+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology ஒரு கன்னத்தில் அடித்தால் என்ன - மறு கன்னத்தையும் காட்டு!
1
புதனும் சுக்கிரனும் நட்புக் கிரகங்கள். ஆகவே புதன் திசையில் சுக்கிர புத்தி நடக்கும் காலம் நன்மைகள் உடையதாக இருக்கும். அதுபோல சுக்கிர திசையில் புதன் புத்தியும் நன்மை உடையதாக இருக்கும் என்று இந்த வாரம் திங்கட்கிழமையன்று வலையேற்றிய பதிவில் எழுதியிருந்தேன். அதாவது ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கும் அமைப்பு இது
2
அதற்கு அடுத்து, நேற்றையப் பதிவில் பதிலுக்குப் பதில் கத்தியை உருவும் இரண்டு கிரகங்களைப் பற்றி எழுதியிருந்தேன். புதன் திசையில் சூரிய புத்தி நடக்கும் காலம் ஜாதகனுக்கு நன்மையாக இருக்காது. அதுபோல பதிலுக்கு சூரிய திசையில் புதன் புத்தி நடைபெறும் காலமும் நன்மையாக இருக்காது. என்று நேற்று எழுதினேன். நீ வலது காலில் அடித்தால், நான் இடது காலில் அடிப்பேன் என்னும் கணக்கில் சூரியனும், புதனும் நடந்து கொள்ளும் என்று எழுதியிருந்தேன்!
3.
இன்று வித்தியாசமான இரண்டு கிரகங்களைப் பற்றிப் பார்ப்போம்.
புதனும், சந்திரனும் தங்களுடைய தசாபுத்தியில் என்ன செய்வார்கள்
என்று பார்ப்போம். புதன் திசையில் சந்திரபுத்தி ஜாதகனுக்கு நன்மையளிப்பதாக இருக்காது. ஆனால் அதே நேரத்தில் சந்திர
திசையில் வரும் புதன் புத்தி நன்மைகள் உடையதாக இருக்கும்.
ஒரு கன்னத்தில் அடித்தால் என்ன? மறு கன்னத்தையும் காட்டுகிறேன்
என்று சந்திரன் விட்டுக்கொடுத்துப் போவார். அவர் சுபக் கிரகமல்லவா? அதனால்தான் அப்படி. சான்றோர்களின் வழி!
அந்த இரண்டு கிரகங்களின் தசா புத்திக்கான பாடலை இன்று பதிவிட்டிருக்கிறேன். எளிமையான தமிழில் இருப்பதால் விளக்கம் எழுதவில்லை. அப்படியே கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக!
“தானேதான் புதன் திசையில் சந்திரபுத்தி
தாழ்வான மாதமது பதினைந்தாகும்
தேனென்ற அதன் பலனை சொல்லக்கேளு
தெரிவையர்கள் கலகமுடன் யிளப்பா சயரோகம்
கோனென்ற ராசாவால் குடிகேடு செய்யும்
கோதையர்கள் தன்னாலே குடிபாழாகும்
வானென்ற வான்பொருளும் வகையில்லாச் சேதம்
வையகத்தில் நீதியில்லா மாதரைச் சேர்வாயே!
பாலில்லா சந்திரதிசை புதன்புத்தி
பரும்நாள் மாதமது பதினேழாமே
கோளில்லா அதன் பலத்தை கூர்ந்து சொல்வோம்
குணமுள்ள மாதர்களும் மன மகிழ்ச்சியுண்டாம்
நாளில்லா கலியாணம் நடக்கும் பாரு
நன்றான பாக்கியமும் நவதானியமும் சேரும்
தேனில்லா சத்துருவை செயிக்கலாகும்
தெரிவையர்கள் மோகமுடந்தெளிந்து நிற்பான்
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++
2
ரூபாய் பத்தாயிரம் கோடி
என்ன இது? மாநிலங்களுக்கான மானியத் தொகையா?
இல்லை ஸ்வாமி!
இது இந்தியாவில் தினசரி உற்பத்தியாகும் கறுப்புப் பணத்தின் அளவு
அம்மாடியோவ்! உண்மையாகவா? யார் சொன்னது?
செய்தி கீழே உள்ளது படித்துப்பாருங்கள்
படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்திப்பாருங்கள். படம் பெரிதாகத் தெரியும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து என்ன?
கைலாசம்தான்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

சிவராத்ரி வரும் முன்பு கைலை தரிசனம் செய்து வைத்தது நலமைய்யா!
ReplyDeleteஅற்புதம்!ஆனந்தம்!
அதில் ஒரு புகைப்படத்தில் ஒரு நாய் உள்ளது!அந்த நாய்க்கு எவ்வளவு புண்ணியம் ஐயா
ஒரு கன்னத்தில் அடித்தால் என்ன? மறு கன்னத்தையும் காட்டுகிறேன்
ReplyDeleteஎன்று சந்திரன் விட்டுக்கொடுத்துப் போவார். அவர் சுபக் கிரகமல்லவா? அதனால்தான் அப்படி. சான்றோர்களின் வழி!
சரி அப்படியே செய்கிறேன் எங்கள் வாத்தியாரே! நன்றி.
அன்புடன் வணக்கம்
ReplyDeleteபுதன் திசையின்ல் சந்திர புத்தி ஆஹா !!!எனது ஒன்று விட்ட சகோதரர் ஒரு பெண்ணால் மானபங்கபட்டு 28 நாள் களி தின்னுட்டு வந்தார்!! பின்னர் கேஸ் இல்லை ..உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்பது !!! முன் ஜென்மத்தில் செய்த பாவம் இப் பிறவியல் அனுபவித்து தீர வேண்டும்... தீர வேண்டும்... நன்றி வாத்தியார் அவர்களே!
அன்புடன் வணக்கம் வணக்கம் வணக்கம்
ReplyDeleteமுக்திக்கு இடமாம் என அப்பன் இருக்கும் இடம் அழகாக காட்டி என போன்றவர்களுக்கு என அப்பனை ஞாபக படுத்தினீர்கள்!!! கண்டு களிக்க வைத்தீர்கள்!!!! மிக்க நன்றி!!! நன்றி !!!! நன்றி !!!
தந்தைக்கு தனயன் நட்பு, தனயனுக்கு தந்தை பகை. இதன்படி பார்த்தால் சந்திரன், புதனுடைய பலன்கள் புரிகிறது. அடுத்து சூரியனும் சனியும். தந்தையும் தனயனும். ஆனால் ஒருவருக்கொருவர் பகை. ஒருவர் ஆளுங்கட்சி தலைவர், ஒருவர் எதிர்கட்சி தலைவர் போன்றவர்.
ReplyDeleteபாடல் எளிமையாக உள்ளது. எனக்கு சந்திர தசையில் இப்போது குரு புத்தி.
ReplyDeleteஐயா வணக்கம்...!
ReplyDeleteபாடமும் அருமை...! படங்களும் அருமை...! கைலாச மானசரோவர் தரிசனம் செய்ய வைத்ததற்கு கோடான கோடி நன்றிகள்...!
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
ஐயா!
ReplyDeleteசிவபெருமான் குடி கொண்டு இருக்கும் அருமையான படத்தை வெளி இட்ட வாத்தியாருக்கு நன்றி!
ஐயா
ReplyDeleteஇந்த வருடம் பத்ரிநாத்
யாத்திரைக்கு வாத்தியார் ஐயா, தஞ்சை பெரியவர்கள் முதல் ஜப்பான் மைத்துனர் "மைனர்", மற்றும் சகல பெரியவர்கள், மாணவ மாணவியர் அனைவரையும் அழைக்கின்றேன்.
ஜூன் அல்லது ஜூலை யில் பயணம் இருக்கும் .
பாச மலர் சகோதரியை வழிகாட்ட அழைக்கின்றேன்.
Dear Sir
ReplyDeleteArumai Sir.. Melor Melorae..
Thank you
Loving Student
Nellai Arulkumar Rajaraman
பாச மலர் சகோதரியை வழிகாட்ட அழைக்கின்றேன்.//
ReplyDeleteஎனக்கும் போகணும்னு ஆசைதான், எல்லாரும் சொல்லுங்க. சேர்ந்து ஒரு ட்ரிப் பிளான் பண்ணிடலாம்.
kailayam poga aasai than aanal enna praptham adhu nathadhe theerum.
ReplyDeleteஐயா,பாடங்கள் அருமை. கேதுவுக்கும் புதனாருக்கும் உள்ள தொடர்பை கூறவும்.
ReplyDelete-ஜாவா, ஆஸி