7.4.10

அதிரடி அண்ணாசாமிகள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிரடி அண்ணாசாமிகள்!

எண் ஒன்பது

ஒன்பதாம் எண் செவ்வாய்க்கு உரியது. 9,18, 27ஆம் தேதியில் பிறந்தவர்கள் அனைவருக்கும் உரிய அதிர்ஷ்ட எண் ஒன்பதேயாகும். இந்த எண்ணிற்கு உரியவர்கள் அதிரடியான குணங்களை உடையவர்கள். சற்று முரட்டுத்தனம் இருக்கும்.துணிச்சல் மிகுந்திருக்கும். செயல்களில் வேகம் இருக்கும்.

இந்த எண்காரர்களில் பலர் வேலை அமைவதிலும், பண விஷயங்களிலும் அதிர்ஷ்டமுடையவர்களாக இருப்பார்கள். பணம் தேடிவரும். அதே சமயத்தில் பணத்தை வந்த வேகத்தில் செலவும் செய்வார்கள்.

“வந்ததை வரவில் வைப்போம்
சென்றதை செலவில் வைப்போம்”

என்று ஏகாந்தமாக இருப்பார்கள். அப்படி இல்லாமல் ”உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்” எனும் வள்ளுவரின் வாக்குக்கேற்ப வாழ்வதற்கு இந்த எண்காரர்கள் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

உலகத்தோர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்காகப் பாடுபடுவார்கள். தங்களால் இயன்றதைச் செய்வார்கள். பெருந்தன்மை மிக்கவர்கள். சுயநலம் இல்லாதவர்கள். காதல் என்று இறங்கிவிட்டால், நல்ல காதலனாக அல்லது காதலியாக விளங்கக்கூடியவர்கள். சக மனிதர்களை மதிக்கக்கூடியவர்கள். மனித நேயம் மிகுந்தவர்கள். சிலர் பொது சேவையில் இறங்கிவிடுவார்கள். பேருக்காக இல்லாமல் உண்மையிலேயே மற்றவர்களுக்காக எதையும் யோசிக்காமல் செய்யக்கூடியவர்கள் இவர்கள். நடைமுறையில் அது சாத்தியமில்லாத குணமாக இருந்தாலும், இந்த எண்காரர்களுக்கு அது சாத்தியப்படும். அதற்காக தங்களுடைய விருப்பங்களையும் தேவைகளையும் குறைத்துக் கொள்வார்கள்.

3 மற்றும் 6ஆம் எண்ணுடையவர்களுடன் இயற்கையாகவே இவர்களுக்கு நல்ல தொடர்புகள் உண்டாகும். உலக நன்மைக்காகத் தியாகங்களைச் செய்யக்கூடியவர்கள் இவர்கள்

Career options: designers, photographers, politicians, lawyers, teachers, healers, statesperson, writers, philosophers and artists.

செவ்வாய் யுத்தத்திற்கான கிரகம். இந்த எண்காரகள் நியாயத்திற்காக சண்டைபோடக்கூடியவர்கள். எங்காவது அநியாயத்தைக் கண்டால் கொதித்து எழுவார்கள். எதற்கும் வாக்குவாதம் செய்வதற்கோ அல்லது சண்டையிடுவதற்கோ தயங்கமாட்டார்கள், துவக்கத்தில் எதிர்ப்பு இருந்தாலும், தங்களுடைய மனவலிமை,மனஉறுதி, துணிச்சல் ஆகியவற்றின் காரணமாக முடிவில் இவர்களே வெற்றி பெறுவார்கள்.

யாருக்கும் அடிமைப்பட்டு இருக்கமாட்டார்கள். தங்களுடைய போர்க்குணத்தால், பல எதிரிகளை இவர்கள் உருவாக்கிக்கொள்ள நேரிடும்.

சிலருக்குத் தீ விபத்து ஏற்படும் அபாயம் உண்டு. ஆகவே ஜாதகத்தில் செவ்வாய் வலிமையாக இல்லாதவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவர்களுக்கு அறிவுரைகள் அறவே பிடிக்காது. நண்பர்களிடமும், உறவினர் களிடமும் அடிக்கடி வாதிட நேரிடும். தங்களின் காதலுக்காக எதையும் செய்யத்தயங்காதவர்கள் இவர்கள்.

இராணுவம், காவல்துறை, விளையாட்டுத்துறை, ஆகிய துறைகள் இவர்களுக்கு உகந்த துறையாகும். அவற்றில் சேரும் வாய்ப்புக்கிடைத்தவர்கள், அவற்றில் பெரிய வெற்றி பெறுவார்கள்

”தாக்குதலே சிறந்த தற்காப்பு’ என்பது இவர்களுடைய கொள்கையாக இருக்கும் Attack is the best form of defense

குறைகள் இல்லையா? ஏன் இல்லை? உண்டு: They can also be aloof, distracted, moody and possessive by nature. They are often disappointed with their achieved results.

இவர்களுடைய முக்கியக் குறைபாடு: எதையும் யோசிக்காமல் சட்டென்று இறங்கிவிட்டுப் பின்னால், விளைவுகளுக்காக அவதிப்படுவார்கள்.

இந்த எண்காரர்களில், பெரும்பாலோருடைய வாழ்க்கை, உடலை வறுத்திச் செய்ய வேண்டியதாக இருக்கும். போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.

வலிகளைப் பொறுத்துத் கொள்ளும் அல்லது சகித்துக்கொள்ளும் தன்மை மிகுந்தவர்கள் இவர்கள். அது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரமாகும்.

செவ்வாய் வலுவாக இல்லாவிட்டால், எவராக இருந்தாலும், நிர்வாகத் திறமை இருக்காது அல்லது குறைந்துவிடும்.



உகந்த நிறம்: சிவப்பு
உகந்த நவரத்தினம்: பவளம்
உகந்த உலோகம்: copper
உகந்த கிழமை: செவ்வாய்க்கிழமை
உகந்த நாட்கள்: 9, 18 & 27
நட்பு எண்கள்: 1, 2 & 3
தகாத எண்கள்: 4, & 5
உரிய வேலை: அமைப்பாளர்கள், மேலாளர்கள் (Organizers, managers)
தொழிலுக்கும், திருமணத்திற்கும் உகந்த எண்கள்: 1, 3, 6, 9
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

செவ்வாயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தைத் தினமும் ஒன்பது முறை அல்லது 108 முறைகள் சொல்லிப் பயனடையலாம்:

"Om Krim Kum Kujaya Namah"

The word 'Krim' in above mantra denotes Karana Shakti, the power of action, work, motivation, and transformation.
......................................................
அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள காயத்ரி மந்திரத்தைச் சொல்லிப் பயனடையலாம்:
Gayatri Mantra for Mars:

"Om Angarkaya vidmahe, bhoomipalaya dhimahi, tanno Kujah prachodayat"

"ஓம் அங்காரஹாய வித்மஹே
பூமிபாலாய (புத்ராய) தீமஹி.
தந்நோ குஜ ப்ரசோதயாத்!”



This Gayatri mantra consists of three parts. The first is the chants to the Mars. The second is the mantra proper. The third is a summary of the mantra's energies.

The Gayatri mantra is chanted at sunrise, noon and sunset. At dawn it is called Gayatri, the youthful form of the Goddess, consort of Lord Brahma, the creator. It is called Savitri, the mature form, at noon, the consort
of Lord Shiva. It is called Sarasvati, the elderly form, at sunset, the consort of Lord Vishnu.

Dharani-garbha-sambhutam
vidyut kanti-samaprabha
Kumaram shakti -hastam cha
mangalam pranamamyaham

When translated in English, it means:

"I offer my obeisances to Shree Mangala, the god of the planet Mars, who was born from the womb of the earth goddess. His brilliant effulgence is like that of lightning, and he appears as a youth carrying a spear in his hand."

எல்லா நவக்ரஹங்களுக்கான ஸ்லோகம் ‍

"ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ"
---------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

26 comments:

  1. Vanakam sir,
    Number nine people have a lot friends, enaku help sietha friends ellarum number nine... and they are very good at caring for family and friends....number nine is a lucky number sir!

    Thanuja

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு வணக்கம்,
    அதிரடியான விளக்கங்கள்! அற்புதம்! அருமை!!
    செவ்வாய் செயல்திறன், வேகத்திற்கானவன், பூமிகாரன், சகோதரகாரன்.....
    தாங்கள் கூறிய குறை நிறைகள் அரச புரசலாக தலைகாட்டுகிறதே?
    அது இரண்டில் உச்சம் பெற்ற செவ்வாயின் வேலையா?.........
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  3. என் மனைவி 18ம் தேதி பிறந்தவர். மிகவும் சாதுவானவர். தாங்கள் சொன்னது போல் குணம் இருக்க வேண்டும் என்றால் பிறந்த ஜாதகம் மற்றும் கிரக நிலைகள் ஒத்துழைக்க வேண்டும். மற்றும் இந்த எண்ணின் பரிபூரண ஆதிக்கம் இருக்க வேண்டும். சரிதானே. நம்மால் மாற்ற முடியாத பிறந்த தேதி மற்றும் கூட்டு எண்ணைப் பற்றி கவலையில்லை. உரிய பலன் கிடைக்க பெயர் எண்ணாவது சரியாக அமைய வேண்டும்.

    ReplyDelete
  4. நம்மலோடது வரதுக்கு இவ்வளவு நாள் ஆகிடுச்சு :)

    ReplyDelete
  5. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    ஒன்பதாம் எண்ணுக்கு உரியவர்களுக்கான

    குணாதிசயங்கள் ,பலன்கள் மற்றும்

    விளக்கமும் நன்றாக உள்ளது.

    ஒன்பதாம் எண் செவ்வாய்க்கு உரியது அந்த

    செவ்வாயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்

    பயன் படுதிக்கொள்வதர்க்காக மந்திரத்தையும்,

    காயத்ரி மந்திரத்தையும் கொடுத்துள்ளதர்க்கு மிக்க

    நன்றி!


    வணக்கம்.


    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-04-07

    ReplyDelete
  6. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம்.பாடம் நன்றாக உள்ளது நன்றி

    ReplyDelete
  7. ஓம் அங்கார்கயா வித்மஹே
    பூமிபலயா தீமஹி//

    சரியான வரிகள் - ஓம் அங்காரஹாய வித்மஹே பூமிபாலாய (புத்ராய) தீமஹி.

    எல்லா நவக்ரஹங்களுக்கான ஸ்லோகம் ‍

    "ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ"

    ReplyDelete
  8. /////Thanuja said...
    Vanakam sir,
    Number nine people have a lot friends, enaku help sietha friends ellarum number nine... and they are very good at caring for family and friends....number nine is a lucky number sir!
    Thanuja///////

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அதிரடியான விளக்கங்கள்! அற்புதம்! அருமை!!
    செவ்வாய் செயல்திறன், வேகத்திற்கானவன், பூமிகாரன், சகோதரகாரன்.....
    தாங்கள் கூறிய குறை நிறைகள் அரச புரசலாக தலைகாட்டுகிறதே?
    அது இரண்டில் உச்சம் பெற்ற செவ்வாயின் வேலையா?.........
    நன்றிகள் குருவே!////

    இருக்கலாம். நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  10. ///ananth said...
    என் மனைவி 18ம் தேதி பிறந்தவர். மிகவும் சாதுவானவர். தாங்கள் சொன்னது போல் குணம் இருக்க வேண்டும் என்றால் பிறந்த ஜாதகம் மற்றும் கிரக நிலைகள் ஒத்துழைக்க வேண்டும். மற்றும் இந்த எண்ணின் பரிபூரண ஆதிக்கம் இருக்க வேண்டும். சரிதானே. நம்மால் மாற்ற முடியாத பிறந்த தேதி மற்றும் கூட்டு எண்ணைப் பற்றி கவலையில்லை. உரிய பலன் கிடைக்க பெயர் எண்ணாவது சரியாக அமைய வேண்டும்./////

    லக்கினப்படிதான் குணம் அமையும். எண் சாஸ்திரம் அதற்கு அடுத்துத்தான். உதாரணத்திற்கு கும்ப லக்கினமாக இருந்து, பிறந்த எண் ஒன்பதாக இருந்தால், கும்ப லக்கினப்படிதான் குணம் (நிறைவான குணம்) அமையும்!

    ReplyDelete
  11. ////வெட்டிப்பயல் said...
    நம்மலோடது வரதுக்கு இவ்வளவு நாள் ஆகிடுச்சு :)////

    பாலாஜி, உங்களை வெகுநாட்களாக வகுப்பறைப் பக்கம் காண முடிவதில்லையே? இப்போது எந்த நாட்டில் வாசம்?

    ReplyDelete
  12. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஒன்பதாம் எண்ணுக்கு உரியவர்களுக்கான
    குணாதிசயங்கள் ,பலன்கள் மற்றும்
    விளக்கமும் நன்றாக உள்ளது.
    ஒன்பதாம் எண் செவ்வாய்க்கு உரியது அந்த
    செவ்வாயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
    பயன் படுதிக்கொள்வதர்க்காக மந்திரத்தையும்,
    காயத்ரி மந்திரத்தையும் கொடுத்துள்ளதற்கு மிக்க
    நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. //////rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம்.பாடம் நன்றாக உள்ளது நன்றி/////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  14. /////Uma said...
    ஓம் அங்கார்கயா வித்மஹே
    பூமிபலயா தீமஹி//
    சரியான வரிகள் - ஓம் அங்காரஹாய வித்மஹே பூமிபாலாய (புத்ராய) தீமஹி.
    எல்லா நவக்ரஹங்களுக்கான ஸ்லோகம் ‍
    "ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ"//////

    சரியான பதங்களுக்கு நன்றி சகோதரி! பதிவில் உள்ளிட்டுவிட்டேன்!

    ReplyDelete
  15. அருமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete
  16. நன்று.

    உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  17. /////raj said...
    arumai/////

    நன்றி!

    ReplyDelete
  18. //////punitha said...
    அருமையான விளக்கம். நன்றி./////

    நல்லது நன்றி!

    ReplyDelete
  19. ////punitha said...
    நன்று.
    உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்./////

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. Very positive Post for 9,18,27 born ppl!
    Thank you
    ரொம்ப நாள் காத்திருக்க வேண்டியதா போச்சு!



    அடுத்து ஒரு கோரிக்கை..மிகவும் துல்லியமாக இப்போதான் ஒரு நபருக்கு திருமணம் நடக்கும் என்று கூற வழி இருக்கா.?.....ஒரு ஆங்கில forum ல பார்த்தேன்.but..ஒன்னும் புரியல!!!!???


    நன்றி!

    ReplyDelete
  21. ///////sri said...
    Very positive Post for 9,18,27 born ppl!
    Thank you
    ரொம்ப நாள் காத்திருக்க வேண்டியதா போச்சு!
    அடுத்து ஒரு கோரிக்கை..மிகவும் துல்லியமாக இப்போதான் ஒரு நபருக்கு திருமணம் நடக்கும் என்று கூற வழி இருக்கா.?.....ஒரு ஆங்கில forum ல பார்த்தேன்.but..ஒன்னும் புரியல!!!!???
    நன்றி!/////

    அப்படி ரெடிமேடான வழியெல்லாம் கிடையாது. ஜாதகனுக்கு திருமணம் ஆகுமா? ஆகாதா? தாமதமாகுமா? ஆகாதா? ( denied horoscopes, delayed horoscopes) என்றெல்லாம் முதலில் பார்க்க வேண்டும். ஆகும் என்றால் அடுத்துவரும் சுக்கிர புத்தி அல்லது வேறு புத்திகளில் சுக்கிர அந்தர காலத்தில் திருமணம் நடக்கும் என்று கூறலாம்!

    ReplyDelete
  22. //SP.VR. SUBBAIYA said...
    ////வெட்டிப்பயல் said...
    நம்மலோடது வரதுக்கு இவ்வளவு நாள் ஆகிடுச்சு :)////

    பாலாஜி, உங்களை வெகுநாட்களாக வகுப்பறைப் பக்கம் காண முடிவதில்லையே? இப்போது எந்த நாட்டில் வாசம்?

    //

    சமீபத்தில் இந்தியா வந்திருந்தேன் சார். இரண்டு மாதங்கள் இந்தியாவில் தான் இருந்தேன். இந்தியாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட்டதால் வலைப்பதிவுகள் பக்கம் வர முடியவில்லை. தற்பொழுது அமெரிக்காவில் தான் இருக்கிறேன். ஆனால் முன்னிருந்த பாஸ்டனில் அல்ல. ரோட் ஐலாண்ட் என்னும் மாநிலத்தில் இருக்கிறேன்

    ReplyDelete
  23. //////வெட்டிப்பயல் said...
    //SP.VR. SUBBAIYA said...
    ////வெட்டிப்பயல் said...
    நம்மலோடது வரதுக்கு இவ்வளவு நாள் ஆகிடுச்சு :)////
    பாலாஜி, உங்களை வெகுநாட்களாக வகுப்பறைப் பக்கம் காண முடிவதில்லையே? இப்போது எந்த நாட்டில் வாசம்?//
    சமீபத்தில் இந்தியா வந்திருந்தேன் சார். இரண்டு மாதங்கள் இந்தியாவில் தான் இருந்தேன். இந்தியாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட்டதால் வலைப்பதிவுகள் பக்கம் வர முடியவில்லை. தற்பொழுது அமெரிக்காவில் தான் இருக்கிறேன். ஆனால் முன்னிருந்த பாஸ்டனில் அல்ல. ரோட் ஐலாண்ட் என்னும் மாநிலத்தில் இருக்கிறேன்.///////

    தகவலுக்கு நன்றி பாலாஜி!

    ReplyDelete
  24. சமீபத்தில் திருமண வயதைப் பற்றி ஒரு கட்டுரை படித்தேன். அதன் தலைப்பு Nadi method on arriving possible marriage age. Possible என்றுதான் போட்டிருந்தார்கள். Exact marriage age என்பது கடினமானதுதான்.

    ReplyDelete
  25. //////ananth said...
    சமீபத்தில் திருமண வயதைப் பற்றி ஒரு கட்டுரை படித்தேன். அதன் தலைப்பு Nadi method on arriving possible marriage age. Possible என்றுதான் போட்டிருந்தார்கள். Exact marriage age என்பது கடினமானதுதான்.////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com