24.11.10

ஆடிய கால்களும், பாடிய வாயும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆடிய கால்களும், பாடிய வாயும்!

நடனம் ஆடிப் பழகிய கால்களும், சங்கீதத்தைப் பாடிப் பழகிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்.

அதுபோல எழுதிப் பழகிய கையும் சும்மா இருக்காது.

கடந்த 10 நாட்களாக பாடங்கள் எதையும் எழுதவில்லை. அதற்கான சூழ்நிலை என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

“பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா”


என்று மனிதனின் மனநிலையை கவிதை வரிகளில் அழகுறச் சொன்னவர் கவியரசர் கண்ணதாசன்.

இன்று பாதி என்ற அளவில்லாமல் முழு மனதிலும் மிருக உணர்வுகளுடன் அலைபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். என்ன செய்வது கலி முற்றிக்கொண்டிருக்கிறது. பகவான் தன்னுடைய பத்தாவது அவதாரத்தை மேற்கொண்டால் மட்டுமே இந்த நிலை மாறும். அதுவரை நல்லவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதே அவர்களுக்கு நல்லது.

வழியில் குறுக்கிடும் நான்கு கால் பிராணிகளால் நம் பயணம் தடைப்படக் கூடாது.

பயனர் பெயர், கடவுச்சொல் வசதி, எழுத்துக்களைப் பிரதி எடுப்பதைத் தடுக்கும் வசதி, மற்றும் முழுக் காப்புரிமையுடன் நம் வகுப்பறைக் கென்று இணையதளம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பணி நல்ல முறையில் முடிவடைய வேண்டும். ஆண்டவனைப் பிரார்த்திப்போம். பிரார்த்தியுங்கள்

கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுதுவதால் வலைப்பதிவு எனக்கு வசப்பட்டுள்ளது. இணைய தள செயல்பாடுகளும் எனக்கு வசப்பட வேண்டும். அது ஒரே நாளில் ஆகின்ற செயல் அல்ல!. பத்து அல்லது பதினைந்து தினங்கள் பயிற்சி மேற்கொள்ள நேரலாம்.

அகவே தை மாதம் ஒரு நன்னாளில் இணையதளம் உங்கள் பயன்பாட்டிற்கு வரும்.

இங்கே வலைப் பதிவில் எழுதுவதும் தொடரும். இதில் என்ன எழுதுவது, அதில் என்ன எழுதுவது என்பதை நான் முடிவு செய்து வைத்திருக்கிறேன். இரண்டுமே வழக்கம்போல படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாகவும் சுவாரசி யமாகவும் இருக்கும். அதற்கு 100% கியாரண்டியை நான் தருகிறேன்.

உண்மையிலேயே ஜோதிடத்தின் மீது மதிப்பும், ஆர்வமும், கற்றுக் கொள்ள முனைப்பும் உள்ளவர்கள் மட்டும் இணையத்தில் சேரலாம். மற்றவர்கள். இதில் - அதாவது இந்த வலைப் பதிவில் எழுதுவதை மட்டும் படித்தால் போதும். இதுவரை எழுதியுள்ள பாடங்களைப் படித்தால் மட்டும் போதும்.

இணையதளம் பயன்பாட்டிற்கு வரும்வரை பாடங்கள் மின்னஞ்சல் மூலமாக நடத்தப்படும். மின்னஞ்சலில் எழுதப்படுபவைகள் அனைத்தும், இணையதளம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் அதில் சேர்க்கப்படும்.

மின்னஞ்சல் வகுப்பில் குறைந்த அளவு எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பழைய (சீனியர்)  மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறுகிய காலம் மட்டுமே நடக்க இருப்பது என்றாலும், அதற்குச் சில விதிமுறைகள் உண்டு.

சேரவிருப்பமுள்ளவர்களும், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறேன் என்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

மற்ற அனைவரும் பொறுத்திருங்கள். தை மாதம் இணையதளம் துவங்கியவுடன் அனைவருக்கும் அதில் சேரும் வாய்ப்பு அளிக்கப்படும். தொடர்ந்து பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

46 comments:

  1. நல்லது அய்யா!இன்னும் 2,3 வகையில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக எந்த முடிவு எடுத்தாலும் எல்லாவற்றிற்கும் என் ஆதரவு உண்டு.இணைய தளத்திலும் என‌க்குத் துண்டு போட்டு என் இடத்தினை ரெஸர்வ் செய்துவிட்டேன்.மின்னஞ்சல் வகுப்பிலும் அடியேன் பெயர் ஒரு பக்கத்தில்
    இருக்கட்டும்

    ReplyDelete
  2. இனிய வாழ்த்து(க்)கள்.

    முயற்சி வெற்றி அடையும்.

    ReplyDelete
  3. ஆலோசனைகள்
    அங்கே (மின் அஞ்சலில்) அனுப்பப்பட்டுள்ளது

    அதுவும் ... (?)
    என்பதினால் . .

    உங்கள் வகுப்பறையில் தொடர்ந்து மாணவராக விரும்பும் விசு..

    வகுப்பறை கட்டணத்தை அடுத்த சில நாட்களில் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விடுகிறேன்..

    இனி ..
    அந்த (குளிர் ஊட்டப்பட்ட) வகுப்பறையில் சந்திப்போம்

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    வெளியூர்ப் பயணம் மேற்கொண்ட பின்பு 13-11-2010 அன்று தான் வீட்டுக்கு வந்தேன். அன்று முதல்
    தங்களின் பதிவுகளைப் பார்க்க, படிக்க இயலவில்லை.உபயோகிக்காமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு கணினி பயன் படுத்தியதால் மழையின் காரணமாக சரிவர இயங்க வில்லை.
    தற்போது தான் சரி செய்த பின்பு தங்களின் பதிவுகளைப் படிக்க முடிந்தது.
    மனதிற்கு மிக மிக வேதனைத்தரக்கூடிய சம்பவங்கள் நடந்துள்ளது கண்டு வருத்தமாக உள்ளது.
    இருப்பினும் நடப்பவை யாவும் நன்மைக்காகவே என்ற முடிவோடு தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளும் சீரும் சிறப்போடும் நடைபெறுவதற்கும்,
    /////பயனர் பெயர், கடவுச்சொல் வசதி, எழுத்துக்களைப் பிரதி எடுப்பதைத் தடுக்கும் வசதி, மற்றும் முழுக் காப்புரிமையுடன் நம் வகுப்பறைக் கென்று இணையதளம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பணி நல்ல முறையில் முடிவடைய வேண்டும்./////
    என்பதற்கும் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
    வணக்கம்.
    தங்களன்புள்ள
    வ.தட்சணாமூர்த்தி
    2010-11-24

    ReplyDelete
  5. i was expecting this move very long back, However,not too late.

    Holding seperate domain name, Monthly hosting charges, Operation aspects - loading all these lessons as HTML pages, Organising 3-4 Years work,This is Magnaopus task. Looking the big picture of this project and its magnitude and public Seva our subbiah vathiyaar is doing ..

    I am willing to contribute small amount, என்னால் முடிந்தது as token of respect, for this noble project , எப்படி வேண்டுமானலும் வைத்துக்கெள்ளலாம், since i personally been in this place since 2 and half years on daily basis, i wish to do so, i really dont know our vathiyaar will accept it.

    ReplyDelete
  6. மிக நன்றி அய்யா,

    பழனியப்பனின் அருள் நமக்குக் கிடைக்கட்டும். மறுபடி கலகலப்பான வகுப்பறை வாத்தியாரையும், தங்களின் தனித் தமிழுடன் கூடிய சோதிடப் பாடங்களையும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. //////sanjay said...
    ஐயா,
    "வகுப்பறை" இணையதளத்தில் உறுப்பினராக வேண்டுமென்றால், தாம் என்னென்ன தகவல்கள் தந்து பதிவு செய்ய வேண்டும் அல்லது தங்களுக்கு அவர்களிடமிருந்து என்னென்ன தகவல்கள் பெறவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதன் பட்டியலை எனக்கு மின்னஞ்சலில் அணுப்பவேண்டுகிறேன்/////

    ஐயா,
    இங்கு குறிபிட்டுள்ள‌ பின்னூட்டத்திற்கு இன்னும் தங்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. நான் இதுவரை தங்களுடைய மின்னஞ்ச‌லுக்கு அனுப்பிய 'வகுப்பறையின் இணையதள வடிவமைப்பின்' ஆக்கங்கள் அமைப்பாக உள்ளதா இல்லை மாற்றம் எதுவும் தேவைப்படுகிறதா என்பதை பற்றி நீங்கள் ஒன்றுமே கூறவில்லையே ?! சற்று தெரிவித்தால் அப்பணியை மேல்தொடர வசதியாக இருக்கும்.

    அன்புடன்
    சஞ்சய் ராமநாதன்
    77087 77047
    sparsanjay@gmail.com

    ReplyDelete
  8. ஐயா,
    நடப்பது எல்லாம் நன்மைக்கே என்பதுபோல், நமது வகுப்பறை அடுத்த கட்டத்தை எட்டும் காலம் வந்துவிட்டது, வகுப்பறை இணையம் நல்ல படியாக ஆரம்பிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன், மிக்க நன்றி.

    ReplyDelete
  9. All the best sir for new web site.

    Everthying will be good for good persons like you and you will be supported by all good people in all your deeds.

    Kindly advice so that i can seemlessly follow your lessons.

    Regards

    N.SENTHIL KUMAR.

    ReplyDelete
  10. Dear sir,
    If a husband & wife plan to produce and give birth for a new baby, what important thing should be followed.(Like which dasa or bukti or month, etc.,will be favourable for them).

    KINDLY TELL.
    REGARDS.

    ReplyDelete
  11. Dear Sir

    Thanks Sir... We are waiting Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  12. அன்புள்ள ஆசிரியர் ஐயா! ஜோசியப் பாடத்தில் முதல் வகுப்பைக்கூட தாண்டாத என்னால் நீங்கள் தொடங்க இருக்கும் பட்ட மேற்படிப்பு இணைய தளத்தை எட்டிப் பார்க்கும் தகுதிகூட இல்லை என்பதால், நான் தங்கள் வகுப்பறையில் இருந்து கொண்டு பழைய பாடங்களை ஓரளவு புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். மற்ற கட்டுரைகளையும் படித்து பங்கு பெறுகிறேன். நன்றி. தங்கள், தஞ்சாவூரான்.

    ReplyDelete
  13. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    அஷ்டவர்கப்பாடங்களை முழுவதுமாக தெரிந்து கொள்வதற்குள் யாருடைய‌
    கண் பட்டதோ பாடங்கள் பாதியிலே நின்று போனது மிகவும் வருத்தமாக உள்ளது. மீண்டும் பாடங்கள் தொடரும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
    வணக்கம்.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  14. அன்புடன் வணக்கம் ////////அன்புள்ள ஆசிரியர் ஐயா! ஜோசியப் பாடத்தில் முதல் வகுப்பைக்கூட தாண்டாத என்னால் நீங்கள் தொடங்க இருக்கும் பட்ட மேற்படிப்பு இணைய தளத்தை எட்டிப் பார்க்கும் தகுதிகூட இல்லை என்பதால், நான் தங்கள் வகுப்பறையில் இருந்து கொண்டு பழைய பாடங்களை ஓரளவு புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். மற்ற கட்டுரைகளையும் படித்து பங்கு பெறுகிறேன். நன்றி/////.இனைய தளத்திற்கு எனது பெயர் பதிவுக்கு கட்டண விபரம் தகவல் தெரிவித்து விடுங்கள் தயவு செய்து. நன்றி

    ReplyDelete
  15. தங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. துணிந்து தொடருங்கள்.

    வேண்டாம் என்று பார்த்தேன் சொல்லாமல் இருக்க முடியவில்லை. தங்களுக்கு 6ம் இடமும் அதன் அதிபதியும் பலவீனமாக இருக்கிறார்கள் போலும். அதனால்தான் நிறைய தொல்லைகள், எதிர்ப்புகள் ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கிறது. இறையருள் இருந்தால் (தங்களுக்கு இருக்கும்) எதுவும் ஓரளவுக்கு மேல் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்த வகையில் தங்களுக்கு ஓடி வந்து உதவ பலர் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  16. Dear Sir,

    All the best for the new website, Waiting eagerly to read your posts,

    ReplyDelete
  17. சார் மின்னஞ்சல் வகுப்பிலும், இணைய தளத்திலும் தொடர்ந்து மாணவராக என்னை சேர்க்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். விதிமுறைகளுக்கு கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன். கடந்த 1 1/2 ஆண்டுகளாக பதிவில் உறுப்பினராக உள்ளேன். 2007 December முதல் வாசகன். அஷ்டகவர்க்க பாடங்களுக்கு பல ஜாதகங்களை பயிற்சி செய்து பார்த்தவன்.

    ReplyDelete
  18. Dear Sir,

    Long time I have not commented, but I am continiously reading ur blog....

    Nice to know about website. Goodluck.

    -Shankar

    ReplyDelete
  19. ஐயா,
    மின்னஞ்சல் வகுப்பில் சேர இ-மெயில் அனுப்பியுள்ளேன். நன்றி.

    அன்புடன்
    செங்கோவி

    ReplyDelete
  20. Sir,

    Very good decision. Pls continue this wonderful service for your loving students like us.

    ReplyDelete
  21. //////kmr.krishnan said...
    நல்லது அய்யா!இன்னும் 2,3 வகையில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக எந்த முடிவு எடுத்தாலும் எல்லாவற்றிற்கும் என் ஆதரவு உண்டு.இணைய தளத்திலும் என‌க்குத் துண்டு போட்டு என் இடத்தினை ரெஸர்வ் செய்துவிட்டேன்.மின்னஞ்சல் வகுப்பிலும் அடியேன் பெயர் ஒரு பக்கத்தில்
    இருக்கட்டும்/////

    உங்களுக்கு முதல் பெஞ்சில் இடம் உண்டு. நானே போட்டுவைத்திருக்கிறேன்!

    ReplyDelete
  22. ////துளசி கோபால் said...
    இனிய வாழ்த்து(க்)கள்.
    முயற்சி வெற்றி அடையும்./////

    உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி துளசி டீச்சர்!

    ReplyDelete
  23. /////iyer said...
    ஆலோசனைகள்
    அங்கே (மின் அஞ்சலில்) அனுப்பப்பட்டுள்ளது
    அதுவும் ... (?)
    என்பதினால் .
    உங்கள் வகுப்பறையில் தொடர்ந்து மாணவராக விரும்பும் விசு..
    வகுப்பறை கட்டணத்தை அடுத்த சில நாட்களில் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விடுகிறேன்..
    இனி ..
    அந்த (குளிர் ஊட்டப்பட்ட) வகுப்பறையில் சந்திப்போம்//////

    குளிரூட்டப்பட்ட அறையெல்லாம் கிடையது சுவாமி. பாடங்கள் மனதைக் குளிரவைக்கும். அது மட்டுமே சாத்தியம்!

    ReplyDelete
  24. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    வெளியூர்ப் பயணம் மேற்கொண்ட பின்பு 13-11-2010 அன்று தான் வீட்டுக்கு வந்தேன். அன்று முதல்
    தங்களின் பதிவுகளைப் பார்க்க, படிக்க இயலவில்லை.உபயோகிக்காமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு கணினி பயன் படுத்தியதால் மழையின் காரணமாக சரிவர இயங்க வில்லை.
    தற்போது தான் சரி செய்த பின்பு தங்களின் பதிவுகளைப் படிக்க முடிந்தது.
    மனதிற்கு மிக மிக வேதனைத்தரக்கூடிய சம்பவங்கள் நடந்துள்ளது கண்டு வருத்தமாக உள்ளது.
    இருப்பினும் நடப்பவை யாவும் நன்மைக்காகவே என்ற முடிவோடு தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளும் சீரும் சிறப்போடும் நடைபெறுவதற்கும்,
    /////பயனர் பெயர், கடவுச்சொல் வசதி, எழுத்துக்களைப் பிரதி எடுப்பதைத் தடுக்கும் வசதி, மற்றும் முழுக் காப்புரிமையுடன் நம் வகுப்பறைக் கென்று இணையதளம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பணி நல்ல முறையில் முடிவடைய வேண்டும்./////
    என்பதற்கும் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
    வணக்கம்.
    தங்களன்புள்ள
    வ.தட்சணாமூர்த்தி//////

    நல்லது. உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. //////சூரிபாபா said...
    i was expecting this move very long back, However,not too late.
    Holding seperate domain name, Monthly hosting charges, Operation aspects - loading all these lessons as HTML pages, Organising 3-4 Years work,This is Magnaopus task. Looking the big picture of this project and its magnitude and public Seva our subbiah vathiyaar is doing ..
    I am willing to contribute small amount, என்னால் முடிந்தது as token of respect, for this noble project , எப்படி வேண்டுமானலும் வைத்துக்கெள்ளலாம், since i personally been in this place since 2 and half years on daily basis, i wish to do so, i really dont know our vathiyaar will accept it.///////

    நல்லது. வகுப்பில் சேர மின்னஞ்சல் அனுப்புங்கள் சூரி!

    ReplyDelete
  26. ///////Govindasamy said...
    மிக நன்றி அய்யா,
    பழனியப்பனின் அருள் நமக்குக் கிடைக்கட்டும். மறுபடி கலகலப்பான வகுப்பறை வாத்தியாரையும், தங்களின் தனித் தமிழுடன் கூடிய சோதிடப் பாடங்களையும் எதிர்பார்க்கிறேன்.//////

    எல்லாம் பழநிஅப்பனின் அருள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்!

    ReplyDelete
  27. //////sanjay said...
    //////sanjay said...
    ஐயா,
    "வகுப்பறை" இணையதளத்தில் உறுப்பினராக வேண்டுமென்றால், தாம் என்னென்ன தகவல்கள் தந்து பதிவு செய்ய வேண்டும் அல்லது தங்களுக்கு அவர்களிடமிருந்து என்னென்ன தகவல்கள் பெறவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதன் பட்டியலை எனக்கு மின்னஞ்சலில் அணுப்பவேண்டுகிறேன்/////
    ஐயா,
    இங்கு குறிபிட்டுள்ள‌ பின்னூட்டத்திற்கு இன்னும் தங்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. நான் இதுவரை தங்களுடைய மின்னஞ்ச‌லுக்கு அனுப்பிய 'வகுப்பறையின் இணையதள வடிவமைப்பின்' ஆக்கங்கள் அமைப்பாக உள்ளதா இல்லை மாற்றம் எதுவும் தேவைப்படுகிறதா என்பதை பற்றி நீங்கள் ஒன்றுமே கூறவில்லையே ?! சற்று தெரிவித்தால் அப்பணியை மேல்தொடர வசதியாக இருக்கும்.
    அன்புடன்
    சஞ்சய் ராமநாதன்//////

    உங்களின் உதவிக்கு நன்றி சஞ்சய்! பதில் சொல்லியிருக்கிறேன்!

    ReplyDelete
  28. //////CJeevanantham said...
    Dear sir,
    Good decision.
    Thank you sir./////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  29. /////govind said...
    All the best for your project!//////

    எந்த ஊரு கோவிந்து சுவாமி நீங்கள்?

    ReplyDelete
  30. /////////Prabhu said...
    ஐயா,
    நடப்பது எல்லாம் நன்மைக்கே என்பதுபோல், நமது வகுப்பறை அடுத்த கட்டத்தை எட்டும் காலம் வந்துவிட்டது, வகுப்பறை இணையம் நல்ல படியாக ஆரம்பிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன், மிக்க நன்றி./////

    உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. /////NSK said...
    All the best sir for new web site.
    Everthying will be good for good persons like you and you will be supported by all good people in all your deeds. Kindly advice so that i can seemlessly follow your lessons.
    Regards
    N.SENTHIL KUMAR./////

    கவலை வேண்டாம். 25.11.10ஆம் தேதி பதிவில் எழுதியுள்ளபடி பாடங்கள் தொடரும்

    ReplyDelete
  32. /////happy said...
    Dear sir,
    If a husband & wife plan to produce and give birth for a new baby, what important thing should be followed.(Like which dasa or bukti or month, etc.,will be favourable for them).
    KINDLY TELL.
    REGARDS./////

    சந்தேகங்கள் என்னும் தலைப்பில் பாடங்கள் எழுதும்போது கேளுங்கள். விரிவான பதில் வரும்!

    ReplyDelete
  33. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Thanks Sir... We are waiting Sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    25.11.10ஆம் தேதி பதிவில் எழுதியுள்ளபடி பாடங்கள் தொடரும் ராஜாராமன்!

    ReplyDelete
  34. Thanjavooraan said...
    அன்புள்ள ஆசிரியர் ஐயா! ஜோசியப் பாடத்தில் முதல் வகுப்பைக்கூட தாண்டாத என்னால் நீங்கள் தொடங்க இருக்கும் பட்ட மேற்படிப்பு இணைய தளத்தை எட்டிப் பார்க்கும் தகுதிகூட இல்லை என்பதால், நான் தங்கள் வகுப்பறையில் இருந்து கொண்டு பழைய பாடங்களை ஓரளவு புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். மற்ற கட்டுரைகளையும் படித்து பங்கு பெறுகிறேன். நன்றி. தங்கள், தஞ்சாவூரான்./////

    ஆகா, உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள். நீங்கள் வகுப்பறைக்கு வந்து செல்வதே பெரும் பாக்கியம்!

    ReplyDelete
  35. /////ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    அஷ்டவர்கப்பாடங்களை முழுவதுமாக தெரிந்து கொள்வதற்குள் யாருடைய‌
    கண் பட்டதோ பாடங்கள் பாதியிலே நின்று போனது மிகவும் வருத்தமாக உள்ளது. மீண்டும் பாடங்கள் தொடரும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
    வணக்கம்.
    அன்புடன், அரசு./////

    அஷ்டவர்க்கப்பாடங்கள் முக்கியமானவை. இணைய வகுப்பில் அவை விரிவாகத் தொடரும்!

    ReplyDelete
  36. /////hamaragana said...
    அன்புடன் வணக்கம் ////////அன்புள்ள ஆசிரியர் ஐயா! ஜோசியப் பாடத்தில் முதல் வகுப்பைக்கூட தாண்டாத என்னால் நீங்கள் தொடங்க இருக்கும் பட்ட மேற்படிப்பு இணைய தளத்தை எட்டிப் பார்க்கும் தகுதிகூட இல்லை என்பதால், நான் தங்கள் வகுப்பறையில் இருந்து கொண்டு பழைய பாடங்களை ஓரளவு புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். மற்ற கட்டுரைகளையும் படித்து பங்கு பெறுகிறேன். நன்றி/////.இனைய தளத்திற்கு எனது பெயர் பதிவுக்கு கட்டண விபரம் தகவல் தெரிவித்து விடுங்கள் தயவு செய்து. நன்றி/////

    மின்னஞ்சல் பாடங்களுக்குப் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பதில் வரும் சார்!

    ReplyDelete
  37. ananth said...
    தங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. துணிந்து தொடருங்கள்.
    வேண்டாம் என்று பார்த்தேன் சொல்லாமல் இருக்க முடியவில்லை. தங்களுக்கு 6ம் இடமும் அதன் அதிபதியும் பலவீனமாக இருக்கிறார்கள் போலும். அதனால்தான் நிறைய தொல்லைகள், எதிர்ப்புகள் ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கிறது. இறையருள் இருந்தால் (தங்களுக்கு இருக்கும்) எதுவும் ஓரளவுக்கு மேல் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்த வகையில் தங்களுக்கு ஓடி வந்து உதவ பலர் இருக்கிறார்கள்./////

    சிம்ம லக்கினக்காரர்களுக்கே (லக்கினாதிபதி இருக்கும் இடத்தைவைத்து) நிறைய தொல்லைகள், எதிர்ப்புகள் இருக்கும். பழநிஅப்பனின் பக்தன் நான். அவர் கைகொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆகவே வாழ்க்கைச் சக்கரம் நல்லபடியாகச் சுழன்று கொண்டிருக்கிறது! நன்றி நண்பரே1

    ReplyDelete
  38. Pallathur Ramanathan said...
    Dear Sir,
    All the best for the new website, Waiting eagerly to read your posts,/////

    நல்லது. நன்றி ராமநாதன்

    ReplyDelete
  39. /////Arul Murugan. S said...
    சார் மின்னஞ்சல் வகுப்பிலும், இணைய தளத்திலும் தொடர்ந்து மாணவராக என்னை சேர்க்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். விதிமுறைகளுக்கு கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன். கடந்த 1 1/2 ஆண்டுகளாக பதிவில் உறுப்பினராக உள்ளேன். 2007 December முதல் வாசகன். அஷ்டகவர்க்க பாடங்களுக்கு பல ஜாதகங்களை பயிற்சி செய்து பார்த்தவன்.//////

    நீங்கள் இல்லாமலா? உங்களுக்கு முதல் பெஞ்சில் இடம் உண்டு

    ReplyDelete
  40. ////hotcat said...
    Dear Sir,
    Long time I have not commented, but I am continiously reading ur blog....
    Nice to know about website. Goodluck.
    -Shankar////

    வாழ்த்துக்களுக்கு நன்றி சங்கர்!

    ReplyDelete
  41. ////SHEN said...
    ஐயா,
    மின்னஞ்சல் வகுப்பில் சேர இ-மெயில் அனுப்பியுள்ளேன். நன்றி.
    அன்புடன்
    செங்கோவி////

    வந்துவிட்டது. பதில் வரும் நண்பரே!

    ReplyDelete
  42. //////vprasanakumar said...
    Sir,
    Very good decision. Pls continue this wonderful service for your loving students like us./////

    ஆகா, என் பணி என் உயிர் உள்ளவரை தொடரும்! எழுத்து மோகினி என்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்:-))))

    ReplyDelete
  43. Sir

    I am also willing to join the e class. Pls include me

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com