7.7.10

Hide & Seek game by blogger.com

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Hide & Seek game by blogger.com

ப்ளாக்கரின் கண்ணாம்பூச்சி ஆட்டம்!

ப்ளாக்கர் அமைப்பு நேற்று தன் செல்வங்களுடன் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடியது.

நம்முடைய ப்ளாக்கர் தளத்தில் இருந்து பின்னூட்டங்களை (comments) பதிவிற்கு அனுப்பினால், போகாது. நீ செய்வது தவறு என்று சொல்லும். அத்துடன் கட்டிய கண்களை அவிழ்த்தும் விடாது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி சிரமப்பட்டு அனுப்பினால், முதலில் பின்னூட்டங்கள் பதிவிற்குச் செல்வது மாதிரிப் போய்விட்டுத் திரும்பவும் இங்கே வந்து அமர்ந்து கொண்டுவிடும். அல்லது வராது காணாமல் போய்விடும். நமது மின்னஞ்சல் பெட்டியில் போய் உட்கார்ந்து கொள்ளும். அங்கே போய் நடவடிக்கை எடுத்தால் மீண்டும் ஒரு கண்ணாம்பூச்சி ஆட்டம்

மாலையில் நமது முத்துராமகிருஷ்ணர் அவர்களும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் கலந்து கொண்டு, ஆட்டத்தில் இருக்கிறார் என்று தெரியவந்தது. நாங்கள் எல்லாம் ஆடும் வயதைத் தாண்டி விட்டோம் என்பதும், ஆடுவதற்கு வேண்டிட தொழில்நுட்ப அறிவு எங்களுக்கு இல்லை என்பதும் ப்ளாக்கருக்குத் தெரியாது. அதுதான் சோகம்

Error approving moderated comments - error code bx-03qgph என்பது மட்டுமே தெரியவரும். சுமார் 4 மணி நேர (இரண்டு பதிவுகளை எழுதும் நேரம்) போராட்டத்திற்குப் பிறகு, வேறு வழியில்லை என்று ப்ளாக்கர் உதவிக் குழுவிற்குச் சென்று பார்த்தால், அங்கே நூற்றுக் கணக்கான பேர்கள் நமக்கு முன்னால் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

கூகுள் ஆண்டவர், நேரடியாக அருள் பாலிக்காமல், இதற்கென்று, ப்ளாக்கர் அரங்கம், உதவிக்குழு என்று இரண்டு அமைப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

பத்து அல்லது நூறு பேர்கள் என்றால், அவரால் நேரடியாக உதவி செய்ய முடியும். இன்றையத் தேதியில் 20 கோடிப் பேர்கள் என்றால் அவரால் என்ன செய்ய முடியும்?

ஒரு புள்ளி விவரம்:
Technorati currently states it is tracking over 112.8 million blogs, a number which obviously does not include all the 72.82 million Chinese blogs as counted by The China Internet Network Information Center. Blog statistics often concern the English language blogosphere but we should not forget about the millions of other blogs that are not always included in estimations.

கடைசியாக உதவிக்குழுவிடம் என்னுடைய பிரச்சினையைப் பதிந்துவிட்டு வந்தேன். அதில் இருக்கும் யாரோ புண்ணியவான் சரி செய்து இருக்கிறார். இன்னும் முழுமையாகச் சரியாகவில்லை. இன்று சரியாகும் என்று நினைக்கிறேன்

ஆகவே அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்த பாடம் நாளைக்கு நடைபெறும். இன்றைக்கு வகுப்பறைக்கு வந்தவர்கள் நீங்களாகவே பழைய பாடங்களைப் புரட்டிப்பார்த்துவிட்டுச் செல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

10 comments:

  1. தாங்கள் கூகுளாரை ஆண்டவர் என்று சொல்லி விட்டீர்கள். ஆண்டவன் திருவிளையாடல் நடத்தாமல் இருப்பாரா.

    ReplyDelete
  2. ////ananth said...
    தாங்கள் கூகுளாரை ஆண்டவர் என்று சொல்லி விட்டீர்கள். ஆண்டவன் திருவிளையாடல் நடத்தாமல் இருப்பாரா?./////

    ஆண்டவரின் திருவிளையாடல் நன்மையில் முடியும். கூகுள் ஆண்டவரின் திருவிளையாடலும் இதுவரை நன்மையில்தான் முடிந்திருக்கிறது. நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  3. Hide and seek game
    Who to blame
    Its His damn
    We don't lam
    soon
    He will light-up the lamp!

    ReplyDelete
  4. ////Alasiam G said...
    Hide and seek game
    Who to blame
    Its His damn
    We don't lam
    soon
    He will light-up the lamp! /////

    in our sight
    everyone is right
    life is to fight
    God is great
    everything will be all right!

    ReplyDelete
  5. எங்கம்மாவின் ஒன்றுவிட்ட சித்தியோட மகளின் மகளை எனக்கு வரனாக பார்க்கிறார்கள். சாஸ்திரம் என்ன சொல்லுது சுவாமி?

    ReplyDelete
  6. ////Rangan Kandaswamy said...
    எங்கம்மாவின் ஒன்றுவிட்ட சித்தியோட மகளின் மகளை எனக்கு வரனாக பார்க்கிறார்கள். சாஸ்திரம் என்ன சொல்லுது சுவாமி?////

    உங்கள் ஒன்றுவிட்ட சகோதரியின் மகள். நல்ல பெண் கிடைப்பதே சிரமமான காலம். அவர்களே விரும்பிச் செய்கிறார்கள் எனும் போது, உங்களுக்கும் பிடித்திருக்கிறதென்றால், சாஸ்திரத்தை எல்லாம் கடாசிவிட்டுப் பெண்ணை மணந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  7. அச்சச்சோ. . .

    இங்கேயும் மழை பெய்யுதா . .

    நம்ம ஸ்கூல்ல படிக்கிற போது
    மழைன்னு சொன்ன லீவு விடுவாங்க . .

    லீவு விட்டதும் மழையே வராது . .
    அப்புறம் கோலி ஆட வேண்டியது தான் . .

    அப்படித்தான் இந்த ப்ளாக்கரிலும். .
    நம்ம வகுப்பறைக்கும் லீவு . . .

    கொலம்பஸ் கொலம்பஸ்
    விட்டாச்சு லீவு . .

    ReplyDelete
  8. /////iyer said...
    அச்சச்சோ. . .
    இங்கேயும் மழை பெய்யுதா . .
    நம்ம ஸ்கூல்ல படிக்கிற போது
    மழைன்னு சொன்ன லீவு விடுவாங்க . .
    லீவு விட்டதும் மழையே வராது . .
    அப்புறம் கோலி ஆட வேண்டியது தான் .
    அப்படித்தான் இந்த ப்ளாக்கரிலும்.நம்ம வகுப்பறைக்கும் லீவு . . .
    கொலம்பஸ் கொலம்பஸ்
    விட்டாச்சு லீவு . ./////

    உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள். எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும் லீவு கொடுக்கிறேன்.
    1609 பேர்களில் ஒரு பத்து அல்லது பதினந்து பேர்கள் வகுப்பிற்கு டும்மா என்றால் தெரியவா போகிறது?

    ReplyDelete
  9. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கூகுள் பற்றிய தங்களின் தகவல்களுக்கு

    நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-07

    ReplyDelete
  10. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கூகுள் பற்றிய தங்களின் தகவல்களுக்கு
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com