31.3.10

ஆறு வயதில் விதவையான மகள்; அதை முன்பே கணித்து வைத்திருந்த தந்தை!

....................................................................................................................
ஆறு வயதில் விதவையான மகள்; அதை முன்பே கணித்து வைத்திருந்த தந்தை!

லீலாவதி.

பெயரைப்போலவே அந்தச் சிறுமியும் அழகானவள். வயது ஆறுதான். அந்த வயதிற்கே உரிய குறுகுறுப்பும், சுட்டித்தனமும் அவளிடம் இருந்தன. ஆனால் அதிகமாக இருந்தன.

தன்னுடைய தந்தை வாங்கிக்கொண்டு வைத்திருந்த நீர்க் கடிகாரத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் எப்படி நேரம் தெரியும்? எதைவைத்து நேரத்தைக் கண்டுபிடிப்பது?

காலம் 12ஆம் நூற்றாண்டு. அதை நினைவில் வையுங்கள். அப்போதெல்லாம் சுவர்க்கெடிகாரம், கைக்கெடிகாரம் எல்லாம் ஏது?

அந்த அறைக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று அவளுடைய தந்தை எச்சரித்திருந்தார். அந்தக் கருமம் பிடித்த எச்சரிக்கைதான், ஒரு அதீதமான ஆர்வத்தை வேறு தூண்டி விட்டிருந்தது.

கடிகாரத்தை எட்டிப்பார்த்தாள். சிறிது குற்ற உணர்வும் எட்டிப் பார்த்தது.

அப்போதுதான் அது நடந்தது. அது என்ன விளைவிக்கப் போகிறது என்பது அவளுக்கு அப்போது தெரியாது.

அவள் அணிந்திருந்த மூக்குத்தியில் இருந்து கழன்ற முத்து ஒன்று, சட்டென்று, அந்தக் கடிகாரத்திற்குள் போய் விழுந்தது. அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அறையை விட்டு வெளியே ஓடிவந்துவிட்டாள்.

அடுத்த நாள் அவளுக்குத் திருமணம் நடக்கவிருந்தது. ஆமாம், பால்ய விவாகம். அந்தக் காலத்தில் அதெல்லாம்

சர்வசாதாரணம்.

இப்போது 32 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல், பொருள் ஈட்டலில் உள்ள பெண்களைப் போல அல்லாமல், அந்தக்காலத்தில் அதே வயதிற்குள் பெண் இரண்டு தலைமுறை வளர்ச்சியைப் பார்த்துவிடுவாள்.

லீலாவதியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

ஆனால் கொடுமை என்னவென்றால், திருமணம் முடிந்த மறுவாரம், அவளுடைய கணவன் (8 வயதுச் சிறுவன்) இறந்துவிட்டான். அருகில் இருந்த குன்றின் மீது நண்பர்களுடன் ஏறும்போது, தவறிக் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்துவிட்டான்.

அனைவரும் கதறி அழுதார்கள். இறந்த பிறகு என்ன செய்ய முடியும்? எடுத்துக்கொண்ட உயிரை எமன் திருப்பித்தருவானா என்ன?

அவளுடைய தந்தையின் பெயர் பாஸ்கராச்சாரியார். மிகப் பெரிய கணித மேதை. அத்துடன் ஜோதிட வல்லுனர். இந்திய வரலாறு அணைத்துக் கொண்ட பெயர்.

தன்னுடைய மகளின் திருமணம் குறிப்பிட்டுள்ள அந்த நாளில், குறிப்பிட்டுள்ள அந்த நேரத்தில்தான் நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். நாள் தவறினாலும், நேரம் தவறினாலும் மகள் விதவையாகி விடுவாள் என்பது அவருக்குத் தெரியும். அதானால்தான் அந்த நீர்க் கெடிகாரத்தை வாங்கிக் கொண்டுவந்து வைத்திருந்தார். அதைவைத்துச் சரியான நேரத்தில் தன்
மகளின் திருமணத்தை நடத்த எண்ணியிருந்தார். அவர் எண்ணத்தில் கழன்று விழுந்த முத்தின் வடிவில் மண்ணைப் போட்டான் காலதேவன். கடிகாரத்தில் முத்து விழுந்தது அவர் கண்ணில் படாமல் போய்விட்டது.

கடிகாரம் நேரத்தைச் சொதப்பியது அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. தன்னுடைய தவறான ஜோதிடக் கணிப்புத்தான் மகள் விதவையானதற்குக் காரணம் என்று அவர் தன்னையே குற்றம் சாட்டிக்கொண்டார்.

என்ன செய்வது? நடந்தது நடந்துவிட்டது.

ஆறுவயதுக் குழந்தைக்கு ஒன்றும் தெரியவில்லை. தான் விதவையாகிவிட்டதின் அவலம் புரியவில்லை. பாஸ்கராச்சார்யா ஆச்சாரமான அந்தனர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய குல வழக்கப்படி பெண் எந்த வயதில் விதவையானாலும்
விதவையானதுதான். மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

கலங்கிப் போன, நொருங்கிப்போன பாஸ்கராச்சார்யா, இரண்டு திங்களில் சமாதானமானார். விதியின் சவாலை ஏற்றுக் கொண்டார். தானே ஆசானாக இருந்து, தன் மகளையும் பெரிய கணித மேதையாக்கினார்.

சித்தாந்த சிரோனணி என்னும் கணித நூலை எழுதியவர் அவர். டிரிகொனாமெட்ரி, அல்ஜீப்ரா, கால்குலஸ் போன்ற கணிதங்களை எல்லாம் விடிவமைத்து விளக்கம் எழுதியவர். அவருடைய வரலாறைப் படித்தால் தலை சுற்றும். தலை சுற்றாது என்று நிச்சயம் தெரிந்தவர்கள், அவருடைய வரலாற்றைப் படியுங்கள். விக்கி மகாராசாவிடம் பாஸ்கராச்சார்யாவைப் பற்றிய பல தகவல்கள் உள்ளன அதற்கான சுட்டி இங்கே உள்ளது. அழுத்திப் பாருங்கள்

சூரிய, சந்திர கிரணங்களை அறியும் முறைகளை எல்லாம் கணிதத்தின் மூலம் வடிவமைத்தவர் அவர். இந்திய ஜோதிடத்திற்கு அவர் ஆற்றிய பங்கை எழுத்தில் வர்ணிக்க முடியாது.

அவருடைய காலம் கி.பி 1114 முதல் 1185 வரை. கர்நாடக மாநிலத்தில், பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜ்ஜடபிட்டா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அவர்.

அவரைப்பற்றிய மேலதிகத் தகவல்கள்:

Bhaskara accurately defined many astronomical quantities, including, for example, the length of the sidereal year, the time that is required for the Earth to orbit the Sun, as 365.2588 days[citation needed] which is same as in Suryasiddhanta. The modern accepted measurement is 365.2563 days, a difference of just 3.5 minutes.

His mathematical astronomy text Siddhanta Shiromani is written in two parts: the first part on mathematical astronomy and the second part on the sphere.

Bhaskara (1114 – 1185) (Kannada ಭಾಸ್ಕರಾಚಾರ್ಯ) (also known as Bhaskara II and Bhaskara Achārya ("Bhaskara the teacher")) was an Indian mathematician and astronomer. He was born near Bijjada Bida (in present day Bijapur district, Karnataka state, South India) into the Deshastha Brahmin family. Bhaskara was head of an astronomical observatory at Ujjain, the leading mathematical centre of ancient India. His predecessors in this post had included both the noted Indian mathematician Brahmagupta (598–c. 665) and Varahamihira. He lived in the Sahyadri region.

Bhaskara and his works represent a significant contribution to mathematical and astronomical knowledge in the 12th century. His main works were the Lilavati (dealing with arithmetic), Bijaganita (Algebra) and Siddhanta Shiromani (written in 1150) which consists of two parts: Goladhyaya (sphere) and Grahaganita (mathematics of the planets).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வராக மிஹிராவைப்பற்றிய மேலதிகத் தகவல் வேண்டுவோர்களுக்காக கிழே ஒரு சுட்டியைக் கொடுத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் அதை அழுத்திப்பார்க்கலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் (1.4.10 & 2.4.10) விடுமுறை. அடுத்த வகுப்பு 3.4.2010 சனியன்று. ’கட்’ அடிக்காமல் அனைவரும் வந்து சேரவும்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

20 comments:

  1. ஜோதிடத் தூண்களில் மற்றும் ஒன்று வகுப்பறையில்.
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. Dear Sir,

    The very important aspect of Jothish is the power of predictions and you are doing a great service to all of us by providing these stories.

    May the god bless you with all the comforts in life.

    Thanks and warm regards,
    Ramalingam

    ReplyDelete
  3. நான் படிக்கும் சமயம் வாத்தியாரெல்லாம் சொல்லாமல்கொல்லாமல் லீவு போட்டு போய்விடுவார்கள்.தினசரி வகுப்புக்கு வந்து ஏமாந்து செல்லவேண்டும். ஆனால் நமது வாத்தியார் லீவு சொல்லிவிட்டே ஊருக்கு செல்கின்றார்...நர்மும் லீவு எடுத்துக்கொள்ளுவோம். சனிக்கிழமை வகுப்பில் சந்திப்போம். வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஜோதிடத்தில் வல்லவர்களாகத் திகழ்ந்த
    வராக மிஹிராவைப்பற்றியும், பாஸ்கராச்சார்யாவைப் பற்றியும்
    இந்த நேரத்தில் தகுந்த உதாரணங்கள் மற்றும் வரலாற்றுப்
    புள்ளி விவரங்களுடன் நினைவூட்டியுள்ளீர்கள்.
    இந்த வரலாற்றினைப் படிப்பவர்கள்
    இனிமேல் ஜோதிடம் சொல் லும்போது
    சரியாக ஜாதகத்தினைப்பரிசீலித்து, ஜாதகருக்கான
    மிகச்சரியான பலன்களை மட்டும் கூறுவார்கள் என
    நம்புவோம்.
    "ஜோதிட சாஸ்திரத் திர்க்குள்ள",நற்பெயரை நம் எதிர்
    கால சந்ததியினரும் போற்றிக் காப்பற்றுவதற்கு இது பேருதவியாக இருக்கும்.

    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-03-31

    ReplyDelete
  5. very nice sir.

    Also i have a small doubt. If jupiter is the lagna lord & he is vakra along with mandi in teh lagna. will his aspects for 5th,7th,9th houses will have the power ,will it be good or bad.

    ReplyDelete
  6. கும்பகோணத்திற்கு அருகில் பாஸ்கரராயபுரம் என்ற கிராமம் உண்டு.பாஸ்கராசார்யருக்கும் இந்த கிராமத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாமோ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

    ReplyDelete
  7. ///Alasiam G said...
    ஜோதிடத் தூண்களில் மற்றும் ஒன்று வகுப்பறையில்.
    நன்றிகள் குருவே!////

    ஆமாம். இன்னும் பல தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றாக வரும்!

    ReplyDelete
  8. /////Ram said...
    Dear Sir,
    The very important aspect of Jothish is the power of predictions and you are doing a great service to all of us by providing these stories.
    May the god bless you with all the comforts in life.
    Thanks and warm regards,
    Ramalingam/////

    உங்களின் அன்பிற்கு நன்றி!

    ReplyDelete
  9. /////வேலன். said...
    நான் படிக்கும் சமயம் வாத்தியாரெல்லாம் சொல்லாமல்கொல்லாமல் லீவு போட்டு போய்விடுவார்கள்.தினசரி வகுப்புக்கு வந்து ஏமாந்து செல்லவேண்டும். ஆனால் நமது வாத்தியார் லீவு சொல்லிவிட்டே ஊருக்கு செல்கின்றார்...நர்மும் லீவு எடுத்துக்கொள்ளுவோம். சனிக்கிழமை வகுப்பில் சந்திப்போம். வாழ்க வளமுடன்.வேலன்.//////

    வாத்தியார் ஒரு உதாரணமாக இருக்க வேண்டாமா?:-)))

    ReplyDelete
  10. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஜோதிடத்தில் வல்லவர்களாகத் திகழ்ந்த
    வராக மிஹிராவைப்பற்றியும், பாஸ்கராச்சார்யாவைப் பற்றியும்
    இந்த நேரத்தில் தகுந்த உதாரணங்கள் மற்றும் வரலாற்றுப்
    புள்ளி விவரங்களுடன் நினைவூட்டியுள்ளீர்கள்.
    இந்த வரலாற்றினைப் படிப்பவர்கள்
    இனிமேல் ஜோதிடம் சொல் லும்போது
    சரியாக ஜாதகத்தினைப்பரிசீலித்து, ஜாதகருக்கான
    மிகச்சரியான பலன்களை மட்டும் கூறுவார்கள் என
    நம்புவோம். "ஜோதிட சாஸ்திரத் திர்க்குள்ள",நற்பெயரை நம் எதிர்
    கால சந்ததியினரும் போற்றிக் காப்பற்றுவதற்கு இது பேருதவியாக இருக்கும்.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி, நண்பரே!

    ReplyDelete
  11. /////ms torrent said...
    very nice sir.
    Also i have a small doubt. If jupiter is the lagna lord & he is vakra along with mandi in teh lagna. will his aspects for 5th,7th,9th houses will have the power ,will it be good or bad./////

    வக்கிரம் பெற்றதுடன், தீய கிரகத்தின் கூட்டணியில் இருப்பதால், கலவையான பலன்களே கிடைக்கும்

    ReplyDelete
  12. ////kmr.krishnan said...
    கும்பகோணத்திற்கு அருகில் பாஸ்கரராயபுரம் என்ற கிராமம் உண்டு.பாஸ்கராசார்யருக்கும் இந்த கிராமத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாமோ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்./////

    பாஸ்கராவின் அபிமானிகளில் ஒருவர், முற்காலத்தில் அக்கிராமத்திற்கு இப்பெயரைச் சூட்டியிருக்கலாம் கிருஷ்ணன் சார். இருந்தாலும் தெரியவில்லை என்பதே சரியான பதில்!

    ReplyDelete
  13. Thank you sir!good article


    // அருகில் இருந்த குன்றின் மீது நண்பர்களுடன் ஏறும்போது, தவறிக் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்துவிட்டான்.//

    கல்யானம ஆன புதுசுல என்ன விளையாட்டு கேக்குது

    ReplyDelete
  14. பாஸ்கராச்சாரியாரைப் பற்றி இப்போதுதான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். மிகவும் உபயோகமான தகவல். இந்த கதையில் இருந்து தெரிவது விதி வலியது என்பதுதான். இந்த வரிசையில் அடுத்து ஆர்ய பட்டரைப் பற்றி பதிவிடுவீர்களோ.

    ReplyDelete
  15. /////kannan said...
    My Dear Sir!
    Good Evening
    thanks.////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  16. /////sri said...
    Thank you sir!good article
    // அருகில் இருந்த குன்றின் மீது நண்பர்களுடன் ஏறும்போது, தவறிக் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்துவிட்டான்.//
    கல்யாணம் ஆன புதுசுல என்ன விளையாட்டு கேக்குது/////

    விதி யாரை விட்டது? தள்ளிக்கொண்டு போகும். சிலரை அள்ளிக்கொண்டு போகும்!

    ReplyDelete
  17. //////ananth said..
    பாஸ்கராச்சாரியாரைப் பற்றி இப்போதுதான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். மிகவும் உபயோகமான தகவல். இந்த கதையில் இருந்து தெரிவது விதி வலியது என்பதுதான். இந்த வரிசையில் அடுத்து ஆர்யபட்டரைப் பற்றி பதிவிடுவீர்களோ.////////

    ஆகா, உங்களுக்காக எழுதிவிட்டால் போகிறது! வரிசையில் அவரும் இருக்கிறார். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  18. Sir,

    You were writing about numerology & I was waiting for the write up about number seven & eight. Midway you have skipped & gone to other topics. Will you come back to numerology or is it closed.

    ReplyDelete
  19. /////subramanian said...
    Sir,
    You were writing about numerology & I was waiting for the write up about number seven & eight. Midway you have skipped & gone to other topics. Will you come back to numerology or is it closed.////

    எதுவும் ஸ்கிப் ஆகாது. ஒரு தலைப்பிலேயே தொடர்ந்து எழுதினால் போரடிக்காதா? அதனால் தான் இடையிடையே கதைகள், கட்டுரைகள், நகைச்சுவை என்று கலந்து வரும்!நீங்கள் கேட்டுள்ளவைகள் அடுத்தவாரம் வரும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com