13.5.10

எங்கே இருக்கிறார் இறைவன்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கே இருக்கிறார் இறைவன்?

கவியரசர் கண்ணதாசன்: இறைவனின் உறைவிடம்
--------------------------------------------------------------------------
"இறைவன் எங்கேயிருக்கின்றார்?" என்று தன்னைப் பார்த்துக் கேட்ட பாமரன் ஒருவனிடம் ஞானி ஒருவர் இப்படிப் பதில் சொன்னார்.

"இறைவன் எங்குமிருக்கின்றார்."

"எங்குமிருக்கின்றார் என்றால் கோயில்கள் எதற்கு?"

"வீட்டில் எல்லா இடத்திலும் சமையல் செய்ய முடியாது. எல்லா இடத்திலும் குளிக்க முடியாது. அததற்குத் தனித்தனியாக இடமிருப்பது போல இறைவனை, நம் மனதை ஒருமுகப்படுத்திப் பிரார்த்தனை செய்வதற்கும் வணங்குவதற்குமாக மனிதன் ஏற்படுத்திய இடம்தான் கோயில்!."

"நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் கோயில்களை, அதில் உள்ள கருவறை களை இரவில் ஏன் பூட்டி வைக்கின்றோம்?. தனக்காக ஏற்படுத்தபெற்ற கோயில்களில் திருட்டு எதுவும் நடைபெறாமல் இறைவன் பார்த்துக் கொள்ள மாட்டாரா?"

"நல்ல கேள்வி, இறைவன் ஒன்றும் பூட்டி வைக்கச்சொல்லவில்லை! இறைவன் தன் பக்தன்மேல் எவ்வளவு அன்பு செலுத்துன்றாரோ அதே அளவிற்குத் திருடன்மேலும் அவருக்கு அன்பு உண்டு. தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக - வயிற்றுப் பசிக்காக அல்லது தன்னை நம்பியிருக்கும் ஜீவன்களைக்
காப்பாற்றத்தான் அவன் திருடுகிறான் என்று கருணையோடு கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார். அதுதான் பிரச்சினை! "

"அவனுக்கு ஏன் இறைவன் பண உதவி செய்து - திருட்டு வேலைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ளலாமே!"

"அதெல்லாம் இறைவனுடைய வேலையல்ல! திருடுவதற்குத் தன் புத்தியைச் செலவழிக்கும் மனிதனுக்கு திருடுவது தவறு என்பதும் புத்திக்கு எட்ட வேண்டாமா? உழைத்தால் பணம் கிடைக்குமே! அரைவயிற்றுக் கஞ்சி என்றாலும்
அவமானமின்றிக் குடிக்கலாமே! இப்படியெல்லாம் வாதிடுவதுதான் விதண்டாவாதம். நீ மனமிருந்தால் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடு. அல்லது வீட்டிலிருந்தே வழிபாடு. அதெல்லாம் வேண்டாமென்றால்
வழிபடாமல் இரு. அது உன் விருப்பத்தைப் பொறுத்தது. போய்வா!" என்று அவனை அனுப்பிவிட்டார்.

இதை எதற்காக எழுதினேன்?

பதிவிற்குத் தொடர்புடையததுதான். தொடர்ந்து படியுங்கள்
----------------------------------------------------------------
இறைவனின் உறைவிடங்கள் எது? எங்கெங்கே அவர் இருக்கின்றார்?

மழலையின் மொழியில் இருந்து, மரணத்தின் பிடியில் கூப்பிய கரங்களுடன் தன்னை நினைத்து கண்ணீர் பெருக உருகும் மனிதனின் படுக்கைவரை அவர் இல்லாத இடம் எது?

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எதற்குத்தான் விளக்கம் சொல்லவில்லை?

எது ஆலயம்? எது வழிபடும் இடம், எங்கெங்கே இறைவன் இருக்கின்றான் என்பதற்கு அற்புதமாக விளக்கம் சொல்கின்றார்.

பாட்டைப் பாருங்கள்:

"ஆலயம் ஆலயம் ஆலயம்
கோயில் என்பதும் ஆலயமே
குடும்பம் என்பதும் ஆலயமே
நாணயம் என்பதும் ஆலயமே
நன்றியும் இறைவன் ஆலயமே.

(ஆலயம்)

உழைக்கும் கைகள் எங்கே
உண்மை இறைவன் அங்கே
அணைக்கும் கைகள் யாரிடமோ
ஆண்டவன் இருப்பது அவரிடமே!

(ஆலயம்)

கொடுத்தால் உண்டாவது தர்மம்
எடுத்தால் உண்டாவது பாபம்
மனத்தால் இன்னொருவரின் பொருளை
நினைத்தால் உன் நிம்மதி மறையும்

(ஆலயம்)

பயிலும் பள்ளி கோயில்
படிக்கும் பாடம் வேதம்
நடக்கும் பாதை எவ்விதமோ
நாளைய பொழுதும் அவ்விதமே!"

(ஆலயம்)

படம் - ஆலயம் - வருடம் 1967

என்னென்ன கருத்துக்கள் பாருங்கள். அதிலும் கடைசி இரண்டு வரிகளை,

"நடக்கும் பாதை எவ்விதமோ நாளைய பொழுதும் அவ்விதமே!"

என்று சொல்லிப் பாடலை நச்' சென்று முத்தாய்ப்பாய் முடித்தார் பாருங்கள்.
அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு!
------------------------------------------
இன்னொரு பாடல்:

"தெய்வம் இருப்பது எங்கே?
அது இங்கே, வேறெங்கே?
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சம்
நிறைந்த துண்டோ அங்கே!

(தெய்வம்)

பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம்
பொய்யில் வளர்ந்த காடு!
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு!

(தெய்வம்)

ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்
ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை!

இசையில் கலையில் கவியில் மழலை
மொழியில் இறைவன் உண்டு
இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்
ஏற்கும் உனது தொண்டு!

(தெய்வம்)

நன்றி நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே
நன்மை புரிந்தவர் எங்கே தெய்வம் அங்கே
பழமை நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே
பாசம் நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே

(தெய்வம்) "

படம். சரஸ்வதி சபதம் - வருடம் 1966

இறைவன் உறையும் இடங்களைப் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் பட்டியலிட்டார் பாருங்கள் - அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு!
-----------------------------------------------------------------------------
இதற்கு முன்பு பதிவில் அடியவன் கொடுத்திருந்த இரண்டுபாடல்களைப் படித்து விட்டுத் திருவாளர் எஸ்.கே அவர்கள் தன்னுடைய பின்னூட்டத்தில் - இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் இன்னொரு பாடலைக் குறிப்பிட வில்லையே, ஆசானே! என்று எழுதியிருந்தார்.

அதற்கு நான் இப்படிப் பதில் சொல்லியிருந்தேன்.

// ஆகா! சொல்லியிருக்கலாமே அய்யா! நான் ஒரு பாடலைத் தனியாகக் குறித்து வைத்திருக்கிறேன். அதற்குத் தனி பதிவு பின்னால் வரும்! நீங்கள் நினைத்திருக்கும் பாடல் இதுதானா - என்று பார்க்கும்படி கேட்டுக்
கொள்கிறேன்!/////////

"இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்......

காற்றானவன்...ஒளியானவன்...
நீரானவன்... நெருப்பானவன்...
நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்... அன்பின்
ஒளியாகி நின்றானவன்!

படம் - திருவிளையாடல்

இல்லை வேறு பாடல் என்றால் - என்னால் ஊகம் செய்ய முடியவில்லை! எழுதும்படி பணிவன்புடனும், மகிழ்வுடனும் கேட்டுக் கொள்கிறேன்!

என்னைவிடத் தங்களுக்குக் கவியரசரின் பாடல்களில் அதிக ஞானமும், ஈடுபாடும் உள்ளது. அதற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! //

அடியேன் நினைக்காத அற்புதமான பாடல் ஒன்றை அவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

நான் ஒன்றை இங்கே ஒப்புக்கொள்ள வேண்டும். கவியரசர் திரையிசைக்காக மொத்தம் 5,000 பாடல்களுக்கு மேல் எழுதியிருப்பதாகச் சொல்வார்கள். என்னிடம் பாதியளவு பாடல்கள்தான் உள்ளன. அவற்றை மட்டுமே
வைத்துப் பதிவு போட்டுக் கொண்டிருக்கிறேன்.

திரு.எஸ்.கே அவர்கள் குறிப்பிட்டுள்ள பாபு படப் பாடல் எனக்குப் பரீட்சய மானதும், பிடித்தபாடல்களில் ஒன்றுதான் என்றாலும், என்னிடம் அந்தப் பாடல் இல்லாததால் நினைவிற்கு வரவில்லை. இதுபோல நான் எழுதும் பதிவுகளுக்குத் தோதான பாடல் எதுவும் விடுபட்டால், படிப்பவர்களைத் தெரிவிக்கும்படி பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய திரு.எஸ்.கே அவர்கள் தட்டச்சு செய்து அனுப்பிய கவியரசர் அவர்களின் அற்புதமான பக்திப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

அனைவரையும் படித்து இன்புற வேண்டுகிறேன்!
-------------------------------------------------------------------------------------------------

"இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பணி புரிந்து
உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே!"

படம்: பாபு (1971)
-----------------------------------------------------------------------
இறைவனைப் பற்றி கவியரசர் பாடிய பாடல்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான் என்றும் இதில் சில வரிகளைத் தினமும் தான் பிரார்த்தனையின் போது நினைத்துப் பாடுவதாகவும் திரு.எஸ்.கே அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்

இதைவிடச் சிறப்பாக வேறு எந்தப் பாடலும் இத்தலைப்பில் வந்ததில்லை என்பது தன் கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்!

ஆமாம்! அது நிதர்சனமான் உண்மை!

"அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்"

என்ற வரிகளும் அவர் சொல்லியதற்குச் சாட்சியாக வருகின்றன!

அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

அன்புடன்,
SP.VR. சுப்பையா
----------------------------------------





வாழ்க வளமுடன்!

20 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,

    ஆஹா, அருமை, அற்புதம்!
    இறைவன் அவன் யார்?.......
    இறைவன் எதனுள், எங்கே, எப்படி இருக்கிறான்...
    இறைவன் எதை, எப்படி, எங்ஙனம் விரும்பி ஏற்கிறான்....
    அற்புதமான் கவிதை வரிகள் ஆழ்ந்தக் கருத்துக்கள்.....
    "இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அழைகின்றோம்"...
    இறைவன் இந்த இறவாக் கவிஞனின் கவியிலே நித்ய ஜோதியாய் சுடர்விடுகிறான்..
    சான்றோர் அவையிலே இருக்கிறேன்! அமிர்தமான கவிப்பால் பருகுகிறேன்!
    இறைவா! என்னை இங்கு அழைத்து வந்த தலைவா! தமிழுக்கு முதல்வா!
    நன்றி! நன்றி!! நன்றிகள் நாதா! .

    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    பாமரன்-ஞானி கேள்வி பதில் மிக அருமை ----
    எல்லா பாடல்களும் நன்றாக உள்ளது .
    ----------- - --- - - - - - - - - -

    "குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று "
    யார் எழுதியது?
    மனதில் தோன்றியதை கொடுத்துள்ளேன் இதனையும் பார்க்கவும்.

    நன்றி!
    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-05-13

    ReplyDelete
  3. இன்ன தன்மையென அறிவொன்னா எம்மானை

    என அப்பர் சுவாமிகள் வரிகளை நினைவு கொள்ளலாமே .,,

    கடவுள் கவியரசர் பார்வையிலே
    என்றால் உங்களுடன் நானும் பாடலை ரசிக்கிறேன் . .

    கடவுளைப் பற்றி என்றால்
    நம் கருத்து தனியானது . .

    அவ்வையார்(திரைப்பட அவ்வையார் இல்லை) பாடல் முதல் ரஜினி பாடல் வரை . . .

    அவரவர் பார்வையில் இறைவன் வேறுவிதமாகத் தான் . . .

    அருவமாய் . .
    உருவமாய் . .
    அருவுருவமாய் . . .

    என பலப் பல . .

    கடவுளின் செயல்களை பட்டியலிடும்
    சாத்திரமும் தோதிரமும் எத்தனை எத்தனை . . .

    இது வாதமும் இல்லை . .
    விதன்டா வாதமும் இல்லை . .

    கடவுள் என்றால் ஒரு மனிதன் பார்வையில் என சித்தரிக்கக் கூடாது
    என்பதற்காகத் தான் . . .

    இந்த மாணவனின் கருத்து . .
    உங்களுக்கு ஏற்புடையது தானே
    நல்லாசிரியரே. . .

    ReplyDelete
  4. அனைத்துப் பாடல்களும் அருமை. வரிக்கு வரி ரசித்துப் படித்தேன்.

    நாம் சித்தர்களைப் போல் ஆகிவிட்டால் கோயிலுக்கு போகாமலும் இருக்கலாம். ஆனால் நாமேல்லாம் சாதாரண மனிதர்கள்தானே.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா!

    முன்னோர்கள் செய்த புண்ணியமோ அல்லது கர்ம பலனோ தெரிய வில்லை ஐயா.

    9 வயதில் கோவிலுக்கு என்று தனது ஆர்வம் கொண்டு சென்றது
    பின்னர் உறவினர்களின் ஆதர கூட தினம் தினம் செல்ல ஆரம்பதித்தது.

    தனது சொந்த விருப்பம் கொண்டு மார்கண்டீஷ்வரன் மாதிரியாக நமது விதிபயனும் மாற்றிவிடுவோம் என்று நினைத்து,

    தாய் என்றால் எப்படி அமைய வேண்டுமோ!அதனிலும் மேலாகவும்,
    தந்தை என்றால் எப்படி அமைய வேண்டுமோ அப்படி அழகாக அமைந்து.

    இருவரின் சொல்லை பேச்சை கேட்காமல் கோவில் சடங்கு, சங்கீதம், சாஸ்திரம் என்று அலைந்து

    சுயவிருப்பத்தின் படி 27 மொட்டை + பெற்றவர்களால் 4 +1 என 31 மொட்டை

    தனியே பாதயாத்திரை திருச்செந்தூர்-3தடவை , திருப்பரம்குன்றம் வழியாக பழனி- 1 தடவை, சாமிகள் கூட திருப்பதி 2- தடவை
    சபரி மாலைக்கு மாலை போட்டுகொண்டு 3 தடவை, போடாமல் 1 தடவை

    அங்கபிரசனம் குருவாயூர் ல் குறைத்தது 50 க்கு மேல் ,
    திருவனந்தபுரம் ல் 3, திருப்பதி ல்6 , பழனி ல் 3 , திருச்செந்தூர் ல் 3 , சபரிமலை ல் 1
    காளகஸ்தி , முதல் கரிப்பாடு, பார்மேநிகாவ் வரையும்,

    கன்னியாகுமரி முதல் கொல்லூர் முகாம்பிக கோவில் மற்றும் காசி வரைக்கும்.

    தர்க்கா , மற்றும் தேவாலயங்கள், சந்நியாசி மடங்கள், தொண்டு நலன்கள் என ஒருபாடு செய்து விட்டது தான் மிச்சம்.

    கருமபலனை அனுபவித்தது தான் ஆகத்தான் வேண்டும்

    எழுத்து என்னவோ அதான் நடந்தது. இன்று கண்ணீர் சிந்தியது தான் மிச்சம்.

    விதி பயனை ஒருக்கையிளையும் மாற்றமுடியாது என்பது மாட்டும் சர்வ நிச்சயம் ஐயா.

    ஒன்றே ஒன்றில் மட்டும் பெரும் பாக்கியம் கிடைத்தது.

    அனைத்து தெய்வங்கள் உள்ள ஸ்தலங்களுக்கு சென்று தெய்வங்களை மனதார பிராத்தனை செய்யும் பாக்கியம் கிடைத்தது
    இந்தவகையில் தான் மிக்க பாக்கியம்

    அனைத்து சமயதிலையும் உள்ள எத்தனையோ மோசடி கும்பல்களிடம், தலை தெறிக்க ஓடினாலும் பின்தொடர்ந்து வந்து அது இது என மயக்க வார்த்தை பல பேசி , பணம் , நேரம் , பொருள் , என எத்தனையோ இழந்து! வேதனைகள், கண்ணீர், கஷ்டங்கள் என அளவிற்கு அதிகமாக அனுபவித்ததும் உண்டு.

    ஒருவனுடைய வேதனை மற்றவனுக்கு சுகமாக இருக்கும் பொழுது
    அல்லது
    அவன் அதனை அனுபவிக்கும் பொழுது!

    நம்மால் என்ன செய்ய முடியும்? அந்த மாக்கள் உள்ளவரை நாம்தான் சரியாக இருக்கவேண்டும்.


    'வேறு என்ன செய்ய முடியும்'!

    என்ன செய்வது பேச்சுக்கு வேண்டும் என்றால் தெய்வங்கள், கள்வன் மாயக் கண்ணன் அது இது என்று என்னலாமோ சொல்லலாம் அனால் நடைமுறைக்கு நல்லவனாக வாழ்ந்தாலே தான் வாழவேண்டி பிடிக்காமல் கொலை செய்ய பார்க்கும் இந்த புண்ணிய பூமியில் மேற்கண்ட வாக்கியம்எம்பெருமான் நீவவண்ண கண்ணனுக்கு தான் பொருந்தும் ஐயா.
    --


    சரிதானே ஐயா!

    ReplyDelete
  6. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    ஆஹா, அருமை, அற்புதம்!
    இறைவன் அவன் யார்?.......
    இறைவன் எதனுள், எங்கே, எப்படி இருக்கிறான்...
    இறைவன் எதை, எப்படி, எங்ஙனம் விரும்பி ஏற்கிறான்....
    அற்புதமான் கவிதை வரிகள் ஆழ்ந்தக் கருத்துக்கள்.....
    "இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அழைகின்றோம்"...
    இறைவன் இந்த இறவாக் கவிஞனின் கவியிலே நித்ய ஜோதியாய் சுடர்விடுகிறான்..
    சான்றோர் அவையிலே இருக்கிறேன்! அமிர்தமான கவிப்பால் பருகுகிறேன்!
    இறைவா! என்னை இங்கு அழைத்து வந்த தலைவா! தமிழுக்கு முதல்வா!
    நன்றி! நன்றி!! நன்றிகள் நாதா!
    நன்றிகள் குருவே!/////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    பாமரன்-ஞானி கேள்வி பதில் மிக அருமை ----
    எல்லா பாடல்களும் நன்றாக உள்ளது .
    "குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று "
    யார் எழுதியது? மனதில் தோன்றியதை கொடுத்துள்ளேன் இதனையும் பார்க்கவும்.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி///////

    அது கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்தான்! நன்றி!

    ReplyDelete
  8. /////iyer said...
    இன்ன தன்மையென அறிவொன்னா எம்மானை
    என அப்பர் சுவாமிகள் வரிகளை நினைவு கொள்ளலாமே .,,
    கடவுள் கவியரசர் பார்வையிலே
    என்றால் உங்களுடன் நானும் பாடலை ரசிக்கிறேன் .
    கடவுளைப் பற்றி என்றால்
    நம் கருத்து தனியானது . .
    அவ்வையார்(திரைப்பட அவ்வையார் இல்லை) பாடல் முதல் ரஜினி பாடல் வரை . . .
    அவரவர் பார்வையில் இறைவன் வேறுவிதமாகத் தான் . . .
    அருவமாய் . .
    உருவமாய் . .
    அருவுருவமாய் . . .
    என பலப் பல . .
    கடவுளின் செயல்களை பட்டியலிடும்
    சாத்திரமும் தோதிரமும் எத்தனை எத்தனை . . .
    இது வாதமும் இல்லை . .
    விதன்டா வாதமும் இல்லை . .
    கடவுள் என்றால் ஒரு மனிதன் பார்வையில் என சித்தரிக்கக் கூடாது
    என்பதற்காகத் தான் . . .
    இந்த மாணவனின் கருத்து . .
    உங்களுக்கு ஏற்புடையது தானே
    நல்லாசிரியரே. .////////.

    ஏற்புடையதுதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////ananth said...
    அனைத்துப் பாடல்களும் அருமை. வரிக்கு வரி ரசித்துப் படித்தேன்.
    நாம் சித்தர்களைப் போல் ஆகிவிட்டால் கோயிலுக்கு போகாமலும் இருக்கலாம். ஆனால் நாமெல்லாம் சாதாரண மனிதர்கள்தானே.////////

    ஆமாம். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  10. Mayakkanna said...
    வணக்கம் ஐயா!
    முன்னோர்கள் செய்த புண்ணியமோ அல்லது கர்ம பலனோ தெரிய வில்லை ஐயா.
    9 வயதில் கோவிலுக்கு என்று தனது ஆர்வம் கொண்டு சென்றது
    பின்னர் உறவினர்களின் ஆதர கூட தினம் தினம் செல்ல ஆரம்பதித்தது.
    தனது சொந்த விருப்பம் கொண்டு மார்கண்டீஷ்வரன் மாதிரியாக நமது விதிபயனும் மாற்றிவிடுவோம் என்று நினைத்து, தாய் என்றால் எப்படி அமைய வேண்டுமோ!அதனிலும் மேலாகவும்,
    தந்தை என்றால் எப்படி அமைய வேண்டுமோ அப்படி அழகாக அமைந்து.
    இருவரின் சொல்லை பேச்சை கேட்காமல் கோவில் சடங்கு, சங்கீதம், சாஸ்திரம் என்று அலைந்து
    சுயவிருப்பத்தின் படி 27 மொட்டை + பெற்றவர்களால் 4 +1 என 31 மொட்டை
    தனியே பாதயாத்திரை திருச்செந்தூர்-3தடவை , திருப்பரம்குன்றம் வழியாக பழனி- 1 தடவை, சாமிகள் கூட திருப்பதி 2- தடவை சபரி மாலைக்கு மாலை போட்டுகொண்டு 3 தடவை, போடாமல் 1 தடவை
    அங்கபிரசனம் குருவாயூர் ல் குறைத்தது 50 க்கு மேல் ,
    திருவனந்தபுரம் ல் 3, திருப்பதி ல்6 , பழனி ல் 3 , திருச்செந்தூர் ல் 3 , சபரிமலை ல் 1
    காளகஸ்தி , முதல் கரிப்பாடு, பார்மேநிகாவ் வரையும்,
    கன்னியாகுமரி முதல் கொல்லூர் முகாம்பிக கோவில் மற்றும் காசி வரைக்கும்.
    தர்க்கா , மற்றும் தேவாலயங்கள், சந்நியாசி மடங்கள், தொண்டு நலன்கள் என ஒருபாடு செய்து விட்டது தான் மிச்சம். கருமபலனை அனுபவித்தது தான் ஆகத்தான் வேண்டும்
    எழுத்து என்னவோ அதான் நடந்தது. இன்று கண்ணீர் சிந்தியது தான் மிச்சம்.
    விதி பயனை ஒருக்கையிளையும் மாற்றமுடியாது என்பது மாட்டும் சர்வ நிச்சயம் ஐயா.
    ஒன்றே ஒன்றில் மட்டும் பெரும் பாக்கியம் கிடைத்தது. அனைத்து தெய்வங்கள் உள்ள ஸ்தலங்களுக்கு சென்று தெய்வங்களை மனதார பிராத்தனை செய்யும் பாக்கியம் கிடைத்தது இந்தவகையில் தான் மிக்க பாக்கியம்
    அனைத்து சமயதிலையும் உள்ள எத்தனையோ மோசடி கும்பல்களிடம், தலை தெறிக்க ஓடினாலும் பின்தொடர்ந்து வந்து அது இது என மயக்க வார்த்தை பல பேசி , பணம் , நேரம் , பொருள் , என எத்தனையோ இழந்து! வேதனைகள், கண்ணீர், கஷ்டங்கள் என அளவிற்கு அதிகமாக அனுபவித்ததும் உண்டு.
    ஒருவனுடைய வேதனை மற்றவனுக்கு சுகமாக இருக்கும் பொழுது அல்லது
    அவன் அதனை அனுபவிக்கும் பொழுது! நம்மால் என்ன செய்ய முடியும்? அந்த மாக்கள் உள்ளவரை நாம்தான் சரியாக இருக்கவேண்டும்.
    'வேறு என்ன செய்ய முடியும்'!
    என்ன செய்வது பேச்சுக்கு வேண்டும் என்றால் தெய்வங்கள், கள்வன் மாயக் கண்ணன் அது இது என்று என்னலாமோ சொல்லலாம் அனால் நடைமுறைக்கு நல்லவனாக வாழ்ந்தாலே தான் வாழவேண்டி பிடிக்காமல் கொலை செய்ய பார்க்கும் இந்த புண்ணிய பூமியில் மேற்கண்ட வாக்கியம்எம்பெருமான் நீவவண்ண கண்ணனுக்கு தான் பொருந்தும் ஐயா. --
    சரிதானே ஐயா!/////

    நல்லது நன்றி கண்ணன்!

    ReplyDelete
  11. "எங்கும் இருக்கிறார் என்றால் கோயில் எதற்கு?"

    டறி ராமகிருஷ்ண்ரின் பதில்:"பசுவின் உடலில் எல்லா இடங்களிலும் பாலின் கூறுகள் இருந்தாலும், அதன் மடியிலிருந்தே பாலை அடைய முடியும்! அதுபோலவே இறைவன் எங்கும் நிறைந்து இருந்தாலும் கோயிலில் அவன் சாந்நித்யத்தைப் பெறுவது மிகச் சுலபமாகும்."


    டறி ராமகிருஷ்ணர் பணி புரிந்த கோயிலில் கிருஷ்ணர் விக்ரஹத்தில் அணிவித்திருந்த தங்க நகைகள் காணாமல் போய்விட்டன.தர்ம கர்த்தா இறைவனைப்பார்த்துக் கூறினார்:" உன் நகைகளைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத நீயா உலக ரட்சகன்?"
    டறி ராமகிருஷ்ண்ர் தர்ம கர்த்தாவை கண்டித்துக் கூறினார்:" நகைகள் உனக்கு வேண்டுமானால் மதிப்புள்ளதாக இருக்கலாம்.இறைவனுக்குத் தங்க‌மும் மண்ணும் ஒன்றுதான்.அவரிடம் இருந்து பெற்றதையே அவருக்குக் கொடுத்துவிட்டு, அவர் அதனை பதுகாத்துக் கொள்ள‌ வேண்டும் என்று எதிர்பார்ப்பது உன் அறியாமையே.அவர் உன்னை நகை வேண்டும் என்று கேட்டாரா? நகை உன்னுடையதே தவிர அவருடையது இல்லை. பாதுகாப்பு
    நீதான் செய்து கொள்ள வேண்டும்.அவருக்குச் சொந்தமில்லாததை
    அவர் ஏன் காப்பாற்றிக் கொள்ள வெண்டும்?அவன் வேண்டுதல் வேண்டாமை
    இல்லாதவன்."

    ReplyDelete
  12. Ayya

    Namathu vaguparaiyil pala vithamana nanbragal irukkirarkal, anaivarul iraivanal oru valiyil thedi kondu iruppavargal than...

    Illaiendral Jothida vaguparaikku vara mudiyuma

    Mayakannan avargalin anubavathai parthu biramithu vittean

    Kannadasan avargalin Last song patri solla mudiyuma (Vathiyaridam kelvi ketkamal vittal eppadi)

    Nandri

    ReplyDelete
  13. //////kmr.krishnan said...
    "எங்கும் இருக்கிறார் என்றால் கோயில் எதற்கு?"
    டறி ராமகிருஷ்ணரின் பதில்:"பசுவின் உடலில் எல்லா இடங்களிலும் பாலின் கூறுகள் இருந்தாலும், அதன் மடியிலிருந்தே பாலை அடைய முடியும்! அதுபோலவே இறைவன் எங்கும் நிறைந்து இருந்தாலும் கோயிலில் அவன் சாந்நித்யத்தைப் பெறுவது மிகச் சுலபமாகும்."
    டறி ராமகிருஷ்ணர் பணி புரிந்த கோயிலில் கிருஷ்ணர் விக்ரஹத்தில் அணிவித்திருந்த தங்க நகைகள் காணாமல் போய்விட்டன.தர்ம கர்த்தா இறைவனைப்பார்த்துக் கூறினார்:" உன் நகைகளைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத நீயா உலக ரட்சகன்?"
    டறி ராமகிருஷ்ண்ர் தர்ம கர்த்தாவை கண்டித்துக் கூறினார்:" நகைகள் உனக்கு வேண்டுமானால் மதிப்புள்ளதாக இருக்கலாம்.இறைவனுக்குத் தங்க‌மும் மண்ணும் ஒன்றுதான்.அவரிடம் இருந்து பெற்றதையே அவருக்குக் கொடுத்துவிட்டு, அவர் அதனை பதுகாத்துக் கொள்ள‌ வேண்டும் என்று எதிர்பார்ப்பது உன் அறியாமையே.அவர் உன்னை நகை வேண்டும் என்று கேட்டாரா? நகை உன்னுடையதே தவிர அவருடையது இல்லை. பாதுகாப்பு
    நீதான் செய்து கொள்ள வேண்டும்.அவருக்குச் சொந்தமில்லாததை
    அவர் ஏன் காப்பாற்றிக் கொள்ள வெண்டும்?அவன் வேண்டுதல் வேண்டாமை
    இல்லாதவன்."///////

    ராமகிருஷ்ணரின் விளக்கத்தை நானும் ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன். அதை நம் வகுப்பறை மாணவர்களுக்கு அறியத்தந்தமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  14. //////Loga said...
    Ayya
    Namathu vaguparaiyil pala vithamana nanbragal irukkirarkal, anaivarul iraivanal oru valiyil thedi kondu iruppavargal than...
    Illaiendral Jothida vaguparaikku vara mudiyuma
    Mayakannan avargalin anubavathai parthu biramithu vittean
    Kannadasan avargalin Last song patri solla mudiyuma (Vathiyaridam kelvi ketkamal vittal eppadi)
    Nandri/////

    மூன்றாம்பிறை (கமலஹாசன், ஸ்ரீதேவி + பாலு மகேந்திரா ஊட்டணியில் 1982 ஆம் ஆண்டில் வந்த படம்)
    படத்தில் வரும் கண்ணே கலைமானே...பாடல்தான் கவியரசர் அவர்கள் எழுதிய கடைசிப் பாடல்!

    ReplyDelete
  15. இந்த அற்புத வரிகளைப் பகிர்ந்த்மைக்கு நன்றி, ஐயா.

    ReplyDelete
  16. ////Subbaraman said...
    இந்த அற்புத வரிகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி, ஐயா./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ayya vanakkam.

    naan ippozhuthellam ungal class

    roomil thavaramal aajar aagi

    vidugiren.yean endral en

    kaviyarasar

    patri ithilthan niraiya padikka

    kidaikkirathu.migavum santhosamaga

    ullathu.indraya pathivil

    oru tavarana thagavalai pathivu

    sethullegal.

    athu ennavendraal babu

    padaththil varum padalaana

    "ITHO ENTHAN DEIVAM MUNNALE"

    endra padalai kaviyarasar

    ezhuthavillai.athu kavignar

    VAALI avargal ezhuthiyathu.

    kavignar vaalikkum namathu

    kaviyarasarin saayal appadiye

    irukkirathu.pala paadalgalai

    utru gavaniththeergalaanalthan

    athu ungalukkum therium.matrapadi

    neengal ennai thavaraga eduththuk

    kolla vendam.

    nadri.vanakkam.

    A.Chandar singh.

    arjunchandarsingh@gmail.com

    ReplyDelete
  18. அசத்தலான பாடல்கள். ஒவ்வொரு பாடலும் மிகப் பிடிக்கும்.

    ReplyDelete
  19. ////cs said...
    ayya vanakkam.
    naan ippozhuthellam ungal class roomil thavaramal aajar aagi vidugiren.yean endral en
    kaviyarasar patri ithilthan niraiya padikka kidaikkirathu.migavum santhosamaga ullathu.indraya pathivil
    oru tavarana thagavalai pathivu sethullegal.
    athu ennavendraal babu
    padaththil varum padalaana
    "ITHO ENTHAN DEIVAM MUNNALE"
    endra padalai kaviyarasar
    ezhuthavillai.athu kavignar
    VAALI avargal ezhuthiyathu.
    kavignar vaalikkum namathu
    kaviyarasarin saayal appadiye
    irukkirathu.pala paadalgalai
    utru gavaniththeergalaanalthan
    athu ungalukkum therium.matrapadi
    neengal ennai thavaraga eduththuk
    kolla vendam.
    nadri.vanakkam.
    A.Chandar singh.
    arjunchandarsingh@gmail.com///

    வேறு ஒரு நண்பரும் சொன்னார். தேடிப்பார்த்துவிட்டுத் திருத்தம் செய்துவிடுகிறேன் நண்பரே! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே1

    ReplyDelete
  20. /////V.Radhakrishnan said...
    அசத்தலான பாடல்கள். ஒவ்வொரு பாடலும் மிகப் பிடிக்கும்./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com