10.7.10

சொல்லாத நாளில்லை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சொல்லாத நாளில்லை!

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 10

Òகழ் பெற்ற பாடல் என்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள்தான்!
--------------------------------------------------------------------
பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்
இயற்றியவர்: கோவைக் கூத்தன்

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே...
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே

உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...

சுடர்மிகு வடிவேலா...

--------------------------------------------------
பாடலின் ஒலிவடிவத்தைக் கேட்க வேண்டுமா?
அதற்கான சுட்டி இங்கே உள்ளது. அழுத்திக் கேட்டு ஆனந்தமடையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

22 comments:

  1. பல நேரங்களில் இந்த பாடலை கேட்டு ரசித்திருக்கிறேன். தங்கள் மூலமாக இப்போது பாடியும் மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  2. நற்காலைப் பொழுதை முருகனின் இனிமையான பாடலுடன் துவங்கியதற்கு நன்றி...மனதிற்கு இனிமையான பாடல்..

    ReplyDelete
  3. "...அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்.." என்பார் மஹாகவி. " அன்பும் அறமும் அகமும் புறமும் நாட" என்பது சீரிய சிந்தனை!

    ReplyDelete
  4. //////ananth said...
    பல நேரங்களில் இந்த பாடலை கேட்டு ரசித்திருக்கிறேன். தங்கள் மூலமாக இப்போது பாடியும் மகிழ்ந்தேன். ////

    T.M.S பாடிய முருகன் பாடல்களில் பல பாடல்கள் அமரத்துவம் பெற்றவை. அற்புதமான குரல்வளம் அவருக்கு. எல்லாம் முருகன் அருள்!

    ReplyDelete
  5. ////minorwall said...
    நற்காலைப் பொழுதை முருகனின் இனிமையான பாடலுடன் துவங்கியதற்கு நன்றி...மனதிற்கு இனிமையான பாடல்../////

    இன்று உங்களுக்கு அங்கே விடுமுறை நாள்தானே! வாரத்தில் 2 நாட்கள் விடுமுறையல்லவா? விடுமுறை பக்தி மார்க்கத்தில் (செலவில்லாமல்) செல்வதற்காகத்தான், சனிக்கிழமை தோறும் பக்திப்பாடல்களை வலையேற்றுகிறேன் மைனர்!!!!

    ReplyDelete
  6. /////kmr.krishnan said...
    "...அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்.." என்பார் மஹாகவி. " அன்பும் அறமும் அகமும் புறமும் நாட" என்பது சீரிய சிந்தனை!////

    உண்மை சார்! இந்த வரியில் ஒரு அழுத்தம் கொடுத்துப்பாடியிருப்பார் திருவாளர் T.M.S. நன்றி!

    ReplyDelete
  7. Dear Sir,

    Last few weeks my computer has got some problem, i was not able to publish comments, Managed to back to classroom.

    Ayul Padam migavum vuru virppaga irukkiratrhu...

    Loga

    ReplyDelete
  8. அழகனை அழகாக ஆராதிக்கும்
    அருமையானப் பாடல்.
    நன்றிகள் ஆசானே!

    ReplyDelete
  9. ////bhuvanar said...
    Dear Sir,
    Last few weeks my computer has got some problem, i was not able to publish comments, Managed to back to classroom.
    Ayul Padam migavum vuru virppaga irukkiratrhu...
    Loga////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Alasiam G said...
    அழகனை அழகாக ஆராதிக்கும்
    அருமையானப் பாடல்.
    நன்றிகள் ஆசானே! ////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. ஆகா . . அற்புதம்
    பாடலும். . . படமும் . . .

    பின்ஊட்டத்திற்கான
    அனுமதி வரையரை
    வரவேற்கத் தக்கது . .

    ஆரோக்கியமாக
    பின் ஊட்டங்களே . .
    முன்னேற்றத்திற்கு நல்வழி

    தொடரட்டும் . . சேவை
    தொடர்கிறோம் . . நல் மாணவர்கள்

    ReplyDelete
  12. பிறந்த நாள் : 26-11-1954, பிறந்த நேரம் : பகல் 12.00 மணி 02 நிமிடம், பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம், ஜென்ம லக்னம் : கும்பம், ஜென்ம ராசி : விருச்சிகம், ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம், திதி : பிரதமை திதி, ஜெயவருடம், கார்த்திகை மாதம் 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, ஜனன கால மகாதசை - புதன் மகாதசை இருப்பு : 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள். இந்தக் கணிப்பை எழுதிய நாள் : 21-05-2009 அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாட்கள். தற்போது சந்திரன் மகாதசை - 07-07-2002 கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதுழுக்கு அளித்த பேட்டியில் பிரபாகரனின் பிறந்த நாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும், பிரபாகரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார்.
    இந்த விவரங்களைக் கொண்டு சரியான விவரம்தானா என்று உறுதி செய்துகொண்டு தெளிவாக கணிக்கப்பட்ட ஜாதகம் இது. பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி-உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன். பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி, எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது. இந்த உண்மையான ஜாதகப்படி, பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப்பொய். பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.
    என்று தொடர்கிறது.

    ReplyDelete
  13. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 10 -ல் பக்திப் பாடல்கள் ஒலியும,ஒளியும் அனைத்தும் நன்றாக உள்ளது.
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-10

    ReplyDelete
  14. // குவிகின்ற குப்பைப் பின்னூட்டங்களையும், தேவையில்லாமல் இறைவனையும், ஜோதிடத்தையும் நக்கலடித்து வருகிற பின்னூட்டங்களை வடிகட்டவே இந்த ஏற்பாடு. அதற்கெல்லாம் குட்டிச் சுவர்கள் உள்ளன. அவர்கள் அங்கே சென்று தேவையானதை எழுதி, மகிழ்ந்து கொள்ளலாம்!!!!!! //

    குட்டிச்சுவர்கள் ஒன்று இரண்டு இல்லை. ஒரு ஆயிரம் இருக்கின்றன.

    settings /comments/
    சென்று இங்கு
    registered members only
    என்று பதிவு செய்யலாம். அப்படி செய்வதன் மூலம்
    கமென்ட்ஸ் ஐ பெருவாரியாக, அறியாதவர் செய்வதைத் தவிர்க்க இயலும்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  15. இரு நாட்களுக்கு முந்தைய பதிவுடன் தொடர்பான விஷயம்:
    எம்மா(enma ) என்று நம்ம தமிழ் உச்சரிப்புடன் ஜப்பானிஸ் எமனை வணங்குகிறார்கள் என்பதனை
    ஓய்வு பெற்ற 77வயது ஜப்பானிஸ் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தகேஷி ஷோடா அவர்கள் மூலம் இன்று தெரிந்து கொண்டேன்.
    கூடவே சுவாரஸ்யமான நம்பிக்கையும் கூட..
    மனிதர்கள் இறந்து 49 நாட்கள் வரை அவர்கள் சொர்க்கமா?நரகமா?என்று தீர்வு செய்யும் வகையிலே 49 / 7 = 7 வாரங்களுக்கும் 7 நீதிபதிகள் வந்து அவர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை கேட்டறிந்து இறுதித்தீர்ப்பை 49 நாளிலே வழங்குவார்கள். இந்த நீதிபதிகளிலே 5ஆவது வாரம் வரும் நீதிபதி யமன் ஆவார்.
    இவரை இந்த 7பேர்களிலும் மிகக் கடுமையானவராக ஜப்பானிஸ் நம்புகிறார்கள். அரிசியில் செய்த மாவு உருண்டைகளை படைத்து பூச்சட்டியில் வைத்த பூவையும் வைத்து வாரா வாரம் 7வாரமும் சமாதிக்கு சென்று இறந்தவரின் பாவங்களை மன்னித்து அவர்களை சொர்க்கத்துக்கு அனுப்ப வேண்டி இறைவனை இறைஞ்சுகிறார்கள்.
    பூச்சட்டியில் வைத்த நீரை வாரா வாரம் மாற்றி புது நீர் ஊற்றுகிறார்கள்.
    இது தவிர ஜப்பானிஸ் கோவில்களில் வெளியில் நுழைவாயிலின் அருகில் உருவொத்த சிலைகள் 6 இருப்பதனை நானும் கண்டுள்ளேன்..இந்த சிலைகள் அனைத்துமே யமனின் வடிவங்கள் என்றும் அவை கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் மட்டுமே வேறுபடும் என்றும் சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றை யமன் பயன்படுத்துவார் என்றும் நீண்ட விளக்கத்தை அவர் அளித்தார்.இன்னமும் சென்ற வருடம் கூட இறந்தவருக்கான இத்தகைய சடங்குகளில் இந்த ஆசிரியர் பங்கேற்றமை குறித்து கூறியது இன்னமும் நடைமுறையில் உள்ளது என்பதை விளக்கியது..
    எங்கள் உரையாடல் பதிவை இந்த லின்க்கிலே கொடுத்திருக்கிறேன்.நேரிடையாக ஆசிரியரின் விளக்கத்தை கேட்கலாம்.(புரிந்தால்?)
    http://www.mediafire.com/file/cjydlwzm2gm/yama.wav

    ReplyDelete
  16. continuation

  17. /////iyer said...
    ஆகா . அற்புதம், பாடலும்...படமும்!
    பின்ஊட்டத்திற்கான அனுமதி வரையரை வரவேற்கத் தக்கது...
    ஆரோக்கியமான பின் ஊட்டங்களே முன்னேற்றத்திற்கு நல்வழி
    தொடரட்டும் . . சேவை
    தொடர்கிறோம் . . நல் மாணவர்கள்////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  18. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 10 -ல் பக்திப் பாடல்கள் ஒலியும,ஒளியும் அனைத்தும் நன்றாக உள்ளது.
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  19. sury said...
    // குவிகின்ற குப்பைப் பின்னூட்டங்களையும், தேவையில்லாமல் இறைவனையும், ஜோதிடத்தையும் நக்கலடித்து வருகிற பின்னூட்டங்களை வடிகட்டவே இந்த ஏற்பாடு. அதற்கெல்லாம் குட்டிச் சுவர்கள் உள்ளன. அவர்கள் அங்கே சென்று தேவையானதை எழுதி, மகிழ்ந்து கொள்ளலாம்!!!!!! //
    குட்டிச்சுவர்கள் ஒன்று இரண்டு இல்லை. ஒரு ஆயிரம் இருக்கின்றன.
    settings /comments/
    சென்று இங்கு
    registered members only
    என்று பதிவு செய்யலாம். அப்படி செய்வதன் மூலம்
    கமென்ட்ஸ் ஐ பெருவாரியாக, அறியாதவர் செய்வதைத் தவிர்க்க இயலும்.
    சுப்பு ரத்தினம்.//////

    அதைச் செய்யாமல் இருப்பேனா? கூகுளில் registered member ஆவது இயலாத காரியமா என்ன? வருகிற குட்டிச்சுவர் மேதாவிகள் அதைச் செய்துவிட்டுத்தான் உள்ளே வருகிறார்கள்.

    ReplyDelete
  20. //////minorwall said...
    இரு நாட்களுக்கு முந்தைய பதிவுடன் தொடர்பான விஷயம்:
    எம்மா(enma ) என்று நம்ம தமிழ் உச்சரிப்புடன் ஜப்பானிஸ் எமனை வணங்குகிறார்கள் என்பதனை
    ஓய்வு பெற்ற 77வயது ஜப்பானிஸ் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தகேஷி ஷோடா அவர்கள் மூலம் இன்று தெரிந்து கொண்டேன்.
    கூடவே சுவாரஸ்யமான நம்பிக்கையும் கூட..
    மனிதர்கள் இறந்து 49 நாட்கள் வரை அவர்கள் சொர்க்கமா?நரகமா?என்று தீர்வு செய்யும் வகையிலே 49 / 7 = 7 வாரங்களுக்கும் 7 நீதிபதிகள் வந்து அவர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை கேட்டறிந்து இறுதித்தீர்ப்பை 49 நாளிலே வழங்குவார்கள். இந்த நீதிபதிகளிலே 5ஆவது வாரம் வரும் நீதிபதி யமன் ஆவார்.
    இவரை இந்த 7பேர்களிலும் மிகக் கடுமையானவராக ஜப்பானிஸ் நம்புகிறார்கள். அரிசியில் செய்த மாவு உருண்டைகளை படைத்து பூச்சட்டியில் வைத்த பூவையும் வைத்து வாரா வாரம் 7வாரமும் சமாதிக்கு சென்று இறந்தவரின் பாவங்களை மன்னித்து அவர்களை சொர்க்கத்துக்கு அனுப்ப வேண்டி இறைவனை இறைஞ்சுகிறார்கள்.
    பூச்சட்டியில் வைத்த நீரை வாரா வாரம் மாற்றி புது நீர் ஊற்றுகிறார்கள்.
    இது தவிர ஜப்பானிஸ் கோவில்களில் வெளியில் நுழைவாயிலின் அருகில் உருவொத்த சிலைகள் 6 இருப்பதனை நானும் கண்டுள்ளேன்..இந்த சிலைகள் அனைத்துமே யமனின் வடிவங்கள் என்றும் அவை கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் மட்டுமே வேறுபடும் என்றும் சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றை யமன் பயன்படுத்துவார் என்றும் நீண்ட விளக்கத்தை அவர் அளித்தார்.இன்னமும் சென்ற வருடம் கூட இறந்தவருக்கான இத்தகைய சடங்குகளில் இந்த ஆசிரியர் பங்கேற்றமை குறித்து கூறியது இன்னமும் நடைமுறையில் உள்ளது என்பதை விளக்கியது..
    எங்கள் உரையாடல் பதிவை இந்த லின்க்கிலே கொடுத்திருக்கிறேன்.நேரிடையாக ஆசிரியரின் விளக்கத்தை கேட்கலாம்.(புரிந்தால்?)
    http://www.mediafire.com/file/cjydlwzm2gm/yama.wav///////

    அடடா, இதுதான் மைனர் என்பது. கடைந்த மோரில் வெண்ணை எடுத்து அதைப் பொட்டலம் போட்டுக் கொடுப்பதைப் போல கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் பல. நன்றிகள் பல!
    அது சரி, ஜப்பானில் உள்ள இந்தத் தலைமுறையினருக்கு அதுப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கிறதே? அதற்குக் காரணம் என்ன என்பதையும் அவரிடம் நீங்கள் கேட்டிருக்கலாம். எங்களுக்கும் கூடுதலான செய்தி கிடைத்திருக்கும்!

    ReplyDelete
  21. SP.VR. SUBBAIYA said...
    ////// அது சரி, ஜப்பானில் உள்ள இந்தத் தலைமுறையினருக்கு அதுப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கிறதே? அதற்குக் காரணம் என்ன என்பதையும் அவரிடம் நீங்கள் கேட்டிருக்கலாம். எங்களுக்கும் கூடுதலான செய்தி கிடைத்திருக்கும்!////

    அதையும் கேட்டு அறிந்துகொண்டேன்.ஆனால் பிளாக்கர் சொதப்பியதால் நீண்ட பின்னூட்டத்தை தவிர்க்க குறைந்த அளவில்(???) பின்னூட்டமிட்டேன்.

    இன்றைய தலைமுறையினர் அலுவல் நிமித்தம் தொலைதூரங்களில் வசிக்கும் காரணங்களால் வாரா வாரம் வந்து இந்த சம்பிரதாயங்களை செயல்படுத்துவது வழக்கில் குறைந்து வருகிறது - என்று விளக்கினார்.

    மற்ற படி தங்கள் எனக்கு வழங்கியிருக்கும் மதிப்புரிமைக்கு மிகுந்த நன்றி..

    ReplyDelete
  22. /////minorwall said...
    SP.VR. SUBBAIYA said...
    ////// அது சரி, ஜப்பானில் உள்ள இந்தத் தலைமுறையினருக்கு அதுப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கிறதே? அதற்குக் காரணம் என்ன என்பதையும் அவரிடம் நீங்கள் கேட்டிருக்கலாம். எங்களுக்கும் கூடுதலான செய்தி கிடைத்திருக்கும்!////
    அதையும் கேட்டு அறிந்துகொண்டேன்.ஆனால் பிளாக்கர் சொதப்பியதால் நீண்ட பின்னூட்டத்தை தவிர்க்க குறைந்த அளவில்(???) பின்னூட்டமிட்டேன்.
    இன்றைய தலைமுறையினர் அலுவல் நிமித்தம் தொலைதூரங்களில் வசிக்கும் காரணங்களால் வாரா வாரம் வந்து இந்த சம்பிரதாயங்களை செயல்படுத்துவது வழக்கில் குறைந்து வருகிறது - என்று விளக்கினார்.
    மற்றபடி தங்கள் எனக்கு வழங்கியிருக்கும் மதிப்புரிமைக்கு மிகுந்த நன்றி..//////

    அதற்குரிய நேரம் & தேவை வரும்போது தெரிந்துகொள்வார்கள். இது உலகளாவிய பிரச்சினை!
    நீங்கள் முதல் பெஞ்ச் மாணவர். அதனால் கூடுதல் கவனிப்பு!:-)))))

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com