29.3.11

Astrology ‘மிடில் ஸ்டம்ப்’ எப்போது பறக்கும்?

 மைக்கேல் ஹோல்டிங்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


 ஆண்ட்டி ராபர்ட்ஸ்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology ‘மிடில் ஸ்டம்ப்’ எப்போது பறக்கும்?

அந்தக்காலத்தில் மேற்கிந்தியரின் பந்துவீச்சு மிகவும் பிரபலம். எதிரிகளும் நேசிக்கும் பந்துவீச்சு. மைக்கேல் ஹோல்டிங் & ஆண்டி ராபர்ட் ஆகிய இருவரும் வேகப் பந்துவீச்சாளர்கள். ஆளுக்கு ஒரு முனையில் இருந்து மாறி மாறிப் பந்துவீசுவார்கள். மட்டை பிடிப்பவர்கள் எவருமே அடித்து ஆடவெல்லாம் முடியாது. அப்படியொரு வேகம் இருக்கும். தங்கள் விக்கெட்டைத் தக்கவைத்துக் கொண்டால் போதுமென்ற நிலையில்  அவர்கள் இருப்பார்கள். கொஞ்சம் ஏமாந்தால் போதும் ‘மிடில் ஸ்டம்ப்’ பறந்து விடும்.

ஆட்டத்தில் அவர்கள் இருவரும் அசத்திய காலம்:
மைக்கேல் ஆண்ட்டனி ஹோல்டிங் (ஜமைக்கா) 1973 - 1989
ஆண்ட்டி ராபர்ட்ஸ் (ஆண்டிக்குவா) 1970 - 1984

அப்படியொரு நிலைமை தசா புத்திகளிலும் உண்டு. கேது திசையில் செவ்வாய்புத்தியும், செவ்வாய் திசையில் கேதுபுத்தியும் அப்படித்தான் இருக்கும். நாட்களைத் தள்ளினால் போதும் என்று ஜாதகன் சும்மா இருக்க வேண்டும். சுமார் ஐந்து மாத காலம். இறைவனைப் பிரார்த்தித்துவிட்டு அப்படித்தான் இருக்க வேண்டும்.

அவற்றிற்கான பலாபலன்களைப் பதிவிட்டுள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள். பாடல்கள் எளிமையாக இருப்பதால் அப்படியே கொடுத்துள்ளேன். விளக்கம் எழுதவில்லை.

தானென்ற கேதுதிசை செவ்வாய்புத்தி
   தாழ்வான நாளதுவும் நூற்றி நாற்பத்தியேழு
வானென்ற அதன்பலனை வழுத்தக் கேளு
   வண்மையுடன் யினசத்துரு தானே உண்டாம்
கோனென்ற கோளுநால் குடிகேடாகும்
   கோதையரால் குலமதுவும் நாசமாகும்
தேனென்ற திரவியமும் சேதமாகும்
   தெவிட்டாததுணைதம்பி தீதுண்டாமே

ஆகுமே செவ்வாயில் கேதுபுத்தி
   ஆகாத நாளதுவும் நூற்றி நாற்பத்தியேழு
போதவே பலன்தனை பூட்டக்கேளு
   பூவையரும் புத்திரரும் வியாதியாகும்
ஏகுமே வியாதியது கூடிக்கொல்லும்
   இன்பமுள்ளயின விரோதம் தானுமுண்டாம்
சாகுமோ சத்துருவும் பிசாசுதானும்
   சஞ்சலங்களதினாலே கோடிதானே!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

16 comments:

  1. இரண்டு அருமையான பந்து வீச்சாளர்கள்.

    good comparison.

    நேர்த்தியான பதிவு.

    நன்றி ஐயா

    ReplyDelete
  2. வாத்தி ஐயா


    இப்பவே தலை கிறுகிறுன்னு சுற்றுகின்றது இதில் இன்னும் வேறையா ?

    ReplyDelete
  3. "தானென்ற கேதுதிசை செவ்வாய்புத்தி
    தாழ்வான நாளதுவும் நூத்தியிருபத்தியேழு"

    கேது தசையில் செவ்வாய் புக்தி அளவு 147 நாட்கள். அனால் இந்த பாடலில் நூத்தியிருபத்தியேழு
    என்று குறிப்பிட்டுள்ளதே ???

    ReplyDelete
  4. தங்கள் விக்கெட்டைத் தக்கவைத்துக் கொண்டால் போதுமென்ற நிலையில் அவர்கள் இருப்பார்கள். கொஞ்சம் ஏமாந்தால் போதும் ‘மிடில் ஸ்டம்ப்’ பறந்து விடும்.//

    கேது திசையில் செவ்வாய்புத்தியும், செவ்வாய் திசையில் கேதுபுத்தியும் அப்படித்தான் இருக்கும். நாட்களைத் தள்ளினால் போதும் என்று ஜாதகன் சும்மா இருக்க வேண்டும்//

    சுபெர்ப் சார். டபுள் செஞ்சுரி (நாட் அவுட்) அடிச்சுட்டீங்க.

    நாளைக்கு இந்தியா - பாக் மேட்ச் பார்க்க லீவ் போடப்போறேன். பாஸ் கிட்ட என்ன காரணம் சொல்லலாம்னு காலைலேர்ந்து யோசிச்சிகிட்டிருக்கேன். நீங்களும் கிரிக்கெட் பத்தியே எழுதிருக்கீங்க.

    ReplyDelete
  5. 'கோதையரால் குலநாசம்' என்று பாட்டு சொன்னாலும், கேது தசை செவ்வாய் புக்தியில் மனைவிக்கு அரசுப் பணிகிடைத்தது.அதனால் வாழ்வில் ஆக்கங்களே கிடைத்தன.இருவரும் கடக லக்கினக்காரர்கள். செவ்வாய் யோககாரகன் என்பதால் செவ்வாய் புக்தியில் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைத்திருக்கலாமோ?

    ReplyDelete
  6. உமா உங்க பாஸ் க்கு வகுப்பறையை படிக்கிற பழக்கமில்லே போல...

    யோசிங்க யோசிங்க ...

    ReplyDelete
  7. அவருதான் காஷ்மீரி ஆச்சே, தமிழ் படிக்கத் தெரியாதே. அவரு என்னைக்கு தமிழ் கத்துக்கிட்டு நான் போட்ட கமெண்ட்ஸ் ஐ எல்லாம் படிச்சு, நடக்கிற காரியமா?

    ReplyDelete
  8. இருவரும் ஒருவருக்கொருவர் பகை அத்துடன் பாப கிரகங்கள். இந்த பாடலில் குறிப்பிட்ட பலன்கள் நடக்காமல் இருக்காது. விதிவிலக்காக கடக, சிம்ம லக்கினங்கள் (இவற்றுக்கு யோககாரகராவதால்) இருக்கலாம்.

    ReplyDelete
  9. /////iyer said...
    Attendance Marked.. //////

    வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  10. ////vprasanakumar said...
    இரண்டு அருமையான பந்து வீச்சாளர்கள்.
    good comparison.
    நேர்த்தியான பதிவு.
    நன்றி ஐயா/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. //////kannan said...
    வாத்தி ஐயா
    இப்பவே தலை கிறுகிறுன்னு சுற்றுகின்றது இதில் இன்னும் வேறையா?//////

    கிறுகிறுப்புப் போக கந்த சஷ்டிக் கவசம் சொல்லுங்கள்

    ReplyDelete
  12. //////Dinesh said...
    "தானென்ற கேதுதிசை செவ்வாய்புத்தி
    தாழ்வான நாளதுவும் நூத்தியிருபத்தியேழு"
    கேது தசையில் செவ்வாய் புக்தி அளவு 147 நாட்கள். அனால் இந்த பாடலில் நூத்தியிருபத்தியேழு
    என்று குறிப்பிட்டுள்ளதே ???//////

    தட்டச்சுப்பிழை. சரி செய்துவிட்டேன்!

    ReplyDelete
  13. //////Uma said...
    தங்கள் விக்கெட்டைத் தக்கவைத்துக் கொண்டால் போதுமென்ற நிலையில் அவர்கள் இருப்பார்கள். கொஞ்சம் ஏமாந்தால் போதும் ‘மிடில் ஸ்டம்ப்’ பறந்து விடும்.//
    கேது திசையில் செவ்வாய்புத்தியும், செவ்வாய் திசையில் கேதுபுத்தியும் அப்படித்தான் இருக்கும். நாட்களைத் தள்ளினால் போதும் என்று ஜாதகன் சும்மா இருக்க வேண்டும்//
    சுபெர்ப் சார். டபுள் செஞ்சுரி (நாட் அவுட்) அடிச்சுட்டீங்க.
    நாளைக்கு இந்தியா - பாக் மேட்ச் பார்க்க லீவ் போடப்போறேன். பாஸ் கிட்ட என்ன காரணம் சொல்லலாம்னு காலைலேர்ந்து யோசிச்சிகிட்டிருக்கேன். நீங்களும் கிரிக்கெட் பத்தியே எழுதிருக்கீங்க.//////

    உங்களைப் போன்ற கெட்டிக்காரப் பெண்களுக்கு சொல்லித் தரவேண்டுமா என்ன?

    ReplyDelete
  14. //////kmr.krishnan said...
    'கோதையரால் குலநாசம்' என்று பாட்டு சொன்னாலும், கேது தசை செவ்வாய் புக்தியில் மனைவிக்கு அரசுப் பணிகிடைத்தது. அதனால் வாழ்வில் ஆக்கங்களே கிடைத்தன.இருவரும் கடக லக்கினக்காரர்கள். செவ்வாய் யோககாரகன் என்பதால் செவ்வாய் புக்தியில் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைத்திருக்கலாமோ?//////

    ஆமாம். சிம்மம் & கடகம் இரண்டிற்கும் செவ்வாய் யோககாரகன்.

    ReplyDelete
  15. /////ananth said...
    இருவரும் ஒருவருக்கொருவர் பகை அத்துடன் பாப கிரகங்கள். இந்த பாடலில் குறிப்பிட்ட பலன்கள் நடக்காமல் இருக்காது. விதிவிலக்காக கடக, சிம்ம லக்கினங்கள் (இவற்றுக்கு யோககாரகராவதால்) இருக்கலாம்./////

    ஆமாம். சிம்மம் & கடகம் இரண்டிற்கும் செவ்வாய் யோககாரகன். நன்றி ஆனந்த்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com