1.2.11

Astrology மரணயோகம் என்றால் என்ன?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology  மரணயோகம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். மரணம் என்பது இறப்பைக் குறிக்கும், சாவைக் குறிக்கும் சொல். வெள்ளைக்காரன் மொழியில் சொன்னால் Death

யோகம் என்றால் அதிர்ஷ்டம் good luck என்று பொருள்படும்.

இரண்டு சொற்களையும் சேர்த்து மரணயோகம் என்றால் என்ன?

மரணத்தை எப்படி யோகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும் என்கிறீர்களா?

ஜோதிடத்தில் அது உண்டு.

நாட்காட்டிகளில் பாருங்கள். இன்று மரண யோகம் என்று போட்டிருப்பார்கள்.

எப்படிப் போடுகிறார்கள்? அதற்கு அடிப்படை என்ன?

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் யோகமும் ஒன்று.

சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.

எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?

கீழே கொடுத்துள்ளேன்.

ஞாயிற்றுக்கிழமை: அவிட்டம், கார்த்திகை
திங்கட்கிழ்மை: அஸ்விணி, உத்திராடம்
செவ்வாய்க் கிழ்மை: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
புதன் கிழமை: ஹஸ்தம்
வியாழக்கிழமை: சதயம், கார்த்திகை, அனுஷம், உத்திரம், திருவாதிரை
வெள்ளிக்கிழமை: ரொகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம்
சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்


மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம்.

மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

செய்தால் என்ன ஆகும்?

ஊற்றிக்கொண்டு விடும்!

அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது. வளர்ச்சி யடையாது.

உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம்  மாட்டிக் கொண்டுவிடும்.

மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது.

சரி, அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.

பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.

மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். வங்கி மொழியில் சொன்னால் NPA (non performing asset) ஆகிவிடும்

ஆகவே நற் செயல்களுக்கு மரணயோக நாட்களைத் தவிர்ப்பது நல்லது.

சரி, அன்று என்னதான் செய்யலாம்?

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.

இதுபோல முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.

என்ன புரிந்ததா?

நாளை இதுபோன்று வேறு ஒரு யோகத்தைப் பார்ப்போம்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++==

வாழ்க வளமுடன்!

14 comments:

  1. குறீபீட்ட நாளீல் , குறீபிட்ட நட்சத்திரகாரர் சுபகாரியங்களை செய்யககூடாதா? உ‍ ‍‍ம் விசாக நட்சத்திரகாரர் செவ்வாய்கிழமை நல்லகாரியாம் செய்யக்கூடாதா?

    ReplyDelete
  2. பாடத்திற்கு நன்றிகள் ஐயா!
    மரணயோகத்தில் என்று தனியாக செய்யக் கூடிய விசேச பூஜை ஏதும் உண்டா?
    அது எந்த கடவுளுக்கு அல்லது கிரகத்திற்கு ஐயா!
    நன்றி! நன்றி!!

    ReplyDelete
  3. குரு

    இது போன்று மற்றும் ஒரு பதிவு http://ujiladevi.blogspot.com/2010/11/blog-post_16.html

    நீங்க சொல்வதும் , இதுவும் ஒன்றா?

    ReplyDelete
  4. Dear Sir

    Marana yogam Paadam Nandru.

    Thank you


    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  5. Sir,

    What happens to people born on Marana Yogam. For example i was born on Ayilyam star on a Saturday.

    WBR,
    MB

    ReplyDelete
  6. சித்தயோகம்,அமிர்தயோகம், மரணயோகம் என்ற மூன்று உள்ளன.அதுவும் அன்றி விஷ்கம்பம் முதலாக,வைதிருதி ஈற்றாக 27 தின யோகங்கள் நட்சத்திர அடிப்படையில் உண்டு.

    15+15 திதி(பிரதமை முதலியவை),7வாரம்(கிழமை), 27நட்சத்திரம்,27யோகம்,11கரணம் என்று 5ம் ஆனது
    பஞ்ச(5) அங்கம், அதாவது பஞ்சாங்கம்!

    சர்வ முஹுர்த்த நாள் என்பது திதியில் பிரதமை, அஷ்டமி, நவமி தவிர்த்ததும்,கிழமைகளில் செவ்வாய்,சனிதவிர்த்ததும்,
    நட்சத்திரங்களில் பரணி, கார்த்திகை
    ஆயில்யம்,கேட்டை,மூலம்,தவிர்த்தது3 யோகங்களில் மரண யோகமும்,27
    யோகங்க‌ளில் 6,9,10,17,27 வது யோகங்கள் தவிர்த்தும்,கரணங்களில் பத்திரை தவிர்த்தும் அமைவது சர்வ முஹுர்த்தநாள்.

    தங்கள் கட்டுரை அருமை ஐயா!

    ReplyDelete
  7. Sir,

    What happens to people born on Marana Yogam. For example i was born on uthiram star on a Saturday.

    Thank you

    Rajaram

    ReplyDelete
  8. மரண யோகத்தில் கல்யாணம் பண்ணினால் வாழ்கை பிரிவில் முடியும் என்றிர்கள் அதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா ஐயா

    ReplyDelete
    Replies
    1. உண்டு,அதே தம்பதியினருக்கு மறுபடி சிறந்த திருமண முகூந்தம் பார்த்து மறுமாங்கல்ய தாரணம் என்று சொல்லக்கூடிய மறுதிருமணம் செய்து வைப்பதே பரிகாரம் ஆகும்.
      மறு வாழ்கையில் தம்பதிகள் சிறப்பாக வாழுவார்கள்.

      Delete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com