14.8.10

மெத்த இன்பம் எப்போது சேரும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மெத்த இன்பம் எப்போது சேரும்?

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 15

புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்
புகழ் பெற்ற பாடல்கள்தான்!
----------------------------------------------------------------
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே!! 


(முருகனைக் கூப்பிட்டு)

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு
குறைகள் யாவும் போகுமே!
அவர் குடும்பம் தழைத் தோங்குமே!
சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்
சகல பயம் நீங்குமே!! 


முருகனைக் கூப்பிட்டு)

அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
அருகில் ஓடி வருவான்!
அன்பு பெருகி அருள் புரிவான்!
அந்தக் கருணை உருவான குருபரன்
என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!

 
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே!
பகை மாறி உறவாடுமே!
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே!! 


முருகனைக் கூப்பிட்டு)

பாடல் ஆக்கம்: எம்.பி.சிவம்
பாடியவர்: டி.எம்.எஸ்
----------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

23 comments:

  1. முருக பக்தர்களில் முதன்மையானவர் என்பதை வாரம்தோறும் பாடல்களால் நிரூபித்து வருகிறீர்கள்.இந்தப் பாடல் டி எம் எஸ் பாடிய பாடல்களிலேயே மனதைத் தொடக்கூடியது.நினைவூட்டியமைக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  2. http://siththarkal.blogspot.com/ இது சித்தர்கள் பற்றிய தளம், இந்த தளம் பற்றிய உங்கள் கருத்தை சொல்லுங்க.. இந்த தளதுல என்ன என்னமோ எல்லாம் சொல்றாங்க..

    ReplyDelete
  3. //////kmr.krishnan said...
    முருக பக்தர்களில் முதன்மையானவர் என்பதை வாரம்தோறும் பாடல்களால் நிரூபித்து வருகிறீர்கள்.இந்தப் பாடல் டி எம் எஸ் பாடிய பாடல்களிலேயே மனதைத் தொடக்கூடியது.நினைவூட்டியமைக்கு நன்றி அய்யா!//////

    தீவிர முருக பக்தன் என்று சொல்லலாம். ஆனால் முதன்மை நிலை என்று சொல்ல முடியாது. அதை இறைவன் தான் வந்து உணர்த்த வேண்டும். வீராபாகுவிற்கு உணர்த்தியதைப்போல! நன்றி சார்!

    ReplyDelete
  4. indira said...
    http://siththarkal.blogspot.com/ இது சித்தர்கள் பற்றிய தளம், இந்த தளம் பற்றிய உங்கள் கருத்தை சொல்லுங்க.. இந்த தளத்துல என்ன என்னமோ எல்லாம் சொல்றாங்க..//////

    பார்த்தேன். இலங்கையைச் சேர்ந்த பெண்மணியின் தளம் என்று தெரிகிறது. நல்ல நடையில் எழுதுகிறார். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்!

    ReplyDelete
  5. ஆசிரியருக்கு வணக்கம்,
    பாடல் அருமை அதைப் போலவே
    படம் பத்துமலை முருகனும் (மலேசியா) அருமை.
    நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  6. //////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    பாடல் அருமை அதைப் போலவே
    படம் பத்துமலை முருகனும் (மலேசியா) அருமை.
    நன்றிகள் ஐயா.//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. இதை நீங்கள் எனக்காகவே எழுதியது போல் உள்ளது. நன்றி ஐயா.

    ReplyDelete
  8. sir,

    Very good song, always in my life i have listened to this song, but now only i'm reading this song, very good effort, thanks sir.

    ReplyDelete
  9. அய்யா . .
    மறுபடியும் இந்த பகுதிக்காக . . விருப்ப பாடல்களை தருகிறோம் . .
    (எங்கள் வாத்தியாரின் வகுப்பறை என்பதால்)

    முருகன் பாடல்கள் என்றால் . .
    டிஎம்எஸ் தான் என்ற போதும் . .
    பட்டியலில் நிற்பவர் ஆண்களில் சீர்காழியார், பித்துக்குளியார்
    பெண்டிரில் சூலமங்கலம் சகோதரிகள் அவர் மட்டுமே . .

    அந்த அம்மையார் பாடிய அந்த பாடல்

    "திருநீறில் மருந்து இருக்கு தெரியுமா . . ?"

    இந்த பகுதிக்கு விருப்ப பாடலாக தருகிறோம். விரைவில் வரும் என ஆவலுடன் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  10. இந்த பாடலை கேட்டால் நம் துன்பங்கள்
    பறந்து போகும்.உண்மை தான் அய்யா!

    ReplyDelete
  11. ////R.Puratchimani said...
    இதை நீங்கள் எனக்காகவே எழுதியது போல் உள்ளது. நன்றி ஐயா.//////////

    பதிவிட்டதுபோல என்று சொல்லுங்கள். எழுதியது வேறு ஒருவர்: எம்.பி.சிவம்:-))))

    ReplyDelete
  12. vprasanakumar said...
    sir,
    Very good song, always in my life i have listened to this song, but now only i'm reading this song, very good effort, thanks sir.

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  13. /////iyer said...
    அய்யா . .
    மறுபடியும் இந்த பகுதிக்காக . . விருப்ப பாடல்களை தருகிறோம் (எங்கள் வாத்தியாரின் வகுப்பறை என்பதால்)முருகன் பாடல்கள் என்றால் . . டிஎம்எஸ் தான் என்ற போதும் . .
    பட்டியலில் நிற்பவர் ஆண்களில் சீர்காழியார், பித்துக்குளியார்
    பெண்டிரில் சூலமங்கலம் சகோதரிகள் அவர் மட்டுமே . .
    அந்த அம்மையார் பாடிய அந்த பாடல்
    "திருநீறில் மருந்து இருக்கு தெரியுமா . . ?"
    இந்த பகுதிக்கு விருப்ப பாடலாக தருகிறோம். விரைவில் வரும் என ஆவலுடன் காத்திருக்கிறோம்//////

    நல்லது. அடுத்தவாரம் வலை ஏற்றிவிடுகிறேன்!

    ReplyDelete
  14. ////INDIA 2121 said...
    இந்த பாடலை கேட்டால் நம் துன்பங்கள்
    பறந்து போகும்.உண்மை தான் அய்யா!////

    உண்மைதான்! நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. வாத்தியார் ஐயா வணக்கம்

    எம்குல தெய்வம் " சண்முகநாதனை" வலையில் ஏற்றியமைக்கு மிக்க நன்றி ஐயா
    முருகா! உமது சித்தம் எதுவோ அதுவாகவே அடியேன் ஆவேன் எம்பெருமானே!
    யாமோ பொம்மை, நீயோ இந்த பொம்மையின் சகலமும்
    எம்பெருமானே!

    அரோகரா ஆரோகரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீரவேல் முருகனுக்கு அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா

    ReplyDelete
  16. ///////kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்
    எம்குல தெய்வம் " சண்முகநாதனை" வலையில் ஏற்றியமைக்கு மிக்க நன்றி ஐயா
    முருகா! உமது சித்தம் எதுவோ அதுவாகவே அடியேன் ஆவேன் எம்பெருமானே!
    யாமோ பொம்மை, நீயோ இந்த பொம்மையின் சகலமும்
    எம்பெருமானே!
    அரோகரா ஆரோகரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீரவேல் முருகனுக்கு அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா//////

    உங்கள் முருக பக்தி வாழ்க! வளர்க! நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  17. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    /////முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்குமுற்றிய வினை தீருமே!///////
    சிறந்த பாடல்,பாடலின் வரிகளைப் படிக்கும்போதே மனதில் டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் பாடல்.தற்போது கேட்கும் வைப்பு அளித்தமைக்கு நன்றி.
    - - - - - - - - ---- - - - -- -
    /////"தீவிர முருக பக்தன் என்று சொல்லலாம். ஆனால் முதன்மை நிலை என்று சொல்ல முடியாது. அதை இறைவன் தான் வந்து உணர்த்த வேண்டும்".//////

    திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களும் ஆரம்ப காலங்களில்
    தீவிர முருக பக்தராகவே இருந்து வந்துள்ளார்.
    - - - - -- ----------------------
    முருகனின் அருளால், தகுந்த நேரம் வரும் சமயத்தில்,தங்களுக்கும் இறைவன் தானே வந்து கண்டிப் பாக உணர்த்துவார்.

    பொது சேவையாக தனக்குத் தெரிந்தவற்றை
    மற்றவர்க்கும் கற்ப்பிக்க வேண்டும் என்று தோன்றுவதே சிறந்த பக்தியின் தொடர்புடைய உயர்ந்த எண்ணமே ஆகும்.

    அதுவும் பலவிதமான இடையூறுகளுக்கு மத்தியில் குன்றின் மேல் இட்ட விளக்காக
    பிரகாசிக்கும் திறமை,தெய்வ சக்தியின் மூலமாகவே பெற்றுள்ளீர்கள்.

    இறைவன் தங்களுக்கு மேலும் ,மேலும் தகுந்த வளர்ச்சியை அளித்து நீடூழி வாழ்வதற்கும் அருள வேண்டுமென,இறைவனை வேண்டிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-08-14

    ReplyDelete
  18. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    /////முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்குமுற்றிய வினை தீருமே!///////
    சிறந்த பாடல்,பாடலின் வரிகளைப் படிக்கும்போதே மனதில் டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் பாடல்.தற்போது கேட்கும் வைப்பு அளித்தமைக்கு நன்றி. - - - - - - - - ---- - - - -- -
    /////"தீவிர முருக பக்தன் என்று சொல்லலாம். ஆனால் முதன்மை நிலை என்று சொல்ல முடியாது. அதை இறைவன் தான் வந்து உணர்த்த வேண்டும்".//////
    திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களும் ஆரம்ப காலங்களில்
    தீவிர முருக பக்தராகவே இருந்து வந்துள்ளார். - - - - -- ----------------------
    முருகனின் அருளால், தகுந்த நேரம் வரும் சமயத்தில்,தங்களுக்கும் இறைவன் தானே வந்து கண்டிப் பாக உணர்த்துவார்.
    பொது சேவையாக தனக்குத் தெரிந்தவற்றை மற்றவர்க்கும் கற்ப்பிக்க வேண்டும் என்று தோன்றுவதே சிறந்த பக்தியின் தொடர்புடைய உயர்ந்த எண்ணமே ஆகும்.
    அதுவும் பலவிதமான இடையூறுகளுக்கு மத்தியில் குன்றின் மேல் இட்ட விளக்காக
    பிரகாசிக்கும் திறமை,தெய்வ சக்தியின் மூலமாகவே பெற்றுள்ளீர்கள்.
    இறைவன் தங்களுக்கு மேலும் ,மேலும் தகுந்த வளர்ச்சியை அளித்து நீடூழி வாழ்வதற்கும் அருள வேண்டுமென,இறைவனை வேண்டிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    உங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  19. ஐயா வணக்கம்...!
    மனதைத் தொட்டு, வருடிக் கொடுக்கும் பாடல்.. முருகன் பாடல்களை வகுப்பறையில் தாங்கள் வழங்கும்போதெல்லாம் நான் என்னைப் பெற்று வளர்த்த கிராமத்துக்கும் (திருவண்ணாமலை மாவட்டம் - சோமாசிபாடி கிராமம்) என் பள்ளிப்பருவத்திற்குமே சென்றுவிடுகிறேன்.. மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள் குருதேவா... மிக்க நன்றிகள்...!

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  20. Dear Sir


    Arumayana Padal Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  21. /////SWATI said...
    It was a very nice idea! Just wanna say thank you for the information you have shared. Just continue writing this kind of post. I will be your loyal reader. Thanks again. and welcome to my Blog:
    FREE INTRADAY TIPS////

    நல்லது நன்றி. நேரம் கிடைக்கும்போது, உங்கள் பதிவுகளைப் பார்க்கிறேன்!

    ReplyDelete
  22. /////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    மனதைத் தொட்டு, வருடிக் கொடுக்கும் பாடல்.. முருகன் பாடல்களை வகுப்பறையில் தாங்கள் வழங்கும்போதெல்லாம் நான் என்னைப் பெற்று வளர்த்த கிராமத்துக்கும் (திருவண்ணாமலை மாவட்டம் - சோமாசிபாடி கிராமம்) என் பள்ளிப்பருவத்திற்குமே சென்றுவிடுகிறேன்.. மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள் குருதேவா... மிக்க நன்றிகள்...!
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்////////

    பதிவிட்ட பாடல் உங்களின் மெய்சிலிர்க்கும் பாடலாக அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  23. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Arumayana Padal Sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com