7க்கு 7 ஆக நிற்பது சம சப்தமம். சில சம சப்தமங்கள் ஏற்கப்படுவதில்லை. உதாரணமாக சிம்மத்தில் சந்திரன் கும்பத்தில் சந்திரன்
ஆகாது.சமசப்தமப்பொருத்தம் இருந்தால் மற்ற பொருத்தங்கள் பார்க்க வேண்டாம் என்று கூறுவார்கள். அது சரி அல்ல.தோஷ சாம்யம் கட்டாயம் பார்க்க வேண்டும்.சம சப்தமத்தில் என்ன விசேஷம் எனில் ஏழரை நாட்டான் போன்றவை இருவருக்கும் நல்ல இடைவெளியில் வரும்.ஒரேசமயத்தில் வந்து படுத்தாது.
Post a comment.
ஆசானே வணக்கம்.
ReplyDeleteவாத்தியார் ஐயா தாங்கள் பதில் கூறியபடி " சம சப்தம பொருத்தம்", என்பது மலையாள பஞ்சாங்கத்தில் உள்ள வார்த்தை .
ஆனால் விரிவான விளக்கம் இல்லை .
27 நட்சத்திரத்தில் சில நட்சத்திரங்கள் மட்டும் சம சப்தமாக பொருந்தி இருக்கும் . அவ்வாறு சம சப்தமாக பொருந்தும் நட்சத்திரத்தில் பிறந்து உள்ளவர்களுக்கு ஜாதக பொருத்தமே பார்க்க வேண்டாம் என " ஜோதிட சாஸ்திரத்தில் முடி சூட மன்னர்கள் ", ஆன " மலையாள தேசத்தை", சார்ந்த சகோதரி கூறினார்கள்.
மேலும் சகோதரிதான் தனக்கு ஏற்பட்ட ஐய பாட்டை போக்கத்தான் வாத்தியாரின் வகுப்பறையில் கேள்வி கூட கேட்க சொன்னார்கள் ஐயா.
( Ex )
uthaaranatheerkku எம்முடைய நட்சத்திரம் ஆயில்யம் .
இந்த ஆயில்யதீர்க்கு மிகவும் சம சப்தமாக இருக்கும் ஒரே ஒரு நட்சத்திரம் என்றால் உத்திராடம் மட்டுமே என்றார்கள்.
உத்திராடம் நட்சத்திரம் உள்ள பெண்ணை பார் என்று எனக்கு அறிவுரை கூறினார்கள் ஐயா.
Sir, Oru kayil velayutham, maru kayil abayam endru kulanthai mugathudan ulla ennappan muruganin arul balikkum baniye thani, avarthaan ball dhandabaani yache.
ReplyDelete:)
//அகர" வரிசை மின்னஞ்சலில் வந்தது!
"ககர" வரிசையை ஞான் தந்தது!!// nalla comedy sir.
Kannan sir, Vathiyaarukke theriyaatha vithayellam sollurenga, antha Sagotharikku vagupparai manavargal saarbaaga nandrigal.