கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது?
அக்பரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில், சக்கரவர்த்தி என்று பெயர் பெற்றவர் அவர் ஒருவர்தான். அறிவு, புத்திசாலித் தனம், நகைச்சுவை உணர்வு என்று அத்தனை குணங்களும் நிரம்பப் பெற்றவர் அவர். அவரது சபையில், ஒவ்வொருதுறையிலும் திறைமை பெற்று விளங்கிய சிலரைத் தன் உதவியாளர்களாக அவர் வைத்துக் கொண்டிருந்தார்.
அவர்களில் முதன்மை நிலையில் இருந்தவர், பீர்பால். அவரும் தன்னுடைய அறிவு, புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு என்று பல உயரிய குணங்களால், அனைவராலும் அறியப் பெற்றவராகவும், விரும்பப்பெற்றவராகவும்
விளங்கினார்.
ஒரு சமயம், அக்பரின் அரசசபைக்கு வந்த பண்டிதர் ஒருவர், பீர்பாலை வம்புக்கு இழுத்து, தன்னுடன் போட்டியிட்டுத் தான் கேட்கும் கேள்விகளுக்குத் தக்கபதில் சொல்லி, தன்னைச் ஜெயிக்கமுடியுமா? என்று சவால் விட்டார்.
பீர்பாலும் அதற்கு ஒப்புக்கொண்டு களத்தில் இறங்கினார். சபை களைகட்டியது.
பண்டிதர் துவங்கினார்:
“பீர்பால், நீங்கள் 100 சாதாரணக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல விரும்பு கிறீர்களா? அல்லது ஒரே ஒரு கடினமான கேள்விக்குப் பதில் சொல்ல விரும்புகிறீர்களா?”
அவரைத் தவிர்க்க முடியாத பீர்பால், ஆணித்தரமாகச் சொன்னார்.
“ஒரு கடினமான கேள்வியைக் கேளுங்கள்... பதில் சொல்கிறேன்!”
உட்னே பண்டிதர் கேட்டார், “நல்லது பீர்பால், எது முதலில் இந்த உலகிற்கு வந்தது சொல்லுங்கள்,கோழியா அல்லது முட்டையா?”
பீர்பாலின் பதிலுக்காக, சபை அவரை ஆர்வத்துடன் பார்த்தது.
பீர்பால், தயக்கமின்றி, சட்டென்று நம்பிக்கையுடன் பதில் சொன்னார், “கோழிதான் முதலில் வந்தது!”
பண்டிதர் விடவில்லை, “எப்படிச் சொல்கிறீர்கள்?”
அவர் குரலில் ஏளனம் இருந்தது.
அதற்கும் பீர்பால் சட்டென்று பதில் சொல்ல, பண்டிதர் அடங்கிவிட்டார்.
என்ன சொல்லியிருப்பார் பீர்பால்?
யோசித்துச் சொல்லுங்கள்.
விடையை யோசித்து அறிந்து கொள்ள முடியாதவர்கள், ஸ்க்ரோல் டவுன் செய்து பார்க்கலாம்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
ஸிம்ப்பிள்...பீர்பால் சொன்னார், “போட்டியின் விதிப்படி நான் ஒரு கேள்விக்குத் தான் பதில் சொல்ல வேண்டும். சொல்லி விட்டேன். இது இரண்டாவது கேள்வி. இதற்கு இப்போது பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteபீர்பால் தனக்கே உரிய அறிவு, புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வோடு பதில் சொல்லியுள்ளார்.
இதனை நாங்கள் முன்பே படித்து இருந்தாலும்
தங்களின் கைவண்ணத்தால் கொடுத்து அவைகளை படிப்பதற்கு மிக சுவாரசியமாக உள்ளது.
இது போன்ற நகைச்சுவையுடன் சிந்திக்க வேண்டியவைகளை தாங்கள் அவ்வப்போது
நினைவூட்டி எங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்துவதர்க்கு
மிக்க நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-04-09
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteநன்று! நன்றி!
எனக்கு மிகவும் பிடித்த மன்னர்களுள் ஒருவர் அக்பரும் ஆவார்.
தீன்யிலாஹி என்னும் மதத்தையே தோற்றுவித்தவர். அம்மதம் வளர்ந்து இருந்தால் அது இந்து மதத்தோடு ஒத்து போயிருக்கும் ஆனால் அது அவ்ரங்கசீப்பால் மறைந்து போய்விட்டது.
பீர்பால் பாணியில் சொன்னால் அவ்ரங்கசீப் இல்லை என்றால் முகலாய சாம்ராஜ்யமே தொற்றிருக்காது.
நன்றிகள் குருவே!
இதே போன்ற ஒரு கதை IAS interviewa base பண்ணி மின்னஞ்சலில் வந்தது,. தேடி பார்க்கிறேன் கிடைத்தால் இங்கு போடுகிறேன்
ReplyDeleteArumai...Arumai....
ReplyDeleteThanks
Rathinavel.C
அய்யா இனிய காலை வணக்கம்....
ReplyDeleteபீர்பால் கதை சிறப்பு .....
நன்றி வணக்கம்,,,,,,,,,,
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் அருமையான ரசனை உங்களுக்கு கதை நன்றாக உள்ளது, நன்றி
ReplyDeleteநன்றாக உள்ளது.
ReplyDelete//////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
பீர்பால் தனக்கே உரிய அறிவு, புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வோடு பதில் சொல்லியுள்ளார்.
இதனை நாங்கள் முன்பே படித்து இருந்தாலும்
தங்களின் கைவண்ணத்தால் கொடுத்து அவைகளை படிப்பதற்கு மிக சுவாரசியமாக உள்ளது.
இது போன்ற நகைச்சுவையுடன் சிந்திக்க வேண்டியவைகளை தாங்கள் அவ்வப்போது
நினைவூட்டி எங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்துவதற்கு
மிக்க நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி//////
உங்களின் மனம் நிறைந்த பாராட்டிற்கு நன்றி!
//////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
நன்று! நன்றி!
எனக்கு மிகவும் பிடித்த மன்னர்களுள் ஒருவர் அக்பரும் ஆவார்.
தீன்யிலாஹி என்னும் மதத்தையே தோற்றுவித்தவர். அம்மதம் வளர்ந்து இருந்தால் அது இந்து மதத்தோடு ஒத்து போயிருக்கும் ஆனால் அது அவ்ரங்கசீப்பால் மறைந்து போய்விட்டது.
பீர்பால் பாணியில் சொன்னால் அவ்ரங்கசீப் இல்லை என்றால் முகலாய சாம்ராஜ்யமே தொற்றிருக்காது.
நன்றிகள் குருவே!/////
உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி! தொற்றிருக்காது என்பதைத் தோற்றிருக்காது என்று எடுத்துக்கொள்ளலாமா?
//////LK said...
ReplyDeleteஇதே போன்ற ஒரு கதை IAS interviewa base பண்ணி மின்னஞ்சலில் வந்தது,. தேடி பார்க்கிறேன் கிடைத்தால் இங்கு போடுகிறேன்////
ஆகா, அப்படியே செய்யுங்கள்! நன்றி!
//////Rathinavel.C said...
ReplyDeleteArumai...Arumai....
Thanks
Rathinavel.C/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
//////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்....
பீர்பால் கதை சிறப்பு .....
நன்றி வணக்கம்,,,,,,,,,,////
நல்லது. நன்றி நண்பரே!
//////rajesh said...
ReplyDeleteஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் அருமையான ரசனை உங்களுக்கு கதை நன்றாக உள்ளது, நன்றி/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
////Blogger NEMILI BALA said...
ReplyDeleteநன்றாக உள்ளது./////
நல்லது. நன்றி நண்பரே!
சொலல் வல்லான் சோர்விலான் அஞ்சான் அவனை இகழ் வெல்லல் யார்க்கும் அரிது என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு பீர்பாலுக்கு நன்கு பொருந்தும். புதன் அவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சமாகவோ வர்கோத்தமமாகவோ இருந்திருப்பார்.
ReplyDeleteHello Sir,
ReplyDeleteI have few general doubts.
1.What exactly a planet in vakra mean,is it powerless or more powerful,Is it good or bad?
2.If a natural malefic occupies another malefic position and has low ashtagavarga strength,does it mean the native's enemy is weak,for example in case of meena lagna,sukra is owner of 3rd & 8th house,if he occupies 6th position with low ashtagavarga about 2 points,what will be the effect?,Can it be taken as enemy with lower strength is favourable?
Regards,
Raj
சார் இத போய் நான் யார்கிட்டயும் சொல்லிப்பாக்கட்டா?
ReplyDelete/////ananth said...
ReplyDeleteசொலல் வல்லான் சோர்விலான் அஞ்சான் அவனை இகழ் வெல்லல் யார்க்கும் அரிது என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு பீர்பாலுக்கு நன்கு பொருந்தும். புதன் அவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சமாகவோ வர்கோத்தமமாகவோ இருந்திருப்பார்./////
ஆமாம். அந்த புத்திக்கூர்மைக்கு புதன் உச்சம் பெற்றிருக்க வேண்டும். அதோடு லக்கினத்துடனோ அல்லது லக்கினநாதனுடனோ சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்!
/////Gresilz said...
ReplyDeleteHello Sir,
I have few general doubts.
1.What exactly a planet in vakra mean,is it powerless or more powerful,Is it good or bad?
2.If a natural malefic occupies another malefic position and has low ashtagavarga strength,does it mean the native's enemy is weak,for example in case of meena lagna,sukra is owner of 3rd & 8th house,if he occupies 6th position with low ashtagavarga about 2 points,what will be the effect?,Can it be taken as enemy with lower strength is favourable?
Regards,
Raj//////
பழைய பாடங்களில் அனைத்தும் உள்ளன. அவற்றைப் படியுங்கள்!
////Cool Boy said...
ReplyDeleteசார் இத போய் நான் யார்கிட்டயும் சொல்லிப்பாக்கட்டா?//////
பாருங்களேன். என்ன ஆகிவிடப்போகிறது?