==================================================
எதிலும் அவன் குரலே!
கவியரசர் கண்ணதாசன்: கண்ணனைப் பாடியது (1)
நல்ல கிரிக்கெட் விளையாட்டு வீரர் வீசப்படுகின்ற அத்தனை பந்துகளையுமே சிறப்பாக எதிர்கொண்டு ஆடுவார். பார்ப்பதற்கே ஆனந்தமாக இருக்கும். சச்சின் டெண்டூல்கர், வீரேன்ந்திர சேவாக், பிரையன் லாரா போன்ற முன்னனி வீரர்களுக்கெல்லாம் எண்ணிக்கையில்லாத அளவு ஏராளமான ரசிகர்கள் இருப்பதற்கு அவர்களின் சிறப்பான ஆட்டம்தான் காரணம்.
அதுபோல சிறந்த கவிஞர்களும் கிடைக்கின்ற சூழ்நிலையையும், அல்லது கொடுக்கப்படுகின்ற சூழ்நிலைக்கும் தகுந்தமாதிரி அற்புதமாகப் பாடல் எழுதி அசத்திவிடுவார்கள்.
கண்ணனின் பிள்ளைப் பிராயத்தை வர்ணித்துப் பாடல் எழுதிய பாரதியார்,
"தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை
தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்"
என்று அந்தப் பாடலை அனாசயமாக வாசகனின் மனதிலுள்ள பவுண்டரி லைனுக்கு அனுப்பி வைத்தார் என்றால் அதே கண்ணனை வேறு ஒரு பாடலில், கண்ணன் மேல் காதல் கொண்ட ஒரு இளம்பெண் பாடுவதாக எழுதும்போது,
"தூண்டிற் புழுவினைப் போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்ட தடீ!"
என்று எழுதி ஒரு சிக்ஸராக அடித்து வைத்தார்.
இதுபோல பலபாடல்களை உதரணமாகச் சொல்லலாம்.
கவியரசர் கண்ணதாசனும் அப்படித்தான் பல பாடல்களைப் பவுண்டரியாகவும், சிக்ஸராகவும் அடித்து, விடாது அவரைக் கவனிக்க வைத்ததோடு, ஒரு சிம்மாசனம் போட்டு நம் மனதிலும் உட்கார்ந்து கொண்டுவிட்டார்.
"காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை!
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்!
பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை - அவள்
கவிஞன் ஆக்கினாள் என்னை!"
என்ரு ஒரு பெண்ணை வர்ணிப்பதற்கே இத்தனை ஒப்புவமைகளைச் சொன்னவர், மாயக்கண்ணனைப் பற்றி பாட்டெழுதும் வாய்ப்புக் கிடைத்தால் சும்மா விடுவாரா?
ஒரு பாட்டைப் பாருங்கள்
---------------------------------------------
கங்கைக் கரை தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
கண்ணன் நடுவினிலே
காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓஓஓஓஓஓ
எதிலும் அவன் குரலே!
கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்
கண்டவுடன் நாட்டம் கொண்டேன்
கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்
கண்டவுடன் நாட்டம் கொண்டேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாக நின்றேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாக நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே
ஓஓஓஓ
கண்ணீர் பெருகியதே!
கங்கைக் கரை தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
கண்ணன் நடுவினிலே
கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்
கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்
கண் திறந்து பார்த்தேன்
கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே
ஓஓஓஓஓஓஓ
கண்ணீர் பெருகியதே!
அன்று வந்த கண்ணன் இன்று வரவில்லை
என்றோ அவன் வருவான்
ஓஓஓஓஓஓஓஓஓ
என்றோ அவன் வருவான்
கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில்
கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ
ஓஓஓஓ
காற்றில் மறைவேனோ
நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்
ஓஓஓஓ
நானே தவழ்ந்திருப்பேன்
கண்ணா....ஆஆஆஆஆஆஆஆஆ
கண்ணா.... ஆஆஆஆஆஆஆஆஆஆ
கண்ணா.... ஆஆஆஆஆஆஆஆ
திரைப் படம்: வானம்பாடி
பாடியவர்: பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: தேவிகா
'காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே' என்று எழுதியதோடு, கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை, கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை என்று முத்தாய்ப்பாகவும் எழுதினார் பாருங்கள் அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு!
(கண்ணனின் பெருமைகள் தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteகண்ணனை பாடிய சுப்பையாவும், முத்தையாவும் மட்டும் அல்ல, அவர்தம் புகழ் பாடும், ஆசிரியர் சுப்பையாவும் முன்னவர்களைப் போலவே பேரும் புகழோடு வாழ எங்கும் நிறைந்த மாயக் கண்ணன் அருள வேண்டுகிறேன்....
அமுதூட்டிய அன்னை கடைசியில் கையில் ஒட்டியிருப்பதை கிண்ணத்தில் கையை உரசி எஞ்சிய அமுதை வளித்துத் தருவாள் அதுதான் மிகவும் சுவையாக இருக்கும், தந்தையோ! வறுத்த நிலக்கடலையை தனது இரு கைகளில் இட்டு உரசி தோலை ஊதித்தருவர் அதுவும் நன்றாக இருக்கும். அதைப்போலவே, அப்போதே உரித்தெடுத்து, வடிகட்டிய கொம்புத்தேனில் நனைத்து தந்த பலாச் சுழைப் போலே முத்தாய்ப்பான வரிகளோடு பாடத்தை தொடரவிட்டீர்.... நன்றிகள் குருவே!
கவிஞர் கண்ணதாசன் நாலாயிரத்தில் நன்கு தோய்ந்தவர்.
ReplyDeletekaNNan piRanthaan engkaL kaNNan piRanthaan
ReplyDeletepudhuk kavidhaigaL piRanthadhammaa
mannan piRanthaan engkaL mannan piRanthaan
manak kavalaigaL maRanthadhammaa
i like that song very much.
அண்ணா....ஆஹா அருமையான பாடல்கள்....
ReplyDeleteஇதில் இவர் கண்ணனை பற்றிய பாடல் .......ஒருமுறை சென்னை பீச்சில் அவர் அமர்ந்திருக்கும் பொழுது கல்லூரி மாணவிகள் டூர் வந்திருகிறார்கள். அவர்கள் கண்ணதாசனை பார்த்து அவருடன் உரையாடி கொண்டிருந்தார்கள்...முடிவில் ஒரு மாணவி கேட்டிருக்கிறார் நீங்கள் கவிஞர் தானே ...இபொழுதே எங்களுக்காக ஒரு பாடலை இயற்றுங்கள் என்று....அவருக்கு வராத கலையா அது.....அத்துடன் அவர் எழுதிருக்கிறார்
"""கங்கைக் கரை தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே""""
enna ஒரு timing sense !!!!!!!!
/////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
கண்ணனை பாடிய சுப்பையாவும், முத்தையாவும் மட்டும் அல்ல, அவர்தம் புகழ் பாடும், ஆசிரியர் சுப்பையாவும் முன்னவர்களைப் போலவே பேரும் புகழோடு வாழ எங்கும் நிறைந்த மாயக் கண்ணன் அருள வேண்டுகிறேன்....
அமுதூட்டிய அன்னை கடைசியில் கையில் ஒட்டியிருப்பதை கிண்ணத்தில் கையை உரசி எஞ்சிய அமுதை வளித்துத் தருவாள் அதுதான் மிகவும் சுவையாக இருக்கும், தந்தையோ! வறுத்த நிலக்கடலையை தனது இரு கைகளில் இட்டு உரசி தோலை ஊதித்தருவர் அதுவும் நன்றாக இருக்கும். அதைப்போலவே, அப்போதே உரித்தெடுத்து, வடிகட்டிய கொம்புத்தேனில் நனைத்து தந்த பலாச் சுழைப் போலே முத்தாய்ப்பான வரிகளோடு பாடத்தை தொடரவிட்டீர்.... நன்றிகள் குருவே!////
நல்லது. பாராட்டுக்கள் எல்லாம் கவியரசருக்கே உரியவை. நன்றி ஆலாசியம்
////kmr.krishnan said...
ReplyDeleteகவிஞர் கண்ணதாசன் நாலாயிரத்தில் நன்கு தோய்ந்தவர்.////
பிரபந்தங்களில் தோய்ந்து பல முத்துக்களை எளிதாக்கிக் கொடுத்தவர்!
/////Jack Sparrow said...
ReplyDeletekaNNan piRanthaan engkaL kaNNan piRanthaan
pudhuk kavidhaigaL piRanthadhammaa
mannan piRanthaan engkaL mannan piRanthaan
manak kavalaigaL maRanthadhammaa
i like that song very much./////
ஆமாம். அதுவும் நல்ல பாடலே! நினைவுறுத்தியதற்கு நன்றி!
//////Nattu said...
ReplyDeleteஅண்ணா....ஆஹா அருமையான பாடல்கள்....
இதில் இவர் கண்ணனை பற்றிய பாடல் .......ஒருமுறை சென்னை பீச்சில் அவர் அமர்ந்திருக்கும் பொழுது கல்லூரி மாணவிகள் டூர் வந்திருகிறார்கள். அவர்கள் கண்ணதாசனை பார்த்து அவருடன் உரையாடி கொண்டிருந்தார்கள்...முடிவில் ஒரு மாணவி கேட்டிருக்கிறார் நீங்கள் கவிஞர் தானே ...இபொழுதே எங்களுக்காக ஒரு பாடலை இயற்றுங்கள் என்று....அவருக்கு வராத கலையா அது.....அத்துடன் அவர் எழுதிருக்கிறார்
"""கங்கைக் கரை தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே""""
enna ஒரு timing sense !!!!!!!!/////
நீங்கள் கூறுவது புதிதாக இருக்கிறது. நன்றி!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteகவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய,
"கங்கைக் கரை தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே"
* * * * * * * * *
பாடல் என்றென்றும்
மனதில் நிலத்து நிற்கும் பாடல்,
மிகவும் பிடித்த பாடல்.சிறப்பான பாடல்.
நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-06-03
இந்த பாடலுக்கு அதன் வரிகளும் சுசிலா அவர்களின் குரலும் அதன் பிண்ணனியில் வந்த இசையும் தேனுடன் சேர்ந்த பலாச் சுளை என்று சொல்லலாம். இப்போதும், எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அடுத்தது கண்ணா கருமை நிறக் கண்ணா பாடலா.
ReplyDelete/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய,
"கங்கைக் கரை தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே"
* * * * * * * * *
பாடல் என்றென்றும் மனதில் நிலத்து நிற்கும் பாடல், மிகவும் பிடித்த பாடல்.சிறப்பான பாடல். நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி//////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
/////ananth said...
ReplyDeleteஇந்த பாடலுக்கு அதன் வரிகளும் சுசிலா அவர்களின் குரலும் அதன் பிண்ணனியில் வந்த இசையும் தேனுடன் சேர்ந்த பலாச்சுளை என்று சொல்லலாம். இப்போதும், எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அடுத்தது கண்ணா கருமை நிறக் கண்ணா பாடலா.///////
ஆமாம். அந்தக் காலத்தில், பாடல்களுக்கெல்லாம் உயிரூட்டியவர்கள் சுசீலா அம்மையாரும், டி.எம்.எஸ் அவர்களும். தமிழ்கூறும் நல்லுலகம் அவர்கள் இருவரையும் என்றும் மறக்காது. ஒருவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். இன்னொருவர் செளராஷ்டிர மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவர்கள் இருவரும் தேன்தமிழில் பாடினார்கள். அதுதான் மிகவும் சிறப்பானது!