26.3.10
கண்ணதாசன்: பூஜைக்கு வந்த மலரே வா! பூமிக்கு வந்த நிலவே வா!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணதாசன்: பூஜைக்கு வந்த மலரே வா! பூமிக்கு வந்த நிலவே வா!
நேற்றையப் பதிவைப் படித்துவிட்டு, சகோதரி ஒருவர் கேட்டிருந்தார்:
// கவியரசரோட அழகான பாடல் ஒண்ணு அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி. இரவோடு இரவாக ஓடிப்போய் விடக்கூடாது.இது எல்லாப் பெண்களுக்குமே உள்ள நியதி என்று ஏன் பெண்களை மட்டும் சொல்றீங்க? ஆண்களுக்கு அதில் சம்பந்தம் இல்லையா? அவர்கள் ஓடிப்போனால் மட்டும் நியாயமா?//////
நல்ல கேள்வி !
அதற்குப் பதில் சொல்ல வேண்டியது எனது கடமை. பதிலை சற்று விரிவாகவே சொல்ல வேண்டிய நிலைமை. அதனால் விரிவாகவே எழுதுகின்றேன்.
இறைவன் படைப்பில் ஆணும், பெண்ணும் சமம்தான். ஆணிற்கு உடல் வலிமையைக் கொடுத்த கடவுள். பெண்ணிற்கு மன வலிமையைக் கொடுத்தார்.
இன்ன பிற படைப்புக்களிலும் கடவுள் சமத்துவத்தையே கடைப்பிடித்துள்ளார்.
ஆடு, மாடு, மான் இவைகளுக்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்கு மட்டும் ஏன் கொம்பைக் கொடுக்கவில்லை?
குதிரைக்கு வலிமையைக் கொடுத்துள்ளார். (Power - அதைத்தான் நாம் horse power என்கின்றோம்) அதோடு கொம்பையும் கொடுத்திருந்தால் என்ன ஆகும்? சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்!
இதைக் கேட்ட என் நண்பர் ஒருவர், "சரி, கடவுள், கழுதைக்கு ஏன் கொம்பைக் கொடுக்கவில்லை என்றார்?"
நான் சொன்னேன்,"கடவுள் கழுதைக்குக் காலில் பலத்தைக் கொடுத்துள்ளார். உதை வாங்கியவர்களைக் கேட்டுப் பாருங்கள். தெரியும்!"
அதனால் தான் கடவுளுக்கு விருப்பு, வெறுப்பு இல்லாதவர் (Likes and dislikes) என்று பெயர். வள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார். "வேண்டுதல்
வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல!" என்று
அவர் கடவுளைச் சிறப்பித்துச் சொல்கின்றார்.
நமது பண்டைய ஜோதிட நூல்களான சரவளி, காலப்பிரசிகா, கேரள
மணிகண்ட ஜோதிடம், புலிப்பாணி ஜோதிடம், அகத்தியர் ஜோதிடம் ஆகியவையும் அதைத்தான் சொல்கின்றன.
ஜாதகத்தில் எல்லோருக்கும் அஷ்டவர்கத்தில் மொத்தப் பரல்கள் 337தான்.அது மாறாது. (It is constant to everyone) சந்தேகம் இருப்பவர்கள் கணினியில் தங்கள் ஜாதகத்தை அடித்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்
ஜோதிடத்தின் மீதே சந்தேகம் இருப்பவர்கள் திரு பெங்களுர் வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய (How the planets are influencing human life) நூலைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
ஆகவே ஆணும் பெண்ணும் சமம்தான். ஆனால் நம் இலக்கியங்கள் பெண்ணை மிகவும் உயர்வாகச் சொல்கின்றன.
"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!" என்று பாரதி சொன்னார்.
God could not be every where, so he made mothers என்று ஒரு படித்த ஞானியும் சொன்னார்
கவியரசர் கண்ணதாசன் அவர்களும் பெண்மையின் உயர்வைப் பல பாடல்களில் சிறப்பாக எழுதியுள்ளார். அவைகள் இந்த தொடரில் பிறகு வரும்.
"பூஜைக்கு வந்த மலரே வா!
பூமிக்கு வந்த நிலவே வா"
என்று பெண்ணை மலராகவும், நிலவாகவும் அவரால்தான் நினைக்க முடிந்தது.
நிற்க, நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகிறேன்.
கவிஞர் தான் வாழ்ந்த காலத்திலிருந்த சூழ்நிலையையும், படக் காட்சியின் சூழ்நிலையையும் மனதில் வைத்து அந்தப் பாடலை எழுதினார்.
அப்போது பல பெண்கள் அதிகம் படித்திராமலும், வேலைக்குச் செல்லாமலும் இருந்த காலம். தன் காலிலேயே பெண் தானாக நிற்க முடியாத நிலைமை.
அத்தகைய நிலையில் உள்ள பெண் வழி தவறிப்போனால் - போகின்ற காதல்பாதை சரியாக அமையாவிட்டால் அவளை அழைத்துச் சென்றவனை விட அவளுக்குத்தான் துக்கம் அதிகம் ஏற்படும்.
அவள்தான் திசையறியாமல் திகைத்துக் கலங்கி நிற்க நேரிடும். ஆணிற்கு அன்றைய நாளில் பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்பட வாய்ப்பில்லாத நிலமை. துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு போய் விடுவான்
அந்த நியதியைப் பெண் கடைப்பிடித்தல் நலமானது என்பதால்தான் கவியரசர், நாட்டோரைச் சாட்சி வைத்து வந்து விடவா? என்று எழுதினார்.
சகோதரிக்கு விளக்கம் போதுமென்று எண்ணுகிறேன்.
இதேபோல கவியரர் எழுதிய வேறு ஒரு பாடலுக்கு ஆண்கள் பலர் சேர்ந்து, அவரை மொய்த்துக் கொண்டு கேள்விகள் கேட்ட சம்பவம் ஒன்றும் உண்டு.
பாட்டை பாருங்கள்:
“நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனை இல்லை ..
சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட
நாள் முதலாய் பெண்
உறங்கவில்லை ..
பெண் உறங்கவில்லை
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
இந்தக் காவல் தாண்டி
ஆவல் உன்னைத்
தேடி ஓடுது ..
தேடி ஓடுது
பொன் விலங்கை வேண்டுமென்றே
பூட்டிக் கொண்டேனே
உன்னைப் புரிந்தும் கூட சிறையில்
வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை
எண்ணுகின்றேனே
இன்று நாளை என்று நாளை
எண்ணுகின்றேனே
நான் என்றும் உந்தன் எல்லையிலே
வந்திடுவேனே ..
வந்திடுவேனே
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனை இல்லை.
சிந்தனை இல்லை!
(திரைப் படம்: தெய்வத்தின் தெய்வம்
பாடியவர்: பி.சுசீலா, இசை: ஜி.ராமனாதன்
பாடலாக்கம்: கண்ணதாசன்)
இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு பல இளைஞர்கள் கூடிக் கவியரசர் அவர்களைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்
அவர்கள் என்ன கேட்டார்கள்? அதற்குக் கவியரசர் என்ன பதில் சொன்னார் - என்பதை அடுத்துக் கொடுத்துள்ளேன்!
பாடலின் முதல் பன்னிரெண்டு வரிகளைப் பாருங்கள்.
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனை இல்லை ..
சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட
நாள் முதலாய் பெண்
உறங்கவில்லை ..
பெண் உறங்கவில்லை.
இளைஞர்கள் கேட்டது இதுதான்:
உணர்வுகள் என்பது ஆண், பெண் என்று இருபாலருக்கும் பொதுவானதுதானே! அப்படியிருக்கையில்,உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை" என்று நீங்கள் பெண்ணை மட்டும் எப்படிச் சிறப்பித்துக் கூறலாம்? அதே காதல் உணர்வினால் அவளுடைய காதலனும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டானா - சொல்லுங்கள்?"
இவள் உறங்காதது போல அவனும் உறங்கியிருக்க மாட்டானில்லையா? அப்படியிருக்கும்போது பெண் உறங்கவில்லை என்று பெண்ணை மட்டும் ஏன் உயர்த்தி எழுதினீர்கள்? காதல் உணர்வில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுத் தூக்கமின்றித் தவிப்பவன் ஆண்தான் - அது உங்களுக்குத் தெரியாதா?"" என்று கேட்டுத் துளைத்து எடுத்து விட்டார்கள்.
அவர் நடத்திக் கொண்டிருந்த தென்றல் என்ற பத்திரிக்கை மூலமாகத்தான்
இந்தக் கேள்வியைப் பல ஆண் வாசகர்கள் கேட்டு எழுதியிருந்தார்கள்.
கடிதங்கள் நூற்றுக் கணக்கில் வந்து குவிந்து விட்டது.
நம் கவியரசர் அவர்கள் நல்லதாக ஒரு பதிலைக் கொடுத்து அனைவரையும் சமாதானமடையச் செய்தார்.
அதற்கு முன் வெளிவந்திருந்த வானம்பாடி என்ற படத்தில் தான் எழுதியிருந்த பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பதிலை எழுதியிருந்தார்.
"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!"
என்று துவங்கும் பாடல் அது. அந்தப் பாட்டின் இடையில்
"அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!
படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்தி வைப்பான்!"
என்ற வரிகள் வரும். அதைச் சுட்டிக் காட்டிக் கவியரசர் இப்படி எழுதினார்.
"பெண் குலத்தைப் படைப்பதை நிறுத்திவை" என்று ஒரு காதலன் துக்க உணர்வு மேலோங்கிப் பாடுவதாக எழுதியிருந்தேன்.அவன் ஒருவனுடைய உணர்வுகளுக்காக மொத்த பெண் குலமும் என்ன செய்யும்? கடவுளென்ன
அவன் வைத்த ஆளா? இவனுக்காக அவர் எப்படி பெண்களைப் படைப்பதை நிறுத்துவார்?.
இதையே ஒரு பெண் குரல் கொடுத்து ஆண்களைப் படைப்பதை நிறுத்து கடவுளே என்றால் என்ன ஆகும்?
ஆனாலும் அவன் பாட்டில் தவறு இல்லை தன் உணர்வுகளின் தாக்கத்தினால் அவன் அப்படிப் பாடுகின்றான். அவனுடைய சூழ்நிலை அப்படி.
அதே போன்ற சூழ்நிலையில் தான் அந்தப் பெண்ணும், தன் உணர்வுகள் மேலோங்கப் பெண் உறங்கவில்லை என்கிறாள்!
அதைத் தவறென்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், இதுவும் தவறுதான். அது தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. என்ன சொல்கிறீர்கள்?" என்று
வந்த எதிர்ப்பிற்கு சரியான கேள்வி ஒன்றைக் கேட்டு அவர்களையே உணரவைத்தார்.
மேலும் அதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென்றல் இதழில் இப்படி எழுதினார்.
"இந்த வானம்பாடிப் படப்பாடல் வந்த போது ஒரு பெண் கூட என்னைக் கேள்வி கேட்கவில்லை. நீங்கள் எத்தனையோ பேர் கேட்டு எழுத நான் பதில் சொன்னேன்.
உங்களுக்கு மேலும் ஒன்று சொல்வேன். உணர்வுகள் பொதுவானவை. உணர்வுகளுக்கு ஆண், பெண் என்கின்ற பேதம் கிடையாது! திரைப்படப் பாடல்கள் எல்லாம் படத்தின் சூழ்நிலைக்கு, நாயகன், நாயகியின் மன உணர்வுகளுக்கு எழுதப்படுபவை.அவைகளை நீங்கள் அந்தப் பாத்திரங்களின் தன்மையோடு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்"
என்ன நிதர்சனமான உண்மை!
----------------------------------------------------------------------------
இந்தப் பாடல் ஒலிப்பதிவின் போது ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்தது.
பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு ஒலிப்பதிவு அரங்கவாயிலில் கவியரசர் தன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பாடலைப் பாடுவதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த பாடகர். திரு.டி.எம்.எஸ். பாட்டில் உள்ள ஒரு சொல்லைக் கண்டு திடுக்கிட்டு, இசையமைப்பாளரிடம் போய் அதைக் காட்டி "இந்தப் பாட்டை நான் பாட விரும்பவில்லை என்றார்!"
கவியரசர் முதலில் எழுதியிருந்த வரிகள் இதுதான்.
"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் சாக வேண்டும்....."
அதிர்ச்சியடந்த இசையமைப்பாளர், அதை வாங்கிப் பார்த்துவிட்டு "ஏன் என்றார்?"
திரு.டி.எம்.எஸ் சொன்னார். "என்னைப் பாட வைப்பதே இறைவன்தான் என்று நம்பிக் கொண்டிருப்பவன் நான். எனவே அவரைச் சாகச் சொல்லி நான் எப்படிப் பாடுவது? "
விஷயம் கவியரசரின் காதுகளுக்கு உடனே எட்டியது.திரு.டி.எம்.எஸ். அவர்களின் கருத்து சரிதான் என்றுணர்ந்த கவியரசர், எந்தவித தன்முனைப்புமில்லாமல் அந்த வார்த்தையை மாற்றி எழுதிக் கொடுத்தார்.
சாக என்றிருந்த வார்த்தை வாட என்று மாற்றப்பட்டது!
பாடலின் வரி இப்படி மாறியது
காதலித்து வேதனையில் சாக வேண்டும்!
என்றிருந்த வரி
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
என்று மாறியது.
(தொடரும்)
-----------------------------------------------------
முழுப்பாடலையும் கீழே கொடுத்துள்ளேன் இதில் உங்களுக்குப் பிடித்த இரண்டு வரிகளை எழுதுங்கள்
"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!
(கடவுள்)
எத்தனை பெண் படைத்தான்
எல்லோர்க்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையெனும் விஷம் கொடுத்தான் - அதை
ஊரெங்கும் தூவி விட்டான்
உள்ளத்திலே பூச விட்டான்
ஊஞ்சலை ஆட விட்டு
உயரத்திலே தங்கி விட்டான்....
அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!
படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்தி வைப்பான்!
(கடவுள்)
படம் வானம்பாடி (வருடம் 1962)
______________________________________________________________
வாழ்க வளமுடன்!
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteமுத்தையாவின் பாடல்களின் வரிகள் அத்தனையும்
முத்தான முத்தல்லவோ: அந்த முத்துக்குவியலில் எதை
எனக்குப் பிடித்தது என்பேன்!
கழனி வாழ் உழவர்களுக்கும்,
கல்லூரி மாணாக்கர்களுக்கும்-ஏன்
தரணிவாழ் தமிழர்கள் யாவருமே,
தனது நவரசமான உணர்வுகளை வெளிப்படுத்த
கவிஞரின் வரிகள்தானே கடவுச்சொல்...........
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteகவியரசரின் நினைவுகள் என்றென்றும் உள்ளவாறு
அவரின் பாடல்கள் இருக்கின்றன.
தங்களின் மேற்கோள்கள் மூலம் அவரின் பாடல்கள்
நினைவூட்டப் பெற்று அந்த நாள் நினைவுகளை
தற்போது நினைக்கத் தூண்டு கோளாய் உள்ளது.
எனக்குப் பிடித்த இரண்டு வரிகள்:-
அவனை அழைத்துவந்து ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!
மேற்கண்ட வரிகள் மூலமாக கவியரசரின் மனதில் உள்ள
எண்ணம் நிறைவேறுவதாய் கருதுகிறேன்.அந்த அளவுக்கு அவர்
மனம் நொந்து போய் உள்ளார். அதனை இந்த சொற்களால்
எடுத்துறைத்து திருப்தி அடைந்துள்ளார் என்று நினைக்கத்
தோன்றுகிறது.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-03-26
ayya ottu podrapapa tavaripo negative votela click panniten tappa ninachikatheenga. mannichidunga..
ReplyDeleteஹார்ஸ் பவர் விளக்கம் பிரமாதம்.
ReplyDeleteகண்ணதாசனின் தனிச்சிறப்பாக நான் நினைப்பது எளிய வார்த்தைகளும் அரிய ஆழமும். வார்த்தை ஜாலங்கள் ஏதுமின்றி எளிய மனதனின் மனதில் போய் உட்காரும் பாடல்கள்.
நீங்கள் காட்டியிருக்கும் உதாரணங்கள் அருமையானவை.
ஆனால் இவை அந்தக் கடலின் இரண்டு துளிகளே!
http://kgjawarlal.wordpress.com
கண்ணதாசன் பாடல்கள் மட்டும் அருமை.
ReplyDeleteஅவர் வாழ்க்கை சிறுமை.
குடி கும்மாளம் கூத்து
பல மனைவிகள் என்றிருந்தவர்
எதிர்காலத்திற்கு இல்லாத வாழ்க்கை முறை
எரிசல் தான் வருகிறது
ஜோதிடம் கற்க வந்த இடத்தில
ஜோராக உபதேசம் ஏன்?
அய்யா இனிய காலை வணக்கம்....
ReplyDeleteகவியரசரை பற்றிய பதிவு அருமை அய்யா .....
நன்றி வணக்கம்.....
////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
முத்தையாவின் பாடல்களின் வரிகள் அத்தனையும்
முத்தான முத்தல்லவோ: அந்த முத்துக்குவியலில் எதை
எனக்குப் பிடித்தது என்பேன்!
கழனி வாழ் உழவர்களுக்கும்,
கல்லூரி மாணாக்கர்களுக்கும்-ஏன்
தரணிவாழ் தமிழர்கள் யாவருமே,
தனது நவரசமான உணர்வுகளை வெளிப்படுத்த
கவிஞரின் வரிகள்தானே கடவுச்சொல்...........//////
நல்லது. நன்றி ஆலாசியம்!
////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
கவியரசரின் நினைவுகள் என்றென்றும் உள்ளவாறு
அவரின் பாடல்கள் இருக்கின்றன.
தங்களின் மேற்கோள்கள் மூலம் அவரின் பாடல்கள்
நினைவூட்டப் பெற்று அந்த நாள் நினைவுகளை
தற்போது நினைக்கத் தூண்டு கோளாய் உள்ளது.
எனக்குப் பிடித்த இரண்டு வரிகள்:-
அவனை அழைத்துவந்து ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!
மேற்கண்ட வரிகள் மூலமாக கவியரசரின் மனதில் உள்ள
எண்ணம் நிறைவேறுவதாய் கருதுகிறேன்.அந்த அளவுக்கு அவர்
மனம் நொந்து போய் உள்ளார். அதனை இந்த சொற்களால்
எடுத்துறைத்து திருப்தி அடைந்துள்ளார் என்று நினைக்கத்
தோன்றுகிறது.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!
///////LK said...
ReplyDeleteayya ottu podrapapa tavaripo negative votela click panniten tappa ninachikatheenga. mannichidunga//////
இந்த வாக்குகளை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கவலை வேண்டாம்
//////Jawahar said...
ReplyDeleteஹார்ஸ் பவர் விளக்கம் பிரமாதம்.
கண்ணதாசனின் தனிச்சிறப்பாக நான் நினைப்பது எளிய வார்த்தைகளும் அரிய ஆழமும். வார்த்தை ஜாலங்கள் ஏதுமின்றி எளிய மனதனின் மனதில் போய் உட்காரும் பாடல்கள்.
நீங்கள் காட்டியிருக்கும் உதாரணங்கள் அருமையானவை.
ஆனால் இவை அந்தக் கடலின் இரண்டு துளிகளே!
http://kgjawarlal.wordpress.com//////
உங்களின் பாராட்டிற்கு நன்றி! பாராட்டுக்கள் அனைத்தும் கவியரசரையே சேரும்!
//////Raju said...
ReplyDeleteகண்ணதாசன் பாடல்கள் மட்டும் அருமை.
அவர் வாழ்க்கை சிறுமை.
குடி கும்மாளம் கூத்து
பல மனைவிகள் என்றிருந்தவர்
எதிர்காலத்திற்கு இல்லாத வாழ்க்கை முறை
எரிச்சல் தான் வருகிறது
ஜோதிடம் கற்க வந்த இடத்தில
ஜோராக உபதேசம் ஏன்?/////
எதற்காக எரிச்சல் வரவேண்டும்? இன்று 75% மக்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள். மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தைப் பாருங்கள். கவியரசரே சொல்லியிருக்கிறார்: என்னைப்போல வாழாதீர்கள். நான் எழுதியுள்ளதைப் போல வாழுங்கள்
//////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்...
கவியரசரை பற்றிய பதிவு அருமை அய்யா ....
நன்றி வணக்கம்.....//////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
ஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteதங்களுடைய வலைப்பூ ஒரு பள்ளிக்கூடமாகவே இருக்கின்றது.
கண்ணதாசனின் மேல் கொண்ட மோகம் எனக்குள் அதிகமாகிக் கொண்டே போகிறது. உங்கள் பாடங்கள் தொடர மாணவனின் வேண்டுகோள்!.
sagotharan.wordpress.com
பாடலகள் அனைத்தும் அருமை...
ReplyDeleteநீநீண்ண்ண்டடட.....பதிவிற்கு நன்றி
2 நாட்களாகப் படிக்காதவற்றை இன்று வந்து படித்து முடித்தேன்.கண்ணதாசன்
ReplyDeleteபற்றியே செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதைப் பார்த்தேன்.நன்று.
நேற்று சென்னையில் தியாகராய நகர் வெங்கடநாராயணா சாலையிலிருந்து பாண்டிபஜார் செல்ல ஒரு சந்தில் நுழைந்தேன்.கண்ணதாசன் பதிப்பகம் வழியில் கண்டேன்.அந்த இல்லத்தில்தான் கவிஞர் வாழ்ந்ததாகவும் அறிகிறேன். அப்போது தங்களையும், தங்கள் கண்ணதாசன் ஆர்வத்தையும்,கவிஞரின் தமிழறிவையும் ஒருசேர நினைத்துக்கொண்டே அவ்வில்லத்தைக் கடந்து சென்றேன்.அவ்வில்லத்திற்கு எதிர்சாரியில் அதே வளைவில் அகஸ்தியர் ஆஸ்ரமம்!என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்!
////sagotharan said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்.
தங்களுடைய வலைப்பூ ஒரு பள்ளிக்கூடமாகவே இருக்கின்றது.
கண்ணதாசனின் மேல் கொண்ட மோகம் எனக்குள் அதிகமாகிக் கொண்டே போகிறது. உங்கள் பாடங்கள் தொடர மாணவனின் வேண்டுகோள்!.
sagotharan.wordpress.com/////
உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!
//////மதி said...
ReplyDeleteபாடலகள் அனைத்தும் அருமை...
நீநீண்ண்ண்டடட.....பதிவிற்கு நன்றி/////
நல்லது........................நன்றி!
///////kmr.krishnan said...
ReplyDelete2 நாட்களாகப் படிக்காதவற்றை இன்று வந்து படித்து முடித்தேன்.கண்ணதாசன்
பற்றியே செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதைப் பார்த்தேன்.நன்று.
நேற்று சென்னையில் தியாகராய நகர் வெங்கடநாராயணா சாலையிலிருந்து பாண்டிபஜார் செல்ல ஒரு சந்தில் நுழைந்தேன்.கண்ணதாசன் பதிப்பகம் வழியில் கண்டேன்.அந்த இல்லத்தில்தான் கவிஞர் வாழ்ந்ததாகவும் அறிகிறேன். அப்போது தங்களையும், தங்கள் கண்ணதாசன் ஆர்வத்தையும்,கவிஞரின் தமிழறிவையும் ஒருசேர நினைத்துக்கொண்டே அவ்வில்லத்தைக் கடந்து சென்றேன்.அவ்வில்லத்திற்கு எதிர்சாரியில் அதே வளைவில் அகஸ்தியர் ஆஸ்ரமம்!என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்!////////
ஆமாம். அவர் அங்கேதான் வாழ்ந்தார். முன்பு அதற்கு ஹென்ஸ்மென் சாலை என்று பெயர். இப்போது கண்ணதாசன் சாலை என்று பெயர். எதிரில் உள்ள பூங்காவின் பெயர் நடேசன் பூங்கா! அந்த வீட்டிற்கு அருகில் உள்ள பாலாஜி கல்யாண மண்டபத்தில்தான் கவையரசரை நான் சந்தித்துப்பேசினேன். கவியரசர் வாழ்ந்த வீட்டிற்கும் சென்று வந்திருக்கிறேன். நன்றி கிருஷ்ணன் சார்!
This comment has been removed by the author.
ReplyDeleteஆயிரம் பெண்மை மலரட்டுமே என்ற பாடலில் கண்ணதாசன் பெண்மைக்கு தந்த மதிப்பு இந்த வரிகள்
ReplyDeleteமன்னவனே ஆனாலும் ... மண்ணளந்து கொடுத்தாலும்...
பெண் மனதை நீ அடைய முடியாது
வாள் முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும்
உடலன்றி உள்ளமுனைச் சேராது..ஆ...ஆ...ஆ
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
வணக்கம் ஐயா
ReplyDeleteஉங்கள் mail classroom2007@gmail.com நிறைய புகைப்படங்களை அனுப்பி உளேன் தயவு செய்து அதை பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.
நன்றி
அன்பு அய்யாவுக்கு வணக்கம் , கவிஞர் கண்ணதாசன் பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர் மிக பெரிய தத்துவ கவிஞர், அவர்
ReplyDeleteஒவ்வொன்றையும் அனுபவித்து, ரசித்து எழுதியவர்,அவருக்கு நிகர் அவரே.
அவர் எழுதிய பாடலில் எதை குறிப்பிட்டு சொல்வது எல்லாமே சூப்பர்,
அவர் சினிமாவிற்காக எழுதிய காதல் தோல்வி பாடல் ஒன்றில் அவர் எழுதியிருப்பார்,
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி?
என்று அவர் எழுதிய வரிகள் என்ன அற்புதம்.
அன்புடன் உங்கள் மாணவன்
ஜீவா
//நேற்றையப் பதிவைப் படித்துவிட்டு, சகோதரி ஒருவர் கேட்டிருந்தார்://
ReplyDelete// கவியரசரோட அழகான பாடல் ஒண்ணு அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி. இரவோடு இரவாக ஓடிப்போய் விடக்கூடாது.இது எல்லாப் பெண்களுக்குமே உள்ள நியதி என்று ஏன் பெண்களை மட்டும் சொல்றீங்க? ஆண்களுக்கு அதில் சம்பந்தம் இல்லையா? அவர்கள் ஓடிப்போனால் மட்டும் நியாயமா?//////
திடுக்கிட்டேன். எப்படி நான் ஒரு பதிவை படிக்காமல் போனேன். முதலில் அதைப் படிப்போம் என்று படித்தேன்.
//காதல் திருமணமாக இருந்தால்கூட, நான்கு நண்பர்களை சாட்சியாக வைத்துக் கொண்டுதான், காதல் திருமணத்திற்கென்று உள்ள முறைப்படி திருமணம்
செய்து கொண்டுதான் பொகவேண்டும்!//
அதில் உள்ள இந்த வார்த்தைகள் சத்தியம் காதலித்து முறைப்படி பெற்றோர்கள் அனுமதியுடன் திருமணம்
செய்துகொண்டவர்களுக்குத்தான் புரியும்.
ஹி...ஹி...எங்களைப்போல . 1968ல் ...
அது இருக்கட்டும். நீங்கள் சொல்லிய ஜாதக நூல்களில் ஒன்று , காதலித்தவருடன் ஓடிப்போவதைக்கூட
அனுமதிப்போல தோன்றவில்லை. மூன்று சந்தர்ப்பங்களில் திருமணம் செய்துகொள்ள ஜாதகப்பொருத்தம்
தேவையில்லை என்று சொல்வார்கள். காந்தர்வம், கர்ப நிஸ்சிதம், சம ச்ப்தமம். ஆனால், அப்பா அம்மாவை விட்டு ஓடிப்போக அனுமதி தரவில்லை. அந்த பெற்ற உள்ளங்கள் எத்தனை தவிக்கும்? அந்த துயரம், அந்த ஓடிப்போன
பெண் ஒரு தாயாகி அவள் பெண் இது போல செல்லும்போது தான் தெரியவரும்.
ஒரு உதாரணத்துக்குச் சொல்கிறேன்.
சகுந்தலை கூட தனது வளர்ப்பு அப்பா வரும் வரை பொறுக்க முடியவில்லையே ! அட் லீஸ்ட் அப்பா அல்லது
அவர்களது சீடர்களையாவது சாட்சியாக வைத்துக்கொண்டு துஷ்யந்தனைத் திருமணம்
செய்துகொண்டிருந்தால், பின் அவ்வ்ளவு துன்பங்கள் அனுபவிக்கவேண்டிய நிலை வருமா என்ன ?
வாத்தியார் சார்! யூ ஆர் ஃபுல்லி ஆல் ரைட். கோ ஆன். நான் உங்கள் கட்சி.
சுப்பு தாத்தா.
//////Sekar said...
ReplyDeleteஆயிரம் பெண்மை மலரட்டுமே என்ற பாடலில் கண்ணதாசன் பெண்மைக்கு தந்த மதிப்பு இந்த வரிகள்
மன்னவனே ஆனாலும் ... மண்ணளந்து கொடுத்தாலும்...
பெண் மனதை நீ அடைய முடியாது
வாள் முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும்
உடலன்றி உள்ளமுனைச் சேராது..ஆ...ஆ...ஆ
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே////
ஆமாம், அது மிகவும் நல்ல பாடல். கவியரசரின் வரிகளால் பெருமை பெற்ற பாடல்! நன்றி நண்பரே!
////sundaresan p said...
ReplyDeleteவணக்கம் ஐயா
உங்கள் mail classroom2007@gmail.com நிறைய புகைப்படங்களை அனுப்பி உளேன் தயவு செய்து அதை பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.
நன்றி/////
ஏற்கனவே நிறைய வந்து கொண்டிருக்கிறது. அவற்றைப் பார்ப்பதுபோல இவற்றையும் பார்க்கிறேன். நன்றி!
//////ஜீவா said...
ReplyDeleteஅன்பு அய்யாவுக்கு வணக்கம் , கவிஞர் கண்ணதாசன் பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர் மிக பெரிய தத்துவ கவிஞர், அவர்
ஒவ்வொன்றையும் அனுபவித்து, ரசித்து எழுதியவர்,அவருக்கு நிகர் அவரே.
அவர் எழுதிய பாடலில் எதை குறிப்பிட்டு சொல்வது எல்லாமே சூப்பர்,
அவர் சினிமாவிற்காக எழுதிய காதல் தோல்வி பாடல் ஒன்றில் அவர் எழுதியிருப்பார்,
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி?
என்று அவர் எழுதிய வரிகள் என்ன அற்புதம்.
அன்புடன் உங்கள் மாணவன்
ஜீவா///////
இறைவனைத் தண்டிக்க என்ன வழி? என்று தன் வருத்தத்தை அழகாக வெளிப்படுத்த அவராலதான் முடிந்திருக்கிறது. நன்றி
sury said...
ReplyDelete//நேற்றையப் பதிவைப் படித்துவிட்டு, சகோதரி ஒருவர் கேட்டிருந்தார்://
// கவியரசரோட அழகான பாடல் ஒண்ணு அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி. இரவோடு இரவாக ஓடிப்போய் விடக்கூடாது.இது எல்லாப் பெண்களுக்குமே உள்ள நியதி என்று ஏன் பெண்களை மட்டும் சொல்றீங்க? ஆண்களுக்கு அதில் சம்பந்தம் இல்லையா? அவர்கள் ஓடிப்போனால் மட்டும் நியாயமா?//////
திடுக்கிட்டேன். எப்படி நான் ஒரு பதிவை படிக்காமல் போனேன். முதலில் அதைப் படிப்போம் என்று படித்தேன்.
//காதல் திருமணமாக இருந்தால்கூட, நான்கு நண்பர்களை சாட்சியாக வைத்துக் கொண்டுதான், காதல் திருமணத்திற்கென்று உள்ள முறைப்படி திருமணம்
செய்து கொண்டுதான் பொகவேண்டும்!//
அதில் உள்ள இந்த வார்த்தைகள் சத்தியம் காதலித்து முறைப்படி பெற்றோர்கள் அனுமதியுடன் திருமணம்
செய்துகொண்டவர்களுக்குத்தான் புரியும்.
ஹி...ஹி...எங்களைப்போல . 1968ல் ...
அது இருக்கட்டும். நீங்கள் சொல்லிய ஜாதக நூல்களில் ஒன்று , காதலித்தவருடன் ஓடிப்போவதைக்கூட
அனுமதிப்போல தோன்றவில்லை. மூன்று சந்தர்ப்பங்களில் திருமணம் செய்துகொள்ள ஜாதகப்பொருத்தம்
தேவையில்லை என்று சொல்வார்கள். காந்தர்வம், கர்ப நிஸ்சிதம், சம ச்ப்தமம். ஆனால், அப்பா அம்மாவை விட்டு ஓடிப்போக அனுமதி தரவில்லை. அந்த பெற்ற உள்ளங்கள் எத்தனை தவிக்கும்? அந்த துயரம், அந்த ஓடிப்போன பெண் ஒரு தாயாகி அவள் பெண் இது போல செல்லும்போது தான் தெரியவரும்.
ஒரு உதாரணத்துக்குச் சொல்கிறேன்.
சகுந்தலை கூட தனது வளர்ப்பு அப்பா வரும் வரை பொறுக்க முடியவில்லையே ! அட் லீஸ்ட் அப்பா அல்லது
அவர்களது சீடர்களையாவது சாட்சியாக வைத்துக்கொண்டு துஷ்யந்தனைத் திருமணம்
செய்துகொண்டிருந்தால், பின் அவ்வ்ளவு துன்பங்கள் அனுபவிக்கவேண்டிய நிலை வருமா என்ன ?
வாத்தியார் சார்! யூ ஆர் ஃபுல்லி ஆல் ரைட். கோ ஆன். நான் உங்கள் கட்சி.
சுப்பு தாத்தா./////
உண்மை! பிள்ளைகளைப் பெற்றுக் கண்போல வளர்த்தவர்களுக்குத்தான், அதன் பாதிப்புத் தெரியும். பாசத்தோடு வளர்ந்த பிள்ளைகள் அந்தத்தவறைச் செய்யாது!
//இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
ReplyDeleteஇயற்கை மணமிருக்கும் பருவத்திலே - பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
அணைத்து வளர்ப்பவளூம் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
புலவர் பாடுவதும் கவிஞர் நாடுவதும்
கலைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ - பெண்
இயற்கையில் சீதனப் பரிசல்லவோ
பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா - ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா
இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா - எந்தச்
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா//
அண்ணா!
கவிஞர் பெண்மையைச் சிறப்பித்த பாடலில் என்றும் என்னைக் கவர்ந்தது இது.
தாங்கள் சொன்ன இந்த பாடலில் அனைத்து வரிகளுமே நன்று.
ReplyDelete//அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!//
என்னவொரு நல்ல ஆசை. எனோ தெரியவில்லை. என்னை இந்த வரிகள் அதிகம் கவர்ந்தன. அவர் இன்னொரு பாடலில் எழுதியது போல் அங்கிருந்து ஆட்டுகின்றவன் தினம் ஆடுகின்ற நாடகம். இதுதான் எல்லாவற்றிற்கும் காரணம்.
ayya,nan v std padikkumpothe en appa enakku en karangalil nan padippathatku ''ARTHTHAMULLA HINDHU MATHAM''ENDRA KAAVIYATHTHAI KODUTHTHAR.athai padikka aarambiththa pin en manathil oru thelivu piranthathu.appuram ovvoru buththagamaga theda aarambiththen.
ReplyDeletepinbu kannadhasan paadalgalai rasiththu arththam purindhu viyappodu ketka aarmbiththen.innum kettuk konde iruppen.saagum varai avar padalaithan kettuk konde iruppen.yean theriyuma?en Appavum avar paadalai kettuk kandethan iraivanadi sernthar.indru nan oru nalla vazhkkai vazhgiren endral avrudaya ezhuththukkalalthan.
kavignar irandhu mannulagai vittu vinnulagam chendraalum avar paadalgalal innamum nammodu vazhndhu konduthanirukkirar.ithai type seiyum pothu enakku kanneerodu type seigiren.entha thgavalaga irunthalum en mugavarikku theriya paduthavum.
arjunchandarsingh@gmail.com.
by A.chandarsingh.
வாத்தியாருக்கு ,
ReplyDeleteதங்கள் மேலான கவனத்திற்கு "மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!" என்று சொன்னவர் பாரதி அல்ல , 'கவிமணி' தேசிக விநாயகம்பிள்ளை..
கவியரசர் பற்றிய தங்கள் கட்டுரை அருமை, நன்றி !!
/////யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ReplyDelete//இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே - பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
அணைத்து வளர்ப்பவளூம் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
புலவர் பாடுவதும் கவிஞர் நாடுவதும்
கலைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ - பெண்
இயற்கையில் சீதனப் பரிசல்லவோ
பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா - ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா
இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா - எந்தச்
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா//
அண்ணா!
கவிஞர் பெண்மையைச் சிறப்பித்த பாடலில் என்றும் என்னைக் கவர்ந்தது இது.////////
ஆகா, மிகவும் அருமையான பாடல். நினைவூட்டியமைக்கு நன்றி யோகன்!
///ananth said...
ReplyDeleteதாங்கள் சொன்ன இந்த பாடலில் அனைத்து வரிகளுமே நன்று.
//அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!//
என்னவொரு நல்ல ஆசை. எனோ தெரியவில்லை. என்னை இந்த வரிகள் அதிகம் கவர்ந்தன. அவர் இன்னொரு பாடலில் எழுதியது போல் அங்கிருந்து ஆட்டுகின்றவன் தினம் ஆடுகின்ற நாடகம். இதுதான் எல்லாவற்றிற்கும் காரணம்./////
சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ஆனந்த்!
//////cs said...
ReplyDeleteayya,nan v std padikkumpothe en appa enakku en karangalil nan padippathatku ''ARTHTHAMULLA HINDHU MATHAM''ENDRA KAAVIYATHTHAI KODUTHTHAR.athai padikka aarambiththa pin en manathil oru thelivu piranthathu.appuram ovvoru buththagamaga theda aarambiththen.
pinbu kannadhasan paadalgalai rasiththu arththam purindhu viyappodu ketka aarmbiththen.innum kettuk konde iruppen.saagum varai avar padalaithan kettuk konde iruppen.yean theriyuma?en Appavum avar paadalai kettuk kandethan iraivanadi sernthar.indru nan oru nalla vazhkkai vazhgiren endral avrudaya ezhuththukkalalthan.
kavignar irandhu mannulagai vittu vinnulagam chendraalum avar paadalgalal innamum nammodu vazhndhu konduthanirukkirar.ithai type seiyum pothu enakku kanneerodu type seigiren.entha thgavalaga irunthalum en mugavarikku theriya paduthavum.
arjunchandarsingh@gmail.com.
by A.chandarsingh.////
கவியரசரின்மேல் நீங்கள் கொண்டுள்ள பற்று வாழ்க! வளர்க!
/////'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...
ReplyDeleteவாத்தியாருக்கு ,
தங்கள் மேலான கவனத்திற்கு "மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!" என்று சொன்னவர் பாரதி அல்ல , 'கவிமணி' தேசிக விநாயகம்பிள்ளை..
கவியரசர் பற்றிய தங்கள் கட்டுரை அருமை, நன்றி !!///////
தகவலுக்கு நன்றி. மாதவம் செய்தவர்கள் வாத்தியாரை மன்னிப்பார்களாக!
வணக்கம் அய்யா
ReplyDeleteகண்ணதாசன் அவர்களை பற்றிய கட்டுரைக்கு மிக்க நன்றி அய்யா