இன்று வரவேண்டிய வாரமலர், முண்டாசுக் கவிஞருக்காக நேற்றே வந்துவிட்டதால், நேற்று வரவேண்டிய இளைஞர் மலர் இன்று வெளியாகிறது. இரண்டு மாணவக் கண்மணிகள் வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள். பதிவிட்டிருக்கிறேன். படித்து மகிழுங்கள். அத்துடன், அவர்கள் மேலும் தொடர்ந்து எழுதும் விதமாக உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++======
1
உங்களைத் தோண்டுங்கள் உண்மை தெரியும்!
வாத்தியாரின் வகுப்பறைக்கு வந்து இன்று பாடம் படிக்கின்ற மற்றும் வருங்காலத்தில் பாடம் படிக்க போகும் அனைவரையும் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது.
பலருக்கும் பதில் தெரியாத கேள்வி அது!
என்ன கேள்வி?
கேள்வி இதுதான்: உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதப்பிறவியும் பெறும் முதல் வெற்றி என்ன?
உங்கள் பதிலை யோசித்து வைத்துக் கொண்ட பிறகு, தொடர்ந்து இந்தக் கட்டுரையைப் படியுங்கள்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
அது சாதாரண வெற்றி அல்ல! மகத்தான வெற்றி! அறிவியல் உலகம் ஆதாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ள வெற்றி!
சொன்னால், வியப்பாக இருக்கும். ஐந்து முதல் பத்து மில்லியன் உயிர் ஜீவன்களுடன் உண்டான போராட்டத்தில் பெற்ற முதல் வெற்றி அது!
நீங்கள், நான், நமது முன்னோர்கள், வகுப்பறை வாத்தியார் உட்பட அனைவரும் பெற்ற முதல் வெற்றி அதுதான்!
அந்த உண்மையை மட்டும் உணர்ந்து கொள்வதோடு, மனதில் ஏற்றிக் கொண்டால் போதும். யாரும் தங்கள் தன்னம்பிக்கையை இழக்க மாட்டார்கள்.
மரண விளிம்பிற்குச் செல்பவர்கள் கூட அதை நினைத்தால், ஒரு புத்துணவு பெற்றுத் திரும்பிவிட முடியும். புது வாழ்க்கை வாழ்ந்து செழிக்க முடியும்!
தன்னம்பிக்கையை இழந்து சோகத்துடன் வாழும் மனிதன்கூட, அவன் ‘நிகழ்த்தி காட்டிய சாதனை’ தெரிந்தால் தன்னம்பிக்கை மீண்டும் அவனுக்குள் துளிர்விடும். சோகம் காணாமல் போய்விடும். மீண்டும் எழுந்து உட்கார்ந்து விடுவான். சாதனை செய்யப் புறப்பட்டு விடுவான். யாரும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது!
மனநல மருத்துவ ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டும் மாபெரும் உண்மை அது!
அந்த மாபெரும் வெற்றி என்ன என்று இப்போது சொல்லுங்கள்!
அன்னை வயிற்றில் நாம் ஜனித்ததுதான் அந்த முதல் வெற்றி! நமது கன்னி வெற்றி. உங்கள் மொழியில் சொன்னால், ஒரு மட்டை ஆட்ட வேகப் பந்து வீச்சாளர் கைப்பற்றும் முதல் விக்கெட்!
இதை இன்றைய நவீன மருத்துவ உலகம் ஆதாரத்துடன் கூறுகிறது! ஆதாரத்துடன் கூறும்போது, அதை ஒப்புக்கொள்வதுதானே மூறை!
அதனால்தான் அதை, அந்த மருத்துவ உண்மையை, உங்களுக்காக இங்கே பதிவு செய்கிறேன்!
அதற்கு உரிய ஆதாரத்தை, மருத்துவ பரிசோதனைச் சாலை என்று கூறபடுகின்ற லேப்பில் கண்கூடாக நீங்கள் காணலாம். அதற்கு ஒரு இணைய தளம் உள்ளது. அதில் நீங்கள் காணலாம்.
விளக்கமாகக் கூறினால் மருத்துவப் பாடமாகிவிடும். அதனால் விளக்கவில்லை!
அதைவைத்துச் சொல்ல வந்த செய்திக்கு மட்டும் வருகிறேன்!
ஒவ்வொரு மனித உயிரும் ஜனிக்கும் போது வெற்றி வாகை சூடிவிடுகிறது. வளரும்போது தான் பலரது வாழ்க்கைச் சூழல் மாறிவிடுகிறது. ஒவ்வொருவரும் அவசரம் என்னும் தவிர்க்க முடியாத நோயால் பாதிக்க படுகின்றார்கள். அதுதான் பரிதாபத்திற்கு உரிய விஷயம்!
இன்றைய போட்டி மிகுந்த உலகில் எல்லாவற்றிற்கும் அவசரம். விபரம் தெரிந்த வயதில் துவங்கி, இறுதியில் இறைவனடி சேரும் நாட்கள் வரை - உங்கள் மொழியில் சொன்னால் மண்ணோடு மண்ணாகும் வரை அனைத்திற்கும் அவசரம்!
இன்றைய மருத்துவ உலகமும், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கருணையோடும், மனித நேயத்துடனும் அடித்துச் சொல்வது இதுதான்:
பல் துலக்குவதாகட்டும், குளிப்பதாகட்டும், உணவு உண்பதாகட்டும், இறைவனை வணங்குவதாகட்டும், செய்தித்தாளைப் படிப்பதாகட்டும், மனைவி, குழந்தைகளுடன் பேசுவதாகட்டும், இயற்கையை ரசிப்பதாகட்டும், ஒரு சினிமாவைப் பார்ப்பதாகட்டும் அல்லது உங்கள் தொழிலைச் செய்வதாகட்டும், எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்
தன் அவதாரத்தில் எம்பெருமான் கண்ணபிரான் ஒவ்வொரு செயலையும் எந்த அளவிற்கு முழு ஈடுபாட்டுடன் செய்தார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிறுவயதுக் குழந்தையாக இருந்தபோது தீராத விளையாட்டு பிள்ளையாக முழு ஈடுபாட்டுடன் இருந்தார். இளம்பருவத்தில் கோபிகைகளுடன் ஆடிய ஆட்டமும் ஈடுபாட்டுடன் இருந்தது. பின்னர் தூதுவனாக, சாரதியாக இருந்த காலத்திலும் முழு ஈடுபாட்டுடனன் அந்தப் பாத்திரமாகவே இருந்தார்!
நமக்கு, சிறு வயதில் தொடங்கும் அந்த அவசரப் போக்கு, சிறிது சிறிதாக மனதில் பதற்றம் மற்றும் பயத்தை வளர்க்க ஆரம்பித்து விடுகிறது. பின்னால் அதுவே வளர்ந்து, ஒரு நாள் பெரிய ஆலமரமாகி நம் மனதை நிறைத்து, நம்மை முடங்க வைத்துவிடுகிறது.
மற்றவருடன் நம்மை ஒப்பிடுவதுதான் அந்தப் பதற்றம்வர அதி முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. மருத்துவ உலகமும் அதைத்தான் கூறுகிறது.
மற்றவருடன் ஒப்பிடும் பழக்கம் நமக்குள் எப்படி உண்டாகிறது? அதற்கு முதல் காரணம் நம் பெற்றோர்களே!
பொறுப்புடன் வளர்க்கிறேன், காசின் அருமையைச் சொல்லி வளர்க்கிறேன், போட்டிகள் நிறைந்த உலகத்தில் ஈடு கொடுக்கும் தன்மையுடையவனாக இருக்கும்படி அவனை வளர்க்கிறேன் என்று தங்கள் குழைந்தைகளுக்குச் சின்ன வயதிலேயே இனம் புரியாத மன அழுத்தத்தைக் கொடுப்பது அவர்கள்தான்!
பிரகாசமாக அமைய வேண்டிய அந்தக் குழந்தையின் வாழ்க்கை ஏனோ தானோ என்று அமைந்து விடுகின்றது.
மருத்துவ துறையைச் சார்ந்த ஆராய்ச்சி அமைப்புகள் நடத்திய கணக்கெடுப்பில், பெருவாரியான மனிதர்கள் மனம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் என்பது தெரிய வந்தது.
அந்த பாதிப்பின் தாக்கம், நாளாக நாளாக மனதை மட்டும் அல்லாமல் உடல் அளவிற்கும் சென்று விடுகின்றது என்று சொல்லியுள்ளார்கள். மேலும், அவர்கள் பணியாற்றும் இடங்களும், வாழும் இடங்களும் வெவ்வேறாக இருந்தாலும், பாதிப்பு என்னவோ ஒன்றுதான் என்கிறார்கள்.
அந்த பாதிப்பானது பணம், பொருள், கல்வி, காதல், குடும்ப வாழ்க்கை என்று பாதிப்பு என்ற ஒற்றைச் சொல்லை, ஒற்றை நிலையை வெவ்வேறு பரிமாணத்தில் காட்டிக்கொண்டு இருக்கிறது.
வயல் ஒன்றில் விதைக்கப் பெறும் விதைகள் பலவகை எனில், உண்டாகும் பயிர்களும் பல வகையாகத்தான் இருக்கும். ஒரு பயிராக இருக்காது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்.
அதைத் தெரிந்தவர்கள், தங்கள் வாழ்க்கைக்கும் அந்தத் ‘தியரியைப்’ பயன் படுத்துகின்றனர். வெற்றியும் பெறுகின்றனர்.
நம்மில், அந்த உண்மையைத் தெரிந்தவர்கள்கூட குடும்பச்சூழல் முதலாக எண்ணற்ற காரண காரியம் கூறி அந்தத் தியரியைப் பயன் படுத்துவதில்லை. அனைத்து விதைகளையும் ஒன்றாக வளர்கின்றோம். அதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய மகசூல் கிடைக்காமல் போய்விடுகின்றது.
இங்கு மகசூல் என்ற பதம் சாதனைகளுக்குச் சொல்லப்படுகிறது என்பதை நினைவில் வையுங்கள்.
இந்த எடுத்துகாட்டு சகலருக்கும் பொருந்தும்.
அத்துடன் மன அளவில் அல்லது உடல் அளவில் பாதிக்கப்படவர்கள் மீண்டு வர எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான பங்கு வகிப்பது முறையான உணவு வகைகள், உடற்பயிற்சிகள், தியானம், யோகாசனம் போன்றவை.
நம்மை நாமே பக்குவபடுத்திக் கொண்டு விட்டால் மனம் மற்றும் உடல் நாம் சொன்னபடி கேட்கும். நாம் எண்ணற்ற சாதனைகளைச் செய்து பல வெற்றிகளைப் பெற முடியும்.
நமது நாட்டில், குறிப்பாக நம் தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற மேதாவிகள் உள்ளார்கள். உயர் கல்வியை முடித்துவிட்டு, படித்த படிப்பை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்று தெரிந்தும்கூட பயம் மற்றும் ஒருவகையான தாழ்வு மனப்பான்மை காரணமாக கிடைக்கும் வேலையை ஏற்றுக்கொண்டு, கைக்கும் வாய்க்குமான வருமானத்தில், தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அல்லது ஏற்றுக் கொண்டு, நாட்களை,, காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். சிலரை நான் பார்த்து வருந்தியிருக்கிறேன். அதனால்தான் இதை இங்கு கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்த போதும், பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்கள் பலர் உள்ளனர்.
சிலரை உங்களுக்காகக் கீழே அடையாளம் காட்டியுள்ளேன்.
1. மாவீரன் நெப்போலியன். காக்காய் வலிப்பு நோயுடன் போராடியவர்.
2. நவீன அறிவியல் கண்டு பிடிப்புக்கள் பலவற்றைத் தந்த மேதை தாமஸ் ஆல்வா எடிசன். காது கேளாதவர்.
Based on a true stories!.
1. Beautyful Mind - Oscar award Film John nash ( Nobel Prize Winner)
(மனநோயால் பாதிக்கப்பெற்ற ஒரு அறிஞனின் கதை)
2. My left foot. Oscar award Film
(இப்படியும் வாழ முடியுமா என்று வியக்க வைக்கும் சம்பவங்கள் நிறைந்தது)
3. Rocky Part - 1 Oscar award Film
(ஒரு குத்து சண்டை வீரர், தனது கடினமான உழைப்பின் மூலம் உலகத்தை திருப்பி பார்க்க வைத்த கதை)
4. Men of Honour - Carl Basher.
(இன வேற்றுமையால் உண்டான பாதிப்பையும், இடையில் உண்டான ஊனத்தையும் உடைத்தெறிந்து வெற்றி வாகை சூடியவனின் கதை)
5. Lorenzo Oil.
(மருத்துவ அறிவே இல்லாத தாய் தந்தையர் தங்கள் பிள்ளைக்கு ஏற்பட்ட நோய்க்கு மருந்து கண்டு பிடித்த கதை)
6. Blocck - Hindi
(வாழ்க்கை என்பது என்ன என்று இந்தப் படத்தைப் பாருங்கள் தெரியும்)
இவைகள் எல்லாம் வரலாற்றில் பதிவான சிறு துளிகளே!
"ஈரம் உள்ள இடத்த தோண்டினால் நீர் கிடைக்கும் என்று அறிந்த உங்களால், வெற்றிவாகை சூடிய உங்களைத் தோண்டிப் பார்க்காமல் இருப்பது ஏன்?
தோண்டிப்பாருங்கள், உங்களுக்குள் ஒரு சாதனையாளன் இருப்பது தெரியவரும்!
- ஆக்கம், கண்ணன் சீதாராமன், பஹ்ரெய்ன்
நமது வகுப்பறையின் எழுச்சிமிகும் மாணவர்களுள் ஒருவரும், இளைஞருமான சீதாராம கண்ணனின் எழில் மிகும் தோற்றம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++--------------------------------------------------------
2
எதை silent modeல் வைக்க முடியாது?
'அழகாய்ப் பூக்குதே சுகமாய்த் தாக்குதே
அடடா காதலைச் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையைப் பேசிட வார்த்தை மோதும்'
எரிச்சலுடன் கையை நீட்டி அலைபேசியை எடுத்தான் முரளி. தூக்கம் கலைந்த கோபம் கண்களில் தெரிந்தது. 'ச்சே படுக்கறதுக்கு முன்னாடி silent mode ல வைக்க மறந்தாச்சு'.
தெரிந்த தொலைபேசி எண்ணாக இல்லை. 'ஹலோ யாரு?'
எதிர்முனையில் ஒரு பெண் குரல் பதட்டத்துடன் பேசியது. 'டாக்டர், இந்த நேரத்தில உங்களைத் தொந்தரவு செய்யறதுக்கு மன்னிச்சுக்கோங்க. என் பையனுக்கு வீசிங் பிரச்னைக்கு உங்ககிட்டதான் ட்ரீட்மென்ட் எடுத்துக் கிட்டிருக்கேன். இன்னிக்கு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கற மாதிரி இருக்கு டாக்டர். மருந்தெல்லாம் கொடுத்துட்டேன். ஆனா கட்டுப்பட மாட்டேங்குது. ரொம்ப பயமா இருக்கு. இப்ப அழைச்சுட்டு வந்தா கொஞ்சம் பார்க்க முடியுமா டாக்டர், ப்ளீஸ்?'.
'ஒ நோ, நான் இப்ப ஊர்ல இல்லையேம்மா, நாளைக்குக் காலைலதான் வருவேன். நீங்க ஒண்ணு பண்ணுங்க. இப்போதைக்கு உங்க வீட்டுக்கு பக்கத்தில ஏதாவது ஆஸ்பத்திரி இருந்தா பையனைக் காமிங்க. நாளைக்கு கிளினிக் அழைச்சுக்கிட்டு வாங்க'.
'சரி டாக்டர்'.
'யாருங்க போன்ல இந்த நேரத்தில?'
'வேற வேலை இல்ல, இப்ப பையனை அழைச்சிக்கிட்டு வரட்டுமான்னாங்க. நான் ஊர்ல இல்லன்னு சொல்லிட்டேன்', அலைபேசியை silent mode ல் வைத்துக்கொண்டே பதில் சொன்னான் முரளி.
----------------------------------------------
காலையில் எழுந்ததுமே 'அப்பா' என்று ஓடிவந்து கழுத்தைக்கட்டிக்கொண்டான் முரளியின் 4 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் கார்த்திக்.
'என்னடா செல்லம்?'
'அப்பா, நீங்க இன்னிக்கு சாயங்காலம் foot ball வாங்கித்தரேன்னு சொன்னீங்களே ஞாபகம் இருக்கா?'
'ம்ம்ம் கண்டிப்பா. சீக்கிரமா ஸ்கூல் க்குக் கிளம்பு. பஸ் வந்துடும்'.
'சரிப்பா' குதித்துக்கொண்டே ஓடினான்.
'மைதிலி நான் கிளம்பறேன்'.
'சரிங்க'
------------------------------------------------
கிளினிக்கில் வழக்கம் போல் கூட்டம் அதிகம்.
'மாலா, இந்தா போன். ஏதாவது முக்கியமான காலா இருந்தாத்தவிர கொடுக்காதே'.
'சரி சார்'.
நேரம் ஓடியதே தெரியவில்லை.
'சார், உங்க பையன் ஸ்கூல்லேர்ந்து போன், உங்ககிட்ட பேசணுமாம்'.
'என்னவா இருக்கும்' புருவங்கள் சுருங்க போனை வாங்கினான்.
'டாக்டர் முரளி பேசறீங்களா? வணக்கம் சார், நான் கார்த்திக்கோட கிளாஸ் மிஸ் பேசறேன்'.
'சொல்லுங்க'
'சார்..... இன்னிக்கு கேம்ஸ் period ல.......... விளையாடும்போது ஒரு பையன் கார்த்திக்கத் தள்ளி விட்டுட்டான். எதிர்பார்க்காம நடந்ததால... சாரி சார்........'
முரளியிடம் பதற்றம் தொற்றிக்கொண்டது 'மேல சொல்லுங்க'.
'பதட்டப்படாதீங்க சார். விழுந்தப்போ தலைல ஒரு சின்ன கல்லு குத்தினதுலே கொஞ்சம் ரத்தம் வந்துது, அவ்வளவுதான். நான் உடனே பக்கத்துல இருக்கிற கிளினிக் அழைச்சுட்டுப்போயிட்டேன். டாக்டர் மருந்து போட்டிருக்காரு. டாக்டர் ஸ்லிப், மருந்து இரண்டுமே அவனோட ஸ்கூல் பையில வச்சுருக்கேன் சார். பஸ் டிரைவரும் அவன் வரவரைக்கும் வெயிட் பண்ணி இப்பதான் பஸ் எடுத்தாரு. எப்போதும் வர நேரத்தைவிட 15 - 20 நிமிஷம் லேட் ஆகும். பெரிசா எல்லாம் காயம் எதுவும் இல்ல சார், நீங்க பயப்படாதீங்க. தள்ளிவிட்ட பையனையும் சொல்லிப் புரிய வைச்சிருக்கேன். இனிமேல் இதுமாதிரி எதுவும் நடக்காம பார்த்துக்கறோம்' மூச்சு விடாமல் பேசி நிறுத்தினாள்.
'ரொம்ப நன்றி, பரவாயில்லை விடுங்கம்மா. பசங்களோட இதான் பெரிய தலைவலி. நல்லவேளையா பெரிசா எதுவும் இல்ல. இதுல உங்க தப்புன்னு சொல்றதுக்கு எதுவுமில்ல. உங்களுக்கும் பாவம் இதால அசௌகர்யம்'.
'அதல்லாம் ஒண்ணுமில்ல சார், டீச்சர்னு ஆனப்புறம் இதெல்லாம் எங்க கடமைதானே, சரி சார், போனை வெச்சுடறேன்.'
'சரிம்மா'
போனை வைத்து நெடுநேரம் வரை, டீச்சர் கடைசியில் சொன்னது முரளியின் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது!
மனதை silent modeல் வைக்க முடியாது இல்லையா? அந்த டீச்சர் சொன்னது மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது!
ஆக்கம்: திருமதி.எஸ்.உமா, தில்லி
___________________________________________
வாழ்க வளமுடன்!
malatha///"மருத்துவ துறையைச் சார்ந்த ஆராய்ச்சி அமைப்புகள் நடத்திய கணக்கெடுப்பில், பெருவாரியான மனிதர்கள் மனம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் என்பது தெரிய வந்தது.'///
ReplyDeleteமன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தி கீழ்பாக்கம் போன்ற
இடஙளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் அனேகம் பேர் இந்தத் திருட்டு உலகின் நடைமுறைகளை உள் வாங்கிச் சரி செய்து கொண்டு வாழத் தெரியாதவர்களே.படித்த,போதிக்கப்
பட்ட நீதிகளை, போதித்தவர்களே
மீறும் போது ஏற்படும் அதிர்ச்சி மனநோயைஉண்டாக்குகிறது.எதையும் சுலபமாக எடுத்துக் கொள்வதுவது,(take it easy policy) நெளிவு சுளிவுகளை அறிந்துகொள்வது என்பது முடியாமல் போகும்போது,"மென்டல்" என்று முத்திரை கிடைக்கிறது.
கண்ணன் அவர்களே! எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.ஒவ்வொரு சொல்லையும் சிந்தித்து, தெரிவு செய்து எழுதியுள்ளீர்கள்.உங்கள் எழுத்துப் பணி மேலும் சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
நான் எதெல்லாம் படிக்கக் கிடைக்கிற்தோ அதையெல்லாம் கருத்தூன்றிப் படிப்பேன். அதுவும் வாத்தியாரின் இந்த வகுப்பறையைத் திறந்து வாசிப்பதையே முதல் பணியாக வைத்துக் கொண்டுவிட்டேன்.
ReplyDeleteகாப்பியெல்லாம் சாப்பிடுவதற்கு முன்னாலேயே, மாமி படுக்கையைவிட்டு எழுவதற்கு முன்பே, கணினி முன் ஆஜர்ர் ஆகி விடுவேன்.
இளைஞர்கள் எழுதியுள்ளார்கள் என்றால் இன்னும் கவனத்தோடு படிப்பேன். "எதைச் செய்தாலும் ஈடுபாட்டுடன் செய்யுங்கள்" என்று முந்திய பதிவில் கண்ணனால் சொல்லப் பட்டதை என்னால் முடிந்தவரை நடைமுறைப் படுத்தப் பார்க்கிறேன்.பின்னூட்டம் இடும்போது ஜாக்கிரதை உணர்வோடும், ஆக்கத்தைக் கொடுதவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்படி எழுத வேண்டும் என்று முயல்வேன்."இதையெல்லாம் நான் கண்டுக்கிற்தில்லை.இந்த மாதிரி செய்தியெல்லாம் சுத்த வேஸ்ட்" என்ற தோரணையில் பின்னூட்டம் எழுதுவதைத் தவிர்ப்பேன்.
டெல்லி உமா அவர்களே! வூடு, ஒய்ஜாப்பலகை, பூத் பங்களா ஆகியவற்றிலிருந்து வெளியேறி, நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை எடுத்து சிறு கதை எழுதியதற்குப் பாராட்டுக்கள்.நவீன சிறு கதை இலக்கியத்தில் கதை கூறும் நீதி நேரடியாகச் சொல்லப்படாமல், வாசகனின் யூகத்திற்கே விட்டு விடுவது என்பது கடைப்பிடிக்கப்படுகிறது.அதனை நன்கு அறிந்து, எளிமையாக மருத்துவர் முரளிக்குப் புரிய வைக்க முயற்சி செய்துள்ளீர்கள்.அவர் புரிந்து கொண்டால் சரி!
நாங்கள் வளர்ந்த காலத்தில் குடும்ப டாக்டர் முறை இருந்தது. டாக்டர்கள் வீடுகளுக்கு வந்து வைத்தியம் செய்வது என்பது சகஜமாக இருந்தது.1970க்குப் பிறகு தான் டாக்டர்கள் பேசி வைத்துக்கொண்டு பாலி கிளினிக்கில் சேர்ந்தால்தான் பார்ப்பது என்று முடிவு எடுத்து விட்டார்கள். தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பலவித பரிசோதனை, ஸ்கேன்
போன்றவற்றை அமுல் படுத்தினார்கள்.மருத்துவக் காப்பீடு
(இன்ஸுரனஸ்) பெரிய அட்சய பாத்திரமாக மருத்துவத் துறைக்குக் கிடைத்துவிட்டது.முன் பதிவு செய்யாமல் எப்ப்டி ரயில் பயணம் இல்லையோ அதுபோல காப்பீடு இல்லாத ஏழை,தனியார் மருத்துவ மனைக்கே செல்லமுடியாது. அரசு மருத்துவமனை டாக்டர்களே தனியாகவும் வைத்தியம் செய்ய அனுமதிப்பதால் அரசு சேவையை ஏனோதானோ என்று பார்க்கும் நிலை.
"என்னத்தைச் சொல்வேண்டா தம்பி என்னத்தைச் சொல்வேண்டா!"
"சரிதான்போ!(take it easy!take it casually!) என்கிறீர்களா உமா மேடம்?
கண்ணன் Sir அப்படி இருக்காதே என்கிறாரே!யார் பேச்சை நான் கேட்ப்பது.
என் மனநலம் பாதிக்குமோ!?
நான் எதெல்லாம் படிக்கக் கிடைக்கிற்தோ அதையெல்லாம் கருத்தூன்றிப் படிப்பேன். அதுவும் வாத்தியாரின் இந்த வகுப்பறையைத் திறந்து வாசிப்பதையே முதல் பணியாக வைத்துக் கொண்டுவிட்டேன்.
ReplyDeleteகாப்பியெல்லாம் சாப்பிடுவதற்கு முன்னாலேயே, மாமி படுக்கையைவிட்டு எழுவதற்கு முன்பே, கணினி முன் ஆஜர்ர் ஆகி விடுவேன்.
இளைஞர்கள் எழுதியுள்ளார்கள் என்றால் இன்னும் கவனத்தோடு படிப்பேன். "எதைச் செய்தாலும் ஈடுபாட்டுடன் செய்யுங்கள்" என்று முந்திய பதிவில் கண்ணனால் சொல்லப் பட்டதை என்னால் முடிந்தவரை நடைமுறைப் படுத்தப் பார்க்கிறேன்.பின்னூட்டம் இடும்போது ஜாக்கிரதை உணர்வோடும், ஆக்கத்தைக் கொடுதவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்படி எழுத வேண்டும் என்று முயல்வேன்."இதையெல்லாம் நான் கண்டுக்கிற்தில்லை.இந்த மாதிரி செய்தியெல்லாம் சுத்த வேஸ்ட்" என்ற தோரணையில் பின்னூட்டம் எழுதுவதைத் தவிர்ப்பேன்.
டெல்லி உமா அவர்களே! வூடு, ஒய்ஜாப்பலகை, பூத் பங்களா ஆகியவற்றிலிருந்து வெளியேறி, நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை எடுத்து சிறு கதை எழுதியதற்குப் பாராட்டுக்கள்.நவீன சிறு கதை இலக்கியத்தில் கதை கூறும் நீதி நேரடியாகச் சொல்லப்படாமல், வாசகனின் யூகத்திற்கே விட்டு விடுவது என்பது கடைப்பிடிக்கப்படுகிறது.அதனை நன்கு அறிந்து, எளிமையாக மருத்துவர் முரளிக்குப் புரிய வைக்க முயற்சி செய்துள்ளீர்கள்.அவர் புரிந்து கொண்டால் சரி!
நாங்கள் வளர்ந்த காலத்தில் குடும்ப டாக்டர் முறை இருந்தது. டாக்டர்கள் வீடுகளுக்கு வந்து வைத்தியம் செய்வது என்பது சகஜமாக இருந்தது.1970க்குப் பிறகு தான் டாக்டர்கள் பேசி வைத்துக்கொண்டு பாலி கிளினிக்கில் சேர்ந்தால்தான் பார்ப்பது என்று முடிவு எடுத்து விட்டார்கள். தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பலவித பரிசோதனை, ஸ்கேன்
போன்றவற்றை அமுல் படுத்தினார்கள்.மருத்துவக் காப்பீடு( இன்ஸுரனஸ்) பெரிய அட்சய பாத்திரமாக மருத்துவத் துறைக்குக் கிடைத்துவிட்டது.முன் பதிவு செய்யாமல் எப்ப்டி ரயில் பயணம் இல்லையோ அதுபோல காப்பீடு இல்லாத ஏழை,தனியார் மருத்துவ மனைக்கே செல்லமுடியாது. அரசு மருத்துவமனை டாக்டர்களே தனியாகவும் வைத்தியம் செய்ய அனுமதிப்பதால் அரசு சேவையை ஏனோதானோ என்று பார்க்கும் நிலை.
"என்னத்தைச் சொல்வேண்டா தம்பி என்னத்தைச் சொல்வேண்டா!"
"சரிதான்! TAKE IT EASY, TAKE IT CASUALLY!" என்கிறீர்களா உமா மேடம்?
கண்ணன் அப்படி இருக்காதே என்கிறாரே!யார் பேச்சை நான் கேட்ப்பது.
என் மனநலம் பாதிக்குமோ!?
உள்ளேன் ஐயா
ReplyDeleteஉயர் திருவாளர் முத்துராமக்ரிஷ்ணன்
ஐயாவிற்கு
" முன்னுக்கு வாடா கண்ணா!" என்று
ஆறுதல் தேறுதல் அறைவனைத்தல் கூறி முன்னுக்கு கொண்டு வரும் வாத்தியார் அல்லவா நீங்கள் தங்களுக்கு முதற்கண் வணக்கம்.
உள்ளேன் ஐயா
ReplyDeleteஅன்பு சகோதரி உமாவிற்கு
கடந்த 10 ம் தேதிதான்
"பாசமலர்!" திரைப்படத்தினை பற்றி வகுப்பில் கூறி இருந்தேன். வாத்தியார் ஐயா நெஞ்சில் என்றும் நீங்காது நிலைத்து இருக்கும் படத்தினை பற்றி கூறும் அளவிற்கு பாடம் தந்து இருந்தார் . ஆனால் இன்றோ அதனையும் முறியடித்து விட்டார்கள். நமது இருவரின் படைப்பையும் ஒன்று போல இடம் பெற செய்து உண்மையிலே
"பாசமலர்!"
சகோதர சகோதரியாக
ஆக்கிவிட்டார்கள்.
இந்த படைப்பை உருவாக்க காரணமாக இருந்த "பாசமலர்!" சகோதரி உமாவிற்கு அன்பான பாராட்டுகள்.
வணக்கம் ஐயா
ReplyDeleteஎதார்த்ததை கூட எளிமையாக எப்படி கூற முடியும் என்பதனை கூறி உள்ள சகோதரி உமாவிற்கு உள்ளம் கனிந்த பாராட்டுகள்
///இங்கு மகசூல் என்ற பதம் சாதனைகளுக்குச் சொல்லப்படுகிறது என்பதை நினைவில் வையுங்கள்/////
ReplyDeleteவாத்தியார் ஐயாவின் நடையாக இருக்கிறதே... அவரின் கட்டுரையோ என்றே எண்ணிக்கொண்டு மேலேப் படித்தேன்.....
/////வயல் ஒன்றில் விதைக்கப் பெறும் விதைகள் பலவகை எனில், உண்டாகும் பயிர்களும் பல வகையாகத்தான் இருக்கும். ஒரு பயிராக இருக்காது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்.//////
ReplyDeleteமிகப் பெரிய தத்துவக் கருத்தை மிகவும் எளிமையாகச் சொல்லி விட்டீர்கள்..... அற்புதம்...அருமை....
மண்ணும், நீரும்... காற்றும்..... ஒரேமாதிரி கொடுத்தாலும்.... திணை தென்னையாகவோ.... தென்னை பனையாகவோ முடியாது....
வாழ்த்துக்கள் கண்ணன்...
//////'அதல்லாம் ஒண்ணுமில்ல சார், டீச்சர்னு ஆனப்புறம் இதெல்லாம் எங்க கடமைதானே, சரி சார், போனை வெச்சுடறேன்.'//////
ReplyDeleteகடமை உணர்வை தோண்ட வைத்த கன்னி வெடி.....
உடல் ஆன்மாவை கட்டுப் படுத்துவதின் அவலம் தான் அந்த மருத்துவரின் செய்கையாக இருந்திருக்கிறது....
கூர்ந்து கவனித்ததால் புத்தி வந்தது....
சும்மாச் சொல்லக்கூடாது... அற்புதக் கருத்து அருமையானக் கதை.... ஒருதுளி என்றாலும் தேனாய் இனித்தது... வாழ்த்துக்கள் உமா...
தன்னம்பிக்கை ஊட்டும் கண்ணனின் கட்டுரைக்கும், சகோதரி உமாவின் கதைக்கும் நன்றி.
ReplyDelete--செங்கோவி
உலகக் கடவுள் முருகன்
புது தில்லி திருமதி உமாவின் சிறுகதை நன்று. நல்ல நீதியைச் சொல்லும் கதை. பாரதி சொன்னது போல "ஊருக்குழைத்திடல் யோகம்" மற்றும் "மற்றவர் துன்பத்தைக் காணப் பொறாதவன் புண்ணியமூர்த்தி" இவையிரண்டும் வாழ்வில் கடைப்பிடித்தால் பல இன்னல்கள் தீரும். திருமதி உமா தொடர்ந்து எழுதலாம். ஆனால் நான் சொல்லப்போகும் கருத்துக்களுக்காக வருத்தப்படக்கூடாது. என் கருத்து: இப்போதெல்லாம் தமிழர்கள் தமிழில் பேசுவதில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டால்கூட அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் தமிழில் பேசுவதாக எண்ணிக் கொண்டு திடீரென்று ஆங்கிலத்தில் உரையாற்றத் தொடங்கி விடுகிறார்கள். அது அவர்களது ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தலாமே தவிர, தமிழனின் மனங்களைப் புண்படுத்துவதாகிறது. திருமதி உமாவின் கதையில் மொத்தம் நாற்பத்தி ஒன்பது ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவது என்பது பயன்பாட்டுக்கு ஏற்றது என்றாலும் கூட, தவிர்க்கக்கூடிய இடங்களில் தவிர்ப்பதுதான் தமிழ் மொழி உயிர்ப்போடு இருக்க இயலும். நான் தனித்தமிழில்தான் எழுத அல்லது பேச வேண்டுமென்று சொல்லவில்லை. எனினும் தவிர்க்கக்கூடிய இடங்களில் தவிர்த்து தமிழ் இளம் தளிரை கிள்ளி எறியாமல் பார்த்துக் கொள்ளலாம் என்கிறேன். குற்றம் காண்பது என் நோக்கம் அல்ல. தமிழ் சீரழிவதைக் காண சகிக்காமல் எழுதினேன். இதற்குப் பலர் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கலாம். அவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்தும் என் கொள்கையில் நான் பிடிவாதமாக இருக்கிறேன் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteசார், கதையை வலையேற்றியதற்கு நன்றி.
ReplyDeleteஇரண்டு மாணவக் கண்மணிகள் வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள்.//
இதற்கும் நன்றி.
//மனதை silent modeல் வைக்க முடியாது இல்லையா? அந்த டீச்சர் சொன்னது மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது!//
ஹி ஹி இதுவும் நல்லா இருக்கு. எனக்கு ஏன் இது மாதிரி தோணலை?
இன்னொரு விஷயம் சார். நீங்க குடுக்கிற தலைப்பு எல்லாமே சூப்பர். நானும் தலைப்பு யோசிச்சு யோசிச்சுப் பார்த்துட்டு சொதப்ப வேண்டாமேன்னு அப்படியே அனுப்பிட்டேன்.
ReplyDeleteகண்ணன் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரவும்.
ReplyDeleteஒவ்வொருவரும் அவசரம் என்னும் தவிர்க்க முடியாத நோயால் பாதிக்க படுகின்றார்கள். //
இது உண்மைதான். அதுவும் இந்த தலைநகர வாழ்க்கை (2 பேரும் வேலைக்குப் போவதால்) சில சமயம் சலிப்புத் தட்டுவது என்னவோ உண்மை.
எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்//
ReplyDeleteஎல்லா வேலையையும் அப்படிச் செய்வதுதான் வழக்கம்.
கிருஷ்ணன் சார், தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
ReplyDelete"சரிதான்போ!(take it easy!take it casually!) என்கிறீர்களா உமா மேடம்?//
நிறைய விஷயங்களை அப்படி எடுத்துக்கொள்வதுதான் நல்லது. இன்னும் சொன்னால் என்னை மீறிப் போகும் விஷயங்களை 'தலைவிதி' என்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
என் பையனும் ஒரு தேர்ச்சி இல்லாத மருத்துவரால் பாதிக்கப்பட்ட அனுபவம் இருக்கிறது. அதைப் பற்றி விவரமாக பிறகு எழுதுகிறேன்.
நல்ல மருத்துவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
உண்மையிலே "பாசமலர்!" சகோதர சகோதரியாக
ReplyDeleteஆக்கிவிட்டார்கள். //
கண்ணன், என்னை சகோதரியாக நினைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.
எதார்த்ததை கூட எளிமையாக எப்படி கூற முடியும்//
ReplyDeleteகண்ணன், தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றிகள்.
ஒருதுளி என்றாலும் தேனாய் இனித்தது... வாழ்த்துக்கள் உமா...//
ReplyDeleteஆலாசியம் உங்களின் பாராட்டுக்கு மனம் உவந்த நன்றிகள் பல.
செங்கோவி தங்களின் பாராட்டுக்கு நன்றி.
ReplyDeleteகோபாலன் மாமா, போன முறை எழுதியபோதே உங்கள் பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
ReplyDeleteஉங்களின் அத்தனை கருத்துக்களோடும் உடன்படுகிறேன். மாற்றுக்கருத்து ஏதுமில்லை. நானும் முடிந்தவரை தமிழ்ப்படுத்தியே எழுதினேன். (எ.கா. செல்போன் - அலைபேசி). நீங்கள் எழுதியபின் திரும்ப ஒருமுறை படித்தபோது இன்னும் குறைத்திருக்கலாமோ என்று எனக்கும் தோன்றியது. முதலில் நான் எழுதிய 3 ஆக்கங்களிலும் நீங்கள் கவனித்தால் அவ்வளவாக ஆங்கிலம் கலக்கவில்லை. இனிமேல் இன்னும் கவனம் எடுத்து எழுதுகிறேன். உங்களின் என்னைப்பற்றிய புரிதலுக்காக மேலும் சில விஷயங்கள்:
எனக்குத் தமிழில் படிக்கும்போது இருக்கும் ஆர்வம் / ஈர்ப்பு வேறு எந்த மொழிப் புத்தகங்களைப் படிக்கும்போதும் இருப்பதில்லை என்ற காரணத்தாலேயே அவைகளைப் படிப்பதில்லை. பேசும்போதும்கூட ஆங்கிலம் கலக்காமல்தான் பேசுவேன்.
ReplyDeleteஎன் குழந்தைகளை எதற்கும் கட்டாயப்படுத்துவதில்லை ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அது வீட்டில் அவர்கள் தமிழ் மட்டுமே பேசவேண்டும் என்பதுதான். என் பையனும் பெண்ணும் திடீரென்று பள்ளியில் பேசும் நினைவில் ஹிந்திக்குத் தாவும்போது அதிகம் திட்டு வாங்குவதும் இதற்குத்தான்.
இன்னும் எழுத நிறைய இருக்கிறது. பிறகு எழுதுகிறேன்.
நன்றி உமா. உங்களைக் காயப்படுத்துவது எனது நோக்கமல்ல. இந்த நூற்றாண்டின் இறுதியில் சுமார் 25 உலக மொழிகள் வழக்கொழிந்து போகும் என்பது ஐக்கியநாடு அமைப்பின் ஒரு அங்கம் சொல்கிற செய்தி. அதில் தமிழும் அடங்கும் எனும்போது நெஞ்சு கொதிக்கிறது. தொன்மையான தமிழ், அதற்கு இந்தக் கதியா அதற்கு யார் காரணம். தொலைக்காட்சிகளில் திரைப்பட நடிகைகள் பேசும் மொழி, ஒருங்கிணைப்பாளர் பேசும் மொழி, பங்குபெறுவோர் பேசும் மொழி இவற்றால் ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது. ஆங்கில விரோதியல்ல நான், ஆனால் என் தாய்மொழி மீது பற்று அதிகம். தஞ்சாவூர் கலைகளுக்கு, கலாச்சாரத்திற்கு, மொழிப்பற்றுக்கு பெயர் பெற்ற ஊர் அல்லவா? ஆகையால் உங்களிடம் இவ்வளவு ஆங்கில கலப்பினை நான் எதிர்பார்க்கவில்லை. சரி! சில நேரங்களில் ஆங்கில கலப்பு தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. சிறிது முயன்றால் நம்மால் முடியும். "சைக்கிளில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் ஏ.சி. டூ டயரில் இரண்டு பெர்த் ரிசர்வ் செய்துவிட்டு எனக்கு டெலிபோன் செய்" என்று ஒருவர் சொல்கிறார். இதை அப்படியே தமிழ்ப்படுத்தினால் சிறிது சிரமம் ஏற்படும். என்ன செய்வது. முயற்சி செய்வோம். என் ஆலோசனையை அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. வாழ்க!
ReplyDeleteKMRK அண்ட் ஆலாசியம் அவர்களின் கமெண்ட்டுகளை ரிபீட் வுட்டுக்குறேன்..
ReplyDelete//"உங்களின் அத்தனை கருத்துக்களோடும் உடன்படுகிறேன்."//
ReplyDeleteஅம்மாடி! கோபாலன் சார்! உஙளுக்கு நல்ல் ராசியும்; நேரமும் கூட!
பாராட்டுக்கள்.
முயற்சி செய்வோம். என் ஆலோசனையை அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு நன்றி//
ReplyDeleteநீங்கள் கூறியது அனைத்துமே சாத்தியப்படும் விஷயம்தான். கண்டிப்பாக இனி அதிக கவனம் எடுத்துக்கொள்கிறேன்.
அவர் நிறைய எழுதியிருந்தாரே அதுலேர்ந்து எதுக்கு ரிபீட்டு விட்டிருக்கீங்கன்னு சொன்னீங்கன்னா நன்னாயிருக்கும்.
ReplyDeleteஆலாசியத்தின் கருத்துக்கு நீங்க ரிபீட்டு விட்டதுக்கு அவருக்கு நான் எழுதின பதிலை நானும் ரிபீட்டிக்கிறேன்.
ReplyDeleteஉங்க வழக்கமான கமெண்ட் பாணிக்குத் திரும்புங்கோ. இந்த ரிபீட்டறது ரொம்ப போரடிக்குது.
ReplyDeleteஅம்மாடி! கோபாலன் சார்! உஙளுக்கு நல்ல் ராசியும்; நேரமும் கூட!//
ReplyDeleteஅப்படின்னா என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?