16.3.11

Astrological Lessons கலைமாமணி விருதும் இலவச தொலைக்காட்சிப் பெட்டியும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrological Lessons கலைமாமணி விருதும் இலவச தொலைக்காட்சிப் பெட்டியும்!

இன்று புதன் திசையில் சனி புத்தியையும், சனி திசையில் புதன் புத்தியையும் பார்ப்போம். புதன் திசையில் இதுதான் கடைசி புத்தி (அதாவது Last Sub period)

இரண்டின் கால அளவு:
புதன் திசையில் சனி புத்தி = 17 X 19 = 323 = 32 மாதங்கள், 9 நாட்கள்
சனி திசையில் புதன் புத்தி = 19 X 17 = 323 = 32 மாதங்கள், 9 நாட்கள்

(சூத்திரப்படி பெருக்கி வந்த முதல் இரண்டு எண்களும் மாதங்களைக் குறிக்கும், கடையில் உள்ள எண்ணை மூன்றால் பெருக்க வருவது நாட்களாகும்)

புதன் திசையில் சனி புத்தி எப்படியிருக்கும்?. நெற்றியடியாக பாடலை எழுதிய மகான் ஒரு வார்த்தையில் பாழான மாதங்கள் என்று மொத்த தசாபுத்தியையும் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். பாடலைப் பாருங்கள்.

பாரப்பா புதன் திசையில் சனியின் புத்தி
    பாழான மாதமது முப்பத்திரெண்டு
சேரப்பா நாளதுவும் ஒன்பதாகும்
    செலுத்துகிற பலனதுவை செப்பக்கேளு
வீரப்பா சத்துருவால் சூனியமுண்டாம்
    விதமில்லா நோய்போலே விதங்கேடு பண்ணும்
மாரப்பா மனைவியரும் புத்திரரும்தானும்
    மரணமாம் உன்னுடலும் மரணமாமே!


சரி, பதிலுக்கு சனி திசையில், புதன் புத்தி எப்படியிருக்கும்? அதற்கும் ஒரு வார்த்தையில் பாடலை எழுதிய மகான் தன்மையுள்ள மாதங்கள் என்று மொத்த தசாபுத்தியையும் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்.
பாடலைப் பாருங்கள்.

சனிக்கு காரி என்ற பெயர் உண்டு. இங்கே சனீஷ்வரன் அந்தப் பெயரில் சொல்லப்படுகிறார். புதன் வழக்கம்போல நன்மையையே செய்கிறது.

தானென்ற காரிதிசை புதன்புத்தி கேளு
    தன்மையுள்ள மாதமது நாலெட்டாகும்
நானென்ற நாளதுவும் ஒன்பதாகும்
    நன்றாக அதன் பலனை நவிலக்கேளும்
மானென்ற மன்னரால் மகிழ்ச்சியுண்டாம்
    மாதர் முதல் பந்துக்களும் மகிழ்ச்சியாகும்
வானென்ற ஞானமுடன் யோகமார்க்கம்
    வளர்கின்ற கர்ப்பமுதல் தேகசித்தியாமே!


மன்னரால் மகிழ்ச்சியுண்டாம்’ என்றால் குழம்ப வேண்டாம். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டுடன்  ஒருங்கிணைந்த மன்னர்
களைத்தான் 1971ஆம் ஆண்டு ஏற்படுத்திய ஒரு சட்டத்தின்
மூலம் ஒடுக்கிவிட்டோமே, அத்துடன் அவர்களுக்குக் கொடுத்து
வந்த மானியத்தையும் நிறுத்தி விட்டோமே, இப்போது ஏது மன்னர்கள்
என்று  நினைக்க வேண்டாம். இங்கே மன்னர் என்பதை அரசு என்று
பொருள் கொள்ள வேண்டும்.

அரச கெளரவம் அல்லது அரச அங்கீகாரம் கிடைக்கலாம். அதாவது கலைமாமணி விருது கிடைக்கலாம். அல்லது  அரசு இலவச
தொலைக்காட்சி பெட்டி கிடைக்கலாம். அது உங்களுடைய
ஜாதகத்தைப் பொறுத்து மாறுபடும்.வேறுபடும்.

எது கிடைத்தால் நல்லது என்பது உங்கள் மனப் பக்குவத்தைப் பொறுத்தது!

மகிழ்ச்சியைத் தரும் உண்மையான விருது எது? பதிவின் துவக்கத்தில் உள்ள படத்தைப் பாருங்கள். “கோட்டையில்லை. கொடியுமில்லை. எப்பவும் நான் ராஜா” என்று சொல்லும் ராஜாவின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பாருங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி. அந்தப் பெண்மணி தன் இதழ் பதித்து ராஜாவின் கன்னத்தில் தருவதுதான் உண்மையான விருது

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

16 comments:

  1. ///// “கோட்டையில்லை. கொடியுமில்லை. எப்பவும் நான் ராஜா” என்று சொல்லும் ராஜாவின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பாருங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி. அந்தப் பெண்மணி தன் இதழ் பதித்து ராஜாவின் கன்னத்தில் தருவதுதான் உண்மையான விருது////

    பாடமும் விளக்கமும் அருமை...
    அதைவிட விளக்கப் படம் மிகவும் அருமை.....

    ஒரு மகள் தந்தைக்கு அளிக்கும் மிகப் பெரிய பரிசு இதுவாகத்தான் இருக்க முடியும்....
    ஸ்ரீமதி பவதாரணி தனது தந்தைக்கு தரும் அமுத முத்தம் இனிது.... இனிது.... காண்பதற்கு இனிது.... நன்றிகள் ஆசிரியரே!

    ReplyDelete
  2. எனக்கு இப்போது சனி தசையில் புதன் புத்தி நடக்கிறது. யோக, பக்தி மார்க்கத்தில் இந்த காலத்தில்தான் அதிகம் ஈடுபாடு ஏற்பட்டது. படுகிறது. எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் 'மாதர் முதல் பந்துக்களும் மகிழ்ச்சியாகும்' இது போதாதா.

    ReplyDelete
  3. எதில் இன்பம் அல்லது ஆனந்தம் கிடைக்கும்? சிலருக்கு நல்ல உணவு உண்பதில்; சிலருக்கு நல்ல கவிதைகள் படிப்பதில்; சிலருக்கு நல்ல இசையை ரசிப்பதில் இப்படி எத்தனையோ விதங்களில் ஆனந்தம் கிடைக்கிறது. இவற்றில் எது நிலையான ஆனந்தத்தைத் தருவது? எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை நினைத்து, 'அகம் பிரம்மாஸ்மி' எனும் வாக்கினை நினைவில் வைத்து, எங்கு யாருக்கு அவசியமான உதவி தேவைப்படுகிறதோ அங்கு அவர்களுக்கு அல்லது அவற்றுக்குச் செய்யும் உதவியே உண்மையான இன்பத்தை ஆனந்தத்தைத் தருவது.

    "உயிர்களெலாம் தெய்வ மன்றிப் பிறவொன்றில்லை;
    ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
    பயிலும் உயிர் வகை மட்டுமின்றி இங்கு
    பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்!
    வெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
    மேலும் இங்கு பலப் பலவாம் தோற்றம் கொண்டே
    இயலுகின்ற ஜடப் பொருள்கள் அனைத்தும் தெய்வம்
    எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்"

    இந்த உணர்வில் ஏற்படுகின்ற இன்பமும், ஆனந்தமும் ஈடுஇணையற்றது.

    ReplyDelete
  4. ஐயா, தங்களுடைய முன் நாள் ஜோதிட பாடங்களை படித்து வருகிறேன். ஜோதிட பாடங்கள், மிகவும் அருமை. நன்றி.

    இந்த பாடல்களை எழுதிய மகான் பெயரை அறிய ஆவல்.

    நன்றி,
    அமுதன் சேகர்

    ReplyDelete
  5. ஐயா,
    மிக நல்ல பகிர்வுக்கும் ராசையாவின் படத்தை இணைத்தமைக்கும் நன்றி

    ReplyDelete
  6. அய்யா,

    மன்னித்துக் கொள்ளவும். ஒரு சிறு சந்தேகம். இது சுய ஜாதகத்தை வைத்து கேட்டதல்ல.

    லக்கினாதிபதி 12ல் இருந்தால் அது நல்லதல்ல என்று சொல்லியிருக்கிறீர்கள். அதே போல் இரு வீட்டுக்கு அதிபதிகள் அந்த இரு வீட்டுப் பலனையும் மாற்றி மாற்றி தருவார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதேபோல் ஒரு வீட்டின் பலனைப்பார்க்கையில் அதனை லக்கினமாக கனித்துக் கொண்டு பார்க்கவும் சொல்லியிருக்கிறீர்கள். மற்றும் தொழில் பற்றி பார்க்கையில் சனி யைப் பார்த்தும் பலன் சொல்லவேண்டும் எனவும் தங்கள் குறிப்பில் கண்டேன்.

    எனது சந்தேகம்: மகர லக்கினக் காரர்களுக்கு இரண்டாம் வீட்டோனும் சனியே. இப்போது சனி தனுசு ராசியில் இருந்தால் லக்கினாதிபதியும் தொழிலும் பிரச்சினை என எடுத்துக் கொள்வதா அல்லது தனாதிபதி அதற்குப் பதினொன்றாம் இடத்தில் நல்லபடியாக அமைந்துள்ளான் என எடுத்துக் கொள்வதா?

    இப்படிப்பட்ட சாதகனுக்கு சனி திசை எப்படி அமையும்?

    தயை கூர்ந்து பதிலளிக்கவும்.

    நன்றிகள் பல

    ReplyDelete
  7. ////Alasiam G said...
    ///// “கோட்டையில்லை. கொடியுமில்லை. எப்பவும் நான் ராஜா” என்று சொல்லும் ராஜாவின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பாருங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி. அந்தப் பெண்மணி தன் இதழ் பதித்து ராஜாவின் கன்னத்தில் தருவதுதான் உண்மையான விருது////
    பாடமும் விளக்கமும் அருமை...
    அதைவிட விளக்கப் படம் மிகவும் அருமை.....
    ஒரு மகள் தந்தைக்கு அளிக்கும் மிகப் பெரிய பரிசு இதுவாகத்தான் இருக்க முடியும்....
    ஸ்ரீமதி பவதாரணி தனது தந்தைக்கு தரும் அமுத முத்தம் இனிது.... இனிது.... காண்பதற்கு இனிது.... நன்றிகள் ஆசிரியரே!/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  8. ananth said...
    எனக்கு இப்போது சனி தசையில் புதன் புத்தி நடக்கிறது. யோக, பக்தி மார்க்கத்தில் இந்த காலத்தில்தான் அதிகம் ஈடுபாடு ஏற்பட்டது. படுகிறது. எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் 'மாதர் முதல் பந்துக்களும் மகிழ்ச்சியாகும்' இது போதாதா.///////

    ஆகா போதும். உங்களின் பெயரிலேயே ஆனந்தம் இருக்கிறது. அது ஒன்று போதும்!

    ReplyDelete
  9. //////Thanjavooraan said...
    எதில் இன்பம் அல்லது ஆனந்தம் கிடைக்கும்? சிலருக்கு நல்ல உணவு உண்பதில்; சிலருக்கு நல்ல கவிதைகள் படிப்பதில்; சிலருக்கு நல்ல இசையை ரசிப்பதில் இப்படி எத்தனையோ விதங்களில் ஆனந்தம் கிடைக்கிறது. இவற்றில் எது நிலையான ஆனந்தத்தைத் தருவது? எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை நினைத்து, 'அகம் பிரம்மாஸ்மி' எனும் வாக்கினை நினைவில் வைத்து, எங்கு யாருக்கு அவசியமான உதவி தேவைப்படுகிறதோ அங்கு அவர்களுக்கு அல்லது அவற்றுக்குச் செய்யும் உதவியே உண்மையான இன்பத்தை ஆனந்தத்தைத் தருவது.
    "உயிர்களெலாம் தெய்வ மன்றிப் பிறவொன்றில்லை;
    ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
    பயிலும் உயிர் வகை மட்டுமின்றி இங்கு
    பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்!
    வெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
    மேலும் இங்கு பலப் பலவாம் தோற்றம் கொண்டே
    இயலுகின்ற ஜடப் பொருள்கள் அனைத்தும் தெய்வம்
    எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்"
    இந்த உணர்வில் ஏற்படுகின்ற இன்பமும், ஆனந்தமும் ஈடுஇணையற்றது/////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  10. ///Amuthan Sekar said...
    ஐயா, தங்களுடைய முன் நாள் ஜோதிட பாடங்களை படித்து வருகிறேன். ஜோதிட பாடங்கள், மிகவும் அருமை. நன்றி.
    இந்த பாடல்களை எழுதிய மகான் பெயரை அறிய ஆவல்.
    நன்றி,
    அமுதன் சேகர்/////

    காதைக் கொண்டுவாருங்கள். உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். இந்தப் பாடல்களை எழுதியவர், பழநி அப்பனை ஸ்தாபித்த போகரின் சீடர்!

    ReplyDelete
  11. ///////|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
    ஐயா,
    மிக நல்ல பகிர்வுக்கும் ராசையாவின் படத்தை இணைத்தமைக்கும் நன்றி////

    ராசைய்யா எனது அபிமான இசை அமைப்பாளர்.

    ReplyDelete
  12. Govindasamy said...
    அய்யா,
    மன்னித்துக் கொள்ளவும். ஒரு சிறு சந்தேகம். இது சுய ஜாதகத்தை வைத்து கேட்டதல்ல
    லக்கினாதிபதி 12ல் இருந்தால் அது நல்லதல்ல என்று சொல்லியிருக்கிறீர்கள். அதே போல் இரு வீட்டுக்கு அதிபதிகள் அந்த இரு வீட்டுப் பலனையும் மாற்றி மாற்றி தருவார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதேபோல் ஒரு வீட்டின் பலனைப்பார்க்கையில் அதனை லக்கினமாக கனித்துக் கொண்டு பார்க்கவும் சொல்லியிருக்கிறீர்கள். மற்றும் தொழில் பற்றி பார்க்கையில் சனியைப் பார்த்தும் பலன் சொல்லவேண்டும் எனவும் தங்கள் குறிப்பில் கண்டேன்.
    எனது சந்தேகம்: மகர லக்கினக் காரர்களுக்கு இரண்டாம் வீட்டோனும் சனியே. இப்போது சனி தனுசு ராசியில் இருந்தால் லக்கினாதிபதியும்தொழிலும்பிரச்சினை என எடுத்துக் கொள்வதா அல்லது தனாதிபதி அதற்குப் பதினொன்றாம் இடத்தில் நல்லபடியாக அமைந்துள்ளான் என எடுத்துக் கொள்வதா?
    இப்படிப்பட்ட சாதகனுக்கு சனி திசை எப்படி அமையும்?
    தயை கூர்ந்து பதிலளிக்கவும்.
    நன்றிகள் பல/////

    லக்கினாதிபதி 12ல் அமர்வதால் ஜாதகனுக்குப் போராட்டமான வாழ்க்கையே அமையும். இரண்டாம் அதிபதிக்குத் தனிக்கணக்கு. அவர் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்வதால் நன்மையே. அந்த நன்மையின் அளவு தனகாரகன் குருவின் அமைப்பைப் பொறுத்து மாறுபடும். தொழிலுக்குப் பத்தாம் அதிபதி, பத்தாம் அதிபதியின் நிலைமை என்று பல அல்ஜீப்ராக் கணக்குகள் உள்ளன!

    ReplyDelete
  13. ///Amuthan Sekar said...
    ஐயா, தங்களுடைய முன் நாள் ஜோதிட பாடங்களை படித்து வருகிறேன். ஜோதிட பாடங்கள், மிகவும் அருமை. நன்றி.
    இந்த பாடல்களை எழுதிய மகான் பெயரை அறிய ஆவல்.
    நன்றி,
    அமுதன் சேகர்/////

    ///காதைக் கொண்டுவாருங்கள். உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். இந்தப் பாடல்களை எழுதியவர், பழநி அப்பனை ஸ்தாபித்த போகரின் சீடர்!///

    நன்றி ஐயா, அறிந்து கொண்டேன் அம் மகான் யாரென்று.

    நன்றி,
    அமுதன் சேகர்

    ReplyDelete
  14. தங்கள் விளக்கம் கண்டேன்.

    மகிழ்ச்சி, நன்றிகள் பல.

    ReplyDelete
  15. நேற்று இரவு 10.30 க்கு மேலே மைனர்வாள் chatக்கு வந்தார் கொஞ்ச நேரம் பேசினோம்
    நல்லாயிருக்கிறார். கவலைப்ப்ட வேண்டாம்

    ReplyDelete
  16. 'சம்பவம் நடக்குறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி கரெக்ட்டா அந்த இடத்துலேருந்து எஸ்கேப் ஆயிட்டீங்களே?'
    ன்னு நம்ம மாம்ஸ் கிண்டலடிச்சார்..ரெண்டு மூணு நாளா நலம் விசாரிச்சு வந்த அழைப்புகளுக்கு பதில் சொல்லும் போதுதான் கொஞ்சம் கொஞ்சமா நான் பாதுகாக்கப் பட்டிருக்கிறேன் என்பதையே உணர முடிந்தது..எங்கள் பகுதி sendai க்கும் tokyo க்கும் நடுவில் உள்ளது..புகுஷிமாவுக்கும் டோக்யோவுக்கும் நடுவில் உள்ளது..
    எனவே பிந்திய ரேடிஎஷன் தாக்கம் வழக்கத்துக்கு அதிகமாக 40 மடங்கு அதிகரித்து 1 .222 நானோசிஎவேர்த்ஸ் அளவில் இருந்ததாக ஊடகங்கள் மூலமாக அறிகிறேன்..
    செல்போன் இணைப்புகளில் பலவற்றைத் தொடர்பு கொள்ள முடியவில்லை..லேன்ட் லைன் இணைப்பு கிடைத்தது..
    பவர்காரணமாக எங்கள் கம்பெனி ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் இயங்கவில்லை என்று அறிந்தேன்..வெளிநாட்டினர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சொந்த நாட்டுக்கு பயணிப்பதாக செய்திகள் படிக்கும்போது ஜப்பானியரின் நிலை மனதுக்கு மிகவும் வேதனையைத் தருகிறது..சான்ரிக்கு என்ற பூகம்பம் /சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் தன் பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த தன் மகனின் வீட்டை சுற்றி வந்து ஓலமிடும் வயதான பெற்றோர் போன்று பல காட்சிகள் மனதை உறைய வைக்கின்றன..
    தஞ்சாவூரார் சொல்லியிருப்பதுபோலே எனது உடைமைகள் இன்னும் அங்கேயே..லேப்டாப் உட்பட..நானும் இந்த மாத இறுதியில் திரும்பிச் செல்லும் எண்ணம்தான்..இந்த முறை சில காரணங்களுக்காக ஒன் வே யில் பயணித்திருந்தேன்..சுனாமிக்கு முன்தினம் சப்பானுக்குத் திரும்புவதற்கான டிக்கெட் முழுக்கட்டணமும் செலுத்தி வாங்கி வைத்திருக்கிறேன்..அதிகமில்லாவிடினும் அங்கே சிலமாதங்களுக்கு தேவையான பணம் என் அக்கவுன்ட்டிலே விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.... சுற்றத்தார் பார்வையில் தோன்றும் விஷயங்களைக் கருத்தில் கொண்டால் திரும்பப் போகவேண்டுமா என்ற அளவிலே கேள்விக்குறி தோன்றியிருக்கிறது..
    இன்றைக்கு இந்த அளவிலே விஷயங்கள் பரிமாறிக் கொண்டதிலே மகிழ்ச்சி..
    பார்க்கலாம்..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com