1.3.10

பெயரில் என்ன இருக்கிறது?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெயரில் என்ன இருக்கிறது?

எங்கள் பகுதி மக்கள் தீவிர சிவபக்தர்கள். நிறைய சிவாலயங்களுக்குத் திருப்பணி செய்தவர்கள். தஞ்சை மாவட்டத்தில் திரு எனும் துவக்க எழுத்துக்களுடன் இருக்கும் 100ற்கும் மேற்பட்ட ஊர்களில் இருக்கும் சிவாலயங்களுக்குப் பலமுறை திருப்பணி செய்தவர்கள். (உதாரணம்: திருவையாறு, திருக்கோலக்கா, திருவாடுதுறை, திருவீழிமிழிலை, திருக்கழிப்பாலை, திருநின்றவூர், திருஇன்னாம்பூர், திருவாரூர், திருக்கரவீரம், திருநெல்வாயில், திருவெண்ணைநல்லூர், திருப்புனந்தாள் etc)

தங்களுடைய ஊர்களிலும் பெரிய சிவாலயங்களைக் கட்டி வழிபட்டு வருபவர்கள். காரைக்குடியைச் சுற்றிலும் மொத்தம் 74 ஊர்கள் உள்ளன. அத்தனை ஊர்களிலும் ஆலயங்கள் உள்ளன.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரையே முதன்மைக் கடவுளாகப் போற்றி வழிபட்டுவருபவர்கள். எதை எழுதினாலும் அல்லது எழுதத் துவங்கினாலும், முதலில் பிள்ளையார் சுழி, சிவமயம், என்று எழுதி விட்டுத்தான் மற்றவற்றைத் துவங்குவார்கள். முடிக்கும்போது, வேணும் அண்ணாமலையார் துணை என்றுதான் கடிதத்தை முடிப்பார்கள்.

என்றென்றும் அன்புடன் என்று முடிக்கும் இக்காலப் பழக்கமெல்லாம், ஆங்கில மோகத்தால் வந்தது.

அதோடு தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் மீது தீவிர பக்தியை உடையவர்கள். தங்கள் குழந்தைகளுக் கெல்லாம் முருகப்பெருமானின் திருநாமங்களில் ஒன்றையே சூட்டி மகிழ்ந்தவர்கள்.மகிழ்கிறவர்கள்.

கவியரசர் கண்ணதாசனின் இயற்பெயரான முத்தையா என்பதும் முருகனின் பெயர்தான்.

அதனால்தான் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் செட்டிநாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்வார்: ”முத்தப்பன் இல்லாத ஊரும் இல்லை, முருகப்பன் இல்லாதவீடும் இல்லை.”

முருகப்பன், முத்தப்பன், முத்தையா, பழநியப்பன், சுப்பிரமணியன், செந்தில்நாதன், சுவாமிநாதன், வைத்தியநாதன் என்று முருகன் பெயரும், அண்ணாமலை, அருணாச்சலம், கண்ணப்பன், சோமசுந்தரம், மீனாட்சிசுந்தரம் என்று சிவனுடைய நாமங்களாகவே மக்களுடைய பெயர்கள் இருக்கும். அதுபோல பெண்களுடைய பெயர்கள், மீனாட்சி, விசாலாட்சி, வள்ளியம்மை, தெய்வாணை என்று இறைவியரின் பெயராகவே இருக்கும்.

ஊர்களில் உள்ள பொதுக்கோவில்களிலும், பங்காளிகளுக்கென்று உள்ள படைப்பு வீடுகளிலும், ஊரில் உள்ள மக்களின் புள்ளிவிவரங்கள் முழுதாகக் கிடைக்கும். ஊரில் உள்ள ஒவ்வொருவரின் பெயரும் அங்கே பதிவு செய்யப் பெற்றிருக்கும். ஒரு குழந்தையின் பெயர் தந்தையின் பெயருடன் இணைத்தே பதிவாகியிருக்கும்.

என்னுடைய இயற்பெயர். சுப்பிரமணியன்.என் தந்தையாரின் பெயர் வீரப்பன். எங்கள் கோவிலில் பதிவாகியுள்ள பெயர். வீரப்பசெட்டி சுப்பிரமணியன்.

சுப்பிரமணியன் என்பதையும் சுப்பையா என்று சுருக்கி அழைத்தார்கள் அல்லது வைத்தார்கள். பள்ளியில் பதியும்போது எனக்கு சுப்பையா என்று பதிந்ததால் அப்பெயர் நிலைத்துவிட்டது. வைத்த பெயர் மறைந்து விட்டது. எண் ஜோதிடப்படி சுப்பையா எனும் பெயரைவிடச் சுப்பிரமணியன் எனும் பெயர் நல்ல பெயர். அதைப் பின்னால் சொல்கிறேன்

கடிதம் எழுதும்போது இதைச் சுருக்கி வீர.(சுப்பிரமணியன் alias)சுப்பையா என்று எழுதுவார்கள். எனது தந்தைவழித் தாத்தாவின் பெயர் சுப்பிரமணியன். ஆகவே என் தந்தையாரின் பெயர் சுப்பிரமணியன் செட்டி வீரப்பன். சுருக்கமாக சுப. வீரப்பன்.

இந்த இரட்டை எழுத்து இன்ஷியல் எதற்காக? ஒரு எழுத்துப்போதாதா? அதாவது என் தந்தையாரின் இன்ஷியலை சு. என்று போட்டால் போதாதா? எதற்காக சுப. என்று போட வேண்டும்? என்னுடைய இன்ஷியலை வீ. என்று போட்டால் போதாதா? வீர. என்று எதற்காகப் போடவேண்டும்?

ஒருவீட்டில் (அப்போதெல்லாம் கூட்டுக்குடும்பங்கள். பெரிய பெரிய வீடுகள். ஒரு வீட்டில் ஐந்து முதல் பத்துக் குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்த காலம்) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சுப்பையாக்கள் இருந்தால், எப்படி அடையாளப் படுத்துவது?

1. அருணாசலம் மகன் சுப்பையா
2. அண்ணாமலை மகன் சுப்பையா
3. முருகப்பன் மகன் சுப்பையா
4. பழநியப்பன் மகன் சுப்பையா

என்று நான்கு சுப்பையாக்கள் இருந்தால், அ. சுப்பையா என்று ஒற்றை எழுத்து இன்ஷியல் இருந்தால், குறிப்பிடப்படும் நபர், அருணாசலம் மகன் சுப்பையாவா அல்லது அண்ணாமலை மகன் சுப்பையாவா என்று எப்படித்தெரியும்? ஆகவே இப்படிச் சொல்வார்கள். அரு. சுப்பையா, அண. சுப்பையா, முரு. சுப்பையா, பழ. சுப்பையா, ஆங்கிலத்தில் AR.Subbiah, AN.Subbiah, MR.Subbiah, PL.Subbiah

(வாய்ச் சொல்லாக அழைக்கும்போது இப்படி அழைப்பார்கள். ஆனாரூனா சுப்பையா, மூனாரூனா சுப்பையா, பானாளானா சுப்பையா)

பட்டிமன்றத் தலைவர் கண.சிற்சபேசன் அவர்களின் பெயருக்கு முன்னால் இருக்கும் கண எனும் எழுத்து அவருடைய தந்தையார் கண்ணப்ப செட்டியாரைக் குறிக்கும். மேடைப்பேச்சாளர் பழ. கருப்பையா அவர்களின் பெயருக்கும் முன்னால் இருக்கும் பழ. எனும் எழுத்து அவருடைய தந்தையார் பழநியப்ப செட்டியார் அவர்களைக் குறிக்கும். திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அவர்களின் தந்தையாரின் பெயர். சுப்பையா.(இவர் திராவிடக் கழக முன்னோடிகளில் ஒருவர். தந்தை பெரியாரின் நெருங்கிய நண்பராக இருந்தவர்). இப்படித் தனித்தன்மையோடு அடையாளப் படுத்துவதற்குத்தான் அந்த இரட்டை எழுத்து இன்ஷியல் முறை.

ப.சிதம்பரம் எனும் பெயரைவைத்து அவருடைய தந்தையார் பெயரை எப்படிச் சுலபமாகச் சொல்ல முடியும்? பரமசிவன் மகனா அல்லது பழநியப்பன் மகனா என்று எப்படித் தெரியும்? அவருடைய தந்தையரின் பெயர் பழநியப்பன். பழ.சிதம்பரம் என்பதுதான் அவருடைய இயற்பெயர். அவர் ப. சிதம்பரம் என்று வைத்துக் கொண்டுள்ளார். பலகாலம் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தவர் அவர். தற்சமயம் அவர் மாண்புமிகு உள்துறை அமைச்சர். வெறுமனே சிதம்பரம் என்று சொன்னால் போதும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரைத் தெரியும். ஆகவே அவர் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம்!

ஆனால் அவருடைய பெயர் இயற்கையாகவே நன்றாக அமைந்துள்ளது.
P C H I D A M B A R A M 8 + 3 +5+1+4+1+4+2+1+2+1+4 = 36 இது மிகவும் நல்ல எண் (பி.எல். என்று வைத்திருந்தால் 39 வரும். அது மோசமான எண். ஆகவே அவருடைய பெயர் ப. என்னும் ஒற்றை எழுத்து இன்ஷியலிலேயே எண் ஜோதிடப்படி அருமையாக அமைந்துள்ளது)

அழகப்பன் எனும் பெயரை உடையவர்கள், எங்கள் பகுதியில் நிறையப் பேர்கள் உள்ளார்கள். அதுவும் முருகப்பெருமானின் திருநாமங்களில் ஒன்று. முருகு என்றால் அழகு. அழகு என்பது அவன்தான். அழகுக்கு அப்பனும் அவன்தான்.

ஆனால் இந்த அழகப்பனை இன்ஷியலாக்கும்போது, இரட்டை எழுத்தில் அள. என்றுதான் குறிப்பிடுவார்கள். அழ. என்று எழுதமாட்டார்கள். என்ன கெட்டிக்காரத்தனம் பாருங்கள். அழ. என்றால் அழுகையைக் குறிக்கும்.
அதனால் அள.

ஆங்கிலத்தில் பிரச்சினையில்லை AL.Chidambaram,. AL.Ramasamy

R, என்ற இன்ஷியலுடன் பெயர் வந்தால் ராமசாமி மகன். RM என்ற இன்ஷியலுடன் பெயர் வந்தால் ராமநாதன் மகன். S, என்ற இன்ஷியலுடன் பெயர் வந்தால் சுந்தரம் மகன், SP என்ற இன்ஷியலுடன் பெயர் வந்தால் சுப்பிரமணியனின் மகன்.

அர்த்தம் ஆனதா மக்களே?
-------------------------------------------------------------------------------
சரி, கதைபோதும். சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

படித்து முடித்தவுடன், தனியார் நிறுவனம் ஒன்றில் சில காலம் வேலை பார்த்தவன், அது பிடிக்காமல், வேலையைவிட்டு விலகித் தனியாகத்
தொழில் செய்யத் துவங்கினேன்.

பண முதலீடு இல்லாத சுய தொழில். முகவர் தொழில். விசிட்டிங் கார்டு, டைரி, பேச்சுத்திறமை, தொலைபேசி இந்நான்கும் இருந்தால் போதும். அதில் மூன்று மட்டுமே இருந்தது. OYT (Own Your Telephone Scheme) யில் தொலைபேசிக்கு பணம் செலுத்திவிட்டு ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை அப்போது. தொழில் துவங்கி ஐந்து வருடம் கழித்துதான் இணைப்புக் கிடைத்தது. அது பெரிய கதை. அதைப் பிறகு ஒரு நாள் விவரிக்கிறேன்.

அப்போது எனக்கு ஜோதிடத்தில் அவ்வளவாகப் பரீட்சயம் இல்லாத நிலைமை. என் ஜாதகப்படி, நான் பண முதலீட்டுடனோ அல்லது கூட்டாகவோ எந்தத் தொழிலும் செய்யக்கூடாது. சிம்ம லக்கினம். பத்திற்கு உரிய சுக்கிரன் எட்டில் (உச்சம். ஆனாலும் எட்டாம் வீடு). தொழில்காரகன் சனி 12ல். அவையெல்லாம் தெரியாமல், முருகன் அருளால் நான் சரியாகவே வழி நடத்தப்பெற்றிருக்கிறேன்.

முதலில் இருந்த பெயர் VR.சுப்பையா. அதை நான் இந்தத் தொழில் துவங்கும்போது SP.VR.சுப்பையா என்று மாற்றிக் கொண்டேன். அந்த மாற்றம் நல்ல மாற்றத்தைத் தந்தது. அது சிலகாலம் கழித்துத்தான் எனக்குத் தெரியவும் செய்தது.

எண் ஜோதிடப்படி VR.சுப்பையா விற்கான எண்: 28 அது நல்ல எண் இல்லை.

Number 28 is not a good number. It is a number with full of contradictions. It indicates a person of great promise who is likely to see all taken away from him. It indicates loss through trust in others and the likelihood of having to begin life's road over and over again. It is not a fortunate number.

எண் ஜோதிடப்படி SP.VR.சுப்பையா விற்கான எண்: 39 இது ஓரளவிற்கு நல்ல எண்.

S P V R S U B B ! A H
3 8 6 2 3 6 2 2 1 1 5 = 39

பெயர்களின் கூட்டெழுத்து 11, 12, 13,14, 16,18 20, 22, 25, 26, 28 29, 34,35, 38, 40, 43,44. 47 & 49 என்று வந்தால் நன்மையைத் தராது என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.

நன்றாக இருந்த நகரத்தின் பெயரை மாற்றிவைத்து, அதன் மகிமையைக் குறைத்த கதை ஒன்று உள்ளது.

அதைப்பற்றிய விவரம் அடுத்த பாடத்தில்!
-------------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

48 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வாத்தியார் ஐயா,
    வணக்கம்.

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு வணக்கம்,
    திருஎனத் தொடங்கும் திருமிகு தளங்களின்
    திருப்பணிக்கு திருத்தொண்டாற்றிய திருத்தொண்டர்கள் நிறை,
    வரையறையும் வழிமுறையும் வகுத்து வையத்துள்
    வளப்புடன் வாழ்வாங்குவாழும் வணிகர்குல - திருநாம
    வழிவழி வழக்குகளையும் விளக்கியமைக்கு நன்றிகள்ப்பலபல!
    புதிய பாடம்! புதுப்புனலாய் பொலிவு பெறட்டும்.
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
    அருமையான பல தகவல்கள் அளித்துள்ளீர்கள் . அவை அனைத்தும் அறிந்துகொள்ள வேண்டியவைகள்.
    தகவல் கொடுக்கும் விதம் மிக மிக நன்றாக உள்ளது. தங்கள் பதிவுகளில் எண்கணிதம் பற்றியும் தெரிவிக்க வேண்டுகிறேன். மேலும்'' கற்களுக்கு நோய் தீர்க்கும் சக்தி '' தொடருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்
    நன்றி , வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நீங்கள் கேட்டுள்ளவைகள் எல்லாம் தொடர்ந்துவரும். பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  5. ////kannan said...
    வாத்தியார் ஐயா,
    வணக்கம்./////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  6. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    திருஎனத் தொடங்கும் திருமிகு தளங்களின் திருப்பணிக்கு திருத்தொண்டாற்றிய திருத்தொண்டர்கள் நிறை,
    வரையறையும் வழிமுறையும் வகுத்து வையத்துள் வளப்புடன் வாழ்வாங்குவாழும் வணிகர்குல - திருநாம
    வழிவழி வழக்குகளையும் விளக்கியமைக்கு நன்றிகள் பலப்பல! புதிய பாடம்! புதுப்புனலாய் பொலிவு பெறட்டும். நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. //(உதாரணம்: திருவையாறு, திருக்கோலக்கா, திருவாடுதுறை, திருவீழிமிழிலை, திருக்கழிப்பாலை, திருநின்றவூர், திருஇன்னாம்பூர், திருவாரூர், திருக்கரவீரம், திருநெல்வாயில், திருவெண்ணைநல்லூர், திருப்புனந்தாள் etc)//

    திருநாகை

    ReplyDelete
  8. sorry sir, out of station since 3 days just back.
    கற்கள், எண்கணிதம் பாடம் அருமை.

    கற்களுடன் எனது அனுபவம் ....
    1997 கன்னிமாரா பழைய நூலகத்தில் சில அறிய நூல்கள் படிக்ககிடைத்த வாய்ப்பின்மையாலும்- எனக்கிருந்த கற்களுடன் உள்ள ஒரு ஆர்வதினாலும், ரிஷப லக்னத்துக்கு நீல கல் பொருந்தும் என்று வாங்கி அணிந்தேன்.
    Initially it was too good, interesting Job, popular over my circle,office- இதுக்கு மேல சினிமாதுறையில் சில பிரபலங்களின் பரிச்சியம், பசுமையான memorable days with big shots.
    கல் அணிந்து ஒரு மாததிற்க்கு பிறகு- i met with bike accident, fracture in face Rgt maxilla bone, had to undergo a surgery in face, Had to remove minute broken maxilla bone pieces and blood clot. Next second when i was hit with van- while blood oozing through my nose- what went in mind "throw away the ring" and i did immediately.
    முகதில் அதும் உள் காயம் - நரம் என்பதை இங்கேயே அனுபவித்துவிட்டேன்.

    Now i see incident in this way, தலைக்கு வந்தது, maxilla சில்லுகளேடு தப்பித்தேன்.

    இப்பொது நான் எந்த ஒரு கற்களையும் நாடுவதில்லை,
    i strongly believe only in handwork & அதையே புத்திசாலிதனமாக செய்வது.
    மிதுனத்தில் யோகக்காரகனாய் இருக்கும் என் கர்மக்காரகன் எனக்கு கற்றுத்தந்த பாடம் :-)

    ReplyDelete
  9. நண்பர் சுப.
    {ஆனால் அவருடைய பெயர் இயற்கையாகவே நன்றாக அமைந்துள்ளது.
    P C H I D A M B A R A M 8 + 3 +5+1+4+1+4+2+1+2+1+4 = 36 இது மிகவும் நல்ல எண் (பி.எல். என்று வைத்திருந்தால் 39 வரும். அது மோசமான எண். ஆகவே அவருடைய பெயர் ப. என்னும் ஒற்றை எழுத்து இன்ஷியலிலேயே எண் ஜோதிடப்படி அருமையாக அமைந்துள்ளது)
    }

    36 க்கு என்று ஒரு தனியான குணம் உண்டு;அது ப.சி.வுக்கும் பொருந்தும்..
    அது என்ன????
    :))
    புதிர் போட்டி போட்டுட்டேன்..

    ReplyDelete
  10. Dear Sir,
    When you are changing the name, how will your basic horoscope and dasa will work out?
    Base horo is never changeable.
    The planets are working as usual even though you change the name?
    So what is the use of changing the name?
    How it works?
    Thank you sir.

    ReplyDelete
  11. தமிழகத்தின் தற்காலப் பெரிய நாத்திகத் தலைவர், இப்போது தன் பெயரில் ஓர் இனிஷிய‌ல் கூட்டி எழுதுகிறார். அதைக் கவனித்து முதல்வரும் கிண்டல் அடித்தாயிற்று.எப்ப‌டியோ,எண்கணிதம்பெயரியல் பாடத்தைத் துவங்கிவிட்டீர்கள்.எல்லோரும் பெயர் மாற்றிக் கொடுக்கும்படி வரிசையில்
    நிற்கப் போகிறார்கள். புதுமையாகச் சிந்தித்து ஏதாவது செய்துகொண்டே இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. ஆசிரியர் அய்யாவிற்க்கு இனிய காலை வணக்கம். எண் சோதிடம் இனிதாக உள்ளது அய்யா. இன்னமும் விரிவான விளக்கம் தேவை அய்யா.

    ReplyDelete
  13. /////கோவி.கண்ணன் said...
    //(உதாரணம்: திருவையாறு, திருக்கோலக்கா, திருவாடுதுறை, திருவீழிமிழிலை, திருக்கழிப்பாலை, திருநின்றவூர், திருஇன்னாம்பூர், திருவாரூர், திருக்கரவீரம், திருநெல்வாயில், திருவெண்ணைநல்லூர், திருப்புனந்தாள் etc)//
    திருநாகை/////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி கோவியாரே!

    ReplyDelete
  14. ////சிங்கைசூரி said...
    sorry sir, out of station since 3 days just back.
    கற்கள், எண்கணிதம் பாடம் அருமை.
    கற்களுடன் எனது அனுபவம் ....
    1997 கன்னிமாரா பழைய நூலகத்தில் சில அறிய நூல்கள் படிக்ககிடைத்த வாய்ப்பின்மையாலும்- எனக்கிருந்த கற்களுடன் உள்ள ஒரு ஆர்வதினாலும், ரிஷப லக்னத்துக்கு நீல கல் பொருந்தும் என்று வாங்கி அணிந்தேன்.
    Initially it was too good, interesting Job, popular over my circle,office- இதுக்கு மேல சினிமாதுறையில் சில பிரபலங்களின் பரிச்சியம், பசுமையான memorable days with big shots.
    கல் அணிந்து ஒரு மாததிற்க்கு பிறகு- i met with bike accident, fracture in face Rgt maxilla bone, had to undergo a surgery in face, Had to remove minute broken maxilla bone pieces and blood clot. Next second when i was hit with van- while blood oozing through my nose- what went in mind "throw away the ring" and i did immediately.
    முகதில் அதும் உள் காயம் - நரகம் என்பதை இங்கேயே அனுபவித்துவிட்டேன்.
    Now i see incident in this way, தலைக்கு வந்தது, maxilla சில்லுகளேடு தப்பித்தேன்.
    இப்பொது நான் எந்த ஒரு கற்களையும் நாடுவதில்லை,
    i strongly believe only in handwork & அதையே புத்திசாலிதனமாக செய்வது.
    மிதுனத்தில் யோகக்காரகனாய் இருக்கும் என் கர்மக்காரகன் எனக்கு கற்றுத்தந்த பாடம் :-)////

    தகவலுக்கு நன்றி சிங்கைக்காரரே!

    ReplyDelete
  15. /////DHANA said...
    நன்றி ஐயா!//////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  16. /////அறிவன்#11802717200764379909 said...
    நண்பர் சுப.
    {ஆனால் அவருடைய பெயர் இயற்கையாகவே நன்றாக அமைந்துள்ளது.
    P C H I D A M B A R A M 8 + 3 +5+1+4+1+4+2+1+2+1+4 = 36 இது மிகவும் நல்ல எண் (பி.எல். என்று வைத்திருந்தால் 39 வரும். அது மோசமான எண். ஆகவே அவருடைய பெயர் ப. என்னும் ஒற்றை எழுத்து இன்ஷியலிலேயே எண் ஜோதிடப்படி அருமையாக அமைந்துள்ளது) }
    36 க்கு என்று ஒரு தனியான குணம் உண்டு;அது ப.சி.வுக்கும் பொருந்தும்..
    அது என்ன???? :))
    புதிர் போட்டி போட்டுட்டேன்..//////

    அது 27ஆம் எண்ணின் வரிசையில் வரும் எண். செங்கோல் தூக்கும் எண் என்பார்கள். பதவி, அதிகாரம், அங்கீகாரம் என்று அனைத்தையும் பெற்ருத்தரும் எண். அதோடு, 3, 6, 9 என்று பல எண்களுடன் பொருந்தக்கூடிய எண். Productive intellect number

    ReplyDelete
  17. /////Jeevanantham said...
    Dear Sir,
    When you are changing the name, how will your basic horoscope and dasa will work out?
    Base horo is never changeable.
    The planets are working as usual even though you change the name?
    So what is the use of changing the name?
    How it works?
    Thank you sir./////

    எல்லாப் பலன்களுக்கும் அடிப்படை ஜாதகம்தான் முக்கியமானது. அதில் சந்தேகமில்லை. தசாபுத்திகளின் ஆரம்பத்திலோ அல்லது நடுவிலோ அல்லது இறுதியிலோ பெறவேண்டிய நன்மைகளை, இந்தக் கற்கள் அதற்குரிய கதீர் வீச்சுக்களால், முன்பாகவே பெற்றுத்தரும். நீசமான கிரகங்களின் நீசத்தன்மை குறையும். காய்ச்சலாக இருக்கும்போது, நீங்கள் மருந்து சாப்பிடாவிட்டாலும், உடலின் அமைப்பின் காரணமாக ஐந்து அல்லது 7 நாட்களில் நீங்கள் குணமடைந்துவிடுவீர்கள். அந்த நாட்களில் உடலின் அலுப்பு, வாயின் கசப்பு ஆகியவை உங்களைப் படுத்தியிருக்கும். ஆனால் மருந்து உட்கொள்பவர்களுக்கு, முன்னதாகவே குணமாவதுடன், இந்த அலுப்பு, கசப்பை எல்லாம் மருந்துகள் மறக்க அடித்திருக்கும். அதுபோலத்தான் இதுவும்! பெயர் மாற்றங்கள் சில தீமைகளை விலக்கிவிடும் தன்மை உடையவை! சரியான விதத்தில் ஒலிகள் சேரும்போதுதான் ஒரு பாடல் ஹிட் ஆகும். அதுபோல சரியான ஒலியமைப்பில் இருக்கும்பெயரும் ஹிட் ஆகும்!

    ReplyDelete
  18. /////kmr.krishnan said...
    தமிழகத்தின் தற்காலப் பெரிய நாத்திகத் தலைவர், இப்போது தன் பெயரில் ஓர் இனிஷிய‌ல் கூட்டி எழுதுகிறார். அதைக் கவனித்து முதல்வரும் கிண்டல் அடித்தாயிற்று.எப்ப‌டியோ,எண்கணிதம்பெயரியல் பாடத்தைத் துவங்கிவிட்டீர்கள்.எல்லோரும் பெயர் மாற்றிக் கொடுக்கும்படி வரிசையில்
    நிற்கப் போகிறார்கள். புதுமையாகச் சிந்தித்து ஏதாவது செய்துகொண்டே இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  19. /////rajesh said...
    ஆசிரியர் அய்யாவிற்க்கு இனிய காலை வணக்கம். எண் சோதிடம் இனிதாக உள்ளது அய்யா. இன்னமும் விரிவான விளக்கம் தேவை அய்யா./////

    விரிவான பாடம் இனிமேல்தான் வரவுள்ளது.பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  20. /ஆனால் இந்த அழகப்பனை இன்ஷியலாக்கும்போது, இரட்டை எழுத்தில் அள. என்றுதான் குறிப்பிடுவார்கள். அழ. என்று எழுதமாட்டார்கள். என்ன கெட்டிக்காரத்தனம் பாருங்கள். அழ. என்றால் அழுகையைக் குறிக்கும்.
    அதனால் அள. //

    புகழ் பெற்ற குழந்தப்பாட்டு எழுதியவர் தமது பெயரை அழ.வள்ளியப்பா எனவே தான் வைத்திருக்கிறார்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  21. ////sury said...
    /ஆனால் இந்த அழகப்பனை இன்ஷியலாக்கும்போது, இரட்டை எழுத்தில் அள. என்றுதான் குறிப்பிடுவார்கள். அழ. என்று எழுதமாட்டார்கள். என்ன கெட்டிக்காரத்தனம் பாருங்கள். அழ. என்றால் அழுகையைக் குறிக்கும்.
    அதனால் அள. //
    புகழ் பெற்ற குழந்தப்பாட்டு எழுதியவர் தமது பெயரை அழ.வள்ளியப்பா எனவே தான் வைத்திருக்கிறார்.
    சுப்பு ரத்தினம்.////

    புகழ்பெற்ற தமிழ்க்கவிஞர். ழகரத்தைவிட எண் ஜோதிடம் முக்கியமில்லை. அல்லது சொல் வழக்கு முக்கியமில்லை என்று நினைத்திருக்கலாம்.

    ReplyDelete
  22. //////அறிவன்#11802717200764379909 said...

    நண்பர் சுப.
    {ஆனால் அவருடைய பெயர் இயற்கையாகவே நன்றாக அமைந்துள்ளது.
    P C H I D A M B A R A M 8 + 3 +5+1+4+1+4+2+1+2+1+4 = 36 இது மிகவும் நல்ல எண் (பி.எல். என்று வைத்திருந்தால் 39 வரும். அது மோசமான எண். ஆகவே அவருடைய பெயர் ப. என்னும் ஒற்றை எழுத்து இன்ஷியலிலேயே எண் ஜோதிடப்படி அருமையாக அமைந்துள்ளது)
    }

    36 க்கு என்று ஒரு தனியான குணம் உண்டு;அது ப.சி.வுக்கும் பொருந்தும்..
    அது என்ன????
    :))
    புதிர் போட்டி போட்டுட்டேன்..///////////

    தன் சொந்த ஊரை விட்டு தொலை தூரம் சென்ற பின்னரே இந்த எண்ணுடையவர்கள் புகழடைவார்கள். அதிகமாக பயணங்கள் செய்யும் நிலை ஏற்படும்...நண்பர்கள்,சுற்றத்தார்கள் என்று அனைவருமே விசுவாசம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.(எவ்வளவு நல்லதையே செய்தாலும்)
    இதுலே எது நம்ம உள்துறை அமைச்சருக்கு பொருந்துது?

    ReplyDelete
  23. Dear sir,
    Todays class tempt me to learn more on numerology.
    I request you to write more on Numerology, Navrathnas and vasthu.
    Thanks

    ReplyDelete
  24. /////minorwall said...
    //////அறிவன்#11802717200764379909 said...
    நண்பர் சுப.
    {ஆனால் அவருடைய பெயர் இயற்கையாகவே நன்றாக அமைந்துள்ளது.
    P C H I D A M B A R A M 8 + 3 +5+1+4+1+4+2+1+2+1+4 = 36 இது மிகவும் நல்ல எண் (பி.எல். என்று வைத்திருந்தால் 39 வரும். அது மோசமான எண். ஆகவே அவருடைய பெயர் ப. என்னும் ஒற்றை எழுத்து இன்ஷியலிலேயே எண் ஜோதிடப்படி அருமையாக அமைந்துள்ளது) }
    36 க்கு என்று ஒரு தனியான குணம் உண்டு;அது ப.சி.வுக்கும் பொருந்தும்.. அது என்ன???? :))
    புதிர் போட்டி போட்டுட்டேன்..///////////
    தன் சொந்த ஊரை விட்டு தொலை தூரம் சென்ற பின்னரே இந்த எண்ணுடையவர்கள் புகழடைவார்கள். அதிகமாக பயணங்கள் செய்யும் நிலை ஏற்படும்...நண்பர்கள்,சுற்றத்தார்கள் என்று அனைவருமே விசுவாசம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.(எவ்வளவு நல்லதையே செய்தாலும்)
    இதுலே எது நம்ம உள்துறை அமைச்சருக்கு பொருந்துது?///////

    மைனர், மைனர்....ஸ்டாப்! உள்துறை அமைச்சரின் கும்பத்தினரை நான் அறிவேன். அவர் மீது அனைவரும் விசுவாசமாகத்தான் இருக்கிறார்கள். எங்கள் பகுதியில் அவருக்கென்று தனி மரியாதை உள்ளது. அது அவரது ஜாதக விஷேசம். அவர் மிதுன லக்கினக்காரர்!

    ReplyDelete
  25. /////dhilse said...
    Dear sir,
    Todays class tempt me to learn more on numerology.
    I request you to write more on Numerology, Navrathnas and vasthu.
    Thanks////

    ஆகா, கவலையே படாதீர்கள். தொடர்ந்து எழுத உள்ளேன்!

    ReplyDelete
  26. இது மைனர் ஜோதிடம் இல்லை. பண்டிட் சேதுராமனின் அதிர்ஷ்ட விஞ்ஞானம் என்ற நூலை படித்து மனதில் ஏற்றி ஆராய்ச்சி உணர்வுடன் ஒத்துப் போகிறதா என்கிற அடிப்படையில் எழுந்த கேள்விதான்.பலருக்கு பொருந்தி போவதைப் பார்த்து இருக்கிறேன்..
    இப்போது என் கையில் அந்த புத்தகம் இல்லை.மனதில் இருந்ததை சொன்னேன்.இவருக்குப் பின்தான் இன்றைய T .V . புகழ்
    எண் கணித மேதைகள் எல்லோருமே..இவரைப் பொறுத்தவரையிலே அஷ்டமி,நவமி கூட பார்க்கவேண்டியதில்லை..
    8ஆம் எண்ணை,தேதியை விலக்குவது மிக அவசியம் என்பார்.
    பல எண்களின் குறிப்புகள் துல்லியமாகப் பொருந்தி போவதைப் பார்த்து மிகுந்த ஆச்சரியமடைந்து இருக்கிறேன்..
    other two co -ordinates தெரியாமல் துல்லியமாக எதையும் அலச முடியாது..
    இந்த சப்ஜெக்ட் தொடர்பாக அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி ஏதும் நடத்தப்பட முடியுமா என்கிற ஆர்வ மேலீட்டில்
    நான் இணையத்திலே www.acoustics.salford.ac.uk என்கிற தளத்தில் கிடைத்த இந்த மெயிலுக்கு மெயில் பண்ணியும் இன்னும் ஒண்ணுமே reply இல்லை.
    யாராவது நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த university களில் இது தொடர்பாக அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி ஏதும் நடத்தப்பட முடியுமா
    என்று தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்..
    மெயில் விவரங்களை கீழே கொடுத்துள்ளேன்..(என் பெயரை மட்டும் minorwall ஆக மாற்றம் செய்து வெளியிட்டுள்ளேன்.)

    to w.davies
    show details 12/20/09

    ---------- Forwarded message ----------
    From:minorwall
    Date: Sun, Dec 20, 2009 at 11:20 AM
    Subject: Kind Attn:YW Lam,Director, Acoustics Research Centre ---Request to conduct a research for the measurment of sound frequencies of english alphapets while pronounciating
    To: v.w.lam@salford.ac.uk

    Dear Sir,
    I would like to introduce myself minorwall,a Graduate Mechanical Engineer, residing in Japan.
    I am interested in occult studies and after my studies about chaldean and pythogorian numerology
    I learned that it was stated as every english alphapetic letter is having their sound frequency while pronouncing them as followed.

    A=1 B=2 C=3 D=4 E=5 F=8 G=3 H=5 I=1 J=1 K=2 L=3 M=4 N=5 O=7 P=8 Q=1 R=2 S=3 T=4 U=6 V-6 W=6 X=5 Y=1 Z=7

    1 2 3 4 5 6 7 8
    A B C D E U O F
    I K G M H V Z P
    J R L T N W
    Q S X
    Y
    this is the form followed and the subject proceeds further that these each numbers are representing each planet and the life is influenced by the
    name of a person which is being governed by responding planetary characters and so on..

    Here, I would like to make this point into a research topic, whether these system is correct
    as it is stated the sound produced is really having the responding frequency number or not.
    For example,the letter T is stated as having a frequency of 400 and it was taken/given as 4.
    If the research is possible through this University of Salford, it would be a great contribution to the whole human community esp.those who are
    deeply following the concept of numerology by clearing an authentication about the study.
    I request your kind interaction in this regards to proceed further..

    Thanks and regards,
    minorwall

    ReplyDelete
  27. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நான் உங்கள் தொடரை இன்று படித்துவிட்டு இண்டர்நெட்டில் எண் சோதிடத்தை பற்றி தேடினேன் அப்பொழுது எனக்கு ஒரு முகவரியில் எண்சோதிடம் பற்றி புத்தகம் கிடைத்தது அதன் முகவரி தருகிறேன் இதை வகுப்புஅறை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும். நன்றி அய்யா

    http://tamilebooksdownloads.blogspot.com/2009/10/blog-post.html

    ReplyDelete
  28. //////minorwall said...
    இது மைனர் ஜோதிடம் இல்லை. பண்டிட் சேதுராமனின் அதிர்ஷ்ட விஞ்ஞானம் என்ற நூலை படித்து மனதில் ஏற்றி ஆராய்ச்சி உணர்வுடன் ஒத்துப் போகிறதா என்கிற அடிப்படையில் எழுந்த கேள்விதான்.பலருக்கு பொருந்தி போவதைப் பார்த்து இருக்கிறேன்..
    இப்போது என் கையில் அந்த புத்தகம் இல்லை.மனதில் இருந்ததை சொன்னேன்.இவருக்குப் பின்தான் இன்றைய T .V . புகழ்
    எண் கணித மேதைகள் எல்லோருமே..இவரைப் பொறுத்தவரையிலே அஷ்டமி,நவமி கூட பார்க்கவேண்டியதில்லை..
    8ஆம் எண்ணை,தேதியை விலக்குவது மிக அவசியம் என்பார்.
    பல எண்களின் குறிப்புகள் துல்லியமாகப் பொருந்தி போவதைப் பார்த்து மிகுந்த ஆச்சரியமடைந்து இருக்கிறேன்..
    other two co -ordinates தெரியாமல் துல்லியமாக எதையும் அலச முடியாது..
    இந்த சப்ஜெக்ட் தொடர்பாக அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி ஏதும் நடத்தப்பட முடியுமா என்கிற ஆர்வ மேலீட்டில்
    நான் இணையத்திலே www.acoustics.salford.ac.uk என்கிற தளத்தில் கிடைத்த இந்த மெயிலுக்கு மெயில் பண்ணியும் இன்னும் ஒண்ணுமே reply இல்லை.
    யாராவது நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த university களில் இது தொடர்பாக அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி ஏதும் நடத்தப்பட முடியுமா
    என்று தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்..
    மெயில் விவரங்களை கீழே கொடுத்துள்ளேன்..(என் பெயரை மட்டும் minorwall ஆக மாற்றம் செய்து வெளியிட்டுள்ளேன்.)
    to w.davies
    show details 12/20/09
    ---------- Forwarded message ----------
    From:minorwall
    Date: Sun, Dec 20, 2009 at 11:20 AM
    Subject: Kind Attn:YW Lam,Director, Acoustics Research Centre ---Request to conduct a research for the measurment of sound frequencies of english alphapets while pronounciating
    To: v.w.lam@salford.ac.uk
    Dear Sir,
    I would like to introduce myself minorwall,a Graduate Mechanical Engineer, residing in Japan.
    I am interested in occult studies and after my studies about chaldean and pythogorian numerology
    I learned that it was stated as every english alphapetic letter is having their sound frequency while pronouncing them as followed.
    A=1 B=2 C=3 D=4 E=5 F=8 G=3 H=5 I=1 J=1 K=2 L=3 M=4 N=5 O=7 P=8 Q=1 R=2 S=3 T=4 U=6 V-6 W=6 X=5 Y=1 Z=7
    1 2 3 4 5 6 7 8
    A B C D E U O F
    I K G M H V Z P
    J R L T N W
    Q S X
    Y
    this is the form followed and the subject proceeds further that these each numbers are representing each planet and the life is influenced by the
    name of a person which is being governed by responding planetary characters and so on..
    Here, I would like to make this point into a research topic, whether these system is correct
    as it is stated the sound produced is really having the responding frequency number or not.
    For example,the letter T is stated as having a frequency of 400 and it was taken/given as 4.
    If the research is possible through this University of Salford, it would be a great contribution to the whole human community esp.those who are
    deeply following the concept of numerology by clearing an authentication about the study.
    I request your kind interaction in this regards to proceed further..
    Thanks and regards,
    minorwall/////

    Cheiro'வின் புத்தகங்களைப் படியுங்கள் மைனர். அது ஒரளவிற்குத் தெளிவுடன் இருக்கும்.உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  29. rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நான் உங்கள் தொடரை இன்று படித்துவிட்டு இண்டர்நெட்டில் எண் சோதிடத்தை பற்றி தேடினேன் அப்பொழுது எனக்கு ஒரு முகவரியில் எண்சோதிடம் பற்றி புத்தகம் கிடைத்தது அதன் முகவரி தருகிறேன் இதை வகுப்புஅறை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும். நன்றி அய்யா http://tamilebooksdownloads.blogspot.com/2009/10/blog-post.html////

    நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் (அது சம்பந்தப்பட்ட வலைப்பதிவில்) தவறுகள் உள்ளன. சந்திரனுக்கான எண்ணைக் கேதுவினுடைய எண் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

    ReplyDelete
  30. அன்பு அய்யாவுக்கு வணக்கம் , எண் கணித பாடம் அருமை, எனது மாமா
    அவர் பெயரை 2 வருடம் முன்பு மாற்றி வைத்துகொண்டார், முன்பைவிட
    இப்பொழுது அதிக மாற்றத்தை அவரிடம் காண‌முடிகிறது,அதிக பேர் இப்பொழுது தங்கள் பெயரை மாற்றி பலன் கண்டுள்ளனர்.எந்த எண் நல்ல எண் தாங்கள் கூறவும்.
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  31. அய்யா இனிய வணக்கம்.

    எண் ஜோதிடம் வகுப்பு ப்ரமதாம் அய்யா ,,,,,,இதிலும் எனக்கு சிறு சந்தேகம் அய்யா ....எண் பிறந்த தேதி கூடுதல் 5(41) .என் பெயரின் கூடுதலும் 5(23)...என் இனிசியல் p இதனை சிலர் பெயருக்கு பின் உபயோகிக்கு மாறு கூறுகின்றனர் இதை பற்றி தங்கள் கருத்து அறிய ஆவல் அய்யா
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  32. /////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம் , எண் கணித பாடம் அருமை, எனது மாமா
    அவர் பெயரை 2 வருடம் முன்பு மாற்றி வைத்துகொண்டார், முன்பைவிட
    இப்பொழுது அதிக மாற்றத்தை அவரிடம் காண‌முடிகிறது,அதிக பேர் இப்பொழுது தங்கள் பெயரை மாற்றி பலன் கண்டுள்ளனர்.எந்த எண் நல்ல எண் தாங்கள் கூறவும்.
    அன்புடன் ஜீவா/////

    உங்களின் முழுப்பெயரையும் வைத்துத்தான் அதை அறிய முடியும்!

    ReplyDelete
  33. /////astroadhi said...
    அய்யா இனிய வணக்கம்.
    எண் ஜோதிடம் வகுப்பு ப்ரமாதம் அய்யா ,,,,,,இதிலும் எனக்கு சிறு சந்தேகம் அய்யா ....எண் பிறந்த தேதி கூடுதல் 5(41) .என் பெயரின் கூடுதலும் 5(23)...என் இனிசியல் p இதனை சிலர் பெயருக்கு பின் உபயோகிக்கு மாறு கூறுகின்றனர் இதை பற்றி தங்கள் கருத்து அறிய ஆவல் அய்யா
    நன்றி வணக்கம்

    உங்களின் முழுப்பெயரையும் வைத்துத்தான் அதைச் சொல்ல முடியும்!!

    ReplyDelete
  34. Vanakam sir,
    Interesting lesson about numerology in names........but eppadi sir birth certificateil irukira peyara maathiraathu? becoz I think that's the name that is used for finding the number for our name???

    Thanks
    Thanuja

    ReplyDelete
  35. /ஆனால் இந்த அழகப்பனை இன்ஷியலாக்கும்போது, இரட்டை எழுத்தில் அள. என்றுதான் குறிப்பிடுவார்கள். அழ. என்று எழுதமாட்டார்கள். என்ன கெட்டிக்காரத்தனம் பாருங்கள். அழ. என்றால் அழுகையைக் குறிக்கும்.
    அதனால் அள.//

    அண்ணா!
    மிக சுவையான விடயம்.

    ReplyDelete
  36. மினர்வால்(?),
    எக்ஸலன்ட்..

    மிகச் சரி..

    ஒரு எண்ணுக்கான எல்லா பொருத்தங்களும் ஒருவருக்குப் பொருந்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;பெரம்பாலம் பொருந்தும்..

    36 ன் குணம் என்னவெனில் அது இருந்து தோன்றிய இடத்திலிருந்து வேறு இடம்\வெகுதூரம் செல்ல வைக்கும்.அப்படி சென்ற பிறகு புகழ்,பணம்,பதவி என்று உயரத்துக்குக் கொண்டு செல்லும்..

    ப.சி விநோதமான வகையில் இதில் பொருந்துகிறார்.

    அவர் இடமாற்றமாக மட்டும் பூலாங்குறிச்சியிலிருந்து புது தில்லி செல்லவில்லை;அவர் பிறந்த குடும்பத்தில் இருந்து(ம்) வெறொரு குடும்பத்திற்கு தத்துப் பிள்ளையாகச் சென்றவர்.

    இதனால் தோன்றிய' இடத்திலிருந்தும் விலகிச் சென்றவர்..

    சுப.சார்,திருமதி நளினியைத் திருமணம் செய்த ஆரம்ப ஆண்டுகளில் ப.சி.க்கு நடந்த நிகழ்வுகள் உங்களுக்குத் தெரியுமா?

    :))

    மற்றபடி எண்கணிதம் மிகச் சரியாக மனிதர்களை கணிக்க உதவும் என்பது எனது 20 வருட எண்கணித அனுபவத்தில் உண்மை.

    ReplyDelete
  37. ////Thanuja said...
    Vanakam sir,
    Interesting lesson about numerology in names........but eppadi sir birth certificateil irukira peyara maathiraathu? becoz I think that's the name that is used for finding the number for our name???
    Thanks
    Thanuja/////

    உங்களுக்காகத்தான் அடுத்த பதிவு. அதைப்படியுங்கள் சகோதரி1

    ReplyDelete
  38. /////யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    /ஆனால் இந்த அழகப்பனை இன்ஷியலாக்கும்போது, இரட்டை எழுத்தில் அள. என்றுதான் குறிப்பிடுவார்கள். அழ. என்று எழுதமாட்டார்கள். என்ன கெட்டிக்காரத்தனம் பாருங்கள். அழ. என்றால் அழுகையைக் குறிக்கும்.
    அதனால் அள.//
    அண்ணா!
    மிக சுவையான விடயம்.//////

    பாரீஸில் இருக்கிறீர்கள். சுவையில்லாவிட்டால் நீங்கள் படிக்கமாட்டீர்களே யோகன்!

    ReplyDelete
  39. //////அறிவன்#11802717200764379909 said...
    மினர்வால்(?),
    எக்ஸலன்ட்..
    மிகச் சரி..
    ஒரு எண்ணுக்கான எல்லா பொருத்தங்களும் ஒருவருக்குப் பொருந்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; பெரும்பாலும் பொருந்தும்..
    36 ன் குணம் என்னவெனில் அது இருந்து தோன்றிய இடத்திலிருந்து வேறு இடம்\வெகுதூரம் செல்ல வைக்கும்.அப்படி சென்ற பிறகு புகழ்,பணம்,பதவி என்று உயரத்துக்குக் கொண்டு செல்லும்..
    ப.சி விநோதமான வகையில் இதில் பொருந்துகிறார்.
    அவர் இடமாற்றமாக மட்டும் கண்டனூரில் இருந்து புது தில்லி செல்லவில்லை;அவர் பிறந்த குடும்பத்தில் இருந்து(ம்) வெறொரு குடும்பத்திற்கு மாப்பிள்ளையாகச் சென்றவர்.
    இதனால் தோன்றிய' இடத்திலிருந்தும் விலகிச் சென்றவர்..
    சுப.சார்,திருமதி நளினியைத் திருமணம் செய்த ஆரம்ப ஆண்டுகளில் ப.சி.க்கு நடந்த நிகழ்வுகள் உங்களுக்குத் தெரியுமா? :))
    மற்றபடி எண்கணிதம் மிகச் சரியாக மனிதர்களை கணிக்க உதவும் என்பது எனது 20 வருட எண்கணித அனுபவத்தில் உண்மை./////

    அவருடைய சொந்த ஊர் கண்டனூர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தை ஸ்தாபிதம் செய்த செட்டி நாட்டு அரசர் ராஜாசர் அண்ணாமலை செட்டியாரின் மகள்வழிப்பேரன் அவர். அவர் மணந்துகொண்டது நீதியரசர் கைலாசம் - கவியரசி செளந்தரம் கைலாசம் தம்பதியரின் மகள் திருமதி நளினி அவர்களை.
    அது காதல் திருமணம். இருவரும் திருமணம் செய்துகொண்ட சில மாதங்களுக்குப் பிறகே வெளியுலகிற்குத் தெரியவந்தது.

    ReplyDelete
  40. //////அறிவன்#11802717200764379909 said...
    மினர்வால்(?),
    எக்ஸலன்ட்..
    மிகச் சரி../////
    அன்பு அறிவன்,
    நன்றி..நீங்கள் சொல்வது போலவே நானும் இதுவரை பல நூறு பேர்களின் குணாதிசயங்களை அலசிப் பார்த்ததில் அப்படியே பொருந்தி வருகிறது..நாட்கள் தொடர்பான சம்பவங்களும் கூடவே..ஆனாலும் என்று, எப்பொழுது நல்லது நடக்கும் என்று துல்லியமாக சொல்லமுடியவில்லை..கணித்து ஒரு செயலை செய்ய முடியவில்லை.விளைவு பற்றிய ஆவலுடன் செயலை முடித்து விளைவின் பொழுதே என்ன நடந்தது என்பதையும் அதன் தாக்கத்தையும் அறிய முடிவதுதான் வாழ்க்கைப் பாதையின் புதிரான விஷயமாக இருக்கிறது..
    என் கணிதத்தை எல்லோருமே அவ்வளவு சுலபமாக கைகொண்டு பெயர் மாற்றம் செய்து விடலாம் என்பது சற்று ஆபத்தாக கூட முடியலாம்..
    பல கோணங்களில் ஆராய்ந்து பெயரமைக்காவிடில் (விரும்பத்தகுந்ததா/விரும்பத்தகாததா) விளைவுகளை வேடிக்கை பார்க்கவேண்டியதாகிவிடும்..

    ReplyDelete
  41. //////minorwall said...
    //////அறிவன்#11802717200764379909 said...
    மினர்வால்(?),
    எக்ஸலன்ட்..
    மிகச் சரி../////
    அன்பு அறிவன்,
    நன்றி..நீங்கள் சொல்வது போலவே நானும் இதுவரை பல நூறு பேர்களின் குணாதிசயங்களை அலசிப் பார்த்ததில் அப்படியே பொருந்தி வருகிறது..நாட்கள் தொடர்பான சம்பவங்களும் கூடவே..ஆனாலும் என்று, எப்பொழுது நல்லது நடக்கும் என்று துல்லியமாக சொல்லமுடியவில்லை..கணித்து ஒரு செயலை செய்ய முடியவில்லை.விளைவு பற்றிய ஆவலுடன் செயலை முடித்து விளைவின் பொழுதே என்ன நடந்தது என்பதையும் அதன் தாக்கத்தையும் அறிய முடிவதுதான் வாழ்க்கைப் பாதையின் புதிரான விஷயமாக இருக்கிறது..
    என் கணிதத்தை எல்லோருமே அவ்வளவு சுலபமாக கைகொண்டு பெயர் மாற்றம் செய்து விடலாம் என்பது சற்று ஆபத்தாக கூட முடியலாம்..
    பல கோணங்களில் ஆராய்ந்து பெயரமைக்காவிடில் (விரும்பத்தகுந்ததா/விரும்பத்தகாததா) விளைவுகளை வேடிக்கை பார்க்கவேண்டியதாகிவிடும்.//////.

    தகவலுக்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  42. சுப.சார்,
    பசி திருமணத்தால் அவர் குடும்பத்தினர் வருத்தமுற்றார்கள் என்றும் அவர் அக்கால கட்டத்தில் விலகி சென்னையில் மனைவியுடன் தனியாக வாழ்ந்தார் என்றும்,அவர் திருமணத்தின் காரணமாக வழக்கமாக நாட்டுக் கோட்டை நகரத்தார் திருமணங்களில் கிடைக்கும் கோவில் வரிசைகள் அவருடைய குடும்பத்திற்கு நிறுத்தப்பட்டன என்றும் பல செய்திகள் உண்டு..

    அவர் இந்திய அளவில் புகழ் பெறத் துவங்கிய பிறகு சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 1970 களின் இறுதியில் அவர் இந்திராவின் பார்வையில் பட்டபிறகு அவரது வளர்ச்சியும் குடும்பத்தினரின் மீள் நெருக்கமும் வர ஆரம்பித்தது என்பதும் மேலதிக தகவல்கள்.

    நான் 36 ஐப் பற்றி யோசிக்கும் போது தவறாமல் யோசிக்கும் இன்னொரு எண் 33.தவறாமல் யோசிக்கும் நபர்கள் இருவர்.

    ஒருவர் ப.சி. இன்னொருவர் மு.க.

    ReplyDelete
  43. {கூடவே..ஆனாலும் என்று, எப்பொழுது நல்லது நடக்கும் என்று துல்லியமாக சொல்லமுடியவில்லை..கணித்து ஒரு செயலை செய்ய முடியவில்லை.விளைவு பற்றிய ஆவலுடன் செயலை முடித்து விளைவின் பொழுதே என்ன நடந்தது என்பதையும் அதன் தாக்கத்தையும் அறிய முடிவதுதான் வாழ்க்கைப் பாதையின் புதிரான விஷயமாக இருக்கிறது..}

    மைனர்வாள்,
    இப்போதுதான் பெயர் சரியாகப் புரிந்தது!

    எண்கணிதத்தின் முக்கிய அம்சம் மனிதர்களின் குணங்களை துல்லியமாகக் கணிக்க முடிவதுதான்;அல்லது ஒருவரின் பிறந்த தேதி தெரிந்தவுடன் அவர்களின் கல்யாண குணங்களைக் கணித்து விடலாம்..வாழ்வு முழுதும் தொடரும் நல்ல நண்பர்களைத் தேர்வு செய்யவும் அது உதவும்.

    {என் கணிதத்தை எல்லோருமே அவ்வளவு சுலபமாக கைகொண்டு பெயர் மாற்றம் செய்து விடலாம் என்பது சற்று ஆபத்தாக கூட முடியலாம்..}
    நான் அவ்வளவு எளிதான செயலாக இதை நினைக்கவில்லை.உங்கள் பின்வரும் கூற்றே சரி,தான்தோன்றித்தனமாகப் பெயர் வைப்பதில் சிக்கல்கள் வரும்.

    {பல கோணங்களில் ஆராய்ந்து பெயரமைக்காவிடில் (விரும்பத்தகுந்ததா/விரும்பத்தகாததா) விளைவுகளை }

    ஏற்றுக் கொண்டு கஷ்டப் பட வேண்டியதுதான் !

    ReplyDelete
  44. rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நான் உங்கள் தொடரை இன்று படித்துவிட்டு இண்டர்நெட்டில் எண் சோதிடத்தை பற்றி தேடினேன் அப்பொழுது எனக்கு ஒரு முகவரியில் எண்சோதிடம் பற்றி புத்தகம் கிடைத்தது அதன் முகவரி தருகிறேன் இதை வகுப்புஅறை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும். நன்றி அய்யா http://tamilebooksdownloads.blogspot.com/2009/10/blog-post.html////

    நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் (அது சம்பந்தப்பட்ட வலைப்பதிவில்) தவறுகள் உள்ளன. சந்திரனுக்கான எண்ணைக் கேதுவினுடைய எண் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

    nothing wrong with that book. Blog owner does not know the difference b/w moon and kethu.

    ReplyDelete
  45. //////அறிவன்#11802717200764379909 said...
    சுப.சார்,
    பசி திருமணத்தால் அவர் குடும்பத்தினர் வருத்தமுற்றார்கள் என்றும் அவர் அக்கால கட்டத்தில் விலகி சென்னையில் மனைவியுடன் தனியாக வாழ்ந்தார் என்றும்,அவர் திருமணத்தின் காரணமாக வழக்கமாக நாட்டுக் கோட்டை நகரத்தார் திருமணங்களில் கிடைக்கும் கோவில் வரிசைகள் அவருடைய குடும்பத்திற்கு நிறுத்தப்பட்டன என்றும் பல செய்திகள் உண்டு..
    அவர் இந்திய அளவில் புகழ் பெறத் துவங்கிய பிறகு சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 1970 களின் இறுதியில் அவர் இந்திராவின் பார்வையில் பட்டபிறகு அவரது வளர்ச்சியும் குடும்பத்தினரின் மீள் நெருக்கமும் வர ஆரம்பித்தது என்பதும் மேலதிக தகவல்கள்.
    நான் 36 ஐப் பற்றி யோசிக்கும் போது தவறாமல் யோசிக்கும் இன்னொரு எண் 33.தவறாமல் யோசிக்கும் நபர்கள் இருவர்.
    ஒருவர் ப.சி. இன்னொருவர் மு.க.//////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  46. /////அறிவன்#11802717200764379909 said...
    {கூடவே..ஆனாலும் என்று, எப்பொழுது நல்லது நடக்கும் என்று துல்லியமாக சொல்லமுடியவில்லை..கணித்து ஒரு செயலை செய்ய முடியவில்லை.விளைவு பற்றிய ஆவலுடன் செயலை முடித்து விளைவின் பொழுதே என்ன நடந்தது என்பதையும் அதன் தாக்கத்தையும் அறிய முடிவதுதான் வாழ்க்கைப் பாதையின் புதிரான விஷயமாக இருக்கிறது..}
    மைனர்வாள்,
    இப்போதுதான் பெயர் சரியாகப் புரிந்தது!
    எண்கணிதத்தின் முக்கிய அம்சம் மனிதர்களின் குணங்களை துல்லியமாகக் கணிக்க முடிவதுதான்;அல்லது ஒருவரின் பிறந்த தேதி தெரிந்தவுடன் அவர்களின் கல்யாண குணங்களைக் கணித்து விடலாம்..வாழ்வு முழுதும் தொடரும் நல்ல நண்பர்களைத் தேர்வு செய்யவும் அது உதவும்.
    {என் கணிதத்தை எல்லோருமே அவ்வளவு சுலபமாக கைகொண்டு பெயர் மாற்றம் செய்து விடலாம் என்பது சற்று ஆபத்தாக கூட முடியலாம்..}
    நான் அவ்வளவு எளிதான செயலாக இதை நினைக்கவில்லை.உங்கள் பின்வரும் கூற்றே சரி,தான்தோன்றித்தனமாகப் பெயர் வைப்பதில் சிக்கல்கள் வரும்.
    {பல கோணங்களில் ஆராய்ந்து பெயரமைக்காவிடில் (விரும்பத்தகுந்ததா/விரும்பத்தகாததா) விளைவுகளை }
    ஏற்றுக் கொண்டு கஷ்டப் பட வேண்டியதுதான் !//////

    உங்களுடைய கருத்துப்பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  47. ////Sas said...
    rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நான் உங்கள் தொடரை இன்று படித்துவிட்டு இண்டர்நெட்டில் எண் சோதிடத்தை பற்றி தேடினேன் அப்பொழுது எனக்கு ஒரு முகவரியில் எண்சோதிடம் பற்றி புத்தகம் கிடைத்தது அதன் முகவரி தருகிறேன் இதை வகுப்புஅறை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும். நன்றி அய்யா http://tamilebooksdownloads.blogspot.com/2009/10/blog-post.html////
    நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் (அது சம்பந்தப்பட்ட வலைப்பதிவில்) தவறுகள் உள்ளன. சந்திரனுக்கான எண்ணைக் கேதுவினுடைய எண் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!
    nothing wrong with that book. Blog owner does not know the difference b/w moon and kethu.///////

    நல்லது. நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com