18.2.11
மாசிமாசம் ஆளான பொண்ணு யாருக்கு?
---------------------------------------------------------------------
மாசிமாசம் ஆளான பொண்ணு யாருக்கு?
மாசிமாசம் ஆளான பொண்ணு யாருக்கு? என்று கேட்டால்
சின்னப் பையன் கூடச் சொல்லுவான். அது மாமனுக்கு என்று.
அந்த அளவில் திரைப்படப் பாடல்கள் நம்மோடு ஒன்றாகக்
கலந்திருக்கிறது.
பாடலின் முதல் இரண்டு வரிகளை மட்டும் கொடுத்திருக்கிறேன்
நாயகன்:
“மாசிமாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே”
நாயகி:
“நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே”
பாடல் பிரபலமானதற்குக் காரணம், நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அந்தப் பாடலுக்கு காட்சி கொடுத்திருப்பார். பாடலுக்கு உயிரூட்டியவர்கள் பாடலைப் பாடிய திருவாளர் KJ ஜேசுதாஸ், செல்வி. ஸ்வர்ணலதா, மற்றும் இசைய மைத்த இசைஞானி இளையராஜா (படம்: தர்மதுரை)
பாடலை எழுதிய கவிஞர் மோனைக்காக மாசி மாதம், மாமன் என்ற பதங்களை எல்லாம் போட்டுவிட்டார். வேறு மாதத்தைப் போட்டிருக்கக்கூடாதா?
சரி போகட்டும். சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.
தவத்துப்பிள்ளை மகத்தில் பிறக்கும் என்பார்கள். மக நட்சத்திரம் சிறந்த நட்சத்திரம். சிம்ம ராசிக்கு உரியது. அதுவும் மாசி மாதம் மக நட்சத்திரத்திரம் மிகவும் சிறப்பானது. அன்று பெளர்ணமி திதி. ராசிக்கு 7ல் சூரியன் தன் சொந்த ராசியைப் பார்த்தவாறு இருப்பார்.
அதனால், அன்றைய தினம் விசேடமானது.
இன்று மாசி மகம்
இன்று என்ன செய்யலாம்?
கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழ்க. பயன் பெறுக!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
-----------------------------------------------------------------------------
மாசி மகம்
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.
முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரகத்தி அவரை கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமனை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.
முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கைலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்" என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.
இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார்.
ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் கொடுத்து தம் அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.
அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்தால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.
மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்,
இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
கட்டுரை உபயம்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா. அதில் இதை வலையேற்றியவர்களுக்கு நன்றி!
வாழ்க வளமுடன்!
மாசிமாதம் ஆளானப் பொண்ணு....
ReplyDelete"காம லீலா வினோதம் காதல் கவிதா விலாசம்
படித்து படித்து எடுக்க எடுக்க ஓ... ஓ.. ஹோ.....
ஆசை ஆகா பிரமாதம் மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓ... ஓ.... ஹோ....
கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவோ நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உறங்குது ஓ.... ஓ.... ஹோ...."
இன்பத்துப் பால் இழையோடும் இனிய கீதம்
இன்றளவும் நம் மனதில் நின்று இதயம் வருடும்....
இந்த அற்புதப் பாடல் அமைந்த ராகம்???...
என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...
சிற்றின்ப கடலில் நீந்தி (இயற்கை நியதியை வென்று)
கரையேறினதும் பேரின்பம் என்பது போன்ற அருமையானப் பதிவு...
இன்றையப் பதிவு மாசிமகத்தின் மகத்துவம் அறிய உதவியது நன்றிகள் ஐயா!
சார், இந்தப் பாடலைப் பாடிய (பெண்குரல்) மறைந்த பாடகி ஸ்வர்ணலதா வீட்டின் கடைசி 9 வது பெண்... அவருக்கு திருமணம் ஆகும் முன்னமே மரணம் அழைத்துக் கொண்டது என்று அவர் அண்ணன் பேட்டி யளித்தார் ஆக செல்வி ஸ்வர்ணலதா என்பதாக மாற்றிவிடுங்களேன்....
ReplyDeleteI read about "Amritha yogam" and "marana Yogam" lessons. Can you please explaing what is "Siddha Yougam"
ReplyDeleteThanks
Alasiam G said...
ReplyDeleteமாசிமாதம் ஆளானப் பொண்ணு....
"காம லீலா வினோதம் காதல் கவிதா விலாசம்
படித்து படித்து எடுக்க எடுக்க ஓ... ஓ.. ஹோ.....
ஆசை ஆகா பிரமாதம் மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓ... ஓ.... ஹோ....
கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவோ நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உறங்குது ஓ.... ஓ.... ஹோ...."
இன்பத்துப் பால் இழையோடும் இனிய கீதம்
இன்றளவும் நம் மனதில் நின்று இதயம் வருடும்....
இந்த அற்புதப் பாடல் அமைந்த ராகம்???...
என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...
சிற்றின்ப கடலில் நீந்தி (இயற்கை நியதியை வென்று)
கரையேறினதும் பேரின்பம் என்பது போன்ற அருமையானப் பதிவு...
இன்றையப் பதிவு மாசிமகத்தின் மகத்துவம் அறிய உதவியது நன்றிகள் ஐயா!//////
முழுப்பாடலையும் தவிர்த்து துவக்க வரிகளை மட்டுமே கொடுத்தேன். நீங்கள் இழையோடும் வரிகளை எழுதிப் போட்டுக்கொடுத்துவிட்டீர்களே ஆலாசியம்:-))))))
Alasiam G said...
ReplyDeleteசார், இந்தப் பாடலைப் பாடிய (பெண்குரல்) மறைந்த பாடகி ஸ்வர்ணலதா வீட்டின் கடைசி 9 வது பெண்... அவருக்கு திருமணம் ஆகும் முன்னமே மரணம் அழைத்துக் கொண்டது என்று அவர் அண்ணன் பேட்டி யளித்தார் ஆக செல்வி ஸ்வர்ணலதா என்பதாக மாற்றிவிடுங்களேன்..../////
ஆகா, உத்தரவு. மாற்றிடுகிறேன்!
/////Kavitha said...
ReplyDeleteI read about "Amritha yogam" and "marana Yogam" lessons. Can you please explaing what is "Siddha Yougam"
Thanks/////
எழுதுகிறேன். பொறுத்திருங்கள் சகோதரி!
மாசி மகத்திர்க்கான சிறப்பு,வரலாறு மற்றும் விவரங்களையும்
ReplyDeleteசிறப்பாக இந்த நாளில் அளித்து அனைவரும் தெரிந்துக் கொள்வதற்கு
வாய்ப்பளித்த தங்களுக்கு மிக்க நன்றி!!
மிக அற்புதமான பொருத்தமான படைப்பு
ReplyDeleteஐயா. உரிய நாளில் உரிய விசயத்தை
மாணவக் கண்மனிகளுக்கு வழஙகியிருக்கிறீர்கள்,,
இந்த மாசி மகத்தில் கடல் நீராட்டு அவசியம் என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் 63 நாயன்மார்களில் ஒருவராகிய எம்பிரான் திருஞானசம்பந்தர் தமது திருமயிலாப்பூர் தேவாரத்தில்,
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் அடல் ஆன் ஏறு ஊறும் அடிகள் அடி பரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்
- என்று குறிப்பிட்டு பாடியருளி எலும்பாய் இருந்த பூம்பாவாவை என்ற பெண்ணை உயிரோடு எழுப்பினர்ர் என்பது வரலாறு,
சரி,, இவ்வளவு சிறப்புமிக்க மாசி மகத்தை பற்றி வாத்தியார் சொல்லிவிட்டார் ,,, நம்மால் எந்த கடலுக்கும் போகமுடியவில்லை என
வருந்துபவர்களுக்காக.
எம்பிரான் திருநாவுக்கரசர் ஒரு அருள் செய்துள்ளார், - அது தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசிமகத் திருவிழா நடைபெறும் கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் அருளிச் செய்த தேவாரம் ஆகும்,
ஏவி இடர்க்கடல் இடைப்பட்டு இளைக்கின்றேனை இப்பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே கூவிஅமருலகு அனைத்தும் உருவிப் போகக் குறியில் அறுகுணதது ஆண்டுகொண்டார் போலும் தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி, பொற்றாமரை, புட்கரணி, தெணநீர்க் கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே,
என்னும் தேவாரமாகும்,
யாராக இருந்தாலும் வீட்டில் குளியலறையில் இறைவனை நினைநது இந்த தேவாரத்தை பாடிவிட்டு குளித்தால்
அவர்கள் கடலாடியதற்கு சமமான பலன்களை பெறுவார்கள் என்பது திருநாவுக்கரசரின் ஆணை ,,,
எனவே பாடிவிட்டு குளியுங்கள்
( ஏற்கனவே குளித்திருந்தாலும் 2வது முறையாக இந்த தேவாரத்தை பாடிவிட்டு குளியுங்கள் - புண்ணிய கடலாடிய பயனை பெறுங்கள்.
நல்ல ஒரு விசயத்தை சொல்ல வாய்ப்பளித்த வாத்தியாருக்கே இந்த புண்ணியங்கள் சென்று சேரட்டும்,
சிவசிவ
ஓ.. மாசி மாத நிகழ்வுக்கு இத்தனை கதைகள் உண்டா..?
ReplyDeleteஇந்து மதமும், அதன் கதைகளும் தோண்டத் தோண்ட புதையலாக வருகிறது..!
////Blogger V Dhakshanamoorthy said...
ReplyDeleteமாசி மகத்திர்க்கான சிறப்பு,வரலாறு மற்றும் விவரங்களையும்
சிறப்பாக இந்த நாளில் அளித்து அனைவரும் தெரிந்துக் கொள்வதற்கு
வாய்ப்பளித்த தங்களுக்கு மிக்க நன்றி!!////
எல்லாம் உங்களுக்காகத்தான் தட்சணமூர்த்தி! நன்றி!
////Blogger எடப்பாடி சிவம் said...
ReplyDeleteமிக அற்புதமான பொருத்தமான படைப்பு
ஐயா. உரிய நாளில் உரிய விசயத்தை
மாணவக் கண்மனிகளுக்கு வழஙகியிருக்கிறீர்கள்,,
இந்த மாசி மகத்தில் கடல் நீராட்டு அவசியம் என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் 63 நாயன்மார்களில் ஒருவராகிய எம்பிரான் திருஞானசம்பந்தர் தமது திருமயிலாப்பூர் தேவாரத்தில்,
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் அடல் ஆன் ஏறு ஊறும் அடிகள் அடி பரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்
- என்று குறிப்பிட்டு பாடியருளி எலும்பாய் இருந்த பூம்பாவாவை என்ற பெண்ணை உயிரோடு எழுப்பினர்ர் என்பது வரலாறு,
சரி,, இவ்வளவு சிறப்புமிக்க மாசி மகத்தை பற்றி வாத்தியார் சொல்லிவிட்டார் ,,, நம்மால் எந்த கடலுக்கும் போகமுடியவில்லை என வருந்துபவர்களுக்காக.
எம்பிரான் திருநாவுக்கரசர் ஒரு அருள் செய்துள்ளார், - அது தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசிமகத் திருவிழா நடைபெறும் கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் அருளிச் செய்த தேவாரம் ஆகும்,
ஏவி இடர்க்கடல் இடைப்பட்டு இளைக்கின்றேனை இப்பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே கூவிஅமருலகு அனைத்தும் உருவிப் போகக் குறியில் அறுகுணதது ஆண்டுகொண்டார் போலும் தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி, பொற்றாமரை, புட்கரணி, தெணநீர்க் கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே,
என்னும் தேவாரமாகும்,
யாராக இருந்தாலும் வீட்டில் குளியலறையில் இறைவனை நினைநது இந்த தேவாரத்தை பாடிவிட்டு குளித்தால்
அவர்கள் கடலாடியதற்கு சமமான பலன்களை பெறுவார்கள் என்பது திருநாவுக்கரசரின் ஆணை ,,,
எனவே பாடிவிட்டு குளியுங்கள்
( ஏற்கனவே குளித்திருந்தாலும் 2வது முறையாக இந்த தேவாரத்தை பாடிவிட்டு குளியுங்கள் - புண்ணிய கடலாடிய பயனை பெறுங்கள்.
நல்ல ஒரு விசயத்தை சொல்ல வாய்ப்பளித்த வாத்தியாருக்கே இந்த புண்ணியங்கள் சென்று சேரட்டும்,
சிவசிவ/////
நல்லது நண்பரே!உங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி. வங்கிகளில் பணப் பறிமாற்றம் செய்வதைப்போல புண்ணியத்தையும் செய்ய முடியுமா என்ன?:-))))
/////உண்மைத்தமிழன் said...
ReplyDeleteஓ.. மாசி மாத நிகழ்வுக்கு இத்தனை கதைகள் உண்டா..?
இந்து மதமும், அதன் கதைகளும் தோண்டத் தோண்ட புதையலாக வருகிறது..!/////
அடடே...வாங்க உனா தானா! பொக்லைன்களைக் கொண்டு தோடலாம். அத்தனை நிகழ்வுகள்/கதைகள் உண்டு!
ஐயா, கர்ணன் படைக்களத்தில் தனது
ReplyDeleteபுண்ணியங்களை கிருஷ்ணருக்கு தாரை
வார்த்து தரவில்லையா ? அப்படி
எங்க வாத்தியாருக்கு தந்தோம் எனக்
கொள்ளுங்கள் ,,,
/////எடப்பாடி சிவம் said...
ReplyDeleteஐயா, கர்ணன் படைக்களத்தில் தனது புண்ணியங்களை கிருஷ்ணருக்கு தாரை வார்த்து தரவில்லையா ? அப்படி எங்க வாத்தியாருக்கு தந்தோம் எனக் கொள்ளுங்கள்/////
எந்த யுகத்தில் இருக்கிறீர்கள்? மறந்து விட்டீர்களா? சத்யயுகம், திரேதாயுகம், துவபரயுகம் என்று முந்தைய யுகங்களில் அதெல்லாம் நடந்திருக்கிறது. இப்போது நீங்களும் நானும் இருப்பது கலியுகம். அது சாத்தியப்படாது.
பாவத்தை வேண்டுமென்றால் பங்கிட்டுக்கொள்ளலாம். இந்திய அரசியல்வாதிகள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்!
/எடப்பாடி சிவம் said...
ReplyDeleteஐயா,
நான் திரு, கண்ணன் போன்ற வகுப்பறை
நண்பர்களோடு நட்பு கொள்ளும் நோக்கத்தோடு தான் comment செய்தேன்,, அவ்வளவே ...
தவறு இருப்பின் மன்னிக்கவும்,,,
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ ?
திருவாளர்கள் ஆலாசியம், கண்ணன்,
KMR, சஞ்சய் மற்றும் பாசமலர் ( உமா )
போன்ற அன்பர்களின் நட்பையும் எதிர்நோக்கியிருக்கிறேன்,
திருவாளர்கள் ஆலாசியம், கண்ணன்,
KMR, சஞ்சய் மற்றும் பாசமலர் ( உமா )
போன்ற அன்பர்களின் நட்பையும் எதிர்நோக்கியிருக்கிறேன்,
ச்கோதரர் எடப்பாடி சிவம்
நீங்க என்ன எழுதனும் என்று தோன்றுதோ அதெல்லாம் எழுதுங்கோ
ம்ன்னிப்பு த்ப்பு என்ற பேச்சியெல்லாம் சொல்லகூடாது இது கனிவான் வகுப்பு
திருவாளர்கள் ஆலாசியம், கண்ணன்,
KMR, சஞ்சய் மற்றும் பாசமலர் ( உமா )
போன்ற அன்பர்களின் நட்பையும் எதிர்நோக்கியிருக்கிறேன்,
இவங்கயெல்லாம் உங்களுக்கு நல்ல நண்பர்களாயிருப்பங்க
அப்புறம் வாத்தியார் உங்களையும் சேர்த்து கொண்டார்
அப்புறம் நீங்க ரொம்ப தெய்வீகமாயிருக்கிறீங்க முன்னெற்றியில் விபூதி பட்டை பட்டைய போட்டுயிருக்கிறீங்க
சகோதரி சுந்தரி அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் ... விபூதியை
ReplyDeleteஅழகாக திருநீறு என்று சொல்லுவோமே ?
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே
மாசி மகம் என்ற ஒரு சொல்லைக் கொடுத்தாலும் கொடுத்தீர்கள். பற்பல கருத்துக் குவியல்களைக் கொண்டு வந்து குவித்து விட்டார்கள் மாணவச் செல்வங்கள். இதுதான் அறிவார்ந்த விவாதம் அல்லது விளக்கம். நல்ல பல புதிய செய்திகள், தேவாரத் திருப்பதிகங்களில் பொதிந்திருக்கும் அரிய கருத்துக்கள் இவைகள்தான் வகுப்பறையில் புரிந்துகொள்ள வேண்டியவை. வகுப்பறையை நல்ல திறமையோடு வழிநடத்திச் செல்கிறீர்கள். எல்லாம் சரி, மாசிமகம் என்று போட்டுவிட்டு கும்பகோணம் மகாமகக் குளத்தின் படத்தைப் போட்டிருக்கலாமே, வைத்தீஸ்வரன்கோயில் புண்ணிய தீர்த்தத்தின் படத்தை அல்லவா போட்டிருக்கிறீர்கள். என்றாலும் நன்றாகவே இருந்தது. மாசி மாதம் ஆளான பொண்ணு என்று நீங்கள் அடியெடுத்துக் கொடுக்க, பாருங்கள் எத்தனை வேகத்தோடு மற்ற அடிகளைக் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார் நண்பர் ஆலாசியம். அவர் சாதாரணமானவராகத் தெரியவில்லை. அவர் ஒரு மினி என்சைக்ளோபீடியா. வளர்க அவர் திறமை.
ReplyDelete///Thanjavooraan said...
ReplyDeleteமாசி மகம் என்ற ஒரு சொல்லைக் கொடுத்தாலும் கொடுத்தீர்கள். பற்பல கருத்துக் குவியல்களைக் கொண்டு வந்து குவித்து விட்டார்கள் மாணவச் செல்வங்கள். இதுதான் அறிவார்ந்த விவாதம் அல்லது விளக்கம். நல்ல பல புதிய செய்திகள், தேவாரத் திருப்பதிகங்களில் பொதிந்திருக்கும் அரிய கருத்துக்கள் இவைகள்தான் வகுப்பறையில் புரிந்துகொள்ள வேண்டியவை. வகுப்பறையை நல்ல திறமையோடு வழிநடத்திச் செல்கிறீர்கள். எல்லாம் சரி, மாசிமகம் என்று போட்டுவிட்டு கும்பகோணம் மகாமகக் குளத்தின் படத்தைப் போட்டிருக்கலாமே, வைத்தீஸ்வரன்கோயில் புண்ணிய தீர்த்தத்தின் படத்தை அல்லவா போட்டிருக்கிறீர்கள். என்றாலும் நன்றாகவே இருந்தது./////
இனையத்தில் கிடைக்காத படங்களா? கும்பகோணம் மகாமகக் குளத்தின் படம் கிடைத்தது. ஆனால் அது பளிச்சென்று நல்ல நிறக் கோர்வையுடன் இல்லை. அதனால்தான் வைத்தீஸ்வரன் கோவிலில் நீர் நிலையுடன் இருக்கும் படத்தை வலை ஏற்றினேன்!
//////மாசி மாதம் ஆளான பொண்ணு என்று நீங்கள் அடியெடுத்துக் கொடுக்க, பாருங்கள் எத்தனை வேகத்தோடு மற்ற அடிகளைக் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார் நண்பர் ஆலாசியம். அவர் சாதாரணமானவராகத் தெரியவில்லை. அவர் ஒரு மினி என்சைக்ளோபீடியா. வளர்க அவர் திறமை.////////
ஆமாம். அதற்கு உங்களைப் போன்ற மாமனிதர்களின் ஆசியும் வேண்டும். உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி கோபாலன் சார்!
/// Thanjavooraan said...
ReplyDeleteநண்பர் ஆலாசியம். அவர் ஒரு மினி என்சைக்ளோபீடியா. வளர்க அவர் திறமை////
ஆஹா எனது பாக்கியம்... தங்களின் அன்புகலந்த வாழ்த்திற்கும் வாத்தியாரின் பாராட்டுக்களுடான ஊக்கமளிப்பிற்கும் நன்றிகள் ஐயா!
அன்புடன் வணக்கம்
ReplyDeleteவாத்தியார் மாசி மக சிறப்பு பற்றி பதிவிட்டார்கள் சிவஸ்ரீ எடப்பாடி சிவம் திருமுறைகளில் இருந்து அடியார்களின் திருவாக்கு
எடுத்து உபகரித்து!!! ஆக இதுவல்லவோ !! வகுப்பறை !! இந்த வகுப்பறை இல் நானும் ஒரு மாணவன் என்று பெருமை கொள்ளலாம் ...
இரண்டு பேருக்கும் நன்றி நன்றி நன்றி..
அன்பர் ஆலாசியம் செம மூடுக்கு வந்துருக்கார் போலே..
ReplyDeleteஅந்த song லே beat முக்கியமா கவனிக்கணும்..செமை beat ..
ஹை பிட்ச்லே செம தூக்கலா அந்த நேரத்துலே மட்டும் ஹிட் ன்னு இல்லாமே எப்போக் கேட்டாலும் மூடுக்கு கொண்டு போகும் ஒரு பாட்டு..
ஆலாசியம் நல்ல form லேதான் இருக்கீங்க..
கேட்டு ரசிக்கத்தான் தெரியுமே தவிர ராகம்,தாளம்,பல்லவி கதையெல்லாம் எனக்குச் சுத்தமாத் தெரியாது..
நலம் தானே . .
ReplyDeleteசின்ன இடைவெளி...
தினமும் வகுப்பறை பதிவுகளை படித்துவிடுவேன் (மொபைல் வழியாக)
பின் ஊட்டம் இட இப்போது தான் இணைய இணைப்பு கிடைத்தது..(இந்தியாவில் இருந்து விலகி இருப்பதால்)
அது சரி.
மாசி மாதத்து பொண்ணுக்கு தான்
மாமனா . . .
எந்த விஷயத்துக்கோ எந்த பாடல் என்பது
ஏதோ நெருடலை தருவது போல் தெரிகிறதே..
சார் என்க்கு ஒரு சந்தேகம் அல்ப்பரைகள் என்றால் என்ன அர்த்தம் வனவிலங்கா
ReplyDeleteஅழகான் பட்ங்களா, எப்போ ஜாதக புத்தகம் அனுப்புவிங்க எனக்கு புத்தக வேலையெல்லாம் முடிந்துவிட்டதா?
Blogger எடப்பாடி சிவம் said...
ReplyDeleteசகோதரி சுந்தரி அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் ... விபூதியை
அழகாக திருநீறு என்று சொல்லுவோமே ?
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே//
ம் திருநீறு என்றுதான் சொல்லுவேன் வாங்கோ வாங்கோ எல்லாருக்கும் திருநீறு தருகிறேன் வைத்துகொள்ளூங்கள்.
ஐயா!
ReplyDeleteஎங்களுடைய " வகுப்பறை ", சாம்ராஜ்சியம் அன்பினால் ஆனது என்பதனால் தங்களின்
வருகைக்கும் அன்பீர்க்கும் நன்றி சிவனாரே!
கண்ணன் அண்ணாச்சிக்கு வணக்கம்,
ReplyDeleteநம்ம வகுப்பறை என்று சொல்லலாமே ?
KJ ஜேசுதாஸ் - நான் அவரோட ரசிகை. என்ன ஒரு கம்பீரமான குரல்!
ReplyDeleteஸ்வர்ணலதாவோட குரல் அருமையா இருக்கும். அதுவும் ஹை பிட்சில போகும்போது கூட பிசிறில்லாம பாடுவாங்க. எனக்கு பிடிச்ச பாடகிகளில் அவரும் ஒருவர். அவர் பாடினதுலேயே 'மாலையில் யாரோ மனதோடு பேச' மற்றும் 'போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு' என்னோட ஆல் டைம் favourites. அவரோட மறைவு உண்மையிலேயே இசை ரசிகர்களுக்கு ஓர் இழப்புதான்.
மாசி மகம் பற்றிப் படித்ததும் இப்ப கும்பகோணத்தில இல்லையேன்னு தோணிச்சு.
ReplyDelete12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக// மகாமகக் குளத்தில்தான் இது நடைபெறும்.
பிரகத்தி// - பிரம்மஹத்தின்னு எழுத நினைச்சீங்களா?
குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் //
சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் //
இது படிக்க குழப்பமா இருக்கு. குரு இப்ப சிம்ம ராசியில இல்லையே?