20.7.10

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!




++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!

  “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
  அதனின் அதனின் இலன்”


என்று எழுதினார் வள்ளுவர் பெருந்தகை!

எந்தப் பொருளின் மீதும் பற்று வைக்காதே! அப்படி வைக்காமல் இருந்தால் அந்தப் பொருளினால் உனக்கு ஒரு துன்பமும் வராது என்பது அதன் பொருள்.

பாழும் மனம் கேட்குமா? கேட்காது.

அழகான பெண்ணைப் பார்த்தால் ஏக்கம். அமெரிக்க டாலரின் மீது ஏக்கம். அடையாரில் உள்ள வீடுகளின் மேல் ஏக்கம். அமைச்சர் பதவியின் மேல் ஏக்கம். ரோல்ஸ்ராய்ஸ் காரின் மீது ஏக்கம். அம்பானியின் செல்வாக்கைப் பார்த்து ஏக்கம். சரவணபவன் சாப்பாட்டின் மேல் ஒரு தாக்கம். தலைப்பாக்கட்டி பிரியாணி மேல் ஒரு தாக்கம். சீவாஸ் ரீகல் விஸ்கியின்மேல் ஒரு தாக்கம். ஃபில்டர் காப்பியின் மேல் ஒரு தாக்கம். வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டின் மேல் ஒரு தாக்கம். இப்படி ஏக்கத்தையும், தாக்கத்தையும் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்.

அதைத்தான் சுருக்கமாக வள்ளுவர் சொன்னார் “எதன் மீதும் ஆசை வைக்காதே; பற்று வைக்காதே!”

கிடைக்காததன் மேல் ஆசை வைக்காதீர்கள்.“கிட்டாதாயின் வெட்டன மற!” என்று அவ்வையார் சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்.

ஜோதிடப் பாடம் படிக்கும் உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: நீண்ட ஆயுளின் மேல் யாரும் ஆசை வைக்காதீர்கள். பூரண அயுளைப் பெற்று வாழ்வது முக்கியமில்லை. இருக்கும்வரை நன்றாக (ஆரோக்கியமாக) இருந்துவிட்டு, நடை, உடையுடன் இருக்கும்போதே மரணத்தைத் தழுவுவதுதான் முக்கியம். உங்கள் மொழியில் சொன்னால், உயிர் வாழும் கடைசி நொடிவரை அடுத்தவன் தயவில்லாமல் வாழவேண்டும். அதுதான் நிறைவான வாழ்க்கை.

அது நம் கையில் இல்லை என்றாலும், கிடைக்கத் தினமும் பிரார்த்தனை செய்யுங்கள்.

வலி இல்லாமல் பத்து நிமிடங்களுக்குள் மரணம் ஏற்பட வேண்டும். மரணம் ஏற்படும் வரை, நாம் நடை, உடையுடன் இருக்க வேண்டும்.

வயதானவர்கள் இருக்கும் வீடுகளுக்குச் சென்று பாருங்கள். அல்லது ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்று பாருங்கள். படுத்தால், உட்கார்ந்தால் தானாக எதுவும் செய்ய முடியாத நிலையில் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள் .கழிப்பறைக்குக்கூட அவர்களால் சுதந்திரமாகச் சென்று திரும்பமுடியாது. Bed Pan, Diaper, walking stick, walker போன்ற சாதனங்களை நம்பி அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது. அத்துடன் அவர்களை வைத்துப் பராமரிப்பவர்கள் சலிப்படையாமல் இருக்க வேண்டும்.

வயதானவர்களின் அவலநிலை பற்றிய ஏராளமான கதைகள் என்னிடம் இருக்கின்றன. ஒன்றே ஒன்றை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன். நிலைமை பிடிபடும்.

ஒரு தாய் இருந்தார். வயது 85. நன்றாக இருந்தவரை தன்னைத்தானே அவர் பார்த்துக்கொண்டார். கணவர் இறந்து 10 ஆண்டுகள் வரை அவர் தன் வீட்டில் தனியாகவே இருந்தார். மூன்று மகன்கள். யார் வீட்டிற்கும் போய் இருக்க அவருக்கு விருப்பமில்லை. அவரைக் கொண்டு போய் வைத்துப் பராமரிக்க அவருடைய மருமகள் மூன்று பேருக்கும் விருப்பமில்லை. பேரன்கள் இருவர் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். அவர்களும் கண்டு கொள்ளவில்லை. தள்ளாத மூப்பு வந்தது. உடன் இணைப்பாக இயலாமையும் வந்தது.

வீட்டு உறுப்பினர்கள், பொதுக்குழுவைக் கூட்டி விவாதித்தார்கள். முடிவெடுத்தார்கள். தாயாரைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டார்கள். அவர் நொந்து போய் விட்டார். நடைக்கம்பியின் (walker) உதவியால் வாழ்க்கை மேலும் ஒராண்டு ஓடியது. பிறகு அந்த அம்மையாரால், அடிக்கடி எழமுடியாத நிலைமை. நம்பர் ஒன் & நம்பர் டூ வெல்லாம் தனது படுக்கையிலேயே கழித்துவிடும் நிலைமை.

முதியோர் இல்ல ஊழியர்கள் ஆரம்பத்தில் சுத்தம் செய்தவர்கள், பிறகு ஒரு நாள் தாக்குப் பிடிக்காமல், “ஏய் கிழவி, இனிமேல் இதெல்லாம் வரும் சமயத்தில் எங்களிடம் சொல். நாங்கள் பேன் (pan) வைக்கிறோம்” என்றார்கள்.அதெல்லாம் சில சமயம் சொல்லாமல் வருமல்லவா?

அந்த ஊழியர்களிடம், அன்பே உருவான அந்தத்தாய், அடிவாங்க ஆரம்பித்துவிட்டார்.

அடுத்தமுறை, தன் மூத்த மகன் தன்னைப் பார்க்க வந்திருந்தபோது, கதறி அழுதார்:

 “டேய் கண்ணா, நான் சின்னபிள்ளையாக இருந்தபோது செல்லமாக வளர்ந்தவள். என் அப்பச்சி என்னைப் போற்றி ஓவியமாக வளர்த்தார். என் கணவரும் உத்தமமானவர். என்னை ராணி மாதிரி வைத்திருந்தார். அவர்கள் இருவரும் இருந்தவரை, என் மீது ஒரு துரும்புகூடப் பட்ட தில்லை. இங்கே என்னை அடிக்கிறார்களாடா!  என்னால் இனிமேல் இங்கே இருக்க முடியாதுடா! ஒன்று என்னை உன்னுடன் கூட்டிக்
கொண்டு போ அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுத்து விட்டுப்போ!”

வந்த மகன் அந்த இரண்டையும் செய்யவில்லை. அங்கே இருந்த ஊழியர்களிடம் ஆளுக்கு ஐநூறு கொடுத்து அடிக்காமல் பார்த்துக் கொள்ளூம்படி சொல்லிவிட்டுப்போனார். தன் தாயாரையும் சமாதானம் செய்துவிட்டுப் போனார்.

அதற்குப் பிறகு என்ன ஆயிற்று?

மன உளைச்சலில் அடுத்து வந்த இரண்டாவது மாதமே அந்த அன்புத்தாய் இறந்து போனார்.

   “எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
      எங்கே மனிதன் இல்லையோ, அங்கே எனக்கோர் இடம் வேண்டும்”


என்று தன்னைப் படைத்த இறைவன் திருவடிக்கே சென்று விட்டார்,
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு முக்கியமான பலன் உண்டு. எட்டாம் வீட்டின் முக்கியமான பலன் ஆயுளை நிர்ணயம் செய்வதற்கு உரிய வீடு அதுதான்.

அந்த வீட்டின் தன்மை, அதாவது அது சுபக்கிரகத்தின் வீடா, அதன் அதிபதி ஜாதகத்தில் எங்கே போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அந்த வீட்டின் மேல் விழும் பார்வைகள், அதன் அதிபதியுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள் என்று எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். அதே போல 3ஆம் வீடு, அதன் அதிபதி, ஆயுள்காரகன் சனீஷ்வரன் ஆகியவற்றின் நிலைப்பாடுகளும் முக்கியம். ஜாதகத்தில் சனி, எட்டாம் அதிபதி, லக்கின அதிபதி ஆகிய மூவருக்கும் உள்ள தொடர்பு நிலையும் முக்கியம்.

ஜோதிடத்தில் ஆயுள் சம்பந்தப் பட்ட முக்கிய வீடுகள் மற்றும் அவற்றின் தன்மைகளை அல்லது வலிமையைப் பற்றிய விவரங்களைக் கீழ்க்கண்டவாறு பார்க்க வேண்டும்.
ஏழாம் அதிபதி
ஏழாம் வீட்டில் உள்ள கிரகங்கள்
ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள்
லக்கினாதிபதி
லக்கினத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்
லக்கினாதிபதியுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள்
இரண்டாம் வீட்டதிபதி
இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்
இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள்

எட்டாம் வீடு மரணத்தையும் அழிவுகளையும் (death & destruction) சுட்டிக்காட்டும் இடமாகும். மரணத்தை ஏற்படுத்துவதில், ஏழாம் அதிபதி, இரண்டாம் அதிபதி, மாரக அதிபதி மற்றும் சனீஷ்வரனின் ஆகியோரின் பங்கு இருக்கும். ஆகவே இந்த நால்வரின் தசா புத்திக் காலத்தில் ஏதாவது ஒரு சமயத்தில் ஜாதகனுக்கு மரணம் ஏற்படலாம். அதைத் தெரிந்து கொள்வதற்கு, ஜாதகத்தை நன்கு அலசுவது அவசியமாகும்.

ஒருவரின் ஆயுளை எப்படிக் கணித்துத் தெரிந்து கொள்வது? மிகவும் அசாத்தியமான வேலை அது. ஜோதிடத்தில் மிகவும் சிரமமான பகுதி அதுதான். கீழ்வரும் கிரக நிலைகள் ஜாதகனுக்குத் தீர்க்க ஆயுளைக் கொடுக்கும் (பொதுவிதி)

1. லக்கின அதிபதி ஆட்சி அல்லது உச்ச பலம் பெற்றிருத்தல்.
2. எட்டாம் வீட்டில் சனி அல்லது குரு இருப்பது.
3. லக்கினமும், சந்திரராசியும் சுபகிரகங்களின் சேர்க்கை பெற்றிருப்பது.
4. லக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திர வீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருக்கும் நிலைமை.
5. லக்கினாதிபதி 8-ம் வீட்டில் இருத்தல்
6. எட்டாம் வீட்டிற்கு அதிபதி 8-ம் வீட்டிலோ அல்லது லக்கினத்திலோ இருத்தல் அல்லது லக்கினத்தையோ அல்லது 8-ம் வீட்டையோ தன் பார்வையில் வைத்திருக்கும் நிலைப்பாடு.
7. சந்திரனும், லக்கினாதிபதியும் சேர்ந்து இருப்பது.
8. குரு அல்லது சனி எட்டாம் வீட்டையோ பார்க்கும் நிலைப்பாடு.
9. சனி அல்லது எட்டாம் வீட்டதிபதி ஒரு உச்சமான கிரகத்துடன் சேர்ந்திருந்தால் தீர்க்கமான ஆயுள்
10. லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோண வீட்டில் இருப்பதுடன், ஜாதகத்தில் தீய கிரகங்கள் 6 & 12ஆம் வீட்டில் இருந்தால் தீர்க்கமான ஆயுள்
11. லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோண வீட்டில் இருப்பதுடன், குரு அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தால் தீர்க்கமான ஆயுள்.
12. லக்கினாதிபதியும், எட்டாம் இடத்ததிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் எட்டாம் இடம் அல்லது 11ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள்.
13. ஜாதகத்தில் சனி, லக்னாதிபதி அல்லது எட்டாம் அதிபதியுடன் கூட்டாகச் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத்
தீர்க்கமான ஆயுள்.
14. எட்டாம் அதிபதி ஆட்சி பலம் பெற்றிருப்பதுடன், எட்டாம் வீட்டில் சனி இருக்கும் அமைப்பு ஜதகனுக்குத் தீர்க்க ஆயுளைக் கொடுக்கும்.
15. லக்கினாதிபதி வலிமையாக இருப்பதுடன், குரு உச்சம் பெற்றிருந்தால் ஜாதகனுக்குத் தீர்க்காயுள்.

இன்னும் நிறைய அமைப்புக்கள் உள்ளன. நான் முக்கியமானவற்றையே குறிப்பிட்டுள்ளேன். நம் லெவலுக்கு இது போதும்!

சுருக்கமாக:
லக்கினாதிபதியும், சுபக்கிரகங்களும் (வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன்) ஆகியவைகள் கேந்திர வீடுகளில்   1, 4, 7, 10 இருந்தால் ஜாதகனுக்குத் தீர்க்காயுள்.
அவைகளே 2, 5, 8, 11 ஆம் வீடுகளில் இருந்தால் மத்திம ஆயுள்.
அவைகளே 3, 6, 9, 12 ஆம் வீடுகளில் இருந்தால் குறைவான ஆயுள்.

இவைகள் அனைத்துமே பொதுவிதிகள். ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் வைத்து ஆயுளை நிர்ணயிக்க வேண்டும்.

இதைப் போல பல கிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் கூறிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை மட்டும் நான் கொடுத்துள்ளேன். முழுவதையும் தெரிந்துகொள்ள விரும்புவர்கள் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களைப் படிக்கலாம். ஆயுளைப் பற்றி  விரிவாக அவற்றில் உள்ளது.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், எனது தட்டச்சும் நேரம் கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

பாடம் மேலும் உள்ளது. அவைகள் தொடர்ந்து வரும்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
எட்டாம் வீட்டைப் பற்றிய மேலதிகத் தகவல்:
எட்டாம் வீட்டிற்கான வேலைகள்:
Diseases,
Death
Finances through unfair means,
internal sex organs,
longevity,
mental pain,
obstacles,
mode of death,
imprisonment,
worries and
It also indicates body parts as scrotum, pelvis, seminal vesicles, external genitalia, etc.



வாழ்க வளமுடன்!

50 comments:

  1. அற்புதமான விசயங்களை
    சொற்பதங்களுடன் சொல்லிவிட்டீர்கள்.
    தொப்பென விழவே சிந்தனைக்
    குளத்தில் தள்ளிவிடீர்கள்.

    வேறொன்றும் வேண்டேன்
    வெங்கடேசா சங்கடமில்லா
    சொவொன்று போதுமடா
    சர்வேசா!.
    சங்கடமில்லா சாவோன்றா,
    சர்வேசன் நான் என்ன செய்ய?
    சான்றோர் சாற்றியபடி
    தந்தை தாய் பேணிவிடு,
    சங்கடமில்லா சாவொன்று
    தானாய் வந்துவிடும்
    கவலைவிடு!!

    ஜோதிடத்தின் வழி பல நீதிகளை
    பாங்குடனே பகற்கிரீர்....
    பண்பாளன் நானா?... என்று
    துலாபாரம் தூக்க......!!!
    நன்றிகள் குருவே.

    ReplyDelete
  2. இந்த யாதெனின் குறள்ளே இன்னொரு சிறப்பு அதைப் படிக்கிறப்பொ ரெண்டு உதடுகளும் ஒட்டாது. ஒட்டாமல் இருக்க வேண்டும் என்கிற குறளையே ஒட்டாமல் எழுதி சாதனை பண்ணவர் நம்ம தாடித் தமிழர்!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  3. கட்டுரையில் "எந்தப் பொருளின் மீதும் பற்று வைக்காதே, அப்படி வைக்காமல் இருந்தால் அதனால் உனக்கு எந்தத் துன்பமும் வராது" என்பது மிகமிக சத்தியமான வார்த்தை. அது சரி! பொதுவாக மனிதன் ஆசை வைக்கும் பொருட்களையெல்லாம் வரிசைப் படுத்தி வரும்போது, என்போன்றவருக்கெல்லாம் அறிமுகமில்லாத சில பொருட்கள், அதன் பெயர்கள் இவற்றையும் குறிப்பிட வேண்டுமா? ஓகோ இப்படியெல்லாம் கூட பொருட்கள் உண்டா, இத்தனை காலம் இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் போனோமே, வாழ்க்கையே வீணாகிவிட்டதே என்ற ஏக்கம் வந்துவிடாதா என்போன்ற சிலருக்கு. சரி, போனது போயிற்று, கடைசி காலத்தில் இவற்றைத் தெரிந்து கொண்டுதான் என்ன பயன். ஆனால் உங்கள் எழுத்து நடை, அது நெஞ்சில் பதியும் வேகம் இவை அதிசயிக்கத் தக்கதுதான். வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே.

    ReplyDelete
  4. today second tuesday viradham started. actually idhuve mudhal vaaramaaga eduthukolgirein. yeinendral ..pona vaaram after 6pm . oru sappatai kattu kattivitein. from this tuesday onwards perfect viradham. thank u

    ReplyDelete
  5. also onemore doubt. for viradham..water evalavu vendumanalum koodikalama ..aladu aduvum limiteda?..hehehe

    ReplyDelete
  6. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஜாதகனுக்குத் தீர்க்க ஆயுளைக் கொடுக்கும் நிலைப் பற்றிய பொதுவிதிகள்
    நன்கு தெளிவாகவும், எளிதில் புரியும்படியாகவும் உள்ளது.
    நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-20

    ReplyDelete
  7. வாத்தியாரே . . .
    உங்களுக்கு ரொம்ப ஜாஸ்தி . .

    யாருமே சொல்லாத . . சொல்லிக் குடுக்காத அந்த தேவ ரகசியத்தை
    சும்மா . . புரியராப்பல
    லட்டு கணக்கா வைச்சுட்டீங்க . .

    உங்களுக்கு டாக்டர் பட்டமே தர நாங்க தயார் . . .

    (ஆனாலும் இது போதும்னு சில சரக்கை மறைச்சுட்டீங்களே . . )
    :(

    ReplyDelete
  8. அய்யா வணக்கம்,
    எட்டாம் இடத்தின் விவரங்களை தங்கள் மாணவர்களுக்குப் புரியும் விதமாக தெளிவாக பாடம் சொல்லி இருக்கிறீர்கள் அய்யா,அருமை,அருமை.
    நன்றி,வணக்கம்.
    அரசு.

    ReplyDelete
  9. ////Alasiam G said...
    அற்புதமான விசயங்களை
    சொற்பதங்களுடன் சொல்லிவிட்டீர்கள்.
    தொப்பென விழவே சிந்தனைக்
    குளத்தில் தள்ளிவிடீர்கள்.
    வேறொன்றும் வேண்டேன்
    வெங்கடேசா சங்கடமில்லா
    சொவொன்று போதுமடா
    சர்வேசா!.
    சங்கடமில்லா சாவோன்றா,
    சர்வேசன் நான் என்ன செய்ய?
    சான்றோர் சாற்றியபடி
    தந்தை தாய் பேணிவிடு,
    சங்கடமில்லா சாவொன்று
    தானாய் வந்துவிடும்
    கவலைவிடு!!
    ஜோதிடத்தின் வழி பல நீதிகளை
    பாங்குடனே பகற்கிரீர்....
    பண்பாளன் நானா?... என்று
    துலாபாரம் தூக்க......!!!
    நன்றிகள் குருவே./////

    உங்களுக்கு துலாபாரம் வேண்டாம். மனக் கண்ணாலேயே அளந்துவிடுவீர்களே ஆலாசியம்!

    ReplyDelete
  10. ////Jawahar said...
    இந்த யாதெனின் குறள்ளே இன்னொரு சிறப்பு அதைப் படிக்கிறப்பொ ரெண்டு உதடுகளும் ஒட்டாது. ஒட்டாமல் இருக்க வேண்டும் என்கிற குறளையே ஒட்டாமல் எழுதி சாதனை பண்ணவர் நம்ம தாடித் தமிழர்!
    http://kgjawarlal.wordpress.com////

    மேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. //////Thanjavooraan said...
    கட்டுரையில் "எந்தப் பொருளின் மீதும் பற்று வைக்காதே, அப்படி வைக்காமல் இருந்தால் அதனால் உனக்கு எந்தத் துன்பமும் வராது" என்பது மிகமிக சத்தியமான வார்த்தை. அது சரி! பொதுவாக மனிதன் ஆசை வைக்கும் பொருட்களையெல்லாம் வரிசைப் படுத்தி வரும்போது, என்போன்றவருக்கெல்லாம் அறிமுகமில்லாத சில பொருட்கள், அதன் பெயர்கள் இவற்றையும் குறிப்பிட வேண்டுமா? ஓகோ இப்படியெல்லாம் கூட பொருட்கள் உண்டா, இத்தனை காலம் இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் போனோமே, வாழ்க்கையே வீணாகிவிட்டதே என்ற ஏக்கம் வந்துவிடாதா என்போன்ற சிலருக்கு. சரி, போனது போயிற்று, கடைசி காலத்தில் இவற்றைத் தெரிந்து கொண்டுதான் என்ன பயன். ஆனால் உங்கள் எழுத்து நடை, அது நெஞ்சில் பதியும் வேகம் இவை அதிசயிக்கத் தக்கதுதான். வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே.///////

    உங்களின் மனமுவந்த பாரட்டுக்களுக்கு நன்றி. உங்களின் வாழ்த்தை ஆசீர்வாதமாக எடுத்துக்கொள்கிறேன்.
    பதிவை எல்லா வயதினரும் படிக்கிறார்கள். அதிகமாக இளைஞர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்காகதத்தான்
    பட்டியலில் கலவையான பொருட்களையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கு அப்போதுதான் சட்டென்று பிடிபடும்.

    ReplyDelete
  12. ////Jack Sparrow said...
    today second tuesday viradham started. actually idhuve mudhal vaaramaaga eduthukolgirein. yeinendral ..pona vaaram after 6pm . oru sappatai kattu kattivitein. from this tuesday onwards perfect viradham. thank u//////

    நல்லது. தொடர்ந்து இருந்து வாருங்கள்! பழநிஅப்பன் அருள் புரிவான்!

    ReplyDelete
  13. /////Jack Sparrow said...
    also onemore doubt. for viradham..water evalavu vendumanalum koodikalama ..aladu aduvum limiteda?..hehehe////////

    தண்ணீருக்கும் நெருப்பிற்கும் தீட்டும் கிடையாது. அளவும் கிடையாது!

    ReplyDelete
  14. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஜாதகனுக்குத் தீர்க்க ஆயுளைக் கொடுக்கும் நிலைப் பற்றிய பொதுவிதிகள்
    நன்கு தெளிவாகவும், எளிதில் புரியும்படியாகவும் உள்ளது.
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    உங்களின் பின்னூட்டத்தில் எப்போது பாராட்டுக்கள் மட்டுமே இருக்கும். அதனால் மட்டுறுத்தாமல் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே பதிவிற்கு அனுப்பிவிடலாம். நன்றி!

    ReplyDelete
  15. /////CJeevanantham said...
    Dear sir,
    Nice explanation.
    Thank you.////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  16. ///////iyer said...
    வாத்தியாரே . . .
    உங்களுக்கு ரொம்ப ஜாஸ்தி . .
    யாருமே சொல்லாத . . சொல்லிக் குடுக்காத அந்த தேவ ரகசியத்தை
    சும்மா . புரியராப்பல லட்டு கணக்கா வைச்சுட்டீங்க . .
    உங்களுக்கு டாக்டர் பட்டமே தர நாங்க தயார் . . .
    (ஆனாலும் இது போதும்னு சில சரக்கை மறைச்சுட்டீங்களே . . ):(/////////

    டாக்டர் பட்டமெல்லாம் வேண்டாம். வாத்தியார் பட்டத்தைவிட அவையெல்லாம் ஒன்றும் உயர்ந்ததல்ல!

    ReplyDelete
  17. //////ARASU said...
    அய்யா வணக்கம்,
    எட்டாம் இடத்தின் விவரங்களை தங்கள் மாணவர்களுக்குப் புரியும் விதமாக தெளிவாக பாடம் சொல்லி இருக்கிறீர்கள் அய்யா,அருமை,அருமை.
    நன்றி,வணக்கம்.
    அரசு.//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. அருமையான பாடம்,
    மிதமான வேகத்தில் ஆரம்பித்த இன்றைய பாடம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடிந்தது. அத்தனை விதிகளும் மனதில் பதிந்ததுதான் அதில் சிறப்பே.
    மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete
  19. எங்களுக்காக நிங்கள் ஒதுக்கிய நேரத்திற்கு நன்றி...நிங்கள் கொடுத்த அணைத்து தகவலுக்கும் நன்றி

    ReplyDelete
  20. நீங்கள் பாடம் நடத்துவதைவிட, முதலில் மாணவர்களை கிரக பலன் எதுவாக இருந்தாலும் பயப்படாமல் ஏற்றுக்கொள்ளுமாறு தயார் செய்வது அருமை. 8 ஆம் வீட்டைப் பற்றிய பாடங்கள் எளிதாக உள்ளன.

    நீங்கள் மனவளக் கட்டுரை முன்னால் எழுத ஆரம்பித்ததை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?

    ReplyDelete
  21. ஐயா வணக்கம்...!
    வழக்கம் போல் இன்றைய பாடமும் இரத்தின சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தது. நன்றிகள்.. நேற்றைய பாடத்தில் எட்டில் சனி இருந்தாலும் லக்கினத்தில் செவ்வாய் இருந்தால் மத்திம ஆயுள்தான் என்று எழுதியிருந்ததை படித்தவுடன் கொஞ்சம் mood out ஆகிவிட்டேன். அதனால் தான் பின்னூட்டம் கூட இடவில்லை, மன்னிக்கவும்... (காரணம் எனக்கு துலா லக்கினத்தில் மாந்தியும் செவ்வாயும், எட்டில் ரிஷப சனி, 2ல் சுக்கிரன்,புதன்,சூரியன் கூட்டணி, மூன்றில் குரு-ராகு கூட்டணி, ஆறில் மீன சந்திரன்- இது கம்ப்யூட்டர் படி. ஆனால் அப்பா கணித்திருக்கும் ஜாதகத்திலோ லக்கினாதிபதி சுக்கிரன், மாந்தி-செவ்வாயுடன் லக்கினத்திலேயே.). ஆனால் இன்றைய பாடத்தை படித்தவுடன் மனதை சற்று தேற்றிக்கொண்டேன். மூன்றில் ராகு, எட்டில் சனி ஆகியவை நீண்ட ஆயுளைத் தரும் என்றாலும் லக்கினத்தில் உள்ள குழப்பம் சற்று மனதை சஞ்சலப்படத்தான் வைக்கிறது. இதை மட்டும் தயவு செய்து தெளிவு படுத்துங்கள் குருவே...

    மிக்க நன்றிகளுடன்
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  22. ஐயா!!!

    பாடம் எளிதாக புரியும் படியாக இருந்தது. Finances through unfair means - ஒருவருக்கு வரதட்சணை மூலம் பணம் கிடைக்குமா? அல்லது கிடைக்காதா? என்பதும் 8ம் வீட்டை அலசினால் தெரிய வரும் போலவே....

    ReplyDelete
  23. /////Jack Sparrow said...
    that was a nice line. thank u////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. ////தமிழ்மணி said...
    அருமையான பாடம்,
    மிதமான வேகத்தில் ஆரம்பித்த இன்றைய பாடம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடிந்தது. அத்தனை விதிகளும் மனதில் பதிந்ததுதான் அதில் சிறப்பே.
    மிக்க நன்றி அய்யா.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி. ஒரே வேகத்தில்தான் எழுதியுள்ளேன்!:-)))

    ReplyDelete
  25. /////மதி said...
    எங்களுக்காக நீங்கள் ஒதுக்கிய நேரத்திற்கு நன்றி...நிங்கள் கொடுத்த அணைத்து தகவலுக்கும் நன்றி//////

    நல்லது. நன்றி மதிவாணரே!

    ReplyDelete
  26. ////சிங்கைசூரி said...
    பாடம் அருமை !/////

    நல்லது. நன்றி சூரி!

    ReplyDelete
  27. //////Uma said...
    நீங்கள் பாடம் நடத்துவதைவிட, முதலில் மாணவர்களை கிரக பலன் எதுவாக இருந்தாலும் பயப்படாமல் ஏற்றுக்கொள்ளுமாறு தயார் செய்வது அருமை. 8 ஆம் வீட்டைப் பற்றிய பாடங்கள் எளிதாக உள்ளன.
    நீங்கள் மனவளக் கட்டுரை முன்னால் எழுத ஆரம்பித்ததை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?//////

    ஜோதிடப்பாடங்களை ஒரளவு நிறைவு செய்துவிட்டுப் பிறகு எழுத உள்ளேன் சகோதரி!

    ReplyDelete
  28. M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    வழக்கம் போல் இன்றைய பாடமும் இரத்தின சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தது. நன்றிகள்.. நேற்றைய பாடத்தில் எட்டில் சனி இருந்தாலும் லக்கினத்தில் செவ்வாய் இருந்தால் மத்திம ஆயுள்தான் என்று எழுதியிருந்ததை படித்தவுடன் கொஞ்சம் mood out ஆகிவிட்டேன். அதனால் தான் பின்னூட்டம் கூட இடவில்லை, மன்னிக்கவும்... (காரணம் எனக்கு துலா லக்கினத்தில் மாந்தியும் செவ்வாயும், எட்டில் ரிஷப சனி, 2ல் சுக்கிரன்,புதன்,சூரியன் கூட்டணி, மூன்றில் குரு-ராகு கூட்டணி, ஆறில் மீன சந்திரன்- இது கம்ப்யூட்டர் படி. ஆனால் அப்பா கணித்திருக்கும் ஜாதகத்திலோ லக்கினாதிபதி சுக்கிரன், மாந்தி-செவ்வாயுடன் லக்கினத்திலேயே.). ஆனால் இன்றைய பாடத்தை படித்தவுடன் மனதை சற்று தேற்றிக்கொண்டேன். மூன்றில் ராகு, எட்டில் சனி ஆகியவை நீண்ட ஆயுளைத் தரும் என்றாலும் லக்கினத்தில் உள்ள குழப்பம் சற்று மனதை சஞ்சலப்படத்தான் வைக்கிறது. இதை மட்டும் தயவு செய்து தெளிவு படுத்துங்கள் குருவே...
    மிக்க நன்றிகளுடன்
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்/////

    உங்கள் தந்தையார் வாக்கிய முறையில் கணித்துவைத்திருப்பார். அதுதான் சரியானது. அதையே பின்பற்றுங்கள். குழப்பம் வேண்டாம்.

    ReplyDelete
  29. //////Arul said...
    ஐயா!!!
    பாடம் எளிதாக புரியும் படியாக இருந்தது. Finances through unfair means - ஒருவருக்கு வரதட்சணை மூலம் பணம் கிடைக்குமா? அல்லது கிடைக்காதா? என்பதும் 8ம் வீட்டை அலசினால் தெரிய வரும் போலவே..../////

    ஆமாம். வரதட்சனை என்பதால், அதைப் பற்றி எழுதவில்லை!

    ReplyDelete
  30. எப்படியோ எனக்கு தீர்க்காயுள் என்பது மட்டும் தெரிகிறது. என் சொந்த விருப்பத்தைக் கேட்டால் 60 வயதிற்கு மேல் உயிர் வாழ விருப்பமில்லை. பிருஹத் பராசர ஹோரையில் படித்தது. Lagna Lord is singly capable of counteracting all evils, if he is strongly placed in an angle.
    அவர் 6,8,12ல் மறைந்தால் கஷ்டம்தான்.

    ஆயுளுக்கு 8ம் வீட்டோடு ஏன் 3ம் வீட்டையும் பார்க்க வேண்டும் என்று பல முறை யோசித்திருக்கிறேன். பிறகுதான் தெரிந்தது. அது 8ம் வீட்டிற்கு 8ம் வீடு என்பதால் என்று. எனக்கு இந்த 2 வீட்டிற்கும் செவ்வாய் ஒருவர்தான் அதிபதி. அவருடைய தசா புத்திகளில் கூடுதல் கவணத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. இருப்பினும் ஆயுளை முடிப்பது மட்டுமல்ல அதை வளர்ப்பதும் அவரது வேலைதான்.

    ReplyDelete
  31. 1,4,7,8,11 விதிகள் எனக்குக் கொஞ்ச‌ம் சாதகம்

    ReplyDelete
  32. 8ம் இடம் unearned wealthஐயும் குறிக்கும் என்று படித்திருக்கிறேன். இதற்கான இடம் 5ம் வீடா, 8ம் வீடா என்பதில் சில காலமாகவே எனக்குள் குழப்பம் இருக்கிறது.

    எனக்கு ஆரம்பத்தில் மாரக ஸ்தானாதிபதிகள், அவர்களுடைய தசை பற்றிதான் அறிந்திருந்தேன். பின்னாளில்தான் மாரக தசை என்று வேறு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையும் நான் சொல்லவில்லை. கீழே கொடுத்துள்ள ஜாதக அலங்காரப் பாடல் சொல்கிறது.

    மாரகத்தின் திசையறிய வருநான்கந்திசை சனியே வந்துற்றாலும்
    பார்தனக்குச்சுதன் செவ்வாயைந்தாகுந்திசை பரிந்துற்றாலும்
    பேருதித்தவாறாகுந் திசையரசரானாலும் பின்பு ராகு
    சீருதித்தவேழாகுந்திசையானாலும் மரணந்திண்ணந்தானே.

    இதன் அர்த்தம். சனி 4ம் திசை, செவ்வாய் 5ம் திசை, குரு 6ம் திசை, ராகு 7ம் தசை இவை மாரக திசையாக அமையும். வெறும் கவிதை நடையிலேயே உள்ள ஒரு ஜோதிட புத்தகம் என்னிடம் உள்ளது. எதற்கு இதை விட வேண்டும் என்று மிகுந்த சிரத்தை எடுத்து படித்து விளங்கி கொண்டிருக்கிறேன். திரைப்பட வசனம் போல் சொல்வதானால் எவ்வளவோ படித்து விட்டோம். இதை படிக்க மாட்டோமா என்பதுதான்.

    ReplyDelete
  33. நம் மக்கள் அனைவருக்கும் 100 ஆண்டுகள்
    இளமை வாங்கிவந்ததாக நினைப்பு!

    ஒவ்வொருவனுக்கும்
    காத்துக்கொண்டேயிருக்கிறது
    முதுமையும், மரணமும் என்பதையே
    மறந்து விடுகிறான் மனிதன்!

    தர்மதேவனின் கேள்வி-பதில்கள் தான்
    ஞாபகத்திற்கு வருகின்றது.

    உங்களது சொற்பதம் அருமை!
    கவியரசரின் கட்டுரைகளை
    நினைவுறுத்துகின்றன..
    நன்றிகள்!

    ReplyDelete
  34. /////ananth said...
    எப்படியோ எனக்கு தீர்க்காயுள் என்பது மட்டும் தெரிகிறது. என் சொந்த விருப்பத்தைக் கேட்டால் 60 வயதிற்கு மேல் உயிர் வாழ விருப்பமில்லை. பிருஹத் பராசர ஹோரையில் படித்தது. Lagna Lord is singly capable of counteracting all evils, if he is strongly placed in an angle.
    அவர் 6,8,12ல் மறைந்தால் கஷ்டம்தான்.
    ஆயுளுக்கு 8ம் வீட்டோடு ஏன் 3ம் வீட்டையும் பார்க்க வேண்டும் என்று பல முறை யோசித்திருக்கிறேன். பிறகுதான் தெரிந்தது. அது 8ம் வீட்டிற்கு 8ம் வீடு என்பதால் என்று. எனக்கு இந்த 2 வீட்டிற்கும் செவ்வாய் ஒருவர்தான் அதிபதி. அவருடைய தசா புத்திகளில் கூடுதல் கவணத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. இருப்பினும் ஆயுளை முடிப்பது மட்டுமல்ல அதை வளர்ப்பதும் அவரது வேலைதான்.///////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  35. ////kmr.krishnan said...
    1,4,7,8,11 விதிகள் எனக்குக் கொஞ்ச‌ம் சாதகம்/////

    கிருஷ்ணன் என்ற பெயருக்கு எல்லாமே சாதகமாகத்தான் இருக்கும் சார்!:-))))))

    ReplyDelete
  36. ananth said...
    8ம் இடம் unearned wealthஐயும் குறிக்கும் என்று படித்திருக்கிறேன். இதற்கான இடம் 5ம் வீடா, 8ம் வீடா என்பதில் சில காலமாகவே எனக்குள் குழப்பம் இருக்கிறது.
    எனக்கு ஆரம்பத்தில் மாரக ஸ்தானாதிபதிகள், அவர்களுடைய தசை பற்றிதான் அறிந்திருந்தேன். பின்னாளில்தான் மாரக தசை என்று வேறு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையும் நான் சொல்லவில்லை. கீழே கொடுத்துள்ள ஜாதக அலங்காரப் பாடல் சொல்கிறது.
    மாரகத்தின் திசையறிய வருநான்கந்திசை சனியே வந்துற்றாலும்
    பார்தனக்குச்சுதன் செவ்வாயைந்தாகுந்திசை பரிந்துற்றாலும்
    பேருதித்தவாறாகுந் திசையரசரானாலும் பின்பு ராகு
    சீருதித்தவேழாகுந்திசையானாலும் மரணந்திண்ணந்தானே.
    இதன் அர்த்தம். சனி 4ம் திசை, செவ்வாய் 5ம் திசை, குரு 6ம் திசை, ராகு 7ம் தசை இவை மாரக திசையாக அமையும். வெறும் கவிதை நடையிலேயே உள்ள ஒரு ஜோதிட புத்தகம் என்னிடம் உள்ளது. எதற்கு இதை விட வேண்டும் என்று மிகுந்த சிரத்தை எடுத்து படித்து விளங்கி கொண்டிருக்கிறேன். திரைப்பட வசனம் போல் சொல்வதானால் எவ்வளவோ படித்து விட்டோம். இதை படிக்க மாட்டோமா என்பதுதான்.//////

    கவிதை நடையில் உள்ள புத்தகங்கள் என்னிடம் நிறைய உள்ளன ஆனந்த்! அதற்காக ஒரு தொடர் பாடம் வைக்கலாம் என்றிருக்கிறேன். இப்போது அல்ல! பிறகு ஒரு சமயம்!

    ReplyDelete
  37. /////அண்ணாமலை..!! said...
    நம் மக்கள் அனைவருக்கும் 100 ஆண்டுகள்
    இளமை வாங்கிவந்ததாக நினைப்பு!
    ஒவ்வொருவனுக்கும் காத்துக்கொண்டேயிருக்கிறது முதுமையும், மரணமும் என்பதையே
    மறந்து விடுகிறான் மனிதன்!
    தர்மதேவனின் கேள்வி-பதில்கள் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.
    உங்களது சொற்பதம் அருமை! கவியரசரின் கட்டுரைகளை நினைவுறுத்துகின்றன..
    நன்றிகள்!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி அண்ணாமலை.

    ReplyDelete
  38. vetrigaramaga indru viradham mudithuvitein...evening mattum oru saamiku padaithuvittu one tumbler milk. ..hehehe... manadhil oru positive energy.hehehehe..

    ReplyDelete
  39. வணக்கம் ஐயா. குரு ராசியை ஐந்தாம் பார்வையாகவும் லக்னத்தை ஏழாம் பார்வையாகவும் பகை ஸ்தான தில் இருந்து பார்த்தல் தீர்க்க ஆயுளை கொடுக்குமா?

    ReplyDelete
  40. அன்புள்ள அய்யா,
    பெண்களுக்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய பலத்தை குறிக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம். அது உண்மையா?அது தவிர லக்கினத்தில் சனி என்பது விதவை தோஷம் என்று சமீபத்தில் படித்ததாக ஞாபகம்.இதே போன்ற அமைப்பு ஒரு அகால மரணம் அடைந்த தேசியத்தலைவரின் மனைவியின் ஜாதகத்தில் கண்டு வியந்தேன்.சுய ஜாதகம் வலிமையாக இருக்கும் பட்சம் மனைவியின் ஜாதகம் கணவனின் ஜாதகத்தை பாதிக்க முடியுமா? அனுபவ சோதிடம் என்ன சொல்கிறது என்று அறிய விரும்புகிறேன்..

    ReplyDelete
  41. ////Jack Sparrow said...
    vetrigaramaga indru viradham mudithuvitein...evening mattum oru saamiku padaithuvittu one tumbler milk. ..hehehe... manadhil oru positive energy.hehehehe..////

    இதுதான். இதைத்தான் எதிர்பார்த்தேன்...ஹி.ஹி..ஹிஹி....!

    ReplyDelete
  42. ////vprasanakumar said...
    sir, migavum arumai aiyaa////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  43. My Nifty Trades said...
    வணக்கம் ஐயா. குரு ராசியை ஐந்தாம் பார்வையாகவும் லக்னத்தை ஏழாம் பார்வையாகவும் பகை ஸ்தான

    தில் இருந்து பார்த்தல் தீர்க்க ஆயுளை கொடுக்குமா?////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில்
    சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு
    தற்சமயம் அதற்கு நேரமில்லை.
    ஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும்
    விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள்
    அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள்.அந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்

    ReplyDelete
  44. ////minorwall said...
    அன்புள்ள அய்யா,
    பெண்களுக்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய பலத்தை குறிக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம். அது உண்மையா?அது தவிர லக்கினத்தில் சனி என்பது விதவை தோஷம் என்று சமீபத்தில் படித்ததாக ஞாபகம்.இதே போன்ற அமைப்பு ஒரு அகால மரணம் அடைந்த தேசியத்தலைவரின் மனைவியின் ஜாதகத்தில் கண்டு வியந்தேன்.சுய ஜாதகம் வலிமையாக இருக்கும் பட்சம் மனைவியின் ஜாதகம் கணவனின் ஜாதகத்தை பாதிக்க முடியுமா? அனுபவ சோதிடம் என்ன சொல்கிறது என்று அறிய விரும்புகிறேன்.. /////

    பெண்கள் ஜாதகத்தில் சில விஷேச அமைப்புக்கள் உள்ளன. உதாரணத்திற்கு 4ஆம் இடம் கற்பு ஸ்தானம். பெண்கள் ஜாதகத்திற்காக பின்னால் ஒரு தொடர் எழுத உள்ளேன். பொறுத்திருந்து படியுங்கள்.
    உங்களின் கேள்விக்கு வருவோம். சுய ஜாதகம் வலிமையாக இருக்கும் பட்சம் மனைவியின் ஜாதகம் கணவனின் ஜாதகத்தை பாதிக்காது. மனைவியின் தோஷங்கள் அவளைப் பிரிவிற்குக் கொண்டுபோய் விட்டுவிடும் It will end in separation) விளக்கம்போதுமா மைனர்?

    ReplyDelete
  45. அய்யா வணக்கம்,
    பந்தாவா ( வித் அவுட் ஈகோ) உங்க க்ளாஸுல சேர்ந்துக்கிட்டாலும் பாடம் படிக்காத ஸ்டூடண்ட். பெஞ்ச் மேல ஏறி நிக்கனுமா என்ன தெரியலை..
    //லக்கினாதிபதியும், சுபக்கிரகங்களும் (வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன்) ஆகியவைகள் கேந்திர வீடுகளில் 1, 4, 7, 10 இருந்தால் ஜாதகனுக்குத் தீர்க்காயுள். //னு சொல்லியிருக்கிங்க. நான் ஸ்டூடண்டா இருந்த காலத்துல இதை கோண ஸ்தானங்கள்ள இருந்தா ஸ்ரேஷ்டம்னு படிச்சதா ஞா. என் ஞா தவறா என்ன புரியலிங்கண்ணா?

    ReplyDelete
  46. /////Chittoor.S.Murugesan said...
    அய்யா வணக்கம்,
    பந்தாவா ( வித் அவுட் ஈகோ) உங்க க்ளாஸுல சேர்ந்துக்கிட்டாலும் பாடம் படிக்காத ஸ்டூடண்ட். பெஞ்ச் மேல ஏறி நிக்கனுமா என்ன தெரியலை..////

    இணைய வகுப்பு இது. இதில் பெஞ்ச்சிற்கு இடமில்லை. ஆகவே யாரும் பெஞ்சின் மேல் நிற்க முடியாது. அத்துடன், கண்டிப்பு இன்றிக் கனிவுடன் பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்பறை இது (முகப்பில் உள்ளதே சுவாமி)
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //லக்கினாதிபதியும், சுபக்கிரகங்களும் (வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன்) ஆகியவைகள் கேந்திர வீடுகளில் 1, 4, 7, 10 இருந்தால் ஜாதகனுக்குத் தீர்க்காயுள். //னு சொல்லியிருக்கிங்க. நான் ஸ்டூடண்டா இருந்த காலத்துல இதை கோண ஸ்தானங்கள்ள இருந்தா ஸ்ரேஷ்டம்னு படிச்சதா ஞா. என் ஞா தவறா என்ன புரியலிங்கண்ணா?/////

    கோண ஸ்தானங்கள் என்று எதைச் சொல்ல வருகிறீர்கள் நண்பரே - திரிகோண ஸ்தானங்களைத்தானே? ஆமாம், என்றால் அவை 1, 5 & 9 ஆம் வீடுகள் அல்லவா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com