12.8.10

Short story : “உண்மையிலேயே பெண் எதை வேண்டும் என்பாள்?”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Short story : “உண்மையிலேயே பெண் எதை வேண்டும் என்பாள்?”

ஒரு சிற்றரசன் இருந்தான். அவன் பெயர் இளஞ்செழியன். ஆள் அசத்தலாக இருப்பான். தோற்றத்தில் திரைப்பட நடிகர் அஜீத்தைப் போல் இருப்பான். செயல்களில் திரைப்பட நடிகர் விக்ரமைப் போல இருப்பான். அத்துடன் மகா புத்திசாலி வேறு.

அவனுடைய போதாத நேரம். தன்னுடைய நாட்டையும் பறிகொடுத்து, பக்கத்து நாட்டில் இருந்த மாமன்னனிடம் சிறைப்பட நேர்ந்தது, அந்த மாமன்னன் நடந்து முடிந்த யுத்தத்திலேயே அவனைக் கொன்றிருக்கலாம். ஆனால், அவனுடைய தோற்றத்தையும், புத்திசாலித்தனத்தையும், பேச்சுத்திறமையையும் பார்த்து, அவனைக் கொல்லாமல் சிறை பிடித்துக்கொண்டு வந்துவிட்டான்.

இளஞ்செழியனின் ஜாதகத்தைப் பார்த்த, மாமன்னனின் ஆஸ்தான ஜோதிடர், அவனுடைய ஜாதகத்தில் பல யோகங்கள் இருப்பதாகவும், ஐந்து கிரகங்கள் உச்சமாக இருப்பதாகவும், அத்துடன் மகாபுருஷ யோகம் இருப்பதாகவும் கூறினார்.

அதைக்கேள்வியுற்ற மாமன்னன், அவனுக்குத் தன் ஒரே மகளை மணம் முடித்து வைக்கவும், அவன் நாட்டைத் திருப்பி அவனுக்கே கொடுக்கவும் விரும்பினான். மாமன்னனின் மகள் மிகவும் அழகாக இருப்பாள்.

மாமன்னன், அதை வெளியில் சொல்லாமல், அவனை அழைத்து அவனுக்கு ஒரு சவால் விடுத்தார். சவாலில் அவன் வெற்றி பெற்று விட்டால், அவனைச் சுதந்திரமாக விட்டு விடுவதாகவும் சொன்னார்.

என்ன சவால்?

மிகவும் கஷ்டமான கேள்வி ஒன்றிற்கு, அவன் நிதானமாக யோசித்து நல்ல பதிலை - சரியான பதிலைச் சொல்ல வேண்டும். அத்துடன் அதை யோசித்துச் சொல்ல, அல்லது பல இடங்களில் விசாரித்துத் தக்க பதிலைச் சொல்ல கால அவகாசமும் கொடுத்தார். ஒரு வருட காலம் அதற்கு அவகாசம். அந்த காலகட்ட்டத்திற்குள் அவன் சரியான பதிலைச் சொல்லாவிட்டால், இறக்க நேரிடும் என்பதையும் நிபந்தனையாக்கிச் சொன்னார்.

உயிரா? தக்க பதிலா? அதுதான் சவால்!

சரி, கேள்வி என்ன?

“உண்மையிலேயே பெண் எதை வேண்டும் என்பாள்?” அதுதான் கேள்வி
The question was: What do women really want?

பெண்கள் மனதைப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லப்படும் சொல்லடைக்கு மாமன்னன் விடைகாண விரும்பினான். அதனால்தான் அந்தக் கேள்வி.

பெண்ணிற்கு உண்மையிலேயே என்ன வேண்டும்? எது கொடுக்கப்பட வேண்டும்? எதைக் கொடுத்தால் அவள் அதிகம் மகிழ்வாள்? அத்துடன் நிரந்தரமான மகிழ்வு கொள்வாள்? எப்படி வேண்டுமென்றாலும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

பெரிய ஞானிகளால் கூடப் பதில் சொல்ல முடியாத கேள்வி இது. இளம் வயதினான இளஞ்செழியன் இதற்கு எப்படிப் பதில் சொல்வான்?

எப்படியும் பதில் சொல்லியாக வேண்டும். உயிர் பிழைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறதே. ஆகவே மாமன்னனின்  சவாலை இளஞ்செழியன் ஏற்றுக் கொண்டான்.

அவன் தன் நாட்டிற்குத் திரும்பினான். பலரையும் சந்தித்துப் பேசலுற்றான். ஞானிகள், சாஸ்திரங்களை அறிந்தவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நீதிபதிகள் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் பலரிடமும் பேசிப் பார்த்தான். ஆனால் யாரிடம் இருந்தும் ஒரு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை.

ஆனால், சில பெரியவர்கள், அவனுக்கு ஒரு நல்ல யோசனையைச் சொன்னார்கள். நகரத்தின் கோடியில் வசித்துக்கொண்டிருக்கும் சூனியக்காரியைப் போய்ப் பார்க்கச் சொன்னார்கள். கண்டிப்பாக அவள் தகுந்த பதிலையும் சொல்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையையும் கொடுத்தார்கள்.

அவளை நமது நாயகனும் அறிவான். அவளுடைய கட்டண விகிதங்கள் யாராலும் தாக்குப் பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு இருக்கும். அதனால் அவளைப்போய்ப் பார்ப்பதற்கு நமது நாயகனும் விருப்பவில்லை.

மாமன்னன் கொடுத்திருந்த காலக் கெடுவும் முடிவிற்கு வரும் நிலையில் இருந்தது. இன்னும் ஒருநாள் மட்டுமே பாக்கியிருந்தது.

வேறு வழியின்றி, அவளைப் பார்த்துப் பேசினான். தன்னுடைய கேள்வியையும் சொன்னான். அவள் சரியான பதிலைச் சொல்வதற்குச் சம்மதித்ததோடு, அதற்குரிய விலையையும் சொன்னாள். அந்த விலக்கு அவன் சம்மதித்தால், பதில் கிடைக்கும் என்றாள்.

என்ன விலை?

நாயகன், தன்னுடைய நெருங்கிய நண்பன் நந்திவர்மனை தனக்கு மணம் முடித்து வைக்க வேண்டுமென்றாள்.

நாயகன் அதிர்ந்து போய்விட்டான்.

அழகு, வீரம், இளமை, கெட்டிக்காரத்தனம் அத்தனையும் கொண்ட தன் நண்பன் நந்திவர்மனைச் சூனியக்காரி யிடம்  பலி கொடுக்க அவனுக்கு விருப்ப மில்லை. அதைவிட உயிரை விடுவதே மேல் என்று முடிவுகட்டினான்.

திரைப்பட நடிகர் கார்த்திக் போன்ற தோறத்துடன் இருக்கும் அவனுடைய நண்பன் எங்கே? அழுக்குப் பிடித்த இந்தச் சூனியக்காரக் கிழம் எங்கே?

சூனியக்காரியைப் போன்ற இழிபிறவியை - அசிங்கத்தின் மொத்த உருவை அவன் இதுவரை பார்த்ததே இல்லை. தன் நண்பனை அநியாயமாகப் பலி கொடுக்கவும் விரும்பவில்லை. ஆகவே முடியாது என்று கூறிவிட்டுத் திரும்பி விட்டான்.

விதி வேறு விதமாக விளையாடியது. சூனியக்காரியின் வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்த நண்பன், சூனியக்காரியின் கோரிக்கையைக் கேட்டு, தன் நண்பனின் உயிரைக் காப்பாறுவதற்காக, அவளை மணந்து கொள்ளச் சம்மதிப்பதாகக் கூறியதோடு, தன் நண்பனுடன் மீண்டும் சூனியக்காரியின் மாளிகைக்குள் சென்று அவளுடன் பேசலுற்றான்.

இளஞ்செழியனின் உயிரைவிட அது ஒன்றும் பெரியதல்ல என்றான்.

இருவரும் சென்று சூனியக்காரியிடம் பேசினார்கள். சம்பந்தப் பட்டவனே நேரில் வந்து, தன்னை மணக்கச் சம்மதம் தெரிவித்தவுடன், சூனியக்காரி அதீத மகிழ்ச்சி கொண்டாள்.

அத்துடன் ஒரு ஆண்டாக அவர்கள் தேடிக்கொண்டிருந்த (கேள்விக்கான) சரியான பதிலையும் சொன்னாள்.

என்ன பதில்?

கேள்வியை மீண்டும் நினைவு கூறுங்கள்:

கேள்வி: “உண்மையிலேயே பெண் எதை வேண்டும் என்பாள்?” The question was: What do women really want?

அவள் சொன்ன பதில்: 'A woman wants to be in charge of her own life.'

ஆமாம், “ஒரு பெண் தனக்குத்தானே எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள்.” ஆசைப்படுவாள்.

அதுதான் சரியான பதில்

செய்தி நாடு முழுவதும் பரவியது. அனைவரும் அதை ஒப்புக்கொண்டார்கள். சூனியக்காரி ஒரு பெரிய உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறாள் என்று பலரும் பேசிக்கொண்டார்கள். பல பெண்களும் அதை சிலாகித்துப் பேசினார்கள்.

மாமன்னன் இந்தச் சரியான பதிலால் மகிழ்வுற்று, இளஞ்செழியனுக்கு, விடுதலை அளித்ததோடு, அவனுடைய நாட்டையும் திருப்பிக்கொடுத்தான்.

வாக்குத்தவறாமல், அந்த சூனியக்காரிக்கான விலை கொடுக்கப்பட்டது. ஆமாம், இள்ஞ்செழியனின் நண்பனுக்கும் அந்த சூனியக்காரிக்கும் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நந்திவர்மனின் முதல் இரவும் வந்து சேர்ந்தது. ஒரு பயங்கர அனுபவத்தை எதிர்கொள்ளும் முகமாக, நந்திவர்மனும் தன் மனதைத் தேற்றிக் கொண்டு, முதல் இரவு நடக்க இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

அடடா, என்ன ஒரு அற்புதமான காட்சி?

அவன் இதுவரை பார்த்திராத அழகு தேவதை ஒருத்தி படுக்கையில் அமர்ந்திருந்தாள். அவன் சொக்கிப்போகும் விதமாகப் புன்னகை ஒன்றையும் உதிர்த்தாள்.உங்கள் மொழியில் சொன்னால், தமன்னாவைப் போன்ற தோற்றமுடைய பெண் படுக்கையில் அவனை எதிர் கொண்டாள்.

எப்படி இருக்கும்?

மயங்கி விழாத நிலையில் நந்திவர்மன்.

“என்ன நடந்தது?” என்று நந்திவர்மன் வினவ தேவதையாக மாறியிருந்த சூனியக்காரி பேசலுற்றாள். தான் சற்றும் அழகில்லாதவள் என்று தெரிந்தும் தன்னை மணந்து கொண்ட நந்திவர்மனின் அன்பிற்கும், வீரத்திற்கும், நல்ல மனதிற்கும் பரிசாகத் தான் இந்த வடிவத்திற்குத் தன்னை மாற்றிக் கொண்டு விட்டதாக அவள் இனிய குரலில் தெரிவித்தாள்.

அத்துடன் அவள் சொன்னாள். தான் பாதி நேரம் தன் பழைய தோற்றத்துடனும், பாதி நேரம் இந்தத் தோற்றத்துடனும் இருந்தாக வேண்டும் என்றும் சொன்னாள்.

 “நான் பகலில் அழகாக இருக்க வேண்டுமா? அல்லது இரவில் அழகாக இருக்க வேண்டுமா? உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்!” என்று கேட்கவும் செய்தாள்.

நந்திவர்மன் சற்று சிந்தனை வயப்பட்டான்.

“பகலில் இவள் அழகாக இருந்தால், தன்னுடைய உறவினர்களும், நண்பர்களும் வந்து செல்ல முடியும். அதே நேரத்தில் இரவு நேரங்களில் இத்தனை பெரிய மாளிகையில், இவளுடைய சூனியத்தன்மை அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால், பகலில் எப்படியோ இருந்துவிட்டுப் போகிறாள், இரவில் இவள் இளமையாகவும் அழகாகவும் இருந்தால்தான் தன்னால் மகிழ்சியாக இருக்க முடியும். வாழ்க்கையையும் அனுபவிக்க முடியும்” என்ற இரு வேறு சிந்தனைகள் அவன் மனதில் தோன்றி மறைந்தன.

இந்தக் கதையைப் படிக்கும் நீங்கள் அந்த இடத்தில் இருந்தால், உங்கள் சாய்ஸாக எதைச் சொல்வீர்கள்?

இந்தக் கதையைப் படிக்கும் நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் கணவனின் சாய்ஸ் எதாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்?

நன்றாக யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.

கதையின் முடிவு கீழே இருக்கிறது. அத்துடன் உங்களின் முடிவு ஒத்துப்போகிறதா என்று பாருங்கள்

நந்திவர்மன் என்ன சொன்னான் என்பதைவிட, நீங்களாக இருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள் என்பதுதான் முக்கியம். ஆகவே தீர்க்கமாக அதை முடிவு செய்து விட்டு, பக்கத்தைக் கீழே இறக்கிப் பாருங்கள் (scroll down)

ஓக்கேயா?

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V
நந்திவர்மன் கெட்டிக்காரனல்லவா? “உண்மையிலேயே பெண் எதை
வேண்டும் என்பாள்?” என்ற கேள்விக்குப் பதிலாகத் தன் மனைவி
தன் நண்பன் இளஞ்செழியனுக்குச் சொன்ன பதில் அவனுக்குத் தெரியுமல்லவா? அதனால், “உன் விருப்பத்திற்கே அதை விட்டு
விடுகிறேன். உன் விருப்பப்படி நீ எப்படி இருந்தாலும் எனக்குச்
சம்மத்மே” என்றான்.
I would allow YOU to make the choice on your own!

அந்தப் பதிலைக் கேட்டு மிகவும் மகிழந்தவள், “என்னை மதித்து நீங்கள் இதைச் சொன்னதால், என் வாழ்க்கைக்கு நானே முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னதால், நான் இன்று முதல் இப்புதிய தோற்றத்துடனேயே உங்களுடன் எப்போதும் இருக்கப்போகிறேன்!

கதை எப்படி உள்ளது?

கதையின் நீதி என்ன?

There is 'witch' in every woman. If you respect her and allow her to be in charge of her own life, she will become an ANGEL!

ஓக்கேயா?
-----------------------------------------
கதை மின்னஞ்சல்வழி இறக்குமதிச் சரக்கு.
மொழியாக்கம், மற்றும் ஊதிப் பெரிதாக்கியது அடியவனுடைய செயல்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

57 comments:

  1. There is 'witch' in every woman. If you respect her and allow her to be in charge of her own life, she will become an ANGEL!
    ஆராய்ந்து தெளிந்து ஒரு ஞானி கூறியிருக்கிறான்.
    இந்த கலியுகத்தில் மானுடப் பெண்களின் மகத்துவத்தை, மதிநுட்பத்தால் அறிந்தவன் போலும்.

    "வாக்குத்தவறாமல், அந்த சூனியக்காரிக்கான விலை கொடுக்கப்பட்டது. ஆமாம், இள்ஞ்செழியனுக்கும் அந்த சூனியக்காரிக்கும் திருமணம் விமரிசையாக நடைபெற்றது."

    தட்டச்சு பிழை.....
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. /////Alasiam G said...
    There is 'witch' in every woman. If you respect her and allow her to be in charge of her own life, she will become an ANGEL!
    ஆராய்ந்து தெளிந்து ஒரு ஞானி கூறியிருக்கிறான்.
    இந்த கலியுகத்தில் மானுடப் பெண்களின் மகத்துவத்தை, மதிநுட்பத்தால் அறிந்தவன் போலும்.
    "வாக்குத்தவறாமல், அந்த சூனியக்காரிக்கான விலை கொடுக்கப்பட்டது. ஆமாம், இள்ஞ்செழியனுக்கும் அந்த சூனியக்காரிக்கும் திருமணம் விமரிசையாக நடைபெற்றது."
    தட்டச்சு பிழை.....
    நன்றிகள் ஐயா! ////

    உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கும் முன்பாகவே, மீண்டும் ஒருமுறை பதிவைப் படிக்கும்போது தெரிந்து தட்டச்சுப்பிழையைச் சரி செய்துவிட்டேன். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  3. ///////////////வாக்குத்தவறாமல், அந்த சூனியக்காரிக்கான விலை கொடுக்கப்பட்டது. ஆமாம், இள்ஞ்செழியனுக்கும் அந்த சூனியக்காரிக்கும் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.\\\\\\\\\\
    மாப்பிள்ளையை மாத்திட்டீங்களே?
    இதுக்கு இளஞ்செழியன் தூக்குலேயே தொங்கிருக்கலாமே..
    ////////////இந்தக் கதையைப் படிக்கும் நீங்கள் அந்த இடத்தில் இருந்தால், உங்கள் சாய்ஸாக எதைச் சொல்வீர்கள்?
    இந்தக் கதையைப் படிக்கும் நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் கணவனின் சாய்ஸ் எதாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்?
    நன்றாக யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.\\\\\\\
    ரொம்ப யோசிச்சு 'ஊர்காரங்களா முக்கியம்..நைட் ஒகே ஆனா பத்தாது? ' ன்னு ஒரு மாதிரியா முடிவுக்கு வந்து பார்த்தால் இப்பிடி ஒரு வித்தியாசமான ரூட்லே பதிலைச்சொல்லி full time
    option ஐ வொர்க் அவுட் பண்ணிட்டாப்லயே ..நந்திவர்மன் கில்லாடிதான் போங்க..

    ReplyDelete
  4. /////////// ஆள் அசத்தலாக இருப்பான். தோற்றத்தில் திரைப்பட நடிகர் அஜீத்தைப் போல் இருப்பான். செயல்களில் திரைப்பட நடிகர் விக்ரமைப் போல இருப்பான்.\\\\\\\\\\\
    இப்படி ஒரு combination வேணும்னால் ஜப்பான் ரோபோட் companyலேதான் ஆர்டர் பண்ணனும்..

    ReplyDelete
  5. தன் நண்பனுக்காக அவலட்சமான சூனியக்காரியை மணக்கத் துணிந்தவன் தனக்கு வாய்த்த மனைவி இரவிலோ அல்லது பகலிலோ எப்படியிருந்தால் என்ன என்றுதான் விரக்தியடைவான். இதில் என்ன சாய்ஸ் வேண்டிக் கிடக்கிறது. சூர்ப்பனகை அவலட்சணமானவளாகவும், பின்னர் அழகு கொஞ்சும் இளமங்கையாகவும் சென்று இலக்குவனை மயக்க நினைத்த போதும், அவன் அவள் அங்கங்களை அரிந்துதான் அனுப்பினான். உறுதிகொண்ட நெஞ்சு உள்ளவனுக்கு அழகோ அவலட்சணமோ ஒரு பொருட்டு அல்ல. இந்த சூழ்நிலையில் "நீ எப்படிவேண்டுமானாலும் இருந்து கொள்" என்று அந்த இளவரசனின் நண்பன் சொன்னது தன் மணவாழ்க்கையை அனுபவிப்பதற்காக இல்லாவிட்டாலும், இதுதான் விதி, பேயை மணக்கத் துணிந்தவனுக்கு அழகுக்கு என்ன சாய்ஸ் என்று வெறுத்துக்கூட இப்படிச் சொல்லியிருப்பான். நானாக இருந்தாலும் "நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து தொலை" என்றுதான் கூறியிருப்பேன்.

    ReplyDelete
  6. அய்யா,

    எனக்கு தெரிந்த வரை பெண்கள் எல்லோருமே தனது கணவனின் இன் சார்ஜ் ஆக தான் இருப்பதையே விரும்புகிறார்கள்.

    ReplyDelete
  7. மைனர், நீங்க, இன்னொன்றை கவனிக்கலையா?
    அஜீத், விக்ரமெல்லாம் சரி,
    கடைசி வரி..... "அத்துடன் மகா புத்திசாலி வேறு"....
    இதுக்கு சினிமாவில் ஆள் கிடைக்கவில்லையே!
    அதுசரி, அது தான்.... கவியரசு சொன்னது போல்.
    "இது இருந்தா அது இருக்காது
    அது இருந்தா இது இருக்காது
    எல்லாம் இருந்தா அவன் இருக்க
    இடம் இங்கே இருக்காதல்லவா!"
    நன்றி.

    ReplyDelete
  8. ஆசிரியரே,

    கதையும், நீதியும் அட்டகாசம்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  9. /////minorwall said...
    ///////////////வாக்குத்தவறாமல், அந்த சூனியக்காரிக்கான விலை கொடுக்கப்பட்டது. ஆமாம், இள்ஞ்செழியனுக்கும் அந்த சூனியக்காரிக்கும் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.\\\\\\\\\\
    மாப்பிள்ளையை மாத்திட்டீங்களே?
    இதுக்கு இளஞ்செழியன் தூக்குலேயே தொங்கிருக்கலாமே..
    ////////////இந்தக் கதையைப் படிக்கும் நீங்கள் அந்த இடத்தில் இருந்தால், உங்கள் சாய்ஸாக எதைச் சொல்வீர்கள்?
    இந்தக் கதையைப் படிக்கும் நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் கணவனின் சாய்ஸ் எதாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்?
    நன்றாக யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.\\\\\\\
    ரொம்ப யோசிச்சு 'ஊர்காரங்களா முக்கியம்..நைட் ஒகே ஆனா பத்தாது? ' ன்னு ஒரு மாதிரியா முடிவுக்கு வந்து பார்த்தால் இப்பிடி ஒரு வித்தியாசமான ரூட்லே பதிலைச்சொல்லி full time
    option ஐ வொர்க் அவுட் பண்ணிட்டாப்லயே ..நந்திவர்மன் கில்லாடிதான் போங்க..///

    கதையின் நீதியைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் எஸ்கேப் ஆகிட்டீங்களே மைனர்!

    ReplyDelete
  10. /////minorwall said...
    /////////// ஆள் அசத்தலாக இருப்பான். தோற்றத்தில் திரைப்பட நடிகர் அஜீத்தைப் போல் இருப்பான். செயல்களில் திரைப்பட நடிகர் விக்ரமைப் போல இருப்பான்.\\\\\\\\\\\
    இப்படி ஒரு combination வேணும்னால் ஜப்பான் ரோபோட் companyலேதான் ஆர்டர் பண்ணனும்..///////

    ஒரு கற்பனை சுகத்துக்காகவும், கதைக்கு ஒரு பில்டப் கொடுப்பதற்காகவும் அப்படி எழுதியுள்ளேன். நீங்கள் ஜப்பான் ரோபோட் என்று பயமுறுத்துகிறீர்களே மைனர்!

    ReplyDelete
  11. ///Thanjavooraan said...
    தன் நண்பனுக்காக அவலட்சமான சூனியக்காரியை மணக்கத் துணிந்தவன் தனக்கு வாய்த்த மனைவி இரவிலோ அல்லது பகலிலோ எப்படியிருந்தால் என்ன என்றுதான் விரக்தியடைவான். இதில் என்ன சாய்ஸ் வேண்டிக் கிடக்கிறது. சூர்ப்பனகை அவலட்சணமானவளாகவும், பின்னர் அழகு கொஞ்சும் இளமங்கையாகவும் சென்று இலக்குவனை மயக்க நினைத்த போதும், அவன் அவள் அங்கங்களை அரிந்துதான் அனுப்பினான். உறுதிகொண்ட நெஞ்சு உள்ளவனுக்கு அழகோ அவலட்சணமோ ஒரு பொருட்டு அல்ல. இந்த சூழ்நிலையில் "நீ எப்படிவேண்டுமானாலும் இருந்து கொள்" என்று அந்த இளவரசனின் நண்பன் சொன்னது தன் மணவாழ்க்கையை அனுபவிப்பதற்காக இல்லாவிட்டாலும், இதுதான் விதி, பேயை மணக்கத் துணிந்தவனுக்கு அழகுக்கு என்ன சாய்ஸ் என்று வெறுத்துக்கூட இப்படிச் சொல்லியிருப்பான். நானாக இருந்தாலும் "நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து தொலை" என்றுதான் கூறியிருப்பேன்.////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சார்!

    ReplyDelete
  12. /////venkatesan.P said...
    அய்யா,
    எனக்கு தெரிந்த வரை பெண்கள் எல்லோருமே தனது கணவனின் இன் சார்ஜ் ஆக தான் இருப்பதையே விரும்புகிறார்கள்.////

    சத்தமாகச் சொல்லாதீர்கள். தாய்க்குலத்தினர் சண்டைக்கு வந்துவிடப்போகிறார்கள்!

    ReplyDelete
  13. /////Alasiam G said...
    மைனர், நீங்க, இன்னொன்றை கவனிக்கலையா?
    அஜீத், விக்ரமெல்லாம் சரி, கடைசி வரி..... "அத்துடன் மகா புத்திசாலி வேறு"....
    இதுக்கு சினிமாவில் ஆள் கிடைக்கவில்லையே!
    அதுசரி, அது தான்.... கவியரசு சொன்னது போல்.
    "இது இருந்தா அது இருக்காது
    அது இருந்தா இது இருக்காது
    எல்லாம் இருந்தா அவன் இருக்க இடம் இங்கே இருக்காதல்லவா!"
    நன்றி.///////

    சினிமாவில் நாயகனைப் புத்திசாலியாகக் காட்டுவது கதை வசனகர்த்தாவின் வேலையல்லவா ஆலாசியம்!

    ReplyDelete
  14. /////ஸ்ரீ.... said...
    ஆசிரியரே,
    கதையும், நீதியும் அட்டகாசம்.
    ஸ்ரீ....//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. வணக்கம் அய்யா.
    கதை எப்போதும் போல் அருமை.
    உங்கள் பாணியில் அழகாக சொன்னீர்கள்
    ஆனால்
    அழகுக்கு = அஜீத்
    செயல்களுக்கு = விக்ரம்
    மகா புத்திசாலி = ?
    இதுக்கு எந்த நடிகரும் கிடைக்கலியா அய்யா?

    நன்றி அய்யா.

    ReplyDelete
  16. Dear Sir

    Nice Story Sir...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  17. வாத்தி (யார் ) ஐயா
    வணக்கம்

    ஆக மொத்தம் இன்றைய பாடம் ஒரே " அமர்க்களம் " தான் போங்க

    எம்மை போன்ற திருமணம் ஆகாத வாலிபர்களுக்கு அனுபவஸ்தர்கள் சொல்லும் அனுபவ பாடத்திற்கு ஒரு கும்பிடு

    காதலி கிடைக்காதவர்களுக்கு காதலி கிடக்க வழி சொன்னதிற்கு ஒரு கும்பிடு

    ஒரு தலை காதலில் தோல்வி யுற்றவருக்கு புதிய காதலி கிடைக்க வழி சொன்னதிற்கு ஒரு கும்பிடு

    புதுமண தம்பதியருக்கே மிகவும் அவசியமான அடிப்படை பாடத்திற்கு ஒரு கும்பிடு

    இளம் கட்டழகு காலயருக்கே உரித்தான அறுசுவை உணவிற்கு ஒரு கும்பிடு

    ஆக மொத்தம் இன்றைய பாடம்
    " தூள் " தான் போங்க "சாமி" யோ!

    ReplyDelete
  18. இனிய காலை வணக்கம்,

    இனிமையான கதை...
    நன்றி ...

    ReplyDelete
  19. ////பேயை மணக்கத் துணிந்தவனுக்கு அழகுக்கு என்ன சாய்ஸ் என்று வெறுத்துக்கூட இப்படிச் சொல்லியிருப்பான். நானாக இருந்தாலும் "நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து தொலை" என்றுதான் கூறியிருப்பேன்.////

    கதையை விட இது நன்றாக இருக்கிறது தஞ்சாவூராரே.

    ReplyDelete
  20. ஹா ஹா ஹா
    ஐயா கதையும் கருத்தும் அருமை. நந்திவர்மன் கூறியதும் நான் நினைத்ததும் ஒன்று தான். அப்போ எனக்கும் ஒரு தேவதை கிடைப்பாளா? அதற்கு ஆசி வழங்குங்கள் ஐயா.

    ReplyDelete
  21. every one of us know this, but 99% never follow this, and cry foul always on there female relatives (mother, sisters, wifes and friends).

    ReplyDelete
  22. சார்,

    கதை அட்டகாசம்.
    நன்றி!

    ReplyDelete
  23. /////thirunarayanan said...
    வணக்கம் அய்யா.
    கதை எப்போதும் போல் அருமை.
    உங்கள் பாணியில் அழகாக சொன்னீர்கள்
    ஆனால்
    அழகுக்கு = அஜீத்
    செயல்களுக்கு = விக்ரம்
    மகா புத்திசாலி = ?
    இதுக்கு எந்த நடிகரும் கிடைக்கலியா அய்யா?
    நன்றி அய்யா./////

    அம்மா மண்டபத்தில் தேடினால் கிடைக்கும் என்று நினைக்கிறேன். புறப்பட்டு வரட்டுமா?

    ReplyDelete
  24. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Nice Story Sir...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  25. //////kannan said...
    வாத்தி (யார் ) ஐயா
    வணக்கம்
    ஆக மொத்தம் இன்றைய பாடம் ஒரே " அமர்க்களம் " தான் போங்க
    எம்மை போன்ற திருமணம் ஆகாத வாலிபர்களுக்கு அனுபவஸ்தர்கள் சொல்லும் அனுபவ பாடத்திற்கு ஒரு கும்பிடு காதலி கிடைக்காதவர்களுக்கு காதலி கிடக்க வழி சொன்னதிற்கு ஒரு கும்பிடு
    ஒரு தலை காதலில் தோல்வியுற்றவருக்கு புதிய காதலி கிடைக்க வழி சொன்னதிற்கு ஒரு கும்பிடு
    புதுமண தம்பதியருக்கே மிகவும் அவசியமான அடிப்படை பாடத்திற்கு ஒரு கும்பிடு
    இளம் கட்டழகு காளையருக்கே உரித்தான அறுசுவை உணவிற்கு ஒரு கும்பிடு
    ஆக மொத்தம் இன்றைய பாடம்
    " தூள் " தான் போங்க "சாமி" யோ!/////

    கதையின் நீதியை மட்டும் பாருங்கள். அதன்படி நடந்தால், அனைவருக்கும் ஒரு தேவதை கிடைப்பாள்!

    ReplyDelete
  26. /////astroadhi said...
    இனிய காலை வணக்கம்,
    இனிமையான கதை...
    நன்றி .../////

    நல்லது. நன்றி ஆதிராஜ்!

    ReplyDelete
  27. /////ananth said...
    ////பேயை மணக்கத் துணிந்தவனுக்கு அழகுக்கு என்ன சாய்ஸ் என்று வெறுத்துக்கூட இப்படிச் சொல்லியிருப்பான். நானாக இருந்தாலும் "நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து தொலை" என்றுதான் கூறியிருப்பேன்.////
    கதையை விட இது நன்றாக இருக்கிறது தஞ்சாவூராரே.//////

    கதையில் பேய் எங்கே வருகிறது சாமி? தான் நினைத்தபடி உருவம் மாறக்கூடிய சூனியக்காரியல்லவா நாயகி?

    ReplyDelete
  28. ///////R.Puratchimani said...
    ஹா ஹா ஹா
    ஐயா கதையும் கருத்தும் அருமை. நந்திவர்மன் கூறியதும் நான் நினைத்ததும் ஒன்று தான். அப்போ எனக்கும் ஒரு தேவதை கிடைப்பாளா? அதற்கு ஆசி வழங்குங்கள் ஐயா.////

    ஆகா, உங்களுக்கும் ஒரு தமன்னா கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. /////Ram said...
    every one of us know this, but 99% never follow this, and cry foul always on there female relatives (mother, sisters, wifes and friends).//////

    கரெக்ட்! இன்மேல் அப்படி செய்யமாட்டார்கள் அல்லவா?

    ReplyDelete
  30. //////Naresh said...
    சார்,
    கதை அட்டகாசம்.
    நன்றி! ///////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. அய்யா, உங்கள் தமிழும் குறும்பு நடையும் என்னைக் கவர்ந்த ஒன்றாகும். தமிழ் வலைத்தளங்களை 'புலி' யைக் கண்டமாதிரி பயந்து விலக்கிய என்னை வசியப்படுத்தி இழுத்துப் போட்டது உங்கள் தமிழ் நடையும் அன்னியோன்னியப் பேச்சும். உங்களுக்கு நன்றி. இதுவே எம் முதல் தமிழ் தட்டச்சு. உங்களிடம் எனக்குப் பிடித்த ஒன்று உங்களின் திறந்த மனமும் உண்மை யைச் சொல்லும் உங்களின் தன்மையும் தான். எத்துனையோ பேர் உங்கள் வலைப் பதிவினை திருடி தங்களதைப் போல் பதிவிடும் போது (http://gkgupthag.wordpress.com/ இந்தப் பக்கத்தில் உம்முடைய பதிவுகளை பதிவிட்டுள்ளார். உம்முடைய தனித் தமிழ் நடை தான் இதைக் காட்டிக்கொடுத்தது. நீங்கள் தரும் தகவல்களின் வலைப்பதிவின் மூலங்களையும், தகவல்கள் மின்னஞ்சல்களில் வந்ததென்ற உண்மைகளையும் நீங்கள் வெளிப்படுத்துவதும் உங்களை உயர்த்துகிறது. உங்கள் பாணியில் 'நீ எங்கயோ போய்ட்ட ராசா..' வாழ்த்துக்கள். இன்றிலிருந்து நானும் உங்கள் மாணவன்.

    ReplyDelete
  32. வழக்கம்போல கதையில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை, நந்திவர்மன் சிந்தித்து செயல்பட்ட விதம் பாராட்டகுடியது பகுதி நேரத்தையே முழு நேரமாக மாற்றிய பதில் சபாஷ் ! . நம்மால் இப்படி யோசித்திருக்க முடியுமா என்பது டவுட் தான், மற்றபடி இளஞ்செழியன் கல்யாணம் நடந்ததா ? நன்றி

    ReplyDelete
  33. /////////////////SP.VR. SUBBAIYA said...
    கதையின் நீதியைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் எஸ்கேப் ஆகிட்டீங்களே மைனர்!/////////

    கதையின் நீதி பற்றி நான் எதாவுது சொல்லப்போய் எந்த witch ஆவுது சூனியம் வெச்சுட்டாங்கன்னா?ஒரு பயம்தான்..
    இதுவரைக்கும் எத்தினி பேரு வெச்சாங்களோ எந்திரிக்கவே முடியாத அளவு பெரும்பாடா இருக்கு..இதுலே இன்னும் புதுசா வேறயா?
    நீங்கதான் 'எல்லோருக்குள்ளேயும் ஒரு witch தூங்கிக்கிட்டிருக்கு..அதை எழுப்பி உட்டுடாதே' ன்னு தெளிவா சொல்லிட்டீங்களே..

    ReplyDelete
  34. /////Alasiam G said...
    மைனர், நீங்க, இன்னொன்றை கவனிக்கலையா?
    அஜீத், விக்ரமெல்லாம் சரி, கடைசி வரி..... "அத்துடன் மகா புத்திசாலி வேறு"....
    இதுக்கு சினிமாவில் ஆள் கிடைக்கவில்லையே!//////////

    ///////////////thirunarayanan said...
    அழகுக்கு = அஜீத்
    செயல்களுக்கு = விக்ரம்
    மகா புத்திசாலி = ?
    இதுக்கு எந்த நடிகரும் கிடைக்கலியா அய்யா?\\\\\\\\\\\\\\\\\\\
    கமல் என்கிற ஒரு மாமனிதன் இருக்கும்வரை இந்தக் கேள்வி எழும்பவேண்டிய அவசியம் இல்லவே இல்லை..

    ReplyDelete
  35. கோட்சாரத்தில் சுற்றும் கிரகங்கள் இந்தந்த நட்சத்திர சாரத்தில் இருக்கும் போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் இருக்கும்,
    ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுடன் இந்த கோட்சார நகர்வை எப்படிப் பொருத்திப் பார்ப்பது,
    தசா புக்தியில் சூட்சும அந்தர கால நிகழ்வுகள்
    என்று இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து எப்படி ஒரு ஜாதகத்தின் நடப்பு நிகழ்வுகளைத் துல்லியமாக கணிப்பது
    என்பது போன்ற அடுத்தகட்டபாடங்களை case study யுடன் எதிர்பார்க்கலாமா?( பிரபலங்களின் வாழ்வில் எல்லோருக்கும் தெரிந்த நடந்த சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு)

    ReplyDelete
  36. /////Govindasamy said...
    அய்யா, உங்கள் தமிழும் குறும்பு நடையும் என்னைக் கவர்ந்த ஒன்றாகும். தமிழ் வலைத்தளங்களை 'புலி' யைக் கண்டமாதிரி பயந்து விலக்கிய என்னை வசியப்படுத்தி இழுத்துப் போட்டது உங்கள் தமிழ் நடையும் அன்னியோன்னியப் பேச்சும். உங்களுக்கு நன்றி. இதுவே எம் முதல் தமிழ் தட்டச்சு. உங்களிடம் எனக்குப் பிடித்த ஒன்று உங்களின் திறந்த மனமும் உண்மை யைச் சொல்லும் உங்களின் தன்மையும் தான். எத்துனையோ பேர் உங்கள் வலைப் பதிவினை திருடி தங்களதைப் போல் பதிவிடும் போது (http://gkgupthag.wordpress.com/ இந்தப் பக்கத்தில் உம்முடைய பதிவுகளை பதிவிட்டுள்ளார். உம்முடைய தனித் தமிழ் நடை தான் இதைக் காட்டிக்கொடுத்தது. நீங்கள் தரும் தகவல்களின் வலைப்பதிவின் மூலங்களையும், தகவல்கள் மின்னஞ்சல்களில் வந்ததென்ற உண்மைகளையும் நீங்கள் வெளிப்படுத்துவதும் உங்களை உயர்த்துகிறது. உங்கள் பாணியில் 'நீ எங்கயோ போய்ட்ட ராசா..' வாழ்த்துக்கள். இன்றிலிருந்து நானும் உங்கள் மாணவன்.///////

    வாழ்க உங்கள் தமிழ் ஆர்வம். வளர்க உங்கள் தட்டச்சின் வேகம்! வகுப்பறைக்குத் தவறாமல் வாருங்கள்!

    ReplyDelete
  37. //////CUMAR said...
    வழக்கம்போல கதையில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை, நந்திவர்மன் சிந்தித்து செயல்பட்ட விதம் பாராட்டகுடியது பகுதி நேரத்தையே முழு நேரமாக மாற்றிய பதில் சபாஷ் ! . நம்மால் இப்படி யோசித்திருக்க முடியுமா என்பது டவுட் தான், மற்றபடி இளஞ்செழியன் கல்யாணம் நடந்ததா ? நன்றி//////

    ஆகா, இளஞ்செழியனுக்குத் திருமணம் நடந்தது. அதையெல்லாம் விவரித்தால் கதை இன்னும் நீண்டுவிடும். அதனால் அதை விவரிக்கவில்லை!

    ReplyDelete
  38. ///////minorwall said...
    /////////////////SP.VR. SUBBAIYA said...
    கதையின் நீதியைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் எஸ்கேப் ஆகிட்டீங்களே மைனர்!/////////
    கதையின் நீதி பற்றி நான் எதாவுது சொல்லப்போய் எந்த witch ஆவுது சூனியம் வெச்சுட்டாங்கன்னா?ஒரு பயம்தான்.. இதுவரைக்கும் எத்தினி பேரு வெச்சாங்களோ எந்திரிக்கவே முடியாத அளவு பெரும்பாடா இருக்கு..இதுலே இன்னும் புதுசா வேறயா? நீங்கதான் 'எல்லோருக்குள்ளேயும் ஒரு witch தூங்கிக்கிட்டிருக்கு..அதை எழுப்பி உட்டுடாதே' ன்னு தெளிவா சொல்லிட்டீங்களே../////////

    ஆமாம். ஆமாம். அனாவசியமாக எழுப்ப வேண்டாம்.

    ReplyDelete
  39. ///////minorwall said...
    /////Alasiam G said...
    மைனர், நீங்க, இன்னொன்றை கவனிக்கலையா?
    அஜீத், விக்ரமெல்லாம் சரி, கடைசி வரி..... "அத்துடன் மகா புத்திசாலி வேறு"....
    இதுக்கு சினிமாவில் ஆள் கிடைக்கவில்லையே!//////////
    ///////////////thirunarayanan said...
    அழகுக்கு = அஜீத்
    செயல்களுக்கு = விக்ரம்
    மகா புத்திசாலி = ?
    இதுக்கு எந்த நடிகரும் கிடைக்கலியா அய்யா?\\\\\\\\\\\\\\\\\\\
    கமல் என்கிற ஒரு மாமனிதன் இருக்கும்வரை இந்தக் கேள்வி எழும்பவேண்டிய அவசியம் இல்லவே இல்லை..//////

    அதென்னவோ உண்மைதான் மைனர்!

    ReplyDelete
  40. ஆசிரியருக்கு வணக்கம்,
    கதை சூப்பர், அதுவும் உங்கள் நடையில் சுபரோ சூப்பர்.
    ஏன் சாமி இவ்வளவு நாட்களாக இந்த ரகசியத்தை சொல்லாமல் வைத்திருந்திர்கள்.

    ReplyDelete
  41. Dear Sir

    Kalaithuraiyil - "Kamalahassan" Endra Putthisaliyai Eduthu Kondirukkalam...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  42. ஐயா வணக்கம்...
    என் மனதுக்குள்ளே நீண்ட நாட்களாக குடைந்துகொண்டிருந்த கேள்வியும் இதுதான்... இது தெரியாமல் போய்விட்டதே இத்தனை நாட்களாக...! இதற்காகத்தான் நம் முன்னோர்கள் எந்த ஒரு கல்விக்கும் (வாழ்க்கைக் கல்விக்கும் சேர்த்துத்தான்) குரு என்பவர் மிக அவசியம் என்று சொன்னார்கள் போலும்.. இந்த ரகஸியம் தெரிந்தால் குடும்ப நல நீதிமன்றங்களில் இருக்கும் அனேக விவாகரத்து வழக்குகள் காணாமல் போய்விடும்.. ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், இனிமேல் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறவர்களுக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அதிசூட்சும ரகசியத்தை மிக நேர்த்தியாக உணர்த்திவிட்டீர்கள்.. கதை இறக்குமதி சரக்காக இருந்தாலும் தங்களுக்கே உரித்தான பாணியில் தேன் கலந்து வழங்கிவிட்டீர்கள்... மிக்க நன்றிகள் குருதேவா...!

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  43. /////minorwall said...
    கோட்சாரத்தில் சுற்றும் கிரகங்கள் இந்தந்த நட்சத்திர சாரத்தில் இருக்கும் போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் இருக்கும், ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுடன் இந்த கோட்சார நகர்வை எப்படிப் பொருத்திப் பார்ப்பது, தசா புக்தியில் சூட்சும அந்தர கால நிகழ்வுகள்
    என்று இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து எப்படி ஒரு ஜாதகத்தின் நடப்பு நிகழ்வுகளைத் துல்லியமாக கணிப்பது என்பது போன்ற அடுத்தகட்டபாடங்களை case study யுடன் எதிர்பார்க்கலாமா?( பிரபலங்களின் வாழ்வில் எல்லோருக்கும் தெரிந்த நடந்த சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு)//////

    புத்தக வேலையில் மும்மரமாக உள்ளேன். அது முடியட்டும். பின்னால் நீங்கள் கேட்டிருப்பதைச் செய்கிறேன். பொறுத்திருங்கள் மைனர்.

    ReplyDelete
  44. /////arumuga nainar said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    கதை சூப்பர், அதுவும் உங்கள் நடையில் சுப்பரோ சூப்பர்.
    ஏன் சாமி இவ்வளவு நாட்களாக இந்த ரகசியத்தை சொல்லாமல் வைத்திருந்திர்கள்.//////

    உங்களின் பாரட்டுக்களுக்கு நன்றி நைனா(ர்). ஏன் நடுவில் இத்தனை நாட்களாக உங்கள் பின்னூட்டங்களைக் காணவில்லை!

    ReplyDelete
  45. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kalaithuraiyil - "Kamalahassan" Endra Putthisaliyai Eduthu Kondirukkalam...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    உங்கள் பரிந்துரைக்கு நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  46. //////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...
    என் மனதுக்குள்ளே நீண்ட நாட்களாக குடைந்துகொண்டிருந்த கேள்வியும் இதுதான்... இது தெரியாமல் போய்விட்டதே இத்தனை நாட்களாக...! இதற்காகத்தான் நம் முன்னோர்கள் எந்த ஒரு கல்விக்கும் (வாழ்க்கைக் கல்விக்கும் சேர்த்துத்தான்) குரு என்பவர் மிக அவசியம் என்று சொன்னார்கள் போலும்.. இந்த ரகஸியம் தெரிந்தால் குடும்ப நல நீதிமன்றங்களில் இருக்கும் அனேக விவாகரத்து வழக்குகள் காணாமல் போய்விடும்.. ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், இனிமேல் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறவர்களுக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அதிசூட்சும ரகசியத்தை மிக நேர்த்தியாக உணர்த்திவிட்டீர்கள்.. கதை இறக்குமதி சரக்காக இருந்தாலும் தங்களுக்கே உரித்தான பாணியில் தேன் கலந்து வழங்கிவிட்டீர்கள்... மிக்க நன்றிகள் குருதேவா...!
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்//////

    கதை உங்கள் மனதை நெகிழவைத்தது குறித்து எனக்கும் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  47. உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
    கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
    Link:www.secondpen.com/tamil/what is jaiku?

    ReplyDelete
  48. ////secondpen said...
    உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
    கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி. Link:www.secondpen.com/tamil/what is jaiku? ////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  49. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கதை மின்னஞ்சல்வழி இறக்குமதி யாக இருப்பினும்,.
    மொழியாக்கம், மற்றும் அதன் அமைப்பும் தங்களின் கை வண்ணத்தால் மிகவும் சிறப்பாக உள்ளது.
    நண்பனின் உயிருக்காகத் தான்,அவள் அழகில்லாதவள் என்று தெரிந்தும் அவளை மணந்துக்கொள்ள நந்திவர்மன் சம்மதித்துள்ளான்.அவளின் அழகைப் பற்றி அவன் கவலைப் படவே இல்லை. நண்பனுக்காக தியாகம் செய்யத்துணிந்த அந்த நல்ல உள்ளத்திற்கு இறைவன் தந்தப்பரிசுதான்
    தேவதை வடிவம்.
    நண்பனுக்காக உதவிட முன்வந்த நந்திவர்மன்பெற்ற பரிசுதான்,.தேவதை வடிவ மனைவி.

    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-08-12

    ReplyDelete
  50. அய்யா, உங்கள் வலைப் பதிவுகளின் உந்துதலால் நான் தொடங்கிய ஒரு முயற்சி.
    http://vettipaechchu.blogspot.com/

    இதற்கு உங்கள் ஆசியும் ஆதரவும் வேண்டி

    அன்புடன்,
    வேதாந்தி

    ReplyDelete
  51. தலைவரே, கலக்கி விட்டீர்கள், மிக மிக அருமை. simply superb

    ReplyDelete
  52. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கதை மின்னஞ்சல்வழி இறக்குமதியாக இருப்பினும்,.
    மொழியாக்கம், மற்றும் அதன் அமைப்பும் தங்களின் கை வண்ணத்தால் மிகவும் சிறப்பாக உள்ளது.
    நண்பனின் உயிருக்காகத்தான்,அவள் அழகில்லாதவள் என்று தெரிந்தும் அவளை மணந்துக்கொள்ள நந்திவர்மன் சம்மதித்துள்ளான்.அவளின் அழகைப் பற்றி அவன் கவலைப்படவே இல்லை. நண்பனுக்காக தியாகம் செய்யத்துணிந்த அந்த நல்ல உள்ளத்திற்கு இறைவன் தந்தப்பரிசுதான்
    தேவதை வடிவம்.
    நண்பனுக்காக உதவிட முன்வந்த நந்திவர்மன்பெற்ற பரிசுதான்,.தேவதை வடிவ மனைவி.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////////

    கரெக்ட். தியாகத்திற்குக் கிடைத்த பரிசு அது! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி/

    ReplyDelete
  53. ///////வெட்டிப்பேச்சு said...
    அய்யா, உங்கள் வலைப் பதிவுகளின் உந்துதலால் நான் தொடங்கிய ஒரு முயற்சி.
    http://vettipaechchu.blogspot.com/
    இதற்கு உங்கள் ஆசியும் ஆதரவும் வேண்டி
    அன்புடன்,
    வேதாந்தி///////

    என் ஆதரவு நம் வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் எப்போதும் உண்டு. உங்களின் பதிவுகளை அவ்வப்போது பார்க்கிறேன். புக் மார்க் செய்து வைத்துள்ளேன்.

    ReplyDelete
  54. /////vprasanakumar said...
    தலைவரே, கலக்கி விட்டீர்கள், மிக மிக அருமை. simply superb/////

    எல்லாம் உங்களின் (உங்களைப்போன்ற வாசகர்களின்) மகிழ்ச்சிக்காகத்தான் பிரசன்னகுமார்!

    ReplyDelete
  55. கதை மிகவும் அருமை.
    எவ்வளவு அற்புதமான கருத்து
    ஒவ்வொரு ஆண்மகனும் தெரிந்து கொள்ள கூடிய விசயம்.
    இன்று பல குடும்பங்களின் பிரிவிற்கு
    பெண்களை மதிக்க தெரியாத ஆண்களே காரணம்.நன்றி அய்யா!

    ReplyDelete
  56. /////INDIA 2121 said...
    கதை மிகவும் அருமை.
    எவ்வளவு அற்புதமான கருத்து
    ஒவ்வொரு ஆண்மகனும் தெரிந்து கொள்ள கூடிய விசயம்.
    இன்று பல குடும்பங்களின் பிரிவிற்கு
    பெண்களை மதிக்க தெரியாத ஆண்களே காரணம்.நன்றி அய்யா! /////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  57. Mathi nutpamaana kathai ayya. arumai, pagirvirkku nandrigal.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com