30.7.10

கோடிப் பணமும் கொட்டிவைக்க வீடும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கோடிப் பணமும் கொட்டிவைக்க வீடும்!

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 13

புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்
புகழ் பெற்ற பாடல்கள்தான்!
--------------------------------------------------------------------
ஆயிரம் பாட்டெழுதி அத்தனைக்கும் பொருளெழுதி
பாயிரமும் எழுதி வந்தேன் - முருகா
உனைப் பார்த்து விட்டேன் பாட்டெதற்கு?

(ஆயிரம்)

கோடிப்பணம் திரட்டி கொட்டிவைக்க வீடுகட்டி
பாடுபட்டு குலைந்தேன் நான் முருகா - உன்னை
பார்த்துவிட்டேன் வீடெதற்கு?

(ஆயிரம்)

ஆவி நிலைக்குமென்று ஆடுகின்ற கோடியில் ஓர்
பாவியென துடிக்கின்றேன் நான் - முருகா
உன்னை பார்த்து விட்டேன் துயர் எதற்கு?

(ஆயிரம்)

வேதங்கள் நான் அறிந்தேன் விளக்கம் கேட்டறிந்தேன்
பாதைகளின் முடிவே ஓம் முருகா - உன்னை
பார்த்து விட்டேன் நூல் எதற்கு?

(ஆயிரம்)

எழுதியவர்: கவிஞர் தமிழ் நம்பி
பாடியவர்: T.M. செளந்தரராஜன்
------------------------------------------------
பாடலில் உள்ள சொற்சிலம்பத்தைப் பாருங்கள். எழுதியவர் அருமையாக எழுதியுள்ளார். ஒரு முறை படித்தாலே மனதில் பதிந்துவிடும்படியான ஆக்கம்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

37 comments:

  1. தமிழ் நம்பியின் பாடல் இறை நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது.
    தேர்ந்தெடுத்த நல் முத்துக்களாகக் கொடுக்கிறீர்கள்.மிக்க நன்றி அய்யா!

    ஆனந்தைப் போலவே மிகவ்ம் அடக்கி வாசித்துக்கொண்டு இருப்பவர் "சூரி" என்ற பிளாகர் பெயரும், "சுப்புரத்தினம்" என்ற புனைப் பெயரும் கொண்டு
    வகுப்பறையின் முக்கியமான, மூத்த மாணவர்; என் 37 ஆண்டு குடும்ப‌ நண்பர்;அலுவலகத்தில் என‌க்கு மேல் சக்திவாய்ந்த பெரிய அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.இப்போது 72 வயது இருக்கலாம்.மிக அழகான ஆங்கில, தமிழ், ஹிந்தி நடையும் கையெழுத்தும், அபூர்வமான ஓவியம்
    வரையும் ஆற்றலும் உடையவர்.கர்னாடக இசையின் பரம ரசிகர்.தமிழ்,ஆங்கில, ஹிந்தி இலக்கியத்தில் பலமான ஆழ்ந்த படிப்பும் ஆய்வுமனமும் கொண்டவர். திருக்குறளில் ஆழ‌ங்கால் பட்டு முத்து எடுத்தவர்.இந்த மூத்த வாலிபர் 13 பிளாக் நடத்துகிறார்.மிகவும் பயனுள்ள தகவல்கள் அங்கே கிடைக்கும்.யூ டியூப் இணையத்தின் பயனுள்ள முகத்தை சூரி காட்டுகிறார்.உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அவர் நடத்தும் பிளாக்
    ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டும்.நான் அறிந்தவரை
    அதிக எண்ணிக்கையில் ஒரே நபர்
    (13) பிளாக் நடத்துவது சூரி அவர்கள் மட்டுமே!

    சில ஆண்டுகளாக விட்டுப் போயிருந்த எங்கள் தொடர்பை வகுப்பறை மீண்டும் புதுப்பித்துக் கொடுத்தது.தானாகவே என்னைத்தொடர்பு கொண்ட‌
    சூரிஜி, மீண்டும் கொஞ்சம் கத்தரித்தது போல் விலகி நிற்கிறார்.என்னை அறியாமல் ஏதாவது ஆறிய புண்ணை கிளறிவிட்டு விட்டேனோ என்று வருத்தமாக உள்ளது.சூரிஜி! சிறியோர் செய்த பெரும் பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே!

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் வரிசையில்
    -----"ஆயிரம் பாட்டெழுதி அத்தனைக்கும் பொருளெழுதி",-------
    என்ற அருமையான நினைவுகளில் நிறைந்த இப்பாடலை தற்போது நினைவூட்டிய தங்களுக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-07-30

    ReplyDelete
  3. அதிகாலை நேரம் பூபாள ராகம்
    ஆனந்த திருவாஞ்சனம், எங்கள் வகுப்பில்
    ஆனந்த திருவாஞ்சனம்.

    திருமுருகன் திருவடி போற்றும் - தெய்வ
    திருவருள் பெற்ற அறிவுடைய நம்பியின்
    அற்புத கானம் அதுதரும் ஞானம்.

    முதலடி அது ஆரோகணம் அமுத
    அடுத்த அடியது அவரோகணம் - இவை
    இரண்டும் என் இதயத்தில் ஆலிங்கனம்.

    அதிகாலை நேரம் பூபாள ராகம்
    தரும் திருவாஞ்சனம் முருகன்
    அடியவர் தன் நெஞ்சில் - நீங்காது
    நிழைத்து நிற்கும் பேரானந்தம்...

    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  4. அய்யாவுக்கு காலை வணக்கம்,
    தெய்வமனம் கமழும்
    முத்தான பாடலை
    தந்த உங்களுக்கு
    நன்றிகள் கோடி.
    ஆவி நிலைக்குமென்று ஆடுகின்ற கோடியில் ஓர்
    பாவியென துடிக்கின்றேன் நான் - முருகா
    உன்னை பார்த்து விட்டேன் துயர் எதற்கு?

    மிகவும் அருமையான வரிகள்.

    ஆயிரம் கேள்விகளுக்கும் அளுக்காமல்,
    அருமையாக‌ பதில் கூற அய்யா‍(நீங்கள்)இருக்கையில்
    ஐயம் எனக்கெதற்கு?

    அன்புட‌ன் உங்க‌ள் மாண‌வ‌ன்
    ஜீவா

    ReplyDelete
  5. ////kmr.krishnan said...
    தமிழ் நம்பியின் பாடல் இறை நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது.
    தேர்ந்தெடுத்த நல் முத்துக்களாகக் கொடுக்கிறீர்கள்.மிக்க நன்றி அய்யா!
    ஆனந்தைப் போலவே மிகவ்ம் அடக்கி வாசித்துக்கொண்டு இருப்பவர் "சூரி" என்ற பிளாகர் பெயரும், "சுப்புரத்தினம்" என்ற புனைப் பெயரும் கொண்டு
    வகுப்பறையின் முக்கியமான, மூத்த மாணவர்; என் 37 ஆண்டு குடும்ப‌ நண்பர்;அலுவலகத்தில் என‌க்கு மேல் சக்திவாய்ந்த பெரிய அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.இப்போது 72 வயது இருக்கலாம்.மிக அழகான ஆங்கில, தமிழ், ஹிந்தி நடையும் கையெழுத்தும், அபூர்வமான ஓவியம்
    வரையும் ஆற்றலும் உடையவர்.கர்னாடக இசையின் பரம ரசிகர்.தமிழ்,ஆங்கில, ஹிந்தி இலக்கியத்தில் பலமான ஆழ்ந்த படிப்பும் ஆய்வுமனமும் கொண்டவர். திருக்குறளில் ஆழ‌ங்கால் பட்டு முத்து எடுத்தவர்.இந்த மூத்த வாலிபர் 13 பிளாக் நடத்துகிறார்.மிகவும் பயனுள்ள தகவல்கள் அங்கே கிடைக்கும்.யூ டியூப் இணையத்தின் பயனுள்ள முகத்தை சூரி காட்டுகிறார்.உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அவர் நடத்தும் பிளாக்
    ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டும்.நான் அறிந்தவரை
    அதிக எண்ணிக்கையில் ஒரே நபர்
    (13) பிளாக் நடத்துவது சூரி அவர்கள் மட்டுமே!
    சில ஆண்டுகளாக விட்டுப் போயிருந்த எங்கள் தொடர்பை வகுப்பறை மீண்டும் புதுப்பித்துக் கொடுத்தது.தானாகவே என்னைத்தொடர்பு கொண்ட‌
    சூரிஜி, மீண்டும் கொஞ்சம் கத்தரித்தது போல் விலகி நிற்கிறார்.என்னை அறியாமல் ஏதாவது ஆறிய புண்ணை கிளறிவிட்டு விட்டேனோ என்று வருத்தமாக உள்ளது.சூரிஜி! சிறியோர் செய்த பெரும் பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே!///////////

    நீங்களாகவே எதையாவது நினைத்துக்கொளாதீர்கள். அப்படியெல்லாம் இருக்காது! அவரைப் பற்றிய செய்திகள் அனைத்தும் பெரும் வியப்பைத் தருகிறது. முருகப்பெருமான் அருளால், அவர் எண்பதும், நூறும் கண்டு, பலரும் பயனடையப் பதிவுகள் எழுதட்டும்!

    ReplyDelete
  6. முருகனை பார்த்து விட்டேன் வேறெதெற்கு என்ற தகவல்களை தட்டும் அருமையான எளிமையான பாடல் . .

    முருகா முருகா என்று இரண்டு முறை கூப்பிடுங்கள் . . மூன்றாவது முறை கூப்பிட்டால்
    வாரி வழங்க ஓடி வந்து விடுவான் அந்த வள்ளல் தன்மை உடைய முருகன்
    என வாரியார் சுவாமிகள் வார்த்தைகளை நினைவூட்டியது இந்த பாடல்

    சரிவிகித உணவு போல . .
    சமமான விகிதத்தில்
    பலரசம் நிறைந்த அருமையான வகுப்பறை . .

    ReplyDelete
  7. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் வரிசையில்
    -----"ஆயிரம் பாட்டெழுதி அத்தனைக்கும் பொருளெழுதி",-------
    என்ற அருமையான நினைவுகளில் நிறைந்த இப்பாடலை தற்போது நினைவூட்டிய தங்களுக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  8. /////Alasiam G said...
    அதிகாலை நேரம் பூபாள ராகம்
    ஆனந்த திருவாஞ்சனம், எங்கள் வகுப்பில்
    ஆனந்த திருவாஞ்சனம்.
    திருமுருகன் திருவடி போற்றும் - தெய்வ
    திருவருள் பெற்ற அறிவுடைய நம்பியின்
    அற்புத கானம் அதுதரும் ஞானம்.
    முதலடி அது ஆரோகணம் அமுத
    அடுத்த அடியது அவரோகணம் - இவை
    இரண்டும் என் இதயத்தில் ஆலிங்கனம்.
    அதிகாலை நேரம் பூபாள ராகம்
    தரும் திருவாஞ்சனம் முருகன்
    அடியவர் தன் நெஞ்சில் - நீங்காது
    நிழைத்து நிற்கும் பேரானந்தம்...
    நன்றிகள் குருவே!/////////

    நல்லது நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  9. /////ஜீவா said...
    அய்யாவுக்கு காலை வணக்கம்,
    தெய்வமனம் கமழும்
    முத்தான பாடலை
    தந்த உங்களுக்கு
    நன்றிகள் கோடி.
    ஆவி நிலைக்குமென்று ஆடுகின்ற கோடியில் ஓர்
    பாவியென துடிக்கின்றேன் நான் - முருகா
    உன்னை பார்த்து விட்டேன் துயர் எதற்கு?
    மிகவும் அருமையான வரிகள்.
    ஆயிரம் கேள்விகளுக்கும் அலுக்காமல்,
    அருமையாக‌ பதில் கூற அய்யா‍(நீங்கள்)இருக்கையில்
    ஐயம் எனக்கெதற்கு?
    அன்புட‌ன் உங்க‌ள் மாண‌வ‌ன்
    ஜீவா///////

    அடடா, நெஞ்சை ’டச்’ பண்ணீட்டீங்களே!:-))))))

    ReplyDelete
  10. கவிஞர்கள் உருவாக்கப்படுவதில்லை. கவிஞர்களாகவே பிறக்கிறார்கள். சில கவிதைகளைப் படிக்கும்போதே இதனை எழுதியவர் பிறவிக் கவிஞனா அல்லது உருவான கவிஞனா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிலர் சொற்களைக் கோர்த்து கவிதை என்கிறார்கள். சிலர் உள்ளமும் வாயும் திறந்தவுடனே கவிதைகள் பொழியும். சிலர் மீது கவிஞர் என்ற அடைமொழி திணிக்கப்படுகிறது. சில கவிஞர்கள் பாரம்பரிய முறைப்படி 'முகஸ்துதி', 'நரஸ்துதி' செய்து பிழைப்பு நடத்துகிறார்கள். இந்த சூழ்நிலையில் இறையுணர்வின் தாக்கத்தால் பிறவிக் கவிஞர்கள் பொழிந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தருகின்ற தங்கள் பணி சிறக்க இறைவனைத் துதிக்கிறேன். வாழ்க நீவிர் பல்லாண்டு!

    ReplyDelete
  11. /////iyer said...
    முருகனை பார்த்து விட்டேன் வேறெதெற்கு என்ற தகவல்களை தட்டும் அருமையான எளிமையான பாடல் . .
    முருகா முருகா என்று இரண்டு முறை கூப்பிடுங்கள் . . மூன்றாவது முறை கூப்பிட்டால்
    வாரி வழங்க ஓடி வந்து விடுவான் அந்த வள்ளல் தன்மை உடைய முருகன்
    என வாரியார் சுவாமிகள் வார்த்தைகளை நினைவூட்டியது இந்த பாடல்
    சரிவிகித உணவு போல . .
    சமமான விகிதத்தில்
    பலரசம் நிறைந்த அருமையான வகுப்பறை . ./////

    சரிவிகித உணவு உடலுக்கு நல்லது.
    சரிவிகிதக் கட்டுரைரைகள் மனதிற்கு நல்லது.
    என் பதிவுகளுக்கும் நல்லது...ஹி.ஹி..ஹிஹி...!

    ReplyDelete
  12. /////Thanjavooraan said...
    கவிஞர்கள் உருவாக்கப்படுவதில்லை. கவிஞர்களாகவே பிறக்கிறார்கள். சில கவிதைகளைப் படிக்கும்போதே இதனை எழுதியவர் பிறவிக் கவிஞனா அல்லது உருவான கவிஞனா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிலர் சொற்களைக் கோர்த்து கவிதை என்கிறார்கள். சிலர் உள்ளமும் வாயும் திறந்தவுடனே கவிதைகள் பொழியும். சிலர் மீது கவிஞர் என்ற அடைமொழி திணிக்கப்படுகிறது. சில கவிஞர்கள் பாரம்பரிய முறைப்படி 'முகஸ்துதி', 'நரஸ்துதி' செய்து பிழைப்பு நடத்துகிறார்கள். இந்த சூழ்நிலையில் இறையுணர்வின் தாக்கத்தால் பிறவிக் கவிஞர்கள் பொழிந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தருகின்ற தங்கள் பணி சிறக்க இறைவனைத் துதிக்கிறேன். வாழ்க நீவிர் பல்லாண்டு! ///////

    ”கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தல்” என்பார்கள். அந்தப் பணியை மட்டுமே நான் செய்கிறேன் அய்யா! பாராட்டுகள் கடைக்காரனையே - எழுதிய கவிஞர்களையே சேரும்!

    ReplyDelete
  13. நல்ல அருமையான பாடல். பாடி முருகனை அழைக்கலாம், முருகன் வந்த பின்னாலே அந்த பாடல்தான் எதற்கு.

    நிற்க, ஜோதிடம் என்பது கடல். அந்த கடலில் வாத்தியார் போகாத இடங்கள் (அதாவது பாடம் நடத்தாத விஷயங்கள்) பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடி பிடித்து பதிவாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். Suggestions are welcome from our fellow students.

    என்னையும் ஒரு பதிவு தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தஞ்சைத் தரணியைச் சேர்ந்த திரு கிருஷ்ணன் அவர்கட்கு என் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  14. (இது எனது தனிப் பட்டக் கருத்து அதில் உறுதியாக இருக்கிறேன். யாரையும் புண்படுத்த அல்ல மன்னிக்கணும்...)
    கவிஞன் உருவாக்கப் படுகிறான்,
    எல்லோருக்குள்ளும் கவிபாடும் திறனிருக்கிறது.
    (கவிபாடும் திறனின் விகிதம் வேண்டுமானால் வேறுபடலாம்)
    சமூகத்தின் மீது அக்கறையுள்ளவன்,
    அவலத்தை எதிர்த்துககூற நெஞ்சில் உரமுள்ளவன் யாரும் முடியும்....
    எமக்குத் தொழில் கவிதை என்றார் மகாகவி.....
    இயற்கையான ஞானம்! அதை மறுப்பதுக்கில்லை,
    ஆனால் அந்த ஞானம்,அறவே இல்லாத மனிதன் யாரும் இருக்க முடியாது.
    ஒருமைக் கண் தான் பெற்ற கல்வி......
    தொட்டனைத்தூறும் மாந்தருக்கு.......
    தெய்வத்தினால் ஆகாதெனினும் முயற்சி தன்.....
    (நம்பிக்கையுள்ளவர்கள் ஆசிர்வதிக்கபடுவது, ஜென்மபுண்ணியம்.....)
    இவைகளோடு இன்னும் பல....
    சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நா பழக்கம் என்றார் சான்றோர்.

    கவிதை என்பது புலகாங்கிதத்திற்காக அல்ல அது உணர்வின் வெளிப்பாடு...
    மானுட சமூகத்தின் மீதும், சமூகத்தின் மீதும் உள்ள முக்கியமாக குறைகளை அவலங்களை கண்டு வருந்தி, பொங்கி, ஏன் அழுது ( பாரதி அழுதுள்ளான் புஜி தீவில் அடிமைகளாய் இருந்த நம் மக்களை எண்ணி.... சாதிக்கு, சாவு மணி அடிக்க துணிந்தவன்....) தனது உணர்வை வெளிப்படுத்தும் வடிகால்...
    அதில் சொல்லப்படும் கருத்து; கவிஞன் பார்க்கும் பார்வை; நாளைய சந்ததிக்கு அவன் கூறும் செய்தி; இவைகளே மிகவும் முக்கியம். அதையே பாரதியும் சொல்லி இருக்கிறான் எளிய நடை தவறில்லை என்று. புதுக்கவிதைக்கு வித்திட்டவனே அவன் தானே.
    விருத்தங்களும்,பாக்களும்,செய்யுளாக இருந்து உருமாறி புதுக் கவிதை, வசனக் கவிதை என்று பழையன வழக்கொழிந்து.... புதியன புகுந்தன.. காலத்தின் மாற்றம்.. "பழையன பாதுகாப்போம், புதியன வரவேற்போம்"... திருக்குறளுக்கே அரங்கேற சிபாரிசு தேவைப் பட்டது.... கம்பனை யார் ஆதரித்தார்கள் (சடையப்ப வள்ளலைவிட பொருள்படைத்த மன்னர்கள் எங்கே???? கம்ப ராமாயணம் அரங்கேறிய ஸ்ரீரங்கத்தில் அரங்க நாதனைத் தவிர வேறு ஆதாரம்?? ஏன் கல்லில் பொறிக்கப் படவில்லை.)

    அன்றுதொட்டு இன்று வரை கவிஞர்களும் பலவிதமே.. கவிசக்கரவர்த்தி கம்பன் ஒருவகை... பரணிபாடி சொத்துக் குவித்த செயங்கொண்டார் ஒருவகை.... கம்பன் நினைத்திருந்தால் சோழமன்னர்களின் பரணி பாடியிருக்கலாம் (அ) பருவ மகளிர் ஏழு நிலையினரோடு சோழன் கொண்ட உலா பாடியிருக்கலாம்.... அன்று இருந்த பெண் அடிமைத்தனத்தை, அரச சுகபோக எல்லை மீறல்களை, ஆடவனின் அழிவு பெண்ணின் மீது கொள்ளும் காமமே; அவையே யாவரையும் கொல்ல வல்லது.. என்பதை சமூகத்திற்கு சொல்ல விழைந்ததே ராமகாதை.... சமூக விருப்பங்களை வழி மொழியவில்லை மாறாக சமூகத்திற்கு தேவையானதை கூற நினைத்தான்.... பரணியும், உலாவும் விடுத்து அவன் போனது வேறு..... இப்படியாக வேண்டாம்,... விசயத்திற்கு வருவோம்...
    ***உயர்ந்த (தனிப்பட்ட சாதி சமயம் அல்லாது) சிந்தனை,
    (அப்படி இல்லை என்றால் அந்த குறிப்பிட்ட சாதி சமயம் சார்ந்த மக்கள் குறுகும் போது அவனது படைப்புகளும் குறுகிவிடும். உம்- மணிமேகலை, சீவகசிந்தாமணி.. பாரதிதாசனின் சில படைப்புகள்)
    ****தெரிந்த தெளிந்த நடை (பலநூல் கற்க வேண்டும்)
    ****தூரப்பார்வையோடு கூடிய சமூக அக்கறை.....
    யாவரும் கவிஞர்களே வாருங்கள் எழுதுவோம். சமூக அவலங்களை, சாதிக்க வேண்டியவைகளை...
    "பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்"
    எந்தத் தோட்டத்தில் மலர்ந்தாலும் அழகும், மனமும், நிறமும் மாறாத பூக்கள் தேனைத் தருவதகா! கவிதைத் தாருவோம்.!! உங்களாலும் முடியும் தெரிந்ததை எழுதுங்கள்!. எழுத தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள்.
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  15. (இது எனது தனிப் பட்டக் கருத்து அதில் உறுதியாக இருக்கிறேன். யாரையும் புண்படுத்த அல்ல மன்னிக்கணும்...)

  16. Dear Sir

    Paadal Nandru Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  17. (இது எனது தனிப் பட்டக் கருத்து அதில் உறுதியாக இருக்கிறேன். யாரையும் புண்படுத்த அல்ல மன்னிக்கணும்...)

  18. (இது எனது தனிப் பட்டக் கருத்து அதில் உறுதியாக இருக்கிறேன். யாரையும் புண்படுத்த அல்ல மன்னிக்கணும்...)

  19. வாத்தியார் செய்யும் பணி
    அறப்பணி அதிலும் அவர் பாணி தனி.

    தாங்களும் அப்படியொரு பணி
    செய்ய எத்தனித்தால்
    மயங்குவதேன்? தயங்குவதேன்?
    பூக்கள் பூக்கட்டும் புதுத்தென்றல் வீசட்டும்
    தேனீக்களும் மொய்க்கட்டும் - ஆனால்
    தேனிருக்கும் வரைக்கும் வண்டிருக்கும்
    அதுமட்டும் நினைவில் இருக்கட்டும்.

    ஆயுள் போதாது அத்தனையும் சொல்லிவிட - ஆக
    சொல்லாது செய்துவிடுங்கள் - எது
    சொல்லாது விட்டது எனப்பிறர் சொல்ல
    வழிவிடுங்கள்.
    வாழ்த்துக்கள் நண்பர் ஆனந்த்.

    ReplyDelete
  20. சார்,
    காலை WALKING காக சென்ற நேரத்தில் பூங்காவில் கண்டது கண்டவுடன் உங்களின் ஞாபகம் :" பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை யுடைய செயல் " வள்ளுவர் பெருந்தகை ஆற்றியது
    "அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைகுரியவர்களாவர்கள்.
    உங்களின் வேலையின் ஊடே இத்தனை பெரிய செயல் புரிவதால் நீங்கள் பெருமைக்குரியவர்தான்.
    உங்களின் தயவால் முருகனின் படம் எனது DESKTOPIL மட்டுமில்லை மனதிலும் நினைவிலும் நின்றுகொண்டேதான் இருக்கிறான் முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைக்க நீங்களும் ஒரு காரணகர்த்தா.
    நன்றி.

    (இதனை தட்டசுவதற்கே பெரும்பாடு! பனியின் நடுவே ALMOST 40 MINUTES. உங்களுக்கு எத்தனை சிரமம் என்று நன்றாக புரிகிறது)

    ReplyDelete
  21. திரு. ஆனந்த், வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். தெரிந்த விஷயங்கள் நிறைய இருக்கும். அதனால் விரைவில் ஆரம்பியுங்கள்.

    நீங்கள் சொன்னதுபோல, எத்தனையோ படிக்கிறோம், உங்கள் ப்ளாக்கைப் படிக்க மாட்டோமா?

    ReplyDelete
  22. ஆயிரம் பாட்டெழுதி எனத்துவங்கும் தமிழ் நம்பியின் பாடல் திரு. டி.எம்.எஸ். அவர்களால் பாடப்பட்டிருக்கிறதா ?
    பூபாள ராகத்திலா !
    எப்படித்தான் இப்பாடலை இன்று வரை கேளாது இருந்தேனோ !!

    முருகா, கந்தா, குமரா, கார்த்திகை பாலா, கதிர்வேலா, ஷண்முகா பழனிவேலா ஆறு
    முகா, ஸ்வாமி நாதா...ஆஹா ! \
    உன் ஒரு பெயருக்கு ஈடாமோ
    ஓராயிரம் பாடல்கள் !!\\

    அது போலவே ஆயிரம் பேர் ஆயிரம் ப்ளாக் எழுதினாலும் அது
    சுப்பையா வாத்தியார் ப்ளாக் போல் இருக்குமோ !!

    இது நிஜ நீர். மற்றதெல்லாமே கானல் நீர்.

    டி.எம்.எஸ். பாடிய லின்க் இருப்பின் தரவும்.

    இருந்தாலும், இந்தக்கிழவனுக்கு பொறுமை இல்லை. நானே பூபாளத்தில் பாடலாமே என
    நினைத்தேன். பாடிவிட்டேன். என்ன ! அங்க இங்க கொஞ்சம் ஏற்றம் இரக்கம். சரியா இருக்காது.
    வாத்தியார் ஸார் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவும்.

    சுப்பு ரத்தினம்.
    http://kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  23. சார் வணக்கம்,
    ரொம்ப நன்றி சார் ஞாயிற்று கிழமையும் வகுப்பு.

    சகோதரர் ஆனந்து,
    தங்களின் பதிவை படிப்பதற்கு நான் மிகவும் ஆவலுடனிருக்கிறேன். என்னுடைய வாழ்த்துகள் சகோதரரே ஏற்றுகொள்ளுங்கள்.

    சகோதரர் ஆலோசியம்,
    கவிதை மழை பொழிகிறீர்களே ரொம்ப நல்லாயிருந்தது. ஞாயிற்று கிழமை தங்களின் படைப்பு ரொம்ப நல்லாயிருந்தது. ரொம்பநன்றி. முடிவுரை ரொம்ப சோகமாயிருந்தது.

    சகோதரி பிரியா ப்ரதீப்,
    நீச்சம் நீச்சம் அதை சரி செய்யமுடியதா கேள்வி கேட்டு சார் நம்ப எல்லோரையும் கற்பனை உலகுக்கு அழைத்துச் சென்றார் திரும்பி கேள்வி பதில வகுப்பு தொடங்கி விட்டது. உங்களை பார்க்க முடியவில்லை.
    சுந்தரி

    ReplyDelete
  24. என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தம்மைக்கு மிக்க நன்றி ஆனந்த்! சில நாட்களுக்கு வாத்தியாரின் வகுப்பறையில் பின்னூட்டங்களில் தங்களின் பிளாக் பற்றி, அதன் இணைப்புப் பெயர்(யூ ஆர் எல்) ஆகியவற்றை வெளியிட்டு வாருங்கள்.அப்போதுதான் ஆர்வமுள்ளவர்கள் அங்கும் வருவார்கள்.தாங்கள் ஆதார நூல்களைப் பற்றிய நல்லறிவு உள்ள‌வர். எனவே அவற்றை எளிமைப்படுத்தி பழகு தமிழில் எழுதுங்கள்.நுணுக்க‌மான‌ செய்திக‌ளைத் தாருங்கள். கே பி, போன்றவர்கள் எப்படி பாரம்பரிய சோதிடத்தில் இருந்து மாறுபடுகிறார்கள் என்ப‌தைப்ப‌ற்றி எழுதுங்கள்.ஒருவ‌ர்
    ஜாத‌க‌த்தைப் பார்த்து எப்ப‌டி அவ‌ர் உற‌வின‌ர் ப‌ற்றி க‌ணிப்ப‌து,திரும‌ண‌த்த‌டை,
    குழ‌ந்தை பாக்கிய‌ம் ஆகிய‌வை ப‌ற்றி ஆய்வுக் க‌ட்டுரைக‌ள் தாருங்க‌ள்.நிஜ‌ உதார‌ண‌ ஜாத‌கங்களைப் பெற்று முதலில் உங்கள் அபிப்ராயத்தைக்
    கூறி, பின்ன‌ர் ஜாத‌க‌ரிட‌ம் எந்த‌ அள‌வு க‌ணிப்பு ச‌ரி என்று கேட்டுப் பெற‌லாம்.
    இன்னும் என்ன‌வெல்லாம் புதிதாகத் தோன்றுகிற‌தோ அதையெல்லா‌ம் செய்யுங்க‌ள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. "மாண‌வனின் வகுப்பறை" என்ற பெயரிலேயே அசத்திவிட்டீர்கள் .
    http://ananth-classroom.blogspot.com/

    Well begun is half done.
    Very good Ananth!I wish you Godspeed

    ReplyDelete
  26. அன்புச்சகோதிரி சுந்தரி
    தங்களின் பாராட்டுக்கு
    மிக்க நன்றி.....
    வலைப் பதிவில்
    சுதந்திரமாக (கொஞ்சம் அத்துமீறி)
    எழுத அல்ல கிறுக்க அனுமதித்த
    நம் ஆசிரியர் ஐயா! அவர்களுக்குத்
    தான் நான் மிகவம் கடமைப் பட்டுள்ளேன்.
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  27. ////ananth said...
    நல்ல அருமையான பாடல். பாடி முருகனை அழைக்கலாம், முருகன் வந்த பின்னாலே அந்த பாடல்தான் எதற்கு.
    நிற்க, ஜோதிடம் என்பது கடல். அந்த கடலில் வாத்தியார் போகாத இடங்கள் (அதாவது பாடம் நடத்தாத விஷயங்கள்) பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடி பிடித்து பதிவாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். Suggestions are welcome from our fellow students.
    என்னையும் ஒரு பதிவு தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தஞ்சைத் தரணியைச் சேர்ந்த திரு கிருஷ்ணன் அவர்கட்கு என் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்.////

    நல்லது. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Paadal Nandru Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  29. ////Alasiam G said...
    (இது எனது தனிப் பட்டக் கருத்து அதில் உறுதியாக இருக்கிறேன். யாரையும் புண்படுத்த அல்ல மன்னிக்கணும்...)
    கவிஞன் உருவாக்கப் படுகிறான்,
    எல்லோருக்குள்ளும் கவிபாடும் திறனிருக்கிறது.
    (கவிபாடும் திறனின் விகிதம் வேண்டுமானால் வேறுபடலாம்)
    சமூகத்தின் மீது அக்கறையுள்ளவன்,
    அவலத்தை எதிர்த்துககூற நெஞ்சில் உரமுள்ளவன் யாரும் முடியும்....
    எமக்குத் தொழில் கவிதை என்றார் மகாகவி.....
    இயற்கையான ஞானம்! அதை மறுப்பதுக்கில்லை,
    ஆனால் அந்த ஞானம்,அறவே இல்லாத மனிதன் யாரும் இருக்க முடியாது.
    ஒருமைக் கண் தான் பெற்ற கல்வி......
    தொட்டனைத்தூறும் மாந்தருக்கு.......//////

    அதனாலென்ன, நீங்கள் முயன்று கவிஞராக உருவெடுங்கள். அதில் தப்பே இல்லை ஆலாசியம்.
    எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் - நமது வகுப்பறை மாணவர் கவிஞராகிவிட்டாரென்று!

    ReplyDelete
  30. //////Alasiam G said...
    வாத்தியார் செய்யும் பணி
    அறப்பணி அதிலும் அவர் பாணி தனி.
    தாங்களும் அப்படியொரு பணி
    செய்ய எத்தனித்தால்
    மயங்குவதேன்? தயங்குவதேன்?
    பூக்கள் பூக்கட்டும் புதுத்தென்றல் வீசட்டும்
    தேனீக்களும் மொய்க்கட்டும் - ஆனால்
    தேனிருக்கும் வரைக்கும் வண்டிருக்கும்
    அதுமட்டும் நினைவில் இருக்கட்டும்.
    ஆயுள் போதாது அத்தனையும் சொல்லிவிட - ஆக
    சொல்லாது செய்துவிடுங்கள் - எது
    சொல்லாது விட்டது எனப்பிறர் சொல்ல
    வழிவிடுங்கள்.
    வாழ்த்துக்கள் நண்பர் ஆனந்த்./////

    உங்களின் கருத்து பகிர்விற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  31. //////KUMAR said...
    சார்,
    காலை WALKING காக சென்ற நேரத்தில் பூங்காவில் கண்டது கண்டவுடன் உங்களின் ஞாபகம் :" பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை யுடைய செயல் " வள்ளுவர் பெருந்தகை ஆற்றியது
    "அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைகுரியவர்களாவர்கள்.
    உங்களின் வேலையின் ஊடே இத்தனை பெரிய செயல் புரிவதால் நீங்கள் பெருமைக்குரியவர்தான்.
    உங்களின் தயவால் முருகனின் படம் எனது DESKTOPIL மட்டுமில்லை மனதிலும் நினைவிலும் நின்றுகொண்டேதான் இருக்கிறான் முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைக்க நீங்களும் ஒரு காரணகர்த்தா.
    நன்றி.
    (இதனை தட்டசுவதற்கே பெரும்பாடு! பனியின் நடுவே ALMOST 40 MINUTES. உங்களுக்கு எத்தனை சிரமம் என்று நன்றாக புரிகிறது)/////

    எதுவும் துவக்கத்தில் சிரமமாக இருக்கும். பழகிவிட்டால் சுலபமாக இருக்கும். எனக்குப் பழகிவிட்டது!
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. ////Uma said...
    திரு. ஆனந்த், வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். தெரிந்த விஷயங்கள் நிறைய இருக்கும். அதனால் விரைவில் ஆரம்பியுங்கள்.
    நீங்கள் சொன்னதுபோல, எத்தனையோ படிக்கிறோம், உங்கள் ப்ளாக்கைப் படிக்க மாட்டோமா?///////

    உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  33. sury said...
    ஆயிரம் பாட்டெழுதி எனத்துவங்கும் தமிழ் நம்பியின் பாடல் திரு. டி.எம்.எஸ். அவர்களால் பாடப்பட்டிருக்கிறதா ?
    பூபாள ராகத்திலா !
    எப்படித்தான் இப்பாடலை இன்று வரை கேளாது இருந்தேனோ !!
    முருகா, கந்தா, குமரா, கார்த்திகை பாலா, கதிர்வேலா, ஷண்முகா பழனிவேலா ஆறு
    முகா, ஸ்வாமி நாதா...ஆஹா ! \
    உன் ஒரு பெயருக்கு ஈடாமோ
    ஓராயிரம் பாடல்கள் !!\\
    அது போலவே ஆயிரம் பேர் ஆயிரம் ப்ளாக் எழுதினாலும் அது
    சுப்பையா வாத்தியார் ப்ளாக் போல் இருக்குமோ !!
    இது நிஜ நீர். மற்றதெல்லாமே கானல் நீர்.
    டி.எம்.எஸ். பாடிய லின்க் இருப்பின் தரவும்.
    இருந்தாலும், இந்தக்கிழவனுக்கு பொறுமை இல்லை. நானே பூபாளத்தில் பாடலாமே என
    நினைத்தேன். பாடிவிட்டேன். என்ன ! அங்க இங்க கொஞ்சம் ஏற்றம் இரக்கம். சரியா இருக்காது.
    வாத்தியார் ஸார் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவும்.
    சுப்பு ரத்தினம்.
    http://kandhanaithuthi.blogspot.com//////

    1. இணையத்தில் டி.எம்.எஸ். பாடிய லின்ங் இல்லை சார்! வெளியே தேடிப்பார்த்துத் தருகிறேன்
    2. சுப்புவிற்கும் கிழப்பருவம் கிடையாது. ரத்தினத்திற்கும் கிழப்பருவம் கிடையாது.
    3. கந்தன் துதிப்பாடல் வலைப்பூவில் தேடினேன்.
    + கந்தனை காண கண் ஆயிரம் வேண்டும். ராகம் ஆபேரி
    + kandha shasti kavacham.. by NITHYA SHREE MAHADEVA...
    + அழகென்ற சொல்லுக்கு முருகா - by TMS
    + கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவே...
    + முத்தைத்தரு பத்தித் திருநகை thirupughazh
    + பாம்பன் சுவாமிகள் இயற்றிய ஷண்முக கவசம்
    + The Six Faces of Lord Muruga !
    + சொல்லாத நாள் இல்லை , சுடர் மிகு வடிவேலா
    இவைகள்தான் உள்ளன. கந்தர்வக்குரலில் நீங்கள் பாடிய பாடல் (நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்) இல்லையே!
    4. நிஜ நீர் எனும் உங்களுடைய பாரட்டுக்களுக்கு நன்றி!
    5. இன்று பெரும்பாலான மக்களுக்கு டாஸ்மாக் கடைகளில் போத்தலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் நீரே நிஜ நீராகும்:-))))))

    நன்றி, வணக்கத்துடன்,
    13 வலைப்பூக்களை வைத்திருக்கும் உங்களின் அபிமானி!
    SP.VR.சுப்பையா

    ReplyDelete
  34. //sundari said...
    சார் வணக்கம்,
    ரொம்ப நன்றி சார் ஞாயிற்று கிழமையும் வகுப்பு.
    சகோதரர் ஆனந்து,
    தங்களின் பதிவை படிப்பதற்கு நான் மிகவும் ஆவலுடனிருக்கிறேன். என்னுடைய வாழ்த்துகள் சகோதரரே ஏற்றுகொள்ளுங்கள்.
    சகோதரர் ஆலோசியம்,
    கவிதை மழை பொழிகிறீர்களே ரொம்ப நல்லாயிருந்தது. ஞாயிற்று கிழமை தங்களின் படைப்பு ரொம்ப நல்லாயிருந்தது. ரொம்பநன்றி. முடிவுரை ரொம்ப சோகமாயிருந்தது.
    சகோதரி பிரியா ப்ரதீப்,
    நீச்சம் நீச்சம் அதை சரி செய்யமுடியதா கேள்வி கேட்டு சார் நம்ப எல்லோரையும் கற்பனை உலகுக்கு அழைத்துச் சென்றார் திரும்பி கேள்வி பதில வகுப்பு தொடங்கி விட்டது. உங்களை பார்க்க முடியவில்லை.
    சுந்தரி////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  35. //////kmr.krishnan said...
    என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தம்மைக்கு மிக்க நன்றி ஆனந்த்! சில நாட்களுக்கு வாத்தியாரின் வகுப்பறையில் பின்னூட்டங்களில் தங்களின் பிளாக் பற்றி, அதன் இணைப்புப் பெயர்(யூ ஆர் எல்) ஆகியவற்றை வெளியிட்டு வாருங்கள்.அப்போதுதான் ஆர்வமுள்ளவர்கள் அங்கும் வருவார்கள்.தாங்கள் ஆதார நூல்களைப் பற்றிய நல்லறிவு உள்ள‌வர். எனவே அவற்றை எளிமைப்படுத்தி பழகு தமிழில் எழுதுங்கள்.நுணுக்க‌மான‌ செய்திக‌ளைத் தாருங்கள். கே பி, போன்றவர்கள் எப்படி பாரம்பரிய சோதிடத்தில் இருந்து மாறுபடுகிறார்கள் என்ப‌தைப்ப‌ற்றி எழுதுங்கள்.ஒருவ‌ர்
    ஜாத‌க‌த்தைப் பார்த்து எப்ப‌டி அவ‌ர் உற‌வின‌ர் ப‌ற்றி க‌ணிப்ப‌து,திரும‌ண‌த்த‌டை,
    குழ‌ந்தை பாக்கிய‌ம் ஆகிய‌வை ப‌ற்றி ஆய்வுக் க‌ட்டுரைக‌ள் தாருங்க‌ள்.நிஜ‌ உதார‌ண‌ ஜாத‌கங்களைப் பெற்று முதலில் உங்கள் அபிப்ராயத்தைக்கூறி, பின்ன‌ர் ஜாத‌க‌ரிட‌ம் எந்த‌ அள‌வு க‌ணிப்பு ச‌ரி என்று கேட்டுப் பெற‌லாம்.
    இன்னும் என்ன‌வெல்லாம் புதிதாகத் தோன்றுகிற‌தோ அதையெல்லா‌ம் செய்யுங்க‌ள்.வாழ்த்துக்கள்.//////

    உங்களுடைய பதிவுகளில்/ இடுகைகளில் (http://parppu.blogspot.com/) ஜோதிடத்தைப் பற்றி நீங்கள் நிறைய எழுதிக் கொண்டிருக்கிறீர்களே கிருஷ்ணன் சார். நீங்கள் யாருடைய யோசனைகளையும் கேட்டா எழுதுகிறீர்கள்?
    இல்லையே! அது போல அவரும் தன்னுடைய யோசனைகளின்படி எழுதட்டும். அவருடைய எழுத்து சுந்திரத்திற்கு நமது குறுக்கீடுகள் வேண்டாம்!

    ReplyDelete
  36. //////kmr.krishnan said...
    "மாண‌வனின் வகுப்பறை" என்ற பெயரிலேயே அசத்திவிட்டீர்கள் .
    http://ananth-classroom.blogspot.com/
    Well begun is half done.
    Very good Ananth!I wish you Godspeed//////

    ஆனந்தின் வகுப்பறை எனும் பெயர்தான் நன்றாக இருக்கும். URL லிலும் அதுதானே இருக்கிறது!

    ReplyDelete
  37. /////Alasiam G said...
    அன்புச்சகோதிரி சுந்தரி
    தங்களின் பாராட்டுக்கு
    மிக்க நன்றி.....
    வலைப் பதிவில்
    சுதந்திரமாக (கொஞ்சம் அத்துமீறி)
    எழுத அல்ல கிறுக்க அனுமதித்த
    நம் ஆசிரியர் ஐயா! அவர்களுக்குத்
    தான் நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.
    நன்றிகள் ஐயா!//////

    சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே! ஹி..ஹி..ஹிஹி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com