16.11.10

சுடப்பட்டது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 சுடப்பட்டது எப்படி?

முன்பதிவிற்கு பின்னூட்டம் எழுதிய அனைத்து மாணவக் கண்மணிகளுக்கும் நன்றி!

அன்பர் கோவிந்தன் பதில் எழுதியுள்ளார். அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் படித்துப் பாருங்கள்.

http://www.4shared.com/ இணைய தளத்தில் இருந்து எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அது அந்தத் தளத்திற்கான நுழைவு முகவரி மட்டுமே. கோப்புக்கள் உள்ள பகுதியின் சுட்டி கொடுக்கப்படவில்லை!

இரண்டாவதாக, http://gkgupthag.blog.com/ என்ற தளத்தின் முகவரியைக் கொடுத்துள்ளார். அந்த G.K.குப்தா  தன்னுடைய பதிவில் இப்படி ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்:
-------------------------------------------------------------------------------------
 “Hello world! 
By gkgupthag

psssrf.org.in இணையதளத்தில் என் ஜாதகத்தை ஆன் லைன்னில் கணித்தேன் மிகவும் திருப்திகரமாக இருந்தது. அந்த இணையதள
இயக்குனர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் மேலும்
psssrf.org.in பலருக்கு தெரியவில்லை எனவே பல இணைய
தளங்களில்  இருந்த சுட்ட ஜாதக விபரங்களை வைத்து
psssrf.org.in க்கு லிங்கு கொடுக்கிறேன் எனக்கு அலுவலக நேரம்
முடிந்ததும் மாலை இரவு நேரங்களில் இன்டர்நெட்டில் இரண்டு
ஆண்டிற்கு மேலாக இணையதளங்களில் இருந்த ஜாதக விபரங்களை சேகரிப்பது என் பொழுதுபோக்கு”
--------------------------------------------------------------------------------------
இணைய தளங்களில் சுடுவதுதான் அவரது பொழுதுபோக்காம். நிலைமை எப்படி இருக்கிறது பாருங்கள்?

சுடுவது என்றால் என்னெவென்று தெரியுமல்லவா?

அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவருக்குத் தமிழ் தெரியுமா? என்பது தெரியவில்லை! அவர் தன்னுடைய  வலைப்பூவில் அவற்றைக் கொடுக்கவில்லை.

என் வலைப் பதிவில் 1,941 பின் தொடரும் மாணவக் கண்மணிகள்
உள்ளீர்கள். திருவாளர் முகமது இஸ்மாயில்  போன்ற தொழில் நுட்ப வல்லுனர்கள் உள்ளீர்கள். உங்கள் உதவியுடன் அதைக்
கண்டுபிடிப்போம். அவரையும் எச்சரிப்போம்.

நமது வகுப்பறையில், உயர்ந்த பதவியில் இருக்கும் காவல்துறை
அதிகாரி ஒருவரும் மாணவர். அத்துடன் சைபர்  க்ரைம்களில்
கைதேர்ந்த நிபுனர் ஒருவரும் எனக்குப் பரீட்சயமானவர்.
இதை நம் பதிவுகளைப் பிரதி எடுத்து படிப்பதற்கல்லாமல்  
வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்துபவர்கள் மனதில்
கொள்வது, அவர்களுக்கு நல்லது!
-------------------------------------------------------------------------------------
அன்பர் கோவிந்தன் அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான்:

“உங்கள் தளத்தில் 16.8.2010 அன்று 1,370 பிரிவுகளில் பதிவிடப்பெற்றுள்ள எனது ஜோதிடப்பாடங்கள் அனைத்தையும் உடனே நீக்குங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. உங்கள் மின்னஞ்சல்களுக்கு மிக்க நன்றி!”

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
SP.VR.சுப்பையா

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Developer
to    classroom2007@gmail.com
date    15 November 2010 22:11
subject    psssrf.org.in
mailed-by    gmail.com
Signed by    gmail.com  
  
hi i am Govindan
want you want i am not use your database
data File download from http://www.4shared.com/
and http://gkgupthag.blog.com/
any information call to me Ok

thank
any information
main to me
vs2008w7@gmail.com
Gocindan
Pondicherry
++++==============================
Developer
to    classroom2007@gmail.com
date    15 November 2010 23:08
subject    psssrf.org.in
mailed-by    gmail.com
Signed by    gmail.com
  
எச்சரிக்கை பதிப்புரிமை மீரல் இருப்பின் http://psssrf.org.in க்கு முறைப்படி தெரிவிக்கவும் இமெயில்

vs2008w7@gmail.com
இப்படிக்கு
Govindan
8870974887
http://psssrf.org.in
-------------------------------------------------------------------
Developer
to    classroom2007@gmail.com
date    15 November 2010 23:16
subject    psssrf.org.in
mailed-by    gmail.com
Signed by    gmail.com

எச்சரிக்கை பதிப்புரிமை மீரல் இருப்பின் http://psssrf.org.in க்கு முறைப்படி தெரிவிக்கவும் இமெயில்

vs2008w7@gmail.com
இப்படிக்கு
Govindan
8870974887
http://psssrf.org.in
பதிப்புரிமை மீரல் இருப்பின் data base file-லில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


படத்தின் மீது கர்சரைவைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்

------------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

36 comments:

  1. //////எச்சரிக்கை பதிப்புரிமை மீரல் இருப்பின் http://psssrf.org.in க்கு முறைப்படி தெரிவிக்கவும் இமெயில்//////
    இதென்னமோ, ஏதோ தவறுதலாக செய்ததாகத் தெரியவில்லை.
    வேண்டும் என்றே செய்திருந்தாலும் கூட, இவ்வளவு நடந்த பின்னும்
    அதை சரி செய்யும் எண்ணமும் இல்லை.........
    "திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்" என்ற கவிஞரின் வரிகள் ஞாபகம் வருது.
    இதில் கொடுமை என்ன வென்றால்..... யார் யாரை எச்சரிப்பது?
    அப்பட்டமாகத் தெரிந்தும் வெட்கப் படாமல்...... சட்டம் பேச நினைக்கும்
    அறியாமை தான் சிரிக்கச் செய்கிறது...... இவ்வளவு கணமா தோல்.
    ஜோதிட சாஷ்திரங்களை கேலி செய்பவர்கள்......... இது போன்ற மாக்களைப் பார்த்து விட்டு தான்.....
    எனக்கு என்னமோ லிங்க்கு தந்தேன் என்று கூறுவதும்.... கொள்ளை செய்ததும் ஒருவராக இருக்கும் எனத் தோன்றுகிறது...... இறைவன் வேறு ஏதோ சொல்ல நினைக்கிறான் ஐயா!......

    ReplyDelete
  2. அன்புடன் வணக்கம்
    எனக்கு தெரிந்த யோசனை..!!!வகுப்பறை ஐ இணையதளமாக மாற்றிவிடலாம் தற்போது இருக்கும் மாணவர்களுக்கு பயனர் எண்ணும்!! பாஸ்வோர்ட் கொடுக்கலாம் !!
    வகுப்பறையின் மூத்த மாணவர்கள் கலந்து ஆலோசித்து இணையதள அமைப்புக்கு ஆகும் செலவை வகுப்பறை மாணவர்கள் அனைவரும் பங்கு ஏற்றுகொள்ளலாம் !! தட்சிணை இல்லாத வித்தை பாழ் ??அடியேன் எதோ எனக்கு தெரிந்ததை கூறினேன் பிழை இருந்தால் பொருததுகொள்க நன்றி

    ReplyDelete
  3. You can make a complaint with DMCA(
    Digital Millennium Copyright Act) .

    http://www.google.com/dmca.html

    http://en.wikipedia.org/wiki/Digital_Millennium_Copyright_Act

    http://www.dmca.com

    If you provide them with req. info. they will remove that website from google search & they will takedown the site too. Dcma works for sure. i gurantee it. i hope this helps you sir.

    ReplyDelete
  4. //////அன்புடன் வணக்கம்
    எனக்கு தெரிந்த யோசனை..!!!வகுப்பறை ஐ இணையதளமாக மாற்றிவிடலாம் தற்போது இருக்கும் மாணவர்களுக்கு பயனர் எண்ணும்!! பாஸ்வோர்ட் கொடுக்கலாம் !!
    வகுப்பறையின் மூத்த மாணவர்கள் கலந்து ஆலோசித்து இணையதள அமைப்புக்கு ஆகும் செலவை வகுப்பறை மாணவர்கள் அனைவரும் பங்கு ஏற்றுகொள்ளலாம் !! தட்சிணை இல்லாத வித்தை பாழ் ??அடியேன் எதோ எனக்கு தெரிந்ததை கூறினேன் பிழை இருந்தால் பொருததுகொள்க நன்றி/////

    இந்த யோசனையை நானும் வரவேற்கின்றேன். இலவச bloggerல் தான் இப்படிப்பட்ட பிரச்சனை வரும்
    தனியார் இணைய தளத்தில் வர வாய்ப்பு குறைவு

    ReplyDelete
  5. konjam vittaal ungal bookai avar release seidhu viduvar pola...aattaiyai poduvadhil avaruku enna oru dedication..adengappa..

    ReplyDelete
  6. உள்ளேன் ஐயா!

    கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனானாம்
    அங்கு இரண்டு கொடுமை தலையை அவிழ்த்து விட்டு போட்டு ஆடுச்சாம்
    அந்த கதையாக உள்ளது .

    வேறு என்னத்த சொல்ல என்று தெரியவில்லை ஐயா!

    ReplyDelete
  7. நான் தங்களுக்கு , சில நாட்கள் முன்பு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன் . அதை பார்தீர்களா.அதை படித்து விட்டு தயவு செய்து ஒரு பதில் அனுப்புங்கள்.

    My email id : dineshmadhavan13@gmail.com

    ReplyDelete
  8. Sir,

    You should take serious action against this. Here after he wont continue his site. The action should be like this.
    We will be with you sir.

    ReplyDelete
  9. 'காப்பி ரைட் மீறல் இருந்தால் "முறைப்படி" தெரிவிக்கவும்' என்பதில் இருந்தே தெரிகிறது எப்பேர்ப்பட்ட "விளைஞ்ச கட்டை" அவர் என்பது.முறையற்ற செயலை செய்பவர்கள்தான் சட்டம் என்ற இருட்டறையில் புகுந்து கொண்டு மற்றவர்களுக்கு ஆட்டம் காட்டுவார்கள்.
    மனசாட்சி,தர்மம்,நியாயம் என்று சொல்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து புறப்பட மாட்டார்கள்.கோவிந்தன் "கோவிந்தா" ஆகட்டும்! நல்லவர்களின் சாபத்திற்கு ஆளாக‌ வேண்டாம் என்று எச்சரிகிறேன்.

    வகுப்பறையை இணையமாக மாற்றும் யோசனையை நானும் வரவேற்கிறேன்.
    ஆனால் இதுபோன்ற திருடர்களும் உறுப்பினர் ஆகி திருடாமல் இருக்க அதில் வழி உண்டா?

    ஆம்!ந‌டராஜன் சார் சொல்லும் "தட்சணை தராத கல்வி பாழ்"என்பது மிகச் சரி.சிறிய அள‌வாக இருந்தாலும் ஒரு தொகையை வலியுறுத்தி விட்டால், உண்மையான ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். ஆர்வக்கோளாறு
    மட்டும் இருப்பவர்கள் விலகிக் கொள்வார்கள்.

    ReplyDelete
  10. என்ன செய்கிறார்கள் இவர்கள்? தெரிந்தால் சொல்லுங்கள் என்று ஒரு புகைப்படத்தைக் கொடுத்திருக்கிறீகள். நானும் உற்றுப் பார்த்தேன், ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. இன்னம் கிட்ட இருந்தால் அவர்களை நன்றாகப் பார்த்துத் தெரிகிறது என்று சொல்வேன். ஒன்றுமே தெரியாமல் போனது வருத்தமாகத்தான் இருக்கிறது. .... ஐயா! மன்னித்துக் கொள்ளுங்கள் இன்றைய பின்னூட்டங்கள் அனைத்தும் மிகவும் சீரியசாக இருந்ததால் இப்படி எழுதினேன்.

    ReplyDelete
  11. வணக்கம் அய்யா,
    பதிவை இனணயதளமாக மாற்றுவது நல்ல யோசணை.'லாகின், பாஸ்வர்ட்' வைத்தாலும், கள்வர்கள் தானும் ஒரு உறுப்பிண‌றாகி கள்ளச்சாவியைப்போட்டு பெட்டியை உடைப்பார்! ஆகவே, இணையதளமாக‌ மாற்றினாலும் தொகுப்பு உள்ள பக்கத்திற்கு மட்டும் 'ரைட் க்ளிக்கை டிஸேபிள்' செய்துவிடவேண்டும். அய்யா, நம்முடைய இனணயதளத்தை வடிவமைத்துக் கொடுக்க நான் பொறுப்பேற்கிறேன். அதனுடைய 'வெப் ஹோஸ்டிங், டொமைன் ரெஜிஸ்ட்ரேஸன்' உங்களுடைய பொறுப்பு.(இரண்டுக்கும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.2500/‍ வருடச் சந்தா வரும்) அதன் இணைய முகவரி 'ஈவெப்குரு.காம்' சென்று சற்று நோட்டமிடுங்கள் உங்களுக்கே எல்லாம் புரிந்துவிடும்.
    டிஸ்கி:
    'இனணயதள வடிவமைப்பை ஒரு பொழுதுபோக்காகச் செய்துவருகிறேன். நான், சரக்குக் கப்பலில் முதல்நிலை அலுவலராகப் பணிபுறிகிறேன். ஆகவே, இந்த இனணயதள வடிவமைப்பை குரு தட்ச்சனையாக எற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'

    ReplyDelete
  12. வகுப்பறையில் இன்றைய விவாதப் பொருளுக்கும், நடந்திருக்கின்ற கருத்துத் திருட்டுக்கும் ஏற்ற கவியரசரின் கவிதை வரிகளைத் தேடிக் கொடுத்திருக்கிறீர்கள். மற்றொரு இடத்தில் காணப்பட்ட கவிதை வரிகள் பட்டுக்கோட்டையாருடையது. "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது. வளர்ந்து வரும் புதிய அறிவியல் உலகில் இதுபோன்ற குற்றங்களுக்கு சரியான தண்டனை விதிக்க இனிமேல்தான் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். பத்து ரூபாய் பிக்பாக்கெட் அடித்தவனும் "நான் ஒன்றும் செய்யவில்லை" என்றுதான் சொல்லுகிறான். பல லட்சக்கணக்கான கோடிகளை விழுங்கியவனும் அதையேதான் சொல்லுகிறான். தொடக்கக் கல்வி முதலாக தெய்வ பக்தி, மனச்சாட்சிக்கு மதிப்பளித்தல், உண்மை, நேர்மை இவைகள்தான் வாழ்வில் உயர வழி என்ற நமது முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த கதைகளைச் சொல்லித்தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும். ஒரு ஹரிச்சந்திரன் கதை ஒரு மகாத்மாவை உருவாக்க முடிந்த வரலாற்றை மறந்துவிடக் கூடாது. வாலறுந்த நரி ஒன்று அடடா! வாலை நறுக்கிவிட்டால் என்ன சுகமாக 'ஜில்'லென்று இருக்கிறது என்று எல்லா நரிகளையும் வாலை அறுத்துக் கொள்ள வழி சொல்லியதாம். குற்றங்களும், குற்றவாளிகளும் குற்றங்களைப் பெருமையாகப் பேசுவதால் புதிய குற்றவாளிகள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள்.

    ReplyDelete
  13. ////Alasiam G said...
    //////எச்சரிக்கை பதிப்புரிமை மீரல் இருப்பின் http://psssrf.org.in க்கு முறைப்படி தெரிவிக்கவும் இமெயில்//////
    இதென்னமோ, ஏதோ தவறுதலாக செய்ததாகத் தெரியவில்லை.
    வேண்டும் என்றே செய்திருந்தாலும் கூட, இவ்வளவு நடந்த பின்னும்
    அதை சரி செய்யும் எண்ணமும் இல்லை.........
    "திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்" என்ற கவிஞரின் வரிகள் ஞாபகம் வருது.
    இதில் கொடுமை என்ன வென்றால்..... யார் யாரை எச்சரிப்பது?
    அப்பட்டமாகத் தெரிந்தும் வெட்கப் படாமல்...... சட்டம் பேச நினைக்கும்
    அறியாமை தான் சிரிக்கச் செய்கிறது...... இவ்வளவு கணமா தோல்.
    ஜோதிட சாஷ்திரங்களை கேலி செய்பவர்கள்......... இது போன்ற மாக்களைப் பார்த்து விட்டு தான்.....
    எனக்கு என்னமோ லிங்க்கு தந்தேன் என்று கூறுவதும்.... கொள்ளை செய்ததும் ஒருவராக இருக்கும் எனத் தோன்றுகிறது...... இறைவன் வேறு ஏதோ சொல்ல நினைக்கிறான் ஐயா!......////

    இருக்கலாம். அதையும் கண்டு பிடிப்போம். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  14. ////hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    எனக்கு தெரிந்த யோசனை..!!!வகுப்பறை ஐ இணையதளமாக மாற்றிவிடலாம் தற்போது இருக்கும் மாணவர்களுக்கு பயனர் எண்ணும்!! பாஸ்வோர்ட் கொடுக்கலாம் !!
    வகுப்பறையின் மூத்த மாணவர்கள் கலந்து ஆலோசித்து இணையதள அமைப்புக்கு ஆகும் செலவை வகுப்பறை மாணவர்கள் அனைவரும் பங்கு ஏற்றுகொள்ளலாம் !! தட்சிணை இல்லாத வித்தை பாழ் ??அடியேன் எதோ எனக்கு தெரிந்ததை கூறினேன் பிழை இருந்தால் பொருததுகொள்க நன்றி//////

    வகுப்பறைக்கு வரும் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. உங்கள் எண்ணத்தை நீங்கள் தயக்கம் இன்றி எழுதலாம். அதில் பிழைக்கு வழியில்லை. நன்றி நண்பரே!
    தட்சிணை இல்லாத வித்தை பாழ்’ என்னும் உங்களின் மேலான யோசனைக்கும் நன்றி. அதற்கும் யோசித்து ஒரு முடிவெடுப்போம்.

    ReplyDelete
  15. /////Jack Sparrow said...
    You can make a complaint with DMCA(
    Digital Millennium Copyright Act) .
    http://www.google.com/dmca.html
    http://en.wikipedia.org/wiki/Digital_Millennium_Copyright_Act
    http://www.dmca.com
    If you provide them with req. info. they will remove that website from google search & they will takedown the site too. Dcma works for sure. i gurantee it. i hope this helps you sir./////

    உங்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி. தேவைப்பட்டால் அதைப் பயன் படுத்திக்கொள்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  16. ////Sai said...
    //////அன்புடன் வணக்கம்
    எனக்கு தெரிந்த யோசனை..!!!வகுப்பறை ஐ இணையதளமாக மாற்றிவிடலாம் தற்போது இருக்கும் மாணவர்களுக்கு பயனர் எண்ணும்!! பாஸ்வோர்ட் கொடுக்கலாம் !!
    வகுப்பறையின் மூத்த மாணவர்கள் கலந்து ஆலோசித்து இணையதள அமைப்புக்கு ஆகும் செலவை வகுப்பறை மாணவர்கள் அனைவரும் பங்கு ஏற்றுகொள்ளலாம் !! தட்சிணை இல்லாத வித்தை பாழ் ??அடியேன் எதோ எனக்கு தெரிந்ததை கூறினேன் பிழை இருந்தால் பொருததுகொள்க நன்றி/////
    இந்த யோசனையை நானும் வரவேற்கின்றேன். இலவச bloggerல் தான் இப்படிப்பட்ட பிரச்சனை வரும்
    தனியார் இணைய தளத்தில் வர வாய்ப்பு குறைவு////

    உங்களின் மேலான யோசனைக்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ////Jack Sparrow said...
    konjam vittaal ungal bookai avar release seidhu viduvar pola...aattaiyai poduvadhil avaruku enna oru dedication..adengappa../////

    :-)))))

    ReplyDelete
  18. ////kannan said...
    உள்ளேன் ஐயா!
    கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனானாம்
    அங்கு இரண்டு கொடுமை தலையை அவிழ்த்து விட்டு போட்டு ஆடுச்சாம்
    அந்த கதையாக உள்ளது .
    வேறு என்னத்தைச் சொல்ல என்று தெரியவில்லை ஐயா!////

    பழநியப்பனை பிரார்த்தனை பண்ணுங்கள். நம்முடைய அரிய நேரம் ஏன் இப்படி வீணாக வேண்டும்?

    ReplyDelete
  19. ////sundinesh1 said...
    நான் தங்களுக்கு , சில நாட்கள் முன்பு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன் . அதை பார்தீர்களா.அதை படித்து விட்டு தயவு செய்து ஒரு பதில் அனுப்புங்கள்.
    My email id : dineshmadhavan13@gmail.com////

    பெட்டியில் ஏகப்பட்ட மின்னஞ்சல்கள். பொறுத்திருங்கள். பதில் எழுதுகிறேன்!

    ReplyDelete
  20. ////Thamu said...
    Sir,
    You should take serious action against this. Here after he wont continue his site. The action should be like this. We will be with you sir.////

    உங்களின் மேலான அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. kmr.krishnan said...
    'காப்பி ரைட் மீறல் இருந்தால் "முறைப்படி" தெரிவிக்கவும்' என்பதில் இருந்தே தெரிகிறது எப்பேர்ப்பட்ட "விளைஞ்ச கட்டை" அவர் என்பது.முறையற்ற செயலை செய்பவர்கள்தான் சட்டம் என்ற இருட்டறையில் புகுந்து கொண்டு மற்றவர்களுக்கு ஆட்டம் காட்டுவார்கள்.
    மனசாட்சி,தர்மம்,நியாயம் என்று சொல்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து புறப்பட மாட்டார்கள்.கோவிந்தன் "கோவிந்தா" ஆகட்டும்! நல்லவர்களின் சாபத்திற்கு ஆளாக‌ வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
    வகுப்பறையை இணையமாக மாற்றும் யோசனையை நானும் வரவேற்கிறேன்.
    ஆனால் இதுபோன்ற திருடர்களும் உறுப்பினர் ஆகி திருடாமல் இருக்க அதில் வழி உண்டா?
    ஆம்!ந‌டராஜன் சார் சொல்லும் "தட்சணை தராத கல்வி பாழ்"என்பது மிகச் சரி.சிறிய அள‌வாக இருந்தாலும் ஒரு தொகையை வலியுறுத்தி விட்டால், உண்மையான ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். ஆர்வக்கோளாறு
    மட்டும் இருப்பவர்கள் விலகிக் கொள்வார்கள்./////

    உங்களின் மேலான யோசனைக்கு நன்றி. இதற்கும் யோசித்து ஒரு முடிவெடுப்போம். அதற்குத் தனியாக ஒரு பதிவை வலையேற்றுகிறென் சார்!

    ReplyDelete
  22. /////Thanjavooraan said...
    என்ன செய்கிறார்கள் இவர்கள்? தெரிந்தால் சொல்லுங்கள் என்று ஒரு புகைப்படத்தைக் கொடுத்திருக்கிறீகள். நானும் உற்றுப் பார்த்தேன், ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. இன்னம் கிட்ட இருந்தால் அவர்களை நன்றாகப் பார்த்துத் தெரிகிறது என்று சொல்வேன். ஒன்றுமே தெரியாமல் போனது வருத்தமாகத்தான் இருக்கிறது. .... ஐயா! மன்னித்துக் கொள்ளுங்கள் இன்றைய பின்னூட்டங்கள் அனைத்தும் மிகவும் சீரியசாக இருந்ததால் இப்படி எழுதினேன்.////

    இதற்கெல்லாமா மன்னிப்பு? உங்கள் வயதிற்கும், அனுபவத்திற்கும் நீங்கள் எதை எழுதினாலும், அதில் தவறு இருக்காது. நாங்கள் ஏற்றுக்கொள்வோம்!

    ReplyDelete
  23. ////sanjay said...
    வணக்கம் அய்யா,
    பதிவை இனணயதளமாக மாற்றுவது நல்ல யோசணை.'லாகின், பாஸ்வர்ட்' வைத்தாலும், கள்வர்கள் தானும் ஒரு உறுப்பிண‌றாகி கள்ளச்சாவியைப்போட்டு பெட்டியை உடைப்பார்! ஆகவே, இணையதளமாக‌ மாற்றினாலும் தொகுப்பு உள்ள பக்கத்திற்கு மட்டும் 'ரைட் க்ளிக்கை டிஸேபிள்' செய்துவிடவேண்டும். அய்யா, நம்முடைய இனணயதளத்தை வடிவமைத்துக் கொடுக்க நான் பொறுப்பேற்கிறேன். அதனுடைய 'வெப் ஹோஸ்டிங், டொமைன் ரெஜிஸ்ட்ரேஸன்' உங்களுடைய பொறுப்பு.(இரண்டுக்கும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.2500/‍ வருடச் சந்தா வரும்) அதன் இணைய முகவரி 'ஈவெப்குரு.காம்' சென்று சற்று நோட்டமிடுங்கள் உங்களுக்கே எல்லாம் புரிந்துவிடும்.
    டிஸ்கி:
    'இனணயதள வடிவமைப்பை ஒரு பொழுதுபோக்காகச் செய்துவருகிறேன். நான், சரக்குக் கப்பலில் முதல்நிலை அலுவலராகப் பணிபுரிகிறேன். ஆகவே, இந்த இனணயதள வடிவமைப்பை குரு தட்ச்சனையாக எற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'/////

    உங்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இணையதள வடிவமைப்பிற்கு உதவி வாத்தியாரின் சிஷ்யன் என்று உங்கள் பெயரையும் போட்டுவிடுவோம். கூகுள் ப்ளாக் என்றால் எனக்கு மிகவும் அத்துபடியானது. அதில் உள்ளவசதிகள் அனைத்தையும் இணயதளத்தில் கொடுக்க முடியுமா? உறுப்பினர் Login ID & Paasword வசதி ஏற்படுத்த வேண்டும். ஸைடு பாரில் Archives வரவேண்டும். இது போன்ற சந்தேகங்கள் உள்ளன. அதுபற்றி உங்களுக்கு ஒரு விரிவான மின்னஞ்சல் ஒன்றை வரும் திங்கட்கிழமையன்று அனுப்பிவைக்கிறேன். பதில் எழுதுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுங்கள். இப்போதைக்கு மிக்க நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  24. ஐயா

    இந்த திருட்டு பற்றி முன்பே மெய்ல்
    அனுப்பி இருந்தேன்
    Sunday, 15 August, 2010 9:59 AM

    see this dated mail in inbox sir

    at that time u replay like this
    திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
    திருட்டை ஒழிக்க முடியாது

    ReplyDelete
  25. //////Thanjavooraan said...
    வகுப்பறையில் இன்றைய விவாதப் பொருளுக்கும், நடந்திருக்கின்ற கருத்துத் திருட்டுக்கும் ஏற்ற கவியரசரின் கவிதை வரிகளைத் தேடிக் கொடுத்திருக்கிறீர்கள். மற்றொரு இடத்தில் காணப்பட்ட கவிதை வரிகள் பட்டுக்கோட்டையாருடையது. "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது. வளர்ந்து வரும் புதிய அறிவியல் உலகில் இதுபோன்ற குற்றங்களுக்கு சரியான தண்டனை விதிக்க இனிமேல்தான் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். பத்து ரூபாய் பிக்பாக்கெட் அடித்தவனும் "நான் ஒன்றும் செய்யவில்லை" என்றுதான் சொல்லுகிறான். பல லட்சக்கணக்கான கோடிகளை விழுங்கியவனும் அதையேதான் சொல்லுகிறான். தொடக்கக் கல்வி முதலாக தெய்வ பக்தி, மனச்சாட்சிக்கு மதிப்பளித்தல், உண்மை, நேர்மை இவைகள்தான் வாழ்வில் உயர வழி என்ற நமது முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த கதைகளைச் சொல்லித்தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும். ஒரு ஹரிச்சந்திரன் கதை ஒரு மகாத்மாவை உருவாக்க முடிந்த வரலாற்றை மறந்துவிடக் கூடாது. வாலறுந்த நரி ஒன்று அடடா! வாலை நறுக்கிவிட்டால் என்ன சுகமாக 'ஜில்'லென்று இருக்கிறது என்று எல்லா நரிகளையும் வாலை அறுத்துக் கொள்ள வழி சொல்லியதாம். குற்றங்களும், குற்றவாளிகளும் குற்றங்களைப் பெருமையாகப் பேசுவதால் புதிய குற்றவாளிகள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள்.//////

    கலி முற்றிக்கொண்டிருக்கிறது. பகவான் சங்கை எடுத்து ஊதிக்கொண்டு வரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த உலகத்தில் 75% பேர்கள் அக்கிரமங்களைச் செய்வதோடு, தங்களை நியாயப் படுத்திக்கொள்ளவும் செய்கிறார்கள். அவர் வந்தால்தான் அனைத்தும் சீராகும்! நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  26. இது திரு கோவிந்தன் அவர்களின் வண்டவாளம் தெரிகிறது. இருப்பினும் ஒத்துகொள்ள மறுக்கிறார்.

    ReplyDelete
  27. ////உங்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இணையதள வடிவமைப்பிற்கு உதவி வாத்தியாரின் சிஷ்யன் என்று உங்கள் பெயரையும் போட்டுவிடுவோம். கூகுள் ப்ளாக் என்றால் எனக்கு மிகவும் அத்துபடியானது. அதில் உள்ளவசதிகள் அனைத்தையும் இணயதளத்தில் கொடுக்க முடியுமா? உறுப்பினர் Login ID & Paasword வசதி ஏற்படுத்த வேண்டும். ஸைடு பாரில் Archives வரவேண்டும். இது போன்ற சந்தேகங்கள் உள்ளன. அதுபற்றி உங்களுக்கு ஒரு விரிவான மின்னஞ்சல் ஒன்றை வரும் திங்கட்கிழமையன்று அனுப்பிவைக்கிறேன். பதில் எழுதுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுங்கள். இப்போதைக்கு மிக்க நன்றி உரித்தாகுக!////
    அய்யா,
    தங்களுக்கு என்னென்ன வசதிகள் வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அத்துனையும் செய்துவிடுவோம்! நம்ம வாத்தியாருக்கு இல்லாத சலுகைகளா?! நான் உங்களுக்கு பின்னூட்டம் இட்ட உடனேயே வடிவத்தின் படிவத்தையும் தேர்வு செய்துவிட்டேன். "வகுப்புஅறை2007"ன் வண்ணங்களும் எண்ணங்களும் அச்சுப்பிசகாமல் எதிரொளிக்கும் !! 'வாத்தியாரின் சிஷ்யன்' என்று கேட்க்கும்போதே மிகவும் பெருமையாக உள்ளது.

    சஞ்சய் ராமநாதன்
    சேலம்
    77087 77047
    sparsanjay@gmail.com

    ReplyDelete
  28. பொட்டில் அறைந்தால் போல
    நெத்திஅடியான பதில்
    இது ஒன்றுதான் வழி
    ஒரே ஒரு மார்க்கம் தான் உள்ளது ஐயா
    கூறியது நடந்தால் தான் உள்ளவர்கலாது தப்பிக்க முடியும்.

    >>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<


    ஒட்டு மொத்த உலகத்தில் 75% பேர்கள் அக்கிரமங்களைச் செய்வதோடு, தங்களை நியாயப் படுத்திக்கொள்ளவும் செய்கிறார்கள். அவர் வந்தால்தான் அனைத்தும் சீராகும்! நன்றி கோபாலன் சார்!


    Post a comment.

    Unsubscribe to comments on this post.


    Posted by SP.VR. SUBBAIYA to வகுப்பறை at Tuesday, November 16, 2010 2:39:00 PM

    ReplyDelete
  29. அய்யா,
    இணையதள வடிவமைப்பினை படம்பிடித்து உங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன். தங்களின் அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கிறேன்.

    சஞ்சய் ராமநாதன்
    77087 77047
    sparsanjay@gmail.com

    ReplyDelete
  30. அன்புடன் வணக்கம்
    சக மாணவரான ச்னஜய் ராமநாதனுக்கு க்கு ..சபாஷ். சபாஷ் சபாஷ் !!
    அடுத்து மூத்த மாணவர் திரு kmr.k .வகுப்பறை தலைமை மாணாக்கர் அப்பிப்ராயம் என்ன...
    முக்கியமான ஒன்று தற்போது இருக்கும் மாணவர்களை தவிர மேற்கொண்டு
    அட்மிச்ன் போட கடுமையான நிபந்தனைகள் ஸ்ரீ குருநாதர் செய வேண்டும் ((((தாங்களே தட்சிணை என்ன தரவேண்டும் என குறுப்பிட்டு விட்டால் நல்லது ))
    இப்படி செய்தால் ஓரளவு திருட்டை தடுக்க முடியும்.. சரிதானா ??சஞ்சய் !!
    நன்றி ...

    ReplyDelete
  31. திரு. சஞ்சய் ராமநாதன் அவர்களுக்கு நன்றி.
    உங்களின் பின்னூட்டங்கள் மிகுந்த ஆறுதலாக உள்ளது.

    ReplyDelete
  32. ///hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    சக மாணவரான ச்னஜய் ராமநாதனுக்கு க்கு ..சபாஷ். சபாஷ் சபாஷ் !!
    அடுத்து மூத்த மாணவர் திரு kmr.k .வகுப்பறை தலைமை மாணாக்கர் அப்பிப்ராயம் என்ன...
    முக்கியமான ஒன்று தற்போது இருக்கும் மாணவர்களை தவிர மேற்கொண்டு
    அட்மிச்ன் போட கடுமையான நிபந்தனைகள் ஸ்ரீ குருநாதர் செய வேண்டும் ((((தாங்களே தட்சிணை என்ன தரவேண்டும் என குறுப்பிட்டு விட்டால் நல்லது ))
    இப்படி செய்தால் ஓரளவு திருட்டை தடுக்க முடியும்.. சரிதானா ??சஞ்சய் !!
    நன்றி ...///
    தங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி!
    நம் வாத்தியாரின் பாடங்கள், 'கிரி' படத்தில் வடிவேலு "எங்க அக்காவ பத்தின விசயம் கடுகளவு கசிஞ்சாக்கூட இந்த முதலாளியால தாங்கமுடியாது" என்று சொல்வதைப்போல நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். கொஞ்சம் சிரிப்போடு இந்த டீலிங்கை டீல் பண்ணுவோம்! நான் இப்பொழுது வலைபாதுகாப்பைப் பற்றித்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.

    அன்புடன்
    சஞ்சய் ராமநாதன்

    ReplyDelete
  33. மதிப்புமிக்க பதிவுகளைக்கொண்டது உங்கள் வலைப்பூ..இதை இணையதளமாக ஆக்குவதே நல்லது..அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என அறிவிக்கவும்.
    அன்புடன்
    செங்கோவி

    ReplyDelete
  34. சக மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
    நம் வகுப்பறை இணையதளத்திற்கு என்ன பெயர் சூட்டலாம் ? என்னுடைய யோசனை "www.classroom2007.com". இதேபோல தங்களுடைய கருத்துகளையும் சற்று தெரிவிக்கவும். அதன் அங்கீகாரம் நம் வாத்தியாரிடமே உள்ளது. இந்தச் சிறிய பணிக்காக நம் வாத்தியார் யோசித்துக்கொண்டிருக்கவேண்டாம் என்றுதான் நானே கொஞ்சம் அதிகப்ரசங்கித்தனமாக.......


    சஞ்சய் ராமநாதன்

    ReplyDelete
  35. அய்யா, இந்த Gupta.com பற்றி ஏற்கனவே உங்களுக்கு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேனே நினைவிருக்கிறதா?

    அதுவே இப்போது ஒரு பரவலான திருட்டாகி விட்டது..

    ReplyDelete
  36. வணக்கம் அய்யா,
    திருடர்கள் எவ்வளவுதான் தன்டனை பெட்ராலும் காலம் காலமாக‌
    இது நடக்கதான் செய்யும்.நம் பாதுகாப்பை நாம் தான் அமைத்துக்
    கொள்ள வேண்டும்.நடக்கும் எதிர்மைரை சம்பவங்கல் நன்மை அளிக்கவே
    வருகிரது.எந்த முடிவு எடுத்தாலு எங்களது ஆதரவு உண்டு.
    நன்றி,அரிபாய். வாழ்க வளமுடன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com