5.11.10

எதற்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் 
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்; வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதற்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது?

தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள். பெரும்பாலோர், நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு ஒரு கொண்டாட்டம் நிகழ்வது யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை.

அப்படியிருக்குமாயின், இரணியைனக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பன் பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்தகாசுரன் சரந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகி விடும்.

ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.

தீபம் = விளக்கு, ஆவளி -= வரிசை, தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள். தீபாவளி என உணர்க.

தீபங்களில் ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?

“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்" என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.

சிவ விரதம் எட்டு எனக் கந்தபுராணத்தின் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.

அவையாவன:

   1. சோமவார விரதம்
   2. உமாமகேச்சுர விரதம்(கார்த்திகை மாதம் பெளர்ணமி)
   3. திருவாதிரை விரதம் (மார்கழியில்)
   4. சிவராத்திரி விரதம் (மாசியில்)
   5. கல்யாண விரதம் (பங்குனி உத்திரம்)
   6. பாசுபத விரதம் (தைப்பூசம்)
   7. அஷ்டமி விரதம் (வைகாசி பூர்வபட்ச அஷ்டமியில்)
   8. கேதார மாவிரதம்(இதுதான் தீபாவளி)


தொல்லைவல் வினைகழித்துத் தருஞ்சோமவாரமா திரை நோன்பன்றிப்
புல்லியவு மாமகேச் சுரஞ்சிவராத் திரிமுறையில் பொருத்த நோற்கப்
பல்வினையுந் தொலைந்திடுகே தாரமணவிரதமிவை பரமநோன்பு
கொள்ளூறு சூற் படைவிரத மெனுமெட்டுஞ் சிவ விரதங் குணிக்குங்காலே!

இந்த விரதம் நோற்கும் முறை:

புரட்டாசி மாதம் பூர்வ பட்சம் அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து, அதில் சிவபெருமானை ஆவாகனஞ்செய்து, இருபத்தொரு இழையுடைய நூலைக் கையில் புனைந்து, அருச்சனை செய்து, தூப தீப நிவேதனம் புரிந்து வழிபட வேண்டும்.

ஐப்பசிமாத அமாவாசைக்கு முந்தினநாள் சதுர்த்தசியினுன்று, அதிகாலையிலெழுந்து நீராடி, தூய ஆடையுடுத்து, நெல்லின்மீது நிறைகுடம் வைத்து, அதில் சிவமூர்த்தியை நிறுவி, சிவமாகவே பாவனை புரிந்து, பக்தி பரவசமாக அருச்சித்துப் பாராயணம் புரிந்து, தூப தீப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.

மறுநாள் அமாவாசையன்று காப்பை யவிழ்த்து விட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதார விரதம் எனப்படும்.

பிருங்கி முனிவர் சக்தியை விலக்கிச் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்ட காரணத்தினால், உமாதேவியார் வெகுண்டு, இடப்பாகம் பெறும் பொருட்டு, திருக்கயிலாய மலையினின்றும் நீங்கி, கெளதம முனிவருடைய வனத்தையடைந்தனர். அவ்வனம் அம்பிகையின் வரவினால் மிகவுஞ் செழிப்புற்றது. பாம்பும், தவளையும், அரவும் கீரியும், உரகமுங் கருடனும் உறவாடின.

கெளதமர் கெளரியைத்தொழுது துதித்தனர். இந்த விரதத்தைக் கெளதமர் கூற, விதிப்படி உமையம்மையார் நோற்று, இறைவருடைய இடப் பாகத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.

கெளரி நோற்ற காரணத்தால், கேதாரிகெளரி விரதம் எனவும் இது பேர் பெற்றது.

இருபத்தொருநாள் அனுட்டிக்க முடியாதவர்கள், ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியன்று மட்டும் மேற்கூறிய முறைப்படி அனுட்டிக்க வேண்டும்.

இவ்விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு, அன்று சிவமூர்த்தியை வழிபட்டு, நலம் பெறுதல் வேண்டும். தீபங்களை வரிசையாக ஏற்றி, அன்புடன் வழிபட வேண்டும்.

தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவார். இனியேனும் அந்தத் தீயநெறியைக் கைவிட்டுத் தூயநெறி நின்று நலம் பெறுவார்களாக.

- திருமுருக கிருபானந்த வாரியார்.
=======================================
வாரியார் சுவாமிகளின் கட்டுரையைத் தேடிப்பிடித்து, இன்னன்னாளில் பதிவில் ஏற்ற நமக்கு உதவியவர் நமது வகுப்பறை மாணவர் முரளி தங்கவேல்! அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!

அன்புடன்,
வாத்தியார்
=======================================


வாரியார் சுவாமிகளின் படம்
 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

33 comments:

  1. உள்ளேன் வாத்தியார் ஐயா!

    " நதி மூலம் ரிசி மூலம்!" பார்க்க கூடாது என்பார்கள் பெரியவர்கள்.
    நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தாரோ இல்லையோ அதெல்லாம் எமக்கு ஒன்றும் தெரியாது.

    யம்மை பிடித்த கெட்டவை அனைத்தும் போகி நல்லது பிறக்கட்டும் என்று தான் ஒவ்வொரு தடவையும் ஸ்நானம் செய்யும் பொழுது கண்ணீர் மல்க மனம் உருக்கி
    எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்வது ஆகும்.

    அவ்வாறு இருக்க
    !தீபாவளி யான!" இன்று சற்று நிம்மதியுடன் உடல் முழுவதும் எண்ணை தேய்த்து, சாதாரண நாட்களில் உடலில் உள்ள அசுத்தங்களை போக்கி
    புத்துனர்விகள் தரும் நீரை, பாவங்களை போக்கும் மருந்தாக கருதி
    கெட்டவைகளை தலை முழுகி,
    புதிய வாழ்கையை இறைவனின் துணைகொண்டு, முன்னோர்களை அனைவரையும் மனதார பிராத்தனை செய்து எமது முன்னோர்கள் காலம் காலமாக கொண்டாடி வந்ததை
    யாமும் கொண்டாடுகின்றோம் ஐயா!

    பொருளாதரத்தில் நடுத்தர மற்றும் கீழ் தர மக்கள் இன்று தான் புதிய வகையான உடை, உணவிவகைகள், மற்றும் சுற்றல் சூழ ஆடி பாடி ஆனந்தம் அடையும் நாள்.

    இது மூட நம்பிக்கையின் அடிப்படையில் செய்வதாக இருந்தாலும் எத்தனையோ பேறுகள் இன்பமாக கொண்டாடும் நாளை கூட பொறுக்காத சிலபேர்கள் வீன் விவாதம் செய்வதை அறவே வெறுக்கின்றேன் ஐயா.

    மேலும் பெரிய மனது பண்ணி
    " தீப திருநாளை " விபாத நாளாக ஆக்க ஆக்க வேண்டாம் என அனைவரையும் வேண்டுகின்றேன்

    ReplyDelete
  2. வகுப்பறையில் எமக்கு கல்வி அறிவை போதிக்கும் ஆசானுக்கும், துணை நிற்கும் ஆசிரியருக்கும் மற்றும் என்னுடன் கல்வி கற்கும் மாணவ மாணவியர்களுக்கு எமது உள்ளம் கனிந்த
    " தீப ஒளிநாள் நல் வாழ்த்துக்கள்!".

    ReplyDelete
  3. Deepavali villakam arumai,sinthai mayakkum sivanai thuthippom.

    ReplyDelete
  4. ஆசிரியர் அவர்களுக்கும் வகுப்பறை நன்பர்களுக்கும்
    "தீபாவளி நல்வாழ்த்துக்கள்"

    ReplyDelete
  5. நமது பண்டிகைகள் பொருளற்றது அல்ல. ஆழ்ந்த ஞானக்கருத்துக்களை மிக எளிய பண்டிகைகள் மூலம் நமக்கு உணர்த்தும் வழிமுறைகள். நமது முன்னோர்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். மகா மேதையும், ஆன்மீக வளர்ச்சிக்கு உற்ற கருவியாகத் திகழ்ந்தவரும் அறுபத்தி நான்காம் நாயன்மாராகக் கருதப்பட்டவருமான கிருபானந்தவாரியார் சுவாமிகளை இந்த நல்ல நாளில் நினைவுபடுத்திய முரளி தங்கவேல் அவர்களுக்கும், ஆசிரியர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. அன்புடன் வணக்கம்
    தீபாவளி வாழ்த்துக்கள்
    தீபாவளி பற்றிய உண்மை விஷயங்களை எடுத்து கூறி உள்ளீர்கள்!!
    சைவ மக்கள் அனைவரும் கடமை பட்டுளனர்கள்!!
    சில வருஷங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் இதே விளக்கத்தை ஒரு அன்பர் பேசி
    கொண்டிருக்கும் போதே ஒளிபரப்பு தடுக்கப்பட்தது விசாரித்ததில்
    ஒரு சமயத்தை சார்ந்தவர் பெரிய பதவியல் இருந்ததால்.நிறுத்தப்பட்டது ??
    ஒரு சின்ன விஷயம் :-காலம்.. காலமாக ... கங்கா ஸ்நானம் ஆச்சா
    என்றுதான் கேட்டார்கள் --கங்கை எம்பிரானின்(சிவ பெருமானின்)
    தொடர்புடையது ..
    .அது போக.. புரட்டாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதில் நமது முன்னோர்களுக்கு பலகாரம் வைத்து நினைவு கூர்தல்
    அய்ப்பசிதேய் பிறை சதுர்த்தசி திதிய்ல் துணி மணிகள் வைத்து நினைவு கூர்தல் இது ரெண்டும் ருத்ர வழிபாடு
    (அடியேனின் குருதேவர் வாக்கு )
    அருமையான விளக்கம் மூலத்திலிருந்து எடுத்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  7. அன்புடன் உயர் திரு தஞ்சாவூரான் அவர்களுக்கு வணக்கம் தங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன் திரும்ப வந்து விட்டது தயவு கூர்ந்து கவனிக்கவும். அல்லது தினமும் கவனிக்கும் மெயில் விலாசம் அனுப்பித்தாருங்கள்,. நன்றி
    my mail id:-ganalatha05@gmail.com

    ReplyDelete
  8. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு

    தீபாவளி கொண்டாடப்படுவதற்கான
    தங்களின் விளக்கம் அருமையாக உள்ளது.
    தங்களுக்கு எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.
    வணக்கம்.
    நன்றி!
    தங்களன்புள்ள மாணவன்,
    வ.தட்சணாமூர்த்தி
    2010-11-05

    ReplyDelete
  9. எனதருமை வாத்தியாருக்கும், அவர்தம் எனது சகோதர மாணாக்கர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  10. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    nalla nalla vilakakangal alithamaikku nanrigal pala.

    ReplyDelete
  11. அனைவருக்கும் இனிய தீப ஒளி நன்நாள் வாழ்த்துக்கள். எலோருடைய வாழ்வும் பிரகாசமாக வாழ்த்துகிறேன்.
    சிறப்பான ஒரு தொகுப்பு கட்டுரை. முரளி தங்கவேல் மற்றும் நம் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    வகுப்பறை கண்மணிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது உளம் கனிந்த தீப ஒளி நன் நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. தீபாவளி விளக்கம் அருமை..

    தேடித்தந்த மாணவருக்கும்
    பதிவில் அரங்கேற்றிய வாத்தியாருக்கும்

    எல்லோரும் நலம் பெற வேண்டும் என தமது ஆயுளின் பெரும் பகுதியை தந்த
    பேரன்பு மிகு வாரியார் சுவாமிகளுக்கும்
    நன்றிகள் . . நன்றிகள் . . நன்றிகள்..

    ஆனால் ஏன் தீபாவளிக்கு புது துணி வாங்கி உடுத்துகிறார்கள் என்பது தான் பல வருடங்களாக புரியாமலே உள்ளது . .

    மாறும் . .
    மாற்றங்கள் வரும் போது
    நாமும் மாற வேண்டுமா . .

    ReplyDelete
  13. %%% நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று. தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள். %%%

    எந்த தெய்வ வடிவை வழிபாடு செய்தால் என்ன ? நதிகள் அனைத்தும் சங்கமம் ஆகும் இடம் கடல் தானே. கீதையின் சாரமும் அதுவே. இந்த மங்களகரமான நாளில் காகம் போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு அன்னமிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.

    ReplyDelete
  14. Dear sir,
    Happy Diwali! Lessons are interesting.
    I can't be able to read your older lessons. As soon as, I open the older lesson, its get overlapped with your side posters. When I opened a lesson, some advertisement windows open. I think that might be the reason for overlapping. Kindly rectify it.
    I would like to verify the ashtavarkkam old lessons (For example http://classroom2007.blogspot.com/2010/10/blog-post_12.html), then only I can be able to understand the new lessons. I lost the continuity.
    Yours sincerely,
    J.SENDHIL

    ReplyDelete
  15. ஒரே ந‌ல்ல நாள் வெவ்வேறு குழுக்களால் வெவ்வேறு காரணஙளுக்காகக் கொண்டாடப் படுகிறது.ஜைனர்களும் கூட தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
    இன்னும் பல ஆசிய நாடுகளிலும் தீபாவளியைப் பல காரணங்களுக்காகக் கொண்டாடுகின்றனர்.ந‌ம்‌ மரியாதைக்குரிய தவத்திரு வாரியர் சுவாமிகள்
    கூறுவது சைவநெறி வழி நிற்போர் கொள்ள வேண்டிய கொள்கை.

    பொதுவாக எப்போதுமே சாதாரணர்கள் கூறும் விளக்கம் எதார்த்தமாகவும், நடைமுறை சாத்தியமானதாகவும் இருக்கும்.

    தீபாவளி அன்று திருத்தவத்துறை சென்று வாத்தியாருக்காகவும்,மாணவர்கள்
    அனைவரின் நலனுக்காகவும் அமி சப்த‌ரிஷீஸ்வரரையும், அமி ஸ்ரீமதி அம்பாளையும் மனமுருக வேண்டினேன்.


    அதுசரி! திருத்தவதுறையின் இன்றைய பெயர் யாராவது அறிவீர்களா?

    ReplyDelete
  16. //////kannan said...
    உள்ளேன் வாத்தியார் ஐயா!
    " நதி மூலம் ரிசி மூலம்!" பார்க்க கூடாது என்பார்கள் பெரியவர்கள்.
    நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தாரோ இல்லையோ அதெல்லாம் எமக்கு ஒன்றும் தெரியாது.
    யம்மை பிடித்த கெட்டவை அனைத்தும் போகி நல்லது பிறக்கட்டும் என்று தான் ஒவ்வொரு தடவையும்

    ஸ்நானம் செய்யும் பொழுது கண்ணீர் மல்க மனம் உருக்கி
    எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்வது ஆகும்.
    அவ்வாறு இருக்க
    !தீபாவளி யான!" இன்று சற்று நிம்மதியுடன் உடல் முழுவதும் எண்ணை தேய்த்து, சாதாரண நாட்களில் உடலில் உள்ள அசுத்தங்களை போக்கி புத்துனர்விகள் தரும் நீரை, பாவங்களை போக்கும் மருந்தாக கருதி
    கெட்டவைகளை தலை முழுகி,
    புதிய வாழ்கையை இறைவனின் துணைகொண்டு, முன்னோர்களை அனைவரையும் மனதார பிராத்தனை
    செய்து எமது முன்னோர்கள் காலம் காலமாக கொண்டாடி வந்ததை
    யாமும் கொண்டாடுகின்றோம் ஐயா! பொருளாதரத்தில் நடுத்தர மற்றும் கீழ் தர மக்கள் இன்று தான் புதிய வகையான உடை, உணவிவகைகள்,
    மற்றும் சுற்றல் சூழ ஆடி பாடி ஆனந்தம் அடையும் நாள்.
    இது மூட நம்பிக்கையின் அடிப்படையில் செய்வதாக இருந்தாலும் எத்தனையோ பேர்கள் இன்பமாக கொண்டாடும் நாளை கூட பொறுக்காத சிலபேர்கள் வீன் விவாதம் செய்வதை அறவே வெறுக்கின்றேன் ஐயா.
    மேலும் பெரிய மனது பண்ணி
    " தீப திருநாளை " விபாத நாளாக ஆக்க ஆக்க வேண்டாம் என அனைவரையும் ேண்டுகின்றேன்/////

    அதெல்லாம் செய்ய மட்டார்கள். செய்தால் என்ன? விருப்பமிருந்தால் கலந்து கொள்வோம். இல்லையென்றால்
    இல்லை!

    ReplyDelete
  17. ////////kannan said...
    வகுப்பறையில் எமக்கு கல்வி அறிவை போதிக்கும் ஆசானுக்கும், துணை நிற்கும் ஆசிரியருக்கும் மற்றும் என்னுடன் கல்வி கற்கும் மாணவ மாணவியர்களுக்கு எமது உள்ளம் கனிந்த " தீப ஒளிநாள் நல் வாழ்த்துக்கள்!"./////

    நன்றி. வகுப்பறையின் சார்பாக நானும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  18. /////arthanari said...
    Deepavali villakam arumai,sinthai mayakkum sivanai thuthippom.///////

    ஆகா, துதிப்போம். நன்றி!

    ReplyDelete
  19. //////DHANA said...
    ஆசிரியர் அவர்களுக்கும் வகுப்பறை நன்பர்களுக்கும்
    "தீபாவளி நல்வாழ்த்துக்கள்"/////

    நன்றி. வகுப்பறையின் சார்பாக நானும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  20. //////Thanjavooraan said...
    நமது பண்டிகைகள் பொருளற்றது அல்ல. ஆழ்ந்த ஞானக்கருத்துக்களை மிக எளிய பண்டிகைகள் மூலம்
    நமக்கு உணர்த்தும் வழிமுறைகள். நமது முன்னோர்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். மகா மேதையும், ஆன்மீக வளர்ச்சிக்கு உற்ற கருவியாகத் திகழ்ந்தவரும் அறுபத்தி நான்காம் நாயன்மாராகக் கருதப்பட்டவருமான கிருபானந்த வாரியார் சுவாமிகளை இந்த நல்ல நாளில் நினைவுபடுத்திய முரளி தங்கவேல் அவர்களுக்கும்,
    ஆசிரியர் அவர்களுக்கும் மிக்க நன்றி./////

    நல்லது. நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  21. ////gnanamoorthy.A. said...
    ayya avargalukku,
    diwali vazhthukkal/////

    நன்றி. வகுப்பறையின் சார்பாக நானும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  22. ///////hamaragana said...
    அன்புடன் வணக்கம். தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி பற்றிய உண்மை விஷயங்களை எடுத்து கூறி
    உள்ளீர்கள்!! சைவ மக்கள் அனைவரும் கடமை பட்டுளனர்கள்!!
    சில வருஷங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் இதே விளக்கத்தை ஒரு அன்பர் பேசி கொண்டிருக்கும் போதே
    ஒளிபரப்பு தடுக்கப்பட்டதது விசாரித்ததில் ஒரு சமயத்தை சார்ந்தவர் பெரிய பதவியல் இருந்ததால்.நிறுத்தப்பட்டது
    ?? ஒரு சின்ன விஷயம் :-காலம்.. காலமாக ... கங்கா ஸ்நானம் ஆச்சா என்றுதான் கேட்டார்கள் --கங்கை
    எம்பிரானின்(சிவ பெருமானின்) தொடர்புடையது ...அது போக.. புரட்டாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதில் நமது முன்னோர்களுக்கு பலகாரம் வைத்து நினைவு கூர்தல் அய்ப்பசிதேய்பிறை சதுர்த்தசி திதிய்ல் துணி மணிகள் வைத்து நினைவு கூர்தல் இது ரெண்டும் ருத்ர வழிபாடு (அடியேனின் குருதேவர் வாக்கு )
    அருமையான விளக்கம் மூலத்திலிருந்து எடுத்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி..////////

    மேலதிகத்தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. //////hamaragana said...
    அன்புடன் உயர் திரு தஞ்சாவூரான் அவர்களுக்கு வணக்கம் தங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன் திரும்ப வந்து விட்டது தயவு கூர்ந்து கவனிக்கவும். அல்லது தினமும் கவனிக்கும் மெயில் விலாசம் அனுப்பித்தாருங்கள்,.
    நன்றி my mail id:-ganalatha05@gmail.com/////

    ஆகா. அவர் பதில் அனுப்பிவைப்பார். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  24. ///////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, தீபாவளி கொண்டாடப்படுவதற்கான
    தங்களின் விளக்கம் அருமையாக உள்ளது. தங்களுக்கு எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.
    வணக்கம்.
    நன்றி!
    தங்களன்புள்ள மாணவன்,
    வ.தட்சணாமூர்த்தி//////

    ந்ல்லது. நன்றி. வகுப்பறையின் சார்பாக நானும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  25. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    எனதருமை வாத்தியாருக்கும், அவர்தம் எனது சகோதர மாணாக்கர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!/////

    "அன்புடையார் எல்லாம் உடையார்" உங்கள் வாழ்த்திற்கு நன்றி உண்மைத்தமிழரே!வகுப்பறையின் சார்பாக நானும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  26. /////vprasanakumar said...
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.nalla nalla vilakakangal alithamaikku nanrigal pala./////

    நன்றி. வகுப்பறையின் சார்பாக நானும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  27. //////Naveen said...
    அனைவருக்கும் இனிய தீப ஒளி நன்நாள் வாழ்த்துக்கள். எலோருடைய வாழ்வும் பிரகாசமாக வாழ்த்துகிறேன்.
    சிறப்பான ஒரு தொகுப்பு கட்டுரை. முரளி தங்கவேல் மற்றும் நம் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    வகுப்பறை கண்மணிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது உளம் கனிந்த தீப ஒளி நன் நாள் வாழ்த்துக்கள்./////

    நன்றி. வகுப்பறையின் சார்பாக நானும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  28. //////Naveen said...
    அனைவருக்கும் இனிய தீப ஒளி நன்நாள் வாழ்த்துக்கள். எலோருடைய வாழ்வும் பிரகாசமாக வாழ்த்துகிறேன்.
    சிறப்பான ஒரு தொகுப்பு கட்டுரை. முரளி தங்கவேல் மற்றும் நம் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    வகுப்பறை கண்மணிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது உளம் கனிந்த தீப ஒளி நன் நாள் வாழ்த்துக்கள்./////

    நன்றி. வகுப்பறையின் சார்பாக நானும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  29. ////iyer said...
    தீபாவளி விளக்கம் அருமை..
    தேடித்தந்த மாணவருக்கும்
    பதிவில் அரங்கேற்றிய வாத்தியாருக்கும்
    எல்லோரும் நலம் பெற வேண்டும் என தமது ஆயுளின் பெரும் பகுதியை தந்த
    பேரன்பு மிகு வாரியார் சுவாமிகளுக்கும்
    நன்றிகள் . . நன்றிகள் . . நன்றிகள்..
    ஆனால் ஏன் தீபாவளிக்கு புது துணி வாங்கி உடுத்துகிறார்கள் என்பது தான் பல வருடங்களாக புரியாமலே உள்ளது . .
    மாறும் . .
    மாற்றங்கள் வரும் போது
    நாமும் மாற வேண்டுமா . .//////

    நன்றி. வகுப்பறையின் சார்பாக நானும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  30. ////Arul Murugan. S said...
    >>>> நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று. தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை
    வழிபடுவதற்கு உரிய நாள். <<<<<<
    எந்த தெய்வ வடிவை வழிபாடு செய்தால் என்ன ? நதிகள் அனைத்தும் சங்கமம் ஆகும் இடம் கடல் தானே. கீதையின் சாரமும் அதுவே. இந்த மங்களகரமான நாளில் காகம் போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு அன்னமிட்டு
    மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.////

    நல்லது. அப்படியே செய்யுங்கள்! ஒவ்வொருவரும் அப்படிச் செய்தால், அனைவருக்கும் இறையருள் முன்னிற்கும்!

    ReplyDelete
  31. //////dhilse said...
    Dear sir,
    Happy Diwali! Lessons are interesting.
    I can't be able to read your older lessons. As soon as, I open the older lesson, its get overlapped with your
    side posters. When I opened a lesson, some advertisement windows open. I think that might be the reason for overlapping. Kindly rectify it. I would like to verify the ashtavarkkam old lessons (For example
    http://classroom2007.blogspot.com/2010/10/blog-post_12.html), then only I can be able to understand the new lessons. I lost the continuity.
    Yours sincerely,
    J.SENDHIL////

    12.10.10 ஆம் தேதியிட்ட பதிவு. சரியாகத்தான் உள்ளது. நீங்கள் உங்களுடைய ப்ரவுசர் செட்டிங்ஸை
    மாற்றிப்பாருங்கள்!

    ReplyDelete
  32. /////kmr.krishnan said...
    ஒரே ந‌ல்ல நாள் வெவ்வேறு குழுக்களால் வெவ்வேறு காரணஙளுக்காகக் கொண்டாடப்
    படுகிறது.ஜைனர்களும் கூட தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
    இன்னும் பல ஆசிய நாடுகளிலும் தீபாவளியைப் பல காரணங்ளுக்காகக் கொண்டாடுகின்றனர்.ந‌ம்‌ மரியாதைக்குரிய தவத்திரு வாரியர் சுவாமிகள் கூறுவது சைவநெறி வழி நிற்போர் கொள்ள வேண்டிய கொள்கை.
    பொதுவாக எப்போதுமே சாதாரணர்கள் கூறும் விளக்கம் எதார்த்தமாகவும், நடைமுறை சாத்தியமானதாகவும்
    இருக்கும்./////////
    தீபாவளி அன்று திருத்தவத்துறை சென்று வாத்தியாருக்காகவும்,மாணவர்கள்
    அனைவரின் நலனுக்காகவும் அமி சப்த‌ரிஷீஸ்வரரையும், அமி ஸ்ரீமதி அம்பாளையும் மனமுருக
    வேண்டினேன்.
    அதுசரி! திருத்தவதுறையின் இன்றைய பெயர் யாராவது அறிவீர்களா?///////

    திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடி என்றழைக்கப்படும் ஊர்தான் திருத்தவத்துறை! சரியா?
    ஹி..ஹி..ஹிஹி....கூகுள் ஆண்டவரிடம் கேட்டு வாங்கினேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com